-
Posts
13647 -
Joined
-
Days Won
25
Content Type
Profiles
Forums
Events
Blogs
Gallery
Everything posted by Nathamuni
-
@தமிழ் சிறி என்னப்பா இது. போட்டாலும் போட்டியள் ஒரு திரியை, மொத்த பஞ்சாயத்தும் டபாரெண்டு இறங்கீட்டினம். 😁 பரீட்சை மாதம், நாள் எண்டது எப்பவுமே மாறாது. கொரோணா போன்ற ஆபூர்வ காரணங்களால் ரத்தாகலாம், தள்ளி வைக்கப்படலாம். தெரிஞ்சு கொண்டே, அதுக்குள்ள கலியாணத்தையும் வைச்சு கலர்ஸ் காட்டீனம். எனக்குத் தெரிஞ்சு, பரீட்சை முடிவு வரும் நாளில், கலியாண உடுப்போடு சோதணை எழுதின பொம்பிளை பாஸ் என்று செய்தி வந்து பார்க்கவில்லை. கலியாண சந்தடீல தாலீயக் கட்ட மறந்த கதையள் இருக்கேக்க, பொம்பிள மறக்காமல் இருந்து படிச்சிருப்பாவே?
-
செந்தில் அமெரிக்க, இந்திய தூதர்களை சந்தித்தார். இந்தியா, கிழக்குக்கும் விமான சேவைகளை ஆரம்பிக்கும் படியும், ரயில்பாதைகளை புனரமைத்து தரும்படியும் கோரிக்கை வைத்துள்ளார்!
-
கொழும்பு – காங்கேசன்துறை நேரடி ரயில் சேவை 2024 இல் !!
Nathamuni replied to கிருபன்'s topic in ஊர்ப் புதினம்
என்னப்பா குழப்பமா இருக்கு! இரண்டு மாதமா? சூலை மாதத்திலிருந்தா? 2024 சனவரியில் இருந்தா? ஒரு முடிவுக்கு வந்து சொல்லுங்க, தேத்தண்ணீ குடிச்சிட்டு வாறன்! -
இவரின் நியமனத்தின் பின்னால் இந்தியா உள்ளதாக தெரிகிறது. சீன, இந்திய வல்லரசுப் போட்டியில், கிழக்கில் இருந்த கோத்தாவால் நியமிக்கப்பட்ட சிங்கள ஆளுனர் அம்மையார் 13 அமுலாக்கல் குறித்து பல சர்ச்சையான எதிர்கருத்துகளை கூறியதோடல்லாமல், சீனத் தூதரை சந்தித்ததுடன், கிழக்கு மாகாணத்தை, சீன மாகாணம் ஒன்றுடன் இணைத்து (Twined) பல அபிவிருத்தி திட்டங்களை செய்ய திட்டமிட்டிருந்தார்கள். இந்நிலையிலே, வாரிச் சுருட்டிக் கொண்டு எழும்பிய இந்தியா, ரணில் மீது பல அழுத்தங்களை பிரயோகித்து இவரை ஆளுனராக்கியுள்ளது.
-
இவர் தேர்தலில் பிரதமராக நிண்டவரோ, நிக்கப்போறவரோ கிடையாது. அதாலை இவர் சரிவரார். பொங்கல் வாழ்த்துக்கள், இவருக்கு முந்தி இருந்தவயள் தமிழ் மக்களுக்கு பொங்கல் வாழ்த்துக்கள் என்று சொல்ல, இவர் மட்டும், பொங்கல் கொண்டாடுற ஆட்களுக்கு வாழ்த்துக்கள் என்றார், ஏதோ கடமைக்கு, கட்சி கேட்டதால வாழ்த்தின மாதிரி இருந்தது. அடுத்த முறை வெல்லக்கூடிய தொழில் கட்சி சவுண்டு கொடுப்பது நல்லது.
-
காலாவதியான டின் மீன்கள் விற்பனை : சீன பிரஜை உட்பட ஆறு பேர் கைது
Nathamuni replied to தமிழ் சிறி's topic in ஊர்ப் புதினம்
திகதி லேபிளில் இருந்தால் வாங்காதீர்கள். -
திருடனுக்கு தேள் கொட்டின கதைதான். மோடி மாப்பு வைச்சாரு ஆப்பு. போனமுறை, நோட்டு செல்லாது என்று அறிவித்ததால், சாதாரண பொதுமக்களிடையே ரணகளம். அதனூடே கறுப்புப்பணக் கோஸ்டிகள் கச்சிதமாக தமது கரண்சிகளை மாற்றிவிட்டார்கள். மோடி செய்தது வீண்வேலை என்று உள்ளூர், வெளியூர் எங்கும் விமர்சனம். ஆனால் 2,000 நோட்டு புழக்கத்தில் 25 - 30 % குறைந்ந நிலையில் (வரப்போகும் தேர்தலுக்காகவும்) கள்ளப்பணமாக பதுங்கிவிட்டதை ஆய்ந்துணர்ந்து, செப்டம்பர்வரை செல்லும், காசை வங்கியில் daily 20,000 மட்டும் deposit பண்ணலாம் என்ற நிலயில், சாதாரண மக்கள் ரிலாக்ஸ் ஆக, பதுக்கிய கோஸ்டிகள் அல்லாடுகின்றன. 20,000 எப்படிவந்தது என்று கணக்கு சொல்லவேணுமே! வங்கி லீவை கணக்கில் எடுத்தால், ஆக கூடியது மாசம் 5 இலட்சம் தானே.... 25 - 30 இலட்சம்.... செப்டம்பர் வரை... கோடியில் வைத்திருப்போர்......? அரண்டு போய் இருக்கிறார்கள். போன முறை டாஸ்மாக் ஊடாக அதிமுக அமைச்சர்கள் மாத்திக் கொண்டார்கள். இம்முறை மக்கள் 2,000 வை பாவிக்க முடியாது, வங்கிகள் மட்டுமே ஏற்கும். ஆக... மக்கள் தந்து பொருள் வாங்கினர் என்று சொல்ல முடியாது. உது மோடியின் மாஸ்டர் ஸ்ரோக் என்று நிணைக்கிறேன். பகிடி என்ன என்றால், இலங்கையில் உத்தியோக பூர்வமாக ஏற்றுக்கொள்வதால், பதுக்கல் கோஸ்டிகள் அங்கை மாத்தலாமோ என்றும் விசாரிக்கினமாம்! 😁
-
காலாவதியான டின் மீன்கள் விற்பனை : சீன பிரஜை உட்பட ஆறு பேர் கைது
Nathamuni replied to தமிழ் சிறி's topic in ஊர்ப் புதினம்
ரோ எண்டு ஒரு ஒண்டுக்குமே உதவாத தண்ட கோஸ்டிக்கு உளவமைப்பு எண்டு பெயரை வைத்து, அதுக்கொரு இழவும் புரியாம திரியுது. யுத்தம் முடிஞ்ச, மகிந்த காலத்தில் வராத புத்த விகாரைகள், இப்ப ஏன் வருது, அதுவும் மலைகளுள்ள இடங்களில.... வேட்டியோட சீனத்தூதர் வந்து போனபின்னாடி.... சிங்களமும், சீனமும் இணையும் புள்ளி பெளத்தம் எண்டே தெரியாத தண்ட ரோவை கலைத்து விடுறதே மோடிஜி செய்ய வேண்டிய உடனடி வேலை! -
காலாவதியான டின் மீன்கள் விற்பனை : சீன பிரஜை உட்பட ஆறு பேர் கைது
Nathamuni replied to தமிழ் சிறி's topic in ஊர்ப் புதினம்
சீனாக்காரன், திருப்பதிக்கே லட்டு கொடுக்கிற ஆள். உடான்சு சுவாமியாருக்கே வீபூதி அடிச்சு, சந்தனம் பூசீ அனுப்பக்கூடியவன். ஊரிலை அமோகமா ஆமியை வைச்சு காசை இறைத்து புத்தர் கோவிலை கட்டி, விகாரைக்குள்ள ராடர் வைச்சு இந்தியாவுக்கு அல்வா குடுக்கிறாங்கள். -
காலாவதியான டின் மீன்கள் விற்பனை : சீன பிரஜை உட்பட ஆறு பேர் கைது
Nathamuni replied to தமிழ் சிறி's topic in ஊர்ப் புதினம்
லண்டணிலயே விக்கிறாங்களே.... கடையில வேலை செய்பவர், காதுக்கை சொன்னது, திகதி ரின்னில பொறித்தால் நம்புங்க, லேபலில் எண்டா, நம்பாதீங்க..... புது லேபல் மாத்துவோம்.... 🤑 -
பொன்னியின் செல்வன்..லைகா ஆபீசில் அமலாக்கத்துறை சோதனை!
Nathamuni replied to Nathamuni's topic in நிகழ்வும் அகழ்வும்
கறுப்புப்பணச் சோதணையில் லைக்காவும், ரெட் ஜெயண்டும் நன்கு சிக்கியுள்ளதாக தெரிகிறது. லைக்கா பிரிட்டனில் இருந்து money transfer செய்யும் வியாபாரம் செய்கிறது. இதுவே தவறுகளின் ஆரம்பம். பொன்னியின் செல்வன் எடுத்தது ரெட் ஜெயண்ட். பெயர் லைக்கா!! -
தூத்துக்குடியைச் சேர்ந்த பத்திரிகையாளர் ஜோசப் ராஜன் அவர்களின் பதிவு.. எனக்கு விபரம் தெரிந்த நாளிலிருந்து அரசியல் கட்சி ஆதரவாளனாக, அதன்பின் ஒரு பத்திரிக்கையாளனாக நூற்றுக்கணக்கான அரசியல் கூட்டங்களிலும், மாநாடுகளிலும், கருத்தரங்குகளிலும் செய்தி சேகரிக்க அல்லது ஆதரவாளனாக கலந்து கொண்டிருக்கிறேன். நீண்ட நாட்களுக்குப் பிறகு நேற்று தூத்துக்குடியில் நடைபெற்ற நாம் தமிழரின் இன எழுச்சி மாறாட்டில் கலந்து கொண்டேன். மற்ற எந்த கட்சிகளையும் விட முற்றிலும் மாறுபட்ட ஒரு அரசியல் அமைப்பாகவே இக்கூட்டத்தை காண முடிந்தது. விசில் அடித்து ஆட்டம் போட்டுக்கொண்டு ஆரவாரம் இல்லை.... ஒரு சொட்டு மது இல்லை.... எவரும் குடித்து விட்டு வரவில்லை.... அதனால் அருகில் இருக்கும் டாஸ்மாக் கடையில் ஒரு குவார்ட்டர் கூட எக்ஸ்ட்ரா விற்பனை ஆகவில்லை.... யார் வாயில் இருந்தும் ஒரு கெட்ட வார்த்தை இல்லை.... இதனால் காவல் துறையினருக்கு எந்த டென்சனும் இல்லை.... ரிலாக்சாக அமர்ந்திருந்தனர்..... வந்து இறங்கிய கூட்டத்தில் பாதிக்குப் பாதி பெண்கள்.... இது எந்த அரசியல் கட்சி கூட்டத்திலும் இதுவரை நான் பார்க்காத காட்சி... வருகின்றவர்களுக்கு உதவ தன்னார்வ தொண்டரகளாக தம்பிமார்களின் குடும்பத்தில் உள்ள பெண்கள்... அவர்கள் கையில் வாக்கி டாக்கி.... அவர்கள் 200 ரூபா சம்பளத்திற்கு வந்தவர்கள் அல்ல... படித்துக் கொண்டிருப்பவர்கள் அல்லது வேலையில் இருப்பவர்கள்... ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள் சிலரும் தன்னார்வ தொண்டர்களாக பணியாற்றியது மிகச்சிறப்பு.... கூட்டத்திற்கு வர யாருக்கும் பணம் கொடுக்கவில்லை.... தனியாக கார், வேன், பேருந்து அமர்த்தி குடும்பம் குடும்பமாக பிள்ளை குட்டிகளுடன் வந்தவர்களே அதிகம்.... காரில் வந்து இறங்கிய ஒரு தம்பதியினரின் கையில் 3 வயது பெண் குழந்தை.... அந்த குழந்தை காரில் இருந்து இறங்கியதும் கழுத்தில் அணியும் இயக்கத்தின் கழுத்து பட்டையை அம்மாவிடம் கேட்டு வாங்கி ஆசையாக அணிந்து கொண்டு கம்பீரமாக மைதானத்தில் நுழைந்தது..... நுழைவு வாயிலில் புத்தக கடை போட்டிருந்தவர் அக்குழந்தையை பார்த்ததும் இயக்கத்தினர் வழக்கப்படி கை முஷ்டியை உயர்த்தி அக்குழந்தைக்கு வணக்கம் வைத்தார். அக்குழந்தை அவரை விட அழகாக அதேபோல் அவருக்கு பதில் வணக்கம் வைத்தது.... நன்றாக பயிற்சி அளித்திருக்கின்றனர் அப்பெற்றோர்.... கடைக்காரர் ஓடிச்சென்று அக்குழந்தையை அள்ளி எடுத்து கொஞ்சி விட்டு கீழே இறக்கினார்.... மீண்டும் பதில் வணக்கம் அப்படியே வைத்து விட்டு அக்குழந்தை சென்றது இதுவரை நான் எந்த இயக்கத்திலும் பார்க்காதது... வியந்து போனேன்...... இதைப் பார்த்ததும் இது கட்சி கூட்டம் அல்ல.... குடும்ப விழா என உணர்வே எனக்கு மேலோங்கியது... நான்கு வழிச்சாலையில் கூட்டம். ஆனால் சாலையில் செல்லும் ஒரு வாகனத்திற்கு கூட சிறிய இடைஞ்சல் கூட இல்லை.... ஐம்பதாயிரம் பேருக்கும் மேல் திரண்டிருந்த இக்கூட்டத்தில் ஒரு சிறு சலசலப்பு கூட இல்லை.... பறை இசை, எழுச்சிப் பாடல்கள், சிறுவர் சிறுமிகளின் கலை நிகழ்ச்சிகள் என கூட்ட ஏற்பாடுகள் பிரம்மாதம்.... நன்கொடைகள் வசூலித்தார்கள் தம்பிமார்கள்.... தேடிச்சென்று தம்பிமாரை அழைத்துத்தான் நன்கொடை கொடுத்தேன்.... அநேகர் அவ்வாறே தந்து உதவியதாக பெருமையாக தம்பிகள் சொன்னார்கள்.... ஒலி, ஒளி அமைப்பும் பிரம்மாதம்..... மேடையின் பின்புறம் இதுவரை பிளெக்ஸ் போர்டுதான் வைப்பார்கள்.... இப்போது அதை டிஜிட்டல் ஸ்க்ரீன் முறையில் ராட்சத அளவில் அருமையாக அமைத்திருந்தார்கள்.... அதுவும் எந்த இடத்திலும் பிசிறு தட்டாமல் தெளிவாக இயங்கியது.... 4 மணிக்கு கூட்டம் தொடங்கும் என தெரிவித்திருந்தார்கள்.... 4 மணிக்கே பத்தாயிரம் பேர் வரை திரண்டு விட்டார்கள்.... 4.30 மணிக்கு பறை இசை துவங்கியதும் சீமான் வந்து முன்வரிசையில் தம்பிமாரோடு அமர்ந்து விட்டார்..... நுழைவு வாயிலில் முள்ளிவாய்க்கால் கஞ்சி சிரட்டையில் வழங்கப்பட்டது... அதன் அருகில் 2 ஆம்புலன்சில் குருதிக்கொடை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது... அநேகர் அங்கும் குருதிக்கொடை வழங்கினார்கள்..... ராவணன் குடிலில் புகைப்பட கண்காட்சி சிறப்பாக அமைக்கப்பட்டிருந்தது.... தண்ணீர் வசதியுடன் கழிப்பறைகள், ஆங்காங்கே குளிர்ந்த குடிநீர் வசதியும் செய்யப்பட்டிருந்தது.... மைதானத்தை சுற்றிலும் ஈழ விடுதலை போராட்டத்தில் தங்களின் இன்னுயிர் நீத்த மாவீரர்களின் படங்கள் வைக்கப்பட்டிருந்தன. அனைவருக்கும் வணக்கம் என சொல்லி விட்டு உரை வீச்சை துவங்குவதுதான் நாம் தமிழரின் சிறப்பு.... அவர்களே, இவர்களே என அம்பது பேர் பேரை அரை மணி நேரம் சொல்லி விட்டு அப்புறம் பேச தொடங்கும்போது ஏற்படும் சலிப்பு இவர்கள் மேடையில் இல்லை... பிரபாகரன் ஒழுக்கத்துடன் கட்டி எழுப்பிய அதே போர்ப்படை போன்றே எனது அருமைத் தம்பி சீமானும் கட்டி எழுப்பி இருப்பது கண்கூடாக தெரிய வந்தது... தூத்துக்குடி நாம் தமிழர் இயக்க தம்பிமார்கள், தங்கைமார்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள்.... வாழ்த்துக்கள்... உங்களின் உழைப்பு பிரம்மிக்கத்தக்கது... எதிர்காலத்தைப் பற்றி சிந்தித்தபோது ஒன்று மட்டும் தெளிவாக புரிந்தது... திராவிடத்திற்கும் தமிழ் தேசியத்திற்குமான மிகப்பெரிய போர் ஒன்று இருக்கிறது... இப்படையை அழித்து விட ஆட்சியாளர்கள் நினைப்பார்கள்.... அப்படி நினைத்தால் அதற்காக மிகப்பெரிய விலையை அவர்கள் தர வேண்டியிருக்கும்... மக்களுக்கு ஒரே ஒரு வேண்டுகோள்.... அன்பு மக்களே, நீங்கள் எந்த கட்சியிலும் இருந்து விட்டுப் போங்கள்.... ஒருமுறையாவது நாம் தமிழர் இயக்கம் நடத்தும் இப்படிப்பட்ட மாநாட்டை ஒருமுறை சுற்றி வந்து அனைத்தையும் கவனித்துப் பாருங்கள்...
-
கார் ஏற்றுமதியில் ஜப்பானை விஞ்சி முதலிடம் பெற்றது சீனா
Nathamuni replied to ஏராளன்'s topic in உலக நடப்பு
அமேசன், அலிபாபாவில் ஓடர் பண்ணலாமே? 🤔 -
சும்மா விடபடாது உந்த கனடாக்காரரை. கனடாவுக்கான இலங்கை உதவிகள் அனைத்தையும் நிறுத்த வேண்டும். நாலு யுத்த விமானத்தை அனுப்பி, பயமுறுத்த வேணும். இரண்டு ரொக்கெட்டினை ஒட்டவா பக்கமா விடவேணும். கனடா தூதரை துரத்த வேண்டும். அங்கை இருக்கிற இலங்கை தூதரை திருப்பி கூப்பிடவேணும். ராஜதந்திர உறவை கட் பண்ண வேணும். இரண்டு வெருட்டு போட்டால் தான், வாயை மூடிக்கொண்டு இருப்பினம். 🤪
-
மத போதகர் ஜெரோம் பெர்னாண்டோவுக்கு எதிராக ஞானசார தேரர் முறைப்பாடு!
Nathamuni replied to தமிழ் சிறி's topic in ஊர்ப் புதினம்
எனக்கும், இவர்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை: போலிப் பௌத்தர், மகிந்த பெர்சி ராஜபக்சே... அப்ப இது என்ன? மகிந்த தேப்பன்பெயர்: டொன் ஆல்வின் ராஜபக்சே