படம்: இதயமலர் (1976)
இசை : MSV
வரிகள் : கண்ணதாசன்
பாடியோர் : KJ ஜேசுதாஸ் & வாணி ஜெயராம்
லவ் ஆல் ஹுஹும் லவ் ஒன்
செண்டு மல்லி பூப்போல் அழகிய பந்து
சேல்விழி ஆடட்டும் காதலில் வந்து
லவ் ஆல் லவ் ஒன்
என்றும் இந்த இதயம் ஒருவனுக்கென்று
இருப்பதைக் கூறட்டும் விரைவினில் சென்று (செண்டு)
கங்கையின் சங்கமம் கடலோடு கண்டேன்
மங்கையின் சங்கமம் பார்த்திட வந்தேன்
கரை வழிச் செல்வது கங்கையின் பெருமை
முறை வழிச் செல்வது மங்கையின் பெருமை (செண்டு)
ஆயிரம் நாடுகள் சென்று வந்தாலும்
தாயக பெருமையைக் காத்திட வேண்டும்
காதலும் தாயகப் பெருமையில் ஒன்று
காணட்டும் அதையும் இளமையில் இன்று (செண்டு)
மந்திரம் சொல்லும் மணவறை கோலம்
மனதினில் தோன்றும் ஒவ்வொரு நாளும்
எண்ணுவதெல்லாம் நேரினில் காணும்
புண்ணியம் இருந்தால் அது எங்கு போகும் (செண்டு)