Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிழம்பு

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by பிழம்பு

  1. முல்லைத்தீவு கோடாலிக்கல்லு மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதான பணிகள் ஆரம்பம் 17 Nov, 2025 | 06:47 PM முல்லைத்தீவு மாவட்டத்தின் கோடாலிக்கல்லு மாவீரர் துயிலும் இல்லத்தில் அடுத்த வாரம் மாவீரர் நாள் நினைவேந்தல் அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையில், அங்கு சிரமதானப் பணிகள் ஞாயிற்றுக்கிழமை (16) ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. மாவீரர்களுக்கு பொதுச்சுடர் ஏற்றப்பட்டு மலர் வணக்கம் செலுத்தப்பட்டதை தொடர்ந்து சிரமதான பணிகள் முன்னெடுக்கப்பட்டது. அந்த வகையிலே கோடாலிக்கல்லு மாவீரர் துயிலும் இல்ல பிரதேசத்தை அண்டிய அயல் கிராமங்களில் உள்ள மக்கள் மாவீரர்களின் பெற்றோர் உரித்துடையோர் அனைவரையும் குறித்த சிரமதான பணிக்கு வருகை தந்து ஒத்துழைப்பு வழங்குமாறும் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளில் அனைத்து உறவுகளையும் கலந்துகொள்ளுமாறும் பணிக்குழுவினர் கோரிக்கை விடுத்துள்ளனர். முல்லைத்தீவு கோடாலிக்கல்லு மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதான பணிகள் ஆரம்பம் | Virakesari.lk
  2. 17 Nov, 2025 | 07:13 PM திருமலையில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட புத்தர் சிலையை 16ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அகற்றிய போது, சாதாரண சிங்கள மக்கள் அதை எதிர்க்கவில்லை. என பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் திங்கட்கிழமை (17) தனது பாராளுமன்ற உரையில் கருத்து தெரிவித்தார். இது தொடர்பில் அவர் தொடர்ந்தும் கருத்துரைக்கையில்... திருமலையில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட புத்தர் சிலையை ஞாயிற்றுக்கிழமை (16) அகற்றிய போது, சாதாரண சிங்கள மக்கள் அதை எதிர்க்கவில்லை. ஏனெனில், இனவாதத்தையும் மதவாதத்தையும் நீக்குவதாக நீங்கள் சொன்னதை நம்பி அவர்கள் உங்களுக்கே வாக்களித்திருந்தார்கள். இங்கிருக்கும் திருமலைக்கான தமிழ் பாராளுமன்ற உறுப்பினரையும் அவர்கள் தெரிவு செய்திருந்தார்கள். நீங்கள் 16ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை எடுத்த நடவடிக்கையை எதிர்த்ததெல்லாம், சிங்கள காடையர்கள் மட்டுமே!! அதைக்கண்டு நீங்கள் உண்மையில் பின்வாங்கியிருக்கக்கூடாது, அந்த இனவாத மதவாத காடைத்தனத்தை கண்டு பின்வாங்கியிருந்திருக்ககூடாது. உண்மையில் நீங்கள் என்ன செய்திருக்கவேண்டுமெனில் , மக்களிடம் சென்று எது சரி எது பிழை என்பதை, எப்படியான் அநீதி இழைக்கப்பட்டிருக்கிறது என்பதை நேர்மையுடன் சொல்லியிருந்திருக்கவேண்டும். ஆனால் அதற்கு பதிலாக நீங்கள் இப்போது செய்ததெல்லாம், நீங்கள் (இனவாதிகள் இல்லை என) சொன்னதை நம்பி உங்களுக்கு வாக்களித்த தமிழ் மக்களுக்கும் உங்களுக்கு வாக்களித்த சிங்களரல்லாத வாக்களருக்கும் முழுமையான தூரோகத்தை இழைத்திருக்கிறீர்கள். என, நீதி அமைச்சு மீதான விவாதத்தின் போது திருமலை சட்ட விரோத விகாரை அமைப்பு குறித்து பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பாராளுமன்றில் உரையாற்றினார். "உங்களை நம்பி, நீங்கள் சொன்னதையெல்லாம் நம்பி, உங்களுக்கு வாக்களித்த தமிழ் மக்களுக்கு நீங்கள் முழுமையான துரோகத்தை இழைத்த்திருக்கிறீர்கள்" - கஜேந்திரகுமார் பொன்னம்பலம் | Virakesari.lk
  3. “விஜய் கட்சியை சேர்ந்தவர்களை தற்குறிகள் என திமுகவினர் விமர்சிப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும். அந்த இளைஞர்கள் பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட சமுதாயத்தில் இருந்து வந்திருக்கிறார்கள். அவர்களிடம் நாம்தான் போய் பேச வேண்டும். அவர்களிடம் பேசாமல் விட்டது நம் தவறு. தற்போது திமுகவில் 200 இளம் பேச்சாளர்கள் பயிற்சி பெற்றுள்ளார்கள். அவர்கள் இந்த இளைஞர்களிடம் பேச வேண்டும். நாம் அவர்களுடன் உரையாட வேண்டும். விமர்சனம் செய்யக் கூடாது. அவர்களை அரசியல்படுத்த வேண்டியது நமது கடமை” - இது ’திமுக 75 - அறிவுத் திருவிழா’ என்ற பெயரில் நடைபெற்ற மாநாட்டில் ஆயிரம் விளக்கு திமுக எம்எல்ஏ எழிலன் நாகநாதன் பேசியது. இணையத்தில் அவரது பேச்சு வைரலாகிக் கொண்டிருக்கிறது. ‘சிலர் இது திமுக அதிருப்தி பேச்சு என்று கதை கட்டிக் கொண்டிருக்கின்றனர். ஆனால், அலசி ஆராய்ந்தால் எழிலனின் சிந்தனை ஆழ்ந்த அர்த்தம் பொதிந்தது. திமுகவுக்கு சுயபரிசோதனை பேச்சு என்பதை மறுக்க முடியாது என்பதுபோலவே தவெகவை, விஜய்யை தோலுரிக்கும் பேச்சும் கூட’ என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள். அரசியல்படுத்துவது எனப்படுவது யாதெனில்? - திராவிடக் கட்சிகளின் தொடக்கக் காலங்களில் இளைஞர், இளம்பெண்கள் பாசறைகள் வளர்த்தெடுத்தவர்கள் தான் இன்று அக்கட்சிகளில் கோலோச்சியுள்ள முகங்கள் எனலாம். இடதுசாரி கட்சிகளும் இதில் சளைத்தது இல்லை. விசிகவும் கூட இளைஞர்களை அரசியல்படுத்துவதில் தீவிரமாகவே செயல்பட்டு வருகிறது. ஆனால், புதிதாய் முளைத்த தவெக இந்த மாதிரியான எந்த முன்னெடுப்புகளையும் எடுக்காமலேயே ‘தொண்டர்’ படையை வைத்திருப்பதாக மார்தட்டிக் கொண்டிருக்கிறது. இந்தக் கூட்டம் பற்றிதான் அரசியல் நிபுணர்கள் தங்களின் பரந்துபட்ட பார்வையை முன்வைத்தனர். அவர்கள் கருத்துகளின் தொகுப்பு வருமாறு: ADVERTISEMENT “குழந்தைகள் வளரும்போதே அவர்களுக்கு அரசியலை அறிமுகப்படுத்த வேண்டியது அவசியம். நம்மில் எத்தனை வீடுகளில் குழந்தைகளுடன் செய்தி வாசிக்கிறோம். அரசியல் பேசுகிறோம் என்று எண்ணிப் பார்க்க பத்து விரல்கள் கூட தேவையில்லை. அந்தளவுக்கு வீடுகளில் அரசியல் தீண்டத்தகாத பொருளாக இருக்கும்போது தாங்கள் திரையில், பேஸ்புக்கில், இன்ஸ்டாவில் கொண்டாடி ரசிக்கும் ஒருவர் நான் அரசியல் செய்யப்போகிறேன், முதல்வராகப் போகிறேன் என்று வந்து நின்றால், மிக எளிதாக அவர் பக்கம் இளம் தலைமுறையினர் சாய்ந்துவிடுவர். அதுதான் விஜய் கட்சியில் நடந்து கொண்டிருக்கிறது. தனது சினிமா ஹீரோ படம் ஃப்ளாப் ஆனாலும் முட்டுக் கொடுப்பதுபோலத் தான் கரூர் நெரிசலில் குழந்தைகளைப் பறிகொடுத்தவர்கள் கூட விஜய்க்கு முட்டு கொடுக்கிறார்கள். வீடு என்பது வெறும் கூடாரம் அல்ல. அது அரசியல் தன் பிரக்ஞையோடு குழந்தைகளை வளர்த்தெடுபது. அதேவேளையில் முக்கியமாக மனதில் கொள்ள வேண்டியது அரசியல் திணிப்பாக இருக்கக் கூடாது.” இது தந்திரமா? - “விஜய் கட்சித் தொண்டர்கள் அரசியல்மயமாக்கப்படாததால் தான் அவர்கள் விஜய் பிரச்சார வாகனத்தை உயிரைப் பணயம் வைத்து தொடர்ந்தார்கள். அதனால்தான் செய்தியாளரை சீண்டி விளையாடுகிறார்கள். அதனால்தான் அரசியல் பிரசாரத்துக்கு குடும்ப விழா போல் குழந்தைகளைக் கூட்டி வந்து பறிகொடுத்தார்கள். ஆனால், அந்த சமூகப் பிழையை மறைத்து அவர்களை ‘தற்குறிகள்’ எனப் பொதுமைப்படுத்துவது, இழிவுபடுத்துவது ஓர் அரசியல் தந்திரம். அதுவும் நிச்சயமாக எழிலன் குறிப்பிட்டதுபோல் ஒரு குறிப்பிட்டக் கட்சியின் சதியாகவும் இருக்கலாம் என்பதில் உடன்படுகிறேன்” என்று கூறுகிறார் கள அரசியல் நிபுணர் ஒருவர். இது குறித்து அவர் மேலும் விவரிக்கையில், “விஜய் ரசிகர்களை / தவெக தொண்டர்களை நாம் தமிழர் கட்சியில் கூடிக் கலையும் தொண்டர்களோடு ஒப்பிடலாம். சீமானின் திரைபிம்ப அடையாளம், தமிழ்த் தேசிய் உத்வேகப் பேச்சால் அவர் கட்சியில் இணைந்த பலர் ஒரு சில ஆண்டுகளில் அதிலிருந்து விலகி பிற கட்சிகளிலோ இணைவதைப் பார்த்திருக்கிறேன். என்னைப் பொறுத்தவரை ஒரு மெட்ரோ நகருக்கு வரும் ஃப்ளோட்டிங் பாப்புலேஷன் போல் அவர் கட்சியில் ஒரு கூட்டம் உள்ளே வருவதும், வெளியே செல்வதுமாக இருக்கும். அதுபோல் தான் இளைஞர் பட்டாளம் ஒன்று இப்போது தவெகவில் ஐக்கியமாகியுள்ளது. கொள்கை பிடிப்போ, லட்சியமோ கோட்பாடோ இல்லை. ஈர்ப்பரசியலில் சிக்கியவர்களே இவர்கள். அரசியல் பழகாமல் ஆர்ப்பரிக்கும் கூட்டம், அது சார்ந்த கட்சிக்கு மட்டுமல்ல, மாநில அரசியலுக்கே ஆபத்து. உணர்ச்சிவசப்பட்டு கோஷம் போடுபவர்கள் இன்னும் வாக்கு அதிகாரம் பெறாத இளம் தளிர்களையும் தங்கள் பாதையில் இழுக்கும் ஆபத்து அதிகம். இது புற்றுநோய் போன்றது. ஆரம்பக்கட்டத்தில் கண்டறிந்துவிட்ட நிலையில் அதற்கான சிகிச்சையை சரியாகச் செய்ய வேண்டும். அதுதான் அரசியல்மயமாக்குவது. விஜய் கட்சியினரை தற்குறிகள் என்பது எலீட் அரசியல்வாதிகளின் ‘ஆர்கஸ்ட்ரேட்டட் பாலிடிக்ஸ்’. அவர்களை அரசியல்படுத்த வேண்டும் என்ற எழிலனின் யோசனையும் அரசியல்தான். ஆனால், அதன்மூலம் விட்டேத்தியாக திரியும் இளைஞர்களை அரசியல்மயமாக்கலாம். அதன்மூலம் அவர்களுக்கு திமுகவுக்கு மடைமாற்றலாம். அல்லது குறைந்தபட்சம் விழிப்புணர்வு உடையவர்களாவது மாற்றலாம்” என்றார். எப்படி உருவானது இந்த வெற்றிடம்? - “விட்டில் பூச்சிகள் விளக்கை நோக்கிப் பாய்வது போல் பெருமளவிலான இளைஞர் கூட்டம், ஏன் ஜென்ஸீ தலைமுறை என்று வைத்துக் கொள்வோம் எப்படி தவெக, தவெக என்று மார்தட்டுகிறது என்று பார்த்தால் ஓர் அரசியல் வெற்றிடம் உருவாகியுள்ளதை மறுக்க முடியாது” என்கிறார் இன்னொரு அரசியல் விமர்சகர். அவர் கூறியதாவது: "திமுகவில் கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், இன்பநிதி என்று வாரிசு அரசியல் பட்டவர்த்தமாகிக் கொண்டிருக்கிறது. அதிமுகவில் இபிஎஸ் vs ஓபிஎஸ், இபிஎஸ் vs ஓபிஎஸ், டிடிவி, சசிகலா, செங்கோட்டையன் என்று உள்கட்சி அரசியல் நீண்டு கொண்டிருக்கிறது. விஜயகாந்த் உருவாக்கிய தேமுதிக அவர் உடல்நலம் தேய ஆரம்பத்திலிருந்தே தேய ஆரம்பித்துவிடது. விசிக, இடது சாரிகள், காங்கிரஸ் தனியாக வருவதில்லை கூட்டணி அரசியல்தான் சரி என்று சேஃப் ஜோன் பாலிடிக்ஸ் செய்து கொண்டிருக்கிறது. மலர்ந்தே தீரும் என்று தாமரைக் கட்சி தடம் பதிக்க முயன்று கொண்டிருக்கிறது. இப்படியான சூழலில் தான் விஜய் என்ட்ரி கொடுக்கிறார். நான் கோடிகளில் வாங்கும் சம்பளத்தை உதறுகிறேன்; கரியர் உச்சத்தை கைவிடுகிறேன்; அரசியல் வாரிசும் அல்ல கட்சியை அடகுவைக்கும் செயலையும் செய்ய மாட்டேன் என்று ரவுண்டு கட்டி கம்பு சுத்துகிறார். மேம்போக்காக அவர் சொல்வதெல்லாம் ஓரளவுக்கு உண்மைதான் என்றாலும் கூட, அதற்காக மட்டுமே அரசியல் கத்துக்குட்டி கையில் ஆட்சியை எப்படிக் கொடுக்க முடியும். இது ஆண்ட, ஆளும் கட்சியினர் சுயபரிசோதனை செய்ய வேண்டிய காலம். விஜய் தாராளமாக அரசியல் கட்சி நடத்தட்டும், ஆட்சிக்கு ஆசைப்படட்டும். ஆனால் அவரும், அவர் கட்சி விசிறிகளும் அரசியல்மயமாக்கப்படாத நிலையில் அவருக்கு ஓட்டுப்போடுவது எந்த மாதிரியான எதிர்காலத்தை உருவாக்கும் என்பது கணிக்க முடியாதது” என்று காட்டமாக விமர்சித்தார். ‘ஏன் என்ற கேள்வி கேட்காமல்...’ - தமிழகத்தில் எடுப்பார் கைப்பிள்ளையாக நிறைய இளைஞர்கள் இருக்கிறார்கள். அவர்கள் அரசியல் மாற்றாக கருதிக் கொள்ளும் கட்சியாக தவெக நிற்கிறது. அதுதான் முடிவு என்று அவர்கள் தீர்மானிக்கும் முன்; அதையும் தாண்டி நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன. ஆழ்ந்து யோசித்து தேர்ந்தெடுங்கள் என்று அவர்களை அரசியல்மயமாக்க வேண்டும். “ஒரு தொண்டனுக்கு தேவைப்படும்போது அவனுடம் நிற்பவன்தான் தலைவன். திரையில் வீர ஆவேச வசனங்களும், ஃப்ரெண்ட்லி ஜெஸ்ச்சரும் காட்டுவதால் நிஜத்திலும் விஜய் அப்படியானவராகவே இருப்பார் என்று கூறிவிடமுடியாதல்லவா? இயல்பில் அவர் சற்றே தனிமை விரும்பி என்று அவரை அறிந்தவர்கள் கூறுகின்றனர். இருக்கட்டும், ஆனால் பொது வாழ்வுக்கு வருவதென்று முடிவெடுத்து, முதல் தேர்தலிலேயே முதல்வராகத்தான் ஆவேன் என்று பேசினால், ஊடகங்களை சந்திக்க, அவர்கள் கேள்விகளுக்கு பதில் சொல்ல துணிச்சல் இருக்க வேண்டாமா? அப்படியான சிறு அறிகுறி கூட விஜய்யிடம் இல்லையே. அவரை எப்படி நான் அரசியல் மாற்றாகப் பார்க்க முடியும்” என்று கேள்வி எழுப்பச் செய்ய வேண்டும். குடும்ப அரசியலையும் கேள்வி கேட்கச் செய்ய வேண்டும்; கோஷ்டிப் பூசலையும், அடகுவைக்கும் அரசியலையும் விமர்சிக்கக் கற்றுத்தர வேண்டும். இளைஞர்கள் அரசியலில் மூழ்கித் தெளிவார்கள். அது நிச்சயம் சாக்கடை அல்ல என்பதை அவர்களே உணர்வார்கள். ஏன் என்ற கேள்வி கேட்காவிட்டால் வாழ்க்கை மட்டுமல்ல அரசியல் வாழ்க்கையும் இருக்காது என்பதே நிதர்சனம். ‘தற்குறிகள் என விமர்சிக்காதீர்!’ - எழிலனின் கவனம் ஈர்த்த பேச்சும், பின்புல அரசியலும் | DMK MLA' viral speech about TVK cadres and an insight into Vijay's politics - hindutamil.in
  4. 13 Nov, 2025 | 03:41 PM நாட்டில் ஐந்து பேரில் ஒருவர் தற்போது நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது நாட்டில் அதிகரித்துவரும் பொது சுகாதார கவலையை அடிக்கோடிட்டுக் காட்டுவதாக தெரிவிக்கப்படுகிறது. தேசிய கண் வைத்தியசாலையின் ஆலோசகர் கண் அறுவை சிகிச்சை நிபுணர் கபில பந்துதிலக, நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட பெரியவர்களில் மூன்றில் ஒரு பங்கினர் கண் நோய்களாலும் பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார். சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் அதனை தெரிவித்துள்ளார். அண்மைய தரவுகளின்படி, நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கையில் 73 சதவீத அதிகரிப்பை கண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். உலகளவில் ஒன்பது பெரியவர்களில் ஒருவருக்கு நீரிழிவு நோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இலங்கையில், இந்த பாதிப்பு 23 சதவீதம் முதல் 30 சதவீதம் வரை இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது, அதாவது ஐந்து பெரியவர்களில் ஒருவர் நீரிழிவு நோயாளர்களாக உள்ளனர். அவர்களில், மூன்றில் ஒரு பகுதியினர் கண் நோய்களால் பாதிக்கப்படுகின்றனர்,. மேலும் இதில் 11 சதவீதமானோர் சிகிச்சையளிக்கப்படாவிட்டால் பார்வையற்றவர்களாக மாறும் அபாயம் உள்ளது, ஏனெனில் நீரிழிவு குறிப்பாக கண்களை பாதிப்பதாக தெரிவிக்கப்படுகிறது. நீரிழிவு தொடர்பான குருட்டுத்தன்மை மற்றும் பார்வைக் குறைபாடு காரணமாக ஒவ்வொரு ஆண்டும் 923 மில்லியன் ரூபாய் வருமான இழப்பு ஏற்படுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது என்றும், பொருளாதார விளைவுகள் கணிசமானவை என்றும் வைத்தியர் பந்துதிலக மேலும் குறிப்பிட்டார். குறிப்பாக 40 முதல் 50 வயதுக்குட்பட்டவர்களுக்கே இவ்வாறான நோய் ஏற்படுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த நோய் தடுக்கக்கூடியது எனவும். இந்த நபர்கள் பார்வையை இழக்க எந்த காரணமும் இல்லை. அதன் ஆரம்ப கட்டங்களில், வாழ்க்கை முறை மாற்றங்கள், உணவுக் கட்டுப்பாடு மற்றும் வழக்கமான மருத்துவ பரிசோதனைகள் மூலம் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதேநேரம், முழுமையான தடுப்பு சாத்தியமில்லை என்றாலும், சரியான நேரத்தில் நோயறிதல் மற்றும் சிகிச்சை பார்வையைப் பாதுகாக்க உதவும் என தேசிய கண் வைத்தியசாலையின் ஆலோசகர் கண் அறுவை சிகிச்சை நிபுணர் கபில பந்துதிலக தெரிவித்துள்ளார். நாட்டில் ஐந்து பேரில் ஒருவருக்கு நீரிழிவு நோய் - சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை | Virakesari.lk
  5. 13 Nov, 2025 | 05:08 PM இந்தியாவின் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த 41 வயதுடைய நபர் ஒருவர் தெருநாய்கள் பிரச்சினையால் மனைவியிடம் இருந்து எனக்கு விவாகரத்து கோரியுள்ளார். கடந்த 2006 ஆம் ஆண்டு திருமணமானதில் இருந்து அவர் மனைவியின் செல்லப்பிராணி பாசத்தால் பல கொடுமைகளை அனுபவித்து வருவதாக கூறி வந்துள்ளார். இது தொடர்பில் கணவர், 'திருமணம் முடிந்த கொஞ்சநாளில் மனைவி ஒரு தெரு நாயை தனது வீட்டுக்கு கொண்டு வந்தார். அவர் வசித்து வந்த அடுக்கு மாடிக்குடியிருப்பில் இதற்கு எதிர்ப்பு கிளம்பிய போதும் அவர் அதை கண்டு கொள்ளவில்லை. தொடர்ந்து அவர் தெருவில் சுற்றி திரியும் நாய்களை வீட்டுக்கு எடுத்து வந்தார். தன் கணவருக்கு சமைக்கிறாரோ இல்லையோ. அந்த தெருநாய்களுக்கு விதவிதமான உணவுகளை சமைத்து போட்டார். அத்தோடு அந்த நாய்களை கண்ணும் கருத்துமாக பராமரித்து வந்தார். இரவு நேரம் என் அருகில் தூங்கியதைவிட அந்த நாய்களுடன்தான் அதிக நேரம் தூங்கினார்' எனத் தெரிவித்துள்ளார். மனைவியின் இந்த செயல் கணவரை எரிச்சல் படுத்தியது. பக்கத்தில் வசித்து வந்த பொதுமக்களும் அப்பெண் மீது பொலிஸில் முறைப்பாடு அளித்தனர். ஆனால் விலங்குகள் நலவாரியத்தில் உறுப்பினராக சேர்ந்த அவர் பொதுமக்கள் மீது குற்றம் சாட்டினார். இதனால் அந்த பெண்ணின் மனைவியால் தான் அவமானப்பட்டதாக உணர்ந்த அவர் கடந்த 2007 ஆம் ஆண்டு கர்நாடக மாநிலம் பெங்களூருக்கு தப்பி ஓடினார். இருந்த போதிலும் கணவரை அவர் தொடர்ந்து தொல்லை கொடுக்க ஆரம்பித்துள்ளார். மேலும் தெருநாய்களை திருமணம் செய்து கொண்டது போல புகைப்படத்தை காட்டி தன்னை வெறுப்பேற்றுவதாகவும், இதன் காரணமாக மன அழுத்தத்தால் தனது ஆண்மை இழந்து விட்டதாகவும் அவர் புலம்ப ஆரம்பித்தார். கணவரும் பொலிஸ் நிலையத்துக்கு அலைந்தார். இதனால் விரக்தியின் உச்சத்துக்கு சென்ற அவர் தெரு நாய்களுடன் வாழ்க்கை நடத்திய மனைவியுடன் இனியும் குடும்பம் நடத்த முடியாது என கருதி தனக்கு விவாகரத்து வழங்க வேண்டும் எனக்கோரி அகமதாபாத் குடும்ப நல நீதிமன்றில் வழக்கு தொடர்ந்துளள்ளார். மேலும் உடனடியாக தனது மனைவியிடம் இருந்து விவாகரத்து வழங்க வேண்டும் என்று கண்ணீர் வடித்துள்ளார். மனைவிக்கு 15 இலட்சம் ரூபாய் ஜீவனாம்சம் கொடுப்பதாக தெரிவித்துள்ளார். ஆனால் அவரது மனைவியோ கணவரின் குடும்பத்தினர் வெளிநாட்டில் ரிசார்ட் நடத்தி வருவதால் தனக்கு 2 ரூபாய் கோடி வேண்டும் என கேட்டுள்ளார். இது தொடர்பான வழக்கு அடுத்த மாதம் முதலாம் திகதி மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளது. நாய்களால் மனைவியிடம் விவாகரத்து கோரிய கணவர் | Virakesari.lk
  6. 3 Nov, 2025 | 05:58 PM மன்னார் மாவட்டத்தில் உள்ள மாவீரர்களின் பெற்றோர்கள், உரித்துடையோர் ஆகியோரை ஒன்றிணைத்து, அவர்களை கௌரவிக்கும் முகமாக மன்னார் இரணை இலுப்பைக்குளம், முள்ளிக்குளம் பண்டிவிரிச்சான் பிரதேசத்தைச் சேர்ந்த 95 மாவீரர்களின் பெற்றோர்கள் இன்று (13) கெளரவிக்கப்பட்டனர். மன்னார் மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பு குழுவின் ஏற்பாட்டில் மாவீரர்களின் உறவுகளுடன் 150 மேற்பட்டோர் பங்குபற்றலுடன் மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பு நிகழ்வு உணர்வுபூர்வமாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் அருட்தந்தையர்கள், முன்னாள் போராளிகள் மற்றும் மாவீரர்களின் பெற்றோர்கள், பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர். முதலில் மாவீரர் பெற்றோர்களால் பொதுச்சுடர் ஏற்றி வைக்கப்பட்டு, மலர்மாலை அணிவிக்கப்பட்டு பின் அகவணக்கம் செலுத்தப்பட்டு நிகழ்வு ஆரம்பமானது. இந்நிகழ்வில் மாவீரர் தியாகங்கள் பற்றிய பேச்சுக்கள் நடைபெற்றதுடன் மாவீரர்களின் பெற்றோர் மற்றும் உரித்துடையோருக்கு கௌரவிப்பு வழங்கப்பட்டதுடன், இந்நிகழ்வின் நினைவாக மரக்கன்றுகளும் மாவீரர்களின் பெற்றோர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது. மன்னாரில் மாவீரர்களின் பெற்றோர்கள் கௌரவிப்பு | Virakesari.lk
  7. 13 Nov, 2025 | 07:06 PM முல்லைத்தீவு முள்ளிவாய்க்காலில் இந்திய நாடாளுமன்ற உறுப்பினரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான முனைவர் தொல். திருமாவளவன் அவர்கள் வியாழக்கிழமை (13) முள்ளிவாய்க்கால் நினைவிடத்திற்கு சென்று உயிரிழந்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தினார். முல்லைத்தீவு மாவட்டத்திற்கான திடீர் வருகையின்போது அவரை அப்பகுதி பொதுமக்கள் வரவேற்று, பொன்னாடை போர்த்தி மரியாதை செய்தனர். அதனைத் தொடர்ந்து, கவிஞர் யோ. புரட்சி அவர்கள் தன்னுடைய “ஆயிரம் கவிதைகள்” நூலை தொல். திருமாவளவன் அவர்களிடம் கையளித்தார். பின்னர் திருமாவளவன் அவர்கள் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் சென்றடைந்து, அங்கு அமைக்கப்பட்டுள்ள உறவுகளுக்கான பொதுத் தூபிக்கு மலர் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினார். முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த தமிழர்களை நினைவுகூரும் வகையில் நடைபெற்ற இந்த நிகழ்வு, உள்ளூர் மக்களிடையே பெரும் உணர்ச்சி பூர்வமான சூழலை ஏற்படுத்தியது. முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் அஞ்சலி செலுத்திய – இந்திய எம்.பி. தொல். திருமாவளவன் | Virakesari.lk
  8. யாழ்ப்பாணம் 1 மணி நேரம் முன் வடக்கில் நாளை தாதியர் வேலைநிறுத்த போராட்டம்! வடக்கு மாகாணத்தில் நாளை காலை முதல் 24 மணிநேரம் அடையாள வேலைநிறுத்த போராட்டத்தை நடத்த அரச தாதியர் உத்தியோகத்தர் சங்கம் தீர்மானித்துள்ளது. வடக்கு மாகாணத்தில் உள்ள மருத்துவமனையில் பணிபுரியும் தாதிய உத்தியோகத்தர்களுக்கான வருகை மற்றும் புறப்படல் பதிவுக்காக ஏனைய ஊழியர்களுடன் சேர்த்து ஒரே கையொப்பப் பதிவு புத்தகம் பயன்படுத்தல் தொடர்பில் வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளரின் முடிவுக்கு எதிராக, குறித்த போராட்டம் நடைபெறவுள்ளது. வேலைநிறுத்தம் நாளை 12ஆம் திகதி காலை 7 மணிக்கு ஆரம்பித்து, நாளை மறுநாள் 13ஆம் திகதி காலை 7 மணிக்கு முடிவடையவுள்ளது. இது தொடர்பில் அரச தாதியர் உத்தியோகத்தர் சங்கம் வெளியிட்ட அறிக்கையில், வடக்கு மாகாணத்தைத் தவிர ஏனைய மாகாண சபைகளிலோ அல்லது மத்திய அரசாங்கத்தின் மருத்துவமனைகளிலோ/ சுகாதார நிறுவனங்களிலோ இத்தகைய நடைமுறை அமுலில் இல்லாததால், வடக்கு மாகாணத்தில் மாத்திரம் இது தன்னிச்சையாக அமுல்படுத்தப்படுவது பாரதூரமான பிரச்சினையாகும். தாதியர்கள் 24 மணி நேரமும் சேவையில் ஈடுபடுகின்றனர். சாதாரண கடமை நேரங்கள், மேலதிக கடமை நேரங்கள், வாராந்த ஓய்வு நாட்களில், அரசாங்க பொது விடுமுறை நாட்களில் போன்ற ஒன்றுக்கொன்று வேறுபட்ட கொடுப்பனவுகளுக்கு அடிப்படையாக அமையும் கடமைகளை அவர்கள் செய்கின்றனர். தற்போதுள்ள சேவைத் தேவைகள் காரணமாக கிட்டத்தட்ட ஒவ்வொரு தாதியரும் இந்தக் கடமைகளில் ஈடுபட வேண்டியுள்ளது. அத்தகைய சிக்கலான சூழ்நிலைகளில், கொடுப்பனவுகளுக்கான தெளிவான உறுதிப்படுத்தலுக்காக, சாதாரண கடமைகளுக்கு மேலதிகமாகச் செய்யப்படும் கொடுப்பனவுகளுக்கு அடிப்படையாக அமையும் ஏனைய ஒவ்வொரு கடமை நேரங்களுக்கும் தனித்தனி வருகைப்பதிவேடுகளை பேணுவதற்கு சுற்றறிக்கையின் மூலம் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. நிலைமை இவ்வாறிருக்க, அனைத்து ஊழியர்களும் ஒரே வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுவதால், பல்வேறு கடமை நிலைகளை இலகுவாக அடையாளம் காண்பது ஒரு பாரிய பிரச்சினை என்பதை சுட்டிக்காட்டுகிறோம். இதனால், சேவைத் தேவையின் பேரில் செய்யப்படும் மேலதிக கடமைகளுக்கான உரிய கொடுப்பனவுகளைக் கூட இழக்கும் அபாயம் உருவாகலாம் என்பதும் தெளிவாகிறது. வடக்கில் நாளை தாதியர் வேலைநிறுத்த போராட்டம்!
  9. யாழ்ப்பாணம் 5 மணி நேரம் முன் வீதியில் நிற்பவர்களை சந்திப்பதற்கு தயாரில்லை - யாழ். மாநகரின் முதல்வர்! முறையான முன்னறிவிப்போ, தெரியப்படுத்தலோ இன்றி வீதியில் நிற்பவர்களை சந்திப்பதற்கு நான் தயாரில்லை என சுட்டிக்காட்டிய முதல்வர் மதிவதனி, சதிகளின் பின்னணிகள் மூலம் போராட்டத்தில் இறங்கியுள்ள இவர்கள், வேண்டுமானால் தன்னை எழுத்துமூலமான ஆவணத்துடன் நேரடியாக வந்து சந்தித்தால் அது தொடர்பில் பரீசலிக்கலாம் என்றும் தெரிவித்தார். பொறியியலாளரது கட்டுப்பட்டிலிருந்து தம்மை விடுவித்து பிராந்திய சுகாதார சேவை அதிகாரியின் கீழ் செயற்பட அனுமதிக்குமறு கோரி யாழ். மாநகர சுகாதார சிற்றூழியர்கள் பணிப்பகிஸ்கரிப்பு போரட்டம் ஒன்றை இன்றையதினம் முன்னெடுத்தனர். யாழ். மாநகரின் மாதாந்த அமர்வு இன்றையதினம் (11) இடம்பெற்ற நிலையில் இது தொடர்பில் உறுப்பினர்கள் முதல்வரிடம் கேள்வி எழுப்பிய நிலையிலேயே அவர் இவ்வாறு கூறியிருந்தார். அனைத்து மாநகர, நகரசபைகளினது சுகாதார பகுதிகள் பிராந்திய சுகாதார அதிகாரியின் கீழ் தான் இருந்து வருகின்றது. ஆனால் யாழ். மாநகரின் சுகாதார பிரிவு மட்டும் பொறியியலாளரது கட்டுப்பாட்டில் இருக்கின்றது. அதனால் நாளாந்தம் பல்வேறு நடைமுறைப் பிரச்சினைகள் உருவாகிவருகின்றது. எனவே இவ்வாறு இருக்கும் நடைமுறையை மாற்றி பிராந்திய சுகதார அதிகாரியின் கீழ் கொண்டுவரல் வேண்டும். அத்துடன் ஊழியர்களது நிரந்தர நியமனம், இடமாற்றம், உழவு இயந்திர ஒப்பந்தங்கள் மூலம் வகை தெரியப்படும் திண்மக்கழிவுகள் பிரித்தாழ்கையில் இருக்கும் குழப்பங்கள் உள்ளிட்ட சில நடைமுறை பிரச்சினைகளுக்கு தீர்வு, கண்காணிப்பாளர்களது இடமாற்றம் உள்ளிட்ட விடையங்களை முன்னிறுத்தி ஊழியர்கள் போராட்டம் முன்னெடுத்துள்ளனர். இவர்களது பிரச்சினைக்கு தீர்வை வழங்க மாநகரசபை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உறுபினர்கள் வலியுறுத்தினர். வீதியில் நிற்பவர்களை சந்திப்பதற்கு தயாரில்லை - யாழ். மாநகரின் முதல்வர்!
  10. முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் மகன் ரமித் ரம்புக்வெல்லவுக்கு எதிராக இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு, கொழும்பு மேல்நீதிமன்றில் இன்று செவ்வாய்க்கிழமை (11)குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. சட்டவிரோதமாக சொத்துக்களை குவித்ததாக இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் ரமித் ரம்புக்வெல்லவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு கொழும்பு மேல்நீதிமன்ற நீதவான் மொஹமட் மிஹால் முன்னிலையில் இன்று அழைக்கப்பட்டது. இதன்போது நீதிமன்றில் ஆஜரான இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகள், ரமித் ரம்புக்வெல்லவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். இதனை பரிசீலித்த கொழும்பு மேல்நீதிமன்ற நீதவான், ரமித் ரம்புக்வெல்லவை குறித்த வழக்கிலிருந்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான ரொக்கு பிணை மற்றும் 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீர பிணைகளில் விடுதலை செய்யுமாறு உத்தரவிட்டார். கெஹலியவின் மகன் ரமித் ரம்புக்வெல்லவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்! | Virakesari.lk
  11. 11 Nov, 2025 | 04:12 PM யாழ்ப்பாணம் - மானிப்பாய் பகுதியில் போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா கலந்த மாவாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டார். யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் குறித்த கைது நடவடிக்கை இன்று முன்னெடுக்கப்பட்டது. ஆயிரம் போதை மாத்திரைகளும் இரண்டு கிலோ 420 மில்லிகிராம் கஞ்சா கலந்த மாவாவும் இதன்போது கைப்பற்றப்பட்டது. இருபது வயது மதிக்கத்தக்க குறித்த சந்தேக நபர் கொட்டாஞ்சேனை துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பாக உடுவிலில் கைது செய்யப்பட்டவரின் உறவினர் என பொலிஸார் தெரிவித்தனர். சந்தேக நபரை மானிப்பாய் பொலிஸார் ஊடாக மல்லாகம் நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்த யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். மானிப்பாயில் போதை மாத்திரைகள், கஞ்சா கலந்த மாவாவுடன் ஒருவர் கைது | Virakesari.lk
  12. பாராளுமன்ற உறுப்பினர்கள் நாமல் ராஜபக்ஷ, டி.வி. சானக, சஞ்சீவ எதிரிமான்ன மற்றும் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ ஆகியோர் திங்கட்கிழமை (11) ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு வருகை தந்தனர். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் நிமல் சிரிபால டி சில்வா செயலாளர் துமிந்த திஸாநாயக்கவுடன் லசந்த அலகியவன்ன, அனுர பிரியதர்ஷன யாப்பா, சாமர சம்பத் தசநாயக்க ஆகியோரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். இருதரப்பினரும் கலந்துரையாடிய பின்னர், நாமல் ராஜபக்ஷ கருத்து தெரிவிக்கையில், 21ஆம் திகதி நடைபெறவிருக்கும் எதிர்க்கட்சிகளின் கூட்டம் தொடர்பாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியுடன் நாங்கள் கலந்துரையாடினோம். பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இந்த இடத்திற்கு வந்து, அரசு நடத்தும் ஏமாற்று நடவடிக்கைகளை நாட்டு மக்களுக்கு வெளிப்படுத்தும் கூட்டம் பற்றி நாங்கள் பேசினோம். கட்சியாக நமக்கென்ன கொள்கைகள் இருந்தாலும், இந்த முறை எதிர்க்கட்சியாக நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து, அரசு மக்களை ஏமாற்றும் திட்டங்களை நாட்டு மக்களுக்கு வெளிப்படுத்தப் போகிறோம். எதிர்க்கட்சியில் உள்ள அனைத்து கட்சிகளுடனும் நாங்கள் பேசியுள்ளோம். இதில் எதிர்க்கட்சியில் உள்ள அனைவரும் பங்கேற்பார்கள் என்று நாங்கள் நம்புகிறோம். 21ஆம் திகதி என்ன நடக்கும் என்று பார்க்கலாம். ஜனாதிபதி நான்கரை மணிநேரம் பட்ஜெட் பற்றிப் பேசினார். அடுத்த வருடமும் அதே நான்கரை மணிநேரம் பேசத் தயாராக உள்ளார். ஆனால், அந்த நேரத்திலும் சொன்ன எதுவும் நிறைவேற்றப்பட்டிருக்காது. கெப் ரக வண்டிகள் வாங்குவதற்கு யார் கோரிக்கை விடுத்தார்கள்? எந்த அமைச்சகத்தில் இருந்து வாங்கப்படுகிறது? எங்கள் கட்சியின் மூன்று எம்.பி.க்களுக்கு இந்த கெப் ரக வண்டிகள் தேவையில்லை. அவற்றை நாங்கள் சுகாதார அமைச்சகத்திற்கு வழங்குவோம். ஆனால் அரசாங்க உறுப்பினர்கள் கிராமத்திற்குச் சென்று சொல்ல வேண்டியது, எங்களுக்கு கெப் வண்டிகள் கிடைத்தது என்று தான். மரக்கறி விவசாயிகள் மற்றும் உப்பு உற்பத்தியாளர்கள் திண்டாட்டத்தில் உள்ளனர். அரிசி மாஃபியாக்களை நிறுத்த வந்த இவர்கள், இன்று அரிசியை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்கிறார்கள். கொள்ளை நிலங்களைக் கையகப்படுத்தியவர்கள் எங்களுடன் இல்லை. கொள்கலன் கப்பல்களில் கொள்ளை சரக்கு கொண்டு வந்தவர்கள் எங்களுடன் இல்லை. வெங்காயம் இறக்குமதி செய்தவர்கள் எங்களுடன் இல்லை. அரிசி இறக்குமதி செய்தவர்கள் எங்களுடன் இல்லை. 21ஆம் திகதி எங்களுடைய மேடையில் இதுபோன்ற யாரும் இல்லை. மதுபானம் மற்றும் போதைப்பொருட்கள் விவகாரத்தில் என் பெயரை எல்லா இடங்களிலும் இவர்கள் சம்பந்தப்படுத்தினார்கள். இறுதியில் அதுவும் பெலவத்தையிலேயே முடிவுற்றது. பாதுகாப்பு செயலாளர் ஐந்து பேரை வெளிநாட்டில் இருந்து கைது செய்வதாகச் சொன்னார். இதைப் பாராளுமன்றத்தில் சொல்ல வேண்டியதில்லை, இதனை நீதிமன்றில் சொல்லுங்கள் என்றார். தொடர்ந்தும் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த துமிந்த திஸாநாயக்க, முன்னாள் உறுப்பினர்கள் வந்தார்கள். 21ஆம் தேதி நடைபெறவிருக்கும் எங்கள் கூட்டம் பற்றிப் பேச வந்தார்கள். அரசு நாட்டு மக்களுக்கு பொய் சொல்லிக்கொண்டிருக்கிறது. அந்த பொய்யை நாட்டு மக்களுக்கு நாங்கள் வெளிப்படுத்தப் போகிறோம். இந்த நேரத்தில் நாங்கள் தேர்தலைக் கோரவில்லை. கொள்கை ரீதியாக நாம் வேறுபட்டிருந்தாலும், இந்த நேரத்தில் நாம் ஒன்றாக இணைகிறோம், நாட்டு மக்களுக்காக, அரசின் அடக்குமுறை மற்றும் பொய்க்கு எதிராக. அரசு எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை. இப்போது மாகாண சபைத் தேர்தல்கள் உள்ளன. அதனையும் பார்த்துக்கொள்வோம். அன்றைக்கும் அரசு மீண்டும் 3% ஆதரவுக்குத் தள்ளப்படுவார்கள். யாருமே தெருவுக்கு வராதீர்கள் என்று சொல்லும் இவர்கள்தான், அன்று இந்தப் பல்கலைக்கழக மாணவர்கள் உட்பட அனைவரையும் தெருக்களில் இழுத்து வந்து, எல்லாவற்றையும் நாங்கள் தருகிறோம் என்று வாக்குறுதி அளித்தார்கள். அரசு, 'எங்களை வீழ்த்த முடியாது, நாங்கள் வீழ மாட்டோம்' என்று கூறுகிறது. இப்போது யார் சொன்னார்கள், 'அவர்களை வீழ்த்துவோம்' என்று? நாங்கள் 'அவர்களை வீழ்த்துவோம்' என்று சொல்லவில்லை. அவர்கள் பயத்தில், 'எங்களை வீழ்த்த முடியாது' என்று கூறுகிறார்கள் என்றார். பத்தாண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கு நாமல் ராஜபக்ஷ | Virakesari.lk
  13. யாழ்ப்பாணத்தில் தனது மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பும் போது , வீதியின் குறுக்கே ஓடிய நாயுடன் மோதி விபத்துக்கு உள்ளானவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். வட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த 38 வயதுடைய இளைஞனே உயிரிழந்துள்ளார். யாழ் . நகரில் பணியாற்றி வரும் நிலையில் , கடந்த 06ஆம் திகதி பணி முடிந்து , தனது மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பும் போது , வீதியின் குறுக்கே ஓடிய நாயுடன் மோதி விபத்துக்களான நிலையில் , படுகாயங்களுடன் , யாழ் . போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்றைய தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். வீதியின் குறுக்கே ஓடிய நாயுடன் மோதி மோட்டார் சைக்கிள் விபத்து - இளைஞன் உயிரிழப்பு! | Virakesari.lk
  14. 11 Nov, 2025 | 04:17 PM நவம்பர் 27 நினைவு நாளை கொண்டாட ஒற்றுமையாக வாருங்கள் இல்லையேல் இரு தரப்பினருக்கும் நல்லூர் பகுதி நிலம் வழங்கப்படாது என முதல்வர் மதிவதனி தெரிவித்துள்ளார். யாழ். மாநகரின் மாதாந்த அமர்வு செவ்வாய்க்கிழமை (11) நடைபெற்ற நிலையில் நல்லூர் மேற்கு வீதியில் இருக்கும் காணி நிலத்தில் நினைவேந்தல் செய்வதற்கு வழங்குவது தொடர்பில் விவாதிக்கப்பட்டது. இதன்போது சைக்கிள் கட்சி மற்றும் மான் கட்சி ஆகியனயார் நினைவேந்தலை குறித்த இடத்தில் நடத்துவது என்று கடும் வாதப் பிரதிவாதம் நடைபெற்றது. குறிப்பாக சைக்கிள் கட்சிக்கு மட்டும் நினைவேந்தல்கள் செய்யும் உரிமை கிடையாது. அனைத்து தமிழ் தேசித கட்சிகளுக்கும் அதனை நினைவேந்த உரிமை உண்டு. இதே நேரம் வருடா வருடம் சைக்கிள் கட்சி தரப்பினரே திலிபனின் நினைவு நாள், மாவீரர் நாள் போன்றவற்றை குத்தகைக்கு எடுத்து செய்வது போன்று அடாத்தாக முன்னெடுக்கின்றனர். இதை ஏற்க முடியாது. இந்நிலையில் குறித்த விடையத்தில் ஒற்றுமை இன்மையால் தான் இரு பிரிவாக நிகழ்வுகள் இரு தரப்பினரால் முன்னெடுக்கப்பட்டு வரும் கீழ்த்தரமான நிகழ்வு நடக்கின்றது. அதன்படி நினைவேந்தல் நிகழ்வை நடத்த குறித்த காணியை மான் கட்சி தரபினர் இம்முறை குத்தகைக்கு கோரியுள்ளனர்.ஆனால் சைக்கிள் தரப்பினர் அதனை ஏற்க இயலாதவர்களாக குழப்பங்களை உருவாக்கி வருகின்றனர். எனவேதான் சபை ஏற்கனவே இரு தரப்பினரையும் ஓர் இணக்கப்பாட்டுக்கு வந்து நிகழ்வை நடத்துவது யார் என்று முடிவை தெரிவிக்குமாறு கோரியிருந்தது. ஆனால் குறித்த காலப்பகுதியில் இரு தரப்பினரும் எந்தவொரு பதிவையும் எம்முடன் முன்னெடுக்கவில்லை. இதனால் முடிவை சபையே எடுக்க நேரிட்டுள்ளது. குறித்த விவாதத்தை ஈழ மக்கள் ஜன நாயகக் கட்சி புறக்கணித்திருந்த நிலையில் காணியை இரு தரப்புக்கும் வழங்குவதில்லை என்றும் பொது இணக்கபாட்டுடன் தேசிய பரப்பில் இருக்கும் கட்சிகள் ஒன்றிணைந்து நடத்த முன்வந்தால் அதற்கு இடம் கொடுக்கப்படும் என்றும் முதல்வரால் தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. மாவீரர் நாள் சைக்கிள் கட்சிக்கான ஒன்றல்ல - யாழ் மாநகர சபையில் கடும் வாக்குவாதம் | Virakesari.lk
  15. 10 Nov, 2025 | 12:17 PM யாழ்ப்பாணத்தில் சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட குப்பிளான் சந்தியில் இடம்பெற்ற குழு மோதலில் ஐவர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (09) இரவு இடம்பெற்றுள்ளது. காயமடைந்த ஐவரும் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து மேலும் தெரியவருகையில், இரண்டு குழுவினருக்கு இடையே நேற்றையதினம் குப்பிளான் சந்தியில் மோதல் இடம்பெற்றது. இதன்போது ஒரு குழுவினை சேர்ந்த ஒருவரும், மற்றைய குழுவினரை சேர்ந்த மூவரும், சமாதானப்படுத்த சென்ற முச்சக்கரவண்டி சாரதியுமென ஐவர் படுகாயமடைந்தனர். குறித்த குழுவினர் மது போதையில் மோதலில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இது குறித்து சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவரை சுன்னாகம் பொலிஸார் கைது செய்தனர். யாழில் குழு மோதல் ; ஐவர் படுகாயம்! | Virakesari.lk
  16. 10 Nov, 2025 | 06:47 PM முல்லைத்தீவு கடற்கரையில் கடலிலே காவியமான மற்றும் கரையோர மாவீரர்களினை நினைவுகூர்ந்து அஞ்சலி செலுத்தி மாவீரர் எழுச்சி நாள், கரையோர மாவீரர் நாள் அமைப்பினரால் திங்கட்கிழமை (10) ஆரம்பித்துவைக்கப்பட்டது. இதன்போது கரைதுறைப்பற்று பிரதேச சபையின் உறுப்பினர்களான தொ.பவுள்ராஜ், ம.குணசிங்கராஜா மற்றும் மாவீரர்களின் உறவினர்கள், கரையோர மாவீரர் நாள் அமைப்பினர், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தியிருந்தனர். அஞ்சலி செலுத்தியதன் பின்னர் இவ்வமைப்பினர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போது, 2025ஆம் ஆண்டுக்குரிய மாவீரர் தினம், கடலிலே காவியமான மற்றும் கரையோர மாவீரர்களினை நினைவுகூர்ந்து பூ தூவி, இன்றைய தினம் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. பல வருடங்களாக இப்பகுதியில் மாவீரர்களை நினைவுகூர்ந்து அஞ்சலி செலுத்தி வரப்பட்டதாகவும், தற்போது கரைதுறைப்பற்று பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட சுற்றுலாத்தளமாக மாற்றமடைந்துள்ளதனால் பிரதேச சபையின் தபிசாளர், செயலாளர் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்களுக்கு அனுமதி கடிதத்தையும் இன்றைய தினம் வழங்கியிருப்பதாகவும் ஏற்கனவே கடந்த மாதம் அனுமதிக் கடிதத்தை பிரதேச சபையின் தபிசாளரிடமும் வழங்கியிருந்தோம். ஏற்பாட்டுக் குழு எனும் வடிவில் இருந்த அமைப்பானது தற்போது கரையோர மாவீரர் நாள் அமைப்பு என பெருந்திரளான மக்களுடன் கூட்டம் கூடி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கார்த்திகை மாதம் என்றால் மாவீரர்களுக்குரிய மாதமாகும். அதனால் மாவீரர்களுக்குரிய அனைத்து செயற்பாடுகளையும் தூய்மையான மனத்தோடு செய்ய வேண்டும். அந்த வகையிலே இன்றைய தினம் கடலிலே காவியமான மற்றும் கரையோர மாவீரர்களினை நினைவுகூர்ந்து பூ தூவி ஆரம்பித்து வைத்திருக்கின்றோம். அதனை தொடர்ந்து, ஏனைய பகுதிகளில் எழுச்சிக் கொடிகளை கட்டி ஆரம்பிக்க இருப்பதாகவும், மாவீரர்களை நினைவுகூர்வதற்கு கட்சிகள் தலையிடக்கூடாது. கட்சி பேதங்களை கடந்து அனைவரும் அணிதிரண்டு வருகைதந்து மாவீரர்களின் கனவுகளை நனவாக்க வேண்டும் என்றனர். முல்லைத்தீவில் கரையோர மாவீரர்களை நினைவுகூர்ந்து அஞ்சலி | Virakesari.lk
  17. தமிழ்த் திரையுலகில் ‘96’ திரைப்படம் மூலம் அறிமுகமானவர் கௌரி கிஷன். அதன்பிறகு ‘மாஸ்டர்’, ‘கர்ணன்’ எனத் தமிழ், மலையாளம், தெலுங்கு என மூன்று மொழிகளிலும் கதாநாயகி மற்றும் துணை நடிகையாக நடித்து வருகிறார் கௌரி கிஷன். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் ‘LIK’ திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். தற்போது புது கதாநாயகனுடன் ‘OTHERS’ என்ற தமிழ்ப் படத்தில் நடித்திருக்கிறார். அந்தப் படம் தியேட்டர்களில் இன்று வெளியாகியிருக்கிறது. 96 நடிகை கெளரி கிஷன் இந்தப் படத்தின் செய்தியாளர் சந்திப்பு நவ 6 அன்று சென்னையில் நடைபெற்றது. அப்போது பத்திரிகையாளர் ஒருவர் ஹீரோவிடம் "கெளரி கிஷனின் வெயிட் (எடை) என்ன?" என்று கேள்வி கேட்டது தொடர்பாக விவாதம் தொடங்கியது. அப்போது நடிகை கௌரி கிஷன், ``இந்தப் படத்துக்கும் அந்தக் கேள்விக்கும் என்ன தொடர்பு? என்னோட வெயிட் பற்றி தனிப்பட்ட கேள்விகளைக் கேட்பது தப்பு. நான் 20 கிலோ இருப்பேன், 80 கிலோகூட இருப்பேன், அதைப் பற்றி நீங்க எப்படி கேட்கலாம். அதுவும் ஹீரோகிட்ட என்னோட வெயிட் என்னனு கேட்குறீங்க. என்னோட வெய்ட் தெரிஞ்சுகிட்டு என்ன செய்யப் போறீங்க?. இது முழுக்க முழுக்க பாடி ஷேமிங். ஆண் நடிகர்களைப் பார்த்து பத்திரிகையாளர்கள் யாரும் இப்படி கேள்விகள் கேட்பதில்லை. நடிகைகளிடம் மட்டும் இப்படியான தனிப்பட்ட, உடல் சார்ந்த கேள்விகளை கேட்பது ஏன்? இதையெல்லாம் இயல்பாக நார்மலைஸ் செய்ய முயற்சிக்கிறார்கள். இந்த அரங்கத்தில் இத்தனை பேர் இருக்கிறீர்கள், யாரும் அவர் கேள்வி கேட்டது தவறு என்று கண்டிக்கவில்லை. கௌரி கிஷன் இங்கு என்னைத் தவிர ஒரு பெண்கூட இல்லை. நான் தனியாக நின்று இதுபோன்ற கேள்விகளையும், அவரது வாக்குவாதங்களையும் எதிர்கொள்கிறேன்,” என்று ஆதங்கத்துடன் பேசினார். இந்த வாக்குவாதம் சமூக வலைதளங்களில் வைரலாகி பேசுபொருளானது. பலரும் நடிகை கௌரி கிஷனுக்கு ஆதரவாகப் பேசிவருகின்றனர். அதைத் தொடர்ந்து 96, மெய்யழகன் போன்ற படங்களில் இயக்குநர் பிரேம்குமார் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை கௌரி கிஷனுக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறார். அவரின் பதிவில், ``நடிகை கௌரி கிஷன் மீது ஏவப்பட்ட வன்மமும் வக்கிரமும் நிறைந்த கேள்விக்கு அவர் கொடுத்த சாட்டையடி பதில் சரியே. ஒரு பெண்ணாக தன்னந்தனியாக தன் தரப்பு நியாயத்தை தைரியமாக நிலைநாட்டியது பாராட்டுக்கு உரியது. OTHERS திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் ஒருவரின் வக்கிரமான பேச்சை அங்கிருந்த மற்ற யாரும் தடுக்கவில்லை. மாறாக அதற்கு கௌரி பதில் தரும்போது, கூட்டமாக கூச்சலிட்டு தடுத்தது கோழைத்தனமான இழிசெயல். செயல்தான் நம் தகுதியை நிர்ணயிக்கும். அதர்ஸ் பட ஹீரோ ஆதித்யா மாதவன் இந்தச் செயலை செய்தவர்களை நான் பத்திரிகையாளர்களாகவே கருதமாட்டேன். வக்கிரமாக கேள்வி கேட்கும் நீங்களும் இனி கேள்விக்கு உட்படுத்தப்படுவீர்கள். அதனால் அதற்கு அப்பாற்பட்டவர்கள் என்ற ஆணவம் வேண்டாம். எல்லோரைப் போல நீங்களும் உங்கள் வருமானத்துக்கு ஒரு தொழில்தான் செய்கிறீர்கள். சினிமாவுக்கு இலவச சேவை ஒன்றும் செய்யவில்லை. அது தேவையும் இல்லை. இனியாவது ஒரு பெண்ணிடம் என்ன பேச வேண்டும், எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதை உண்மையான அறம் சார்ந்த பத்திரிக்கையாளர்களிடம் கற்றுக்கொள்ளுங்கள். தங்கள் திரைப்படத்தில் நடித்த ஒரு பெண்ணை சூழ்ந்துகொண்டு அத்தனை பேர் வார்த்தை வன்முறையில் ஈடுபடும்போது, அருகிலேயே செயலற்று அமர்ந்திருந்த இயக்குநர் மற்றும் கதாநாயகனின் மௌனம் அதைவிட பெரிய வன்முறை. ஒருவேளை எதிர்த்துப் பேசினால் உங்கள் படத்துக்கான ஆதரவு கிடைக்காமல் போய்விடும் என்று நினைத்திருந்தால், அதைவிட ஒரு தவறான முடிவு வேறில்லை. மாறாக உங்கள் கதாநாயகிக்காக நீங்கள் குரல் கொடுத்திருந்தால் உங்கள் மீதும் உங்கள் திரைப்படத்தின் மீதும் மரியாதை கூடியிருக்கும். இயக்குநர் பிரேம் குமார் இந்த இழிசெயலை அறம் சார்ந்த நடுநிலை பத்திரிகையாளர்கள் கருத்தில்கொண்டு கண்டிக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். அறிக்கை வெளியிட்ட சென்னை பத்திரிக்கையாளர் சங்கத்திற்கு நன்றி! இனிவரும் காலங்களில் பத்திரிக்கையாளர் சந்திப்புக்கு, எண்ணிக்கையில் குறைவாக இருந்தாலும் அறம் சார்ந்த நடுநிலை பத்திரிகையாளர்கள், ஊடகவியலாளர்கள், Youtubers மட்டும் வரக்கூடிய முறை மற்றும் நிலை வரவேண்டும்." எனக் குறிப்பிட்டிருக்கிறார். Gouri Kishan: ``செயல்தான் நம் தகுதியை நிர்ணயிக்கும்" - இயக்குநர் பிரேம் குமார் | Gauri Kishan: ``Action determines our worth'' - Director Prem Kumar
  18. Editorial / 2025 நவம்பர் 07 , பி.ப. 06:23 - 0 2026 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத்திட்டம் மீதான உரையை ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (07) பிற்பகல் 1.37 க்கு ஆரம்பித்து, மாலை 5.47க்கு நிறைவுசெய்தார். பாராளுமன்ற உரையை ஒரே மூச்சில் வாசித்து முடித்தார். இதில், யாழ்ப்பாண மாவட்டத்தைச் சேர்ந்த எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் ராமநாதன் அர்ச்சுனா அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தார். Tamilmirror Online || அயர்ந்து தூங்கினார் அர்ச்சுனா
  19. யாழ்ப்பாணம் 5 மணி நேரம் முன் தெற்கில் இருந்து இளைஞர்,யுவதிகள் யாழ் வருகை ! தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் நடாத்தப்படுகின்ற இளைஞர் பரிமாற்று வேலைத்திட்டம் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது . தெற்கிலிருந்து, சகோதர மொழி பேசும் சுமார் 150 இளைஞர்கள் யுவதிகள் இன்றையதினம் யாழ்ப்பாணம் வருகைதந்தனர். யாழ். பழைய கச்சேரி பழைய பூங்கா வீதியில் இருந்து கலை, கலாசார முறைப்படி விருந்தினர்கள் மற்றும் இளைஞர் யுவதிகள் மாவட்ட செயலக கேட்போர் கூடத்திற்கு அழைத்து செல்லப்பட்டு வரவேற்பு நிகழ்வு இடம்பெற்றது. மாவட்ட உதவி மாவட்ட செயலர் எஸ்.சிவகரன், தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் பணிப்பாளர் நாயகம் சட்டத்தரணி சுபுன் விஜேரத்ன, தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் வடக்கு மாகாண பணிப்பாளர் கே.டி.சி. காமினி, யாழ்ப்பாணம் பிரதேச செயலர் யு.சிவகாமி, யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்திக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் எஸ். கபிலன் ஆகியோர் உட்பட பலர் இதில் கலந்து கொண்டனர். தெற்கில் இருந்து இளைஞர்,யுவதிகள் யாழ் வருகை !
  20. யாழ்ப்பாணம் 6 மணி நேரம் முன் யாழில். ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகளை பெற்ற தாய் உயிரிழப்பு! கடந்த 20 ஆண்டுகளின் பின்னர் ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகளைப் பெற்றெடுத்த தாய் ஒருவர் திடீரென உயிரிழந்துள்ள சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. வடமராட்சி வதிரி பகுதியைச் சேர்ந்த 46வயதுடைய யோகராஜா மயூரதி என்ற தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார். யாழ். போதனா மருத்துவமனையில் கடந்த மாதம் 07 திகதி ஒரே நேரத்தில் மூன்று பிள்ளைகளை பெற்ற நிலையில் அவசர பிரிவில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்த நிலையில் அவர் நேற்றைய தினம் மாலை 02மணியளவில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். அவரது மூன்று குழந்தைகளும் நலமாக இருப்பதாக மருத்துவமனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருமணம் செய்து 20 ஆண்டுகளாக குழந்தை இன்றி பெரும் துன்பங்களை எதிர்கொண்ட தாய், தனது மூன்று குழந்தைகளையும் பார்க்காமல் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
  21. யாழ்ப்பாணம் 6 மணி நேரம் முன் பருத்தித்துறையில் வெள்ளத்தில் மிதந்த மரக்கறி சந்தை! யாழ். பருத்தித்துறை பகுதியில் மரக்கறி சந்தை வெள்ளத்தில் மிதந்துள்ளது. இதையடுத்து கழிவகற்றல் வாகனத்தின் மூலம் நகரசபை தரப்பில் வெள்ள நீர் வெளியேற்றப்பட்டது. நகரசபை தவிசாளர் வின்சென் டீ போல் டக்ளஸ் போல் சந்தையை பார்வையிட்டார். இதன்போது வியாபாரிகள் தவிசாளருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். நீண்ட காலமாக இருக்கும் இப்பிரச்சினைக்கு தீர்வு காணப்படாமை தொடர்பில் தவிசாளரிடம் முறைப்பாடுகளைத் தெரிவித்தனர். தொடர்ந்து மழை நீடிக்கும் பட்சத்தில் மரக்கறி சந்தை வியாபாரிகளின் கோரிக்கைக்கு அமைவாக நவீன சந்தை கட்டடத்திற்கு கொண்டு செல்வது தொடர்பில் உடனடி நடவடிக்கை எடுப்பதாக வியாபாரிகளிடம் தவிசாளர் உறுதிபடத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. பருத்தித்துறையில் வெள்ளத்தில் மிதந்த மரக்கறி சந்தை!
  22. 07 Nov, 2025 | 10:45 AM செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வில் இரு சட்ட வைத்திய அதிகாரிகள் கடமையில் இருந்த நிலையில் ஒருவர் நீக்கப்பட்டமை தொடர்பில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் ஸ்ரீ பவானந்தராஜா தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பில் அரசாங்கம் தங்கு தடை இன்றி நீநி ஒதுக்கீடுகளை வழங்கி வருகிறது. இந்நிலையில் குறித்த புதைகுழி அகழ்வ பணியில் இரு சட்ட வைத்திய அதிகாரிகள் கடமையாற்றிய நிலையில் ஒருவரை அதிலிருந்து நீக்கி உள்ளனர். பாராளுமன்ற சுகாதார மேம்பாட்டு உயர்மட்ட குழுவில் நான் பங்கு பற்றிய நிலையில் செம்மணி அகழ்வில் மாதிரிகளை சேகரிப்பது ஆராய்வது தொடர்பில் மேலும் ஒரு சட்ட வைத்திய அதிகாரி நியமிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தேன். அதன் அடிப்படையில் யாழ். போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்தி அதிகாரி பிரணவன் செல்லையாவுக்கு மேலதிகமாக யாழ். தீவகத்தில் கடமையாற்றும் சட்ட வைத்திய அதிகாரி அகழ்வுப் பணிகளில் கடமையாற்றினார். குறித்த வைத்தியர் மூன்று மாதங்கள் மட்டுமே கடமையாற்றியதாக அறியக் கிடைக்கும் நிலையில் குறித்த சட்ட வைத்திய அதிகாரி நீக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது. ஆகவே குறித்த விடயம் தொடர்பில் சம்பந்தப்பட்டவர்களுடன் கலந்துரையாடி மீண்டும் இணைப்பதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அவர் மேலும் தெரிவித்தார். செம்மணி மனிதப் புதை குழி அகழ்வில் ஈடுபட்ட சட்ட வைத்திய அதிகாரியை நீக்கியமை தொடர்பில் ஆராயப்படும் - ஸ்ரீ பவானந்தராஜா எம்.பி! | Virakesari.lk
  23. 07 Nov, 2025 | 10:37 AM நான்கு நாள் பயணமாக இலங்கை வந்துள்ள பிரபல தென்னிந்திய நடிகர் ஆர். சரத்குமார் அந்நாட்டின் சுற்றுலா அபிவிருத்தியைப் பாராட்டியுள்ளார். இலங்கையை சுற்றுலாத் தலமாக மேம்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக நடிகர் சரத்குமார் புதன்கிழமை (05) இலங்கையை வந்தடைந்தார். கண்டிக்கு நேற்று வியாழக்கிழமை (06) விஜயம் செய்தபோது, அந்தப் பகுதியில் கட்டப்பட்டு வரும் புதிய 07 நட்சத்திர ஹோட்டலைப் பார்வையிடும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. இந்த ஹோட்டல் குறித்து நடிகர் தெரிவிக்கையில், இது உலகெங்கிலும் உள்ள ஹோட்டல்களைப் போன்ற 7 நட்சத்திர ஹோட்டல். “இது மே அல்லது ஜூன் மாதங்களில் திறக்கப்படும். நான் அதைப் பார்க்க வந்தேன். சுகாதாரம் தொடர்பான எல்லா வசதிகளும் இங்கே உள்ளது. கொழும்பிலிருந்து ஹெலிகொப்டர் சேவைகள் கிடைக்கின்றன,” என அவர் தெரிவித்தார். இலங்கையைப் பாராட்டிய நடிகர் சரத்குமார், இலங்கை அனைத்தையும் கொண்ட ஒரு நாடு என கூறினார். “இங்கே எல்லாம் கிடைக்கிறது. பனிப் பொழிவைத் தவிர்ந்து இலங்கையில் ஏனைய எல்லா காலநிலையும் கிடைக்கிறது,” என அவர் தெரிவித்தார். இலங்கையில் எல்லாமே இருக்கு - நடிகர் சரத்குமார் பாராட்டு | Virakesari.lk
  24. 07 Nov, 2025 | 11:33 AM 2025 ஆம் ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் நாட்டிற்கு வருகை தந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் மொத்த எண்ணிக்கை 1.9 மில்லியனை கடந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை அறிவித்துள்ளது. அதேநேரம், நவம்பர் மாதத்தின் முதல் ஐந்து நாட்களில் மொத்தம் 32,815 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில், சுமார் 1,923,502 சுற்றுலாப் பயணிகளின் வருகை தந்துள்ளனர். இந்த காலப்பகுதியில், அதிகபட்ச தினசரி வருகை 7,412 சுற்றுலாப் பயணிகளாக நவம்பர் முதலாம் திகதி பதிவாகியுள்ளது. இந்த ஆண்டு இதுவரை, அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ளனர். அதன்படி இந்தியாவிலிருந்து 431,235 சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளனர். அதனை தொடர்ந்து ஐக்கிய அரபு இராச்சியத்திலும் (177,167), ரஷ்யா (138,061), ஜேர்மனி (119,415) மற்றும் சீனா (113,619) ஆகிய நாடுகளிலிருந்தும் அதிகப்படியான சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது. இவ் ஆண்டின் இதுவரையில் சுற்றுலாப் பயணிகளின் வருகை 1.9 மில்லியனைக் கடந்தது | Virakesari.lk
  25. 07 Nov, 2025 | 01:25 PM உயர் நீதிமன்ற நீதியரசர் எஸ். துரைராஜா இன்று வெள்ளிக்கிழமை (07) ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க முன்னிலையில் பதில் பிரதம நீதியரசராக பதவியேற்றுள்ளார். பிரதம நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேன வெளிநாடு சென்றுள்ளதன் காரணமாக, அவர் மீண்டும் நாட்டிற்குத் திரும்பும் வரை செயற்படும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாரநாயக்கவும் இந்நிகழ்வில் கலந்துகொண்டார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மலையகத் தமிழர் ஒருவர் பதில் பிரதம நீதியரசராக பதவிப்பிரமாணம் செய்வது இதுவே இலங்கை வரலாற்றில் முதலாவது சந்தர்ப்பம் ஆகும். ஜனாதிபதி சட்டத்தரணி நீதியரசர் எஸ்.துரைராஜா, 1988 ஆம் ஆண்டு இலங்கைச் சட்டத்தரணிகள் சங்கத்தில் பதிவுபெற்று, 1989 ஆம் ஆண்டு சட்டமா அதிபர் திணைக்களத்தில் அரச சட்டத்தரணியாக நியமனம் பெற்றார். இவர் நீதித்துறைக்கு தரமுயர்த்தப்படுவதற்கு முன்னதாக மேலதிக மன்றாடியார் தலைமையதிபதி நிலைவரையில் பல பதவிப்படிகளை கடந்து வந்துள்ளார். சட்டமா அதிபர் திணைக்களத்தில் அவரது பதவிக்காலத்தில், அதிகாரமிக்கவர்கள் புரிந்த குற்றங்கள் உள்ளடங்கலாக, பல்வேறு உயர்மட்ட குற்ற வழக்குகளில் வாதாடியுள்ளதுடன் பல விசேட வழக்காடல் குழுக்களுக்கு தலைமையும் தாங்கியுள்ளார். இவர் தனது சட்டமாணி பட்டத்தினை கொழும்பு பல்கலைக்கழகத்திலும் சட்ட முதுமாணி பட்டத்தினை ஐக்கிய இராச்சியத்தின் இலண்டன் பல்கலைக்கழகத்திலும் பெற்றுக்கொண்டார். பாரிஸ்டராகவும் சொலிசிட்டராகவும் உள்ளீர்க்கப்பட்ட இவர் பிஜி குடியரசில் நீதியரசாகவும் பணியாற்ற நியமிக்கப்பட்டார். இலங்கை நீதித்துறையின் பெருமைமிகு வரலாற்றிலேயே, அப்போதைய இலங்கைக் குடியரசின் ஜனாதிபதியினால், இந்திய வம்சாவழியினரில் நியமிக்கப்பட்ட முதலாவது ஜனாதிபதி சட்டத்தரணி இவராவார் என்பதுடன் அவ்வருடமே அவர் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் நீதிபதியாகவும் நியமிக்கப்பட்டார். 2019 ஆம் ஆண்டில், இவர் தற்போது அதி சிரேஷ்ட நீதியரசராக பணியாற்றுகின்ற உச்ச நீதிமன்றத்திற்கு பதவியுயர்த்தப்பட்டதுடன் அவருடைய நீதித்தொழிலில் வழங்கியுள்ள பல அதிமுக்கிய தீர்மானங்கள் உள்ளடங்கலாக, 300 இற்கும் மேற்பட்ட தீர்ப்புக்களையும் வழங்கியுள்ளார். நீதிமன்றங்களுக்கும் அப்பால், நீதியரசர் துரைராஜா அவர்கள் சட்டக் கல்வி மற்றும் புலமைப்பரிசில்களுக்கும் குறிப்பிடத்தக்க பங்காற்றியுள்ளார். இலங்கை கூட்டிணைக்கப்பட்ட சட்டக் கல்வி பேரவையின் உறுப்பினராக விளங்கும் இவர், கொழும்பு பல்கலைக்கழகத்தின் பட்டப்பின் கற்கை மற்றும் கலாநிதி கற்கை நிகழ்ச்சித்திட்டங்களின் விரிவுரையாளராகவும் மதிப்பாய்வாளராகவும் காணப்படுகின்றார். சட்டம் மற்றும் சமூக விஞ்ஞானங்கள் குறித்து பல்வேறு உள்நாட்டு மற்றும் பன்னாட்டு சஞ்சிகைகளில் எண்ணிறந்த கட்டுரைகளை எழுதியுள்ளதுடன், இலங்கை நீதிபதிகள் நிறுவகத்தின் நீதித்துறை அலுவலர்களுக்கு பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்களையும் நடாத்தியுள்ளார். 2024 ஆம் ஆண்டில், இந்தியாவின் புது டெல்லியில் இடம்பெற்ற பொதுநலவாய நாடுகளின் சட்டமா அதிபர்கள் மற்றும் மன்றாடியார் தலைமையதிபதிகளின் மாநாட்டிற்கு, இந்தியாவின் சட்டமா அதிபரின் ஊடாக இந்திய அரசாங்கத்தினால் விசேட அதிதியாக அழைக்கப்பட்ட மிகஉன்னத கௌரவத்தினையும் நீதியரசர் அவர்கள் பெற்றிருந்தார். இந்நிகழ்வில், இந்தியாவின் சனாதிபதியும் பிரதமரும் முறையே பிரதம மற்றும் சிறப்பு அதிதிகளாக கலந்துக்கொண்டிருந்தனர். பொதுநலவாய நாடுகளிடையே சட்டக் கல்வியின் தரத்தினை மேம்படுத்தி வளப்படுத்தும் பொதுநலவாய நாடுகளின் சட்டக் கல்வி சங்கத்தின் போசகராகவும் காணப்படுகின்றார். அண்மையில், இலங்கை நீதிச்சேவை ஆணைக்குழுவின் ஆணையாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். 1802 ஆம் ஆண்டில் இலங்கையின் மீயுயர் நீதிமன்றங்கள் தோற்றம்பெற்றதிலிருந்து மேன்முறையீட்டு நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றம் என இரண்டிற்கும் நியமிக்கப்பட்ட முதலாவது இந்திய வம்சாவழித் தமிழர் இவரேயாவார். உயர் நீதிமன்ற நீதியரசர் எஸ்.துரைராஜா பதில் பிரதம நீதியரசாராக நியமனம் | Virakesari.lk

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.