Jump to content

முதல்வன்

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    655
  • Joined

Everything posted by முதல்வன்

  1. அருமையான படங்களும் வசன நடையும்
  2. ஓம். ஒரு காலத்தில் வெள்ளவத்தையில் gangs சந்திக்கும் இடம்
  3. நன்றி நுணா பதிவிற்கு. சிந்துசையின் அண்மைய காணொளி ஒன்று பார்த்தேன். பெற்றோருக்கு பெருமை சேர்த்த பிள்ளை. ஒருகணம் ஜெயமண்ணையின் முகமும் அவரின் பொறுமையும் கண்முன்னே வந்து போகிறது. புலனாய்வுப்பிரிவால் நகங்கள் புடுங்கப்பட்ட பின்னரும் நாட்டுக்காக எந்த தயக்கமும் இல்லாமல் போராடுவது மண்ணின் மீதான பற்றை எடுத்தியம்புகிறது.🥲 வீரவணக்கம்
  4. நிராஜுக்குத் தெரியாவிட்டால் 1-9 சங்கீதனையும் இவரையும் (தயாபரனையும்) போட்டு குழப்பாமல் ஆவது இருக்கலாம். வரலாறு சொல்லப்படத்தான் வேண்டும், உண்மைகளை வெளிக்கொணரத்தான் வேண்டும், அதற்காக நீங்கள் உங்களைப் புகழ்வதையும், உருட்டுகளையும் தவிருங்கள், இவற்றை வைத்துத்தான் சேரமான் தங்கச்சியை உண்மை என்று நிறுவ தலைப்படுகிறார்.
  5. உங்களுக்கான பதில் இந்த காணொளியில் கிடைக்கலாம் @goshan_che
  6. தந்தையாரின் பிரிவினால் துயருற்றிருக்கும் யாயினிக்கும் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல்கள்
  7. சுவிஸ் வேற சுவீடன் வேற என்று யாராவது வீரகேசரிக்கு சொல்லிவிடுங்கள்.
  8. மக்மிலன் புத்தக கடையும் ஞாபகத்தில் வந்து போகிறது. பின்னேரப்பேப்பருக்கு அடிபட்டு நின்று வாங்கிப்போய் கொடுப்பது உறவினர் மத்தியில் ஒரு கதாநாயக விம்பத்தை தோற்றுவித்து இருந்தது.
  9. இந்த வீடியோவை நீக்கும் அளவுக்கு அழுத்தமா. நல்லாத்தான் இயங்குகிறார்கள் போல. @நன்னிச் சோழன் உங்கள் அடையாளத்திலும் பாதுகாப்பிலும் மேலும் கவனம் எடுங்கள். உணர்ச்சிவசப்படாதீர்கள். எழுதவதற்கு முன் பலமுறை சிந்தியுங்கள்.
  10. @வைரவன் @நன்னிச் சோழன் இணைப்புக்கும் பகிர்வுக்கும் நன்றி. நான் ஏற்கனவே திண்ணையில் எனது தெளிவான நிலைப்பாட்டை கூறி இருந்தேன். தங்கச்சி இல்லை இதனால் நான் துரோகியாக்கப்படுவேனாகில் மகிழ்வாக துரோகியாக வாழ்வேன். தங்கச்சி மதிமகளாக இதற்கு முதலான சண்டையில் கூட கையில் காயமடைந்து இருந்தார். இப்போ தங்கச்சி என்று கொண்டுவருபவர்களையும் அவர்களை காவி வருபவர்களினதும் உள்நோக்கங்கள் உடைபடும்போது அதுவும் மறைந்துபோகும். இதை நான் ஒரு நேர்மறை விளைவாகவே பார்க்கிறேன். மக்களுக்கு யாரை நம்புவது என்பதை இவர்களின் சதித்திட்டமே தோலுரித்துக்காட்ட போகிறது. வரலாறு தரப்போகும் பதிலுக்கு இவர்கள் எங்கே போய் ஒழியப்போகிறார்கள். யார் யாரை காட்டிக்கொடுக்கப்போகிறார்கள் என்பதை அறிய ஆவலாக உள்ளேன். @நன்னிச் சோழன் குகா அக்கா (கடல் புறா பன்னிருவேங்கைகளில் ஒருவரான கரனின் மனைவி, பின்னர் கரனின் சகோதரரான கேணல் சங்கர் அண்ணையின் மனைவி)மதிவதனி அக்காவின் தோழி. இவர்களின் நட்பை பற்றி பல்வேறு விமர்சனங்கள் வந்திருந்தாலும் அவர்கள் நட்பை கைவிடவில்லை. ஜனனி அக்கா, குகா அக்கா மதிவதனி அக்கா இவர்களின் நட்பும் புரிதலும் தலைமுறைகளாக தொடர்ந்தன.
  11. அது மட்டுமல்ல விமான நிலைய பாதுகாப்பு எல்லை வரை பாதுகாப்பு படையினரால் கொண்டுவந்து விடப்பட்டார். அங்கிருந்து தப்பி எல்லையை சுற்றிக்காட்டும் உல்லாச பயணிகளுக்கான குழுவுடன் சேர்ந்து எல்லை வரை சென்று இருக்கிறார். மீன் துள்ளி எண்ணைச்சட்டியில் இருந்து அடுப்புக்குள் விழுந்த கதை தான்.
  12. போட்டியில் வெற்றி பெற்ற சுவி ஐய்யாவுக்கு வாழ்த்துக்கள். இரண்டாம் மூன்றாம் இடங்களைப்பிடித்த ஏராளன் மற்றும் பிரபாவுக்கும் வாழ்த்துகள். போட்டியை திறம்பட நடாத்திய கிருபனுக்கு நன்றிகள். போட்டியில் கலந்துகொண்ட எல்லா கள உறவுகளுக்கும் வாழ்த்துகள். கள உறவுகளை போட்டியில் பங்குபெற ஊக்கமளித்த பையனுக்கு நன்றிகள்.
  13. இந்த புள்ளிகள் அடிப்படையிலாவது நான் யாரையும் பிரதி பண்ணவில்லை என்பது தெளிவாக தெரிகிறது மக்களே 🤣
  14. # Question Prediction 1) மார்ச் 31, வெள்ளி 19:30 குஜராத் டைட்டன்ஸ் எதிர் சென்னை சூப்பர் கிங்ஸ் - அஹமதாபாத் CSK 2) ஏப்ரல் 01, சனி 15:30 பஞ்சாப் கிங்ஸ் எதிர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - மொஹாலி KKR 3) ஏப்ரல் 01, சனி 19:30 லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் எதிர் டெல்லி கேப்பிட்டல்ஸ் - லக்னோ DC 4) ஏப்ரல் 02, ஞாயிறு 15:30 சன்ரைசர்ஸ் ஐதராபாத் எதிர் ராஜஸ்தான் ராயல்ஸ் - ஐதராபாத் RR 5) ஏப்ரல் 02, ஞாயிறு 19:30 ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் எதிர் மும்பை இந்தியன்ஸ் - பெங்களூரு RCB 6) ஏப்ரல் 03, திங்கள் 19:30 சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் - சென்னை CSK 7) ஏப்ரல் 04, செவ்வாய் 19:30 டெல்லி கேப்பிட்டல்ஸ் எதிர் குஜராத் டைட்டன்ஸ் - டெல்லி DC 😎 ஏப்ரல் 05, புதன் 19:30 ராஜஸ்தான் ராயல்ஸ் எதிர் பஞ்சாப் கிங்ஸ் - குவஹாத்தி PBKS 9) ஏப்ரல் 06, வியாழன் 19:30 கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - கொல்கத்தா RCB 10) ஏப்ரல் 07, வெள்ளி 19:30 லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் எதிர் சன்ரைசர்ஸ் ஐதராபாத் - லக்னோ SRH 11) ஏப்ரல் 08, சனி 15:30 ராஜஸ்தான் ராயல்ஸ் எதிர் டெல்லி கேப்பிட்டல்ஸ் - குவஹாத்தி DC 12) ஏப்ரல் 08, சனி 19:30 மும்பை இந்தியன்ஸ் எதிர் சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை CSK 13) ஏப்ரல் 09, ஞாயிறு 15:30 குஜராத் டைட்டன்ஸ் எதிர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - அஹமதாபாத் KKR 14) ஏப்ரல் 09, ஞாயிறு 19:30 சன்ரைசர்ஸ் ஐதராபாத் எதிர் பஞ்சாப் கிங்ஸ் - ஐதராபாத் PBKS 15) ஏப்ரல் 10, திங்கள் 19:30 ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் எதிர் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் - பெங்களூரு RCB 16) ஏப்ரல் 11, செவ்வாய் 19:30 டெல்லி கேப்பிட்டல்ஸ் எதிர் மும்பை இந்தியன்ஸ் - டெல்லி DC 17) ஏப்ரல் 12, புதன் 19:30 சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர் ராஜஸ்தான் ராயல்ஸ் - சென்னை CSK 18) ஏப்ரல் 13, வியாழன் 19:30 பஞ்சாப் கிங்ஸ் எதிர் குஜராத் டைட்டன்ஸ் - மொஹாலி PBKS 19) ஏப்ரல் 14, வெள்ளி 19:30 கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் சன்ரைசர்ஸ் ஐதராபாத் - கொல்கத்தா KKR 20) ஏப்ரல் 15, சனி 15:30 ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் எதிர் டெல்லி கேப்பிட்டல்ஸ் - பெங்களூரு RCB 21) ஏப்ரல் 15, சனி 19:30 லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் எதிர் பஞ்சாப் கிங்ஸ் - லக்னோ LSG 22) ஏப்ரல் 16, ஞாயிறு 15:30 மும்பை இந்தியன்ஸ் எதிர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - மும்பை KKR 23) ஏப்ரல் 16, ஞாயிறு 19:30 குஜராத் டைட்டன்ஸ் எதிர் ராஜஸ்தான் ராயல்ஸ் - அஹமதாபாத் GT 24) ஏப்ரல் 17, திங்கள் 19:30 ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் எதிர் சென்னை சூப்பர் கிங்ஸ் - பெங்களூரு CSK 25) ஏப்ரல் 18, செவ்வாய் 19:30 சன்ரைசர்ஸ் ஐதராபாத் எதிர் மும்பை இந்தியன்ஸ் - ஐதராபாத் SRH 26) ஏப்ரல் 19, புதன் 19:30 ராஜஸ்தான் ராயல்ஸ் எதிர் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் - ஜெய்பூர் RR 27) ஏப்ரல் 20, வியாழன் 15:30 பஞ்சாப் கிங்ஸ் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - மொஹாலி RCB 28) ஏப்ரல் 20, வியாழன் 19:30 டெல்லி கேப்பிட்டல்ஸ் எதிர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - டெல்லி DC 29) ஏப்ரல் 21, வெள்ளி 19:30 சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர் சன்ரைசர்ஸ் ஐதராபாத் - சென்னை CSK 30) ஏப்ரல் 22, சனி 15:30 லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் எதிர் குஜராத் டைட்டன்ஸ் - லக்னோ LSG 31) ஏப்ரல் 22, சனி 19:30 மும்பை இந்தியன்ஸ் எதிர் பஞ்சாப் கிங்ஸ் - மும்பை PBKS 32) ஏப்ரல் 23, ஞாயிறு 15:30 ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் எதிர் ராஜஸ்தான் ராயல்ஸ் - பெங்களூரு RCB 33) ஏப்ரல் 23, ஞாயிறு 19:30 கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா CSK 34) ஏப்ரல் 24, திங்கள் 19:30 சன்ரைசர்ஸ் ஐதராபாத் எதிர் டெல்லி கேப்பிட்டல்ஸ் - ஐதராபாத் DC 35) ஏப்ரல் 25, செவ்வாய் 19:30 குஜராத் டைட்டன்ஸ் எதிர் மும்பை இந்தியன்ஸ் - அஹமதாபாத் MI 36) ஏப்ரல் 26, புதன் 19:30 ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் எதிர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - பெங்களூரு RCB 37) ஏப்ரல் 27, வியாழன் 19:30 ராஜஸ்தான் ராயல்ஸ் எதிர் சென்னை சூப்பர் கிங்ஸ் - ஜெய்பூர் CSK 38) ஏப்ரல் 28, வெள்ளி 19:30 பஞ்சாப் கிங்ஸ் எதிர் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் - மொஹாலி PBKS 39) ஏப்ரல் 29, சனி 15:30 கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் குஜராத் டைட்டன்ஸ் - கொல்கத்தா KKR 40) ஏப்ரல் 29, சனி 19:30 டெல்லி கேப்பிட்டல்ஸ் எதிர் சன்ரைசர்ஸ் ஐதராபாத் - டெல்லி DC 41) ஏப்ரல் 30, ஞாயிறு 15:30 சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர் பஞ்சாப் கிங்ஸ் - சென்னை CSK 42) ஏப்ரல் 30, ஞாயிறு 19:30 மும்பை இந்தியன்ஸ் எதிர் ராஜஸ்தான் ராயல்ஸ் - மும்பை MI 43) மே 01, திங்கள் 19:30 லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - லக்னோ RCB 44) மே 02, செவ்வாய் 19:30 குஜராத் டைட்டன்ஸ் எதிர் டெல்லி கேப்பிட்டல்ஸ் நரேந்திர மோடி ஸ்டேடியம் அஹமதாபாத் DC 45) மே 03, புதன் 19:30 பஞ்சாப் கிங்ஸ் எதிர் மும்பை இந்தியன்ஸ் - மொஹாலி PBKS 46) மே 04, வியாழன் 15:30 லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் எதிர் சென்னை சூப்பர் கிங்ஸ் - லக்னோ CSK 47) மே 04, வியாழன் 19:30 சன்ரைசர்ஸ் ஐதராபாத் எதிர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ஐதராபாத் KKR 48) மே 05, வெள்ளி 19:30 ராஜஸ்தான் ராயல்ஸ் எதிர் குஜராத் டைட்டன்ஸ் - ஜெய்பூர் GT 49) மே 06, சனி 15:30 சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர் மும்பை இந்தியன்ஸ் - சென்னை CSK 50) மே 06, சனி 19:30 டெல்லி கேப்பிட்டல்ஸ் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - டெல்லி RCB 51) மே 07, ஞாயிறு 15:30 குஜராத் டைட்டன்ஸ் எதிர் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் நரேந்திர மோடி ஸ்டேடியம் அஹமதாபாத் GT 52) மே 07, ஞாயிறு 19:30 ராஜஸ்தான் ராயல்ஸ் எதிர் சன்ரைசர்ஸ் ஐதராபாத் - ஜெய்பூர் SRH 53) மே 08, திங்கள் 19:30 கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் பஞ்சாப் கிங்ஸ் - கொல்கத்தா KKR 54) மே 09, செவ்வாய் 19:30 மும்பை இந்தியன்ஸ் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - மும்பை RCB 55) மே 10, புதன் 19:30 சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர் டெல்லி கேப்பிட்டல்ஸ் - சென்னை CSK 56) மே 11, வியாழன் 19:30 கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் ராஜஸ்தான் ராயல்ஸ் - கொல்கத்தா KKR 57) மே 12, வெள்ளி 19:30 மும்பை இந்தியன்ஸ் எதிர் குஜராத் டைட்டன்ஸ் - மும்பை MI 58) மே 13, சனி 15:30 சன்ரைசர்ஸ் ஐதராபாத் எதிர் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் - ஐதராபாத் SRH 59) மே 13, சனி 19:30 டெல்லி கேப்பிட்டல்ஸ் எதிர் பஞ்சாப் கிங்ஸ் - டெல்லி DC 60) மே 14, ஞாயிறு 15:30 ராஜஸ்தான் ராயல்ஸ் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - ஜெய்பூர் RCB 61) மே 14, ஞாயிறு 19:30 சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - சென்னை CSK 62) மே 15, திங்கள் 19:30 குஜராத் டைட்டன்ஸ் எதிர் சன்ரைசர்ஸ் ஐதராபாத் நரேந்திர மோடி ஸ்டேடியம் அஹமதாபாத் GT 63) மே 16, செவ்வாய் 19:30 லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் எதிர் மும்பை இந்தியன்ஸ் - லக்னோ MI 64) மே 17, புதன் 19:30 பஞ்சாப் கிங்ஸ் எதிர் டெல்லி கேப்பிட்டல்ஸ் - தர்மசாலா DC 65) மே 18, வியாழன் 19:30 சன்ரைசர்ஸ் ஐதராபாத் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - ஐதராபாத் RCB 66) மே 19, வெள்ளி 19:30 பஞ்சாப் கிங்ஸ் எதிர் ராஜஸ்தான் ராயல்ஸ் - தர்மசாலா PBKS 67) மே 20, சனி 15:30 டெல்லி கேப்பிட்டல்ஸ் எதிர் சென்னை சூப்பர் கிங்ஸ் - டெல்லி CSK 68) மே 20, சனி 19:30 கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் - கொல்கத்தா KKR 69) மே 21, ஞாயிறு 15:30 மும்பை இந்தியன்ஸ் எதிர் சன்ரைசர்ஸ் ஐதராபாத் - மும்பை SRH 70) மே 21, ஞாயிறு 19:30 ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் எதிர் குஜராத் டைட்டன்ஸ் - பெங்களூரு RCB 71) ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் முன்னணியில் வரும் நான்கு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 8 புள்ளிகள் கிடைக்கலாம்) CSK CSK DC DC GT KKR KKR LSG MI PBKS RR RCB RCB SRH 72) முதல் நான்கு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. (அதிக பட்சம் 10 புள்ளிகள் கிடைக்கலாம்) #1 - ? (4 புள்ளிகள்) CSK #2 - ? (3 புள்ளிகள்) RCB #3 - ? (2 புள்ளிகள்) KKR #4 - ? (1 புள்ளி) DC 73) ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 2 புள்ளிகள் வழங்கப்படும்! SRH 74) Date Day 19:30 Stadium Qualifier 1 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்) Qualifier 1: 1st placed team v 2nd placed team CSK 75) Date Day 19:30 Stadium Eliminator போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்) Eliminator: 3rd placed team v 4th placed team KKR 76) Date Day 19:30 Stadium Qualifier 2 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்) Qualifier 2: Loser of Qualifier 1 v Winner of Eliminator RCB 77) Final போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (5 புள்ளிகள்) Final: Winner of Qualifier 1 v Winner of Qualifier 2 CSK 78) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்) CSK 79) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்) SRH 80) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் (Orange cap) பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) Ruturaj gaikwad 81) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் (Orange cap) எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 80 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) CSK 82) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) Umran malik 83) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 82 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) SRH 84) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள் ) Jos Buttler 85) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 84 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) RR 86) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) Umran malik 87) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 86 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) SRH 88) இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the Series) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) Ruturaj Gaikwad 89) இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the season) எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 88 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) CSK 90) இந்த தொடரில் Fair Play Award யை பெறும் அணி எது? (3 புள்ளிகள்) CSK
  15. நன்றி பையன். இன்றைக்கு அலுவலக நேரத்திலாவது பதிலை பதிகிறேன்.
  16. இந்த ரஷ்ய வாதமும் எதிர் வாதமும் திரிக்கு திரி தொடர்கின்றன. தனிமனித சுய தன்னிலை முன்னிறுத்தல்களாக மாறி, தனி மனித தாக்குதல்களாகவும் தொடர்கின்றன. சண்டைகளுக்கும் உயிரிழப்புகளுக்கும் அப்பால் எமது போராட்ட நிலை சார்ந்தும் ரஷ்யாவுக்காகவும் மேற்குலகிற்காகவும் வளைந்து நெளிந்து கருத்துகளை வைக்க பழகிக்கொண்டோம். பல அறியப்படாத தகவல்களும், தொடர்களும் இந்த கருத்தாடல்களின் பக்கவிளைவாக தோன்றினாலும், ஆழமாக ஒரு பகை உணர்வையும், வெல்ல வேண்டும் அல்லது தோற்கடிக்கவேண்டும் என்பதற்காக யாரையும் தூற்றவும், தமிழ்தேசியத்தை விலைபேசவும், எந்த நிலைக்கும் போக தயாராக மாறும் மனநிலைக்கு நாங்கள் தள்ளப்பட்டுவிட்டோம் என்று கொஞ்சம் நிதானித்து ஆறுதலாக சிந்தித்தால் புரியும். ஒரு வளமான தமிழ்தேசியத்தின் தமிழர் உரிமையில் ஒற்றுமையாக இருக்கவேண்டியதை தாண்டி ஒருவரை ஒருவர் வசைபாடுவதில், உள்ளே ஊடுருவியவர்களுக்கு வேலை வைக்காமல் ஒவ்வொரு பக்கம் ஆட்சேர்த்து அவர்களை நம்பும் அளவுக்கு மாறிவிட்டோம். மீண்டும் ஒருமுறை நின்று நிதானித்து சிந்திப்போம்.
  17. இசை 37-38 வருடங்களை நொடியில் பின்னகர்த்திவிடுகிறது. பரதன் காலத்து நிதர்சனத்தில் புலிகளின் பயிற்சி காணொளிக்கு பின்னணியில் ஒலிக்கும் இசைக்கு சொந்தக்காரரை இப்போது தெரிந்துகொண்ட்டேன். நன்றி @பெருமாள்
  18. படத்தின் இறுதியில் தந்தை யார் என்று மகளிடம் சொல்ல ஆசைப்படும் தகப்பன், உருவ ஒற்றுமை என்ற காரணத்தால் மறைப்பது இந்த படத்தின் அதி உச்ச உணர்வுபூர்வமான காட்சி.
  19. முதலில் நேற்றைய தினம் ஆஸ்கர் விருது பெற்றிருக்கின்ற நம்மூர் மரகதமணிக்கு அந்த ஊர் கீரவாணி க்கு எனது மனம் நிறைந்த வாழ்த்துக்கள் . பூங்கொத்து. அவரது அழகன் திரைப்படத்தில் வரும் எல்லா பாடல்களும் எனக்கு மிக மிக பிடித்தவை. குறிப்பாக “ஜாதி மல்லி பூச்சரமே.” இப்பதிவு கீரவாணி மற்றும் ஏ ஆர் ரகுமானை குறைத்து மதிப்பிடுவதற்கான பதிவு அல்ல. இந்த சமயத்தில் இசைஞானி இளையராஜாவோடு ஒப்பீடுகளை நிகழ்த்தும் சமூக வலைதள வம்பர்களுக்கான பதில் மட்டுமே. 🛑 எங்கள் பள்ளி வாழ்க்கையில் இறுதியில்தான் ஏ ஆர் ரகுமான் வருகை மற்றும் அவரது தொடர் வெற்றிகள் நிகழத் தொடங்கியிருந்தன. ஆனால் நாங்கள் எல்லாம் இளையராஜாவின் தீவிர ரசிகர்கள். ஏ ஆர் ரகுமான் வெறும் தொழில்நுட்பத்தை பயன்படுத்திக் கொண்டு வேடிக்கை காட்டுவதாக தான் நாங்கள் அப்போது தீவிரமாக எதிர்த்தோம். 90 களின் தொடக்கத்தில் ஹெச் எம் வி நிறுவனம் ராஜாவின் தொடக்க கால 70களின் பாடல் தொகுப்பு ஒன்றினை நான்கு கேசட்டுகளாக வெளியிட்டு இருந்தது. ஒரு அபூர்வமான தொகுப்பு அது. “அன்னக்கிளியே உன்னைத் தேடுதே ,சின்னக் கண்ணன் அழைக்கிறான், கண்ணன் ஒரு கைக்குழந்தை, வசந்தகால கோலங்கள், வா பொன்மயிலே, மயிலே உன் தோகை எங்கே, என அபூர்வ பாடல்கள் நிறைந்த அந்த தொகுப்பு என்னைப் போன்ற ராஜாவின் அதிதீவிர ரசிகர்களுக்கு பெரும் பொக்கிஷம். ஆனால் ஏ ஆர் ரகுமான் வருகை மற்றும் அவருக்கு கிடைத்த தேசிய விருது அவருக்கு அப்போது கிடைத்த ஊடக வெளிச்சங்கள் எதுவுமே எங்களுக்கு அப்போது எங்களுக்கு மகிழ்ச்சியை தரவில்லை. பாலச்சந்தர் மணிரத்தினம் என ஏ ஆர் ரகுமான் பின்னால் அணிவகுத்து நின்றவர்களும் அதன் நடுவில் இழை ஓடிய அரசியலும் இளையராஜாவை எங்களுக்கு இன்னும் நெருக்கமானவராக காட்டியது. அது ஒரு வகையான புரிதல் கோளாறு என்பதை கொள்ள சில வருடங்கள் தேவைப்பட்டாலும் இன்றளவும் இளையராஜாவிற்கு மிஞ்சியவர்கள் யாரும் இல்லை என்பதில் எங்கள் தலைமுறையே உறுதியாக இருக்கிறது. அதற்கு மிக முக்கியமான காரணம் இத்தனை வருட எங்களது வாழ்க்கையில் காலை மாலை சூரிய உதயம் நிலவு இரவு பசி உறக்கம் காதல் காமம் தனிமை தந்தைமை தாய்மை கொண்டாட்டங்கள் போன்ற தவிர்க்க முடியாத இந்த வாழ்வின் ஒரு அங்கம் தான் இளையராஜாவின் இசை. எங்கள் தலைமுறையில் யாரேனும் ஒருவரை சந்தித்து உங்கள் வாழ்க்கையைப் பற்றி அதில் நிகழ்ந்தவை குறித்து நீங்கள் கோர்வையாக சொல்ல முடியுமா என கேள்வி எழுப்பினார்கள் என்றால் அவருக்கு பல இளையராஜா பாடல்கள் நினைவுக்கு வருவது இயல்பு. என் பதின் பருவ நண்பன் ஒருவன் “தெற்கத்திக் கள்ளன்”என்ற திரைப்படத்தில் வரும் “ராதா அழைக்கிறாள் ..”என்கிற பாடலை ஒரே நாளில் நூற்றுக்கணக்கான முறை கேட்டுக் கொண்டிருந்ததும் அவன் ராதா என்ற பெண்ணை விரும்பி கொண்டிருந்ததும் தற்செயலானது அல்ல என்பதை நாங்கள் அறிவோம். அந்தப் பெயருள்ள அந்தப் பெண்ணை விரும்பினானா அல்லது அந்தப் பாடலுக்காக அந்த பெண்ணை விரும்பினானா என்றெல்லாம் இதுவரையில் அந்த காதலில் நிறைய கேள்விகள் இருக்கின்றன.அதே போல நெல்லை மாவட்டத்தில் எனது கல்லூரி வாழ்க்கையில் மிக நெருங்கிய நண்பன் ஒருவன் ஆனந்த ராகம் திரைப்படத்தில் வரும் "ஒரு ராகம் பாடலோடு ..”என்ற பாடலை ஒரு கேசட் முழுக்க பதிவு செய்து வைத்துக் கொண்டு மீண்டும் கண் கலங்க அதைக் கேட்டுக் கொண்டு கிறங்கி கிடந்ததெல்லாம் எங்கள் தலைமுறையில் தெருவுக்குத் தெரு நடக்கின்ற மிக மிக சாதாரண சம்பவங்கள். எனது பள்ளிக்காலத்தில் எனது நண்பன் ஜோஸ்வா உடன் நான் எங்கள் ஊரில் இருக்கின்ற புராதான சர்ச்சிக்கு போவது வழக்கம். அந்த சர்ச்சில் தேவ கருணை என்கின்ற ஒரு சிஸ்டர் வேலை பார்த்து வந்தார். தேவா என்று மற்றவர்களால் அழைக்கப்பட்ட அந்த சிஸ்டர் ஒரு நாள் எங்கள் வீட்டிற்கு வருகை தந்த போது என் வீட்டு நூலகத்தை அவருக்கு அழைத்து போய் காட்டினேன். என் மிகப்பெரிய கேசட்சேகரிப்பை பார்த்து வியந்த அவர் நல்ல பாடல் ஏதோ ஒன்றை ஒளிபரப்பம்படி கேட்டுக் கொள்ள நான் "அறுவடை நாள் "திரைப்படத்தில் வருகிற "தேவனின் கோவில் மூடிய நேரம் .."என்கிற பாடலை அவருக்கு ஒளிபரப்பி காட்டினேன். நான் ஒரு சோக சுமைதாங்கி என்கின்ற பாடல் வரிகள் வரும் அந்த நொடியில் அவரது கண்கள் கலங்கிவிட்டன. முடிந்தவுடன் என்னிடம் எதுவும் சொல்லாமல் எழுந்து போன அவரை அதன் பின் நான் எங்குமே சந்திக்கவில்லை. இப்படியாக நிறைய மனிதர்கள் நிறைய வாழ்க்கை. இளையராஜா என்கின்ற ஒரு தனி மனிதன் வாழ்நாட்கள் முழுக்க ததும்பி நிரம்பி எங்களை முழுகடித்துக் கொண்டிருந்தான். 2000 களின் தொடக்க காலத்தில் இருந்து நான் திரைப்படப் பாடல்களில் இருந்து நானெல்லாம் வாழ்வின் சூழல்களால் அந்நியப்பட்டு விலகிப் போன போது ஏறக்குறைய ராஜாவும் அமைதியாகி இருந்தார். நீண்ட காலத்திற்கு பிறகு ஒரு "காட்டு மல்லி"பூத்திருக்கிறது. நடுவில் நகர்ந்த நாட்கள் பற்றி அந்தக் காட்டுமல்லிக்கு எந்தக் கவலையும் இல்லை. போன்ற இளையராஜாவின் அதிதீவிர ரசிகர்களுக்கு அந்தக் "காட்டுமல்லி " குறித்து எந்த பெருமிதமும் இல்லை. ஏனென்றால் இதே போன்று பல நூற்றுக்கணக்கான பாடல்களை நாங்கள் எங்கள் தலைமுறையில் அனுபவித்து சுவைத்து ஆழ்ந்து மூழ்கி அழுது சிரித்து கலங்கி நெகிழ்ச்சியில் நிறைந்து இருக்கிறோம். அது கூட சமூக வலைதளங்களில் சில உரையாடல்களை பார்க்கும் போது உண்மையில் பரிதாபமாக இருந்தது. கீரவாணி ,ஏ ஆர் ரகுமான் போன்று ஆஸ்கர் விருது வாங்கியவர்கள் போல இளையராஜா ஏன் ஆஸ்கர் விருது வாங்கவில்லை என்பதான கேள்விகள் "உன் கண்களுக்கு உலகிலேயே அழகான உன் தாய் ஏன் உலக அழகியாக மாறவில்லை ...?" என்பது போல அபத்தமாக இருந்தது. ரகுமான் ஆஸ்கர் விருது வாங்கிய "ஜெய் ஹோ " பாடலும் கீரவாணி இன்று ஆஸ்கர் விருது வாங்கிய "நாட்டுக்குத்து "பாடலும் மிகச்சாதாரணமாக நாம் கடந்து போனவை. நமக்குள் சிறிதளவு அதிர்வை கூட அந்தப் பாடல்கள் ஏற்படுத்தவில்லை என்பது நிஜம். விருதுகள் அதற்கு பின்னால் இருக்கின்ற வணிகங்கள் இவைகளைப் பற்றி பேசுவது என் வேலை அல்ல. ஆனால் வணிகங்களுக்கெல்லாம் அப்பாற்பட்டு , இளையராஜாவின் அரசியல் அபத்தங்களுக்கெல்லாம் அப்பாற்பட்டு ராஜாவின் இசை என் ஆன்மாவை எப்போதும் உலுக்கிக் கொண்டே இருக்கிறது. என்றாவது பின் இரவில் உங்களுக்கு விழிப்பு ஏற்படும்போது கோபுர வாசலிலே என்ற திரைப்படத்தில் வரும் தாலாட்டும் பூங்காற்று என்கின்ற ஜானகி பாடலை ஒரே ஒரு முறை கேட்டுப் பாருங்கள். ஒரு கால எந்திரத்தில் சிக்கிக்கொண்ட கைதி போல நீங்கள் சுழன்று அடித்து இறந்த காலத்திற்கு தூக்கி அடிக்கப்படுவீர்கள் என்பது உண்மை. இது போன்ற அனுபவங்களை மற்றவர்களின் எந்த பாடல்களும் தருவதில்லை என்கிற கேள்விகளுக்கெல்லாம் இளையராஜாவிடம் கூட பதில் இல்லை தான். சமீபத்தில் விமான பயணத்தில் 18 ஆயிரம் அடிக்கு மேல் பறந்து கொண்டிருந்த ஒரு தருணத்தில் "அலைகள் ஓய்வதில்லை "படத்தின் "புத்தம் புது காலை.." என்னை அப்படியே தூக்கிச் சென்று மன்னார்குடி வீதிகளின் அதிகாலை பனிக்குளிரோடு நிற்க வைத்தது. தமிழனாகிய நான் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் இளையராஜா பாடல்கள் மூலமாகத்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் என்பதை உணர்ந்த தருணம் அது. என்னை போன்ற பல கோடி தமிழர்களும் அப்படித்தான் வாழ்கிறார்கள் என்பதும் எனக்குத் தெரியும். எங்களுக்கு இது போதும். இது மட்டும் போதும். விருதுகளை அவரவர் வைத்துக் கொள்ளட்டும். அதற்கு எம் வாழ்த்துக்கள். ஆனால்… இசைஞானி இளையராஜா எமக்கான விருது. ❤️ மணி செந்தில். குறிப்பு : படித்ததும் சாதாரணமாக கடந்து செல்ல முடியவில்லை. இணைத்துள்ளேன்
  20. புட்டினுக்கு பின்னால் கறுப்பு உடை அணிந்த ஒரு சாதாரண பொதுமகன் 2 படங்களில் இருப்பதை அவதானித்தீர்களா .?
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.