-
Posts
13647 -
Joined
-
Days Won
25
Content Type
Profiles
Forums
Events
Blogs
Gallery
Everything posted by Nathamuni
-
மத போதகர் ஜெரோம் பெர்னாண்டோவுக்கு எதிராக ஞானசார தேரர் முறைப்பாடு!
Nathamuni replied to தமிழ் சிறி's topic in ஊர்ப் புதினம்
மொறட்டுவையில், தாய்க்கு மதுபானத்தினை கொடுத்து, மயங்கியபின். அவருடன் வந்த சிறுமி மகளை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய 62 வயது ஆமத்துரு கைது. இவர் இரண்டு முன்னாள் ஜனாதிபதிகளுக்கு, பௌத்த விவகார ஆலோசகராக இருந்தவராம். 🤦♂️ -
ஆறுமுகம் தொண்டைமான் பேத்தண்ணீ சாமீ. ஆனால் அவரது மகள்கள், மகன் எல்லோரும் நன்கு படித்தவர்கள். ஒரு மகள் டாக்டர். Wedding of Dr. Nachiar Thondaman
-
வட மேல் மாகாண கவனராக இருந்த கருணாகொட, தான் அப்பழுக்கில்லாத 45 வருட கடமைக்கு சொந்தக்காரராக இருந்தவர் என்று சொல்லி, மான நஷட வழக்கு போடுவதாக அமெரிக்க தூதருக்கு சவால்விட்டு இருப்பதால், ஜனாதிபதி ரணில், அவரை, அந்த மானஸ்தரை, காணமல் போன 11 பொடியளை கண்டுபிடிக்கும் வேலையினை கொடுக்குமாறு சிபாரிசு செய்கிறோம். 😲
-
என்னத்தை குடையிறது? கிஸ்புல்லா இருந்த போது, தமிழர்கள் எதிர்க்கவில்லையே!
-
பொன்னியின் செல்வன்..லைகா ஆபீசில் அமலாக்கத்துறை சோதனை!
Nathamuni replied to Nathamuni's topic in நிகழ்வும் அகழ்வும்
உண்மை. ராஐபக்சேக்கள் எமகாதக திருடர்கள். மேற்குக்கு பண்ணியில் பண்ணிப்பாரன் ரீதியில் கடுக்காய் கொடுத்தார்கள். ஆளுனராக கப்பீரியளைப் போட்டு, consultancy fees என்று இலங்கை மத்திய வங்கியே பணத்தை வெளில பசிலுக்கு, அனுப்பினால் என்னத்தை பண்ணுறதாம்! கடைசீல பசில் நிதி அமைச்சர் வேற😎 -
பொன்னியின் செல்வன்..லைகா ஆபீசில் அமலாக்கத்துறை சோதனை!
Nathamuni replied to Nathamuni's topic in நிகழ்வும் அகழ்வும்
அவரது சகோ ஆதித்த கரிகாலனை போட்டுத் தள்ளிப்போட்டார்களாம். 😰 கிழவர் பழுவேட்டரயருக்கு அல்வா கொடுத்துட்டு, அவரது இளம் மணைவி, நந்தினியை பார்க்கப் போய் ஏடாகூடமாகி கிழவர் போட்டுத் தள்ளிப்போட்டார் எண்டது தான் நான் கேள்விப்பட்டது. வெளில சொல்லாதீங்க, வெள்ளவான் அனுப்பிடுவாங்கள். 🤨 -
பொன்னியின் செல்வன்..லைகா ஆபீசில் அமலாக்கத்துறை சோதனை!
Nathamuni replied to Nathamuni's topic in நிகழ்வும் அகழ்வும்
சுவையர், மேற்குலகில் இருந்து கொண்டு,மேல வந்த ஒண்டு, இரண்டும் இப்படி தேவையில்லா சிக்கலில் மாட்டவேண்டுமா? தீபம் டிவி நடாத்திய பத்மநாதன், காசு நல்லாத்தான் உழைத்தார். ஆரு கண் பட்டதோ... அங்கால இங்கால இப்படித்தான் பிராக்குப் பார்க்க வெளிக்கிட்டு, ஈரோ ஸரார் ரயிலில பாரீஸ் போகும் போது 300,000 + ஈரோவோட மாட்டி, தீபமும் இல்லை, ஆள் அட்ரசும் இல்லை. இந்திய தொடர்புகள் அவர்கள் கறுப்பை வெள்ளையாக்கவே அன்றி வேறென்ன? லைக்காவுக்கும் ராசபக்சேகளுக்கும் தொடர்பு இருந்த கதை தெரியும்தானே. ஆனால் முழு அதிகாரத்தில் இருந்த அவர்கள் தொடர்பு பிரச்சணை இல்லாதது. -
பொன்னியின் செல்வன்..லைகா ஆபீசில் அமலாக்கத்துறை சோதனை!
Nathamuni replied to Nathamuni's topic in நிகழ்வும் அகழ்வும்
காசாக புளங்குவது அவர்கள் பிரச்சணை இல்லை. வருமானவரித்துறை பிரச்சணை. கறுப்பு பணத்தை உண்டியல் முறையில் வெளிய அனுப்புவது குறித்தவிசாரணையே அமுலாக்க துறை வேலை -
பொன்னியின் செல்வன்..லைகா ஆபீசில் அமலாக்கத்துறை சோதனை!
Nathamuni replied to Nathamuni's topic in நிகழ்வும் அகழ்வும்
என்னத்தை சொல்லுறது? லைக்கா, உதயநிதி கூட்டு லேபேராவின் ஒரு பங்காளி ரதீஸ் சபரீசன் கூட்டு. லேபேராவின் இன்னுமொரு பங்காளி ஐபிசி பாஸ்கரன் வைத்திருந்த சென்னையில் இருந்து இயங்கும் பணம் கொட்டும் லங்காசிறி RIP தமிழக அரசியல்வாதியிடம் கை மாறியுள்ளதாக ஒரூ தகவல். 😎 -
பொன்னியின் செல்வன்..லைகா ஆபீசில் அமலாக்கத்துறை சோதனை!
Nathamuni posted a topic in நிகழ்வும் அகழ்வும்
சென்னையில், அல்லிராஜா சுபாஸ்கரனின் லைக்கா நிறுவனத்தில் அமுலாக்கத்துறை இன்று காலை முதல் சோதனை. பாமக கட்சி எம்எல்ஏ ஜிகே மணியின் மகன் தமிழரசன் தலைமை செயல் அதிகாரியாக செயல்படுகிறார். சமீப காலமாக பெரு வியாபார ஈழத்தமிழர்கள் பலரது பெயர்கள், தமிழக அரசியல் வாதிகளுடன் சேர்த்து பேசப்படுவது கவனிக்கத்தக்கது. -
என்ன ஓணாண்டியர் 🤔 விடுதலைப் போராட்டகாலமட்டுமல்ல, எப்போதுமே பொது எதிரி வரும் போதே இனம் ஒன்றாகும், ஓர்மமடையும். நடப்பதெல்லாம் நன்மைக்கே. இலங்கையில் விடுதலைப்போராட்டத்தின் காரணம் என்ன? அதில் இருந்த நியாயம் என்ன என்பதை பிரபாகரன் தலையால் கிடங்கு கிண்டிணாலும் முடியாததை, இன்று பெளத்த சிங்களவன் உலகுக்கு புரிய வைக்கிறான். அது ஒரு தெளிவான முடிவுக்கு செல்லும். இலங்கைத்தீவில் மதவெறியே அரசுகளை தூக்கி வீசி இருக்கிறது. போர்த்துக்கேயன் போனது மத வெறியால்...
-
இதுவரையில் காணாத பாரிய அண்ட வெடிப்பு அவதானிப்பு
Nathamuni replied to ஏராளன்'s topic in அறிவியல் தொழில்நுட்பம்
இதுக்கெல்லாம் அணுங்கப்படாது ஓணாண்டியர்... 😁 -
கறுவல் என்ற சொற்பதம் பாவிக்கப்பட்டதால், கறுவலுடன் சேர்ந்து கொலையில் தமிழ் இளைஞர் திரி பூட்டப்பட்டது. அதேவேளை, வெள்ளை, வெள்ளயம்மா என்று சொற்பதம் பாவித்த போது கண்டு கொள்ளாத நிர்வாகம் கறுவல் சொற்பதம் குறித்த விசனமுறும் நிலைப்பாட்டை அறியத் தர முடியுமா? நன்றி 🙏 பிரிட்டனில் தேசிய பத்திரிகைகள், பிபிசி போன்றவை கறுப்பு என்ற சொல்லை black என பாவிக்கும் நிலையில், நிர்வாகத்தில் உள்ள யாரோ ஒருவருக்கு சரியான புரிதல் இல்லை என்று கருதுவதால் இது குறித்த விளக்கம் தர வேண்டும். தகுந்த விளக்கம் தந்தால் இந்த சொல்லை தவிர்ப்போம்.
-
நல்லதுதான் இணையவன், ஆனால் எனது பார்வை வித்தியாசமானது. பிரான்ஸ் மட்டுமல்ல, கனடா, பிரிட்டன் எங்கும், இதே கதை தான். நம்மவர்களுக்கு பொருளாதார புரிதல் இல்லை. பெரிய சூப்பர் மார்கட் எல்லாம் ஒன்லைன் வியாபாரத்தில் கவனம் செலுத்துகின்றன. கடை ஒன்றை எடுக்க, பெரு ஆரம்ப முதலீடு தேவை. அதுவே இணைய வியாபாரமாயின் வீட்டில் இருந்தே செய்யலாம். தமிழ் படங்களும், விஜய் சூப்பர் சிங்கரும், வளரும் புதிய தொழில் நுட்ப அறிவை தராது. புதிய தொழில்நுட்பம், குறித்து தேடி படித்துக் கொள்ளும் வரை, நடப்பதை புரிந்த வேறு இனத்தவர், நைசாக கை கழுவி விடும் கடைகளை எடுத்து புளங்காகிதம் அடைந்தாலும், விரைவில் கை கடிக்கும். ஒரு தொழில் தொடங்கு முன் கணக்காளர் ஆலோசணை கேட்பதில்லை. 18 மாதத்தின் பின் வரிக் கணக்கு சமர்ப்பிக்க கணக்காளரிடம் ஓடும் போதே, போஸ்மோட்டம் நடக்கும். அப்போது தான் வியாபார நிலை தெரியவரும். அதுவரை கடை நடாத்தும் புளங்காகிதம் தொடரும்.
-
ஒரு தேப்பனுக்கு பிறந்தனியே எண்டது சந்தேகம் என்பது, ஒருவரை காயப்படுத்தி தூற்ற சொல்லப்படுவது. தாயின் நடத்தையில் சந்தேகம் தெரிவிப்பது போல தூற்றுதல். உண்மையில் குழந்தை எப்போதுமே ஒரு தந்தைக்கும், ஒரு தாய்க்கும் மட்டுமே உருவாகும் என்பது உலக நியதி. ஆனாலும் அது பொய்யாக்கப்பட்டுள்ளது. இந்த உயிரியல் முறைமை தடை செய்யப்படுவதுக்கு முன், பிறந்த 30 - 40 பிள்ளைகளுக்கு மூன்று பெற்றோர்கள். அதாவது மூன்றாவது பெண் அளித்த டிஎன்ஏ கூறுகளும் சேர்ந்து பிறந்த சிறுமி அலானா. அதற்காக மூன்றாமவரையும் பெற்றவராக கருத மாட்டேன் என்கிறார். ஆனால் மூன்றாமவர் பெரும் பணக்காரராக இருந்தால், அவரும் பெற்றோர் தான், நானும் அவர் வாரிசு தான் என்றால் சட்டம் ஏற்றுக் கொள்ளும். ஆனால் சட்டத்துக்கு அப்பால், சமூகம் குழம்பிவிடும் அல்லவா! இப்படி, பல காரணங்களால் இது தடை செய்யப்பட்டது. https://www.bbc.co.uk/news/magazine-28986843
-
நான் கடந்த வாரம் யாழ்ப்பாணத்தில் இருந்தேன். மண்ணெண்ணய் மகேஸ்வரன் தம்பி பரமேஸ்வரன் நடாத்தும் கோட்டல் ரிசப்சனிஸ்ட் 35 வயது அநுராதபுர இளைஞர். டுபாய் ரிட்டேன். அங்க எடுத்ததிலும் பார்க்க அதிக சம்பளத்தில் ஊரோட வேலை.... ஒரு வருசமா இருக்கிறார். நல்ல ஆங்கிலம்... தமிழ் படிப்பதாக சொன்னார். ரூம் பையன் சொன்னார், இதுக்கு முந்தி இருந்த இரண்டு பேர் ஆறு, ஆறு மாசம் இருந்துட்டு வெளில போட்டினம். ஆக... உந்த வெளிநாட்டுக்கனவு இருக்கும் வரை நம்பி முதலிட முடியாது. அதே வேளை, பொருளாதாரம் சிங்களவரை தமிழ் கற்று வேலைக்கு வர வைக்கும்.
-
பொருளாதாரம் இருந்தாலும், அதிகாரம் நம்மிடம் இல்லை. எமது மோசமான தலைமைத்துவத்துக்கு உதாரணம்: தையிட்டி விவகாரத்தில், சித்தார்த்தன் கருத்து. வித்தவரில் பிழை பிடிக்கிறார். பிரதேச சபையிடம் அனுமதி கேட்கப்படவும் இல்லை, கொடுக்கப்படவும் இல்லை. அதுவே இலங்கை உச்ச நீதிமன்று வரை போகக் கூடிய சட்ட நிலை. இராணுவம் முதல், நீதித்துறை வரை சட்டமீறலில்....என்று உலகத்துக்கு புரிய வைக்கலாமே.... பிரிட்டனில், அரச திணைக்களங்களில், மிகவும் பலமிக்கதாக சொல்லப்படுவது, உள்ளூர், கட்டட அனுமதி துறை. Regional Planning Permission. கட்டு என்றால் கட்டு, இடி எண்டால் இடி தான். யாரும் மூக்கை நுழைக்க முடியாது.
-
ஈழத்தமிழருக்கான இன்றைய தேவை, சுஜநலமில்லாத, உறுதி, துணிச்சல் மிக்க தலைமை. இரண்டாம் யுத்த காலத்தில் பிரிட்டனுக்கு வின்ஸ்டன் சேர்ச்சிலும், விடுதலைப் போராட்டத்தில் இந்தியர்களுக்கு காந்தியும், தென்னாபிரிக்கர்களுக்கு மண்டேலாவும் வழங்கியது தான் சுஜநலமற்ற தலைமைத்துவம். இன்றைய தலைவர்களில் மக்கள் நம்பிக்கை இழந்து விட்டார்கள் என்பதற்கு உதாரணம், தையிட்டியில் மக்கள் இல்லாத போராட்டம்...
-
இலங்கையில் ஆறு மாதங்கள்
Nathamuni replied to மெசொபொத்தேமியா சுமேரியர்'s topic in யாழ் 25 அகவை - சுய ஆக்கங்கள்
பலருக்கு சட்டம் புரிவதில்லை. தாறு மாறான புரிதல்.... யுத்தகாலத்தில் ஆட்சி உரித்து செல்லாது என்பது சரி....: ஆனால் யுத்தம் முடிந்து 13 ஆண்டுகள் முடிந்து விட்டன என்பதை மறக்கக் கூடாது.... யுத்தகாலத்தில் கூட, நீங்கள் இடம் பெயர்ந்ததை, வெளிநாடாடில் இருந்ததை உறுதி செய்ய வேண்டும். ஊரில் இருந்து கொண்டே, ஒருவரை குடி வைத்து, சும்மா இருக்க விட்டால், ஆட்சி உரித்து கிடைத்துவிடும் என்பதை மறக்கக் கூடாது. அதாவது, ஆட்சி உரித்து ரகசியமாக கோருவதில்லை. கோட் போய் தான் கேட்பது. கோட் கடதாசி போடும் போது பதில் கொடாவிடில் அவருக்கு ஆட்சி உருத்தாகும். முன்னொரு காலத்த்தில், தபாலை கடாத்திக் கூட மோசடி செய்துள்ளனர். -
ஒரு பக்க நியாயத்தினை வைத்து, பொத்தாம் பொதுவாக சொல்ல முடியாது என்று நினைக்கிறேன். இரு பக்க வாதமும் கேட்டு தான், முடிவுக்கு வரமுடியும் என்பது எனது அபிப்பிராயம். உதாரணமாக, domestic violence என்பது பெண்களே பாதிப்பாளர்கள் என்ற கருத்து அண்மையில் தவறு என்று நிரூபிக்கப்பட்டு, பாதிப்பாளர்கள் என்று பொதுவாக சொல்லப்படுகிறது. ஆகவே, தான் இருபக்க விளக்கமும் கேட்க்காமல் முடிவுக்கு வரமுடியாது.
-
ஆளாளுக்கு, பக்கத்தில் இருந்து பார்த்ததுபோல, வரலாற்றினை அடித்து விடுகிறார்கள். சோழர்கள் இருந்தார்கள் என்னும் வரலாறுக்கு இருக்கும் ஒரே சான்று, அவர்கள் கட்டிய கோவில்கள் மட்டுமே. பொலநறுவை முதல் தமிழக சோழ மண்டலம், ஜாவா, பாலி வரை இதுமட்டுமே. சில கல் எழுத்துக்களும் உதவும். மிகுதி எல்லாமே கப்ஸா தான். வாஸ்கோடகாமா 1498ல் இந்தியா வந்தார், இலங்கைக்கு போர்த்துக்கேயர் 1505ல் வந்தார்கள் என்று வரலாறு எழுதுபவர்கள் சொல்வார்கள். உண்மையில் இரண்டு சந்தர்ப்பங்களிலும், இந்தியாவும் இல்லை, இலங்கையும் இல்லை. அதாவது வரலாற்றினை பின்னாளில் எழுதுபவர்கள், தாம் வாழும் காலத்தில் என்ன நிலைமையோ, அதனை முன்பே இருந்ததாக கருதி எழுதுவார்கள். அல்லது, நேரில் பார்த்ததை எழுதுவது போல உருட்டுவார்கள். எழுதும் ஸ்டைலில், நாமும் அதனுள்ளே சென்று, ஊறி விடுகிறோம், கேள்விகள் கேட்க்காமல்.