Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குமாரசாமி

கருத்துக்கள உறுப்பினர்கள்
  • Joined

  • Last visited

Everything posted by குமாரசாமி

  1. அந்தப்பெண் சத்குருவின் மகள் ராதை என பல இடங்களில் கூறப்பட்டுள்ளது.
  2. 8ம் வகுப்பே படித்த டெல்சன் 10,000 கிலோ முருங்கை கீரையை துபாய் லண்டன் கத்தார் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து மாதம் 4 லட்சம் ஈட்டுகிறார். 35 பெண்களுக்கு வேலை கொடுக்கும் இவர் முருங்கைக்கு வெளிநாடுகளில் நல்ல மவுசு என்கிறார். நாம் தான் முருங்கையை சாதாரணமாக நினைக்கிறோம்.
  3. இயற்கையை அழித்து செயற்கையை ரசிக்கும் இயந்திரம் மனிதன்...
  4. வீட்டுக்கு முன்னாலை தபால் பெட்டி தொங்குதோ இல்லையோ..... ஒவ்வொரு மனிதனுக்கும் ஈமெயில் முகவரி இருக்கணும்... இல்லையேல் அவன் நடைப்பிணம்.
  5. பாலும் தேனும் பாகும் கூட்டும் கசந்தடி.... விரக தாபமடி நெஞ்சம் விறகாய் வேகுதடி....
  6. படைக்கிறவன் மட்டும் கடவுள் இல்லை பயிரிடுறவனும் கடவுள் தான்..
  7. மனைவிக்கு சேவை செய்து கொண்டிருந்த போது.... கணவனின் அம்மா இடையே வந்ததும்.... பாருங்கள் வீடியோ
  8. என்னவனே அட என்னவனே... என் இதயத்தை தொலைத்து விட்டேன்..
  9. உலகில் உணவுத் தட்டுப்பாடு என்பது பொய்.. பகிா்ந்துண்ணும் எண்ணம் இல்லை என்பதே மெய்..
  10. இன்றைய கேள்வி? தமிழ்நாட்டு நம்பர் வன் நடிகையின் இப்போதைய காதலன் எத்தனையாவது காதலன்?
  11. தம்பி! ஒண்டுக்கும் கவலைப்பட வேண்டாம்.... முதலாவதாய் குறிப்பை அனுப்பும்..... அடுத்தது நீங்கள் எந்தநாட்டு சிற்றிசன் எண்டது வலு முக்கியம்..... மற்றது வேலை சம்பளப்பட்டியல் கட்டாயம் வேணும்.... நீங்கள் வைச்சிருக்கிற கார் வீடு கவனத்தில் எடுக்கப்படும். எயிட்ஸ் இல்லையெண்ட சேட்டீக்கர் கட்டாயம் வேணும்...... ஆனந்தராஜ் மாதிரி இல்லாமல் அரவிந்தசாமி மாதிரி இருந்தால் வரவேற்கத்தக்கது.... ஊரிலை உங்கடை மூதாதையர்ரை ஊர் பேர் கட்டாயம் வேணும்.... அப்பதான் நீங்கள் என்ன சாதியெண்டதை கண்டுபிடிக்க லேசாய் இருக்கும். இப்ப எல்லாரும் கார்த்தி,வினோத்,துசாந்த்,சாருக்,சஞ்சேய்,சிந்துசன் எண்டு பேர் வைச்சு எங்களை பேப்பட்டம் கட்டேலாது. இன்னுமொண்டு தம்பி! உங்கடை சகோதர சகோதரிகள் எங்கை முடிச்சவை எண்ட விபரத்தையும் தந்தியளெண்டால் வசதியாய் இருக்கும். நிற்க..... ஒரு ரேமின் வைச்சு பிள்ளை உங்களோடை தனிய இருந்து கோப்பி குடிக்கிற சாட்டிலை உங்களை இன்ரவியூ வைக்கும்.....? அதுக்கு நீங்கள் டான்...டான் எண்டு பதில் சொல்ல வேணும். ? அதுக்குப்பிறது உங்கடை கான் போனுக்கு எஸ் எம் எஸ்லிலை ஓமோ இல்லையோ எண்டு பதில் சொல்லுவம்......? ஓகேயா?
  12. ம்....பண்ணியில் பண்ணிப்பாருமன்...
  13. போனகிழமை ஒருக்கால் காத்து வாங்க நடப்பமெண்டுட்டு....வாகனங்கள் சந்தடி குறைஞ்ச ரோட்டாய் பாத்து நடந்து போய்க்கொண்டிருந்தன்....அப்ப நினையாய் பிரகாரமாய் கனகாலமாய் எனக்கு தெரிஞ்ச புங்குடுதீவு மைந்தர் குறுக்காலை வந்தார்..... உடனை ஜேர்மன் வெதரிலை தொடங்கி ஊர் உலக கதையளை அலசி ஆராய வெளிக்கிட்டு கடைசியிலை அவரவர் குடும்ப சமாச்சாரத்துக்கு வந்தம். அப்ப அவர் தன்ரை மூத்தவங்களுக்கு வயதும் முத்திக்கொண்டு போகுது இன்னும் ஒண்டும் சரிவரேல்லை எண்டார்....அப்ப நான் சொன்னன் எனக்கு தெரிஞ்ச இடத்திலையும் மாப்பிளை தேடிக்கொண்டு திரியினம் கதைச்சு பாக்கட்டோ எண்டன்....அவரும் சந்தோசமாய் கதைச்சு பாருங்கோவன் எண்டு சொல்லி அப்பிடியே நாங்களும் அவரவர் அலுவலை பாக்க போயிட்டம். அடுத்த நாள் எனக்கு தெரிஞ்ச அந்த பொம்புளை வீட்டுக்கு ரெலிபோன் அடிச்சு தேப்பன் காரனோடை சும்மா சுகம் விசாரிக்கிறமாதிரி கலியாண பேச்சு கதையை குடுத்தன்....அவரும் சந்தோசமாய் மாப்பிளையின்ரை இடம்வலம் வேலை எல்லாத்தையும் விசாரிச்சுப்போட்டு.....எதுக்கும் இவவிட்டை குடுக்கிறன் கதையுங்கோ சொல்லி போனும் காப்புக்கையுக்கு மாறிட்டுது...... சொல்லுங்கோ அண்ணை எப்பிடி சுகமாய் இருக்கிறியளோ எண்டு கேட்க நானும் பதிலுக்கு நல்ல சுகமெண்டு சொல்லி கலியாண கதையை தொடக்கினன்...... அவவும் மாப்பிளையின்ரை இடம்வலம் வயது உத்தியோகம் எல்லாத்தையும் விசாரிச்சுப்போட்டு......மாப்பிளையின்ரை ஊரை விசாரிச்சா....நான் புங்குடுதீவு எண்டன்..... அதுக்கு அவ சொன்னா தாங்கள் பண்ணைப்பாலத்தை தாண்டி அங்காலை போறேல்லையாம். #அப்ப போட்ட டிசைன் இன்னும் அழியேல்லை.
  14. சுத்தம் சுகாதாரம் ஒண்டுமில்லை ராசா! நாங்களும் சேற்றுத்தண்ணியிலை குளிச்சு.....குளத்து தண்ணியை குடிச்சு வளர்ந்த உடம்பு ராசா இது......பிரச்சனை என்னெண்டால் இங்கத்தையான் மருந்து கலந்த சாப்பாட்டையும் தண்ணியையும் குடிச்சு நோய் எதிர்ப்பு சக்தி குறைஞ்சு போச்சுது ராசா....என்ன செய்ய? அது சரி உங்கை கடையள்ளை போத்தில் தண்ணி விக்கினமெல்லோ அது ஆர் குடிக்க ராசா? இருந்த குளிக்கக்கூசை இடிச்சுப்போட்டு வெஸ்ரேன் ஸ்ரையிலை கக்கூஸ் கட்டுறியளாம்.....ஆருக்கு ராசா வெள்ளைக்காரன் வந்து குந்தவே? தேத்தண்ணிக்கடையிலை போய் வாழைப்பழம் வடையோடை தேத்தண்ணியும் குடிச்சு தம்முக்கு சிகரெட்டும் வாங்கிப்போட்டு கொப்பியிலை எழுதுங்கோ எண்டு சொன்ன காலத்திலையெல்லாம் ராசன் பிறக்கேல்லை போலை கிடக்கு.. ஏன் ராசா இதிலை எங்கை பந்தா இருக்குது? இதெல்லாம் ஒரு சமூக பிரச்சனையே? உப்பிடிப்பட்டனியள் ஏன் மாட்டு வண்டிலை கைவிட்டனியள்? சைக்கிளை கைவிட்டுட்டு மோட்டசைக்கிளுக்கு ஏன் காசு கேக்கிறியள்! நடந்து போற தூரத்துக்கு ஓட்டோவிலை போறியளாமெல்லே... நாங்கள் முடிந்தளவுக்கு சைக்கிளை பயன்படுத்துறம். அதின்ரை அருமை எங்களுக்குத்தான் தெரியும்...உங்கை சைக்கிள்ளை போனால் மரியாதை இல்லையாமெல்லே... உலகமே வெக்கை கூடீட்டுது எண்டு ஆய்வாளர்மார் கத்துறது ராசனுக்கு கேக்கேல்லை போலஒ கிடக்கு....அது சரி ஏன் இப்ப உங்கை எல்லாரும் வீட்டுக்குவீடு ஏசி பூட்டுறியள்? பந்தாவா? வெக்கையா? உண்மைதான்.....ஒருசில ஆக்கள் இப்பிடியான பந்தாக்கள் காட்டீனம் தான். ஆனால் புலம்பெயர் நாட்டிலையெல்லாம் தமிழ் பள்ளிக்கூடங்கள் நிறையவே இருக்குது ராசா.....நிறைய பிள்ளைகள் கன சிரமங்களுக்கு மத்தியிலையும் சிரத்தையெடுத்து படிக்கினம் ராசா.....தமிழை படிச்சு நாக்கூத்தையே வளிக்கிறது எண்டு சொல்லுற ஒரு சில சனமும் இருக்குது ராசா.. அவர்கள் எதையும் மறக்கவில்லை....மறுக்கவில்லை அதன் நினைப்பிலையே வாழ்கிறார்கள் எண்டதுக்கு இதைவிட என்ன உதாரணம் வேணும் ராசா? அந்த நிலமையை சொல்லுங்க ராசா....சொல்லுங்க....எப்பிடீன்னு சொல்லுங்க ராசா...காது குளிர கேட்பம்.. உங்க பாசையிலை சொல்லப்போனால் நாங்கள் இஞ்சை கக்கூஸ் கழுவின காசிலை உங்கை இருக்கிறவை மோட்டச்சைக்கிள் வாங்கி...வீடுகட்டி...... நடந்து போறதை கேவலமாய் நினைச்சு ஓட்டோவிலை போறதை பார்த்து பின்பக்கக்கத்தாலை சிரிக்காமல் நாங்களும் கொடுப்புக்குள்ளை தான் சிரிக்கிறம். இதுவும் தொப்பி அளவானவர்களுக்கு மட்டும். அது சரி ஏன் ராசா? வெளிநாட்டிலையிருந்து வாற ஆக்கள் சொந்தங்கள் பந்தங்களுக்கு பிஸ்கட்டும் சொக்லேட்டும் குடுத்தால் மூஞ்சையை நீட்டி நக்கலடிக்கிறியளாம்....அப்ப வேறை ஏதோ எதிர்பாக்கிறியள் போலை கிடக்கு!!!!!!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.