Everything posted by பிழம்பு
-
யாழ். கோட்டையை சுற்றியுள்ள பகுதியில் எல்லைக் கல் நடும் தொல்லியல் திணைக்களம்!
18 Dec, 2025 | 05:44 PM யாழ்ப்பாணம் கோட்டையை சுற்றியுள்ள பகுதியில் தொல்பொருள் சின்னங்கள் புதைந்திருக்கலாம் என்பதால் தொல்பொருள் திணைக்களம் எல்லைக் கல் இடும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. இதனால் முற்றவெளி மைதானத்திற்குள் நுழைய முடியாதவாறு எல்லைக்கல் நாட்டப்படுவதாக யாழ்ப்பாண மாநகர சபை உறுப்பினர் ரத்னம் சதீஸ் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் எல்லைக் கல்லின் அளவிற்கு குறித்த எல்லையை இடுமாறு நாங்கள் கோரினோம். அதற்கு அவர்கள், அது தங்களுக்குரிய பிரதேசம் என்றும், வீதி அபிவிருத்தி அதிகாரசபை, மாநகர சபை உள்ளிட்ட அனைத்து தரப்பினரிடமும் அனுமதி எடுத்த பின்னரே இவ்வாறு எல்லைக் கல் நாட்டுவதாக கூறினர். வீரசிங்கம் மண்டபத்திற்கு முன்னால் உள்ள தமிழாராய்ச்சி படுகொலை நினைவேந்தல் தூபியில் நாங்கள் நினைவேந்தல் செய்வது வழமை. அந்த வளாகத்திற்கு உள்ளே சென்று நாங்கள் நினைவேந்தல் செய்ய வேண்டும். ஆகையால் அந்த பகுதியை விட்டு எல்லை இடுமாறு கோரினோம். அதன்படி வாயிலின் சிறிய பகுதியை விட்டுவிட்டு, எல்லைக்கல் நாட்டப்படுகிறது. வாயிலுக்கு கதவு போடுமாறு அவர்கள் கூறினர். இது தொல்பொருள் திணைக்களத்தின் பகுதி, ஆகையால் யாரும் இதனை தடுக்க முடியாது என்று கூறுகின்றனர். யாழ். மாநகர சபை இது குறித்து விரைந்து நடவடிக்கை எடுக்கிறதா என பார்ப்போம் என்றார். யாழ். கோட்டையை சுற்றியுள்ள பகுதியில் எல்லைக் கல் நடும் தொல்லியல் திணைக்களம்! | Virakesari.lk
-
வடக்கு, கிழக்கு புகையிரத சேவைகள் 2026 முதல் மீண்டும் ஆரம்பம் - போக்குவரத்து பிரதி அமைச்சர்
18 Dec, 2025 | 05:56 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) சேதமடைந்த புகையிரத பாதைகள் வெகுவாக புனரமைக்கப்படுகின்றன. 2026.01.01ஆம் திகதியில் இருந்து வடக்கு மற்றும் கிழக்குக்கான புகையிரத சேவைகள் முழுமையாக ஆரம்பிக்கப்படும். 2026 பெப்ரவரி மாதம் முதலாம் திகதி முதல் தலைமன்னாருக்கான புகையிரத சேவைகள் ஆரம்பிக்கப்படும் என போக்குவரத்து பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (18) நடைபெற்ற நாட்டின் தற்போதைய நிலைமை குறித்த சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, தித்வா சூறாவளி தாக்கத்தினால் மத்திய மாகாணம் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று போக்குவரத்து அமைச்சும் பாதிக்கப்பட்டுள்ளது. பிரதான மற்றும் சிறு வீதிகள், பாலங்கள்,புகையிரத வீதிகள், பாலங்கள் மிக மோசமாக சேதமடைந்துள்ளன. நாடளாவிய ரீதியில் உள்ள ஏ மற்றும் பி கட்டமைப்பிலான வீதிகள் சேதமடைந்துள்ளன. அண்ணவளாக 1450. 6.4 கிலோமீற்றர் தூர வீதிகள் சேதமடைந்துள்ளன. மத்திய மாகாணத்தில் பெருமளவிலான வீதிகள் சேதமடைந்துள்ளன. மலைகளுக்கு நடுவில் வீதிகளை அமைத்ததன் விளைவையே நாடு இன்று எதிர்கொண்டுள்ளது. வீதி அபிவிருத்தியின் போது எதிர்க்கால திட்டமிடல் குறித்து விசேட அவதானம் செலுத்தப்படும். சேதமடைந்த வீதிகளை அபிவிருத்தி செய்வதற்கு 69 பில்லியன் செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. சூறாவளி தாக்கத்தால் புகையிரத திணைக்களம் பில்லியன் கணக்கில் நட்டத்தை எதிர்கொண்டுள்ளது. புகையிரத பாதைகள், பாலங்கள், சமிஞ்சை கோபுரங்கள் முழுமையாக சேதமடைந்துள்ளன. மலையக புகையிரத பாதையில் புகையிரத வீதியின் இருப்புகள் மாத்திரமே மிகுதியாகியுள்ளன. புகையிரத பாலங்களை புனரமைப்பதற்கு மாத்திரம் 6 பில்லியன் ரூபா செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. சேதமடைந்த புகையிரத பாதைகளை விரைவாக புனரமைப்பதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.இராணுவத்தினர் முழுமையான ஒத்துழைப்பு வழங்குகிறார்கள். வடக்கு மற்றும் கிழக்குக்கான புகையிரத சேவைகள் 2026.01.01 ஆம் திகதி முதலும், தலைமன்னாருக்கான புகையிரத சேவைகள் 2026 பெப்ரவரி முதலாம் திகதியில் இருந்தும் முழுமையாக ஆரம்பிக்கப்படும். மலையகத்துக்கான புகையிரத சேவையை ஆரம்பிக்கும் பணிகள் துரிதப்படுதப்படுத்தப்பட்டுள்ளன. அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நட்டஈடு மற்றும் இழப்பீடு வழங்கப்படுகிறது. இந்த நெருக்கடியான நிலைமையில் இருந்து மீள்வதற்கு அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் அதனை விடுத்து அரசியல் இலாபம் தேடக்கூடாது என்றார். வடக்கு, கிழக்கு புகையிரத சேவைகள் 2026 முதல் மீண்டும் ஆரம்பம் - போக்குவரத்து பிரதி அமைச்சர் | Virakesari.lk
-
தலகல ஓயா நீரோடை பெருக்கெடுத்ததாலேயே நுவரெலியா நகரம் நீரில் மூழ்கியது - மாநகர முதல்வர்
18 Dec, 2025 | 06:55 PM மோசமான காலநிலை காரணமாக நுவரெலியா நகரில் பெய்த அதிக மழை காரணமாக நுவரெலியா பீதுறுதாலகால மலையிலிருந்து ஆரம்பமாகும் தலகலஓயா நீரோடை பெருக்கெடுத்தமையே கடந்த மாதம் 27ஆம் திகதி நுவரெலியா நகரில் வெள்ள நிலைமை ஏற்படக் காரணமாகும் என நுவரெலியா மாநகர முதல்வர் உபாலி வணிகசேக்கர தெரிவித்தார். நுவரெலியா மாநகர சபை மண்டபத்தில் இன்று வியாழக்கிழமை (18) நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின்போது உபாலி வணிகசேக்கர இதனை தெரிவித்துள்ளார். இச்சந்திப்பில் பிரதி நகர முதல்வர் சிரேஸ்ட சட்டத்தரணி சிவன்ஜோதி யோகராஜா, மாநகர ஆணையாளர், மாநகர செயலாளர் உட்பட மாநகர சபை ஆளுங்கட்சி உறுப்பினர்களும் கலந்துகொண்டனர். அங்கு மாநகர முதல்வர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், நுவரெலியா மாநகர சபை கட்டுப்பாட்டில் உள்ள நுவரெலியா கிரகரி வாவியின் அணைக்கட்டு வான்கதவுகள் திறக்கப்படாததால் நுவரெலியா நகரம் நீரில் மூழ்கியதாக ஒரு சில ஊடகங்களில் நுவரெலியா பொது மக்கள் கூறியதாக வெளியாகிய செய்திகள் உண்மைக்கு புறம்பானவை. அதில் எந்தவித உண்மையும் இல்லை. நுவரெலியா நகரம் நீரில் மூழ்வதற்கு முன்பே நுவரெலியா கிரகரி வாவியின் இரண்டு வான்கதவுகளும் திறக்கப்பட்டன. ஆனாலும் தொடர்ந்து மூன்று நாட்களும் இடைவிடாது பெய்த கன மழையினால் பீதுறுதாலகால மலையிலிருந்து ஆரம்பமாகும் தலகல ஓயா நீரோடையில் நீர் பெருக்கெடுத்ததாலேயே நுவரெலியா நகரம் நீரில் மூழ்கியது. அத்துடன் நுவரெலியாவில் அதிகரித்த சட்டவிரோத கட்டடங்கள், கால்வாய்கள் குறுகியதாக மாறியிருப்பது மற்றும் கிரகரி வாவியின் மதகை அகலமாக்காமை என்பனவே இதற்குக் காரணமாக அமைந்ததாக தெரிவித்தார். மேலும், நுவரெலியா நகரில் மாவட்ட பொது வைத்தியசாலைக்குச் செல்லும் வீதி, நுவரெலியா குதிரைப்பந்தய திடல் (ரேஸ்கோஸ்) நுவரெலியா கொல்ப் மைதான லயம், நுவரெலியா யுனிக் கிராமம் உட்பட பல இடங்களில் இயற்கை அனர்த்தத்தால் மழை நீர் நிரம்பியும் மண்சரிவு ஏற்பட்டும் பல பாதிப்புகள் ஏற்பட்டன. அவர்களுக்கு தேவையான நிவாரண பணிகளை நுவரெலியா மாநகர சபை முன்னின்று செய்து வருகிறது. மேலும் நுவரெலியா நகரில் பாதிக்கப்பட்ட விவசாயத்துறையையும், சுற்றுலாத் துறையையும், பாதிக்கப்பட்ட வர்த்தகத் துறையையும் அபிவிருத்தி செய்து மீண்டும் பழைய நிலைக்கு நுவரெலியாவை மீட்டெடுக்க அனைவரும் ஒத்துழைப்பு வழங்கவேண்டும் எனவும் தெரிவித்தார். அத்துடன் நுவரெலியா நகரில் எதிர்காலத்தில் மீண்டும் இதுபோன்ற வெள்ள நிலைமை ஏற்படாமல் தடுக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக குறுகிய கால, இடைக்கால மற்றும் நீண்ட கால திட்டங்களை விரைவாக செயற்படுத்துவதற்கு நுவரெலியா மாநகர சபை தயாராக இருப்பதாகவும் மாநகர சபை முதல்வர் மேலும் தெரிவித்தார். தலகல ஓயா நீரோடை பெருக்கெடுத்ததாலேயே நுவரெலியா நகரம் நீரில் மூழ்கியது - மாநகர முதல்வர் | Virakesari.lk
-
தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் மஞ்சள் அனகொண்டா பாம்புக் குட்டி மாயம்
மஞ்சள் அனகொண்டா குட்டிக்கு தனிமைப்படுத்தல். Editorial / 2025 டிசெம்பர் 17 , பி.ப. 02:40 - 0 - 32 தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையில் இருந்து டிசம்பர் 6 ஆம் திகதி காணாமல் போன மஞ்சள் அனகொண்டா குட்டி 10 நாள் தேடுதலுக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மிருகக்காட்சிசாலையின் பிரதி பணிப்பாளர் கசுன் ஹேமந்த சமரசேகர தெரிவித்தார். செவ்வாய்க்கிழமை (16) இரவு மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது அனகொண்டா குட்டி, அடைத்து வைக்கப்பட்டிருந்த சில மீட்டர் தொலைவில் அமைந்துள்ள ஒரு அலுமாரியில் ஒரு டிராயருக்கு அடியில் மறைந்திருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறினார். காணாமல் போனதிலிருந்து மிருகக்காட்சிசாலை அதிகாரிகள் பகல்நேர தேடல் நடவடிக்கைகளை மேற்கொண்டனர், அதே நேரத்தில் மூன்று நாட்களுக்கு முன்பு இரவு நேர தேடல்கள் தொடங்கப்பட்டன என்று அவர் மேலும் கூறினார். அனகொண்டா குட்டி அதன் அடைப்பில் உள்ள மிகச் சிறிய துளை வழியாக தப்பித்து அலமாரி டிராயருக்குள் மறைந்திருந்ததாக பிரதி பணிப்பாளர் கசுன் ஹேமந்த சமரசேகர விளக்கினார். குட்டி நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும், மலைப்பாம்பு குடும்பத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் பொதுவாக வாரத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை உணவளிப்பதாகவும், எனவே இளம் அனகொண்டா காணாமல் போன காலத்தில் எந்த உணவுப் பிரச்சினைகளையும் எதிர்கொள்ளவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார். அனகொண்டா குட்டி இப்போது கண்காணிப்புக்காக தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளதாக சமரசேகர மேலும் கூறினார். Tamilmirror Online || மஞ்சள் அனகொண்டா குட்டிக்கு தனிமைப்படுத்தல்
-
நீதிமன்றில் சரணடைந்த அம்பிட்டிய சுமண ரத்ன தேரருக்கு பிணை
17 Dec, 2025 | 03:24 PM தமிழ் மக்களை வெட்டிக் கொல்ல வேண்டும் என கூறிய சம்பவம் தொடர்பாக பிடியாணை பிறப்பிக்கப்பட்ட அம்பிட்டிய சுமண ரத்ன தேரர் மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் இன்று புதன்கிழமை (17) சரணடைந்தார். அதனை அடுத்து அவரை தலா ஒரு இலட்சம் ரூபாய் மதிப்புள்ள இரண்டு சரீரபிணையில் செல்ல அனுமதித்து உத்தரவிட்டு, ஜனவரி மாதம் 20 ஆம் திகதி வழக்கை நீதிபதி ஒத்திவைத்தார். கடந்த 2023-10-23 திகதி ஊடகங்களுக்கு சுமணரட்ன தேரர் வழங்கிய செவ்வியின் போது வடக்கில் உள்ள தமிழ் மக்களையும் தெற்கில் உள்ள தமிழ் மக்களையும் வெட்டிக் கொல்ல வேண்டும்' என தெரிவித்தார். இந்த வன்முறையான கருத்துக்கு எதிராக 2023-10-27ம் திகதி கொழும்பு புறக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் சட்டத்தரணி தனுக்க றனஞ்சக என்பவர் முறைப்பாடு செய்ததுடன் சிவில் மற்றும் அரசியல் தொடர்பான சர்வதேச உடன்படிக்கையின் கீழ் உள்ள சட்டத்தின் அடிப்படையில் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்துள்ளார். குறித்த வழக்கு தொடர்பாக சட்டமா அதிபருக்கு கோப்புக்கள் அனுப்பப்பட்ட நிலையில் கடந்த மாதம் சட்டமா அதிபர் திணைக்களம் குறித்த தேரரை கைது செய்யுமாறு அறிவுறத்தல் வழங்கிய நிலையில், குறித்த வழக்கு விசாரணைக்கு நீதிமன்றில் தொடர்ந்து ஆஜராகாத நிலையில் அவரை கைது செய்யுமாறு 15-12-2025 மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்து வெளிநாடு செல்வதற்கு பயணத்தடை விதித்து மட்டு.மேல் நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து தேரருக்கு மேல் நீதிமன்றம் பிடியாணை பிறப்பிக்கப்பட்டதை அடுத்து தேரர் இன்று புதன்கிழமை 3 சிரேஷ்ட சட்டத்தரணிகளுடன் முன்நகர்வு பத்திரம் ஊடாக மட்டக்களப்பு மேல் நீதிமன்றில் நீதிபதி ரி.ஜே. பிரபாகரன் முன்னிலையில் சரணடைந்ததையடுத்து, நீதிபதி தேரை தலா ஒரு இலட்சம் ரூபாய் ரூபாய் மதிப்புள்ள இரண்டு சரீரப் பிணையில் செல்ல அனுமதித்ததுடன் எதிர்வரும் ஜனவரி மாதம் 20 ஆம் திகதிக்கு வழக்கை ஒத்திவைத்தார். அதேவேளை பௌத்த தேரர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட 50 பேர் கொண்ட பெரும் படையுடன் நீதிமன்றத்துக்கு தேரர் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. நீதிமன்றில் சரணடைந்த அம்பிட்டிய சுமண ரத்ன தேரருக்கு பிணை | Virakesari.lk
-
இலங்கைக்கான அனர்த்த நிவாரண நிதியுதவியை அதிகரித்தது ஐரோப்பிய ஒன்றியம்!
17 Dec, 2025 | 03:13 PM இலங்கையின் அனர்த்த நிவாரணப் பணிகளுக்காக வழங்கப்படவிருந்த 1.8 மில்லியன் யூரோ நிதியுதவியை 2.35 மில்லியன் யூரோக்களாக ஐரோப்பிய ஒன்றியம் (EU) அதிகரித்துள்ளது. அனர்த்த நிவாரணப் பொருட்களுடன் ஐரோப்பிய ஒன்றியத்திற்குச் சொந்தமான விசேட விமானம் ஒன்று இன்று புதன்கிழமை (17) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது. இந்த விமானம், ஜேர்மனி மற்றும் லக்ஸம்பேர்க் ஆகியவற்றின் நிவாரணப் பொருட்களை ஏற்றி வந்திருந்தது. ஜெர்மனியிடமிருந்து 5 இலட்சம் யூரோ பெறுமதியான அனர்த்த நிவாரண உதவிப் பொருட்களும், லக்ஸம்பேர்க் அரசிடமிருந்து கூடாரங்கள், சமையலறை உபகரணங்கள், மெத்தைகள் உள்ளிட்ட பொருட்களும் இவ்வாறு கொண்டுவரப்பட்டன. இந்த நிவாரணப் பொருட்களைப் பொறுப்பேற்பதற்காக, இலங்கைக்கான ஜேர்மனியின் பிரதித் தூதுவர் சாரா ஹசல்பாத் (Sarah Hasselbarth), ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதி பியர் ட்ரிப்போன் (Pierre Tripon) மற்றும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அதிகாரிகள் குழுவினர் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இலங்கைக்கான அனர்த்த நிவாரண நிதியுதவியை அதிகரித்தது ஐரோப்பிய ஒன்றியம்! | Virakesari.lk
-
மண்டைதீவு புதைகுழி வழக்கு: தட்டச்சு வடிவ அறிக்கைக்கு உத்தரவு
17 Dec, 2025 | 05:21 PM மண்டைதீவு புதைகுழி வழக்கின் அறிக்கையை மீண்டும் இன்று புதன்கிழமை (17) அச்சுப் பிரதியாக ஊர்காவற்றுறை நீதிமன்றில் யாழ். மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில் வழக்கு 2026 ஆம் வருடம் பங்குனி மாதம் 31 ஆம் நாளன்றுக்கு ஊர்காவற்றுறை நீதிமன்றால் திகதியிடப்பட்டுள்ளது. குறித்த வழக்கு செவ்வாய்க்கிழமை (16) எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில், அறிக்கையை தட்டச்சு வடிவில் பிரதியாக்கம் செய்து இன்றையதினம் சமர்பிக்குமாறு ஊர்காவற்றுறை நீதிமன்று உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து அச்சுப் பிரதியாக்கம் செய்யப்பட்ட அறிக்கையை யாழ். மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் மீண்டும் நீதிமன்றில் இன்று புதன்கிழமை (17) சமர்பித்திருந்தனர். இதையடுத்து அறிக்கையின் விவரங்கள், சாட்சிகள் உள்ளிட்டவற்றை பெற்றுக்கொண்ட நீதிபதி மேலதிக சாட்சிகளின் வாக்குமூலங்களை குற்றத்தடுப்பு பிரிவினர் பெறவேண்டும் என்ற கோரிக்கையாலும், அகழ்வுக்கான பணிகளை முன்னெடுக்கும் புறச்சூழல் தற்போது இல்லாததாலும், அவ்வாறான காரணிகளை கருத்தில் கொண்டு குறித்த வழக்கு எதிர்வரும் 2026 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் நாளன்றுக்கு திகதியிடப்படுள்ளமை குறிப்பிடத்தக்கது. மண்டைதீவு புதைகுழி விவகாரம் ; வழக்கு விசாரணை 2026 மார்ச் 31 ஆம் திகதிக்கு | Virakesari.lk
-
அடுத்த சில நாட்களுக்கு வடக்கு,கிழக்கு பகுதிகளில் பலத்த மழைவீழ்ச்சி!
17 Dec, 2025 | 05:08 PM கிழக்கிலிருந்தான ஒரு அலை வடிவக் காற்றின் தாக்கம் காரணமாக நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் தற்போது நிலவும் மழை நிலைமை அடுத்த சில நாட்களுக்கும் தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாளை வியாழக்கிழமை (18) வானிலை முன்னறிவிப்பு குறித்து இன்று புதன்கிழமை (17) பிற்பகல் 2 மணிக்கு வெளியிடப்பட்ட அறிக்கையில் மேற்குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும் பொலன்னறுவை மாவட்டத்திலும் சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. வடக்கு மற்றும் வடமேல் மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யும்.நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இந்தப் பிரதேசங்களில் சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. மத்திய மலைநாட்டின் கிழக்கு சரிவுப் பகுதிகளிலும் வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை, ஹம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசக் கூடும். சப்ரகமுவ, மேல் மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக வீசக் கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள். அடுத்த சில நாட்களுக்கு வடக்கு,கிழக்கு பகுதிகளில் பலத்த மழைவீழ்ச்சி! | Virakesari.lk
-
புட்டு கேட்ட கணவனை போட்டு தள்ளிய மனைவி கத்தியுடன் சரண்
Editorial / 2025 டிசெம்பர் 15 , பி.ப. 06:00 - 0 - 32 கனகராசா சரவணன் காலை உணவாக புட்டு தயாரித்து தருமாறு கோரிய கணவனை கத்தியால் கழுத்தை வெட்டியும் கோடாரியால் மண்டையை பிளந்து கொலை செய்துவிட்டு பொலிஸ் நிலையத்தில் கத்தியுடன் சென்று சரணடைந்த மனைவி கைது செய்துள்ள சம்பவம் மட்டக்களப்பு வாகனேரியில் திங்கட்கிழமை (15) இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். வாகனேரி விஷ்ணு கோவில் வீதியைச் சோந்த 46 வயதுடைய விவசாயியான 4 பிள்ளைகளின் தந்தையான வைரமுத்து நவராசா என்பவரே இவ்வாறு உயிரிழந்தார். இது பற்றி தெரியவருவதாவது குறித்த சம்பவத்தில் உயிரிழந்தவர் வழமைபோல வேளாண்மை காவலுக்காக ஞாயிற்றுக்கிழமை (14)இரவு வீட்டை விட்டு வெளியேறி வயலுக்கு திங்கட்கிழமை (15) காலையில் வீடு திரும்பியுள்ளார். இந்த நிலையில் மனைவியிடம் காலை உணவாக புட்டு தயாரித்து தருமாறு கோரியுள்ளார் இதனை தொடர்ந்து கணவன் மனைவிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் அது சண்டையாக மாறிவிட்டது. இந்நிலையில் பகல் 11.30 மணி அளவில் கத்தியால் கணவரின் கழுத்தில் தாக்கியதுடன் கோடாரியால் மண்டையை பிளந்துள்ளார். இதையடுத்து அவர் சம்பவ இடத்தில் உயிரிழந்தார் இதையடுத்து தாக்குதலை மேற்கொண்ட பெண் வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் கத்தியுடன் சென்று சரணடைந்து தான் கணவனை வெட்டிக் கொலை செய்துள்ளதாக குற்றத்தை ஒப்புக்கொண்ட நிலையில் அவரை கைது செய்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து சம்பவ இடத்தில் தடயவியல் பிரிவு பொலிஸார் வரவழைக்கப்பட்டு சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்க நீதிமன்ற அனுமதி பெறும் நடவடிக்கை முன்னெடுத்து வருவதாக பொலிஸார் தெரிவித்தனர் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். Tamilmirror Online || புட்டு கேட்ட கணவனை போட்டு தள்ளிய மனைவி கத்தியுடன் சரண்
-
டிக்டொக் தொடர்பு முடிவில் 24 வயது பெண் பாலியல் பலாத்காரம்: 4 இளைஞர்கள் கைது
15 Dec, 2025 | 02:50 AM சம்பூர் பொலிஸ் பிரிவிலுள்ள வீரமாநகர் பகுதியைச் சேர்ந்த 24 வயது பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட 4 இளைஞர்கள் ஈச்சிலம்பற்று பொலிஸாரால் ஞாயிற்றுக்கிழமை (14) கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட இளைஞர்கள் அனைவரும் ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இலங்கைத்துறை முகத்துவாரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸாரின் ஆரம்ப விசாரணைகளின் படி, டிக்டொக் சமூக வலைத்தளத்தின் மூலம் இளைஞர் ஒருவர் குறித்த பெண்ணுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டு நேரில் சந்தித்துள்ளார். இதன் பின்னர், குறித்த இடத்திற்கு அவரது நண்பர்கள் வருகை தந்ததுடன், குழுவாக பாலியல் பலாத்காரம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஈச்சிலம்பற்று பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். டிக்டொக் தொடர்பு முடிவில் 24 வயது பெண் பாலியல் பலாத்காரம்: 4 இளைஞர்கள் கைது | Virakesari.lk
-
சீரற்ற வானிலையால் பாரிய வாழ்வாதாரப் பாதிப்பை எதிர்நோக்கும் முத்து ஐயன்கட்டுகுள நன்னீர் மீனவர்கள்
5 Dec, 2025 | 12:50 PM அண்மைக்காலத்தில் ஏற்பட்ட சீரற்ற வானிலையினால் முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான் பிரதேசசெயலாளர் பிரிவிற்குட்பட்ட முத்துஐயன்கட்டுகுளம் நன்னீர் கிராமிய மீனவர் அமைப்பின் அங்கத்துவக்குடும்பங்களின் வாழ்வாதாரம் வெகுவாகப்பாதிக்கப்பட்டுள்ளதுடன், இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ள நன்னீர் மீன்பிடியாளர்களுக்கு இதுவரை இழப்பீடுகளோ நிவாரணங்களோ வழங்கப்படவில்லை என வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனிடம் நன்னீர் கிராமிய மீனவர் அமைப்பினர் முறையிட்டுள்ளனர். இந்நிலையில் முத்து ஐயன்கட்டு குளம் நன்னீர் கிராமிய அமைப்பின் முறையீட்டையடுத்து, வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், நன்னீர் மீன்பிடியாளர்களின் பாதிப்பு நிலமைகள் தொடர்பில் நேரில் சென்று ஆராய்ந்ததுடன், குறித்த நன்னீர் மீனவ அமைப்பினரிடமிருந்து கோரிக்கைக் கடிதங்களைப் பெற்றுக்கெண்டார். அத்தோடு மீனவர்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் தொடர்பில் தம்மால் கவனம் செலுத்தப்படுமெனவும் தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், அண்மையில் நிலவிய சீரற்ற வானிலையினால் முத்துஐயன்கட்டு குளத்தின் கரையில் பாதுகாப்பாக கட்டிவைக்கப்பட்டிருந்த, முத்துஐயன்கட்டுக்குளம் நன்னீர் கிராமிய மீனவர் அமைப்பிற்குரிய 15 சிறிய படகுகள் நீரில் அடித்துச்செல்லப்பட்டுள்ளதாகவும், மீன்பிடி வலைகள் குளத்தில் அடித்துச்செல்லப்பட்டுள்ளதாகவும் இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரனின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டிருந்தது. அதேவேளை முத்துஐயன்கட்டு குளத்தின் நீர்மட்டம் உயர்வடைந்ததையடுத்து வான்கதவுகள் தூக்கப்பட்டநிலையில், குளத்தில் விடப்பட்டிருந்த மீன்குஞ்சுகள் மற்றும் பெரிய மீன்கள் என்பன வான்கதவுகளினூடாக வெளியேறியுள்ளதாகவும் இதன்போது நன்னீர் மீனவ நாடாளுமன்ற உறுப்பினரது கவனத்திற்கு கொண்டுவந்திருந்தனர். குறிப்பாக முத்துஐயன்கட்டுக்குளத்தில் ஒரு வருடகாலமாக மீன்குஞ்சுகள் விடப்படாதநிலையில், குறித்த நன்னீர் கிராமிய மீனவர் அமைப்பின் பயனாளிகளிடமிருந்து பணத்தினை அறவிட்டு இந்த வருட ஆரம்பத்தில் மீன்குஞ்சுகள் குளத்தில் விடப்பட்டிருந்ததாக நன்னீர் மீன்பிடியாளர்களால் நாடாளுமன்ற உறுப்பினரிடம் சுட்டிக்காட்டப்பட்டது. இவ்வாறு விடப்பட்ட மீன்குஞ்சுகள் வான் கதவுகளினூடாக வெளியேறியுள்ள நிலையில் நன்னீர் மீன்பிடியை வாழ்வாதாரமாக கொண்டிருக்கும் முத்துஐயன்கட்டு குளம் நன்னீர் கிராமிய மீனவர் அமைப்பில் அங்கத்துவம் பெறுகின்ற 101அங்கத்துவக் குடும்பங்களின் வாழ்வாதாரம் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக மீனவர்களால் தெரிவிக்கப்பட்டதுடன், தற்போது ஒரு பயனாளி 1கிலோ தொடக்கம் 02கிலோ வரையிலான மீன்களையே பிடிக்கக்கூடிய நிலைகாணப்படுவதாகவும் நன்னீர் மீன்பிடியாளர்கள் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரனிடம் முறையிட்டனர். இவ்வாறாக படகுகள் மற்றும் வலைகள் உள்ளிட்ட மீன்பிடி உபகரணங்கள் குளத்தில் அடித்துச்செல்லப்பட்டுள்ளதுடன், குளத்தில் விடப்பட்ட மீன்குஞ்சுகளும் வான்கதவுகளினூடாக வெளியேறியுள்ளநிலையில் தமது அன்றாட வாழ்வாதாரம் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக முத்துஐயன்கட்டுகுளம் நன்னீர் மீனவர்கள் இதன்போது நாடாளுமன்ற உறுப்பினரிடம் தெரிவித்ததுடன், இவ்வாறாக பாரிய வாழ்வாதாரப் பாதிப்பினை எதிர்நோக்கியுள்ள தமக்கு இதுவரை நிவாரணங்களையோ, இழப்பிடுகளையோ வழங்குவதற்கு உரியதரப்பினர் நடவடிக்கைகளை மேற்கொள்வில்லைஎனவும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரனின் கவனத்திற்கு கொண்டுவந்தனர். அதேவேளை, ஒட்டுசுட்டானுக்கு செல்வதற்குரிய வீதியும் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளதால் தாம் பல்வேறு போக்குவரத்து நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துவருவதாகவும் இதன்போது நடாளுமன்ற உறுப்பினரிடம் தெரிவித்தனர். இந்நிலையில், குறித்த மீனவ அமைப்பினரின் பிரச்சினைகளைச் செவிமடுத்த நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன், மீனவ அமைப்பினரிடமிருந்து கோரிக்கைக் கடிதங்களையும் பெற்றுக்கொண்டார். அதேவேளை, மீனவர்கள் எதிர்நோக்கும் வாழ்வாதார நெருக்கடி மற்றும் போக்குவரத்து நெருக்கடிகள் தொடர்பாக உரியதரப்பினரின் கவனத்திற்கு கொண்டுவந்து நெருகடிகளைத் தீர்ப்பது தொடர்பில் தம்மால் கவனஞ்செலுத்தப்படுமென நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரனால் இதன்போது தெரிவிக்கப்பட்டது. சீரற்ற வானிலையால் பாரிய வாழ்வாதாரப் பாதிப்பை எதிர்நோக்கும் முத்து ஐயன்கட்டுகுள நன்னீர் மீனவர்கள் | Virakesari.lk
-
பேரிடரை எதிர்கொண்டிருக்கும் தமிழ், முஸ்லிம், மலையகத் தமிழ் மக்களை மீண்டும் ஓரங்கட்டும் மொழிக் கொள்கையை உடனடியாகத் திருத்தியமையுங்கள் - ஜனாதிபதிக்கு அவசர கடிதம்
15 Dec, 2025 | 02:30 PM பேரிடரை எதிர்கொண்டிருக்கும் தமிழ், முஸ்லிம், மலையகத் தமிழ் மக்களை மீண்டும் ஓரங்கட்டும் மொழிக் கொள்கையை உடனடியாகத் திருத்தியமையுங்கள் என வலியுறுத்தி ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு சம உரிமை இயக்கம் அவசர கடிதம் எழுதியுள்ளது. சம உரிமை இயக்கத்தின் ஏற்பாட்டாளர் இந்திரானந்த டி சில்வாவின் கையொப்பத்துடனான குறித்த கடிதம் இன்று திங்கட்கிழமை (15) ஜனாதிபதி செயலத்தில் சம உரிமை இயக்கத்தினரால் கையளிக்கப்பட்டுள்ளது. குறித்த கடிதத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, நாட்டின் மக்கள் தொகையில் 25 சத வீதமானோர் தமிழ் மொழியை தமது தாய் மொழியாகக் கொண்டிருப்பதோடு நாட்டின் அரசியலமைப்பில் சிங்களமும் தமிழும் அதிகாரப்பூர்வ மொழிகளாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன. ஆனால், 1956 ஆம் ஆண்டு எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்க அறிவித்த சிங்களத்தை மட்டும் அதிகாரப்பூர்வ மொழியாகக் கொண்ட கொள்கை இன்னும் யாதார்த்தமாக உள்ளது என்பது கவலைக்குரியதாக இருந்தாலும், நான் அதை உங்களுக்குச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். இது ஒரு ஜனநாயக விரோத அரச கரும மொழிக் கொள்கையாகும், இது தமிழ் மொழி பேசும் தமிழ், முஸ்லிம், மலையகத் தமிழ் மக்களை நாட்டிலில் மீண்டும் மீண்டும் ஒதுக்கி வைக்கிறது. இதற்கு சிறந்த எடுத்துக்காட்டுகளில் சில, நாடு முழுவதையும் பாதித்த அண்மைய பேரழிவுகளின் போது மொழிக் கொள்கை குறுகிய மனப்பான்மையோடு செயற்படுத்தப்பட்டமை ஆகும். 01. பேரிடர் தொடர்பான அரச அறிவிப்புகளை சிங்கள மொழியில் மட்டும் வெளியிடுதல் 02. வளிமண்டலவியல் திணைக்களத்தின் வானிலை அறிக்கையின் அதிகாரப்பூர்வ வெளியீடு சிங்களத்தில் மட்டுமே இருக்கின்றமை 03. ஆபத்தான பகுதிகளிலிருந்து மக்களை வெளியேற்றுவது தொடர்பான அறிவிப்புகளும் சிங்களத்தில் மட்டுமே இருக்கின்றமை 04. அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சம்பத் கொட்டுவேகொட, சிங்களத்தில் மட்டுமே அறிவிப்புகளை வெளியிடுகின்றமை மாவட்டச் செயலாளர் முதல் கிராம அலுவலர் வரை மேற்கூறிய பல அறிவிப்புகளும் சிங்களத்தில் மட்டுமே அனுப்பப்படுகின்றன. அது மட்டுமல்ல, அண்மையில், ஜனாதிபதியாக, இந்த நாட்டின் தமிழ், முஸ்லிம், மலையகத் தமிழ் மக்களைத் தவிர்க்கும் வகையில், நீங்கள் நாட்டு மக்களுக்கு உரையாற்றினீர்கள். ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு உரையாற்றியபோது கூட தனது உரையை தமிழில் மொழிபெயர்க்காதது ஆச்சரியமாக இருக்கிறது. ஜனாதிபதி அவர்களே, தொழில்நுட்பத்தின் பரவலான பயன்பாடு மற்றும் மொழிபெயர்ப்பில் கூட அதன் பயன்பாட்டின் எளிமை இருந்தபோதிலும், "சிங்களம் மட்டும்" என்ற அதிகாரப்பூர்வ மொழிக் கொள்கை இன்னும் நடைமுறையில் உள்ளதோடு மக்கள் தங்கள் தாய்மொழியில் அரசுடன் தொடர்பு கொள்ளும் மனித மற்றும் ஜனநாயக உரிமைகளை அது அப்பட்டமாக மீறுகிறது. 30 ஆண்டுகால இனவாதப் போரைச் சந்தித்த ஒரு நாட்டிலேயே இதுபோன்ற ஒரு அதிகாரப்பூர்வ மொழிக் கொள்கை நடைமுறைப்படுத்தப்படுகிறது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. இந்தத் தருணத்தில் கூட, பேரிடர்களுக்கான இழப்பீடு தொடர்பான சுற்றறிக்கை சிங்களத்தில் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது. இந்த நாட்டின் தமிழ், முஸ்லிம், மலையகத் தமிழ் மக்கள் கூகிள் மூலம் அந்த அறிவிப்புகளை தமிழில் மொழிபெயர்க்க வேண்டியிருக்கிறது. ஆனால் அது சரியான செயன்முறை அல்ல என்பதைச் கூறத் தேவையில்லை. இது மிகவும் துரதிர்ஷ்டவசமான சூழ்நிலை. நுவரெலியா மாவட்டத்தில் ஒரு சுற்றாடல் பாதுகாப்பு அலுவலகம் உள்ளது. யாராவது ஒரு கட்டடம் கட்ட விரும்பினால், அந்த அலுவலகத்தில் கிடைக்கும் விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். ஆனால் அந்தப் படிவம் சிங்களம் மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே அச்சிடப்பட்டுள்ளது. சிங்கள பௌத்த மக்களின் வாக்குகளால் தான் ஆட்சிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டதாக பகிரங்கமாகக் கூறிய கோத்தபய ராஜபக்சதான் இந்த நாட்டின் ஜனாதிபதி பதவியை இன்னும் வகித்து வருகிறார் என்றிருந்தால், நாம் இந்த நிலையக் கண்டு ஆச்சரியப்பட வேண்டியதில்லை. தேசிய மக்கள் சக்தியின் முந்தைய தேர்தல் விஞ்ஞாபனங்களில், சிங்களவர்கள், தமிழ், முஸ்லிம்கள், மலையகத் தமிழர் ஆகிய அனைத்து மக்களும் தங்களுக்கு விருப்பமான மொழியில் அரசோடு தொடர்புகொள்ளும் உரிமை வழங்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது. ஆனால் இதுபோன்ற சம்பவங்கள் மூலம், இந்த நாட்டின் தமிழ், முஸ்லிம், மலையகத் தமிழ் மக்கள் ஓரங்கட்டப்படுகிறார்கள். எனவே, இந்த நிலையை உடனடியாக மாற்றவும், அரச அறிவிப்புகளிலிருந்து பல்வேறு திணைக்களங்களால் வெளியிடப்படும் ஒவ்வொரு அறிவிப்பு வரையும் தமிழில் மொழிபெயர்த்து வெளியிடவும், இந்த சமத்துவமற்ற நிலைமைகளை உடனடியாக மாற்றியமைக்கவும் சம உரிமை இயக்கம் உங்களை வலியுறுத்துகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது. பேரிடரை எதிர்கொண்டிருக்கும் தமிழ், முஸ்லிம், மலையகத் தமிழ் மக்களை மீண்டும் ஓரங்கட்டும் மொழிக் கொள்கையை உடனடியாகத் திருத்தியமையுங்கள் - ஜனாதிபதிக்கு அவசர கடிதம் | Virakesari.lk
-
டித்வா சூறாவளி ; 22,000 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் தற்காலிக தங்குமிடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்
Published By: Digital Desk 3 15 Dec, 2025 | 04:53 PM நாட்டில் டித்வா சூறாவளியால் ஏற்பட்ட பேரனர்த்தங்களில் சிக்கி 643 பேர் உயிரிழந்துள்ளதோடு, 183 பேர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. அதன்படி, கண்டியில் 237 பேரும், நுவரெலியாவில் 89 பேரும், பதுளையில் 88 பேரும், குருநாகலையில் 61 பேரும், புத்தளத்தில் 36 பேரும், கேகாலையில் 32 பேரும், மாத்தளையில் 29 பேரும், கம்பளையில் 17 பேரும், அநுராதபுரத்தில் 13 பேரும், கொழும்பில் 09 பேரும், அம்பாறையில் 08 பேரும், மொனராகலை, மட்டக்களப்பு மற்றும் மன்னாரில் தலா 4 பேரும், யாழ்ப்பாணம், பொலன்னறுவையில் தலா மூவரும், இரத்தினபுரியில் இருவரும், அம்பாந்தோட்டை மற்றும் காலியில் தலா ஒருவரும் உயிரிழந்துள்ளனர். அதேவேளை, 459,726 குடும்பங்களைச் சேர்ந்த 1,600,469 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில், 6,193 வீடுகள் பகுதியளவிலும், 95,456 வீடுகள் முற்றாகவும் சேதமடைந்துள்ளன. நாடளாவிய ரீதியில் 762 தற்காலிக தங்குமிடங்களில் 22,522 குடும்பங்களைச் சேர்ந்த 70,055 பேர் தற்போது தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த தற்காலிக தங்குமிடங்களில் பெரும்பாலானவை கண்டி மாவட்டத்தில் அமைந்துள்ளன. அங்கு 5,427 குடும்பங்களைச் சேர்ந்த 17,437 பேர் 222 தற்காலிக தங்குமிடங்களில் தங்கியுள்ளனர். நுவரெலியா மற்றும் பதுளை மாவட்டங்களிலும் அதிக எண்ணிக்கையிலான தற்காலிக தங்குமிடங்கள் அமைந்துள்ளன. நுவரெலியாவில் 206 தற்காலிக தங்குமிடங்களில் 6,487 குடும்பங்களைச் சேர்ந்த 19,750 பேரும், பதுளையில் 155 தற்காலிக தங்குமிடங்களில் 6,026 குடும்பங்களைச் சேர்ந்த 19,409 பேரும் தங்கியுள்ளனர். டித்வா சூறாவளி ; 22,000 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் தற்காலிக தங்குமிடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் | Virakesari.lk
-
21 இலட்சத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை!
15 Dec, 2025 | 03:52 PM 2025 ஆம் ஆண்டின் ஜனவரி மாதம் முதலாம் திகதியில் இருந்து டிசம்பர் மாதம் 11 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் 21 இலட்சத்து 73 ஆயிரத்து 616 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. சீரற்ற வானிலை காரணமாக நாட்டில் ஏற்பட்ட பாரிய அனர்த்தத்தின் மத்தியிலும் சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தருவதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இவ்வாண்டின் இதுவரையான காலப்பகுதிக்குள் அதிகளவான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ள நிலையில் அவர்களின் மொத்த எண்ணிக்கை 489,948 ஆகும். மேலும், ஜெர்மனியிலிருந்து 137,012 சுற்றுலாப் பயணிகளும், ரஷ்யாவிலிருந்து 166,626 சுற்றுலாப் பயணிகளும், ஐக்கிய இராச்சியத்திலிருந்து 196,958 சுற்றுலாப் பயணிகளும், அவுஸ்திரேலியாவிலிருந்து 98,318 சுற்றுலாப் பயணிகளும், சீனாவிலிருந்து 125,720 சுற்றுலாப் பயணிகளும், பிரான்ஸிலிருந்து 103,782 சுற்றுலாப் பயணிகளும் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர் அத்துடன், டிசம்பர் மாதத்தின் முதல் 11 நாட்களில் 70,023 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது 21 இலட்சத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை! | Virakesari.lk
-
யாழில் 6 மில்லியனுக்கும் அதிக மதிப்புள்ள கஞ்சா கைப்பற்றல்!
15 Dec, 2025 | 05:53 PM யாழ்ப்பாணத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (14) இலங்கை கடற்படையினர் நடத்திய தேடுதல் நடவடிக்கையின் போது கஞ்சா தொகை கைப்பற்றப்பட்டுள்ளது. இதன்போது கடற்கரையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 26 கிலோ 900 கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும், கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட கஞ்சாவின் மொத்த மதிப்பு ஆறு மில்லியன் ரூபாய்க்கும் அதிகம் என கடற்படையினர் தெரிவித்துள்ளனர். இதேவேளை கைப்பற்றப்பட்ட கஞ்சா தொகை சட்ட நடவடிக்கைக்காக பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. யாழில் 6 மில்லியனுக்கும் அதிக மதிப்புள்ள கஞ்சா கைப்பற்றல்! | Virakesari.lk
-
மன்னார் மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட கால்நடைகளுக்கான விசேட நடமாடும் கால்நடை வைத்திய நடவடிக்கை
12 Dec, 2025 | 05:33 PM மன்னார் மாவட்டத்தில் ஏற்பட்ட புயல் மற்றும் வெள்ளம் காரணமாக கால்நடை வளர்ப்பில் ஈடுபடும் பண்ணையாளர்கள் பாரிய இழப்பை சந்தித்துள்ள நிலையில் பாதிக்கப்பட்ட கால்நடைகளுக்கான இலவச சிகிச்சை அளிக்கும் நடமாடும் சேவை வெள்ளிக்கிழமை (12) மாவட்ட ரீதியில் மன்னார் கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்கள பிரதிப் பணிப்பாளர் கனியூட் பேபிதுரை வின்சன்ட் தலைமையில் முன்னெடுக்கப்பட்டது. மன்னார் மாவட்டத்தில் ஏற்பட்ட புயல் மற்றும் வெள்ளம் காரணமாக மாவட்டத்தில் உள்ள ஐந்து பிரதேசச் செயலாளர் பிரிவுகளிலும் கால்நடை வளர்ப்பில் ஈடுபடும் பண்ணையாளர்கள் பாரிய இழப்பை சந்தித்துள்ளனர். மாவட்டத்தில் மன்னார்,நானாட்டான்,முசலி,மாந்தை மேற்கு,மடு ஆகிய ஐந்து பிரதேச செயலாளர் பிரிவுகளில் ஆயிரக்கணக்கான கால்நடைகள் உயிரிழந்துள்ளது. குறிப்பாக ஆடு,மாடு,கோழி பன்றி ,எருமை மாடு போன்ற இழப்புக்களை பண்ணையாளர்கள் சந்தித்துள்ளனர். குறித்த பண்ணையாளர்களின் எஞ்சிய உயிரினங்களை பாதுகாக்கும் வகையிலும்,பண்ணையாளர்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் கால்நடை வைத்தியர்கள் ஆறு பேர் உள்ளடங்களாக மிருக வைத்திய குழு ஒன்றை அமைத்து 6 குழுக்களாக வெவ்வேறு இடங்களில் இலவசமாக கால்நடை வைத்திய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். மத்திய அமைச்சு,கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களம்,இலங்கை கால்நடை அரச வைத்தியர் சங்கம்,இலங்கை கால்நடை வைத்தியர் சங்கம் ஆகியோர் அனுசரணை வழங்கி உள்ளனர். பாதிக்கப்பட்ட பண்ணையாளர்கள் தொடர்ந்து தமது தொழிலை முன்னோக்கி செல்வதற்கு கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களம் தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது. மன்னார் மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட கால்நடைகளுக்கான விசேட நடமாடும் கால்நடை வைத்திய நடவடிக்கை | Virakesari.lk
-
வடக்கு கிழக்கில் குடியேற மலையக உறவுகளை பாசத்துடன் அழைக்கின்றோம் – சுமந்திரன் அறிவிப்பு
மலையகத்துக்குள்ளேயே அவர்களின் வாழ்வியலை உறுதிபடுத்த வடக்கு கிழக்கு மலையகமாக ஒன்றுபடுவோம் - அருட்தந்தை சத்திவேல். மலையகத்துக்குள்ளேயே அவர்களின் வாழ்வியலை உறுதிபடுத்த வடக்கு கிழக்கு மலையகமாக ஒன்றுபடுவோம். மலையகமே மலையக மக்களின் தாயகம். அங்கு சலுகைகளோடு மட்டுமல்ல மண்ணுரிமையோடு வாழ்வதே அரசியல் கௌரவம் என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார். இவரால் கடந்த வெள்ளிக்கிழமை (05) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, எல்லா கோயில் காணிகளிலும், எல்லா சிதம்பரத்து காணிகளிலும், எல்லா தர்ம காணிகளிலும் மலையக மக்களை குடியேற்றி அவர்களை காப்பாற்ற வேண்டும். அவர்கள் இங்கு வந்தால் விவசாயத்தில் செழிப்பாகும் என இயற்கை பேரிடருக்கு முகம் கொடுத்து நிர்க்கதிக்கு உள்ளாகியுள்ள மலையக மக்கள் விடயத்தில் அவசர உணர்வு பூர்வமான கருத்தினை வெளியிட்டு இருக்கிறார் சிவ பூமி அறக்கட்டளை தலைவர் கலாநிதி. ஆறு. திருமுகம் திருமுருகன். ஐயாவின் உணர்வு பூர்வமான உளவெளிபாட்டுக்கு மலையக சமூக ஆய்வு மையம் நன்றி கூறுகின்றது. இவ்வாறான உணர்வுபூர்வமான கருத்தினை தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும் வெளிப்படுத்தி இருந்தார். மலையக மக்களின் நிலையினை இன சுத்திகரிப்பு மற்றும் இன அழிப்பிற்கு உள்ளாகி வரும் மக்களின் நீண்டகால பாதுகாப்பு கருதி அரசியல் அறவியலில் நின்று கூட்டாக முடிவுகளை எடுக்க வேண்டும் என்பதே எமது கருத்து நிலைப்பாடு. மலையக மக்களும் 1948க்கு பின்னர் திட்டமிட்ட இன அழிப்பிற்க்கும், இன சுத்திகரிப்பிற்கும் உள்ளாகி நாளாந்தம் சிதைவுகளையே சந்தித்தவரும் ஒரு தேசிய இனமாகும். தற்போதைய இக்கட்டான சூழ்நிலையில் தேசிய மக்கள் சக்தியின் தலைவரும், தற்போதைய ஜனாதிபதியுமான அனுரகுமார திசாநாயக்க மலையகத்தில் வீடற்றிருக்கும் 1,50,000 பேருக்கு கொடுப்பதற்கு போதுமான காணி மலையகத்தில் இல்லை என்பதை மீண்டும் மீண்டும் கூறத் தொடங்கி இருக்கின்றார். இது அவர்களின் நீண்ட கால அரசியல் சித்தாந்தம். அதுவே சிங்கள பௌத்த கருத்தியலுமாகும். தற்போது அவர்கள் பேரிடர் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி மலையக மக்களை சிதைக்க முயல்வதை இன அழிப்பிற்கும் இன படுகொலைக்குப் முகம் கொடுக்கும் சமூகமாக அதனை தடுத்து நிறுத்துவதற்கும் அவர்களின் எதிர்கால அரசியல் பாதுகாப்பினையும் கருதி கலந்துரையாடல்களை மேற்கொள்ளல் வேண்டும். மலையக மக்கள் நாட்டின் சனத்தொகையில் இரண்டாம் இடத்தில் இருந்த போது அவர்களின் அரசியல் எழுச்சிக்கு பயந்து 1948 ஆம் சமூகத்தின் வாக்குகளை பறித்ததோடு மட்டும் நின்று விடாது இந்தியாவின் அயல் நாடுகளுடன் அரசியல் உறவில் ஏற்பட்டிருந்த விரிசலை தனக்கு அதனை சாதகமாக்கி 1964 ல் பல லட்சம் மலையகத்தவர்களை நாட்டை விட்டே வெளியேற்றும் ஒப்பந்தத்தை (சிரிமா-சாஸ்திரி) சிறிமாவோ பண்டாரநாயக்கா மேற்கொண்டார். இது இரு நாடுகளும் இணைந்து நடாத்திய முதலாவது இனப்படுகொலை என்றே அடையாளப்படுத்தல். அதே சிறிமாவோ பண்டார நாயக்க தமது 1970- 77 ஆட்சி காலகட்டத்தில் தோட்டங்களை அரசுடைமையாக்குவதாக கூறி சிங்களமயமாக்கி பல தோட்டங்களில் சிங்கள குடியேற்றங்களை உருவாக்கி; உழைக்கும் தொழிலாளர் வர்க்கத்தை அவர்களின் வாழ்விடத்தில் இருந்து சிங்கள காடையர்களைக் கொண்டு அடித்து துரத்த இடமளித்த வரலாறும் உண்டு. மேலும் நாட்டின் பொருளாதார சீர்திருத்த செயல் திட்டத்தினை முன்னெடுத்து மலையத்தவர்களை பட்டிணி சாவிற்குள் தள்ளி கொலை செய்ததையும் மறக்க முடியாது.இதனால் பல ஆயிரம் குடும்பங்கள் உயிர் பாதுகாப்பு தேடி சுயமாகவும், காந்திய வழிகாட்டலோடும் வடக்கு மற்றும் கிழக்கு சென்று குடியேறினர். இதனையே சிங்கள பௌத்தமும் விரும்பியது. அடுத்து வந்த ஐக்கிய தேசிய கட்சி ஆட்சி காலத்தில் திறந்த பொருளாதாரம் மற்றும் அபிவிருத்தி எனும் பேரில் மலையகத்தவர் வாழுடங்கள் சூறையாடப்பட்டு அவ் அவ்விடங்களில் இருந்து மலையக மக்கள் வெளியேற்றப்பட்டனர். அவர்கள் காலத்தில் நடந்த திட்டமிட்ட இனவாத வன் செயலின் காரணமாக பாதிக்கப்பட்டோர் வடக்கு கிழக்கிற்கும், இந்தியாவிற்கும் சென்றனர். மலையகத்தை அபிவிருத்தி திட்டத்திற்குள் கொண்டுவராது, பெருந்தோட்டத் தொழிலுக்கு அப்பால் தொழில் வாய்ப்பினை உருவாக்காது, கல்வி, சுகாதாரத் துறைகளை மேம்படுத்தாது கைவிட்டதால் ஆயிரக்கணக்கானோர் மலையகத்தை விட்டு தற்காலிகமாகவும் நிரந்தரமாகவும் தினமும் வெளியேறிவருகின்றனர். இதிலே மௌன மகிழ்வு காண்பது சிங்கள பௌத்த பேரினவாதமே. அதுமட்டுமல்ல கடந்த காலங்களில் மலையக மக்களுக்கு காணி கொடுப்பதாக கூறிய எந்த பேரினவாத ஆட்சியாளர்களும் அதனை கொடுப்பதற்கு துணியவில்லை. அரசியலுக்காக வீடுகளைக் கட்டி சலுகை மாயைக்குள் அவர்களை தள்ளி தேர்தல் அரசியலையே முன்னெடுத்தனர். வீட்டுக்குரிய உரிமை முழுமையாக இதுவரை கொடுக்காது இருப்பதும் காணி உரிமை நிரந்தரமாக அவர்களுக்கு கிடைக்கக் கூடாது எனும் மனநிலையிலாகும். மலையக மக்கள் தமக்கே உரிய இன அடையாளங்களை பாதுகாப்பு தேசிய இனமாக வளர்ந்து நிற்கும் சூழ்நிலையில் அவர்கள் தங்களது கடும் உழைப்பாலும் உயிர்த்தியாகத்தாலும் உருவாக்கிய மலையகம் எனும் தேசத்தில் வாழ்வதே அவர்களுக்கான அரசியல் பாதுகாப்பாகும். தற்போது நிகழ்ந்திருக்கும் இயற்கை பேரிடர் இக்கட்டான சூழலை பயன்படுத்தி மலையக மக்களின் நில உரிமையை தட்டி பறிக்கும் செயல்பாட்டுக்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ எவரும் துணை போகக்கூடாது. நாட்டில் வடகிழக்கு தமிழர்களும், மலையகத் தமிழர்களும் இந்துக்கள் அல்லது சைவர்கள் என்பதற்காக இதுவரை ஒடுக்கப்படவுமில்லை படுகொலை செய்யப்பட்டவுமில்லை. தமிழர்கள் என்பதற்காகவே நாம் தொடர்ந்து ஒடுக்கப்படுகின்றோம். அழிக்கப்படுகின்றோம்.நில பறிப்பிற்கு உள்ளாகின்றோம். இதற்கு எதிராக கூட்டு அரசியல் செயல்பாடு என்பது அவரவர் நிலத்தில் அவரவரது அடையாளங்களோடு அரசியல் கௌரவத்தோடு வாழ்வதற்கான சூழலை உருவாக்குவதாகும். இயற்கை அனர்த்தத்தை பயன்படுத்தி ஆட்சியாளர்கள் மலையக மக்களை வேறு இடங்களில் குடியமர்த்துக்கு எடுக்கும் முயற்சிக்கு எந்த வகையிலும் எவரும் இடமளிக்காத இருப்பதோடு அவர்களின் அரசியல் பாதுகாப்பு மிகு எதிர்காலம் கருதி மலையகத்துக்குள்ளேயே அவர்களின் வாழ்வியலை உறுதிபடுத்த வடக்கு கிழக்கு மலையகமாக ஒன்றுபடுவோம். மலையகமே மலையக மக்களின் தாயகம். அங்கு சலுகைகளோடு மட்டுமல்ல மண்ணுரிமையோடு வாழ்வதே அரசியல் கௌரவம் என்று தெரிவித்துள்ளார். மலையகத்துக்குள்ளேயே அவர்களின் வாழ்வியலை உறுதிபடுத்த வடக்கு கிழக்கு மலையகமாக ஒன்றுபடுவோம் - அருட்தந்தை சத்திவேல் | Virakesari.lk
-
வடக்கு, வடமத்திய, கிழக்கு மாகாணங்களில் 100 மி.மீ. மழைவீழ்ச்சி மண்சரிவு சிவப்பு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிப்பு
11 Dec, 2025 | 01:30 AM (எம்.மனோசித்ரா) வடகீழ் பருவ பெயர்ச்சி காலநிலை காரணமாக வடக்கு, வடமத்திய, கிழக்கு,மத்திய, மற்றும் ஊவா மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும். வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் 75 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாக இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இந்தப் பிரதேசங்களில் சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் மத்திய மலைநாட்டின் கிழக்கு சரிவுப் பகுதிகளிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக் கூடும் எதிர்பார்க்கப்படுகின்றது. சப்ரகமுவ, மத்திய மற்றும் தென் மாகாணங்களில் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேனைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக வீசக் கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள். மேலும் புத்தளத்திலிருந்து மன்னார், காங்கேசன்துறை மற்றும் திருகோணமலை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது வடகிழக்கு திசையிலிருந்து வீசக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. களுத்துறையிலிருந்து புத்தளம் மற்றும் காங்கேசன்துறை ஊடாக திருகோணமலை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-55 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப் படுகின்றது. களுத்துறையிலிருந்து புத்தளம் மற்றும் காங்கேசன்துறை ஊடாக திருகோணமலை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகள் அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகள் மிதமான அலை வரை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற் பகுதிகளில் அவ்வப்போது பலமான காற்று வீசுவதுடன் அக்கடற் பிரதேசங்கள் மிகவும் கொத்தளிப்பாகவும் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது. இதேவேளை தித்வா புயலால் ஏற்பட்ட மண்சரிவு மற்றும் வெள்ளம் காரணமாக நேற்று மாலை வரை 639 உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளதோடு, 193 பேர் காணாமல் போயுள்ளனர். மேலும் 524 678 குடும்பங்களைச் சேர்ந்த 1 814 421 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேவேளை 26 841 குடும்பங்களைச் சேர்ந்த 85 351 பேர் தொடர்ந்தும் இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அத்தோடு 5346 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளதோடு, 86 245 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் கண்டி, கேகாலை, குருணாகல் மற்றும் மாத்தளை மாவட்டங்களில் சில பிரதேச செயலகப்பிரிவுகளுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாய சிவப்பு எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. அத்தோடு பதுளை, கம்பஹா, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டள்ள இரண்டாம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கையும் நீடிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு, வடமத்திய, கிழக்கு மாகாணங்களில் 100 மி.மீ. மழைவீழ்ச்சி மண்சரிவு சிவப்பு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிப்பு | Virakesari.lk
-
கிளிநொச்சியில் சட்டவிரோத மணல் அகழ்வுக்கு எதிரானவர்: மணல் ரிப்பர் மோதி பலி
Editorial / 2025 டிசெம்பர் 10 , பி.ப. 12:03 - 0 - 56 மு.தமிழ்ச்செல்வன் கிளிநொச்சியில் திருவையாறு பகுதியில் இடம்பெற்று வருகின்ற சட்டவிரோத மணல் அகழ்வுக்கு எதிராக செயற்பட்டு வந்தவர் இன்று (10) மணலுடன் வந்த ரிப்பர் மோதியதில் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார். இச் சம்பவத்தில் திருவையாறு பகுதியைச் சேர்ந்த செல்வரத்தினம் சோபனாத் வயது 35 என்பவரே பலியாகியுள்ளார். கிளிநொச்சி நகரிலிருந்து இரணைமடு நோக்கி தனது மனைவியுடன் உந்துருளியில் பயணித்தவர் வில்சன் வீதி மொட்டை பாலத்திற்கு அருகில் வீதியின் ஓரமாக உந்துருளியை நிறுத்த முற்பட்ட போது அவரை பின் தொடர்ந்து மணலுடன் வந்த ரிப்பர் உந்துருளியை நோக்கி நெருங்கி வருவதனை அவதானித்த மனைவி உந்துருளியிலிருந்து வேகமாக இறங்கி வீதியின் மறுபுறம் ஓடியுள்ளார். அந்த சமயத்தில் ரிப்பர் குறித்த நபரின் மீது மோதியத்தில் அவர் ரிப்பரின் பின்பக்க சில்லுக்குள் சிக்குண்டதோடு மணலும் அவரின் மீது கொட்டியத்தில் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பிலான சிசிரிவி காட்சிகளிலும் மேலே குறிப்பிட்டவாறே பதிவாகியுள்ளது. சம்பவத்தின் போது ரிப்பர் சட்டவிரோத மணலுடன் காணப்பட்டதாகவும் உறவினர்கள் மேலும் தெரிவித்தனர். திருவையாறு பகுதியில் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்ற சட்டவிரோத மணல் அகழ்வுக்கு எதிராக கிளிநொச்சி மற்றும் வவுனியா பொலிஸ் நிலையங்களுக்கு சம்பவத்தில் இறந்தவர் தகவல் தெரிவித்து வருபவர் என்பதுடன் 119 க்கும் தகவல் வழங்கியவர் எனவும் உறவினர்கள் குறிப்பிடுகின்றனர். எனவே இச் சம்பவம் விபத்தாக இருக்க முடியாது என்றும் இது திட்டமிடப்பட்ட கொலையாகவே காணப்படுகிறது என்று உறவினர்கள் குறிப்பிடுகின்றனர். Tamilmirror Online || சட்டவிரோத மணல் அகழ்வுக்கு எதிரானவர்: மணல் ரிப்பர் மோதி பலி
-
வீடுகள் சுத்தம் செய்யும் பணியில் இணைந்த வெளிநாட்டவர்
Janu / 2025 டிசெம்பர் 10 , பி.ப. 02:10 - 0 - 40 பதுளு ஓயா பெருக்கெடுத்ததால் வெள்ளத்தில் மூழ்கிய பதுளை ஓயா தோட்டம் கிராமத்தில் உள்ள வீடுகள் சுத்தம் செய்யப்பட்டு வருகின்றன. இந் நிலையில் எல்ல பகுதிக்கு வருகை தந்த சுவீடன், ஜெர்மனி, நோர்வே மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டவர்கள் இரண்டு நாட்களாக மக்களுடன் இணைந்து வீடு சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். சுமனசிறி குணதிலக்க Tamilmirror Online || வீடுகள் சுத்தம் செய்யும் பணியில் இணைந்த வெளிநாட்டவர்
-
தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் மஞ்சள் அனகொண்டா பாம்புக் குட்டி மாயம்
மஞ்சள் அனகொண்டா குட்டிக்கு மறுப்பு Editorial / 2025 டிசெம்பர் 10 , பி.ப. 02:11 - 0 - 41 கடந்த ஞாயிற்றுக்கிழமை காணாமல் போன மஞ்சள் அனகொண்டா குட்டி கண்டுபிடிக்கப்பட்டதாக சமூக ஊடகங்களில் வெளியான செய்திகளை தெஹிவளை மிருகக்காட்சிசாலை மறுத்துள்ளது. அந்தக் குட்டி இன்னும் கண்டுப்பிடிக்கப்படவில்லை என்று தெஹிவளை மிருகக்காட்சிசாலையின் பிரதிப் பணிப்பாளர் கசுன் ஹேமந்தா தெரிவித்தார். காணாமல் போன ஊர்வன இலங்கையில் உள்ள ஒரே மஞ்சள் அனகொண்டா குட்டி என்று கூறினார். “தெஹிவளை காவல்துறையிடம் புகார் அளித்துள்ளோம். கன்று கண்டுபிடிக்கப்பட்டதாக சமூக ஊடகங்களில் பரவி வரும் செய்திகள் முற்றிலும் தவறானவை. தேடுதல் வேட்டை இன்னும் நடந்து வருகின்றன,” என்றும் அவர் கூறினார். அடைப்பின் பூட்டு சேதப்படுத்தப்பட்டதற்கான எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை என்றும் அவர் மேலும் கூறினார். இருப்பினும், விசாரணைகளின் போது, பாம்பு வைக்கப்பட்டிருந்த பெட்டியிலிருந்து தப்பியிருக்கலாம் என்பதைக் குறிக்கும் ஒரு பகுதியை அதிகாரிகள் அடையாளம் கண்டனர். “விலங்கு திருடப்பட்டதா அல்லது அது தானாகவே தப்பித்ததா என்பது இன்னும் தீர்மானிக்கப்படவில்லை. நடந்து வரும் காவல்துறை விசாரணை மற்றும் துறை அளவிலான விசாரணைகளில் இருந்து உறுதியான பதில் கிடைக்கும்” என்று ஹேமந்தா குறிப்பிட்டார். காணாமல் போன மஞ்சள் அனகொண்டா குட்டி, தாய்லாந்திலிருந்து இலங்கைக்கு செப்டம்பர் 12 ஆம் திகதி அன்று சட்டவிரோதமாக கடத்தப்பட்ட பாம்புக் குழுவில் ஒன்றாகும். மூன்று இனங்களைச் சேர்ந்த ஆறு பாம்புகள் அடங்கிய இந்தப் பாம்பு, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) பறிமுதல் செய்யப்பட்டு, தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையில் ஒப்படைக்கப்பட்டது. அது காணாமல் போகும் வரை, அந்தக் குட்டி ஊர்வன பூங்காவின் காட்சிப்படுத்தப்படாத இடத்தில் பொதுமக்களுக்கு அறிமுகப்படுத்தப்படாத விலங்குகளுக்காக ஒதுக்கப்பட்டிருந்தது என்றார். Tamilmirror Online || மஞ்சள் அனகொண்டா குட்டிக்கு மறுப்பு
-
கோட்டாவுக்கு யாழ். நீதிமன்றம் அதிரடி உத்தவு
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தற்போது எதிர்கொள்ளும் கொலை மிரட்டல்கள் குறித்து 2026 பபெப்ரவரி 6, ஆம் திகதிக்கு முன்னர் பிரமாணப் பத்திரம் சமர்ப்பிக்க வேண்டும் என்று யாழ்ப்பாண நீதவான் உத்தரவிட்டார். மரண மிரட்டல்கள் காரணமாக நீதிமன்றங்களில் ஆஜராக முடியவில்லை என்று கோட்டாபய ராஜபக்ச நீதிமன்றத்தில் தெரிவித்ததால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. முன்னணி சோசலிசக் கட்சியின் (FSP) செயற்பாட்டாளர்களான லலித் குமார் மற்றும் குகன் வீரராஜு ஆகியோர் 14 ஆண்டுகளுக்கு முன்பு கடத்தப்பட்ட வழக்கு தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டிருந்தர். இருவரும்2011 டிசம்பர் 10 ஆம் திகதியன்கடத்தப்பட்டதாக யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றத்தில் புதன்கிழமை (10) ஆஜரான முன்னணி சோசலிசக் கட்சியின் (FSP) கல்வி விவகாரங்களுக்கான செயலாளர் புபுது ஜெயகொட தெரிவித்தார். Tamilmirror Online || கோட்டாவுக்கு யாழ். நீதிமன்றம் அதிரடி உத்தவு
-
இலங்கையின் வீதி வலையமைப்பை புதுப்பித்துள்ள கூகுள் மெப்
10 Dec, 2025 | 01:30 PM நாட்டின் சுமார் 12,000 கிலோமீட்டர் நீளமுள்ள வீதி வலையமைப்பு தொடர்பான தகவல்களை கூகுள் மெப் புதுப்பித்திருப்பதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். அதன்படி, A மற்றும் B தரத்திலான பிரதான வீதிகள் தொடர்பான தகவல்களை இணைத்து Google Map அதன் பாதை வரைபடங்களை புதுப்பித்துள்ளது. வீதி மூடல்கள், பாதை புனரமைப்பு நடவடிக்கைகள் போன்ற 6 குறிப்பிட்ட முன்னெச்சரிக்கை தகவல்களுடன் இந்த புதிய பாதை வரைபட அம்சம் செயற்படுத்தப்பட்டுள்ளது. இது, பயணங்களை சிறப்பாக திட்டமிடவும், நேரத்தை மீதப்படுத்தவும், எதிர்பாராத போக்குவரத்து நெரிசல்களை தவிர்க்கவும் மிகப் பெரும் உதவியாக அமையும் என தெரிவிக்கப்படுகிறது. டிசம்பர் 31ஆம் திகதி வரை இந்த கூகுள் மெப் நடைமுறைக்கான முன்னோட்டம் இடம்பெறும் என்றும் Google Map செயலியை பார்த்து பாதுகாப்பாக பயணித்தை தொடர முடியும் என்றும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார். இலங்கையின் வீதி வலையமைப்பை புதுப்பித்துள்ள கூகுள் மெப் | Virakesari.lk
-
களப் பணியாற்றியபோது உயிரிழந்த விமானப்படை, கடற்படை வீரர்களுக்கு யாழில் அஞ்சலி
10 Dec, 2025 | 06:09 PM நாட்டில் ஏற்பட்ட பேரிடரின்போது மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்த ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளானதில் மரணமான விமானிக்கும், சுண்டிக்குளம் பகுதியில் முகத்துவாரம் வெட்டச் சென்ற நிலையில் உயிரிழந்த 5 கடற்படையினருக்கும் அஞ்சலி செலுத்தும் வகையில் யாழ்ப்பாணத்தில் பதாதை கட்டப்பட்டுள்ளது. வென்னப்புவ, லுணுவில பிரதேசத்தில் மீட்புப் பணிகளுக்காக ஈடுபடுத்தப்பட்டிருந்தபோது கடந்த 30ஆம் திகதி ஹெலிகொப்டர் ஒன்று கிங் ஓயாவில் வீழ்ந்துள்ளது. அதன்போது, விமானியான விங் கமாண்டர் நிர்மல் சியம்பலாபிட்டிய (வயது 41) என்பவர் உயிரிழந்தார். அதேவேளை சுண்டிக்குளம் பிரதேசத்தில் கடந்த 30ஆம் திகதி களப்பு முகத்துவாரத்தை அகலப்படுத்தும் கடமையில் ஈடுபட்டிருந்தபோது 5 கடற்படையினர் உயிரிழந்தனர். களப் பணியில் ஈடுபட்டிருந்தபோது உயிரிழந்த ஆறு வீரர்களுக்கும் அஞ்சலி செலுத்தும் முகமாக யாழ்ப்பாணம் நகர் பகுதியை அண்டிய ஸ்ரான்லி வீதியில் பதாகை கட்டப்பட்டுள்ளது. களப் பணியாற்றியபோது உயிரிழந்த விமானப்படை, கடற்படை வீரர்களுக்கு யாழில் அஞ்சலி | Virakesari.lk
-
வவுனியா வடக்கை அத்திப்பட்டியாக்க போகின்றீர்களா?; து.ரவிகரன் எம்பி!
அதிகரித்துள்ள சிங்களக் குடியேற்றங்களால் வவுனியா வடக்கிலிருந்து வெளியேறும் தமிழர்கள்; 23 பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதாக ரவிகரன் எம்.பி சுட்டிக்காட்டு. 10 Dec, 2025 | 07:07 PM வுனியா வடக்கில் தற்போது அதிகரித்துள்ள சிங்களக்குடியேற்றங்கள் மற்றும் காணி அபகரிப்பு நெருக்கடிகள் காரணமாக வவுனியா வடக்கிலிருந்து அதிகளவில் தமிழ் மக்கள் வெளியேறியுள்ளதாகவும், கிராமங்களில் மக்கள் இன்மையினால் வவுனியா வடக்கு கல்வி வலயத்தில் 23பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதுடன், மேலும் சில பாடசாலைகள் மூடப்படும் நிலையிலும் காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார். எனவே வவுனியா வடக்கில் இடம்பெறும் திட்டமிடப்பட்ட சிங்களக்குடியேற்றங்கள் மற்றும் அபகரிப்புக்களைத் தடுக்குமாறும், தமிழ்மக்கள் தமது பூர்வீக நிலங்களில் வாழும் வாழ்வுரிமையை உறுதிப்படுத்துமாறும் பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் ஆகியோரிடம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் வலியுறுத்தியுள்ளார். வவுனிய மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டம் செவ்வாய்க்கிழமை (9) இடம்பெற்ற நிலையிலேயே இவ்விடயம் தொடர்பில் பேசப்பட்டுள்ளது. இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், வடமாகாணத்தில் அதிக பாடசாலைகள் மூடப்பட்ட கல்விவலயமாக வவுனியா வடக்கு கல்வி வலயம் காணப்படுகின்றது. அந்தவகையில் வவுனியா கல்வி வலயத்தில் 23பாசாலைகள் மூடப்பட்டுள்ளன. இவ்வாறு அதிகளவில் பாடசாலைகள் மூடப்படுவதற்கு காரணமென்ன? அந்தக்காரணத்தினை அதிகாரிகளான நீங்கள் எம்மிடம் தெரிவித்தாலேயே எம்மாலும் அந்தப் பாரச்சினையைத் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். குறிப்பாக வவுனியா வடக்கில் பெரும்பான்மை இனத்தவர்களின் அத்துமீறிய குடியேற்றங்கள் ஏற்படுத்தப்படுவதால் எமது மக்கள் வெளியேறுகின்றனர். அத்தோடு பாடசாலைகளில் வளப்பற்றாக்குறைகளும் காணப்படுகின்றன. இந்தக் காரணங்களினாலேயே வவுனியா வடக்கு கல்வி வலயத்தில் இவ்வாறு பாடசாலைகள் அதிகளவில் மூடப்பட்டுள்ளது - என்றார். இந்நிலையில் வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ம.பற்றிக் டிறஞ்சன் இதன்போது பதிலளிக்கையில், எம்மைப் பொறுத்தவரைக்கும் வளப்பற்றாக்குறை காரணமாக எந்தப்பாடசாலைகளும் மூடப்படவில்லை. மாணவர்கள் இல்லாமையினாலேயே பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன. அந்தவகையில் வவுனியா வடக்கு கல்விவலயத்தில் மூடப்பட்ட 23பாடசாலைகளில் பெரும்பாலான பாடசாலைகளை, ஆளுனரையும் அழைத்துச்சென்று பார்வையிட்டிருந்தோம். அந்தவகையில் அந்தப்பகுதிகளில் மக்கள் இல்லாமையினாலேயே பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன. மாணவர்களின் தொகை குறைவடைவதால் மூடப்படுகின்ற நிலையிலும் இன்னும் சில பாடசாலைகள் காணப்படுகின்றன - என்றார். இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில், வவுனியா வடக்கு என்பது மிகவும் பின்தங்கிய ஒரு பிரதேசமாகும். இங்கு சிங்கள குடியேற்றங்களினால் ஏற்படுகின்ற பாதிப்புக்கள், காணிகள் அபகரிப்பால் ஏற்படுகின்ற பாதிப்புக்களினால் இந்தப்பிரதேசத்திலிருந்து எமது மக்கள் வெளியேறிவருகின்ற மிகமோசமான பாதிப்பு நிலை காணப்படுகின்றது. இந்தவிடயத்தில் ஆளுநரும், பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்கவும் கவனஞ்செலுத்தவேண்டும். வவனியா வடக்கில் இடம்பெறும் காணி அபகரிப்புக்கள் தொடர்பில் ஒரு மாதகாலத்திற்குள் ஆராயப்படுமென பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க தெரிவித்துள்ளார். அதனை விரைந்து மேற்கொள்ளுமாறு பிரதி அமைச்சரை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கின்றேன். வவுனியா வடக்கில் சிங்களக்குடியேற்றங்கள் மற்றும் அபகரிப்பு நெருக்கடிகளைத் தடுத்து எமது தமிழ் மக்கள் தமது பூர்வீக வாழிடங்களிலிருந்து வெளியேறாமல் வாழ்வதற்குரிய வாழ்வுரிமையை உறுதிப்படுத்துமாறு கேட்டுக்கொள்கின்றேன். இதனைவிட வவுனியா வடக்கு கல்வி வலயத்தில் உள்ள பாடசாலைகளில் மிக அதிகளவில் வளப்பற்றாக்குறைகளும் காணப்படுகின்றன. அதனை வடக்குமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் மறுக்கமுடியாது. எனவே வவுனியா வடக்கு கல்வி வலயத்திலுள்ள பாடசாலைகளின் வளப் பற்றாக்குறைகளைத் தீர்ப்பதற்கு வடமாகாணகல்வி அமைச்சின் செயலாளர் நடவடிக்கை எடுக்கவேண்டுமெனவும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் வலியுறுத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. அதிகரித்துள்ள சிங்களக் குடியேற்றங்களால் வவுனியா வடக்கிலிருந்து வெளியேறும் தமிழர்கள்; 23 பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதாக ரவிகரன் எம்.பி சுட்டிக்காட்டு | Virakesari.lk