Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முதல்வன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by முதல்வன்

  1. # Question Team1 Team 2 No Result Tie Prediction 1) ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் முன்னணியில் வரும் நான்கு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும். தவறான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் குறைக்கப்படும். No Result Tie CSK Select CSK CSK DC Select DC Select GT Select GT Select KKR Select KKR KKR LSG Select LSG Select MI Select MI Select PBKS Select PBKS Select RR Select RR RR RCB Select RCB Select SRH Select SRH SRH 2) முதல் நான்கு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. #1 - ? (சரியான பதில்: +4 புள்ளிகள், தவறான பதில்: -4 புள்ளிகள் ) RR #2 - ? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள் ) CSK #3 - ? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2 புள்ளிகள்) KKR #4 - ? (சரியான பதில்: +1 புள்ளி, தவறான பதில்: -1 புள்ளி ) SRH 3) ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2 புள்ளிகள்) RCB 4) மே 21, வெள்ளி 19:30 அஹமதாபாத் Qualifier 1 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்) Qualifier 1: 1st placed team v 2nd placed team CSK 5) மே 22, புதன் 19:30 அஹமதாபாத் Eliminator போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்) Eliminator: 3rd placed team v 4th placed team KKR 6) மே 24 வெள்ளி 19:30 சென்னை Qualifier 2 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்) Qualifier 2: Loser of Qualifier 1 v Winner of Eliminator RR 7) மே 26, ஞாயிறு இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +5 புள்ளிகள், தவறான பதில்: -5 புள்ளிகள்) Final: Winner of Qualifier 1 v Winner of Qualifier 2 CSK 😎 இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி) SRH 9) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி) RCB 10) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் (Orange cap) பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Kohli 11) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் (Orange cap) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 10 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) RCB 12) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Chahal 13) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 12 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) RR 14) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள் ) Kohli 15) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 14 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) SRH 16) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Bumra 17) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 16 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) MI 18) இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the Series) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Kohli 19) இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the season) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 18 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) Sanju Samson 20) இந்த தொடரில் Fair Play Award யை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி) SRH
  2. அருமையான படங்களும் வசன நடையும்
  3. ஓம். ஒரு காலத்தில் வெள்ளவத்தையில் gangs சந்திக்கும் இடம்
  4. ஆழ்ந்த இரங்கல்கள். ஆத்மா சாந்தியடையட்டும்.
  5. நன்றி நுணா பதிவிற்கு. சிந்துசையின் அண்மைய காணொளி ஒன்று பார்த்தேன். பெற்றோருக்கு பெருமை சேர்த்த பிள்ளை. ஒருகணம் ஜெயமண்ணையின் முகமும் அவரின் பொறுமையும் கண்முன்னே வந்து போகிறது. புலனாய்வுப்பிரிவால் நகங்கள் புடுங்கப்பட்ட பின்னரும் நாட்டுக்காக எந்த தயக்கமும் இல்லாமல் போராடுவது மண்ணின் மீதான பற்றை எடுத்தியம்புகிறது.🥲 வீரவணக்கம்
  6. நிராஜுக்குத் தெரியாவிட்டால் 1-9 சங்கீதனையும் இவரையும் (தயாபரனையும்) போட்டு குழப்பாமல் ஆவது இருக்கலாம். வரலாறு சொல்லப்படத்தான் வேண்டும், உண்மைகளை வெளிக்கொணரத்தான் வேண்டும், அதற்காக நீங்கள் உங்களைப் புகழ்வதையும், உருட்டுகளையும் தவிருங்கள், இவற்றை வைத்துத்தான் சேரமான் தங்கச்சியை உண்மை என்று நிறுவ தலைப்படுகிறார்.
  7. உங்களுக்கான பதில் இந்த காணொளியில் கிடைக்கலாம் @goshan_che
  8. தந்தையாரின் பிரிவினால் துயருற்றிருக்கும் யாயினிக்கும் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல்கள்
  9. நல்லா இருக்கு அண்ணா. அது சரி யார் யாழ் அக்கா 🤣 ஒரு நிமிடம் பயப்படவைத்து விட்டீர்கள் அண்ணா
  10. புகழ்ச்சிக்கு மயங்காதீர் என்று இப்படியும் சொல்லலாம் போல.
  11. சிறப்பான எழுத்துகள். நீங்கள் தொடர்ந்து எழுத வேண்டும்.
  12. நீங்கள் எழுதும்போது ஏனோ நவீன நாசிகள் கண்முன் வருவதை தவிர்க்கமுடியவில்லை. வரலாறு தந்த பாடத்தை படிக்காமல் போனால் என்ன நடக்கும் என்பதையும் திரும்ப திரும்ப வரலாறே படிப்பிக்கும்.
  13. பயனுள்ள தகவல்கள் உள்ள ஒரு தளம். யாருக்கும் பயன்படலாம் என்று பதிகிறேன்.
  14. பிந்திய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கிருபன்
  15. அழகான ஆணித்தரமான கேள்வி. அரசியல்வாதிகளால் தமிழ் இளைஞர்கள் உணர்வூட்டப்பட்டார்கள். அரசியல்வாதிகள் அதை வாக்குகளாக மாற்றி தம்மை வெற்றியடையச்செய்வதோடு அந்த தமிழ் இளைஞர்களை தம்மால் அடக்கி ஆளலாம் என்று நினைத்தார்கள். அது அப்படியே எதிர்மறையாகி புலிகள் ஆயுதத்தால் அரசியல்வாதிகளை அடக்கலாம் என்று நினைத்தார்கள். தம்மைத்தூண்டி போராட அழைத்துவிட்டு அற்ப சலுகைகளுக்காக விலைபோவதாக எண்ணினார்கள். அரசியல் நேர்மையற்றவர்களுக்கு புகட்டும் பாடம் பின்னர் வரும் அரசியல்வாதிகளை புடம்போடுவதோடு தங்கள் சொற்படி நடப்பார்கள் என நினைத்தார்கள். ஒரு சில இராணுவ வெற்றிகளும் தமிழ் அரசியவாதிகளின் கையகலாத்தன்மையினால் ஏற்பட்ட அரசியல் தோல்விகளும் புலிகளை தாம் நடாத்தும் போராட்டம் தான் தமிழருக்கான ஒரே தீர்வு என்று நினைத்தார்கள். எண்பதுகளில் புரட்சி / நாடுகளின் விடுதலை அவர்கள் அப்படி எண்ணி இருக்க இலகுவாக வழிவகுத்து இருக்கலாம். அதேவேளை இந்தியாவை அதன் பூகோள நலனுக்காக இலங்கையில் நடாத்தும் விளையாட்டுகளை புலிகள் புரிந்துகொண்ட அளவுக்கு வேறு யாரும் புரிந்தார்களா தெரியவில்லை. திலீபனின் பன்னிருவேங்கைகளின் உயிரைக்கொடுத்து மக்களுக்கு புரியவைத்தார்கள் அதை இன்றுவரை மக்களின் மனதில் ஆழமாக பதித்துவிட்டு சென்றார்கள். அவ்வாறே இந்திய இராணுவம் நடாத்திய கொலைவெறி ஆட்டத்துக்கு ராணுவ ரீதியாக உதவியவர்களுக்கு நிகரனாவர்கள் அரசியல் ரீதியாக உதவியவர்களும் தான். தங்களால் தூண்டப்பட்டு தங்களை மீறி செயற்படும் தங்களின் இடைவெளியை நிரப்பும் எவரையும் அவர்களுக்கு பிடிக்காது. கருணாநிதி அமிர்தலிங்கம் போன்றவர்கள் அந்த வகையறாவுக்குள் தான் வருவார்கள். அவர்கள் கொல்லப்பட வேண்டுமா என்ற கேள்விக்கு என்னிடம் பதில் இல்லை ஆனால் அரசியலில் இருந்து அகற்றப்பட வேண்டியவர்கள். அப்போது புலிகளுக்கு இருந்த இலகுவான தெரிவாக கொலை இருந்திருக்கலாம். நான் இந்த பதிவுகளை என் கண்ணோட்டத்தில் இருந்தே பதிகிறேன். வேறு சிலருக்கு வேறு கண்ணோட்டம் இருக்கலாம். நான் எந்த அமைப்பினதோ புலிகளினதோ பிரதிநிதி அல்லர். உங்களைபோன்ற தமிழர் விடுதலை மீது பற்றுக்கொண்ட தமிழன். நீலன் பற்றி இன்னொரு பதிவில் எழுதுகிறேன். நான் எழுதுவதில் பிழை இருக்கலாம் எல்லாரும் எழுதுங்கள் வரும் சந்ததி சரியெனபடுவதை எடுக்கும் தெளிவுகொண்டது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் எம்மனதில் சுழலும் கேள்விகளை பாரங்களையும் இறக்கும் இடமாக இந்த களத்தை பாவியுங்கள் அது நீங்கள் உட்பட அனைவருக்கும் அவசியமானதும் நன்மைபயக்கவைப்பதும் ஆகும்.
  16. தரப்படுத்தல் அறிமுகபடுத்தப்பட்டதன் ஆரம்ப நோக்கம் தமிழர்கள் படித்து பட்டம் பெறுவதை தடுப்பதே. அது இன ஒடுக்குமுறையும் ஒரு படி அது பலரை போரடத்தூண்டியது. அது இப்போது இருக்கும் நிலைக்கு மாற பல்வேறு ஆண்டுகள் எடுத்தன. இப்போது இருக்கும் Merit பின்னர் மாவட்டரீதியான தரப்படுத்தல் இருந்திருந்தால் கூட மாற்றம் வேறுவிதமாக இருந்திருக்க கூடும். ஒவ்வொரு தாக்கமும் அப்போதிருந்த சூழ்நிலையால் ஏற்பட்டு இருக்கும். தாம் வஞ்சிக்கப்படுவதாக அடக்குமுறைக்கு உள்ளாக்கபடுவதாக அந்த காலத்து இளைஞர்கள் உணர்ந்தார்கள். இப்போ அந்த முறைதான் பல்வேறு மாணவர்கள் மேற்படிப்பை தொடர உதவுகிறது என்றாலும் இந்த முறையிலும் மாற்றங்கள் ஏற்பட வேண்டும். (பொருளாதார இட ஒதுக்கீடு, நகரத்திலிருந்தான தூரம் என்பனவும் கணிப்பிடப்படவேண்டும்.) அனலைதீவும் யாழ் பருத்தித்துறை நகரமும் ஒன்றல்ல. முழங்காவில் நாச்சிக்குடாவும் கிளிநோச்சி வட்டக்கச்சி மல்லாவியும் ஒன்றல்ல.
  17. தமிழீழ தமிழர்களின் விடிவுக்காக் போராடிய தமிழீழ விடுதலைப்புலிகளின் போராட்ட வடிவம், அரசியல் நடவடிக்கைகள் மீது பல்வேறு தரப்பினர் விமர்சங்களை வைப்பது வழமை. அவற்றை வெறுமனே விமர்சனங்களாக, எதிரியின் துரோகிகளின் கூவல்களாக கடந்து சென்று விடிவை அடைய முடியாது. புலிகளே தற்போது இருந்தாலும் தாங்கள் இராணுவரீதியாக தோற்கடிக்கப்பட்ட நிகழ்வை, தமிழ்மக்களின் அரசியல் தொடர்பாக கடந்து வந்த பாதையை நிச்சயமாக ஆராய்வார்கள். இந்த திரியில் அதை ஆராய விரும்புகிறேன். உண்மையான தமிழ் மக்கள் மீதான அவர்களின் விடுதலை மீதான பற்றுக்கும் வெறுமனே புலி எதிர்ப்புக்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. அதை நான் வாசிப்பவர்களுக்கே விட்டுவிட விருப்பபடுகிறேன். எல்லாருக்கும் ஒரு நியாயயம் இருக்கும் தங்களின் நியாயம் தான் உலகில் மிகப்பெரியது என்று நினைப்பதால் தான் முரண்பாடுகள் வருகின்றன. ஆனால் ஒவ்வொருவரின் நியாயத்தையும் ஆராய்வதில் தவறில்லை என்று நினைக்கிறேன். இந்த விமர்சனங்களும் அதற்கான கலந்துரையாடல்களும் எதிர்காலத்தில் எம் விடுதலைக்கு எந்த விதத்தில் ஆவது உதவ வேண்டும் என்பதை மனதில் வைத்து பதிவுகளை எழுதுங்கள். ஒருவரை ஒருவர் வென்றுவிடுவதால் விடிவு கிடைத்துவிடும் என்றால் நான் ஒரு தோல்வியாளனாக முதலில் பதிவு செய்துவிடுகிறேன்.
  18. இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் ஈழப்பிரியன் அண்ணா.
  19. இவை அந்த நாடுகளில் தமிழர் தூதரகங்களாக இருக்க வேண்டியதில்லை. தமிழர் கலாச்சார மையங்களாக தமிழர் கலை பண்பாட்டுக்கழகங்களாக தமிழர் அறிவியல் கழகங்களாக தமிழர் உணவங்களாக கூட இருக்கலாம், ஆனால் உள்ளூர் அரசியல்வாதிகள் தொட்டு நாட்டின் உயர் அரசியல்வாதிகள் வரை தொடர்புகளை ஏற்படுத்தி ஒரு வலையமைப்பை அந்த நாட்டு சட்டங்களுக்கு அமைவாக நடாத்தவேண்டும். கண்காட்சிகள், கலையரங்குகள், ஆய்வரங்குகள் மூலம் எம் தேசியத்தை எடுத்துகூறவேண்டும்.
  20. அண்மையில் ஒரு திரியில் நிர்மலனுக்கு பதிலளிக்கும் போது தான் உணர்ந்தேன். தாயக அரசியலை தக்கவைக்க புலம்பெயர் அறிவுஜீவிகள், அரசியல் ஆய்வாளர்கள், பொருளாதார வளம் கொண்ட தேசியவாதிகள், இராஜதந்திரிகள் கொண்ட அரசியல் சார்பற்ற ஒரு தமிழர் அமைப்பு உருவாக்கப்பட்டு, மேற்குலகம், இந்தியா, சீனா, ரஷ்யா, இன்னும் தமிழர் பிரச்சனை தெளிவுறாத நாடுகளில் கிளைகள் திறக்கப்பட்டு, சட்ட பூர்வமாக எங்கள் நிலைப்பாடு, இழைக்கப்பட்ட அநீதி, வரலாறு, தேசியம் அந்த நாட்டு ராஜதந்திரிகளுக்கு கடத்தப்படவேண்டும். விலைபோகாத ஒரு கட்டமைப்பு உருவாக்கப்பட்டு, தாயக அரசியல்வாதிகள் உள்ளடங்கலாக ஒரு நிகழ்ச்சி நிரல் தயாரிக்கப்பட்டு ஒரு கட்டமைக்கப்பட்ட அரசியல் நகர்வுகள் மேற்கொள்ளவேண்டும். நீண்ட கால நோக்கில் திட்டமிடப்பட்டு நகர்வேண்டும். இதுவே புலம்பெயர் மக்களால் தாயகத்துக்கு பொருளாதர உதவி தவிர்த்து செய்யக்கூடிய அரசியல் உதவி. சுருங்ககூறின் 1000 அன்ரன் பாலசிங்கள் 100 நாட்டில் தேவை. 🤭
  21. அண்ணே இது இன்னொரு பரிமாணத்தை என் மனதில் தோற்றுவிக்கிறது. உண்மையில் தாயக மக்கள் என்னதான் நினைக்கிறார்கள் என்பதை அறிய சுயாதீன தேசியம்சார் ஊடக அமைப்பு ஒன்றை அமைக்கவேண்டும். பலவேறு தரப்பிடம், பிரதேசம், பொருளாதாரம், கல்வியறிவு, முன்னாள் போராளிகள், போராளி குடும்பங்கள், புலி எதிர்ப்பாளர்கள், மதம், நகரம், கிராமம், புலம்பெயர்ந்தோர், பல்வேறு தொழில் சார்ந்தோர், சிங்கள பகுதியில் வாழ்வோர், என பல்வேறு samples இடம் ஒரு கேள்விக்கொத்தாக தகவல் திரப்படவேண்டும். இதற்கு கலந்துரையாடல், workshops போன்றவற்றையும் பயன்படுத்தலாம். Freelancer ஊடகவியலாளர்கள், தேசிய பற்றாளர்களை கொண்டு திரட்டப்பட்டும் தகவலை அடிப்படையாக வைத்து பயணிக்கவேண்டிய திசை ஆற்றப்படவேண்டிய களப்பணி என்பவற்றை தீர்மானிக்கலாம். இது ஒரு மக்கள் சக்தியூடாக நடாத்தப்படவேண்டும். ஊகங்களை விட தரவுகள் முடிவுகளை ஆணித்தரமாக்கும்.
  22. நன்றாக எழுதி இருக்கிறீங்கள் ரஞ்சித் அண்ணே. நான் இதில் மேலதிகமாக ஒன்றை சொல்ல விரும்புகிறேன். ஒரு எழுச்சிமிகு போராட்டத்தின் தோல்வியும் மக்களை விரக்தியுற அல்லது சோம்பல் நிலைக்கு தள்ளியுள்ளது. போராட்டத்தின் முறைதான் மாறியுள்ளது போரிடும் குணம் இன்னும் விரியமாகவேண்டும் என்ற எண்ணம் விதைக்கப்படவேண்டும். உதாரணமாக திலீபனின் நினைவுநாளை கொண்டாட முடியவில்லை என்றால் சிறையை நிரப்பவேண்டும். 20 000 மக்களை ஒன்றாக திரட்டினால் பொலீசால் சட்டத்தால் ஒன்றுமே செய்யமுடியாது. துணிந்து செய்ய நல்ல தலைமை வேணும், அவரை நம்பும் மக்கள் பலம் வேண்டும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.