Everything posted by குமாரசாமி
-
புட்டின் அருமை தெரியுமா ஞானத்தங்கமே 🤣
புட்டின் அருமை தெரியுமா ஞானத்தங்கமே 🤣 குழல் புட்டின் மகிமை தெரியுமா சின்னத்தங்கமே... நீற்று பெட்டி புட்டின் பக்குவம் தெரியுமா குஞ்சுத்தங்கமே... கோதுமை மா புட்டின் சுவை தெரியுமா ஞானத்தங்கமே... வழுக்கல் தேங்காய் கலந்த புட்டின் சுவை தெரியுமா சின்னத்தங்கமே... வறுத்த அரிசி மா புட்டின் வாசனை தெரியுமா குஞ்சுத்தங்கமே.. ஒடியல் புட்டின் பலன் தெரியுமா ஞானத்தங்கமே... மரக்கறி புட்டின் சுவை தெரியுமா சின்னத்தங்கமே.. பால் புட்டின் சொர்க்கம் தெரியுமா குஞ்சுத்தங்கமே... அரிசி மா புட்டின் பதம் தெரியுமா ஞானத்தங்கமே... கூப்பன் மா புட்டின் பதம் தெரியுமா சின்னத்தங்கமே... ஒடியல் மா புட்டின் பதம் தெரியுமா குஞ்சுத்தங்கமே... கருவாட்டு குழம்புடன் சேர்ந்த புட்டின் சுவை தெரியுமா ஞானத்தங்கமே ... சிவன் மண் சுமந்த புட்டின் கதை தெரியுமா சின்னத்தங்கமே...
-
நில்மினியின் ஒளிப்படங்களின் கதைகள்
இவரிடமும் நான் அடி வாங்கியது பெருமான் சித்தம்.
- நெஞ்சு வலி: ஈவிகேஸ் இளங்கோவன் மருத்துவமனையில் அனுமதி!
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
எதை எழுதி பின் என்ன நினைத்து நீக்கினீர்களோ தெரியாது? 😂 இருந்தாலும் இளையராஜா பற்றிய விமர்சனம் ஒன்று...
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
அவர் தன்னடக்கமாக இருக்க வேண்டும். ஏன் எதற்காக? தன்னடக்கத்தால் என்ன பலன்கள்? நிற்க..... இளையராஜாவோடு பயணித்தவர்கள் இன்று எங்கே? பாரதிராஜா? வைரம் பாய்ந்த வைரமுத்து?பாக்கியராஜா? எங்கே போனார்கள் இவர்களெல்லாம்? இவர்கள் மூவரும் வளர்வதற்கு இளையயராஜாவின் இசையும் பக்க பலமாக இருந்தது. இந்த மூவரும் கட்சி மாறுவது போல் மாறி என்னெல்லாம் செய்தார்கள். இன்று அவர்கள் நிலை என்ன? உண்மையின் வெற்றி நிலைக்கும். அதற்கு உதாரணம் இளையராஜா.இன்றும்.... 80 வயதிலும் தள்ளாடாமல் தளராமல் பாடல் எழுதி இசையமைத்து மூன்றாவது சந்ததியினருடன் காதல் பாட்டு பாடிக்கொண்டிருக்கும் இளையவன் இளையராஜா
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
நாங்கள் கதை பேச்சு வாழ்க்கையை பார்த்தா இளையராஜா பாட்டு கேட்கின்றோம்? இளையராஜா பாடல்கள் அனைத்தும் ஆனந்தம். கேட்க இனிமையாக இருக்கும். எனக்கும் தான் கதைக்க பேச தெரியாது. அதுக்காக நான் கெட்டவனா? இல்லையேல் சமூகத்துக்கு உதவாதவனா? சொல்லுங்கள் சகோதரி மண்டையில் சரக்கு இருக்கிற மனிசனைத்தானே உசுபேத்தியிருக்கிறார்கள். இத்தனை வயதிலும் தளம்பாத இசையும் தளம்பாத எழுத்து நடையும்.....ஆள் ஒரு சுடுதண்ணி பறங்கி அது மட்டும் தான்... இப்போது இளையராஜாவை தவிர எந்த இசையமைப்பாளர்கள் மெலோடி பாட்டு உருவாக்குகின்றார்கள்?
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
வயசு 80 ஆனாலும் இன்னும் பாட்டு வரி எழுதி, அதுக்கு இசை அமைச்சு அத பாட வேற செய்யுது'னா 🙏 இது Evergreen பீஸ் என்பதில் துளியும் சந்தேகம் இல்லை. இசைய தவிர வேற ஏதும் பேசாம இருந்தா நீ இன்னைக்கும் மக்கள் மனசுல ராஜா தான்'யா 😍
-
நடனங்கள்.
- சிரிக்கலாம் வாங்க
பக்கத்து வீட்டு புதினம் பார்க்க ஏறிச்சுதோ ஆருக்குத்தெரியும்?- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
- நடனங்கள்.
- ஜேர்மனியின்... பல நூறு ஆண்டுகளை கடந்த, கட்டிடங்கள். - தமிழ் சிறி. -
இதை bauernmarkt என சொல்வார்கள்.இறைச்சி தொடக்கம் மரக்கறி ஈறாக கைவினைப்பொருட்கள் வரைக்கும் விற்பனை செய்வார்கள். நிறைய மக்கள் கூடுவார்கள். அத்துடன் அவர்களது கிராமிய சிறு இசை நிகழ்சிகளும் இருக்கும்.- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
பெரிய பிரித்தானியா போன்ற வெளிநாடுகளிலை தேவாலயங்களை வாங்கித்தான் எங்கடை சிவன்,பிள்ளையார்,முருகன் எல்லாரும் குடியிருந்து அருள்பாலிக்கினம்- ஜேர்மனியின்... பல நூறு ஆண்டுகளை கடந்த, கட்டிடங்கள். - தமிழ் சிறி. -
கட்டக்கலை சம்பந்தமான ஒரு சிறந்த திரியை ஆரம்பித்துள்ளீர்கள். நான் இருக்கும் இடத்தின் ஒரு பகுதியில் இதே மாதிரி வீடுகளும் வீதிகளும் உண்டு. இரண்டாம் உலகப்போரில் பாதிக்கப்படாத இடங்கள் என பொத்திப் பொத்தி பாதுகாக்கின்றார்கள். இப்படியான இடங்களில் அரசு அனுமதியின்றி ஒரு புல்லைக்கூட புடுங்க முடியாது. இது நான் வசிக்கும் இடத்தின் மறு பகுதியில் உள்ள இடம்.படம் நான் எடுத்ததல்ல. உபயம் கூகிள் .- செயற்கை நுண்ணறிவு பொறி சட்ஜிபிடி அனுபவங்கள்..!
தனி நபர் தகவல்களை பகிர்வதுதான் இன்றைய வாழ்க்கை முறையாகிவிட்டது. அதற்கென்றே சிலர் சுற்றுலா செல்கின்றனர். யூரியூப்பில் அதற்கென பக்கங்களும் ஆரம்பித்து பணம் சம்பாதிக்கின்றனர். தனிப்பட்ட விடயங்களை பகிர்வதன் மூலம் சம்பாத்தியம் செய்து வீடு காணிகள் வாங்குமளவிற்கு இந்த உலகம் வந்து விட்டது. நான் எனக்கு தேவையான பொருளை வாங்குவதற்கு இணையத்தில் தேடிய பின்...... அடுத்து வரும் தினங்களில் இணையத்தில் செல்லுமிடமெல்லாம் நான் தேடிய பொருள் விளம்பரமாக வரும்.- விபத்து + 15 மாத விடுப்பு + இன்று மீண்டும் வேலை ஆரம்பம். -தமிழ் சிறி.-
இங்கு ஜேர்மனியில் தொட்டது பட்டது எல்லாவற்றுக்கும் காப்புறுதிதான். அதிலும் மருத்துவ காப்புறுதியும் ஓய்வூதிய காப்புறுதியும் மிக மிக முக்கியமானது.- மடகஸ்கார் பயண அனுபவம்
தகவல்களும் படங்களும் அருமையாக இருக்கின்றது. நன்றி சகோதரி.- நான் ரசித்த விளம்பரம் .
தகவல்களுக்கு நன்றி. மூட்டு நோக்களுக்கு சிலோன் மின்சார தைலம் பாவித்தேன் சரிவரவில்லை.- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
மதிய வணக்கம் மக்களே!- நான் ரசித்த விளம்பரம் .
கோடாலித்தைலம் என்னத்துக்கு நல்லது?- ஜேர்மன்காரனின் பார்வையில்… ஶ்ரீலங்கா.
அன்பு தங்கையின் தங்க முகத்தை காண முடியாத துர்ப்பாக்கிய அண்ணனா நான்????- நான் ரசித்த விளம்பரம் .
நான் கார் மூலம் தூர பயணங்கள் வரும் போது ஓரிரு கோப்பிகள் குடிப்பேன். மற்றும் படி தொடுவதில்லை. வீட்டில் கோப்பி மெசின் கூட இல்லை. தேநீரும் அதிகம் இல்லை. சுடுதண்ணீர் அல்லது மூலிகை தண்ணீர் மட்டுமே. கோப்பி குடித்தால் பிரசர் உச்சத்தை தொடுது- நான் ரசித்த விளம்பரம் .
ருசி எப்படித்தான் இருந்தாலும் கோலா சுகாதாரத்திற்கு கேடான பானமாக உலகம் கொஞ்சம் கொஞ்சமாக அறிவித்து கொண்டு வருகின்றதே?- ஜேர்மன்காரனின் பார்வையில்… ஶ்ரீலங்கா.
சரியாக சொன்னீர்கள் தங்கச்சி! எந்தக் குறையும் இல்லாத பூமியை அரசியல் பற்றாக்குறையால் பாழாக்கி வைத்திருக்கின்றார்கள். கோபுரத்தின் அழகு அருகில் நின்று பார்த்தால் தெரியாது என்பது போல் வெளிநாட்டவர்களுக்கும் அவர்கள் நாடுகளில் வசிக்கும் எங்களுக்கும் நன்றாகவே தெரிகின்றது.- திரும்பும் வரலாறு!
நான் உங்கள் தொடரை குழப்ப வரவில்லை. மறு பக்க நியாயங்களையும் சொல்ல வந்தேன். 30 வருடங்களுக்கு மேலாக ஜேர்மனிய மக்களுடன் பழகுவதால் வரலாற்று புத்தகங்களில் வராத பல நிகழ்வுகளையும் அறிய சந்தர்ப்பம் கிடைத்தது.நானே நான் பழகுபவர்களோ ஹிட்லரின் படுகொலைகளையும் படையெடுப்புகளையும் ஆதரிப்பவர்கள் அல்லர். ஆனால் ஹிட்லர் செய்த பல்லாயிரக்கணக்கான விடயங்களை இந்த நாட்டுக்காக செய்தவற்றை வரலாற்று புனைவாளர்கள் சொல்ல தவறுகின்றனர். நான் வசிக்கும் இடத்தில் அழிந்த நாஷிகளின் ஆயுத தொழிற்சாலையும் உண்டு. அருகில் மக்கள் பாவிக்க முடியாத அளவிற்கு பெரியதொரு ஏரியும் உண்டு. மக்கள் ஹிட்லரின் படுகொலைகளையும் படையெடுப்புகளையும் வெறுத்தாலும்....... ஹிட்லரின் அதி உன்னத அபிவிருத்திகளை இன்றும் வெறுக்கவில்லை. நன்றி இத்துடன் இத் திரியிலிருந்து விடை பெறுகின்றேன்.🙏🏼 ஒரு சில எழுத்து பிழைகள் உண்டு. திருத்தி வாசிக்கவும் - சிரிக்கலாம் வாங்க
Important Information
By using this site, you agree to our Terms of Use.