Jump to content

Nathamuni

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    13647
  • Joined

  • Days Won

    25

Everything posted by Nathamuni

  1. எங்கப்பா ஆர்ப்பாட்டம்? அந்தாளக் கூப்பிட்டு பால்சோறு கொடுத்து, விகாரையை கட்டுங்கோ, கும்பிடுங்கோ, ஆனால் நாங்கள் விவசாயம் செய்த நிலங்களை கையகப்படுத்தாமல் திருப்பித்தருவதை நீங்கள் உறுதிப்படுத்துங்கோ மாத்தையா என்று குழையடிக்க, அவரும் வலு சந்தோசமா, செய்யிறன் எண்டு கிளம்பீட்டார்.
  2. ரயில் ஓடுற திகதி சொல்லுவாங்கள் எண்டால் கடன் வாங்கிற கதைய சொல்லுறாங்கள். 🥱
  3. மகிந்தாவுக்கு ஆதரவாக வந்து சாத்து வாங்கியவர் மோசடி வழக்கில் உள்ளே. மகிந்தா ராஜபக்சேவின் இறுதி நம்பிக்கையினை சிதறடித்த இந்த படம், மகிந்தா காகண்டகம என்னும் கொழும்பு மாநகரசபையில் முன்னாள் கவுன்சிலர், அவரது தீவிர ஆதரவாளர், இப்படி சாத்து வாங்கி, கோவணத்துடன் வீதியில் விழுந்து கிடந்த படம் வெளியாகி உலகம் எங்கும் பரவியது. கொம்பனி தெருவில் கட்டப்படும், நகர அபிவிருத்தி சபை அமைக்கும் (கோத்தாவின் திட்டம்) ஆடம்பர வீடுகளில், ஒரு வீட்டினை தருவதாக வாக்கு கொடுத்து இந்த பெரும்தொகைப் பணத்தினை ( 7 கோடி ) கண்டியில் வாழும் ஒருவரிடம் இருந்து பெற்று இருந்தார். சொன்னபடி தராமல் ஏமாத்தியதால், அவர் போலீசில் முறைப்பாடு செய்ய,கைதாகி உள்ளார்., ஜூன் 24 வரை விளக்கமறியலில் கம்பி எண்ணிக்கொண்டிருக்கிறார். மகிந்தா ஆதரவாளர்கள் எல்லோரும் காசு அடிப்பதில் வலு விண்ணர்கள் தான். நாட்டினை திவாலாக்கி விட்டு, நாட்டுப்பற்று பேசுவார்கள். https://www.dailymirror.lk/breaking_news/Mahinda-Kahandagama-remanded-for-alleged-Rs-7mn-fraud/108-261499
  4. அம்மன் ரோடு பலாலி வீதியையும், பருத்தித்துறை வீதியையும் (வீரமாகாளி அம்மன்) இணைக்கிறது. பழம் ரோட்டில் சந்திக்கவில்லையே. பழம் ரோடு, அரசடி வீதியையும், பலாலி ரோடினையும் (பரமேஸ்வரா சந்திக்கு முன்) இணைக்கிறது. பழம் ரோட்டில் விதானையார் ஒருவர் இருந்தவர், புங்குடுதீவு பூர்வீகம். இரண்டு மகன்மார், ஒரு மகள், மனைவி டீச்சர்.
  5. 13ம் வேணாம், கேடயமும் வேணாம். மெல்ல, மெல்ல, வெளியக சுஜ நிர்ணயம் என்று சம்பந்தர் தொடங்கியதை, இறுக பிடித்து தொங்க வேண்டும். அப்போதுதான் சிங்களம் இதுக்கு இணங்கி ஓடி வரும். ஆனால் அது தாமதம் ஆன விடயம் என்று சொல்லி நிற்க வேண்டும்.
  6. இந்தாள் எங்க தண்ணியப்போட்டுப் படுத்தெழும்பி வறாரே? இந்திய ரூபாயை இலங்கையில் ஏற்றுக்கொள்ளலாம் எண்டு இலங்கை மத்திய வங்கி சொல்லியே மூன்று மாதமாகிறது
  7. சட்டப்படி pow செல்லும். ஆனால், வெளிநாட்டில் இருந்து அனுப்பும் நபர், தயாரிக்கும் புறக்கிராசியாரை, வாங்கும் பார்ட்டி புறக்கிறாசியார் தொடர்பு கொண்டு மேலதிக செக்கிங் செய்ய வேணடும். எங்கை இருக்குது?
  8. சதுரங்க வேட்டை என்ற படம்மூலம் சகலத்தையும் புட்டு, புட்டு வைத்தாலும், இவர்கள் திருந்திய பாடு இல்லையே. 🤦‍♂️
  9. அப்புறம் நம்ம மட்டு ஒருவர், கந்தர்மடத்தில் இடம் வாங்கி விட்டுள்ளார். வீடு கட்டப்போறாராம். வெளியால சொல்லிப்போடாதீங்கோ... 😍🤪
  10. முன்பு சீராளன் கார் நிறுத்துமிடம் முன்பாக ஒரு பெற்றோல் நிலையம் புதிதாக உள்ளது. சீராளன் கார் நிறுத்துமிடம் வலதுபக்கம் இருப்பதாக நடந்து போனால், அரசடி, கந்தர்மடம் சந்தி மூலையில் உள்ள கடை தொகுதியை, கனடா இந்திரன், (ரம்பா புருசன் ) 6 கோடிக்கு வாங்கி, பெரிய கட்டிடம் உருவாகிறது. சின்னத்தம்பி தேத்தண்ணி கடை இருந்த இடத்தில ஒரு துணிக்கடை... சிறுபிள்ளைகளின் உடைகள் தொங்குகின்றன. முன்னால், சலூன் இருந்த இடத்தில், மட்டும் ஒரு பழைய கடை இருக்கிறது. போயிலை தொங்குகிறது. அது மட்டுமே பழைய நினைவை கொண்டுவரலாம்.
  11. யாழ்ப்பாணத்தில் கள்ளக்காணி, கள்ள உறுதி பிரச்சணை கூடிப்போச்சு! அரசாங்கமும், விற்பவர், வாங்குபவர் படம், கையெழுத்துக்கு மேலே கைநாட்டு என்று கேக்குது... கள்ளப் பிரக்கிராசிமாரா..... வேற..
  12. இங்கே ஒரு வித்தியாசமான மோசடி நடக்கிறது. சட்ட ரீதியாக பிழை பிடிக்க முடியாத ஒரு வேலை. விசா ஸ்பான்சர் பண்ண ஒரு நிறுவனம் லைசென்ஸ் எடுக்க வேண்டும். கொரோனா காலத்தின் பின்னர், அரசு கொடுத்த லோனை செலுத்த வழியில்லை என்று, துண்டை போட்டுக் கொண்டு, திவாலாகின்றன. இப்படி திவாலாக முன்னர், விசாக்களை ஸ்பொன்சார் பண்ணி, காசை வாங்கிக் கொண்டு திவாலாக்குகிறார்கள் போல தெரிகிறது. அவர்கள் காசு வாங்குவதை உறுதிப்படுத்த முடியாததால், உள்ளே வந்தவர்கள், கொம்பனி இல்லை என்று நிக்கும் போது, சட்ட ரீதியாக ஒன்றுமே செய்ய முடியாது. அப்படி உள்ளே வந்தவர்கள் வேறு கொம்பனிக்கு விசாவை மாத்த வேண்டியது தான். ஆனால் விபரம் இல்லாவிடில், நம்ம புரோகிராசி மாருக்கு கொடுக்க பணம் வேணுமே.
  13. சுகாதார அமைச்சர், எங்கண்ட கெஹலிய ரம்புக்வெல்ல, மருந்துக்கொம்பனிகளை ஆய்வு செய்யிறன் என்று இந்தியா போகும்போது, டெய்லி மிரர் பத்திரிக்கையில் கமெண்ட் போட்டார்கள்.... பம்மாத்து மன்னார் அன் கம்பெனிகளிடம் லஞ்சம் வாங்கிக் கொண்டு, பாவனைக்குதவாத மருந்துகளை இறக்கப்போறார் எண்டு... அப்படியே நடக்குது... இன்று தவறான மருந்துகள் காரணமாக இருவர் இறந்துள்ளனர் அண்மையில் இலங்கையில் இருந்த போது.... நேரில் கண்டது... ஒரு உறவு அக்காவுக்கு மார்பு தொடர்பில் நோய். அதற்க்கான biopsy எடுத்திருக்கிறார்கள். அதுவும் தனியார் வைத்தியசாலையில். அந்த ரிபோர்டினை எடுக்க ஒரு திகதியில் போயிருக்கிறார். சரியான பிஸி. அடுத்த கிழமை வாருங்கள் என்று சொல்லி இருக்கிறார்கள். அவ்வாறு சொன்னவரே லஞ்சமாக பணம் 3,000 ரூபா வாங்கிக்கொண்டு உடனே கொடுத்திருக்கிறார். அதில், அவருக்கு ஆரம்ப நிலை புற்று இருக்கிறது என்று தெரிந்தும், பணத்தினை பறித்திருக்கிறார்கள், மனிதாபிமானம் இல்லா மிருகங்கள். பலருக்கு இந்த வித வருத்தங்கள் வருவதன் காரணம், மீன் முதல் இறைச்சி வரை, கெட்டுப்போகாமல் இருக்க, அல்லது கெட்டுப்போனது தெரியாமல் இருக்க இரசாயன கலவை சேர்க்கப்பட்டு வருகிறது. அண்மையில் மட்டக்கிளப்பில் கனடா செல்லவிருந்த பெண் மரணித்தத்துக்கும் இதுவே காரணம் என்கிறார்கள். இரசாயன கலவை அதிகமாக சேர்க்கப்பட்ட மீன், அதிகாரிகள் தூரத்தில் வந்தது, கண்டு தூக்கி எறியப்படுள்ளது. அதனை, அட நல்ல மீனாக இருக்கிறதே என்று எடுத்துக்கொண்டு போயிருக்கிறார், தாயார். இலங்கை மிக மோசமான எதிர்காலத்தினை நோக்கி நகர்கிறது. ஒருபக்கம் இனவாதிகள், பிக்குகள், இனவாதம் பேசி மீண்டும் அரசியலுக்கு மகிந்தா கோஸ்டியை கொண்டு வர முயல்கிறது. இன்னொருபக்கம், இந்திய - சீன மோதல். மேலதிகமாக அமெரிக்கா... எங்கே போகப்போகிறதோ தெரியவில்லை.
  14. இப்போது, கோத்தா வெற்றிக்கு பாவித்த அதேவழியை, இனத்துவேச வழியை, மிஞ்சியிருக்கும் மொட்டுக் கோஸ்டி முயல்கிறது.
  15. யாருக்கு மானம் போச்சு? அதிகார பதவியில் இருக்கும் போது தலைகால் புரியாமல் ஆட்டம் போட்டால் பிறகு மானம் போச்சே என்று அழுது புலம்புவதில் பயன் இல்லை. இந்த ராஸ்கல், பின்புலம் இல்லாத அபலை பெண்களை எப்படி பயன்படுத்தியிருப்பான்? தனது தவறை மறைக்க இன்னொரு எஸ்பியின் வேலையையும் காவு வாங்கி விட்டானே! இதுக்கொரு சிற்றுவேசன் சாங்... பட்டபின்னாலே வருகின்ற ஞானம்.... பலன் ஒன்றும் கிடையாது.
  16. கொழும்பு, வெள்ளவத்தை விசா பிள்ளையார் கோவில் ஓனர் சிங்களவர் (ஐடியா கொடுத்த மனைவி தமிழ்). மூவின மக்களும் வருகின்றனர். உண்டியல் நிரம்புகிறது. பக்கத்தில் விகாரை. ஓனர் சிங்களவர் என்பதால், பிக்குக்கும், அவருக்கும் உண்டியலில் டீல். ஆக எதிர்ப்பு இல்லை. வடிவாக பார்த்தால், விகாரையின், மூலையில் பிள்ளையார் இருப்பது தெளிவாகும். வெளிநாடு போகும் பயணிகள், யாழ் செல்லும், பஸ், ரயில் பயணிகள், தேங்காய் உடைத்து, துன்னூறு பூசி, உண்டியலில் காசு போட்டு கிளம்புவார்கள். நல்ல யாவாரம்.
  17. இதுக்கு சான்று என்ன? சான்று தரமுடியாது என்று புரிந்தே எதிரிகளை வீழ்த்த முணைகிறார்களோ? அதுவும், தனியறையில் இல்லை, பாராளுமன்ற படிக்கட்டில்... இதெல்லாம் நம்பிற மாதிரியா இருக்குது?
  18. இவருக்கு வந்த சிக்கல், அந்த பெண்மணியின் கணவர், மத்திய உள் துறை அமைச்சில் பெரிய அதிகாரி. அவர் மத்திய அரசு ஊடாக கொடுத்த அழுத்தில் தான் இவரும், அந்த பெண் SP யை பயமுறுத்தி தடுத்த இன்னுமொரு SP யும் சிக்கிக்கொண்டார்கள். அவருக்கு இது தேவையில்லாத சோலி. ஆனால், அந்த பெண்ணின் பின்புலம் தெரியாமல் சீண்டிய DSP இப்ப, முழுசிக் கொண்டு தலையை தடவிக்கொண்டு நிப்பார். 🙄
  19. இப்போது, ஆங்கிலம், சிங்களம் பரவலாக தெரிந்த நிலையில், 70, 80, 90 களில் தமிழ் மட்டுமே தெரிந்தும் சமாளித்த மாணவர்கள் நிலை இன்று இருக்காது. இது வேறு பிரச்சனையாக இருக்கலாம்.
  20. இந்திய பிணை, மேல்முறையீட்டு விடயத்தில் ஒரு சிக்கல். பிரிட்டனில், மேன்முறையீடு செய்யும்போது, பிணை கிடைக்காது, உள்ளே இருந்துதான் செய்யமுடியும், இந்த வகையில் ஒரு சலுகை, மேல்முறையீடு செய்யும் போது, தண்டனை அதிகரிக்காது. ஆனால் இந்தியாவில், பிணை எடுத்து வெளியே இருந்து மேல்முறையீடு செய்யும் போது, மேல்முறையீட்டு நீதிமன்று, தண்டனையினை அதிகரிக்கலாம். இதுவே சரவணபவன் ராஜகோபாலுக்கு நடந்தது. 7 வருட தண்டனை, ஆயுள் தண்டனை ஆகியது. தடா ரஹீம் போன்ற, உள்ளே இருந்த, சிஸ்டத்தின் மறுபக்கத்தினை கரைத்து குடித்த சிறைக்கைதிகள், ராஜகோபாலிடம், அய்யா, பேசாமல் இருந்து விடுங்கள், நன்னடத்தை, பெரு வியாபாரி என்று சொல்லி, இரண்டு வருடங்களில் வெளியே வரலாம். மேல்முறையீடு செய்யும் போது சிக்கல் வரலாம் என்று சொல்லியும், தமது புலமையை உலகறிய செய்யும் பேராசையில், மீடியாவில் அதிகமாக கவர் செய்யப்பட்ட ராஜகோபால் கேசினை அய்யா வெல்லலாம் என்று ஆசை காட்டி, மேல் முறையீட்டில் ஆயுள் கொடுக்கப்பட்டது. அதே சிக்கலே இவருக்கும். ஸ்டார்டிங்.... பாட்டு பாடச்சொல்லி கேட்டிருக்கிறார். கண்ணே, உன் இசை கேட்க்க ஓடோடி வந்தேன்.... பாடு, என் மனம் குளிர பாடு....
  21. 😜 இலங்கையில் நடந்த இந்த கொடுமைய எங்க போய் சொல்லுறது? 61 வயசு அதிகாரி, அம்மணி கலயாணம் கட்டவில்லை. பார்க்க நல்லா இருந்திருக்கிறார் போல. அவருக்கு ஒரு 47 வயசு டிரைவர். அம்மணி ஓய்வு பெற்றுக் கொண்டு கிளம்ப மனசு கேட்கவில்லை. அட வாழ்க்கைல ஒண்டையுமே பார்க்காம, மிஸ் பண்ணி போய்ச் சேரப்போகுதே. மண் தின்னப் போற உடல்.... வீட்டை போய், ரூமை பூட்டிக் கொண்டார். நிர்வாணமாகி தன்னைப் படம் பிடித்துக் கொண்டார்.... முக்கியமாக.... 💪 அம்மணிக்கு அனுப்பி விட்டார். எவ்வித உதவிக்கும் தயார். காதும், காதும் வைத்தது போல ரகசியமாக இருக்கும். எப்ப வேணுமெண்டாலும்.... கூப்பிடுங்கோ மேடம்.... டிரைவர் கம்பி எண்ணுகிறார்...😁🥱 A driver who is working for a ministry was taken into custody by Veyangoda police today for sending pornographic pictures and exposing his person on video calls through WhatsApp to a retired Administrative Officer of the ministry. The 61-year-old spinster was a resident of Divulapitiya area and the 48-year-old suspect is from Badulla area and a father of three children. Investigations revealed that he worked as the driver of the said Administrative Officer’s official vehicle when she was in the service. A senior police official said the suspect would be produced in court on the charge of producing and displaying pornography which is considered sexual abuse. Veyangoda police are conducting further investigations.
  22. யாழ்ப்பாணத்தில் எனது அவதானிப்பு, பலரிடம் கேட்ட விபரங்களின் அடிப்படையில், எனது அபிப்பிராயம், (தமிழரோ, சிங்களவரோ இனரீதீயாகப் பாராமல்.... ) போலீஸ் சேவைக்கான பெரும் தேவை உள்ளது. கோவில் அய்யரின் மகன் போதை ஊசி தனக்கு தானே செலுத்தி மரணமடைந்தார். மோட்டார்சைக்கிளில் ரேஸ் ஓடி டிப்பர் லாரியில் மோதி ஒரு மோட்டார் சைக்கிள் காரர் அவ்விடத்திலே பலி. கெல்மெற் போட்டு வருவது. பெட்டையளைக் கண்டால் கழட்டி, ஓட்டம் காட்டுவது, ஆபாச வர்ணனை செய்வது என்று ஒரு கூட்டம். மோட்டார் சைக்கிள் காரர்கள் டபாரெண்டு வாளை உருவும் வாள்வெட்டுக் கோஸ்டியாய் இருக்கலாம் என சக வீதிப்பயணாளிகள் பயத்தை அவர்கள் சாதகமாக்கி வெருட்டுகிறார்கள். 'விலாசம் தெரியுமே' கதை தான். இவர்களே களவு, சண்டித்தனம், பெண்களை அவமதித்தல் போன்ற பல விடயங்களுக்கு பொறுப்பு. ஆகவே இதனை இன ரீதியாகப் பார்க்க முடியவில்லை. வேகமாக ஓடிச் சிக்கியிருக்கலாம்.
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.