-
Posts
13647 -
Joined
-
Days Won
25
Content Type
Profiles
Forums
Events
Blogs
Gallery
Everything posted by Nathamuni
-
எனது உறவினர், தனது இரு மகள்களுக்கு வீட்டினை மூத்த மகளுக்கும், பின்னால் கிணறு இருந்த வளவினை இரண்டாவது மகளுக்கும் கொடுத்திருந்தார். அந்த கிணறு, காணியின் நடுவில் இருந்திருக்கிறது, ஆக தங்கை வீடு கட்டவும் ஏலாது, தமக்கைக்கு கிணறும் வேணும். கிணத்தை பங்கு கொடுத்தால், பின்னால் பிரச்சனை வரலாம் என்று, கிணத்தை மண்ணை, கல்லை போட்டு மூடி, இரண்டு பக்கமும் இரண்டு ஆழ் துளை கிணறு அடித்தார். தங்கைக்கும் வீடு கட்டியாச்சு. எல்லோரும் சந்தோசமாம்.
-
புலம்பெயர் அமைப்புகள் பிரிவினைவாதத்தை தூண்டுகின்றன - அலி சப்ரி
Nathamuni replied to ஏராளன்'s topic in ஊர்ப் புதினம்
அப்பப்ப, இந்த அறிவாளி வாயைத் திறந்து, உளறி விட்டு மூடுவார். இதென்ன புதுசே? -
பூசாரி மேற்கொண்ட தாக்குதலில் அண்ணன் உயிரிழப்பு, தங்கை படுகாயம்!
Nathamuni replied to தமிழ் சிறி's topic in ஊர்ப் புதினம்
வெட்டு விழுந்தது, தமிழ் தெரியாத ஆட்களுக்கு! நியாயம் பிளக்கேக்க, பாயிண்டை விடப்படாது. -
துவாரகாவுக்கும் அவரது அப்பாவுக்கும் அஞ்சலி...
Nathamuni replied to பாலபத்ர ஓணாண்டி's topic in எங்கள் மண்
ம்..ம்ம் -
துவாரகாவுக்கும் அவரது அப்பாவுக்கும் அஞ்சலி...
Nathamuni replied to பாலபத்ர ஓணாண்டி's topic in எங்கள் மண்
ராணுவத்திடம் சரணடைந்த பலர், பணம் கொடுத்து, தப்பி, இந்தியா போயிருக்கிறார்கள். கார்னெல் ரமேஷ் போன்றோர், அடித்து, எரித்து கொல்லப்பட்டிருக்கிறார்கள். இப்படி இந்தியா போன பலரில், தமிழ்க்கவி என்னும் ஒரு பெண், பத்திரிக்கையாளர் திருநாவுக்கரசு, வெளியே தெரிந்தவர்கள். தெரியாத பலர் இயக்க காரர், அங்கிருந்து வெளியே வந்திருக்கிறார்கள். பிள்ளையானின் கையால் மௌலானா கூட, இந்தியா போயே சுவிஸ் வந்திருக்கிறார். இந்த ராணுவத்திடம் பணம் கொடுத்து தப்ப என்று, கொழும்பில் ஒரு சிங்கள இராணுவ முகவர் கூட்டம் இயங்கியதாக கேள்விப்பட்டேன். அவர்களிடம், ராணுவத்திடம் இருந்தவர்கள் பெயர் விபரங்களை கொடுக்க, அவர்கள், உடனே, வன்னி பக்கம் தொடர்பு கொண்டு, ஆட்களை பாதுகாப்பாக நகர்த்தி, மன்னார் ஊடாக இந்தியா போக ஒழுங்கு செய்தனர் என்று கேள்வி. இது நான் கேள்விப்பட்டது. உண்மையோ தெரியவில்லை. ஆனாலும், கொடியவர்களின் கையில் இருந்து தப்பியவர்கள், பணத்தினை கொடுத்தே தப்பி இருக்கலாம். @பாலபத்ர ஓணாண்டி -
பூசாரி மேற்கொண்ட தாக்குதலில் அண்ணன் உயிரிழப்பு, தங்கை படுகாயம்!
Nathamuni replied to தமிழ் சிறி's topic in ஊர்ப் புதினம்
அய்யா எனக்கு ஒரு உண்மை தெரியோனும். இப்படி ஒவ்வொரு ரெஸ்டாரண்ட்டா திரிஞ்சு சாப்பாடு நல்லா இருக்கு, உங்களை கலியாணம் கட்ட ஏலுமே எண்டு அஞ்சு, ஆரை கட்டி திண்டு கொழுத்தால் என்ன நிலை. நான், சாப்பாட்டை பத்தி தான் கதைக்கிறேன். -
பூசாரி மேற்கொண்ட தாக்குதலில் அண்ணன் உயிரிழப்பு, தங்கை படுகாயம்!
Nathamuni replied to தமிழ் சிறி's topic in ஊர்ப் புதினம்
பிளேன் டீக்கு சிங்கி அடிச்சது அப்ப.. இப்ப, கதையே வேற.... அது எல்லோருக்கும் தெரியும்... என்னது.... அவரே... நீங்கள்... -
பூசாரி மேற்கொண்ட தாக்குதலில் அண்ணன் உயிரிழப்பு, தங்கை படுகாயம்!
Nathamuni replied to தமிழ் சிறி's topic in ஊர்ப் புதினம்
உங்கடை அனுபவமோ? 🥰😍 காந்திக்கிளாஸ் கதைபோல கிடக்குது... இண்டைக்கு நிலைமை, சீனிக்கு குளுசை எடுக்கிறதில நிக்குது. இந்த மாதிரி சின்ன இடங்களில எல்லாம் நான் காலும் வைக்கிறேல்ல, கையும் நனைக்கிறேல்ல. 😎 இப்படித்தான் கதை விட்டு, ஆட்களை மடக்கிப்பிடிக்கிறது. முந்தி ஒருக்கா, இப்படி, நிழலி மாட்டினவர் கண்டியளே. வாழைத்தோட்டத்து கதை ஒன்றிலே.... வாயை விட்டவர்.. 🤪🤣 -
பூசாரி மேற்கொண்ட தாக்குதலில் அண்ணன் உயிரிழப்பு, தங்கை படுகாயம்!
Nathamuni replied to தமிழ் சிறி's topic in ஊர்ப் புதினம்
அதுதானே பார்த்தனான். அய்யர், சிறை உடைச்சு, கனடாவந்திருப்பார், வெட்ட!! 😂🤣 -
பூசாரி மேற்கொண்ட தாக்குதலில் அண்ணன் உயிரிழப்பு, தங்கை படுகாயம்!
Nathamuni replied to தமிழ் சிறி's topic in ஊர்ப் புதினம்
பிறகு, கொலைகாரரின் மனிசியை வாலி மடக்கப்பார்க்கிறார் என்று கதை கட்டுவினமே. ஓகே என்றால் சொல்லுங்கோ, ஆள் அனுப்பி விசாரிச்சு சொல்றேன். 🤪 ஆனால் பாஸ், அவளோட டேஸ்ட் 58 வயசு சீக்காளி... அதை யோசித்துப் பார்தனியளே? -
பூசாரி மேற்கொண்ட தாக்குதலில் அண்ணன் உயிரிழப்பு, தங்கை படுகாயம்!
Nathamuni replied to தமிழ் சிறி's topic in ஊர்ப் புதினம்
கொழும்பு போனால், இந்த பஸ்ஸில் போவது, ரயிலில் போவது எனக்கு ஒரு மகிழ்ச்சியான பொழுதுபோக்கு. பழைய நினைவுகள் (🥰 😍) வரும், போகும். தேவதைகளும் நினைவில் வருவார்கள். சில தேவதைகளுடன் ஆங்கிலம் கதைக்க சில்வா மாஸ்டரிடம் படித்ததும், சில தேவதைகளுடன் சிங்களம் கதைக்க, வெள்ளவத்தை ஆமத்துருவிடம் போய் கேட்க, அவர், வேறு ஒருவரிடம் அனுப்ப, அவர் ஒரு மாதிரி, மேலும், கீழும் பார்க்க, ஆகா, அவனா நீ என்று தப்பி ஓடியதும்.... புறக்கோட்டையில் இரண்டாம் வகுப்பு டிக்கெட் எடுத்து,ஏறி, வெள்ளவத்தையில் இறங்குவது சுகம். அது ஒரு கனாகாலம். -
👍 அப்ப, நானும் எஸ் 🤣
-
@goshan_che உங்கள் கருத்தை எதிர்பார்க்கிறோம். பிகு நான் இன்னும் வீடியோ பார்க்கவில்லை. உங்கள் கருத்தினை பார்த்தபின்னர் பார்ப்பதாக உத்தேசம். 🙏
-
பூசாரி மேற்கொண்ட தாக்குதலில் அண்ணன் உயிரிழப்பு, தங்கை படுகாயம்!
Nathamuni replied to தமிழ் சிறி's topic in ஊர்ப் புதினம்
என்னப்பா நடக்குது இலங்கையிலே... மட்டக்கிளப்பு தேரர், வெட்டுவன், கொத்துவன் எண்டுறார். சிறுமி சர்ச்சுக்கு வரேல்ல எண்டு, பாதர் அடிக்கிறார். உங்க, பூசாரி கொலையே செய்து போட்டார். அடுத்தது லெப்பை... அதுவும் ஈஸ்டர் வெடிப்புக்குள்ள சேர்க்கலாம்... அப்படி பார்த்தால், எல்லா மத அசாமிகளுக்கும் மதம் பிடிச்சு போயிருக்குது. -
பூசாரி மேற்கொண்ட தாக்குதலில் அண்ணன் உயிரிழப்பு, தங்கை படுகாயம்!
Nathamuni replied to தமிழ் சிறி's topic in ஊர்ப் புதினம்
கதிர்காமம் புட்டுக்கிச்சு.... நீங்க இதை கொண்டு போய்... நக்கல் கிரந்தம் விடுறீங்க... -
பூசாரி மேற்கொண்ட தாக்குதலில் அண்ணன் உயிரிழப்பு, தங்கை படுகாயம்!
Nathamuni replied to தமிழ் சிறி's topic in ஊர்ப் புதினம்
பௌத்த தமிழ் இலக்கியம் என்பது பௌத்த சமயம் பற்றிய தமிழ் இலக்கியங்களை முதன்மையாகக் குறிக்கிறது. பெளத்தர்களால் எழுதப்பட்ட பிற தமிழ் இலக்கியங்களையும் இது சுட்டுவதுண்டு. சங்க காலம் தொடக்கம் தற்காலம் வரை பெளத்த தமிழ் இலக்கியங்கள் உண்டு. குண்டலகேசி, மணிமேகலை போன்ற பெரும் காப்பியங்கள் பெளத்த காப்பியங்கள் ஆகும். சிலப்பதிகாரமும் மணிமேகலையும் இரட்டைக் காப்பியங்கள் ஆகும் -
மாவீரர் நாள் எழுச்சியுடன் நடைபெற உதவிடுக - சீமான் வலியுறுத்தல்
Nathamuni replied to colomban's topic in தமிழகச் செய்திகள்
Can’t disagree!! உங்கள் கருத்தின் ஆழம் புரிகிறது. யாழில் பொழுது போகாமல் அப்பப்ப வந்து அறிவுமழை, கருத்து மழை உதிர்ப்பவர்களை கடந்து செல்லப் பழகுங்கள். அதுவே சகலரது கருத்துமல்ல என்ற புரிதல் உங்கள் போன்ற படித்த அதுவும் கணக்காளருக்கு இல்லாவிடில் எப்படி? 🙏 -
மாவீரர் நாள் எழுச்சியுடன் நடைபெற உதவிடுக - சீமான் வலியுறுத்தல்
Nathamuni replied to colomban's topic in தமிழகச் செய்திகள்
நீங்கள் தான் இந்தியாவின் தமிழகம் முக்கியம் என்றீர்கள். நான் இல்லை என்றேன். ஒரு சுத்து சுத்தி வந்து இந்தியாவை மட்டுமல்ல எவரையும் நம்பச் சொல்லவில்லை என்கிறீர்கள். தலை சுத்துது போங்கோ. ரெண்டு பரிசிற்றமோல் போட்டுட்டு படுக்கப் போறன்!! Good night!😴 -
மாவீரர் நாள் எழுச்சியுடன் நடைபெற உதவிடுக - சீமான் வலியுறுத்தல்
Nathamuni replied to colomban's topic in தமிழகச் செய்திகள்
உங்கள் புரிதலில் எனக்கு பெரிய ஆச்சரியங்கள் உண்டு. பிரெக்ஸிட் காரணம் என்ன? பாதுகாப்பா, வணிக நலனா? ரசியா இரண்டாண்டுகளாக சண்டை செய்கிறது உக்கிரேனுடன். வணிகத்தினை இழந்தும்... காரணம் பாதுகாப்பா, வணிக நலனா? Falkland தீவுகளை பிரிட்டன் மீண்டும் பிடித்தது, வணிகமா, பாதுகாப்பா? Gibeltar இன்னும் பிரிட்டன் வைத்திருப்பது ஏன்? வணிகமா, பாதுகாப்பா? ஆகவே ஒவ்வொரு நாட்டுக்கும், அதன் வணிகம், பாதுகாப்பு தொடர்பான புரிதல் வித்தியாசமானது. இலங்கையின் கேந்திர முக்கியத்துவம், மேற்கு கண்ணை உறுத்துவதால், அதனை சீனாவின் பக்கம் போகாமல் பார்த்துக்கொள்ள துடிக்கிறது. இந்தியா சரிப்பட்டு வராது என்று முடிவு செய்து விட்டது. ஆகவே, நாம் ஆரம்பித்த இடத்துக்கு போய், முடித்துக்கொள்ளலாம். இந்தியாவை நீங்கள் நம்பலாம். ஆனால் 1980 முதல், அடைந்த பட்டறிவால் நம்ப ஒரு முகாந்திரமும் இல்லை. எமக்கு பேரழிவினை தந்த ஒரு நாட்டினை நம்ப தயாரில்லை. சினிமாவில், பாலியல் பலாத்காரம் செய்தவரை முன்னர் கட்டியே வைத்து விடுவார்கள். அதுபோல இப்போது எமக்கு நிலை இல்லை. இந்தியாவை கட்டிக்கொண்டு அழவேண்டிய தேவையும் இல்லை. ஏனெனில் எமக்கு வேறு தெரிவுகள் உண்டு, இல்லாவிடினும் பரவாயில்லை, 500 வருசமா அடிமையாக இருந்து வருகிறோம். இன்னும் இருந்து விட்டு போறோம். பரவாயில்லை அதுக்காக, முதுகுள் குத்தியவர்கள் காலில் விழ வேண்டியதில்லை. அதனால் தான் சண்டைக்காரன் மேல் என்றேன். சண்டைக்காரன் அப்படித்தானே என்ற பட்டறிவுடன் வாழ்ந்து தொலைக்கலாம். அதுக்காக, தெரிந்துகொண்டே, அடுத்தவனை, நம்பமுடியாதவர்ககளை, நம்புவது பேதைமை. -
மாவீரர் நாள் எழுச்சியுடன் நடைபெற உதவிடுக - சீமான் வலியுறுத்தல்
Nathamuni replied to colomban's topic in தமிழகச் செய்திகள்
ம்... என்னவொரு உடான்ஸ் விளக்கம். சவூதிக்குள் சீனா புகுந்து அமைதியாக அதகளம் செய்கிறது. அமேசன் ஊடாக அமெரிக்காவையும், ஐரோப்பாவையும் சீனா வர்த்தக நலன்களைப் பேணுகிறது. அதன் காரணமாக சீன பொருளாதாரம் உலகின் இரண்டாம் நிலையில். இது வேறு, பாதுகாப்பு கரிசணை வேறு. இரண்டும் ஒன்றல்ல. ஜேர்மனி மேற்கின் நண்பன் தான். ஆனால் அதனுடனான பாதுகாப்பு ஒப்பந்தம் அதன் இராணுவ செலவுகளை மட்டுப்படுத்தி வைத்துள்ளது. காரணம் இரண்டு போர்களின் பட்டறிவு. உங்கள் இந்தியா தொடர்பான பார்வை அப்படியே இருக்கட்டும். தமக்குள் ஓயாமல் மோதிக் கொண்டிருந்த நாடுகளை ஒடுக்கி ஒன்றாக்கியது பிரிட்டன். அதனால் தமக்குள் சண்டையிடாத ஓரளவு அமைதியான நாடானது. அது பிரியாமல் இருப்பதே அதற்கு நல்லது. அதற்கு பலமான எதிர்கட்சி தேவை. காங்கிரஸ் சரிவராது. அதே வேளை எம்க்கான தீர்வோ, தமக்கான பாதுகாப்புக்கான கரிசணையோ டெல்லியிடம் இல்லை! அதுவே அதன் பலவீனம். அவர்களுக்கு தமிழர் ராவண வம்சம், சிங்களவன் ராமனின் வம்சம் என்ற இந்துத்வா நிலைப்பாடு. ஆனால் விபீஸ்னன், சீனா பக்கம் 😂🤣 புரியக்கூடும்! -
மாவீரர் நாள் எழுச்சியுடன் நடைபெற உதவிடுக - சீமான் வலியுறுத்தல்
Nathamuni replied to colomban's topic in தமிழகச் செய்திகள்
இந்தியா, இந்துத்துவாவுக்குள் போய் உடையும் என்பதும் உங்கள் கருத்து தானே. இந்தியாவுடன் மேற்கு செய்வது பக்கா வியாபாரம். IT ஆட்களுக்குவேலை கொடுப்பது ஒரு புறம என்றால், இந்தியர்களின் purchasing power இணைக் கூட்டி தமது பொருட்களை விற்பது மறுபுறம். இந்த வகையில் இருபக்க சந்தையும் ஒவ்வொரு பக்கத்துக்கும் முக்கியமானது. அது வேறு, பாதுகாப்பு கரிசணைவேறு. இந்து சமுத்திரத்தில் எமது பாதுகாப்பு தொடர்பில் கரிசணைகள் உண்டு என பிரான்ஸ் தூதர் கருத்து இன்னமும் டெயிலி மிரர் hard talk பகுதியில் உள்ளது. ஆகவே வியாபார நலன்கள் வேறு, பாதுகாப்பு நலன்கள் வேறு என்பதை புரிந்து கொள்வோம். அந்த பாதுகாப்பு நலன்கள் தொடர்பில் சீனாவின் ஆட்டத்தை சமாளிக்கும் திறன் இந்தியாவிடம் இல்லை என்பதை கண்டறிந்தே மேற்கு களம் இறங்கிவிட்டது! -
மாவீரர் நாள் எழுச்சியுடன் நடைபெற உதவிடுக - சீமான் வலியுறுத்தல்
Nathamuni replied to colomban's topic in தமிழகச் செய்திகள்
உங்கள் கருத்தை மாத்த வேண்டிய அவசியம் எனக்கில்லை. அதே போல் அடுத்தவர் கருத்தை மாத்த வேண்டிய தேவையும் யாருக்கும் இல்லையே. மேற்கு இந்திய உறவு நிலையை அமெரிக்கா - கனடாவில் நடப்பதை வைத்தே பார்க்கலாம். அடுத்து இலங்கையில் நடந்ததை வைத்தும் சொல்லலாம். ஆப்பிள் சீனாவிலிருந்து இந்தியா மட்டுமல்ல, வியட்னாமுக்கும் நகர்த்துகிறது. இந்தியாவின் பெரும் பிரச்சணையே புரையோடியுள்ள ஊழல். சீனாவில் ஊழல் இல்லை. செய்தால் வெடி விழும். இந்தியா அயலில் ஒரு நட்பான நேச நாட்டை கொண்டிருக்கவில்லை. இருக்கப்போவதும் இல்லை. துவாரகா விடயத்தில் நான் ஆரம்பித்த திரியில், இலங்கையில் இன மத பேதமின்றி மக்கள் இந்தியாமேல் எக்காலமும் நம்பிக்கைவைக்க மாட்டார்கள் என்றேன். நீங்கள் மறுதலிக்கவில்லை. நல்ல பதிவு என்று வேறு சொன்னீர்கள், மேற்கு இந்தியா ஊடாகவே எம்மை அணுகும் என்கிறீர்கள். அப்படியாயின் கோத்தாவை இறக்கி இந்தியா விரும்பாத ரணிலை ஏத்தியது எப்படி? 2009 நிலை 2023ல இல்லை. அப்போது சீனா களத்தில் இல்லை. இந்தியா போரை முடித்து சாகவாசமாக வர, மகிந்தவை வைத்து உள்ள இறங்கிவிட்டது சீனா. இனி, சீனாவை, இந்தியா அசைக்க முடியாது. ஆக உங்கள் கற்பணையில் இல்லை, நிதர்சணம். சீனாவை இந்தியாவால் சமாளிக்க முடியாது என்ற நிலையில் தான், இம்ரான் கானும், கோத்தாவும் இறக்கப்பட்டனர். இலங்கையிலும், பாகிஸ்தானிலும் இராணுவம் அமெரிக்க சொல் கேட்க்கும் தயார் நிலையிலே வைக்கப்பட்டுள்ளது. புரிந்தால், இந்திய புகழ் பாடிக் கொண்டிருக்க மாட்டீர்கள். சித்தப்பருக்கு மீசை விழுந்தால் அத்தை என்று கூப்பிடுவோம். அதுவரை சில்லறையை சிதறாமல் இருப்போமா, உடான்சரே! 😂🤣 -
மாவீரர் நாள் எழுச்சியுடன் நடைபெற உதவிடுக - சீமான் வலியுறுத்தல்
Nathamuni replied to colomban's topic in தமிழகச் செய்திகள்
@goshan_che நீங்கள் எத்தணை பதில்கள் போட்டாலும் என் கருத்து ஒன்றே! தமிழக ஆதரவு நிலை வருவதற்கு முன்பே எமக்கு ஓர் தீர்வு வரும். அது இந்தியாவால் அல்ல. உங்களைப் போல கற்பணை உலகில் நான் இருக்கப் போவதில்லை - பட்டறிவு அப்படி. நாம் தமிழகத்துக்கு அந்நியராக, வெளிநாட்டவராக இருப்போம். அவர்கள் தமது அரசியலுக்கு பிரபாகரனைக் கொண்டு சென்றால் மகிழ்ச்சி. அதனால் எமக்கு நன்மை அல்லது தீங்கு என்னும் உங்கள் ஆய்வு பிரயோசனமற்றதும், தேவையற்றதும் என்பதே எனது பார்வை. சாதாரண மீன்பிடி பிரச்சணை. தமிழகம் தனது நலனையே பார்க்கும். எமது நலனை அல்ல. இது புரிந்தால், உங்கள் கவலைகள் தேவையற்றது என்பது புரியும். இந்தியா, இலங்கை விசயத்தில் கோட்டையை எப்போதோ விட்டு விட்டது. இன்று இலங்கை மேற்கு -சீன ஆடுகளம். நேற்று மாலை பிரித்தானிய பாரளுமன்ற தெரிவுக்குழு விவாதத்தை பாருங்கள். பேசிய எம்பீக்கள் நமது வரலாறை, அவலத்தை புட்டு, புட்டு வைத்தார்கள். சீனாவின் பிடிக்குள் இலங்கை செல்வது தடுக்கப்படவேண்டுமாம். இப்படி நிலைமை இருக்க, நீங்கள், டீம்கா, நாதக என்று தமிழக லோக்கல் அரசியலுக்குள் நின்று சிரிப்பு காட்டுகிறீர்களோ என்று தோன்றுகிறது. வெளீல வாங்கோ, உடான்சரே!! https://parliamentlive.tv/Event/Index/5dc6a704-327f-48a7-b6ca-022348fc6458 -
மாவீரர் நாள் எழுச்சியுடன் நடைபெற உதவிடுக - சீமான் வலியுறுத்தல்
Nathamuni replied to colomban's topic in தமிழகச் செய்திகள்
நான் சொல்வதை கவனிக்க மறுக்கிறீர்களா - பிடிவாதமாக. தமிழீழத்துக்கு முழு எதிர்ப்பு இந்தியாவிடம் இருந்து தான் வந்தது, வரும். அது ஒரு போதுமே எங்கள் நலனில் அக்கறைப்படவும் இல்லை. படப் போவதும் இல்லை. இத்தனை பட்டறிவுக்குப் பிறகும் இதனை உணராவிடில் என்னதான் சொல்வது? இப்போதும் இந்திய முயல்வுகள் அக்கறையால் அல்ல, சீனாவின் நகர்வால். என்னைப் பொறுத்தவரை, சாட்சிக்காரனால் நாசமறுந்தது போதும். சண்டைக் காரனுடன் பார்த்துக் கொள்வோம். தமிழ் நாட்டை தனித்தே அதன் அரசியலை மட்டுமே கவனிப்பதால் அலட்டிக் கொள்வதில்லை. தமிழ்நாட்டில் யாருமே, சரத் வீரசேகர என்ன சொல்கிறார், டக்ளஸ் சொல்வதென்ன, மகிந்த இன்று என்ன செய்தார் என்று அங்கலாய்பதில்லை. நாமோ, அண்ணாமலை முதல்.... எச்ச ராசா குடியாத்தம் குமரன், ED , IT raids வரை பூந்து பார்த்து தமிழக அரசியலை பார்த்து வெட்டியா கவலைப்படுகிறோம் இல்லையா? கேட்டால், அழகான காரணம்வேற வைத்திருக்கிறோம். அது...அவர்கள் அரசியலானது எமக்கு முக்கியம் என்று! மாலைதீவு போலவே இந்தியா இலங்கையை கோட்டை விடும், எழுதி வைத்துக் கொள்ளுங்கள். அது சீனாவா, மேற்கா என்பதே உங்கள் பார்வையாக இருக்க வேண்டும். அப்புறம் உங்கள் விருப்பம்.