Everything posted by Nathamuni
-
இலங்கையில் ஆறு மாதங்கள்
அப்படியே, மூண்டு பாக் மச்சாள் வீடு போட்டுது எண்டு, சித்திக்கு தெரியாது. சொல்லிப்போடாதீங்க. காதை திருகி கேட்டாலும் சொல்லிப்போடாதீங்க. 😍
-
இலங்கையில் ஆறு மாதங்கள்
பிழைதான்... 😊 சரி பரவாயில்ல.... 😁
-
இறைவனிடம் கையேந்துங்கள்
- இலங்கையில் ஆறு மாதங்கள்
அதுதானே கேள்வி....! அக்கா மகிழ்ச்சியா இருந்தவா அல்லது அத்தார் மகிழ்ச்சியா எண்டு அறிவம் எண்டு தான்.. 😜- இலங்கையில் ஆறு மாதங்கள்
ஒரு கேள்விக்கு மட்டும் பதிலை சொல்லிப்போட்டு நீங்கள் கதையை தொடருங்கோ. நீங்கள் வந்தபிறகு, அத்தார் இப்ப சோகமா இருக்கிறாரோ அல்லது மகிழ்ச்சியா இருக்கிறாரோ? 😁- 2833C7BD-0AFC-40F8-829E-41966B2A0816.jpeg
- வெள்ளித் தேரோட்டி...
மோகன் அண்ணை, 100% ஒதுங்கி, ஓய்வெடுக்காது, வேண்டாப்பிள்ளையை தத்துக் கொடுத்து விட்டுப் போன அப்பா போல இராமல், அப்பப்ப, குறைந்தது மாதம் ஒரு முறையாவது வந்து, குரல் விட வேண்டும். என்னப்பா, எல்லோரும் நல்லா இருக்கிறீர்களா என்றாவது விசாரித்துப் போகவேணும். 🙏- உணவு செய்முறையை ரசிப்போம் !
சிரட்டை இட்லி..... ! 👍- செயற்கை நுண்ணறிவு பொறி சட்ஜிபிடி அனுபவங்கள்..!
நான் ஆரம்பத்தில், வாஸ்கொட காமா குறித்து கேட்டேன். அவர் இந்தியாவை வந்தடைந்த நாள் எல்லாம் சொல்லியது. ஆனால் இந்தியா என்ற நாடு அப்போது இருக்கவில்லையே என்று சொன்னால், நீ சொல்வது சரியானது, பிரிட்டிஷ்காரர் உருவாக்கும் வரை இந்தியா இல்லை. அநேகமாக இந்திய துணைக்கண்டம் என்பதே சரி என்கிறது. ஆகவே, உரையாடலுக்கு, சரியான பதிலை தருகிறது என்பது வியப்புக்குரியது. உங்கள் அடுத்த கதைக்கான கருவினையும், அது குறித்த உரையாடல்களையும் நீங்கள் செய்து கொள்ள முடியும் என்பதால் அதன் உபயோகம் நீங்கள் முயலும் போதே தெரியும்.- F7279FC7-3435-46C9-807A-D50C4A7FFF3E.jpeg
- நெஞ்சு வலி: ஈவிகேஸ் இளங்கோவன் மருத்துவமனையில் அனுமதி!
- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
நம்மாளு ஹாலிடே போயிருக்கிறார். வந்தோன்ன, தலைவரை இப்படி நக்கல் அடிப்பது பிழை எண்டு....கடதாசி போடுவார்.... 🤣🤣😁- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
மீதமுள்ள ஒரு நாள்... அவர் விசர் ஆஸ்பத்திரிக்கு போகவேண்டியதுதான். 🤣 தீர்ப்பு பிழை பாருங்கோ ஏராளன்.... ஆள் சும்மா இரார், மீதமுள்ள ஞாயிறு அன்று அவர் பாட்டுக்கு மூன்றாவது தேட வெளிக்கிட்டு விடுவார். எண்ட படியால், ஒரு கிழமை, முதல் மனையிடமும், அடுத்த கிழமை இரண்டாவது மனைவி என்று இருக்க வேண்டும் என்று தீர்ப்பு போடவேணும். நாட்டாமை தீர்ப்பு பிழை.- புட்டின் அருமை தெரியுமா ஞானத்தங்கமே 🤣
- புட்டின் அருமை தெரியுமா ஞானத்தங்கமே 🤣
மா, மிளகாய்த்தூள் போன்றவைகளை நமது பிராண்ட் சொந்தக்காரர்கள், தமிழக, ஆந்திர, கேரள வியாபாரிகளுக்கு சப் - காண்ட்ராக்ட் கொடுத்து விடுகிறார்கள். அதனால் தரம் நன்றாக இராது. முக்கியமாக, மிளகாய், அரசி, கழுவி, காயவைத்து அரைத்து அனுப்புவார்கள் என்று எதிர்பார்க்க கூடாது. London Times பத்திரிக்கையில், ஆந்திர மாநிலத்தில் கடல் போல பரவி காய வைத்திருக்கும் மிளகாய் படம் போட்டிருந்தார்கள். மிளகாய் செடியை புடுங்கி, அதிலிருக்கும், மிளகாயை அப்படியே பரவி விடப்பட்ட அதே நிலத்தில் போட்டு காய விடுகிறார்கள். அதனை கழுவி சுத்தம் செய்வார்கள் என்று தோன்றவில்லை. வாங்குவோர் தான் செய்ய வேண்டும். வாங்குபவர்கள் இந்த சப் - காண்ட்ராக்ட் காரர்கள் என்றால், காசை மிச்சம் பிடிக்கத்தானே செய்வார்கள். இப்போது, ஊரில் இருந்து, நேரடியாக உறவினர்களுக்கு சொல்லி, dhl மூலம் எடுக்கிறார்கள். காசு அவ்வளவு இல்லை. காரணம். 10kg வரை ஒரு நிர்ணய கட்டணம் என்று வைத்துள்ளார்கள். ஒருமுறை முயன்று பாருங்கள்.- புட்டின் அருமை தெரியுமா ஞானத்தங்கமே 🤣
நானும் தமிழ்நாட்டில், கேரளாவில் பிட்டு துன்னு இருக்கிறேன் வன்னியர்.... காததூரம் ஓடித்தான் இருக்கிறேன். நீங்கள் யாழ்ப்பாணம் வந்தால், தேங்காய் பூ சேர்த்த மூங்கில் குழலில் அவித்த பிட்டும், இடிச்ச சம்பலும், முட்டை பொரியலும் சாப்பிட்டு பார்த்தால், அடிமையாகி விடுவீர்கள். ஊருக்கு, ஊரு ஒரு விசேட சாப்பாடு.... யாழ்ப்பாணத்தில் இது ஒரு ஸ்பெஷல். 👍 இன்னோரு விதமாக, குழல் பிட்டு முக்கனிகளுடன் சாப்பிட அருமையோ, அருமை. அட, நீங்கள் மதுரைக்காரர் தானே. நம்ம சொக்கரே, பிட்டடித்து, கிரங்கிப் போய், பெண்டாண்டி, பிள்ளைகளை மறந்து, வைகை ஆத்தம் கரையில் மரத்தடியில் படுத்து தூங்கினாரே....- புட்டின் அருமை தெரியுமா ஞானத்தங்கமே 🤣
ஆட்டக்காரி என்பது புதிய ரகமல்ல. அந்த நெற்பயிர் வீசும் காத்துக்கு நெளிந்து ஆடுவது, ஒரு தேர்ந்த ஆட்டக்காரி போல இருந்ததால், அப்படி பெயர் வந்து என்று ஒரு விவசாயி சொன்னார். IR8 போன்ற புரியாத பெயர்களுக்கு,இது பரவாயில்லை என்றார்.- புட்டின் அருமை தெரியுமா ஞானத்தங்கமே 🤣
இல்லையே. வறுத்தும் செய்வார்களே. மேல கந்தையர் செய்முறை போட்டிருக்கிறார். 😁- புட்டின் அருமை தெரியுமா ஞானத்தங்கமே 🤣
பெரிசு, நீங்கள் உண்மைல எந்த ஊர்..... மர்மதேசி... நான் கேட்டது, ரதியக்காவ.... மட்டக்கிளப்பில், யாழ்பாணத்தான் வாழ்ந்தால், அவித்தமா பிட்டு சாப்பிடுவான் தானே பெரிசு. இன்னும் விபரம் வேணமா? யாழ்ப்பாணம் போர்த்துக்கேயர் ஆளுமையில் இருக்கும் போதே, கோதுமைமா, பாண் பாவணை வந்தது. கிழக்கில் போர்த்துக்கேய ஆளுமை இருந்தது என்று, கல்வி வெளியீட்டு திணைக்கள புத்தகம் சொன்னால் அறியத்தரவும். அண்மையில் வாசித்தேன். பங்களாதேஸ், போர்த்துக்கேயர் சிட்டாகொங் நகரத்தில் பாண் அறிமுகம் செய்துள்ளனர். மூக்கை எலலா இடத்துக்கிளையும் டபக்கெண்டு நுழைக்கிற கெட்டிதனத்தால, நிர்வாகத்தில் சேர சிபார்சு....- புட்டின் அருமை தெரியுமா ஞானத்தங்கமே 🤣
இரண்டுமே கோதுமை மா தான். கூப்பன் மா, புழு, வண்டுகள் இருக்கும். அரித்து எடுத்து, அவித்து சாப்பிட்டால், குத்தமில்லை. அமெரிக்காவில், use by date முடிந்தால், அந்த காலத்தில், கப்பலில் போட்டு, இலவசமாக அனுப்பி வைப்பார்கள். (இப்போது, அமெரிக்காவில் அழுத்தம் பிரயோகிக்கும் லாபி குரூப்புகள் வந்து விட்டன). அப்படி வந்த மாவில், ஆளுக்கு 3 விசுக்கோத்து, பணிஸ் பாடசாலைகளுக்கு கொடுத்தார்கள். கூப்பன் மாவாக, ஏழை பாழைகளுக்கு இலவசமாக கொடுத்தார்கள்.🙄 இந்த பணிஸ் காரன் தனது துவி சக்கர வண்டியில் வருவதை வழிமேல் விழி வைத்து மாணவர்கள் காத்து இருப்பார்களாம். மாணவர்கள், கவிகளாக பாட்டு இயற்றி பாடியும் இருக்கிறார்கள். பணிஸ் வருகுது, பட்டாளம் ஓடுது போன்ற பாடல்கள் பிரபலமாம்.- புட்டின் அருமை தெரியுமா ஞானத்தங்கமே 🤣
யாரும் கவனிச்சீங்களா, உலகில் யாழ்ப்பாண குடாநாட்டில் மட்டுமே, அவித்த கோதுமை மா செய்கிறார்கள். (கிழக்கில் செய்வார்களா தெரியாது). ஆனால் கோதுமை மாவை அவித்து, அரித்து பிட்டு செய்வதும், அதுக்கு இடித்த சம்பல், டின் மீன் குழம்பு வைத்து அசத்துவதும், யாழ்ப்பாணத்தில். முக்கியமாக, தமிழகத்திலோ, அல்லது கேரளாவிலோ இல்லை. சிங்களவர்கள் நிச்சயமாக செய்வது இல்லை. பால் சோறுடன் உக்காந்து விடுவார்கள். பிட்டுக்கு, கட்டா பாரை கருவாடு சம்பல் அப்படி இருக்கும்.... 🤭- நெஞ்சு வலி: ஈவிகேஸ் இளங்கோவன் மருத்துவமனையில் அனுமதி!
- புட்டின் அருமை தெரியுமா ஞானத்தங்கமே 🤣
ரசியன் அதிபர் புட்டினின் பிடித்த உணவு புட்டு என்று, எமது ரசிய உளவாளி உடான்சு சுவாமியார் ரகசிய தகவல் தந்துள்ளார்...- நெஞ்சு வலி: ஈவிகேஸ் இளங்கோவன் மருத்துவமனையில் அனுமதி!
- நில்மினியின் ஒளிப்படங்களின் கதைகள்
அதெல்லாம் பிரச்சனை இல்லை. நாம போய் சேர்ந்து படிக்கலாம். - இலங்கையில் ஆறு மாதங்கள்
Important Information
By using this site, you agree to our Terms of Use.