Jump to content

Nathamuni

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    13647
  • Joined

  • Days Won

    25

Everything posted by Nathamuni

  1. எனக்கு வரலாறு படிப்பிக்கிறீரா அல்லது உமக்கு நான் வரலாறு படிப்பிக்கவா? ரணில் கடுப்பில் கொடுத்த டோசில் விலகினார் மானஸ்தன். 270 ஏக்கர் நிலத்தை தமிழர் பகுதியில் சுவீகரிப்பதற்கான நியாயத்தை சொலல முயன்ற போதே, அது குறித்த ரணலின் கேள்விகளுக்கு மேம்போக்கான பதில் கொடுக்கப் போயே, ரணில் கடுப்பானார். எவ்வாறாயினும் தொல்லியல் திணைக்கள அண்மைய செயல்பாடுகள் இனவாதம் கொண்டவை என்பது ரகசியமல்ல.
  2. சிங்களவனுக்கும், உலகத்தையே கட்டியாண்ட பிரிட்டிஸ் உளவமைக்கும் இதுதான் வித்தியாசம். பிரிந்து போக வை தேர்தல் எண்டு நாண்டுகொண்டு நிண்ட இரண்டு பேர் கதை சரி!
  3. தமது சட்டபூர்வ நிலை புரியாத இவர்களுக்கு சரியான சட்ட ஆலோசனை கிடைக்கவில்லை என்பது தெளிவாகிறது. 1. கொலைக்குற்றச் சாட்டில் நீதிமன்ற தண்டணை பெற்றவர்கள், அதாவது கிரிமினல் குற்றவாளிகளாக பதிவுகளைக் கொண்டவர்களை அகதியாக எந்த வெளிநாடும் ஏற்காது. ஆகவே அது பிரயோசனம் இல்லா முயல்வு. (அகதியாக வந்த கிட்டர், கருணா அம்மான் திருப்பி அனுப்பப்பட்டார்கள்) 2. இந்திய அரசு, குடிவரவு சட்டத்தின் கீழ் விசா இல்லாதவர்களாக அல்லது வழங்கப்பட முடியாதவர்களாக தடுத்து வைத்துள்ளது. ஆகவே தமிழக அரசு செய்ய எதுவும் இல்லை. 3. இவர்களுக்கு உள்ள ஓரே வழி இலங்கை திரும்புவதே. இதுக்கு மட்டுமே, UNHCR உதவக்கூடும். 4. இவர்களது இலங்கை உறவுகள் தமது எம்பிக்கள், டக்லஸ், அங்கஜன் ஊடாக இலங்கை அரசை, ஜனாதிபதி ரணிலை அணுகி அவர்கள் நாடு திரும்ப டெல்லியில் உள்ள இலங்கைத்தூதரகம் ஊடாக கோரிக்கை வைக்கவேண்டும். 5. எதுவுமே நடக்காவிடில், சென்னை உயர்நீதிமன்றில் தம்மை, தண்டணை காலம் முடிவுற்றதால், தாயகத்துக்கு டீபோட் பண்ண மத்திய அரசுக்கு உத்தரவிடமாறு கோரலாம். 6. தாயகம் திரும்ப உதவுமாறு UNHCR இடம் கோரலாம். இதை எவ்வளவு விரைந்து செய்கிறார்களோ அவ்வளவுக்கு நல்லது. வேறு வழி எதுவுமே சாத்தியமில்லை, மேலும் இலங்கையில் சிறை செல்லாதவாறு காக்க UNHCR உதவக்கூடும். (அங்கே தேடப்படுவோர் அல்ல என்பது முக்கியமானது)
  4. அல் சப்ரி தான் ஒரு இஸ்லாமிய சிறுபான்மையினர் என்பதை மறந்து, கொழும்பு மேட்டுக்குடி போல நிணைத்து பேசுகிறார். ஆடுகிறார். இப்படி, சிங்கள பெளத்தத்துக்கு காவடி தூக்கி ஆடிய, சிறில் மத்தியூ, நெவில் பர்ணாண்டோ எல்லாம் என்ன ஆனார்கள், அவர்களது மதகுரு தேவாலயங்களை காக்க திண்டாடுறார். இவரது பாஸ் கோத்தா, கொரோணாவால் இறந்த இவர் சமூக மக்களை எரித்தார். விசுவாசம் காரணமாக அதையும் பாராட்டுவார் போலுள்ளது. அடடா, பெளத்தம் நம்மை வெளிவிவகார அமைச்சராக்கி அழகு பார்க்கிறது என்று புளங்காகிதம் அடைகிறார். பெளத்தம் சரியான நேரத்தில் தலையில் கொட்டும்.
  5. உந்தாள் குலைப்பதே வாய்கரிசிக்குத் தான் எண்டபடியால், 25 இலட்சம் கொடுக்கேக்க, ஒரு 5 இலட்சம் எறிஞ்சால், ஆள் நித்திரையாப் போடுவார்.
  6. அவருக்குத் தெரியுமே, ஆள் உரும்பராய் எண்டு? இப்படித் தான் அனந்தகிருஸ்ணன் எண்டு மலேசிய பெரும் தனவந்தர். யாழ் கந்தர்மடம், குமாரசாமி வீதீல இருந்து போன இந்த தலைமுறைக்காரர். எந்த நாட்டில் முன்னேறி வந்தார்களோ அதுக்கு உண்மையா இருப்பர்.
  7. அல்லாட காவல். அனுபவமில்லாத கணவருக்கு யாரு சொல்லிக் கொடுத்தார்களாம்? அந்தக்காலம் வேற... இந்தக்காலத்தில கண்ட, கண்ட கருமாந்திரங்களைப் பார்த்து அது தான் சரியெண்டால் என்ன செய்யிறது அப்பாவிப் பெண்கள். இதுக்காக தான் கல்வி வேண்டும் என்கிறார்கள். அண்மையில் ஒரு பாலிவூட் நடிகை, இயற்கைகாகு மாறான உறவுக்கு வற்புறுத்துகிறார் என கலியாணம் செய்த மறுவாரமே பிரிந்தார். இந்த அம்மணிக்கு பாலியல் கல்வி கிடைத்திருக்குமோ எண்டு யோசித்துக் கொண்டிருக்கிறன். 🤔
  8. என்ன மகிழ்ச்சித்தகவலானாலும், சிஸ்டம் புரியாதவர்களை சுத்தி பணம் பறிக்க ஒரு கூட்டமும், பணம் துழைக்க ஒரு கூட்டமும் இருக்கவே செய்யும். 5 சதம் செலவே இல்லாத விசாவுக்கு £65,000 கொடுத்து வந்து அழும் நபரைப் பார்த்தோமே
  9. டக்கியர் நிலைப்பாடு சரியென்று சொல்லவில்லை. ஆனால் சொன்ன பழமொழி சரியானது. இங்கே, ஆரம்பத்தில் அங்கஜன், சுமந்திரன் மாவை இருந்தார்களே! ஏன் இப்போது இல்லை?
  10. தம்பி, நல்லதம்பி, டக்கியர் சொன்ன புத்திமதியை கேட்டீர்களா? அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு. தாம் மட்டுமே போராடுறோம் என்று பறைசாற்ற முயன்று மாற்றுக்கட்சிகள் வராமல் மக்களும் காணாமல், போலீஸ்காரர் பிரித்து மேய்ந்து கைது வரை போய்விட்டார்கள்.
  11. உங்கட ஆக்கள் ஐஎஸ் நிகழ்ச்சி நிரலில சிக்கினது பத்தி.... வாய் திறக்க மாட்டாரே?
  12. பிரிட்டனில் 115 மில்லியன் பவுண் குலுக்கல் சனிகிழமை. ஒருவருக்கு விழுந்திருக்கு
  13. நானும் ஏதோ, ஆயிரம் ஆண்டுகளா சாப்பிடும் மண் சட்டி சமையல் பிழையோ என்று பார்த்தால், வடக்கத்தி ஹிந்திக்காரன் கம்பெனி, தமிழனின் கறி சட்டி செய்ய வெளிக்கிட்டு, கையை சுட்டு இருக்கிறார்கள். 🤦‍♂️
  14. இந்த மத்திய கிழக்கு திருமணங்களில் பெண்களும் அந்த பகுதி என்றால் ஓகே. ஒரு மத்திய கிழக்கு எண்ணெய் பில்லியனர் ஒருவர், பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தில் பயணித்த போது, முதல் வகுப்பில், அவருக்கு என ஒதுக்கப்பட்ட அழகான பணிப்பெண்ணை காதலித்து கலியாணம் கட்டிக்கொண்டார். ஏதோ உண்மையான காதல் என்றார்கள். ஒரு பையன் பிறந்தபின்னர் கசந்து போனது உறவு. பயலை பறித்துக்கொண்டு தாயை அனுப்பி விட்டார்கள். ஆனால் தாய், பிள்ளையை பார்க்க முடியாமல் தவித்துப்போனார். அங்கே போனார் பிள்ளையை பார்க்க. தகப்பன் வெளிநாடு போன சமயம் பார்த்து, பிள்ளையுடன் லண்டன் வந்துவிட்டார். திரும்பி வந்த தகப்பன், நடந்ததை அறிந்து, நரித்தனமாக, பிள்ளையுடன் உலகம் சுத்தி வா என்று பணம் அனுப்பி விட்டார். உலகம் சுத்தும் போது, இடையே பிரைவேட் ஜெட்டினையும் பயன்படுத்துமாறு ஒழுங்கு செய்தார். ஒரு கட்டத்தில், அந்த விமானம், நேராக அவரது நாட்டுக்கு அவர்களை கடத்த, அங்கே, லாவகமாக பிள்ளையை பிரித்து, தாயை, பிரிட்டனுக்கு அனுப்பி விட்டார்கள். மாறு வேடத்தில் போய், கடத்த முயன்று, சிக்கி, பிரிட்டிஷ் அரசு தலையிட்டு, தாயின், பாசம் என்று சொல்லி, அவரை சிறை செல்வதில் இருந்து மீட்டது. மகன் 16 வயது ஆகியதும் என்னிடம் வரட்டும், அவ்வளவுதான் என்னால் முடியும் என்று, அவரும் இறுதியில் வேறு ஒருவரை கட்டிக்கொண்டு பிள்ளைகளையும் பெற்றுக் கொண்டார். இந்த தாயின் தவிப்பும், அந்த எண்ணெய் பில்லியனைர் ஆணவமும் பிரிட்டிஷ் பத்திரிக்கைகளில் வெளிவந்து இருந்தன. பொதுவாக ஆங்கில பெண்கள் அவர்களை இப்போது நம்புவதில்லை. இருந்தாலும் பணம் என்றால் வாய் பிளக்கும் பெண்களை காணாமலா இருக்கிறோம்.
  15. நல்லூரை தலைநகராக கொண்டிருந்த யாழ்ப்பாண ராசதானி, சிங்களத்துக்கு கடுக்காய் கொடுத்ததன் முக்கிய காரணமே, தமிழகம். ஏதாவது பிரச்சனை என்றால், மூவேந்தர்களில் யாராவது ஒருவர் உதவிக்கு வந்து கொண்டிருந்தார்கள். ராசராச சோழன், பொலன்னறுவையையே பிடித்து, சிங்களவர்களை தென் பகுதிக்கு விரட்டினான். 1520 களில் தமிழகம் தெலுங்கர்களின் விஜய நகர சாம்ராஜ்யத்திடம் வீழ, சிங்களமும் மண உறவுகளை அதனுடன் வைத்துக்கொள்ள, போர்த்துக்கேயரிடம் யாழ்ப்பாண ராசதானி வீழ்ந்தபோது, தமிழகத்தினை ஆண்ட தெலுங்கு விஜய நகர ஆட்சியாளர்கள் கண்டுகொள்ள வில்லை. இந்த நிலையே, கருணாநிதி காலத்திலும் நடந்தது என்பதை சொல்ல வேண்டியதில்லை. ஆகவே, தமிழகத்தில், தமிழர் ஆட்சி மலர்ந்தால் மட்டுமே ஈழ தமிழர்களுக்கு பாதுகாப்பு என, தூரப்பார்வையில் உணர்ந்து கொண்ட பத்திரிகையளர்கள் பலர். அவர்களில் ஒருவர் இப்போது தமிழகத்தில் வாழும் திருநாவுக்கரசு. இவர், ஈழத்தின் சாவி, தமிழகத்தில் என்றார், வன்னியில் இருந்து ஒளிபரப்பாகிய தொலைக்காட்சி நிதர்சனத்தில். வீரா என்பவரே இவரை பேட்டி கண்டவர். விக்கி சொல்வது, மத சார்பு கருத்து. அது வேலை செய்யுமோ தெரியவில்லை. ஏனெனில், இந்தியாவில் பௌத்தம் கொஞ்ச நஞ்சமாக தப்பித் பிழைப்பதே, புத்தர், விஸ்ணுவின் ஒரு அவதாரம் என்று சொல்வதன் மூலமாக. தென் இந்தியாவில், பௌத்தம் துடைத்தெறியப்பட்டது. அங்கிருந்து தப்பி வந்த பிக்குகளே இலங்கையில் பௌத்தம் அழியாமல் பார்த்துக் கொண்டவர்கள். ஆகவே அவர்கள், இந்தியா குறித்து கவலை படுவதில் நியாயம் உண்டு.
  16. இருபது கோடி இந்திய ரூபா மதிப்பான 21.5 கிலோ தங்கம். தாராப்பா, இலங்கை பொருளாதார கஸ்டத்தில இருக்குது எண்டது? https://www.dailymirror.lk/breaking_news/Indian-Coast-Guard-DRI-seize-INR-20-crore-worth-of-gold-smuggled-from-Sri-Lanka/108-260288
  17. நானும் சென்னை போய் யாழ் போகலாம் எண்டால் டிக்கற் இல்லை. ஏஜன்சிக்காரர் மொத்தமா புக் பண்ணி விக்கிறார்களாம். நம்பி போகேலாது
  18. என்ன பகிடி விடுறியள்? 😁 உள்நாட்டு விமானம் பறக்காட்டி, பறக்கிற ஒரு விமானமும் சென்னை எண்டபடியால சர்வதேச விமான நிலையம் தானே! அது சரி.... சிங்களவன் கைகாசைப் போட்டு தமிழனுக்கேன் கட்டப்போறான். 5 நாளா, 7 நாளா பிரச்சணை இல்லை. நீங்களே கட்டி, நீங்களே பறவுங்கோ எண்டு சொல்லீயாச்சு.... ஓகே..
  19. Domestic Violence என்ற விடயம் மிக சீரியசாக மேற்கில் பார்க்கப்படுகிறது நடிகர், ஜொனி டெப் தன்னை தாக்கியதாக மணைவி சொல்ல, கடைசியில் தாக்குதலுக்குள்ளானவர் கணவர் என்று உலகம் கண்டது!
  20. கருணாநிதி 2008 முதல் சக்கர நாற்காலி. சம்பந்தர் இப்பத்தான் கதிரைக்குள்ள சுருண்டுவிட்டார். இவர், மேடைக்கு வரும் போதே, ஒடுவது போலவே வருவார். இவர் விழுந்தெழும்ப, அடுத்த கிழவர்..... டொனால்ட் ரசிப்பார்...
  21. ஆடி மாதம் யாழ் கதி.... முடிவு தெரியும் மட்டும் நிரப்புவமே 🤣
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.