Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிழம்பு

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by பிழம்பு

  1. 02 Dec, 2025 | 12:34 PM சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவினால் சுமார் 15 இலட்சம் கோழிகள் உயிரிழந்துள்ளதாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. தெதுறு ஓயாவை அண்டிய பகுதிகளில் ஏற்பட்ட அனர்த்தத்தினால் மாத்திரம் சுமார் 10 இலட்சம் கோழிகள் உயிரிழந்துள்ளன. இதன்காரணமாக, முட்டை உற்பத்தி நூறில் நாற்பது வீதம் குறைவடைந்துள்ளதாகவும் முட்டையின் விலை உயர்ந்துள்ளதாகவும் அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. சீரற்ற வானிலையால் பல இலட்சம் கோழிகள் உயிரிழப்பு! | Virakesari.lk
  2. 02 Dec, 2025 | 03:51 PM மன்னார், நானாட்டான், முருங்கன், விதயானகுளம் மற்றும் செட்டிகுளம் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாப்பாக மீட்பதற்காக இலங்கை கடற்படை மற்றும் இராணுவத்தால் நவம்பர் 29 ஆம் திகதி முதல் டிசம்பர் 01 ஆம் திகதி வரை கூட்டு மீட்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, இந்த கூட்டு மீட்பு நடவடிக்கையின் மூலம், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 58 பேர் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். மன்னாரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்க கூட்டு நடவடிக்கை! | Virakesari.lk
  3. களனி கங்கையின் நீர்மட்டம் சடுதியாக குறைவு! 02 Dec, 2025 | 04:32 PM களனி கங்கையின் நீர்மட்டம் சடுதியாக குறைவடைந்துள்ளதாக நீர்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. களனி கங்கையின் நீர்மட்டம் இன்று செவ்வாய்க்கிழமை (02) பிற்பகல் 02.00 மணியளவில் 6.9 அடி ஆக இருந்த நிலையில் பிற்பகல் 03.00 மணிக்கு பின்னர் 6.75 ஆக குறைவடைந்துள்ளது. நாட்டில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாக களனி கங்கையின் நீர்மட்டம் உயர்வடைந்த நிலையில் களனி கங்கையை அண்மித்த பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது. களனி கங்கையின் நீர்மட்டம் சடுதியாக குறைவு! | Virakesari.lk
  4. 02 Dec, 2025 | 06:18 PM வவுனியாவில் இதுவரை 43 பேர் எயிட்ஸ்நோயாளிகளாகஇனம்காணப்பட்டுள்ளதுடன், இளவயதினரே அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளதாக வவுனியாமாவட்ட பாலியல்நோய் மற்றும் எயிட்ஸ் தடுப்புவேலைத்திட்டத்தின் பொறுப்புவைத்திய அதிகாரி கு.சந்திரகுமார் தெரிவித்தார். எயிட்ஸ் நோய் தொடர்பாக செவ்வாய்க்கிழமை (2) ஊடகவியலாளர்களிற்கு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்படி தெரிவித்தார் தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்..... உலக எயிட்ஸ் தினம் மார்கழி மாதம்1 ம் திகதி உலகம் முழுவதும் கடைப்படிக்கபட்டு வருகின்றது. இம்முறை சவால்களை சமாளித்து புதிய வழிகளில் போராடுதல் எனும் தொணிப்பொருளில் உலக எயிட்ஸ் தினம் அனுஸ்டிக்கபடவிருக்கின்றது. இலங்கையில் இதுவரை 7168 பேர் எயிட்ஸ் நோயாளர்கள் இனம்காணப்பட்டுள்ளனர். ஆண்கள்5544 பெண்கள் 1603,இடைநிலை பால்நிலையை சேர்ந்த 21பேர் இதனுள் அடங்கும். இதுவரை நாட்டில் 1629 இந்நோயால் இறந்துள்ளனர். எந்தவித தொற்று அறிகுறிகளும் இன்றி நோய்தொற்றுடன் 5700 பேர் நடமாடி வருகின்றார்கள். வவுனியாமாவட்டத்தில் இதுவரை43 எயிட்ஸ்நோயாளிகள் இனம்காணப்பட்டுள்ளனர். அவர்களில் 34 பேர் எம்மிடம் மருந்துவ சிகிச்சைகளை பெற்று வருகின்றனர். அவர்களில் 21பேர் ஆண்கள். 13 பேர் பெண்கள் 2கர்பிணி தாய்மாரும் உள்ளனர். அவர்களிடம் இருந்து பிள்ளைக்கு தொற்றாத வகையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றது. 13பேர் இதுவரை மரணத்தை தளுவியுள்ளனர். ஏனைய நோயாளர்களிற்கான சிகிச்சைகள் எம்மால் வழங்கபட்டுவருகிறது. அவர்களிற்கான மருந்துகளை நாம் வழங்கிவருகின்றோம். அந்த மருந்துகளின் மூலம் ஒருவரது மரணத்தினை தாமதப்படுத்தமுடியும். எயிட்ஸ் நோய்பரவுவதற்கான மூன்று காரணங்களில் எச்ஐவி தொற்றுள்ள ஒருவருடன் பாதுகாப்பற்ற வகையில் பாலியல் ரீதியாகதொடர்புகொள்ளல். நோய்தொற்றுள்ள ஒருவரின்குருதியை இன்னுமொருவருக்குசெலுத்துதல்,தொற்றுள்ள தாய்ஒருவருக்கு பிறக்கின்ற பிள்ளை ஆகியோருக்கு இந்த நோய்பரவுகிறது. இலங்கையில் தற்பொது குருதி மாற்றங்களின்போது உரிய பரிசோதனைகள் முன்னெடுக்கப்படுகின்றது. அத்துடன் கர்பிணி பெண்களிற்கு அவர்களது இணக்கத்துடன் எச்.ஜ.வி, பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றது. நாட்டில் 15 வயது தொடக்கம்25 வயதிற்குட்பட்டவர்களே தொற்றாளர்களாக இருக்கும் நிலை உள்ளது. நோய்தொற்று ஏற்பட்டவர் சாதாரண ஒரு மனிதரை போலவே இருப்பர். அவரது முகத்தை வைத்து நோயை கண்டுபிடிக்க இயலாது. குருதியினை பரிசோதனை செய்வதன் மூலம் மாத்திரமே அதனை கண்டுபிடிக்கமுடியும்.எனவே ஒரு தரமாவது பரிசோதனையை மேற்கொண்டால்குறித்த நோய் மற்றவர்களிற்கு தொற்றாமல் தடுக்கலாம். வவுனியா வைத்தியசாலையில் அமைந்துள்ள பாலியல்நோய் மற்றும் எயிட்ஸ் தடுப்பு பிரிவில் பொதுமக்கள் தாமாகவந்து பரிசோதனைகளை மேற்கொள்ளமுடியும். இங்கு பரிசோதனைகள் மேற்கொள்பவர்களது இரகசியங்கள் பாதுகாக்கப்படும் என்றார். இளவயதினருக்கே எயிட்ஸ் நோய்! - வைத்தியர் சந்திரகுமார் | Virakesari.lk
  5. நாவலப்பிட்டி பரகல கீழ் பிரிவில் மண் மற்றும் கற்பாறை சரிந்ததில் 65குடும்பங்களை சேர்ந்த 250பேர் பாதிப்பு; 08 பேர் சடலங்கலாக மீட்பு மேலும் 05 பேர் மாயம் Published By: Vishnu 02 Dec, 2025 | 06:41 PM குருந்துவத்த பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாவலப்பிட்டி பரகல கீழ் பிரிவில் தோட்டப் பகுதியில் கடந்த மாதம் 27ம் திகதி மண்சரிவு மற்றும் பாரிய கற்பாறைகள் சரிந்து விழுந்ததில் குறித்த தோட்டத்தை சேர்ந்த 65குடும்பங்களை சேர்ந்த 250பர் பாதிக்கபட்டு தற்காலிகமாக உடஹேன்தென்ன கிறேஹெட் இல 01 தமிழ் மகா வித்தியாலயத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர் லயன் குடியிருப்பை சேர்ந்த 13வீடுகள் மண்ணில் புதையுண்டுள்ளது கற்பறைகள் மற்றும் மண்மேடு சரிந்து விழுந்த பகுதியில் இருந்து இதுவரையிலும் 08பேர் சடலமாக மீற்கப்பட்தாகவும் இன்றைய தினமும் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதோடு மேலும் 05 பேர் கானாமல் போயுள்ளதாகவும் இவர்களை தேடும் பணிகள் முன்னெடுக்கபாபட்டு வருவதாக குருந்துவத்த பொலிஸார் மேலும் தெரிவித்தனர். சடலமாக மீட்கப்பட்ட ஏழு பேரின் சடலங்களும் மண்சரிவு ஏற்பட்ட பகுதியின் அருகாமையில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது .இந்த விபத்தின் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் உடமைகள் அனைத்தும் மண்ணில் புதையுண்டுள்ளதாக பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர். அதேநேரம் மண்ணில் புதையுண்ட சடலங்களை மீட்பதற்கு இரானுவத்தினரோ பொலிஸாரோ குறித்த பகுதிக்கு வரவில்லை எனவும் கடந்த இரண்டு நாட்களாக பாதிக்கப்பட்ட மக்கள் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக மக்கள் தெரிவிக்கின்றனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு சமைத்த உணவுகளை பிரதேச செயலகத்தின் ஊடாக வழங்கபாபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. நாவலப்பிட்டி பரகல கீழ் பிரிவில் மண் மற்றும் கற்பாறை சரிந்ததில் 65குடும்பங்களை சேர்ந்த 250பேர் பாதிப்பு; 08 பேர் சடலங்கலாக மீட்பு மேலும் 05 பேர் மாயம் | Virakesari.lk
  6. கலா ஓயா வெள்ளத்தில் சிக்கிய பேருந்தில் பயணித்த யாழ். இளைஞனின் சடலம் மீட்பு 01 Dec, 2025 | 02:21 PM யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்புக்கு செல்லும் வழியில் பஸ் வண்டியில் சிக்கி பின்னர் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்ட பத்மநிகேதனின் உடல் திங்கட்கிழமை (01) மீட்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்து கலா ஓயா பகுதியில் வெள்ளத்தில் சிக்கிய நிலையில் பேருந்தில் இருந்தவர்களில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் கடமையாற்றும் தணிகாசலம் பத்மநிகேதன் (வயது 36) என்ற இளைஞனே காணாமல் போயிருந்த நிலையில், சடலமாக மீட்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்து அநுராதபுரம் புத்தளம் வீதியில் கலா ஓயா பகுதியில் வெள்ளத்தில் சிக்கியது. அதன் போது பேருந்தினுள் சுமார் 60 பேர் வரையில் பயணித்ததாக தெரிவிக்கப்பட்டது. முதல் கட்டமாக பேருந்தில் சிக்கியவர்களை அருகில் இருந்த வீடொன்றின் கூரை மீது ஏற்றி பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டு , பின்னர் கடற்படையினரின் உதவியுடன் அவர்கள் படகுகளில் ஏற்றப்பட்டு இரு நாட்கள் கடுமையான போராட்டத்தின் மத்தியில் அங்கிருந்தவர்கள் மீட்கப்பட்டனர். இந்நிலையில் குறித்த பேருந்தில் பயணித்த இளைஞன் ஒருவர் காணாமல் போயுள்ளதாக உறவினர்கள் நொச்சியாகம பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்த நிலையில், அவரது சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. ஆழ்ந்த அனுதாபங்கள். கலா ஓயா வெள்ளத்தில் சிக்கிய பேருந்தில் பயணித்த யாழ். இளைஞனின் சடலம் மீட்பு | Virakesari.lk
  7. 01 Dec, 2025 | 04:50 PM (எம்.மனோசித்ரா) தித்வா சூறாவளியால் இலங்கையில் ஏற்பட்ட அதிதீவிர மோசமான நிலைமை குறித்து எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடுவதற்காக முன்னாள் ஜனாதிபதியும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் இந்தத் தீர்மானத்தின்படி, அனைத்துக் கட்சித் தலைவர்களும் கொழும்பில் உள்ள பிளவர் வீதி அரசியல் அலுவலகத்தில் புதன்கிழமை (03) கூடவுள்ளனர். ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன இது தொடர்பில் குறிப்பிடுகையில், ஒரு கடுமையான இயற்கை அனர்த்தத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் வெற்றிகரமாக எதிர்கொண்ட அனுபவத்தின் அடிப்படையில், எதிர்காலத்தில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் இந்தக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும். 2003 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட வெள்ளப் பேரழிவின் போதும், வெள்ளத்திற்குப் பிந்தைய காலப்பகுதியிலும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து இந்தக் கூட்டத்தில் கட்சித் தலைவர்களுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விளக்கமளிக்கவுள்ளார். இந்தக் கடுமையான பேரழிவிற்குப் பிறகு, பாராளுமன்றத்திலும் வெளியேயும் உள்ள அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களையும் ஒரே இடத்தில் அழைப்பது இதுவே முதலாவது சந்தர்ப்பமாகும் என்றாகும். அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் முன்னாள் ஜனாதிபதி ரணில் அழைப்பு | Virakesari.lk
  8. நுவரெலியா மாவட்டத்தில் இதுவரை 75 பேர் உயிரிழப்பு 01 Dec, 2025 | 03:53 PM நுவரெலியா மாவட்டத்தில் இன்று திங்கட்கிழமை (01) வரை 75 பேர் உயிரிழந்துள்ளதோடு, 62 பேர் காணாமல் போயுள்ளனர். 2,691 குடும்பங்கரளச் சேர்ந்த 12,304 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது. 1,914 குடும்பங்களைச் சேர்ந்த 8,654 பேர் 61 இடைத்தங்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த இடைத்தங்கள் முகாம்கள் நுவரெலியா, வலப்பனை, கொத்மலை, ஹங்குரன்கெத்த, அம்பேகமுவ, தலவாக்கலை, நோர்வுட், நில்தண்டாஹின்ன ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ளன. இந்த இடைத்தங்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுக்கான மூன்று நாட்களுக்கான சமைத்த உணவு வழங்கப்படும். ஏனைய நாட்களுக்கு உலர் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு முகாம்களில் சமைப்பதற்கான ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்படும். அதேநேரம் நுவரெலியா - கண்டி வீதி, நுவரெலியா - இராகலை வீதி, நுவரெலியா - வெலிமடை வீதி, தலவாக்கலை - பூண்டுலோயா வீதி, லிந்துலை - அக்கரபத்தனை வீதி ஆகிய வீதிகள் முற்றாக சேதமடைந்துள்ளதுடன் போக்குவரத்திற்காக பயன்படுத்த முடியாத நிலைமையே காணப்படுகின்றது. இதற்கு பதிலாக மாற்று பாதைகளையே பாவிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதுடன் மாற்று பாதைகளும் ஆங்காங்கே மண்சரிவு ஏற்பட்ட நிலையிலேயே உள்ளது. காணாமல் போனவர்கள் தொடர்பில் தொடர்ந்தும் தேடுதல் நடைபெற்று வருகின்றது. நுவரெலியா மாவட்டத்தில் விவசாய நிலங்களும் முற்றாக பாதிப்படைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. நுவரெலியா மாவட்டத்தில் இதுவரை 75 பேர் உயிரிழப்பு | Virakesari.lk
  9. 01 Dec, 2025 | 04:44 PM மீண்டும் ஒரு புயல் வருமா என பலர் வினவுகின்றார்கள். இன்றைய நிலையில் வங்காள விரிகுடாவில் டிட்வா புயலைத் தவிர வேறு எந்த காற்றுச்சுழற்சியோ, வளி மண்டல மேலடுக்கு சழற்சியோ இல்லை. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்தார். 01.12.2025 திங்கட் கிழமை நண்பகல் 12.45 மணி வரையான நிலைவரப்படி, டிட்வா புயலின் அமுக்க நிறைவுச் செயற்பாட்டின் காரணமாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில பகுதிகளுக்கு இன்று மிதமானது முதல் கனமானது வரை மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது. குறிப்பாக வட மாகாணத்தின் மேற்கு பகுதிகள் குறிப்பாக மன்னார் தீவு, மாந்தை மேற்கின் சில பகுதிகள், நானாட்டானின் சில பகுதிகள், கிளிநொச்சியின் மேற்கு பகுதிகள் கனமழையைப் பெறும் வாய்ப்புள்ளது. ஆனாலும் இன்று மாலைக்கு பின்னர் படிப்படியாக மழை குறைந்துவிடும். ஆகவே இது தொடர்பாக பதட்டமடைய தேவையில்லை. மீண்டும் ஒரு புயல் வருமா என பலர் வினவுகின்றார்கள். இன்றைய நிலையில் வங்காள விரிகுடாவில் டிட்வா புயலைத் தவிர வேறு எந்த காற்றுச்சுழற்சியோ, வளி மண்டல மேலடுக்கு சழற்சியோ இல்லை. ஆனாலும் எதிர்வரும் ஜனவரி இறுதிப்பகுதி வரை வடகீழ்ப் பருவக்காற்று காலம் என்பதனால் அது வரைக்கும் இடையிடையே மிதமான, கனமான மற்றும் மிகக்கனமழைகள் கிடைக்கும் வாய்ப்புள்ளது என்பதனை நினைவில் கொள்க. இடைப்பட்ட காலத்தில் ஏதாவது தீவிர வானிலை நிகழ்வுகள் இடம்பெறும் வாய்ப்பிருந்தால் உரிய காலத்தில் உங்களுக்கு தெரிவிக்கப்படும். அது வரை தேவையற்ற வதந்திகளைப் புறந்தள்ளுங்கள். டிட்வா புயல் தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுக்குறைந்து சென்னைக்கு கிழக்காக 60 கிலோமீற்றர் தொலைவில் நிலை கொண்டுள்ளது. இது அடுத்த 48 மணி நேரத்தில் சென்னைக்கு அண்மையாக கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. டிட்வா புயல் இன்னும் கரையைக் கடக்கவில்லை என்பதனால் வடக்கு மாகாணக் கடற்பகுதிகள் கொந்தளிப்பான நிலையில் காணப்படும் என்பதனால் மீனவர்கள் கடலுக்கு செல்வதில் அவதானமாக இருப்பது அவசியம் என நாகமுத்து பிரதீபராஜா மேலும் குறிப்பிட்டார். மீண்டும் ஒரு புயல் வருமா என பலர் வினவுகின்றார்கள் ; புவியியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் தெரிவிப்பதென்ன? | Virakesari.lk
  10. அனர்த்த நிலைமையில் முழு நாடும் ஒன்றுபட்டுள்ள இந்த சந்தர்ப்பத்தில், முறையற்ற வகையில் மற்றும் உண்மைக்குப் புறம்பான செய்திகளைப் பரப்புபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யு. வுட்லர் தெரிவித்தார். பொதுமக்களுக்கு அச்சத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்தும் வகையில் செய்திகளைப் பரப்புவது தொடர்பாக தற்போது குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும், கணனி புலனாய்வுப் பிரிவு, சம்பந்தப்பட்ட முறைப்பாடுகள் குறித்து விசாரணைகளைத் தொடங்கியுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சுட்டிக்காட்டினார். முப்படை பாதுகாப்பு தலைமையகத்தில் திங்கட்கிழமை (01) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யு. வுட்லர் இதனைத் தெரிவித்தார். அனர்த்தத்திற்குப் பின்னரான காலப் பகுதியில் நாட்டில் பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வுக்கான சேவைகள் மற்றும் அவர்களுக்கு தேவையானவற்றை வழங்க அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வரும் இந்நேரத்தில், சில நபர்கள் சமூக ஊடகங்களில் உண்மைக்குப் புறம்பான மற்றும் உறுதிப்படுத்தப்படாத செய்திகளைப் பரப்பும் போக்கு இருப்பதாகவும் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் குறிப்பிட்டார். பொதுமக்களிடையே அச்சத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்தும் வகையில் செய்திகளைப் பரப்புதல் மற்றும் வெளியிடுதல் மிகவும் தவறான செயல் என்றும், பொய்யான தகவல்களைப் பரப்புவது தண்டனைக்குரிய குற்றமாகும் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சுட்டிக்காட்டினார். எனவே, இந்த அனர்த்த காலத்தில் முழு நாடும் ஒன்றுபட்டுள்ள இந்த நேரத்தில், சமூக ஊடகங்களில் முறையற்ற மற்றும் உண்மைக்குப் புறம்பான செய்திகளைப் பரப்ப வேண்டாம் என்று இலங்கை பொலிஸ் சார்பாக தான், பொதுமக்களை கௌரவமாக கேட்டுக்கொள்கிறேன் என்றும் அவர் குறிப்பிட்டார். அனர்த்த நிவாரண முகாம்களிலும், பாதித்த பகுதிகளிலும் சில குற்றச் சம்பவங்கள் தொடர்பில் தகவல்கள் கிடைத்துள்ளதாகவும், இலங்கை தண்டனைச் சட்டக் கோவையின் பிரகாரம் பாலியல் வல்லுறவு, அத்துமீறல், திருட்டு மற்றும் கொள்ளை ஆகியவற்றில் ஈடுபடும் எந்தவொரு நபருக்கும் எதிராக சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படும் என்றும் தெரிவித்த அவர், அனர்த்தத்தினால் பாதித்த மக்களின் நலனுக்காக அரசாங்கம் செயற்படுத்தும் கூட்டு நடவடிக்கைக்கு அனைவரின் கௌரவமான பங்களிப்பை எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டார். மேலும், இந்நாட்டிற்கு வருகை தரும் வெளிநாட்டினரின் பாதுகாப்பிற்காக பல்வேறு முக்கியமான மற்றும் துரித நடவடிக்கைகளை இலங்கை பொலிஸ் எடுத்துள்ளது என்றும், அதன்போது சுற்றுலாப் பயணிகள் தொடர்பாக ஏதேனும் சிக்கல் இருந்தால், சுற்றுலா பொலிஸ் பிரிவு பணிப்பாளரின் 0718591894, 0112421070 அல்லது 1912 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கோ அல்லது விமான நிலையத்தின் (சுற்றுலா) பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி 0718596057 என்ற இலக்கத்திற்கோ,விமான நிலையத்தின் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி 0718591640 என்ற இலக்கத்திற்கோ தெரிவிக்கலாம் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். மேலும், பொலிஸ் மா அதிபரின் அறிவுறுத்தலின் பேரில் பொலிஸ் தலைமையகத்தில் 24 மணி நேர விசேட நடவடிக்கை பிரிவு நிறுவப்பட்டுள்ளதுடன், பொதுமக்கள் 0718595884, 0718595883, 0718595882, 0718595881, 0718595880 இந்த தொலைபேசி எண்களைத் தொடர்பு கொண்டு அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட நபர்கள் தொடர்பான அல்லது ஏதேனும் பிரச்சினைகள் பற்றி முறைப்பாடு செய்ய முடியும். சமூக ஊடகங்களில் பொய்ச் செய்திகள்; கடுமையான சட்ட நடவடிக்கை எச்சரிக்கை – பொலிஸ் ஊடகப் பேச்சாளர் | Virakesari.lk
  11. 29 Nov, 2025 | 01:47 PM நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளத்தினால் எலிக்காய்ச்சல் பரவக்கூடிய அபாயம் காணப்படுவதாக சுகாதார மேம்பாட்டுப் பணியகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. எனவே, சுத்தமான நீரை பயன்படுத்துமாறு சுகாதார மேம்பாட்டுப் பணியகம் வித்துள்ளது. சீரற்ற வானிலை ; எலிக்காய்ச்சல் பரவக்கூடிய அபாயம்! | Virakesari.lk
  12. 29 Nov, 2025 | 02:51 PM நோர்டன்பிரிட்ஜ் பகுதியில் பெய்து வரும் இடைவிடாத கனமழையின் விளைவாக, விமலசுரேந்திர அணைக்கட்டு அருகே உள்ள இராணுவ சோதனை சாவடிக்கு முன்பாக ஏற்பட்ட மண் சரிவில் சிக்கியிருந்த ஐந்து இராணுவ வீரர்கள் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். இவர்களை லக்சபான இராணுவ முகாமின் மீட்புக் குழுவினர் மீட்டு, டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாக நோர்டன்பிரிட்ஜ் பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று, நோர்டன்பிரிட்ஜ்–கினிகத்தேன பிரதான வீதியில் ஏற்பட்ட மண்மேடு சரிவின் காரணமாக சோதனைச் சாவடி முழுமையாக மண்ணுக்குள் புதைந்துள்ளது. அப்போது 19வது இலங்கை தேசிய இராணுவப்படையைச் சேர்ந்த சார்ஜென்ட் மேஜர் ஒருவரை உள்ளடக்கிய ஐந்து வீரர்கள் சோதனை சாவடி நிலையத்தில் வழக்கம் போல் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டிருந்தனர். சரிவு ஏற்பட்டதை முதலில் கவனித்த நோர்டன்பிரிட்ஜ் பொலிஸார் உடனடியாக லக்சபான இராணுவ முகாமின் கட்டளை அதிகாரியைத் தொடர்புகொண்டனர். தகவல் கிடைத்ததையடுத்து, கட்டளை அதிகாரி உடனடியாக மீட்புக் குழுவுடன் சம்பவ இடத்திற்குச் சென்றார். பின்னர், நோர்டன்பிரிட்ஜ் பொலிஸ் அதிகாரிகளுடன் இணைந்து மண்க்குள் சிக்கியிருந்த வீரர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். மீட்கப்பட்ட ஐந்து பேரும் உடனடியாக டிக்கோயா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மண்சரிவு காரணமாக நோர்டன்பிரிட்ஜ்–கினிகத்தேன பிரதான வீதியில் போக்குவரத்து முற்றிலுமாக முடங்கியுள்ளதாகவும், வீதியில் உள்ள மண்மேட்டை அகற்றும் பணிகள் தற்போது இடம்பெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அட்டன் மண்சரிவில் சிக்கிய 5 இராணுவ வீரர்கள் உயிருடன் மீட்பு! | Virakesari.lk
  13. 29 Nov, 2025 | 02:57 PM யாழில் இருந்து சென்ற பேருந்து கலாஓயா பகுதியில் வெள்ளத்தில் சிக்கியவேளை அந்த பேருந்தில் இருந்த 69பேரும் பாதுகாப்பாக மீட்கப்பட்ட நிலையில் மீட்பு பணிகளில் ஈடுபட்டவர்களுக்கு யாழ்ப்பாணம் மாவட்ட அரசாங்க அதிபர் நன்றி தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாண மாவட்டத்தைச் சேர்ந்த பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பயணம் செய்த பேருந்து கலாஓயா பகுதியில் வெள்ளத்தில் சிக்கிகொண்டது. அப் பேருந்தில் பயணம் செய்த 69 பேர் அனுராதபுரம் மற்றும் புத்தளம் மாவட்டங்களுக்கு இடையிலான கலாஓயா பகுதியில் பாதுகாப்பாக கூரையில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். இவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டு நொச்சிகாமம் வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளனர். இடர்மிகுந்த சூழலில் புத்தளம் மற்றும் அனுராதபுர மாவட்ட செயலாளர்கள் , விமானப்படை, கடற்படை இராணுவம், பொலிஸார் , அனர்த்த முகாமைத்துவ பிரிவினர் மற்றும் மீட்பு பணியாளர்கள், வைத்தியசாலை பணியாளர்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட்டு பயணிகளை பாதுகாப்பாக மீட்டமைக்கு யாழ்ப்பாண மாவட்ட மக்கள் சார்பில் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். சகல மாவட்ட அரச அதிபர்களுடனான ஜனாதிபதியின் zoom கலந்துரையாடலில் யாழ்ப்பாணம் மாவட்டத்தினுடைய வெள்ள நிலவரம் தொடர்பாக தெரிவிக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் மேற்படி விடயம் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டதுடன் ஜனாதிபதியின் செயலாளர், அனுராதபுரம் மற்றும் புத்தளம் மாவட்ட செயலாளர் ஆகியோருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு மீட்பு நடவடிக்கையினை துரிதப்படுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது. . பல்வேறு நெருக்கடிகள், இடர்பாடுகளுக்கு மத்தியிலும் மீட்பு பணியில் ஈடுபட்ட அனைத்து தரப்பினருக்கும் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் என்ற வகையில் நன்றி கலந்த பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்தார். யாழில் இருந்து பயணித்த 69 பேரின் உயிரை காப்பாற்றியவர்களுக்கு அரசாங்க அதிபர் நன்றி | Virakesari.lk
  14. குருநாகல் - பன்னல பகுதியில் வெள்ளத்தில் சிக்கி 11 பேர் பலி ; 14 பேர் பாதுகாப்பாக மீட்பு! 29 Nov, 2025 | 05:24 PM குருநாகல் பன்னல நாலவலான பகுதியில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கிய முதியோர் இல்லத்திலிருந்த 11 பேர் உயிரிழந்துள்ளதுடன் 14 பேர் மீட்பு படையினரால் மீட்கப்பட்டுள்ளனர். குருநாகல் - பன்னல பகுதியில் வெள்ளத்தில் சிக்கி 11 பேர் பலி ; 14 பேர் பாதுகாப்பாக மீட்பு! | Virakesari.lk
  15. 29 Nov, 2025 | 05:33 PM கடும் வெள்ள அனர்த்தத்திற்கு உள்ளாகி இருந்த வவுனியா நகரம் தற்போது மெல்ல மெல்ல வழமையான நிலைமைக்கு திரும்பி வருகின்றது. கடந்த இரண்டு நாட்களாக தொடர்ச்சியான மழையின் காரணமாக பல்வேறு பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கிய நிலையில் மக்கள் பலர் இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். இவர்களுக்கான சமைத்த உணவுகளை தன்னார்வ செயற்பாட்டாளர்கள் வழங்கி வந்ததோடு அரச திணைக்களங்கள் சில வழங்கி இருந்தன. இதேவேளை வெள்ள அனர்த்தம் ஏற்பட்டு பேரிடர் ஏற்பட்ட நிலையில் வவுனியா மாவட்டத்தில் இரு உயிரிழப்புக்கள் இடம்பெற்றதோடு பல்வேறு அசெளகரியத்திற்கு மக்கள் முகம் கொடுத்து இருந்தமை குறிப்பிடத்தக்கது. நீரில் அகப்பட்டு மரணங்கள் வவுனியா சாந்தசோலை பகுதியில் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்ட காரில் இருந்து சடலங்களாக மீட்கப்பட்டிருந்தனர். இவர்கள் இருவரும் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். பொது சுகாதார பரிசோதகரான 51 வயதான குமார செனவிரத்தின என்ற மட்டக்களப்பை சேர்ந்த ஆணும் 38 வயதுடைய 306 ஏ காத்தான்குடி என்ற முகவரியை சேர்ந்த முகமது முஸாபின் சப்ரினா எனவும் தெரியவந்துள்ளது. வெள்ளத்தில் அகப்பட்ட மக்கள் இதேவேளை வவுனியாவில் கந்தசாமி நகர், பழைய மெனிபார்ம், கோதண்டர்நொச்சிக்குளம், பூம்புகார் ஆகிய இடங்களில் வெள்ளத்தில் அகப்பட்ட பல குடும்பங்களை சேர்ந்தவர்கள் வெளியேற முடியாத நிலையில் காணப்பட்ட நிலையில் அவர்களை கடற்படையின் உதவியுடன் மீட்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது குளங்களின் நிலை இந் நிலையகல் பாவற்குளத்தின் நான்கு வாண் கதவுகளும் முழுமையாக பத்து அடிவரை திறக்கப்பட்டுள்ளதுடன் பேராறு அணைக்கட்டின் மூன்று வான்கதவுகளும் ஐந்து மீட்டர் வரை திறக்கப்பட்டுள்ளது. இக் குளங்களுக்கு கீழுள்ள பல குளங்கள் உடைப்பெடுத்துள்ளதையும் அவதானிக்க கூடியதாக இருக்கின்றது. இதேவேளை பல குளங்கள் உடைப்பெடுக்கும் அபாயம் இருப்பதன் காரணமாக குளக்கட்டுகளை வெட்டி நீரை வெளியேற்றும் செயற்பாட்டில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். போக்குவரத்து இந்நிலையில் வவுனியாவில் இருந்து மக்கள் தென்பகுதி நோக்கியோ யாழ்ப்பாணம் நோக்கியோ செல்ல முடியாத வகையில் நொச்சிமோட்டை பாலம் மற்றும் சாந்தசோலை பகுதியில் பல அடி உயரத்திற்கு நீர் ஏ9 வீதியை ஊடறுத்து சென்றதுடன் கல்குண்ணாமடு மற்றும் ஈரப்பெரியகுளம் போன்ற பகுதிகளிலும் ஏ9 வீதி ஊடறுத்து பல அடி உயரத்துக்கு நீர் சென்ற காரணத்தால் குறித்த பகுதிகளின் ஊடாக மக்கள் போக்குவரத்து செய்வதற்கு பொலிஸார் தடை விதித்திருந்த நிலையில் தற்போது குறித்த பகுதிகளில் வெள்ள நீர் வடிந்தோடி இருப்பதன் காரணமாக பழமையான போக்குவரத்து நடைமுறைகள் இடம் பெற்று வருகின்றது. தொலைத்தொடர்புகள் இந்நிலையில் கையடக்க தொலைபேசி வலையமைப்புக்கள் பல இடங்களில் செயழிலந்துள்ளமையினால் மக்களை தொடர்பு கொள்வதிலும் பெரும் சிரமங்களுக்கு தொடர்ந்தும் முகம் கொடுத்து வருகின்றனர். வழமைக்கு திரும்பும் வவுனியா | Virakesari.lk
  16. சூறாவளி நிலைமை நாட்டை விட்டு நகர்ந்து வரும் நிலையில் நேரடி பாதிப்புகள் நீங்கினாலும் மறைமுகமான பாதிப்புகள் தொடர்ந்தும் நீடிக்கிறது - வளிமண்டலவியல் திணைக்களப் பணிப்பாளர் நாயகம். 9 Nov, 2025 | 05:31 PM சூறாவளி ஏற்படும் நிலைமை நாட்டை விட்டும் நகர்ந்து செல்கின்ற நிலையில் நேரடி பாதிப்பு நீங்கியுள்ள போதிலும், மறைமுகமான அனர்த்த நிலைமை தொடர்ந்தும் நீடிக்கிறது.இதன் விளைவாக, வடக்கு, வடமத்திய, வடகிழக்கு மற்றும் மத்திய மாகாணங்களில் சில இடங்களில் 100 மி.மீட்டருக்கும் அதிகமான மழை பொழிய வாய்ப்புள்ளது என்று வளிமண்டலவியல் திணைக்களப் பணிப்பாளர் நாயகம் அதுல கருணாநாயக்க தெரிவித்தார். இது தவிர மேற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் 50 மி.மீட்டருக்கும் அதிகமான மழை பெய்யும் எனவும் ஏனைய மாகாணங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் எனவும் அவர் தெரிவித்தார். இருந்த போதும், கடுமையான மழைவீழ்ச்சி குறைந்துள்ள போதிலும், அனர்த்த நிலைமை இன்னும் தணியவில்லை என்பதால் தமது வீடுகளுக்குத் திரும்பிச் செல்வதைத் தவிர்க்குமாறு அனர்த்தத்திற்கு முகங்கொடுத்துள்ள மக்களிடம் வளிமண்டலவியல் திணைக்களப் பணிப்பாளர் கோரினார். சூறாவளி நிலைமையின் காரணமாக அறுந்து விழுந்த மின்கம்பிகள் இன்னும் முழுமையாக சீரமைக்கப்படவில்லை என்பதோடு சம்பந்தப்பட்ட நிறுவனங்களினால் முறையான அறிவிப்பு வெளியிடப்படும் வரை தங்கள் வீடுகளுக்குத் திரும்புவதைத் தவிர்க்குமாறு அவர் மேலும் வலியுறுத்தினார். அத்தோடு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருக்கும் கிணறுகளை சுத்திகரிக்காமல் குடிநீருக்காக அதனைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறும் இது பல சுகாதாரப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும் என்றும் பணிப்பாளர் நாயகம் மேலும் தெரிவித்தார். இருப்பினும், இதன் மறைமுகமான தாக்கங்கள் தொடர்ந்தும் நாட்டில் நீடிக்கும் என்பதோடு நாட்டிற்குள்ளேயும் சுற்றியுள்ள கடற் பிரதேசத்திலும் காற்றின் வேகம் மணிக்கு 60-70 கி.மீ வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது. அதனால் மீன்பிடி மற்றும் கடற் போக்குவரத்து நடவடிக்கைகளை இன்றைய தினம் தவிர்க்குமாறும் அவர் கோரினார். இந்த மறைமுகமான தாக்கங்கள் நவம்பர் 30 ஆம் திகதியாகும் போது நீங்கும் எனவும் அதன் பின்னர் சுமூகமான வானிலை நிலைமை உருவாகும் என்று அவர் சுட்டிக்காட்டினார். சூறாவளி நிலைமை நாட்டை விட்டு நகர்ந்து வரும் நிலையில் நேரடி பாதிப்புகள் நீங்கினாலும் மறைமுகமான பாதிப்புகள் தொடர்ந்தும் நீடிக்கிறது - வளிமண்டலவியல் திணைக்களப் பணிப்பாளர் நாயகம் | Virakesari.lk
  17. களனி கங்கை பெருக்கெடுக்கும் அபாயம் : வெள்ளத்தில் மூழ்கவுள்ள கொழும்பின் சில பகுதிகள் ! 29 Nov, 2025 | 07:54 PM களனி கங்கையின் நீர்மட்டம் தொடர்ச்சியாக உயர்ந்து வருவதால், பாரிய அளவிலான வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது. அதன் படி, மாலம்பே – கடுவல பிரதான வீதிக்கிடையே உள்ள தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் குடியிருப்போர் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர். தற்போதைய காலநிலை காரணமாக மேல் பகுதியிலான மழைப்பொழிவுகள் அதிகரித்து வருவதால், நீர்மட்ட உயர்வு மேலும் தீவிரமடையக்கூடும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தேவையற்ற பயணங்களை தவிர்க்கவும், அதிகாரிகள் வெளியிடும் மேலதிக அறிவுறுத்தல்களை கவனத்துடன் பின்பற்றவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவுறுத்தியுள்ளது. களனி கங்கை பெருக்கெடுக்கும் அபாயம் : வெள்ளத்தில் மூழ்கவுள்ள கொழும்பின் சில பகுதிகள் ! | Virakesari.lk
  18. 29 Nov, 2025 | 08:06 PM சீரற்ற வானிலை காரணமாக நாட்டின் பல பகுதிகளில் நிலவும் பெருவெள்ளம், மண்சரிவு மற்றும் பல்வேறு அனர்த்த சம்பவங்களை முன்னிட்டு உயிரிழப்புகளின் எண்ணிக்கை தீவிரமாக அதிகரித்து வருவதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இதுவரை கிடைத்துள்ள அதிகாரப்பூர்வ தகவலின்படி, மொத்தம் 153 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 191 பேர் இதுவரை காணாமல்போயுள்ளனர். பல மாவட்டங்களில் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், பாதுகாப்புப் படைகள் மற்றும் மீட்புக்குழுக்கள் 24 மணிநேரமும் பணியில் ஈடுபட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தொடர்ச்சியான கனமழை, பலத்த காற்று மற்றும் ஆறுகள் நிரம்பி வழிவந்ததன் காரணமாக ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கு பல கிராமங்களை வெள்ளத்தில் மூழ்கடித்து, வீடுகள், வீதிகள், வயல் நிலங்கள் உள்ளிட்டவற்றுக்கு கடுமையான சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம், மக்கள் அத்தியாவசியமற்ற பயணங்களை தவிர்க்கவும், வெளியிடப்படும் புதிய எச்சரிக்கைகளுக்கு தொடர்ந்து கவனம் செலுத்தவும் கேட்டுக் கொண்டுள்ளது. சீரற்ற வானிலையால் இதுவரை 153 பேர் பலி, 191 பேர் மாயம் | Virakesari.lk
  19. 29 Nov, 2025 | 12:07 AM தீவிரமான வானிலை காரணமாக கொழும்புத் துறைமுகத்தின் அனைத்து செயற்பாடுகளும் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன என்று இலங்கை துறைமுக அதிகார சபை அறிவித்துள்ளது. தற்போது நாட்டின் பல பகுதிகளிலும் தொடர்ச்சியான பலத்த மழையும், அதனுடன் கூடிய பலத்த காற்றும் பதிவாகி வருகின்றன. இந்த நிலைமை துறைமுகப் பகுதிகளில் பாதுகாப்பு ஆபத்துகளை உருவாக்கியுள்ளதால், எந்தவித அனர்த்தமும் ஏற்படாத வகையில் செயல்பாடுகளை நிறுத்தும் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் பயனாக, கொழும்புத் துறைமுகத்தில் உள்ள அனைத்து முனையங்களின் (Terminals) செயற்பாடுகள், சரக்கு ஏற்ற இறக்க பணிகள், கப்பல் நகர்த்தல் மற்றும் தொடர்புடைய சேவைகள் முழுமையாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன. வானிலை நிலைமை சீராகும் தருணத்தில் செயற்பாடுகள் வழமைக்கு கொண்டுவரப்படும் என துறைமுக அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது. கொழும்புத் துறைமுக செயற்பாடுகள் தற்காலிகமாக இடைநிறுத்தம் | Virakesari.lk
  20. 28 Nov, 2025 | 11:37 PM வவுனியா, சாந்தசோலை ஏ - 9 வீதியில் நீரில் அடித்துச் சென்ற நிலையில் கார் ஒன்று மீட்கப்பட்டுள்ளதுடன், அதன் உள்ளே இருந்து இரு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. குறித்த சம்பவமானது ஏ9 வீதி சாந்தசோலை சந்திக்கு அருகாமாயில் இடம்பெற்றுள்ளது. குறித்த விடயம் தொடர்பாக தெரியவருகையில், ஏ9 வீதி சாந்தசோலை சந்திக்கு அருகாமையில் கார் ஒன்று அடித்து செல்லப்பட்டுள்ளதை அவதானித்த கிராம மக்கள் பொலிஸார் மற்றும் இராணுவத்தினருக்கு தகவல் வழங்கியுள்ளனர். குறித்த தகவலினை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த இராணுவம் மற்றும் பொலிஸார் கிராம இளைஞர்களுடன் இணைந்து குறித்த காரினை மீட்டுள்ளனர். காரினை மீடடுள்ளதுடன், காரில் பயணித்த ஆண் மற்றும் பெண் ஒருவரின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளது. உடற்கூற்று பரிசோதனைக்காக சடலம் வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதுடன், மேலதிக விசாரணையினை வவுனியா பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதேவேளை குறித்த வீதியானது சீரற்ற காலநிலையால் வெள்ளநீர் வீதியை மூடி செல்வதன் காரணமாக நேற்று இரவு முதல் மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது வவுனியாவில் நீரில் அடித்துச் செல்லப்பட்ட கார் - இருவர் பலி | Virakesari.lk
  21. 28 Nov, 2025 | 11:51 PM யாழ்ப்பாண மாவட்டத்தினுடைய அனர்த்த நிலவரம் தொடர்பாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். அதன்படி, 28/11/2025 பி.ப 6 மணியளவில் யாழ்ப்பாண மாவட்டத்தில் 1,297 குடும்பங்களை சேர்ந்த 4,140 பேர் வெள்ள அனர்த்தத்தினால்பாதிக்கப்பட்டுள்ளனர். இதேவேளை பாதிக்கப்பட்ட மக்களில் தென்மராட்சி, நெடுந்தீவு, வேலணை, சண்டிலிப்பாய், சங்கானை பிரதேச செயலக பிரிவுகளில் 32 குடும்பங்களைச் சேர்ந்த 106 அங்கத்தவர்கள் பாதுகாப்பு நிலையங்களில் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கான சமைத்த உணவு பிரதேச செயலகங்களினால் வழங்கப்பட்டு வருகின்றது. இதேவேளை ஒரு வீடு முழுமையாக சேதமடைந்துள்ளதுடன் 85 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதெனவும் அரியாலை உவர் நீர் தடுப்பணை தொண்டைமானாறு உவர்நீர் தடுப்பணை அராலி உவர் நீர் தடுப்பணையின் கதவுகள் திறக்கபட்டுள்ளதுடன், தேவைக்கேற்ற வகையில் மேலதிக கதவுகள் திறப்பதற்குரிய தயார்நிலையில் இருப்பதாகவும் நீர்ப்பாசன திணைக்களத்தினால் அறியத்தரப்பட்டுள்ளது. எனவே இத்தடுப்பணைகளிற்கு அருகில் வசிக்கும் மக்கள் அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள். மேலும் வேலணை பிரதேச செயலாளர் பிரிவில் புங்குடுதீவிலிருந்து குறிக்கட்டுவான் வரையான தரைப்போக்குவரத்து தடைப்பட்டுள்ளதுடன் குறிக்கட்டுவானிலிருந்தான சகல படகு சேவைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் நெடுந்தீவு, நயினா தீவு, எழுவை தீவு, அனலை தீவிற்கான படகுசேவையும் இடைநிறுத்தப்பட்டுள்ளது, காரைநகர் பாலத்திலே கடல் அலை மேவுவதனால் பொதுமக்கள் அவதானத்துடன் பயணிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு தங்களது வீடுகளிலிருந்து வெளியேறும் மக்கள் தங்குவதற்கான பாதுகாப்பு நிலையங்கள் பிரதேச செயலாளர் பிரிவுகளில் அமைக்கப்பட்டுள்ளன. இது தொடர்பில் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் பிரதேச செயலாளர் அல்லது கிராம சேவையாளரின் உதவியினை பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணித் தாய்மார்கள் பாதுகாப்பான முறையில் அருகிலுள்ள வைத்தியசாலைகளிற்கு சென்று தங்குமாறு யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அவர்களால் ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ் இடர்காலப்பகுதியில் மக்கள் தேவையற்ற நடமாட்டங்களை தவிர்த்து அவதானமாகவும், பாதுகாப்பாகவும் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். சீரற்ற வானிலையால் யாழில் 4,140 பேர் பாதிப்பு - யாழ். மாவட்ட அரச அதிபர் | Virakesari.lk
  22. 29 Nov, 2025 | 01:03 AM நள்ளிரவு 12 மணியின் பின்னரான 4 மணித்தியாலங்களுக்குள் களனி கங்கையின் நீர்மட்டம் சடுதியாக உயரும் அபாயம் காணப்படுவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. களனி கங்கைக்கு அருகில் உள்ள கொலன்னாவை, கொழும்பு, அவிசாவளை, ஹோமாகம மற்றும் கடுவலை ஆகிய பகுதிகளில் வெள்ள அபாயம் தீவிரமடையக்கூடும் எனவும் நீர்ப்பாசனத் திணைக்களம் எச்சரித்துள்ளது. இதேவேளை, மகாவலி கங்கை, அட்டுளு கங்கை, மகா ஓயா, மாணிக்க கங்கை மற்றும் தெதுரு ஓயா ஆகியவற்றின் நீர்மட்டங்களும் அதிகரித்துள்ளதாகவும் குறித்த ஆறுகளின் தாழ் நிலப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேறுமாறும் நீர்ப்பாசனத் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது. எச்சரிக்கை ! களனி கங்கையின் நீர்மட்டம் சடுதியாக உயரும் அபாயம் | Virakesari.lk
  23. 28 Nov, 2025 | 01:05 PM யாழ். காங்கேசன்துறைக்கான புகையிரத சேவை நிறுத்தப்பட்டதால், அநுராதபுரம் புகையிர நிலையத்தில் சுமார் 400 பேர் வரை சிக்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பாதிக்கப்பட்டோருக்கு தேவையான உதவிகளை வழங்க அநுராதபுரம் நகரசபைக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க அறிவித்துள்ளார். அதிக மக்கள் தொகை சிக்கியயுள்ள நிலையில், உணவு, தண்ணீர் மற்றும் தற்காலிக வசதிகள் உடனடியாக வழங்கப்பட வேண்டும் என அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர். புகையிரத சேவை மீண்டும் ஆரம்பிக்கும் வரை, சிக்கிய பயணிகள் பாதுகாப்பாக தங்க வைக்கப்படுவதை உறுதி செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அநுராதபுரம் புகையிர நிலையத்தில் சிக்கியுள்ள சுமார் 400 பேர்! | Virakesari.lk
  24. கொழும்பில் 2016 ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தை விட மோசமான நிலைமை ஏற்பட கூடும் - நீர்பாசனத் திணைக்களம். 28 Nov, 2025 | 03:29 PM கொழும்பில் 2016 ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தை விட மோசமான நிலைமை ஏற்பட கூடும் என நீர்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக களனி கங்கையின் நீர்மட்டம் அதிகரித்துள்ளது. இதனால் நாளை சனிக்கிழமை (29) இரவு வேளையில் கொழும்பில் பாரிய வெள்ளம் ஏற்படலாம் என எச்சரிக்கை விடுத்துள்ளது. உடைமைகளை ஆயத்தம் செய்து பாதுகாப்பாக இருக்குமாறு நீர்பாசனத் திணைக்களம் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது. கொழும்பில் 2016 ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தை விட மோசமான நிலைமை ஏற்பட கூடும் - நீர்பாசனத் திணைக்களம் | Virakesari.lk
  25. கிளிநொச்சி மாவட்ட குளங்களில் வெள்ளப்பெருக்கு 28 Nov, 2025 | 04:28 PM தொடர்ச்சியாக பெய்து வரும் கன மழை காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தின் கிழக்கு பகுதிகளில் உள்ள அனைத்து குளங்களும் வான் பாய்கின்றன. அத்தோடு கிளிநொச்சி மேற்கு பகுதியில் உள்ள குடமுருட்டி குளம் மாத்திரம் இன்று வெள்ளிக்கிழமை (28) மாலை வரையான தகவலின் படி வான் பாய்கின்றன. இதன் காரணமாக தாழ் நிலப்பகுதிகள் பல வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. பல இடங்களில் மக்கள் இடம்பெயர்ந்து பாடசாலைகளில் தங்கியுள்ளனர். வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தமையால் மக்கள் தொடர்ந்தும் இடமபெயர்ந்து வருகின்றனர். கிளிநொச்சி மாவட்ட குளங்களில் வெள்ளப்பெருக்கு | Virakesari.lk

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.