-
Posts
13647 -
Joined
-
Days Won
25
Content Type
Profiles
Forums
Events
Blogs
Gallery
Everything posted by Nathamuni
-
யாழிலிருந்து கொழும்பு சென்ற சொகுசு பஸ் தீப்பிடித்து முற்றாக எரிந்தது!
Nathamuni replied to ஏராளன்'s topic in ஊர்ப் புதினம்
காரணம் வாகணத்துக்கு போடுற தரம் குறைந்த, கலப்பட எரிபொருள்! -
புதுசா ஒரு புதைகுழி நேற்று கண்டறிந்திருக்கிறார்கள்.... 🤦♂️
-
பண மோசடி… பாலியல் அத்துமீறல்கள்- லண்டன் சாமியார் கைது
Nathamuni replied to கிருபன்'s topic in வாழும் புலம்
உங்களுக்கு நம்ம அருமை புரியுது... ஆர்வமா கேட்டு போட்டு, பஸ் எரிஞ்சதை விடுப்பு பார்த்துக்கொண்டு நிக்கிறார்.... நம்ம பாஸ்... 😁 -
யாழிலிருந்து கொழும்பு சென்ற சொகுசு பஸ் தீப்பிடித்து முற்றாக எரிந்தது!
Nathamuni replied to ஏராளன்'s topic in ஊர்ப் புதினம்
எங்கும் பயணம் போகும் போது மிக முக்கியமானது கடவுச்சீட்டு. இப்படியான நிலைமைகளில் லக்கேயில் போட்டால் கதை கந்தல். எப்போதும் கைப்பையில் அல்லது பாக்கெற்றில் வைத்திருக்க வேண்டும். எனக்கு தெரிந்த ஒருவரின் பெரிய லக்கேயை, அவர் மேலே நல்ல நித்திரையில் இருக்கும் போது, கீழே, அது தனது என்று கொண்டு போய்விட்டார்கள் - உள்ளே கடவுச்சீட்டுடன். -
பண மோசடி… பாலியல் அத்துமீறல்கள்- லண்டன் சாமியார் கைது
Nathamuni replied to கிருபன்'s topic in வாழும் புலம்
அய்க்.... நான் தான் முதன் முதலா, இலண்டணில் ஓர் சாமியார் பத்தி பலான வீடியோக்கள் திரியுது, தாரும் பார்த்தனியளே எண்டு கேக்க, ரெண்டு நாளா யாரும் கண்டு கொள்ளவில்லை. பிறகு பெருமாள் தான், அதெல்லாம் இங்கே இணைக்க முடியாத வேற ரகம் என்றார். யாருக்கும் ஆர்வமில்லை, சிலவேளை, வீடியோக்கள், எரிச்சலில் உடான்சு சாமியார் சிஸ்யர்கள் தில்லாலங்கடி வேலையாயிருக்கலாம் என்று நிணைத்து விட்டுவிட்டேன். போலீஸ் கைதின் பின் தான் உண்மை என புரிந்தது. பலான சாமியார் கைதான பின்னர் உடான்ஸ்சர் தலை காட்டுவதால், உள்ள இருப்பதன்.. சிக்க வைத்ததன் பின்னால்.... இவர்தானோ என்று நிணைப்பதுடன், ஆச்சிரமத்தை இவரே பொறுப்பெடுக்க கோரிக்கை வைக்கிறோம். அதெல்லாம் இருக்க, வடை, போண்டா வித்து வந்த காசு இந்த சாமியார் அநுக்கிரகத்தால என்று தீவிரமாக நம்பின சம்பல் செயின் ஓனர் முன்னின்று மூன்றரை மில்லியனுக்கு வாங்கின பார்ணற் ஆசிரமம்.... அபசாரம்.... அபசாரம்... நன்னா வாயை கழுவுங்க.....அதெல்லாம், உங்களுக்கு எதுவும் இல்லை, என்பெயரில் மட்டுமே இருக்க வேண்டும் என்ற லபக்கிய, லார்டு லபக்குதாஸ் சாமியார், உள்ள இருப்பதால், ஆச்சிரம காணியை கிளப்ப காசு குடுத்த பார்ட்டிகள் அந்தரப்படுகினமாம். வங்கீலயும் நல்ல காசு இருக்குதாம். ஆனால் சாமியார், உள்ள இருந்து கொண்டே, காசை எறிந்து, நல்ல புரோகிராசியை பிடித்து வெட்டி ஆடுகிறாராம். இதுக்கு முன்னம், காயத்திரி என்ற சாமியம்மா. கணவர் ரவிக்குமார்.....Edgware பக்கம் … சுருட்டினார்கள். கடைசியில் பெட்டிசம், டீபோட். அதுக்கு முன்னர் ஈஸ்காம் பக்கம் நாடி யோதிடம்.... யெயசங்கர் கோஸ்டி..... சில மாதங்களில் பல லட்சம் பவுண்கள்..... கடைசியில் பெட்டிசம், IT raid, டீபோட். இந்த மூன்று பார்ட்டிகளும் தென் இந்தியா... 🤪 ஆக...... இந்த கேசில.... 16 வயசு சிறுமியை (ஒன்றுக்கும் அதிகம் என்கிறார்கள்) பீடீத்த தரித்திரம் போய், சிறப்பான எதிர்காலம் அமைய அர்த்த சாம பூசை, பிரார்தணை என்று, பாலியல் வன்புணர்வு வரை போனதால், பிணை கிடைக்காத விளக்க மறியல் என்கிறார்கள். விபரம் நீதிமன்று வரும் போதே தெரியவரும். 'மொட்டைச் சாமியார், குட்டைல விழுந்தாராம்' * இது தவிர விம்பிள்டன் பிள்ளையார் கோவில் அய்யர், இலங்கையர் அல்ல... அந்த மொரீசியஸ் பெண்.... கணவருடன் பிரச்சணை.... வீட்டிலிருந்து வெளியேற்றிய பின்னர் வீட்டில், பூசை ஒன்று செய்ய அய்யரை கூப்பிட்டிருக்கிறார். போன இடத்தில, செய்ய வேண்டிய பூசையை விட்டுட்டு, பெண் தனியாக இருக்கிறார் என்று வேற பூசைக்கு முயல, உருட்டுக்கட்டை சாத்து வாங்கி.... போலீஸ் வந்து.... உள்ளே... வேறு கோவில் பிரதம குருவான தமையன், ஓடிவந்து, ஊரில் பிள்ளை குட்டிக்காரன் என்று கதறி மன்னிக்குமாறு கோரி, பெண் முறைப்பாட்டை மீளப்பெற்றதால் தப்பி, ஊர் போய் சேர்ந்தார். -
மீண்டும் சர்ச்சையில் சிக்கிய பிரான்ஸ் ஜனாதிபதி: வைரலாகும் வீடியோ
Nathamuni replied to தமிழ் சிறி's topic in உலக நடப்பு
ரீச்சர் மாணவணை மடக்கின காரணத்திணால் கம்பி எண்ணியிருக்க வேணும். எங்கவோ தப்பு நடந்திருச்சு... -
ம்.... மொழிபெயர்க்கும் போது, கூகிளை பயன்படுத்தி அப்படியே வெட்டி ஒட்டியிருக்கிறார்கள். - தரத்தில் தெரிகிறது. அடியேன் மொழிபெயர்பில், பத்திகளை ஒழுங்காக்கி வசனங்களையும் சரியாக்கி வாசிப்பது புரியும் படி செய்திருக்கிறேன். 👍
-
தந்தையுடன் வாக்குவாதம் - மகள் கொலை தந்தையுடன் வாக்குவாதம் செய்த குடிபோதை ஆசாமி, காத்திருந்து, வேலை முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த ஒன்றும் அறியாத 19 வயது மகளை மறைந்திருந்து பின்னால் சென்று கத்தியால் குத்தினார். வைத்தியசாலையில் உயிருக்கு போராடிக்கொண்டு இருக்கிறார், அந்த இளம் பெண். சிங்கள ஊரில் சம்பவம், குடி, போதைப்பொருள்....கொலை, கொலை.... கொலைகள்.... இலங்கை எங்கே செல்கிறது. https://www.youtube.com/watch?v=u4IR5Y56xWU&ab_channel=DailyMirrorNews
-
-
மீண்டும் சர்ச்சையில் சிக்கிய பிரான்ஸ் ஜனாதிபதி: வைரலாகும் வீடியோ
Nathamuni replied to தமிழ் சிறி's topic in உலக நடப்பு
கருணாநிதியின் ஐடியா இருக்குதே.... அதுவா... பீர் கிடையாது. அதே கலரில், பீர் போத்தலில் நிரப்பி இருந்த, கிரீம் சோடா... ஹீ...ஹீ. 😎 -
யுத்தம் முடிந்த பின்னர், மகிந்த ஜனாதிபதியாக இருந்த போது, இந்த மகாவம்சத்தில் இறுதியாக ஒரு அத்தியாயம் சேர்க்கப்பட்டு, MD குணசேன வெளியீட்டார்களால் ஒரு புத்தகம் வெளியாகியது. தென் இலங்கையில் இருந்து துட்டகெமுனுவை போலவே கிளப்பிய மாமன்னர் மகிந்த ராஜபக்சேவின் தமிழர்களை வென்ற, வீர பராக்கிரம கதைகளை சேர்த்து இருந்தார்கள். அவருக்கு பெரும் துணையான சேனைத்தலைவனாக கோத்தா இருந்தார் என்று பெரும் அலம்பறை பண்ணியிருந்தார்கள். இன்றய யுத்த குத்த சூழ்நிலையில், இதை சொல்லி பெட்டிசம் அடிக்க தான் இருக்குது.🤦♂️
-
NOMINATIONS OF NEW ITEMS OF DOCUMENTARY HERITAGE TO BE INSCRIBED ON THE MEMORY OF THE WORLD INTERNATIONAL REGISTER DETAILS OF THE NOMINATIONS 53.Mahavamsa, the Great Chronicle of Sri Lanka (covering the period 6th century BCE to 1815 CE), submitted by Sri Lanka. One of the world's longest unbroken historical accounts, the Mahavamsa is the first of its kind in South Asia, initiating a mature historiographic tradition, presenting Sri Lanka’s history in a chronological order from the 6th century BCE. The authenticity of the facts provided in the document has been confirmed through archaeological research conducted in Sri Lanka and India. It is an important historical source in South Asia containing crucial information about lifetime of the Buddha, the Emperor Asoka and the rise of Buddhism as a world religion. The document played a significant role in popularizing Buddhism in Southeast Asia and contributed singularly to the identity of Emperor Asoka in the Indian history. Existence of number of manuscripts of Mahavamsa in several countries as well as the transliteration and translation of the text to several Southeast Asian and European languages stand testimony to its immense historical, cultural, literal, linguistic and school எனக்கு புரிந்தது என்னவென்றால்..... இலங்கை, இதனை 'nomination' னுக்கு சமர்ப்பித்துள்ளது. சமர்பிக்கப்பட்ட மொத்த ஆவணங்கள் 64. இதில் மகாவம்ச 53 வது சமர்ப்பணம். அது அங்கீகாரம் இல்லை. இந்த சமர்பணங்களை ஆய்வு செய்து சரியானதை MEMORY OF THE WORLD லில் முக்கிய உலக விடயம் ஒன்றாக பதிவு செய்யப்படும். எனக்கென்றால், இந்த சிங்கம் - மனிதப்பெண் கப்ஸா கதை கேட்டாலே, அவர்களுக்கு புல் அரிக்கும் என்று நினைக்கிறேன்.
-
எனெக்கெண்டா நம்பிக்கை இல்லை. கப்ஸாவாக இருக்கும். டெய்லி மிரர் போன்ற பத்திரிகைகளில் வரவே இல்லையே. 🤪
-
-
அப்ப அந்த சிங்கம், சிங்கவள்ளி கதையையும் ஏற்கப்பட்டதோ, சாரே? 🥹😂🤣 அது ஏன் இவ்வளவு காலம் எடுததது? பெரியாரையும் யுனெஸ்கோவையும் வைச்சு சுத்தினது நிணைவில் வருகிறதே. கப்ஸா தான்!!
-
நிகழ்வும் அகழ்வும் பகுதியில் இருந்து அரசியல் அலசல் பகுதிக்கு நகர்த்த முடியுமா? திண்ணை இருந்தால் இந்த முக்கிய அங்கே சொல்லி இருப்பேன். நிகழ்வும் அகழ்வும் வரும் எதுவுமே, பார்வைக்கு வருவதாக தெரியவில்லை. நன்றி
-
கோத்தாவை சிக்க வைக்கும் ஐநாவின் வலை தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலை விசாரணை என்றவுடன் பெரும் எதிர்ப்புகளை வெளிப்படுத்தும் சிங்களத்துக்கு, இப்போது திருடனுக்கு தேள் கொட்டியது போல முளுசும் வேலை ஒன்றினை கச்சிதமாக ஐநா செய்துள்ளது. DBS ஜெயராஜ் எழுதிய கட்டுரையின் தமிழாக்கம். இதில், கோத்தா எப்படி சிக்கி இருக்கிறார் என்று அழகாக விபரிக்கின்றார். சிங்களவர்களில் காணாமல் ஆக்கப்பட்டுள் ளோர் குறித்தும் அதில், கோத்தாவின் வகி பாகம் குறித்தும், ஐநா செய்த விசாரணை குறித்து, ஜனாதிபதி ரணிலுக்கு எழுதி உள்ளது. தமிழர் தொடர்பில் செய்வதுபோலவே, இதணையும் சிங்களம் எதிர்க்க முடியுமா? சிங்களம் என்ன செய்யும் என்று பொறுத்திருந்து பார்க்கலாம். உள்ளூர் விசாரணை என்று, ஐநாவுக்கு அல்வா கொடுக்கும் சிங்களம், கோத்தா தொடர்பில் நடந்த உள்ளூர் விசாரணை அறிக்கையினை 2030 வரை வெளியிடுவதில்லை என்று வைத்திருக்கும் காரணம் என்ன? ***** கோட்டாபய ராஜபக்ச மற்றும் மாத்தளை மாவட்ட ஜே.வி.பி கிளர்ச்சி இலங்கையின் முன்னாள் ஜனாதிபதியும், முன்னாள் பாதுகாப்புச் செயலாளருமான கோட்டாபய ராஜபக்ச, ஜூன் 22, 2023 தேதியிட்ட அசோசியேட்டட் பிரஸ் (AP) செய்தி அறிக்கையில் முக்கியமாக இடம்பெற்றுள்ளார். 1989 ல் இரத்தக்களரி மிக்க மார்க்சிச கிளர்ச்சியின் உச்சக்கட்டத்தில் அவர் இராணுவ அதிகாரியாக இருந்த பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட வெகுஜன புதைகுழிகள் பற்றிய விசாரணைகளைத் தடுக்க வேண்டும் என்கிற நோக்கில் செயல் பட்டுள்ளார். சர்வதேச உண்மை மற்றும் நீதித் திட்டம், ஜனநாயகத்திற்கான ஊடகவியலாளர்கள் மற்றும் இலங்கையில் காணாமல் போனவர்களின் குடும்பங்கள் உள்ளிட்ட செயற்பாட்டாளர்கள் குழுக்கள் கடந்த வாரம் வெளியிட்ட அறிக்கையிலேயே இந்தக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. கோத்தா ராஜபக்ச தனது சகோதரர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கீழ் பாதுகாப்பு செயலாளராக கடமையாற்றிய போது, மத்திய இலங்கையின் மாத்தளை மாவட்டத்தில் பாரிய புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து, அப்பகுதியில் உள்ள பொலிஸ் நிலையங்களில் உள்ள அனைத்து பொலிஸ் பதிவுகளையும் அழிக்க 2013ல் உத்தரவிட்டதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 1989 ஆம் ஆண்டு ஒரு வன்முறை மிக்க மார்க்சிஸ்ட் கிளர்ச்சியின் போது, ஒரு இராணுவ அதிகாரியாக ராஜபக்ச, பிராந்தியத்தில் எதிர் கிளர்ச்சியில் ஈடுபட்ட காலத்திலிருந்தே இந்த வெகுஜன புதைகுழிகள் தோன்றியதாக இன்றுவரை சந்தேகிக்கப்படுகின்றன. விசாரணைக்கு இடையூறு விளைவித்ததாகக் கூறப்படும் ராஜபக்சே மற்றும் மூத்த காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு அந்த அறிக்கையில் கோரப்பட்டுள்ளது. 1987 ஆம் ஆண்டு முதல் 1990 ஆம் ஆண்டு வரை இடம்பெற்ற மக்கள் விடுதலை முன்னணியின் (ஜேவிபி) இரண்டாவது கிளர்ச்சியின் போது கோட்டாபய ராஜபக்ச 1வது படைப்பிரிவு, கஜபா படைப்பிரிவின் (1ஜிஆர்) கட்டளை அதிகாரியாகவும், மாத்தளை மாவட்ட இராணுவ ஒருங்கிணைப்பு அதிகாரியாகவும் நியமிக்கப்பட்டார் என்பது அனைவரும் அறிந்ததே. கோட்டா மே 1989 முதல் ஜனவரி 1990 வரை மாத்தளை மாவட்டத்தில் செயல்பட்டதாக கூறப்படுகிறது. "ஜே.வி.பி.யை கட்டுக்குள் கொண்டுவரும் பணியில் மாவட்ட ஒருங்கிணைப்பு அதிகாரியாக அவர் (கோட்டா) மாத்தளைக்கு நியமிக்கப்பட்டார்" என்று பிரபல ஊடகவியலாளர் மற்றும் ஜெனீவாவில் உள்ள ஐ.நா.வுக்கான முன்னாள் தூதுவர் சி.ஏ. சந்திரபிரேம் "கோதாவின் போர்" எனும் தனது வாழ்க்கை வரலாற்றில் எழுதினார். மாத்தளை தொடர்பாக ஐ.நா கடந்த ஆண்டு குறிப்பிடத்தக்க விசாரணை ஆய்வு வளர்ச்சியின் பின்னர், 2022 ஆம் ஆண்டு நவம்பர் 8 ஆம் தேதி, ஐநா தொடர்பான நிறுவனங்களின் நான்கு முக்கிய பிரதிநிதிகள் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு கூட்டாக கடிதம் எழுதினர். 1989/90 மாத்தளை சம்பவங்கள் பற்றிய விவரங்களை ஐ.நா. ஜனவரி 9, 2023 அன்று பொதுக் களத்தில் வெளியிட்டது. சில நெறிமுறைகளுக்கு இணங்க, 1989/90 இல் மாத்தளை மாவட்டத்திற்குப் பொறுப்பான அதிகாரியின் பெயரை கூறாமல் (கோட்டாபய) வெளிவந்த ஐநா கடிதத்தின் தொடர்புடைய பத்திகள் கீழே மீண்டும் தரப்ப்பட்டுள்ளன: "பலவந்தமாக அல்லது விருப்பமில்லாமல் காணாமல் போனோர் தொடர்பான பணிக்குழுவாக உங்களுக்கு இந்த கடிதத்தை எழுதுகின்றோம். சட்டத்திற்குப் புறம்பான மரணதண்டனைகள், தடுத்து வைத்தல், நிகழாமல் இருப்பதற்கான உத்தரவாதங்களை மேம்படுத்துவதற்கான சிறப்பு அறிக்கையாளராக, உண்மை, நீதி, இழப்பீடு போன்றவையினை உறுதி செய்யும் பணிகளை செய்கின்றோம். மாத்தளை மாவட்டத்தில் 1989 ஆம் ஆண்டு மே மாதம் முதல் 1990 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வரை, ஜனதா விமுக்தி பெரமுனா (ஜேவிபி) எழுச்சியின் சூழலில், அரசாங்கப் பாதுகாப்புப் படையினரால் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டவர்கள், தன்னிச்சையான தடுப்புக்காவல்கள், சித்திரவதைகள் மற்றும் நீதிக்குப் புறம்பான கொலைகள் தொடர்பாக எமக்குக் கிடைத்துள்ள தகவலை உங்கள் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறோம்." பெறப்பட்ட தகவல்களின்படி: 1989 மே மற்றும் ஜனவரி 1990 க்கு இடையில், மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) மற்றும் இலங்கை அரசு, இடையே வன்முறை அதிகரித்து வரும் சூழலில், மாத்தளை மாவட்டத்தில் அரசாங்க பாதுகாப்புப் படையினர் பலவந்தமான காணாமல் போதல்கள், தன்னிச்சையான மற்றும் சட்டவிரோத தடுப்புக்காவல்கள் மற்றும் நீதிமன்றத்திற்கு அப்பாற்பட்ட கொலைகளை மேற்கொண்டதாகக் கூறப்படுகிறது. இந்த காலகட்டத்தில், கஜபா படைப்பிரிவின் 1 வது படைப்பிரிவின் அப்போதைய கட்டளை அதிகாரியை அரசாங்கம் மாவட்ட இராணுவ ஒருங்கிணைப்பு அதிகாரியாக நியமித்ததாக தெரிவிக்கப்படுகிறது. அங்கு அவர் புலனாய்வுப் படைகள் உட்பட மாவட்டத்தில் நிறுத்தப்பட்ட அனைத்து பாதுகாப்புப் படைகளையும் கட்டுப்படுத்தினார். விசாரணை கமிஷன்கள் 1989 ஆம் ஆண்டு தொடங்கி, எழுச்சியின் போது மற்றும் அதற்குப் பிறகு நிகழ்ந்ததாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்களை விசாரிக்க அரசாங்கத்தால் விசாரணைக் கமிஷன்கள் அமைக்கப்பட்டன. மாத்தளை மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினரால் மேற்கொள்ளப்பட்ட பலவந்தமான காணாமல் ஆக்குதல், சித்திரவதை, நீதிக்குப் புறம்பான கொலைகள் மற்றும் தன்னிச்சையான மற்றும் சட்டப்பூர்வமான தடுப்புக்காவல்கள் தொடர்பான முறைப்பாடுகளை ஆணைக்குழுக்கள் பெற்றன. அவரது கட்டுப்பாட்டில் இருந்த (பெரும்பாலும் “கஜபா ரெஜிமென்ட்”) பாதுகாப்புப் படையினரே முக்கிய குற்றவாளிகள் என தகவல்கள் கிடைத்துள்ளது. ஆணைக்குழுவின் அறிக்கைகளின்படி, அந்த நேரத்தில் 350,000 மக்கள் தொகையை மட்டுமே கொண்டிருந்த சிறிய மாவட்டமான மாத்தளையில் வன்முறையின் அளவு பற்றி தங்களுக்கு தெரிந்திருக்கும். மே 1989 மற்றும் ஜனவரி 1991 க்கு இடையில் இடம்பெற்ற பலவந்தமாக காணாமல் போனவர்கள் தொடர்பில் நான்கு வெவ்வேறு விசாரணை ஆணைக்குழுக்கள் விசாரணை நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது. ஆணைக்குழுக்கள் மாத்தளை மாவட்டத்தில் 1,041 வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்களை ஆவணப்படுத்தியுள்ளன, அவற்றில் 700 க்கும் மேற்பட்ட வழக்குகள் மே 1989 மற்றும் ஜனவரி 1990 க்கு இடையில் நிகழ்ந்தன. மாத்தளை மாவட்டத்தில் பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டதாகக் கூறப்படும் 24 குற்றவாளிகளின் பட்டியலையும் ஆணைக்குழு தொகுத்துள்ளது. எவ்வாறாயினும், இந்த பட்டியல் ஒருபோதும் வெளியிடப்படவில்லை. மற்றும் அரசாங்க இரகசிய உத்தரவின் கீழ் 2030 வரை வெளியிடப்படாத வாறு வைக்கப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில் அவரது தலைமையில் இராணுவம் மற்றும் பொலிஸ் அதிகாரிகள் பல்வேறு தடுப்புக்காவல் நிலையங்களில் இருந்ததாகக் கூறப்படுகிறது, அத்துடன் "புகழ்பெற்ற சித்திரவதை தளங்கள்" என்று அழைக்கப்படும் பள்ளிகள் மற்றும் விருந்தினர் இல்லங்களும் அடங்கும். கைதிகளை தன்னிச்சையான மற்றும் சட்டவிரோதமாக தடுத்துவைத்தல் மற்றும் சித்திரவதை (பாலியல் சித்திரவதை உட்பட) போன்ற நிகழ்வுகளையும் ஆணையம் ஆவணப்படுத்தியுள்ளது. சோதனைச் சாவடிகளில் மக்கள் நிறுத்தப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் அல்லது கிராமங்களில் சுற்றி வளைத்தல் மற்றும் வெகுஜனக் கைதுகளின் ஒரு பகுதியாகவும், அரசுப் பாதுகாப்புத் துறையைச் சேர்ந்தவர்கள் என்று அடையாளப்படுத்தப்படாத அரசு வாகனங்களைப் பயன்படுத்தி தங்களைக் காட்டிக் கொண்ட அதிகாரிகளால் கடத்தப்பட்டதாகவும் கமிஷன் அறிக்கைகள் குறிப்பிடுகின்றன. . தடுத்து வைக்கப்பட்டு கடத்தப்பட்டவர்களில் மாத்தளை மாவட்டத்தில் உள்ள கிராமங்களைச் சேர்ந்த இளைஞர்களும் சிறுவர்களும் அடங்குவர். விஜயா கல்லூரி ராணுவ முகாம் மாத்தளை மாவட்டத்திலுள்ள விஜயா கல்லூரி இராணுவ முகாம் மற்றும் ஏனைய தடுப்புக்காவல் இடங்களில் இராணுவத்திலோ அல்லது பொலிஸ் காவலிலோ தடுத்து வைக்கப்பட்டிருந்த முன்னாள் கைதிகளிடமிருந்தும் சாட்சியங்கள் சேகரிக்கப்பட்டன. கைதிகள் "தலைகீழாக தொங்கவிடப்பட்ட போது", "மிளகாய் புகையை உள்ளிழுக்க நிர்ப்பந்திக்கப்பட்டது" உட்பட, கண்களை கட்டியதாகவும் தாக்கப்பட்டதாகவும் சாட்சியம் அளித்தனர். 1989 செப்டம்பரில் கைது செய்யப்பட்டு, 40 நாட்கள் விஜயா கல்லூரி ராணுவ முகாமில் வைக்கப்பட்டு, காவலில் இருந்தபோது கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்ட ஒரு பாதிக்கப்பட்ட ஒரு குறிப்பிட்ட வழக்கை ஆணையங்கள் ஆவணப்படுத்தியுள்ளன. இந்தக் காலக்கட்டத்தில் நீதிமன்றத்திற்கு அப்பாற்பட்ட பொதுமக்களின் கொலைகள் பற்றிய ஆதாரங்களையும் ஆணையங்கள் சேகரித்தன, அவர்களில் பலர் தன்னிச்சையாகவும் சட்டவிரோதமாகவும் தடுத்து வைக்கப்பட்டு காவலில் வைக்கப்பட்டிருப்பார்கள். பெறப்பட்ட குற்றச்சாட்டுகள் பாதிக்கப்பட்டவர்களின் மனித எச்சங்கள் வயல்களில் விடப்பட்ட அல்லது பாலங்களில் காட்சிப்படுத்தப்பட்ட நிகழ்வுகளையும் குறிப்பிடுகின்றன. குற்றஞ்சாட்டப்பட்ட நபர்கள், குற்றவாளிகள் என குற்றஞ்சாட்டப்படவில்லை அல்லது விசாரணை செய்யப்படவில்லை, மற்றும் அரசாங்கத்தில் தொடர்ந்து பதவிகளை வகித்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்தக் குற்றச்சாட்டுகளின் துல்லியத்தை நாங்கள் முன்கூட்டியே மதிப்பிட விரும்பவில்லை என்றாலும், மே 1989 மற்றும் ஜனவரி 1990 க்கு இடையில் அரசாங்கப் பாதுகாப்புப் படையினரால் செய்யப்பட்டதாகக் கூறப்படும் பலவந்தமான காணாமல் போதல்கள், தன்னிச்சையான தடுப்புக்காவல்கள், சித்திரவதைகள் மற்றும் நீதிக்குப் புறம்பான கொலைகள் குறித்து எங்களின் தீவிர அக்கறையை வெளிப்படுத்துகிறோம். மாத்தளை மாவட்டம், மற்றும் அதனைத் தொடர்ந்து பொறுப்புக்கூறல் இல்லாமை மற்றும் இந்த மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாகக் கூறப்படும் குற்றவாளிகளுக்கு எதிராக நீதித்துறை நடவடிக்கை எடுக்காமல் இருப்பதுடன் பலர் இன்னும் அரச வேலைகளில் இருப்பதையும் காண்கிறோம். மாண்புமிகு ஜனாதிபதி அவர்களே, பதிலுக்காக காத்திருக்கும்போது, குற்றஞ்சாட்டப்பட்ட மீறல்களுக்குப் பொறுப்பான எந்தவொரு நபரின் (கள்) பொறுப்புக்கூறலையும் விசாரித்து உறுதிசெய்ய தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். இது தொடர்பில் எங்களின் மிக உயர்ந்த ஈடுபாடினையும், உறுதிமொழிகளை ஏற்கவும் என்றும் கேட்டுக்கொள்கிறோம். . தங்களுக்கு உண்மையுள்ள, 1. Aua Baldé தலைவர்-செயல்படுத்தப்பட்ட அல்லது தன்னிச்சையாக காணாமல் போனவர்கள் பற்றிய பணிக்குழுவின் அறிக்கையாளர் 2. Mumba Malila - தன்னிச்சையான தடுப்புக்காவல் பணிக்குழுவின் துணைத் தலைவர் 3. Morris Tidball-Binz - நீதிக்கு புறம்பான, சுருக்கம் அல்லது தன்னிச்சையான மரணதண்டனைகள் குறித்த சிறப்பு அறிக்கையாளர் 4. Fabian Salvioli - உண்மை, நீதி, இழப்பீடு மற்றும் மீண்டும் நிகழாமல் இருப்பதற்கான உத்தரவாதங்களை மேம்படுத்துதல் குறித்த சிறப்பு அறிக்கையாளர். மூன்று முக்கியமான புள்ளிகள் மாத்தளை மாவட்டத்தில் ஜே.வி.பி கிளர்ச்சியை ஒடுக்குவது தொடர்பான மூன்று முக்கிய அம்சங்கள் இந்த ஐ.நா கடிதத்தில் உள்ளன.. முதலாவதாக மாத்தளை மாவட்டத்தில் 1,041 வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் வழக்குகள் நான்கு விசாரணை ஆணைக்குழுக்கள் ஊடாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. இவற்றில் 700க்கும் மேற்பட்டவை கோட்டா தலைமை இராணுவ அதிகாரியாக இருந்தபோது நடந்ததாகக் கூறப்படுகிறது. இரண்டாவதாக, வெவ்வேறு அரசாங்கங்களால் வெவ்வேறு காலங்களில் நியமிக்கப்பட்ட நான்கு இலங்கை ஆணைக்குழுக்கள் மாத்தளையில் பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்களில் ஈடுபட்டதாகக் கூறப்படும் குற்றவாளிகள் என 24 பேரை அடையாளம் கண்டுள்ளன. இது தொடர்பாக யார் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தகவல் இல்லை. மூன்றாவதாக, மாத்தளை "காணாமல் போனமைகளுக்கு" காரணமானவர்களின் பெயர்கள் மற்றும் பெயர்கள் 2030 ஆம் ஆண்டு வரை இயங்கும் அரசாங்க இரகசிய உத்தரவின் கீழ் வைக்கப்பட்டுள்ளன. இது நிறுவனமயப்படுத்தப்பட்ட தண்டனையின்மையின் குறிகாட்டியாகும். முன்னர் கூறியது போல் கோட்டாபய ராஜபக்சவின் பெயர் திருத்தப்பட்டு, பகிரங்கப்படுத்தப்பட்டுள்ள ஐ.நா கடிதத்தில் இடம்பெறவில்லை. எவ்வாறாயினும், 1989 மே முதல் 1990 ஜனவரி வரை 700 க்கும் மேற்பட்ட பலவந்தமான காணாமல் ஆக்கப்பட்டவர்கள் மாத்தளை மாவட்டத்திற்கு பொறுப்பான தலைமை ஒருங்கிணைப்பு இராணுவ அதிகாரியாக கோட்டா இருந்தார் என்பது வெளிப்படையானது. கோட்டாவின் "கட்டளை" பிறப்பிக்கும் அதிகாரம் எவ்வாறாயினும், மாத்தளை மாவட்டத்தில் கோட்டாவின் "கட்டளை" பிறப்பிக்கும் அதிகாரம் மற்றும் அவர் ஐ.தே.க அரசாங்கத்தால் பொறுப்பேற்ற சூழ்நிலையை சி.ஏ. சந்திரபிரேமா தனது "கோதாவின் போர்" புத்தகத்தில். "இரண்டாவது ஜேவிபி கிளர்ச்சி" என்ற தலைப்பில் புத்தகத்தின் 28 ஆம் அத்தியாயத்தில் உள்ள 173, 174 மற்றும் 177 பக்கங்களில் இருந்து பின்வரும் பகுதிகள் உள்ளன. “மே 1, 1989 இல், கேணல் விமலரத்ன பிரிகேடியர் தரத்திற்கு உயர்த்தப்பட்டதன் மூலம், கோத்தா கஜபா படைப்பிரிவின் 1 வது படைப்பிரிவின் கட்டளை அதிகாரியாக நியமிக்கப்பட்டார். வடமராட்சி நடவடிக்கையின் போது அவர் வகித்த தற்காலிக கட்டளையைப் போலல்லாமல் இது இப்போது நிரந்தர நியமனமாக இருந்தது. “இந்தப் பதவி உயர்வு மூலம், அவர் ஜே.வி.பி.யை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் பணியில் மாவட்ட ஒருங்கிணைப்பு அதிகாரியாக மாத்தளைக்கு நியமிக்கப்பட்டார். சுமார் ஒன்றரை வருடங்களாக திருகோணமலையில் இருந்த முதலாம் கஜபா படையணி மாத்தளைக்கு கொண்டு வரப்பட்டது. லெப்டினன்ட்களான சவேந்திர சில்வா, ஜகத் டயஸ் மற்றும் சுமேதா பெரேரா ஆகியோர் மாத்தளையில் அவருடைய நிறுவனத் தளபதிகளில் இருந்தனர்” (பின்னர் சவேந்திரா இராணுவத் தளபதியாக முடிவடைந்தவுடன் மூவரும் ஜெனரல்களாக ஆனார்கள்). ரஞ்சன் விஜேரத்ன மாத்தளை மாவட்டத்தின் ஒருங்கிணைப்பு அதிகாரியாக கோத்தா நியமிக்கப்பட்ட போது, கோத்தா மஹிந்த ராஜபக்ஷவின் சகோதரர் எனவும் அவர் மீது நம்பிக்கை இல்லை எனவும் அந்த பிரதேசத்தின் ஆளும் கட்சி அரசியல்வாதிகள் பலம் வாய்ந்த பிரதி பாதுகாப்பு அமைச்சர் ரஞ்சன் விஜேரத்னவிடம் முறைப்பாடு செய்திருந்தனர். “அந்த நேரத்தில், மகிந்த ராஜபக்ச 12 வருட இடைவெளியின் பின்னர் மீண்டும் பாராளுமன்றத்திற்கு வந்திருந்தார் மற்றும் ஜே.வி.பி கிளர்ச்சியை ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் கையாளும் விதத்தை கடுமையாக விமர்சித்திருந்தார். அப்போது பிரிகேடியர் விமலரத்ன கூட்டு நடவடிக்கைக் கட்டளையின் பணிப்பாளராக இருந்தார். மாத்தளைக்கான ஒருங்கிணைப்பு அதிகாரியாக யாரை நியமிப்பது என்பது அரசாங்கமே தீர்மானிக்கும் என அவர் ரஞ்சன் விஜேரத்னவிடம் தெரிவித்திருந்தார். எவ்வாறாயினும், கோத்தா 1” கஜபா படைப்பிரிவின் தளபதியாக மாத்தளையில் கடமையாற்றி வருவதாகவும், அவர் தனது பணியில் அர்ப்பணிப்புடனும் தொழில் ரீதியாகவும் சிறந்த அதிகாரி என்பதாலேயே அவரை படைப்பிரிவின் தளபதி பதவியில் இருந்து நீக்க முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். “வடமராட்சியில் கோத்தா சண்டையிட்டதை பிரிகேடியர் விமலரத்ன விஜேரத்னவிடம் விளக்கி, தான் மேற்கொண்ட மற்ற நடவடிக்கைகளின் விவரங்களையும் கொடுத்திருந்தார். விஜேரத்ன, கோட்டாவை பதவியில் இருந்து நீக்கக் கூடாது என்று ஒப்புக்கொண்டார். “பின்னர், விஜேரத்ன மாத்தளைக்கு வந்தார், கோத்தா அவருக்காக ஒரு மாநாட்டை ஏற்பாடு செய்தார், மேலும் அவர் ஜே.வி.பி பயங்கரவாதிகளுக்கு எதிராக மாவட்டத்தைப் பாதுகாக்க என்ன செய்யப் போகிறார் என்பதை விளக்கினார். மாநாட்டின் பின்னர், விஜேரத்ன அவரிடம், தான் மகிந்த ராஜபக்சவின் சகோதரர் என்பதாலேயே பிரதேச அரசியல்வாதிகள் தம்மை விரும்பவில்லை என்றும், தான் ஒரு நல்ல இராணுவ அதிகாரி என்றும், படையணியின் கட்டளையைப் பெற்றுள்ளதாகவும் தனது தளபதி கூறுகிறார். விஜேரத்ன மேலும் கூறுகையில், "நான் உங்களை மாற்ற விரும்பவில்லை, நீங்கள் வேலையை தொடருங்கள், அரசியல்வாதிகள் யாராவது உங்களுக்கு சிரமம் கொடுத்தால், என்னிடம் சொல்லுங்கள்." "மாத்தளை மாவட்டத்தை கோட்டா கைப்பற்றிய பின்னர், ஒவ்வொரு மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த இடங்களிலும் தனிப்படைகள் நியமிக்கப்பட்டன." “ஜேவிபியின் இரண்டாவது கிளர்ச்சி முடியும் வரை கோட்டா மாத்தளையின் பாதுகாப்பு ஒருங்கிணைப்பு அதிகாரியாக இருந்தார். ஜனவரி 1990 இல், அவர் மூன்று மாத விடுப்புக்கு விண்ணப்பித்து, தனது குடும்பத்தைப் பார்க்க அமெரிக்கா சென்றார்.
-
தமிழர்களை விடுங்கள். பிரேமதாசா காலத்தில் ஜேவிபியினர் என்று அப்பாவிகள், மகிந்தா காலத்தில் லசந்த போன்ற சிங்களவர்களை கொன்றொழித்த கோத்தா என்ற கொடியவனை, 69% வாக்குகளுடன் தேர்ந்தெடுத்தால், தனது பாவத்தினை போக்க, விகாரைகளுக்கும், விகாரை ஹெட் மொட்டைகளுக்கும் தனது மாளிகையில் இருந்ததை இலவசமாக அனுப்பி வைத்திருக்கிறார். அவர், இப்ப அமைதியாக இருப்பதன் காரணம், வாயை திறந்தால், அமேரிக்கா கொண்டு போய் வில்லங்கத்தில் மாட்டி விடும் அளவுக்கு, அந்தாள் சம்பந்தப்பட்ட தகவல்களை சேகரித்து வைத்திருப்பதை அவருக்கு புரிய வைத்துள்ளது.
-
சுத்து முத்து பார்க்கும் போது, மழை விழுற மாதிரியோ, மின்னல் அடிக்கிற சூழலோ தெரியவில்லை. 😎
-
இந்திய ரூபாவை இலங்கையில் பயன்படுத்தக் கூடாது : விமல் வீரவன்ச!
Nathamuni replied to தமிழ் சிறி's topic in ஊர்ப் புதினம்
யாழ்ப்பாணத்தில் ஒரு கிலோ உளுந்து 350 ரூபா கொழும்பில் 800 ரூபா. இது எப்படி சாத்தியமாகிறது, யாழ்ப்பாணத்தில் விளைவிக்கிறார்களா, என்று கொழும்பில் கேட்டால், அட போங்க, இந்தியாவில் இருந்து கொண்டு வந்து இறக்கிறார்களாம். மீன் பிடித்தலிலும் பார்க்க, பெற்றோல், டீசல், மளிகை பொருட்கள் யாவாரம் அமோகமாம். இந்திய பணமே இதுக்கு உபயோகமாகிறது. இனி வேற கப்பல் ஓடுது. அவ்வளவுதான்.