Everything posted by குமாரசாமி
-
ஹமாஸ் ஆயுதக்குழுவின் தலைவர் சுட்டுப் படுகொலை!
இன்றைய காலகட்டத்தில் வலதுசாரி,இடதுசாரி கொள்கைகளைவிட போர் இல்லாத சூழலையே உலகமக்கள் விரும்புகின்றார்கள்.எனக்கு டொனால்ட் ரம்பின் போக்கை பார்த்தால் இனவெறி பிடித்தவராக தெரியவில்லை. எல்லா வெள்ளைகளும் இனவெறி பிடித்தவர்களாக இருந்தால் நானோ நீங்களோ மேற்குலகில் வாழவே முடியாதல்லவா? நிற்க.... தனி ஈழம் வேண்டும் என்பதற்காக நான் இங்கே அரசியல் பேசவில்லை. அதை விட தனி ஈழம் சாத்தியப்படாத விடயம் என்பது பல சந்தர்ப்பங்களில் பல அரசியல் நிலைகள் உணர்த்தி விட்டு சென்றுவிட்டன என நான் நினைக்கின்றேன். அது சரி... உலகில் யார் அல்லது அமெரிக்காவில் யார் ஆட்சிசெய்தால் தமிழீழம் கிடைக்கும் என நினைக்கின்றீர்கள்?
-
மக்கள் போராட்டத்தால்; வங்கதேசத்தை விட்டு வெளியேறிய ஷேக் ஹசீனா எங்கே?
இத நான் நேற்று யோசிச்சனான். கிட்டத்தட்ட டப்பிங் படம் பார்த்த பீலிங்....😄
-
மக்கள் போராட்டத்தால்; வங்கதேசத்தை விட்டு வெளியேறிய ஷேக் ஹசீனா எங்கே?
ஒரு நாளில் 1000 இந்துக்கள் கொல்லப்பட்டு விட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அந்த படங்களை இங்கே இணைக்க முடியாத கொடூரம். தேவாலயங்களையும் தாக்கி சேதமாக்குகின்றார்கள்.
-
மக்கள் போராட்டத்தால்; வங்கதேசத்தை விட்டு வெளியேறிய ஷேக் ஹசீனா எங்கே?
இந்த படங்களை நானாக பிரசுரிக்கவில்லை. உலக ஊடகங்களில் பரவியிருக்கின்றது. பட உதவி இத்தாலிய நண்பர். அவரும் யாழ்கருத்துக்கள உறவுதான்.
-
மக்கள் போராட்டத்தால்; வங்கதேசத்தை விட்டு வெளியேறிய ஷேக் ஹசீனா எங்கே?
பெரிய கூத்தெல்லாம் நடக்குது போல....
-
ஹமாஸ் ஆயுதக்குழுவின் தலைவர் சுட்டுப் படுகொலை!
ரம்ப் அவர்களால் அமெரிக்காவிற்கு நன்மையோ இல்லையோ..... அவர் வெற்றியீட்டினால் அடுத்த நான்கு வருடங்களுக்கு வெடி குண்டு வெடிக்காத உலகமாய் இருக்கும்.உலக மக்களும் நிம்மதி பெருமூச்சுடன் வாழ்வார்கள்.
-
மக்கள் போராட்டத்தால்; வங்கதேசத்தை விட்டு வெளியேறிய ஷேக் ஹசீனா எங்கே?
அமெரிக்கா அப்பிடி ஒரு நாளும் செய்யாது. நீதி நேர்மையாகத்தான் நடக்கும்.பலஸ்தீனா,உக்ரேனில் பார்க்கவில்லையா? 😂 அவர்களுக்கு தெரிந்ததெல்லாம் நீதி நேர்மை நியாயம். அமெரிக்காவால் தான் ஈழத்தமிழர்களுக்கும் விடிவு கிடைக்கும். 😎
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம். கோடி கோடியாக பணம், சொத்துக்கள் இருந்தாலும் நோய்நொடிகள் வந்தால்......எவ்வளவு பணம் கொடுத்காலும் எந்த கொம்பனாலும் மனிதனுக்குரிய இயற்கை வாழ்வை கொடுக்கவே முடியாது. இதைத்தான் சொல்வது தலைவிதி என.
-
மக்கள் போராட்டத்தால்; வங்கதேசத்தை விட்டு வெளியேறிய ஷேக் ஹசீனா எங்கே?
கடன் குடுத்த நன்றிக்கடனுக்காகவாவது சிரிலங்கா அதிபர் மனிசியை கூப்பிட்டு தன்னோட வைச்சிருக்க வேணும்.
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
ரஷ்யாவிற்கு என் முன்கூட்டிய வாழ்த்துகள்...🤣
-
5000 கிலோ மீற்றர் தொலைவில் இருந்து நுரையீரல் கட்டியை அகற்றிய சீன வைத்தியர்
இப்ப மட்டும் என்னவாம்? 😂
-
ஹமாஸ் ஆயுதக்குழுவின் தலைவர் சுட்டுப் படுகொலை!
Who’s the terrorist?
-
நானும் கவிதாயினியும்.....💕
நினைவாலே சிலை செய்து உனக்காக வைத்தேன் திருக்கோவிலே ஓடி வா .. முல்லைக்கு குழல் தந்த பெண்மைக்கு பெண்மை நீ பிள்ளைக்கு தோள் தந்த அன்னைக்கு அன்னை நீ..
-
தேர்தலுக்கு பின்னர் காணி, பொலிஸ் அதிகாரத்துடன் 13 அமுலாகும்; ஜனாதிபதி-சுமந்திரன் சந்திப்பில் இணக்கம்
ஆயுத போராட்டத்தை விரும்பாதவர், இன அழிப்பே நடக்கவில்லை என்று சத்தியவாக்கு கொடுத்தவர் ஏக்கிய ரட்ட/எக்கிய ரட்ட என்று சொன்னவர் கடந்த 10 வருடத்தில் புடுங்கியது என்னவாம் என கேட்டுச்சொல்லுங்கள்.....கேட்டுச்சொல்லுங்கள்...
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
இசை உலகை திரும்பி பார்க்க வைத்த இசையில் ஒன்று 🎹
-
சரத் பொன்சேகா - அமெரிக்க தூதர் கொழும்பில் திடீர் சந்திப்பு
அமெரிக்கா தனக்கு தேவையெண்டால் ஆரையும் எவரையும் தன்ரை கையுக்க போடும்.சரிவராட்டில் போட்டுத்தள்ளும். 😁
-
ரஸ்யாவினால் விடுதலை செய்யப்பட்ட பத்திரிகையாளர் உட்பட மூவர் அமெரிக்கா சென்றடைந்தனர் - விமானதளத்தில் காத்திருந்த பைடன் கமலா ஹரிஸ்
ரஷ்யா பக்கமும் அமெரிக்க பக்கமும் விடுதலை செய்யப்பட்ட கைதிகளை நாட்டின் அதிபர்கள் நேரே சென்று வரவேற்கின்றார்கள் என்றால்..... ஏதோவொரு பயங்கர டீலிங் நடந்து கொண்டிருக்கு எண்டு அர்த்தம்...... அப்பு செலென்ஸ்கி! எதுக்கும் பாத்து சுதானமாய் நடத்துக்க அப்பு......உங்கட தலையும் பிரளலாம்.😎
-
யாழ். தாளையடி கடல் நீர் சுத்திகரிப்பு நிலையம் ஜனாதிபதியினால் திறப்பு
கூரை ஏறி கோழி பிடிக்க தெரியாதவன் வானம் ஏறி வைகுண்டம் போனானாம் எண்ட மாதிரி.... குளம் குட்டைகளை தூர்வாரி மழைநீர் சேகரிக்காமல் மிசின் பூட்டி உப்புத்தண்ணிய நல்ல தண்ணி ஆக்கீனமாம். ஒருபக்கம் வெள்ளநிவாரணம் வேணும். இன்னொரு பக்கம் கடல்நீரை நன்னீராக்குதல்....செம காமெடி 🤪......😡
-
தேர்தலுக்கு பின்னர் காணி, பொலிஸ் அதிகாரத்துடன் 13 அமுலாகும்; ஜனாதிபதி-சுமந்திரன் சந்திப்பில் இணக்கம்
அதென்ன தேர்தலுக்கு பின்......? இப்படியான அறிக்கைகளை விடுபவர்கள் இப்போதும் பதவிகளுடன் இருக்கின்றார்கள்.இப்போது செய்யவில்லை என்றால் இனியும் இவர்கள் ஏதும் நடைமுறைப்படுத்தப்போவதில்லை. இப்படியான வாக்குறுதிகள் எல்லாம் அன்று தொடக்கம் நடக்கும் வழமையான பேய்ப்பட்டம் கட்டும் அரசியல்தான்.
-
ஹமாஸ் ஆயுதக்குழுவின் தலைவர் சுட்டுப் படுகொலை!
தாங்கள் எங்கு வந்து எதை எழுத வேண்டும் என்ற விவஷ்தை இல்லாதவர். 🤪
-
2024 ஒலிம்பிக்ஸ் பதக்கங்கள்
விளையாட்டில் போட்டி கட்டாயம் வேண்டும்.அது இப்போது இல்லை.
-
ஹமாஸ் ஆயுதக்குழுவின் தலைவர் சுட்டுப் படுகொலை!
இஸ்ரேல் பயங்கரவாதிகள் அன்று தொடக்கம் இன்றுவரை தம் மண்ணுக்காக போராடியவர்களை கொன்றொழித்ததை தவிர வேறென்ன செய்தார்கள். இன்று கூட யசீர் அரபாத்தின் நோய்களும் மரணமும் இயற்கையானது இல்லை என்ற இல்லை என்ற செய்திகள் உண்டு. கூட்டிக்கழித்து பார்த்தால் அது சரியெனவே வரும். இது சம்பந்தமாக குரல் கொடுத்த அவரது மனைவியை கூட வாயடைத்து வைத்து விட்டார்கள். அவர் மனைவி பிரான்ஸ் நாட்டவர் என்பது வேறு விடயம். சர்வதேசத்தால் பயங்கரவாதி என அறிவிக்கப்பட்ட யசீர் அரபாத் அரசியல் பேச்சுவார்த்தைக்கு வந்த பின்னரும் என்ன சுத்துமாத்துக்களை எல்லாம் செய்தார்கள். பேச்சுவார்ததை ஒப்பந்தங்கள் செய்யும் போது கூட பல ஜில்மா வேலை செய்து பேச்சுவார்தைகளை குழப்பியவர்கள் இஸ்ரேலியர்கள். இஸ்ரேலியர்கள்! தமக்கு எதிராக போராடுபவர்களை கொன்று குவிப்பதை தவிர வேறு என்ன செய்தார்கள்?
-
ஹமாஸ் ஆயுதக்குழுவின் தலைவர் சுட்டுப் படுகொலை!
புட்டின் முன்னர் எப்படி இருந்தார்? இப்போது எப்படி இருக்கின்றார்? 15 வருடங்களுக்கு மேலாக ரஷ்யா மீது பொருளாதார தடைகள் விதித்திருக்கின்றார்கள். அந்த நாடு யாரிடமும் பிச்சை எடுக்கவில்லை. போருளாதாரத்தில் சீரழியவும் இல்லை. உக்ரேன் யுத்தத்தின் பின் ஐரோப்பிய நாடுகளில் தான் அதிக பிரச்சனை உருவாகியுள்ளது.பல தொழிற்சாலைகள் மூடும் நிலைக்கு வருகின்றன.சிறிய தொழில் நிறுவனங்கள் வேறு நாடுகளுக்கு இடம்பெயர்கின்றன.அல்லது மூடு விழாக்கள் நடக்கின்றன.மருந்து தடட்டுப்பாடுகள் உருவாகிக்கொண்டு வருகின்றது. வாகன உற்பத்தி நிறுவனங்கள் மெல்ல மெல்ல தமது விமர்சனங்களை தெரிவிக்க ஆரம்பித்து விட்டார்கள். இங்கு உற்பத்தி செய்யப்படும் மின்சார கார்களை விட சீன உற்பத்தி மின்சாரகார்கள் அரை விலைக்கு விற்க தயாராகி விட்டார்கள். இதற்கு காரணம் பற்ரரி உற்பத்திக்கு காரணமான மூலப்பொருள் ரஷ்யாவிலிருந்தே தருவிக்கப்படுகின்றது. இந்த சந்தர்ப்பத்தை சீனா நன்றாகவே பயன்படுத்துகின்றது. அன்றும் இன்றும் குமாரசாமிக்கு தெரிந்தது நேர்மை,கண்ணியம்,நியாயம்,வெளிப்படை இது என்றும் இருக்கும். 😎
- வவுனிக்குளத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்ட இளைஞன்: உடற்கூற்றுப் பரிசோதனையில் வெளியான அதிர்ச்சி தகவல்
-
ஹமாஸ் ஆயுதக்குழுவின் தலைவர் சுட்டுப் படுகொலை!
அதிக பிரச்சனைகள் பலஸ்தீனத்தை அடிப்படையாக கொண்டது என்று மட்டும் தான் சொன்னேன். எல்லா பிரச்சனைகளும் என சொல்லவில்லை.மற்றும் படி அவைகள் மதத்துக்குள் நடக்கும் குழுச்சண்டைகள். பலஸ்தின பிரச்சனை போன்று சர்வதேச பிரச்சனை அல்ல.அதை விட தங்களுக்குள் அடிபட்டாலும் பலஸ்தீன பிரச்சனையில் ஒரு கோட்டில் தான் நிற்கின்றார்கள். அரபு வசந்தத்தை சிரியா எதிர்த்து நின்றது.அதுதான் மேற்குகிற்கு பிரச்சனை.அது சரி சிரியாவிலும் லிபியாவிலும் நேட்டோவிற்கு என்ன வேலை? உலகில் எத்தனையோ போர் அகதிகள் இருக்கும் போது மேற்குலகு சிரிய அகதிகளுக்கு மட்டும் ரோசாப்பூ கொடுத்து வரவேற்க என்ன காரணம்? அவர்களின் போக்கும் குணங்களும் சரியென நான் எங்கும் வாதாடியதில்லை. ஆனால் சதாம் ஹுசைனும் கடாபியும் அசாத்தும் மேற்குலகிற்கு என்ன செய்தார்கள்? ஏதாவது கேடுகள் விளைவித்தார்களா? அவர்கள் நாடுகளில் அகதிகள் உருவாக யார் காரணம்? வினை விதைத்தவர்கள் வினைதான் அறுக்க முடியும் தினை அறுக்க முடியாது. அதெப்படி உங்களால் இப்படியொரு தீர்க்கதரிசனமான முடிவை சொல்ல முடிகின்றது. தமிழர்களுக்கு தனிநாடு கிடைத்துவிட்டால் தமிழ்நாடும் பிரிந்துவிடும்,சிங்களவர்களும் கடலுக்குள் தள்ளப்பட்டுவிடுவார்கள் என்பது மாதிரி...... அமெரிக்கா, யூதம், மேற்குலகு உட்பட முஸ்லீம் நாடுகளுக்கு எவ்வித தீங்கும் செய்யவில்லை என சொல்ல வருகின்றீர்கள்?? நான் முஸ்லீம்களுக்காக வாதாடவில்லை. ஆனாலும் மேற்குலகத்தினர் சாதுக்கள் அல்ல.