Everything posted by புங்கையூரன்
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்!
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நிழலிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்! நகர்ந்து போகின்ற கால நதி மீதான பயணத்தில், நின்று நிதானித்துக் கடந்து வந்த பாதையைச் சற்றே திரும்பிப் பார்க்கவைக்கும், வளைவுகள் தானே பிறந்த நாட்கள்! இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்!
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
கவிஞருக்கு எனதினிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மரணத்தை வென்றவர்களுக்கு வீர வணக்கங்கள்!
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்!
-
சிந்தனைக்கு சில படங்கள்...
ஓஹோ, இவரா அவர்? ஆளைப்பாக்க நாலாம் குறுக்குத் தெருவில நிக்கிற மிளகாய் வியாபாரி மாதிரிக்கிடக்கு?
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்!
-
சிந்தனைக்கு சில படங்கள்...
தனியொரு மனிதனுக்கு, உணவில்லையெனில் 'ஜகத்தினை' அழித்திடுவோம்!
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
வீர வணக்கங்கள் !
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மரணித்த மாவீரர்களுக்கும், சொந்தங்களுக்கும் வீர வணக்கங்களும், அஞ்சலிகளும்!
-
தனுஷ்கோடி...உன்னைத் தேடி!
பகிர்வுக்கு நன்றிகள், வன்னியன்! அனுபவம் தொகுக்கப் பட்ட விதம், மனதை ஒருமுறை உலுக்கிச் செல்கின்றது!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இன்று தனது பிறந்த நாளைச் சிறப்பாகக் கொண்டாடும், கள உறவுகள் வல்வை சகறாவுக்கும், ரகுநாதனுக்கும், எஸ். முத்து (ராஜா) வுக்கும் எனதினிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்! இவர்கள் பல கலையும் கற்றுப் பல்லாண்டு வாழ வேண்டுமென்று வாழ்த்துகின்றேன்!
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்!
-
கவிஞர் ஜெயபாலன் (பொயட்) கைது!
கவிஞரே, அவசியமில்லாமல் மனிதர்களின் மனங்களைக் காயப்படுத்தக் வேண்டாம்! நிழலியைப்பற்றிய உங்கள் பதிவு பற்றியே சொல்கின்றேன்! உங்கள் 'விடுதலைக்கான' முகநூல் போராட்டத்தில் மிகவும் தீவிரமாக நிழலி ஈடுபட்டதை நான் அறிவேன்! மஞ்சுளா வெடிவர்தனாவின் உங்கள் விடுதலைக்கான வேண்டுகோள் முகநூலில் வெளி வந்தபோது, அதனை அவரது முகநூலில் இணைத்தேன்! அவரது முகநூலில் பல ஊடக நண்பர்களும், முஸ்லிம் நண்பர்களும், சிங்கள நண்பர்களும் இருந்ததால், இது அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கையே காரணமாகும்! அது அவரது தனிப்பட்ட பக்கமென்பதைக்கூடச் சிந்திக்க எனக்கு நேரமிருக்கவில்லை! உங்களுக்கு என்ன நடக்குமோ என்ற பயம் மட்டுமே என்னிடம் இருந்தது! அவரது பக்கத்தில், அவரது அனுமதியில்லாமல், வேறொருவர் இணைப்புக்கொடுக்க முடியாது என்பதைப்பின்னர் அவதானித்தபோதும், உடனடிடியாக அந்தப் பதிவை அனுமதித்தது மட்டுமன்றி, உங்கள் விடுதலைக்கான கையெழுத்துப் போராட்டத்தையும் அவர் அங்கு இணைத்திருந்தார்! என் நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம், உய்வில்லை, செய் நன்றி கொன்ற மகற்கு! அதை விடுவோம்! எனது முன்னைய கருத்து, சிங்களப் புலிகளுடன், கத்திப்போரிட்ட உங்கள் வீரம் பற்றியது! புலிகளின் ஊடகத் தொடர்பாளர் நடேசனின் மனைவி ஒரு சிங்கள இனத்தவர்! அவர் செய்த ஒரே குற்றம், நடேசன் அண்ணையின் மனைவியாக இருந்தது மட்டுமே! அவர் தமிழில் புலம்பவில்லை! சிங்களத்திலேயே புலம்பினார்! அத்துடன் அவர் ஒரு பெண்! அவரை விட்டுவைக்காத சிங்களத்திடம், உங்கள் வீரம் வெற்றி பெற்றதைக் கூறிய போது, என்னால் ஜீரணிக்க முடியவில்லை! இனியாவது, இப்படியான முட்டாள் தனமான, தர்ம யுத்தங்களில் இருந்து விலகியிருங்கள்! தர்மம் என்பது எனது பார்வையில் வித்தியாசமானது! 'கண்ணகி'மதுரையை எரித்தது பலருக்குத் தர்ம யுத்தம்! பாண்டியனால், சிலம்புக்குள் என்ன வகையான 'பரல்' இருக்கிறது என்று பூந்து பார்க்க முடியவில்லை! அதற்கான தேவையும் அவனுக்கில்லை! ஆனால், மதரை என்ன பாவம் செய்தது? கோவலனுக்கு வெள்ளையடிப்பதற்காக 'மதுரை' எரிந்து தானாக வேண்டும்! இது தான் 'தர்ம யுத்தம்"
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்!
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்!
-
கவிஞர் ஜெயபாலன் (பொயட்) கைது!
கவிஞரை மீண்டும் கண்டது மிகவும் மகிழ்ச்சி! ஆனாலும் 'குரைப்பது' அல்லது 'கோபப்படுவது' இரண்டுமே கோழைகளின் செயல் என்பதே எனது கருத்து! ஒரு நாய் கடிக்கும் என அறிந்தும், நானும் திரும்பக் கடிக்கத் தான் போகின்றேன் என்று பிடிவாதம் பிடிப்பது வீரமாகாது! தனது மரணப்படுக்கையிலும், நீங்கள் உயிரோடு இருக்கவேண்டும் என்ற ஒரே காரணத்துக்காக, உங்களிடம் சத்தியம் வாங்கிகொண்ட ஒரு தாயின் மனதை நீங்கள் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை என்றே நினைக்கிறேன்! நீங்கள் நடந்து கொண்ட விதமானது, உங்களைப்பற்றி,அனாவசியமான வாதப்பிரதிவாதங்களைத் தோற்றுவித்துள்ளது! மேலுள்ள உங்கள் அறிக்கையானது போதுமான 'விளக்கத்தை' அளிக்கவில்லை என்றே கருதுகின்றேன்! இது எனது தனிப்பட்ட கருத்தேயாகும்!
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்!
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்!
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்!
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மரணத்தை வென்றவர்களுக்கு வீரவணக்கங்கள்!
-
கவிஞர் ஜெயபாலன் (பொயட்) கைது!
யாரோ ஒருவருடைய பிள்ளை அழிந்த வெளியில் ஒலிக்கும் மயானப் பாடல்கள் அரண்களைக் கரைத்துக் கொண்டிருக்கிறது சிதைமேட்டில் அழிக்க முடியாத உயிரும் முகமும் வளர்ந்து கொண்டிருக்கிறது உடைத்தெறியப்படுவதும் சிதைத்து புதைக்கப்படுவதும் யாரோ ஒருவருடைய பிள்ளையை. நொருக்கப்பட்ட கல்லறைகளை என்ன செய்ய முடியும்? எதிலும் நிரப்ப முடியாத எலும்புத்துகள்களை அவர்கள் தங்கள் உணவுக்கோப்பைகளில் நிரப்ப இயலுமா? அவற்றை தின்று தீர்த்து பசியாறி ஆடலாமா? பெற்றவர்கள் யாரோ எல்லாம் இருதயத்திற்குள் அடித்தழுது புலம்பும்பொழுது கண்ணீர் சிதைகளை நனைக்கின்றன. யாரோ ஒருவருடைய பிள்ளை ஏதோ ஒன்றுக்காக வெடிபட்டு வீழ்ந்திருக்கிறது நெருங்க முடியாத எருக்கலைக்காட்டில் உள் நுழைந்து சாம்பிராணிகளை யாரே கொளுத்தியிருக்கிறார்கள் புகை எழும்புகிறது விளக்குகள் எரிகின்றன எருக்கலை வேர்களைச் சுற்றி யாரோ கூடியிருந்து பேசுகிறார்கள். முன்பொரு காலத்தில் இந்தச் சனங்கள் பிள்ளைகளை பெற்று ஏதோ ஒன்றுக்காக அனுப்பியிருக்கிறார்கள் எல்லாவற்றுக்காகவும் உதைத்து இடிக்கப்படும் ஒவ்வொரு கல்லறையிலும் நீள உறங்கிக் கொண்டிருந்த யாரோ ஒருவருடைய பிள்ளை உறக்கமற்றலைகிறது. தீபச்செல்வன் @2011
-
கவிஞர் ஜெயபாலன் (பொயட்) கைது!
தமிழர்களின் போராட்டம் நசுக்கப்பட்ட பின்பு, கூட்டமைப்பினருடன் காலம் தள்ளுவது இலங்கைக்கு மிகவும் இலகுவாக உள்ளது! இந்தியாவின் நிலையம் இது தான்! எனவே, கூட்டமைப்புக்கு எதிராகப் புதியதொரு தலைமை உருவாவதை, இலங்கை ஒரு போதும் அனுமதிக்க மாட்டாது! குறிப்பாக ஜெயபாலன் போன்றவர்களுக்கு, முஸ்லிம்கள், சில சிங்களவர்களின் 'பின்புல ஆதரவு' பின்னணியில் உள்ளது! அத்துடன் இனப்பிரச்சனையைச் சர்வதேச மயப்படுத்தக்கூடிய பின்புலமும் இவரிடம் உள்ளது! அனந்தியுடன் இவர் இணைந்து எடுத்துக்கொண்ட படம் வெளியானதும், தமிழ்த் தலைமைகளும், இந்திய அவதானிகளும், சிங்களத் தலைமையும் விழித்துக்கொண்டன என்பதே உண்மையாகும்! ஜெயபாலன், நீண்ட காலங்கள் புலத்தில் வாழ்ந்திருந்தாலும், பேராசிரியர் நுஹ்மான், போன்றவர்களுடனும், வாசுதேவ நாணயக்கார போன்றவர்களுடனும், மற்றும் யாழ் பல்கலைக்கழகத்திலிருந்தும், கிழக்குப் பல்கலைக்கழகத்திலிருந்தும் உருவான அரசியல் வாதிகளுடனும், பல புத்தி ஜீவிகளுடனும் தொடர்புகளைப் பேணியே வருகின்றார்! ஜெயபாலனுடன் ஒரு பிடிவாதக் குணம் எப்போதும், இவருடன் இணைந்தே பிறந்தது போல உண்டு! இப்போது கூட சிங்களப் புலனாய்வாளர்களுடன் 'சண்டை' பிடித்துக்கொண்டிருப்பார் என்று மட்டும் உறுதியாகக் கூற முடியும்! எம்மைப்போல அன்றி, இலங்கை அரசு மிக நீண்ட தொலைநோக்குப் பார்வையில் செயல்படுகின்றது ஏன்பதைய இந்தக் கைது வெளிக்காட்டி நிற்கின்றது!