Jump to content

Nathamuni

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    13647
  • Joined

  • Days Won

    25

Everything posted by Nathamuni

  1. இந்திய ராஜதந்திரத்தினை ஆட்டம் காண வைக்கும் சிங்கள ராஜதந்திரம் இலங்கை, இந்திய ராஜதந்திர போரில், இலங்கை என்னும் சிறு வண்டு, இந்தியா என்னும் யானையின் ஒரு காதில் புகுந்து மறு காதால், வெளியேறும் பலே விளையாட்டினை பல முறை செய்து வருகிறது. ஒவ்வொரு முறையும் இந்தியா ஏமாறுவது வழக்கமாகி வருகிறது. முதலில் உலகம் எங்கும் இல்லாத வழக்கமாக, இலங்கையில் இருந்து பிரிட்டிஷ் காலத்தில் வந்த தோட்ட தொழிலாளர்கள் 5 லட்ச்சம் பேரை திருப்பி பெற வைத்தது. அதே இந்தியா பின்னர், உகாண்டாவில் இருந்து வெளியேற்றி டெல்லிக்கு அனுப்பப்பட்ட, இந்தியர்களை, பிரிட்டனுக்கு அனுப்பி விட்டிருந்த்தும் குறிப்பிடத்தக்கது. தமிழர் இயக்கங்களை வளர்த்து ஆயுதம் கொடுத்த இந்தியாவினை படைகளை அனுப்ப வைத்து, அவர்களுடன், முக்கியமாக புலிகளுடன் மோத விட்டது சிங்களம். இறுதியில், இந்தியாவிடம் பெரும் உதவி வாங்கி, அவர்களுடன் சேர்ந்து முடித்து வைத்தது. இலங்கை வடக்கே, விமானம் பறக்கவும், கப்பல் ஓடவும் வைக்கிறது. இது தொடர்பில், விமான நிலைய விஸ்தரிப்பு, காங்கேசன் துறைமுக மீள் கட்டுமானம் இந்தியாவின் தலையில் கட்டி விட்டது சிங்களம். இந்திய சீன போரில், சீனாவுக்கு ஆதரவு தந்துகொண்டே, ராஜதந்திர பேச்சில் வென்று, கச்சதீவினை இலங்கைக்கு சொந்தமாக்கிக் கொண்டது சிங்களம். சீனாவினை கொண்டுவந்து இறக்கி, அதனை காண்பித்துக் கொண்டே, இந்தியாவிடம் இருந்து கடன் முதலிய பல உதவிகளை பெறுகின்றது. முக்கியமாக, யுத்த விசாரணைகளில் இருந்து, தப்ப, இந்திய உதவிகளை பயன்படுத்துகிறது. மேலைநாடுகளின் சார்பான ரணில், இப்போது அமெரிக்காவினை உள்ளே கொண்டு வந்து, சீனாவினையும் சமாளித்து, இந்தியாவுக்கு டிமிக்கா கொடுத்துக் கொண்டு இருக்கிறார். 13 குறித்து பேசிக்கொண்டே, அதுக்கு எதிரான போராட்டங்களை தூண்டி, அதனை காட்டியே இழுக்கிறது. 36 வருசமாக. மூன்று பெண்டாட்டிகளை வெற்றிகரமாக சமாளிக்கும் கணவன் போல, இந்தியா, சீனா, அமெரிக்கா என சமாளிக்கிறது சிங்களம். சிங்களத்தின் ராஜதந்திரத்துடன் எந்த காலத்திலும், இந்திய ராஜ தந்திரம் வெல்லப்போவது இல்லை போலவே தெரிகிறது. சிறப்பாக செயல் படுகிறது.
  2. 9 என்ன, 9? 39 ஐயும் எடுக்கலாம். கொஞ்சம், காசு செலவழிக்க வேணும். திமுக, அதிமுக கொடுப்பதை தடுக்கவேண்டும்.😜
  3. இதெல்லாம், எங்கண்ட உடான்ஸ் சாமியார் வேலை எண்டால், தாரும் நம்பவா போறியள். ஆள் டபக்கெண்டு தலைமறைவாப் போனதையும் சேர்த்துப் பாருங்கோ! 😇
  4. இந்த நாய், பூணை சாப்பாடுகள் மிக மோசமானது. மனிதர், சுவைத்துப் பாரார் என்று, மனிதர் சாப்பிடாத பல ஜயிட்டங்களை அரைத்துக் கலப்பார்கள். உதாரணமாக, குடல் பிரட்டல், மூளைப் பொரியல் , ரத்தவறை என்று நம்ம ஊரில் வறுமை காரணமாக உண்பவைகளை, வெள்ளையர் சீண்டுவதில்லை. அவைகள் வளர்ப்பு பிராணிகள் உணவாகும். பணம் இருப்பவர்கள், இதுதான் வேண்டும் என்று ஓடர் பண்ணுவர்.
  5. அதுகளுக்கும் வருத்தங்கள் வருகுது. நாய் வளர்ப்பவர்கள் பேசும் போது, சொல்லும் விபரங்களை கேட்கும் போது ஆச்சிரியம் வருகிறது. பிரஷர் இருக்குது, சுகர் இருக்குது..... ஆக, கண்டுபிடிக்கிற மருந்துகளில, அதுகளுக்கும் சுகமாக கொடுக்க வேணும்.
  6. ஒரு இலட்சமப்பு... வெவ்வாள் தின்ற சீனனுக்கு, குரங்காசை வந்துட்டுது போல....
  7. தமிழில், பல எழுத்து சீர்திருத்தங்கள் வந்துள்ளன. இத்தாலிய மதகுருவும் வீரமாமுனிவர் என்ற தமிழ் பெயரை சூடிக் கொண்டவர் கூட பல சீர்திருத்தங்களை பிரேரிக்க, தமிழ் உலகு ஏற்றுக் கொண்டது. கடந்த நூறாண்டில், உதாரணமாக, ன வுக்கு சுழியிடுவதை விடுத்து 'னை' என எழுதும் சீர்திருத்தம் வந்தது. தமிழ் உலகு ஏற்றுக் கொண்டது. நான் அதிகமாக பேச்சுத் தமிழை ரசிப்பேன். அதுவே அய்யா, ஐயா வித்தியாச காரணம். வடிவேலு பகிடிகள் பேச்சுத் தமிழின் உதாரணம். இந்த தளத்தில், குமாரசாமி, தமிழ்சிறி பேசசுத் தமிழ் ரசிக்கக் கூடியது. @நிலாமதி
  8. எங்கட வேதள வெங்காய அரசியல்வாதிகள், இந்த நிலைமையை தடுக்க,, அடுத்த ஜனாதிபதி தேர்தலை, குடியொப்ப தேர்தலாக்குவோம் என்று அறிவிக்க வேண்டும். தேர்தலில் போட்டியிடும் சகலருக்கும் புள்ளடி போட்டால் செல்லா வாக்காக்கி, அதன் மூலம் மக்கள் உணர்வை வெளிக்காட்டலாம். அப்படி அறிவித்தால் மட்டுமே,சிங்கள அரசியல்வாதிகளுக்கு பயம்வரும்.
  9. எங்கட வேதள வெங்காய அரசியல்வாதிகள், இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, அடுத்த ஜனாதிபதி தேர்தலை, குடியொப்ப தேர்தலாக்குவோம் என்று அறிவிக்க வேண்டும். தேர்தலில் போட்டியிடும் சகலருக்கும் புள்ளடி போட்டால் செல்லா வாக்காக்கி, அதன் மூலம் மக்கள் உணர்வை வெளிக்காட்டலாம்.
  10. சரீங்கக்கா 😁 பேச்சுத்தமிழ் வேறு, இலக்கணத் தமிழ் வேறு. மிளகுத் தண்ணீர் என்றால் இலக்கணத் தமிழ், மிளகுத் தண்ணீ என்றால் பரவாயில்லை. மொளவுத்தண்ணி என்றால் பேச்சுத்தமிழ். ஆனால் ஆங்கிலத்தில் அப்படியே உள்ளது. பிரிட்டிஸ் காலத்தில் தாம் உருவாக்கி மேசைக்கு கொண்டாந்த அருமையான சூப்பாம். அப்ப ஏண்டா, Black Pepper Soup எண்டு வைக்கேல்ல எண்டா, பதில் இல்லை, திருட்டுப் பயல்களிடம்!
  11. 'திரு'உருவ... 😁 இது பிரபாகரன் சிலை.... சும்மா, பத்தரின்ட எண்டு சொல்லியிருக்கினம் எண்டு சொன்னால், மிச்ச அலுவலை சிங்களவர் பார்ப்பினம்... சித்தார்த்தன் அய்யா, விடப்படாது: உமா என்ன தக்காளி தொக்கா?
  12. அதுதானே கேள்வி....! அக்கா மகிழ்ச்சியா இருந்தவா அல்லது அத்தார் மகிழ்ச்சியா எண்டு அறிவம் எண்டு தான்.. 😜
  13. ஒரு கேள்விக்கு மட்டும் பதிலை சொல்லிப்போட்டு நீங்கள் கதையை தொடருங்கோ. நீங்கள் வந்தபிறகு, அத்தார் இப்ப சோகமா இருக்கிறாரோ அல்லது மகிழ்ச்சியா இருக்கிறாரோ? 😁
  14. அப்படியே, ஒரு ஜம்ப் பண்ணி, கச்சதீவில புத்தரை கும்பிட்டு, குருந்தூரில புத்தரின்ற புதுக் கோயிலையும் திறந்து, வெடுக்குநாறில புத்த கோயிலுக்கு கல்லையும் நட்டுட்டு போலாமே ஜீ!! 🤨
  15. அது கொரோணா காலத்தில் தொடங்கி, கோத்தா காலத்தில் தொடர்ந்த வேலை
  16. சுயநலத்தின் உச்சம் தான் இது. பிரிட்டனில், மிக சிறந்த கல்வியாளர்கள் என்று முதலில், சீனர்களையும், பின்னர் இந்தியர்களையும் சொல்வார்கள். வெள்ளையின மாணவர்கள் அடுத்ததாக தான் வருகிறார்கள். உலகின் மிகசிறந்த கண்டுபிடிப்பாளர்களையும், விஞ்ஞான கண்டுபிடிப்புகளையும் உருவாக்கிய நாடு. காரணம். குடும்ப உறவுகளில் அண்மையில் நடக்கும் சீரழிவு. லிவிங் டுகெதர் முறையில் வாழ்ந்து, பிள்ளைகளை பெற்று விட்டு இருவருமே நழுவிச்செல்ல பிள்ளைகள், எப்படி படிக்க முடியும். அதனாலேயே வெள்ளைகள் பின் தங்குகிறார்கள். சீனர்கள், இந்தியர்கள் முன்னேறிச்செல்ல, உறுதியான குடும்ப அமைப்பு என்று ஒத்துக்கொள்கிறார்கள் பிரிட்டிஷ் கல்வியாளர்கள். ஆக, இந்த முறை ஓக்கேதான் குழந்தைகள் பெறாதவரை. பெறுவதனால், குழைந்தைக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
  17. எனது நண்பர், ஆட்டு இறைச்சி ரகசியம் என்று ஒரு தூள் வைத்து கடைசியாக போடுவார். துப்பறிந்து பிடித்ததில், நீங்கள் சொன்னது போலவே கறுவா, பெரும்சீரகம் கொஞ்சம் ஏலக்காய், இரண்டு, மூன்று கராம்பு போட்டு வறுத்து அரைத்த தூள்.
  18. போனவாரம் கொழும்பு விமான நிலையத்தில், சீன, இந்தி பெயர்ப்பலகை. கடுப்பான சில பேருக்கு சொல்லப்பட்டுள்ளது: அங்கை இருந்துதான் சுற்றுலாவுக்கு கணபேர்வருகினமாம். அடங் கொய்யால, வருறவன் பெயர் பலகை வாசிக்க முடியாம, கண்டில போய் நிப்பான் போல. இலங்கை அரச நிர்வாக சேவை அதிகாரிகளுக்கு சிறந்த நிர்வாக சேவை குறித்து விரிவுரை நடத்த, டெல்லியில் இருந்து இந்திய அரசின் மூத்த நிர்வாக சேவை அதிகாரி வந்துள்ளார். இது ஏப்பிரல் பூல்செய்தி இல்லைத்தானே எண்டு கேக்கிறேலல.
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.