Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புரட்சிகர தமிழ்தேசியன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by புரட்சிகர தமிழ்தேசியன்

  1. தங்க தேரோடும் அழகினிலே படம்: ரகுபதி ராகவ ராஜாராம்(1977) இசை: சங்கர் - கணேஷ் பாடியவர்: SPB & சுசீலா
  2. உங்களில் பனங்காய் வண்டி ஓட்டியவர்கள் எத்தனை பேர் ரெல் மீ..
  3. சர்வதேச வடை தினம்.. .. கடையே கோயில் வடையே தெய்வம் 😆
  4. "தந்தை புக்கரின் கட்டளையை சிரமேற்கொண்டு, கம்பண்ணர் காஞ்சியிலிருந்து தன் படையுடன் புறப்பட்டார். வழியில் ஶ்ரீரங்கத்தில் ஆட்சி செய்துகொண்டிருந்த சுல்தானின் பிரதிநிதியைத் தோற்கடித்து விட்டு அங்கே தன்னுடைய பிரதிநிதிகளை நிறுத்திவிட்டு மதுரை நோக்கிச் சென்றார். பொயு 1371ம் ஆண்டு மதுரையை அடைந்த கம்பண்ணரின் படைகளோடு அங்கே காத்திருந்த சுல்தானின் படைகள் மோதின. இதில் கம்பண்ணரோடு போரிட்ட சுல்தானின் பெயர் பற்றிய பல சர்ச்சைகள் இருந்தாலும், மதுரை வரலாற்றின் படி சிக்கந்தர் ஷா என்பதே மதுரை சுல்தானகத்தின் கடைசி சுல்தானின் பெயர் என்பதால், சிக்கந்தரே விஜயநகர கம்பண்ணரோடு போர் செய்தவன் என்று கொள்ளலாம்." https://i.ibb.co/N6rcw4Kg/sikkandar.jpg Jumpsharesikkandar.jpgShared with Jumpshare "அறுபடை ஐம்படைவீடு கொண்ட திருமுருகா.. திருமுருகாற்றுப்படை தனிலே வருமுருகா முருகா.." மதசார்பற்ற திராவிட அரசு இப்படித்தான் முடிவு எடுக்கும் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே
  5. அகநானூறு முதல் நற்றிணை வரை.. தமிழ் இலக்கியத்தில் இடம்பெற்றுள்ள கார்த்திகை தீபம்! கார்த்திகை தீபம் கொண்டாடப்பட உள்ள நிலையில் அதுபற்றி சங்ககால இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளதை பற்றி பார்க்கலாம்.. கார்த்திகை தீப விழாவை பழந்தமிழர் சங்க காலம் தொட்டே வழிபட்டு வந்தனர். தமிழ் இலக்கியங்களில் கார்த்திகை தீப விழாவினைப் பற்றி சில இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. களவழி நாற்பது: ''நலமிகு கார்த்திகை நாட்டவர் இட்ட தலைநாள் விளக்கிலே - கார் நாற்பது கார்த்திகை சாற்றில் கழி விளக்குப் போன்றனவை - களவழி நாற்பது அகநானூறு: ''நலமிகு கார்த்திகை நாட்டவர் இட்ட தலைநாள் விளக்கின் தகையுடையவாகிப் புலமெல்லாம் பூத்தன தோன்றி சிலமொழி தூதொடு வந்த மழை'' சீவக சிந்தாமணி: குன்றிற் கார்த்திகை விளக்கிட்டன்ன கடிகமழ் குவளை பைந்தார் நற்றிணை: சங்க காலத்தில் நிகழ்ந்த கார்த்திகை விழா ஒளிவிளக்கை எடுத்துக் காட்டுகிறது நற்றிணை. வீரை வேண்மான் வெளியன் தித்தன் முரசுமுதல் கொளீஇய மாலை விளக்கின் வெண்கோடு இயம்ப, நுண்பனி அரும்பக் கையற வந்த பொழுது - நற்றிணை 58 மலைபடுகடாம் “கார்த்திகை காதில் கனமகர குண்டலம்போல் சீர்த்து விளங்கித் திருப்பூத்தல்” - பரிபாடல் அகலிரு விசும்பின் ஆஅல் போல வாலிதின் விரிந்த புன்கொடி முசுண்டை” - மலைபடுகடாம். டிஸ்கி இன்று 3/12/2025 திருவண்ணாமலை அருள் மிகு அண்ணாமலையில் கார்த்திகை தீபம் ஏற்றபட்டது,,
  6. தமிழ் தேர்விலேயே 85,000 ஆசிரியர்கள் ‛பெயில்'.. தமிழ்நாடு எங்கே போகிறது? அடக்கொடுமையே ! சென்னை: முதுநிலை பட்டதாரி ஆசிரியர் வேலையில் சேர தேர்வு எழுதிய ஆசிரியர்களில் 85,000 பேர் தமிழ் பாடத்தில் 'பெயில்' ஆகியுள்ளனர். தமிழில் 50க்கு 20 மதிப்பெண் எடுத்தால் தேர்ச்சி பெற்று விடலாம் என்ற நிலையில் அவர்கள் தோல்வியடைந்துள்ளது அனைவரையும் அதிர வைத்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் 1996 முதுகலை ஆசிரியர் காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியானது. அதன்படி முதுகலை ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் நிலை - 1 மற்றும் கணினி பயிற்றுநர் நிலை 1, ஆகிய பணியிடங்கள் நிரப்பப்பட்ட உள்ளது. தமிழ் - 216, ஆங்கிலம் - 197, கணிதம் - 232, இயற்பியல் - 233, வேதியியல் - 217, தாவரவியல் - 147, விலங்கியல் - 131, வணிகவியல் 198, பொருறியல் - 169, வரலாறு - 68, புவியியல் - 15, அரசியல் அறிவியல் - 14, கணினி பயிற்றுநர் 57, உடற்கல்வி இயக்குநர் 102 என்று மொத்தம் 1996 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதற்கு 10.07.2025 (இன்று) முதல் 12.08.2025 விண்ணப்பம் செய்ய ஆசிரியர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. அதன்பிறகு அக்டோபர் 12ம் தேதி தேர்வு நடந்தது. முதுநிலை பட்டதாரிகள் 2.20லட்சம் பேர் எழுதினர். இதற்கான தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளன. இதில் கட்டாய தமிழ் பாட தேர்வில் 85,000த்துக்கு அதிகமானோர் பெயில் ஆகியுள்ளனர். தமிழக அரசு வேலையில் சேர்பவர்களுக்கு தமிழ் எழுத, படிக்க தெரிய வேண்டும் என்பதற்காக, அனைத்து போட்டித் தேர்வுகளிலும் 2022ல் தமிழ் தேர்வு அறிமுகம் செய்யப்பட்டது. கட்டாய தமிழ் தகுதித்தாள்தேர்வில் மொத்தம் 30 கேள்விகள் கேட்கப்பட்டு இருக்கும். இந்த கேள்விகளுக்கு 50 மதிப்பெண் வழங்கப்படும். அதில் 20 மதிப்பெண் எடுத்தால் தேர்ச்சி பெறுவார்கள். 10ம் வகுப்பு மாணவர்கள் எழுதும் அளவில் தான் கேள்விகள் இருக்கும். இதனால் எளிதில் தேர்ச்சி பெறலாம். மேலும் இந்த கட்டாய தமிழ் தேர்வில் தேர்ச்சியடைந்தால் தான் பாடம் சார்ந்த விடைத்தாள் திருத்தப்படும். ஆனால் 85,000 ஆசிரியர்கள் தமிழ் பாடத்தில் தேர்ச்சியடைவில்லை. இதனால் அவர்கள் போட்டியில் இருந்து விலக்கப்பட்டுள்ளனர். அவர்களின் பாடம் சார்ந்த விடைத்தாள் திருத்தப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தாய் மொழி தமிழாக வைத்து கொண்டு, பள்ளி முதல் தமிழ் பாடத்தை படித்த பலராலும் கூட இந்த தேர்வை தேர்ச்சியடைய முடியவில்லை. இது தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் ஆசிரியர்களே இப்படியென்றால் மாணவர்களின் நிலை எப்படி இருக்கும்? தமிழ்நாடு எங்கே சென்று கொண்டிருக்கிறது? என்று தமிழ் ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். https://tamil.oneindia.com/news/chennai/tn-trb-exam-85-000-teachers-fail-in-tamil-subject-754703.html டிஸ்கி : இதில் இவர்களுக்கு எந்த தேர்வும் இல்லாமல் விண்ணப்ப முதிர்வு அடிப்படையில் நேரடியாக பணி நியமனம் செய்ய வேண்டுமாம் . மத்திய அரசு அலுவர்களுக்கு இணையான சலுகைகள் , மற்றும் ஒய்வூதியம் , பணி பாதுகாப்பு அனைத்தும் வேண்டுமாம். இவர்கள் வீட்டு குழந்தைகள் மட்டும் கான்வென்டில் படிப்பார்களாம் அரசு பள்ளிகளின் கல்வி தரம் அந்த அளவில் தான் இருக்கும் அப்புறம் அடுத்த மாநிலத்தான் நம் அரசு வேலைகளை பறிக்கிறான் என்று கூப்பாடு வேறு..?
  7. அரசுப் பேருந்துகளின் நெருக்குதலே தனியார் பேருந்துகளின் வேகம் .தனியார் பேருந்துக்கு முன்னும் பின்னும் இரண்டு நிமிட இடைவெளியில் அரசுப் பேருந்துகளை இயக்கி நெருக்கடி கொடுப்பதுதான் காரணம் கவன சிதைவுக்கு காரணம் அனைத்து பேருந்துகளிலும் பாட்டு கேட்க தடை செய்ய வேண்டும் பயணிகளிடம் பாட்டு கேட்பதற்கான செல்போன்கள் உள்ளன. குறிப்பிட்ட ஊரை சொல்லி டிக்கெட் ஏறிய பின்பும் கத்தி, பஸ் ஸ்டாண்டை விட்டு வெளியே செல்லவே அரைமணி நேரம் ஆக்கி விடுவார்கள்,சில பஸ்கள் 60 நிமிடம் கூட எடுத்துக்கொள்ளும். நகருக்குள் தேவையில்லாமல் விட்ட நேரத்தை பிடிக்கிறேன் என நெடுஞ்சாலைகளில் மிக வேகமாக வண்டி ஓட்டுவது. குறிப்பாக பெண் பயணிகள். அரசு பஸ்க்கு முன்னால் சீக்கிரம் போவீர்களா என்று கேட்டுத்தான் ஏறுகிறார்கள். பெண் பயணிகள் ஓட்டுநர் அருகே உட்கார்ந்து அவர்களை உசுப்பேற்றுகிறார்கள்.பெண் பயணிகளை பஸ்சின் பின் பகுதியில் அமரவைத்தாலே பாதி விபத்து குறையும். வருவாய் அதிகம் எதிர்பார்க்கும் உரிமையாளர் வருவாய் குறைந்தால் ஓட்டுநர் நடத்துனரின் வேலை பறிபோகும் என்ற அவல நிலையும் காரணம்
  8. மின்சார தைலம் - தடவும் போதே ஷாக்கடிக்க போகுதப்பா..
  9. கும்பகோணம் சக்ரபாணி கோயில் - மழைகாலத்தில்
  10. படம் : தெய்வ வாக்கு இசை: இளையராசா பாடியோர்: ஜெயசந்திரன் & ஜானகி

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.