இங்கிலாந்திலும் பல வருடங்கள் வசித்தவன் என்ற வகையில், இந்தக் குணம் பொதுவாக எம்மவர்களிடமும், இந்தியர்களிடமும் உள்லது. மருத்துவர்கள், பொறியியலார்களிடம் இந்தக் குணம் அதிகம் காணப்படும். பொதுவாகக் கோவில்களில் இவர்கள் முன்னால் நிற்பார்கள். எதோ தங்களால் தான் தமிழர்களுக்கு புலத்தில் ஒரு கௌரவம் உருவாக்கப் பட்டுள்ளதாகவும், இப்போது வருபவர்கள் அந்தக் கௌரவத்தைக் காப்பாற்றத் தவறுவதாகவும் கருதுபவர்கள்.இத்தகையவரில் சில நல்லவர்களும் உண்டு.ஆனாலும் பலர் தாழ்வு மனப்பான்மையும், தங்கள் எதிர்காலம் பற்றிய பயமும் கொண்டவர்கள்! இது எனது தனிப்பட்ட அவதானம் மட்டுமே!