Everything posted by உடையார்
-
இறைவனிடம் கையேந்துங்கள்
என் இதய தெய்வமே
-
இறைவனிடம் கையேந்துங்கள்
வழிகாட்டும் என் தெய்வமே துணையாக எனில் வாருமே (2) நதிமீது அலைந்தாடும் அகல்போலவே கதியேதும் தெரியாமலே - நான் தடுமாறும் நிலைபாறுமே அன்பாகி அருளாகி என்னோடு ஒன்றாகி துயரோடு போராடும் என்வாழ்வின் நலமாகி எனைத்தாங்கும் என் தெய்வமே - என் நிழலாக எழும் தெய்வமே எந்நாளும் உனைத்தேடும் வரம்கேட்கிறேன் உன்பாத நிழல்நாடும் மனம் கேட்கிறேன் நீரின்றியே மண்ணில் வளமில்லையே நிலமின்றியே உயிர் வாழ்வில்லையே எந்நாளும் உனைத்தேடும் வரம்கேட்கிறேன் உன்பாத நிழல்நாடும் மனம் கேட்கிறேன் எனைக்காக்கும் என் தெய்வமே - என் உயிராக எழும் தெய்வமே நிலவெங்கும் ஒழிந்தாலும் விழிமூடி பயனேது துயர் மூடும் மனமுந்தன் அருள் காணும் வகையேது பலனாக கைமீது வா இங்கு புலனாகும் இறையாக வா என் பாதை முடிவாகும் உம் தாளிலே என் வாழ்வு விடிவாகும் அந்நாளிலே உன் வார்த்தைகள் என் வாழ்வாகுமோ உன் பார்வைகள் என் வழியாகுமோ என் பாதை முடிவாகும் உம் தாளிலே என் வாழ்வு விடிவாகும் அந்நாளிலே இருள் நீக்கும் விளக்காகவே - நான் சுடர்வீச எனை ஏற்றவா ஆல்போல வளர்ந்தாலும் ஆரம்பம் முளைதானே விண்வாழ்வின் உயர்வெல்லாம் இவ்வாழ்வின் பலன்தானே நிறைவாழ்வின் விதையாகவே எங்கள் நிலவாழ்வு பயன்காணவா
-
கடற்கரும்புலி மேஜர் கணேஸ்
கடற்கரும்புலி மேஜர் கணேஸ் நவம்பர் 10, 2020/தேசக்காற்று/கடற் கரும்புலிகள்/0 கருத்து சாவுக்கு விலங்கிட்ட நெருப்பு மனிதர்கள் கடற்கரும்புலி மேஜர் கணேஸ் / குயிலன். கிளாலிக் கடலின் அலைகள் நனைத்துச் செல்லும் கால்களில், குருதிக் கறை பிசுபிசுத்த ஒவ்வொரு காலையின் போதும் பிணவாடையைக் காவிவரும் கடற்காற்றின், ஒவ்வொரு வீச்சின் போதும் – அவர்களுக்குள் இனம்புரியாத ஒரு ஆவேசம் கொதித்த எழும். கிளாலிக் களத்தில் தளபதி சாள்ஸ் வீழ்ந்த போது, அது அவர்களுக்குத் தாங்க முடியாத பேரிழப்பாக ஆகிவிட்டது. எல்லாவற்றுக்குமாகச் சேர்த்துப் பதிலடி கொடுக்க அவர்கள் துடித்துக்கொண்டிருந்தனர். வரதனுக்கும் மதனுக்கும் முந்திய 60 நாட்கள் – அவர்கள் சக்கை வண்டிகளோடு பகைவனைத் துரத்துவதும், அவன் சண்டை பிடிக்காமலே தப்பி ஓடிவிடுவதும், பின்னர் ஏமாற்றத்தொடு இவர்கள் திரும்பிச் செல்வதுமாகக் கழிந்த அந்த இரவுகளில் – அவர்களில் ஒருவருக்காக தன்னை அனுப்பிப் பார்க்குமாறு நச்சரித்துக் கொண்டிருப்பான் கணேஸ். ‘டோறா’வை நொருக்குவதற்கான தாக்குதலின் திட்டம் தயாரிக்கப்பட்டபோது – அந்தச் சாதனையின் சாதனையாளர்களுள் ஒருவனாகத் தான் போக வேண்டுமென்ற ஆதங்கம் அவனுக்கு. பருத்தித்துறைக் கடலில் புவீந்திரனும், மணியரசனும் 15 நாட்களுக்கு மேல் காத்திருந்த காலத்திலும் அதே நச்சரிப்பு. ஆனாலும், கணேஸ் இல்லாமலேயே அந்த இரண்டு தாக்குதல்களும் வெற்றிகரமாக முடிந்தபோதும் கூட, உற்சாகம் குன்றாமல் அடுத்த தாக்குதலுக்கான காத்திருப்புக்களில், வேட்கையோடு அவனது நாட்கள் நகர்ந்தன. கூடவே கோபியும் இன்னும் சில கரும்புலிகளும். ஏற்கெனவே இரண்டு விசைப்படகுகளை இழந்துவிட்ட எதிரி பின்வந்த நாட்களில் அதீத அவதானத்துடனேயே இயங்கினான். வரதன் – மதனுக்குப் போல, கண்டபின் தப்பி ஓடும் தந்திரத்தை அல்லாமல் – இவர்களின் கண்களில் தட்டுப்படுவதைத் தவிர்த்துவிடுவதையே தான், எதிரி தனது யுக்தியாகக் கையாண்டான். இப்படியாக – இலக்கை அடையாத துயரோடு இவர்கள் திரும்பி வருவதுகூட, பூநகரிக்குள் ‘தவளைகள்’ நுழையும்வரை தான் நீடித்தது. கடலில் இரைதேடிவிட்டுக் கரையேறும் சமயங்களில், சக்கைவண்டிகளில் வரும் மற்றவர்கள், எங்கள் சண்டைப் படகுகளினூடு லாவகமாக வளைத்துத் திருப்பி அலை கிளம்ப ஓடிக் காட்டுகிற போது, கணேஸ் மட்டும் மெதுவாக ஓடி, ஓரமாக வந்து, அமைதியாகக் கரையேறுவான். “இந்த மாதிரி ஓட உன்னால ஏலாதா?” என்று யாராவது கேட்டால் “எதிர்பாராம ஏதாவது நடந்திட்டால்……” என இழுத்து, “அநியாயமாக எல்லோரும் சாகாமல் ஆக்கபூர்வமாக ஏதாவது செய்ய வேணும்” என்று தொடரும், அவன், “சம்பவம் ஆகக் கூடாது மச்சான், சரித்திரம் ஆகோணும்” என்று முடிப்பான். இப்போது – ‘ஒப்பறேசன் தவளை’ வரலாற்றுச் சமரில், நாகதேவன் துறை கடற்படைத்தளம் மீதான தாக்குதலில் முக்கிய பங்கேற்று, அந்த வீரமகன் சரித்திரமாகி விட்டான்! அன்றைய காலம் – இந்திய விஸ்தரிப்புவாதிகளின் படைகளை எதிர்த்து தமிழீழம் போர்க்கோலம் பூண்டிருந்த எழுச்சி நாட்கள். அப்போது அவனுக்கு வயது பதின்நான்கு தான். சாற மடிப்பிற்குள் சேட்டை மறைத்துக் கட்டிக்கொண்டு, அம்மாவுக்கு போக்குக் காட்டி விட்டு வெளியேறுகின்றவனைப்பற்றி “தம்பி சந்தியில போஸ்டர் ஒட்டிக் கொண்டு நிற்கிறான்” என்றோ, “கடையில சாப்பாட்டுப் பார்சலுகள் கட்டிக் கொண்டு அந்தப் பக்கமா போறான்” என்றோ யாராவது சொல்லுவார்கள். அம்மாவின் இதயம் வேகமாகத் துடிக்கும். அம்மாவுக்கும், நாகநாதி அய்யாவிற்கும் வாரிசாக, 21 வருடங்களுக்கு முன்னர் பெப்ரவரி 13 ஆம் நாளில் பிறந்தவன் ஜீவநேசன். இத்தனை வருடங்களாக பாசத்தைக் கொட்டி வளர்தெடுத்த தாயல்லவா…… அவள் துடித்துப் போனாள். அவள்தான் துடித்தாளே தவிர அவன் ஓய்ந்ததில்லை. திடீரென ஒரு காலை, அவசர அவசரமாக ஓடிவந்த அயல்வீட்டுக்காரர் ஒருவர்இ கடையில் சாப்பாட்டுப் பொதிகள் வாங்கிய ஜீவனை யாரோ காட்டிக்கொடுத்து, இந்தியர்கள் இழுத்துச் செல்கின்றார்கள் என்ற செய்தியைச் சொன்ன போது, அம்மா இடிந்து போனாள். அந்த வீடு சாவீடு போலாகிவிட்டது. அழுகுரல் நவக்கிரி கிராமத்தை நிறைத்தது. காங்கேசன்துறை இந்தியப்படைச் சிறையில் அடுத்த ஒரு வருடம் கழிந்தது. பார்க்கப் போகின்ற அப்பாவிடம் ஊர்ப்புதினங்களைத் தான் விசாரித்தானேயல்லாமல், வீட்டுப் புதினங்களையல்ல. மிகவும் அமைதியானவனான அந்தச் சிறுவன் உள்ளத்தில், ஆவேசப் புயலொன்று அப்போததான் மையங்கொண்டது. இந்தியர்கள் வெளியேற்றப்பட்ட போது, அவர்கள் விடுவித்து விட்டுப்போன கணேஸ், ஐந்தாறு நாட்கள் அம்மாவோடு இருந்தவிட்டு, முழுமையாகவே இயக்கத்திற்குப் போய் விட்டான். அம்மா துயரத்தோடு கடவுளை நேர்ந்துகொண்டிருக்க, அந்த விடுதலைப் புலி துப்பாக்கியோடு ‘போர் உலா’ வந்தான். வட தமிழீழப்போர் அரங்கின் அநேகமான எல்லா முனைகளிலும், அவனுடைய துப்பாக்கி கனன்றிருக்கின்றன. கோட்டையை முற்றுகையிட்டிருந்த போது, அதை முறியடிக்க வந்தவர்களை மண்டைதீவில் எதிர்கொண்டபோது, மாங்குளத்தில் படை முகாமை அழித்த போது, ‘வன்னி விக்கிரம’ என்று படையெடுத்தவர்களைத் தோல்வியுறச் செய்தபோது, தாயகத்தின் இதயத்தைப் பாதுகாத்து மணலாற்றில் ‘மின்னலை’ தெறிக்கச்செய்த போது, ஆனையிறவில் ‘பலவேகய’ வில் புறப்பட்டவர்களை ‘ஆமைவேகய’ வில் நகரச் செய்த போது, மன்னாரில் படையெடுத்தவர்களுக்குப் பாடையெடுத்த பதுங்கித் தாக்குதலின் போது – இப்படியாக எங்கும் எல்லாச் சமர்களிலும் கணேஸ் சுவடு பதித்தான். அந்தக் காலத்திலேயே, ஒரு கரும்புலித் தாக்குதலுக்கான கனவு அவனது இதயத் துடிப்பொடு கலந்துதானிருந்தது. இப்படியிருக்கையில் ஒரு நாள் – அது, கடந்த வருடத்தின் இறுதி. பலாலியிலிருந்து தெல்லிப்பளை நோக்கி முன்னேறிய ‘ஒப்பறேசன் பூமியதிர்ச்சி’யை நிறுத்த நடந்த சண்டையின் போது – இடது முழங்காலுக்கு கீழே துளைத்த ரவை முக்கிய நரம்பொன்றை அறுத்துச் சென்று விட்டது. சண்டைமுனையில் மருத்துவ வசதியின்மையால் – பெருமளவு இரத்தம் வெளியேறிவிடஇ மயக்கமுற்று எடுத்துச் செல்லப்பட்ட கணேஸ். இரண்டு நாட்களுக்குப்பிறகு, யாழ்ப்பாண மருத்துவமனையின் கட்டிலொன்றில், வெடிபட்ட இடத்திற்குக் கீழே அந்தக் கால் அகற்றப்பட்டுவிட்ட நிலையில், அடக்கிக்கொள்ள முடியாத அழுகையோடு படுத்திருந்தான். போராட்டத்தில் காலை இழந்தமைக்காக அவன் கண்ணீரைச் சிந்தவில்லை. அருகில் நின்ற நண்பனின் கையைப்பற்றி அவன் விம்மினான், “இனி எப்படியடா நான் சண்டைக்குப் போறது……. கணேஸ்! எவ்வளவு மென்மையானவனாக அவன் வாழ்ந்தான்! எவரோடும் சச்சரவுக்குப் போகாமல், எல்லோரையும் சமாளித்துக் கொள்வானே! என்னதான் பிரச்சினையென்றாலும், விட்டுக்கொடுத்துவிட்டு விலகிக்கொண்டானே தவிர, அவன் சண்டை பிடித்துப் பெரிதாக்கியிருக்க மாட்டான். அவன் எவ்வளவோ பொறுமைசாலியாக இருந்தான்; எல்லா விடயங்களிலுமே. அவனை மேலோட்டமாகப் பார்க்கிற எவரும், எதுவும் தெரியாத அப்பாவி என ஒரு கணிப்பீட்டை வைப்பார்கள். விசயம் தெரியாத நாலுபேரை இருத்திவிட்டு, எல்லாம் தெரிந்த மேதாவிகளைப் போல புழுகித்தள்ளும் நண்பர்களை தன்னிடம் வசமாகச் சிக்கவைத்து – “தேவையில்லாம வாயைக்குடுத்து மாட்டிக் கொண்டோமே” என்று தலையைப் பிய்த்துக் கொண்டு எழுந்துபோகிற அளவுக்கு அவன் கொண்டுபோய்விடுவான். இருப்பினும், தனக்குத் தெரியாத – அது தொடர்பான பூரண அறிவு இல்லாத – எந்த விடயங்களைப் பற்றியும் அவன் வாய் திறக்கவே மாட்டான். வெட்கப்படாமல் – விசயம் தெரிந்தவர்களிடமிருந்து விசயங்களைத் தெரிந்து கொள்வதில் தான் அவனுக்கு ஆர்வம் அதிகம். தான் செய்ய நினைக்கும் காரியங்களைச் செய்து முடிக்கும் வரை முயற்சி எடுப்பதும், காலிழந்தவன் என்று கருணைகாட்டி மற்றவர்கள் உதவ முன்வந்தாலும் புன்சிரிப்போடு மறுத்து விட்டு, தானே எல்லாவற்றையும் செய்து முடிப்பதும், ஒரு கால் இல்லாமலும் கூட முகாமிலிருக்கும் முழு மனிதர்கள் செய்யும் வேலைகளிலெல்லாம் தன்னையும் ஈடுபடுத்த எத்தனிப்பதும் அவனது சிறப்பான அம்சங்கள். அவை நாங்கள் அவனிடம் படிக்க வேண்டிய பாடங்கள். காயம் மாறி – ஜெய்ப்பூர் காலோடு துயரத்தையும் சுமந்து – மருத்துவமனையிலிருந்து வந்தவனுக்கு, யாழ் மாவட்ட தாக்குதற் படைப்பிரிவில் நிதி வேலை கொடுக்கப்பட்ட போது சண்டைக்குப் போக வேண்டுமென தளபதியோடு சண்டைபிடித்து ஆனையிறவுக்குப் போனதும் – அகன்ற பாத்திரத்தில் சோறு குழைத்து, ஐந்தாறு பேர் சேர்ந்து நாங்கள் சாப்பிடும் போது – வெறுமையாகும் பாத்திரத்தை நிரப்பிவர வேறொருவரையும் பாராமல் தானே தூக்கிக்கொண்டு எழுவதும் – ‘ஜெயராஜ்’ முகாமிலிருந்த ‘அருகிருக்கை’ பொருத்திய டீ.ளு.யு. மோட்டார் சைக்கிளில் அவனை இருத்தி நாங்கள் தள்ளி விளையாடுகையில் – வளைத்துத் திருப்பி ஓட வீடு வசதி காணாதென்று முற்றத்துக்கிறக்கி, பின் முற்றமும் வசதி காணாதென்று வீதிக்கெடுத்த போது, தளபதியைக் கண்டு நாங்கள் தடுமாற, வேலியோடு மோதி வண்டி கவிழ, தலையில் நல்ல அடிபட்ட அவன் எழுந்து பிடரியைச் சொரிந்து கொண்டு நின்றதும் – தண்டனை தந்த போது கும்மாளமிட்டபடி அவனும் சேர்ந்து செய்ததும் – கிளாலியில் எம்மவர்களை வேட்டையாட வரும் எதிரியை நாங்கள் வேட்டையாடும் கடற்சண்டைகளில், ‘நேவி’யைக் கலைத்து விரட்டும் புலிகளின் விசைப்படகுகளிற்கு அவன் ஓட்டியாய் இருந்துததும் – ஐந்துநாள் ஓய்வு தந்து வீட்டுக்கனுப்ப – ‘இன்று படகுச்சேவை’ என்று நாளேட்டின் செய்தியைப் பார்த்து விட்டு – பாதுகாப்புப் பணியிலீடுபட இரண்டாம் நாளே புறப்பட்டு அவன் கிளாலிக்கு வந்ததும் – அப்போதெல்லாம் கரும்புலித் தாக்குதல் ஒன்று செய்யவேண்டுமென்ற வேட்கையை, தனது மனக்குகையினுள் அவன் சுமந்து கொண்டு திரிந்ததும் – நாங்கள் அடிக்கடி அவனைப்பற்றிப் பேசிக்கொள்ள எங்களுக்குள் உயிர்வாழும் அவனது நினைவுகள். அவனது வீரம்; அவனது தியாகம்; அவனது முயற்சி; அவனது விட்டுக்கொடுப்பு; அவனது முன்மாதிரி; ஒட்டுமொத்தமாக அவனே எப்போதும் நினைவுகொள்ள வேண்டிய எடுத்துக் காட்டுக்கள். கணேஸா! உனது வீட்டுக்கு நீ போய் வந்த அந்த இறுதிப் பயணம். அதை நினைக்கும் போதெல்லாம் உன் அம்மாவின் விழி ஓரங்களில் நீரின் கசிவு. “பழஞ்சோறு குழைச்சுத் தீத்தி விடணை” என்று சாப்பிட்டாயாம். ஒருநாளுமில்லாதது போல, அப்பாவையும் அம்மாவையும் கொண்டு நீர் அள்ளிக் குளித்தாயாம். “தலையெல்லாம் காஞ்சுபோய்க் கிடக்குதேடா…… கொஞ்சம் எண்ணை வையன்ரா……” என்று ஆதரவாகக் கேட்ட அம்மாவிடம், “நாளைக்கு கடல் தின்னப்போற தலைதானேயணை……” என்றும் சிரித்தபடி சொன்னாயாம். முன்னர் யாரோ சொன்னது நினைவுக்குவர, இப்போது சாதுவாக சந்தேகமும் எழ, ஆச்சரியத்தோடும் அச்சத்தோடும், “நீ கரும்புலியாய் போகப்போறியாம் தம்பி…… உண்மையாவோடா……? என்று பரிதாபமாகக் கேட்ட அம்மாவை, சிரித்துக்கொண்டு வந்து கட்டிப்பிடித்துக் கொஞ்சி,இ “உன்னை விட்டிட்டுப் போவனோணை அம்மா!” என்று சொல்லிவிட்டுப் போனாயாம். இப்போது – கண்ணீரோடு அந்தத் தாய் தன் வீரமகனின் படத்திற்குப் பூப்போட்டுக்கொண்டிருக்கின்றாள். ‘ஒப்பறேசன் தவளை’க்கான உற்சாகமான முன்னேற்பாடுகள். உறக்கமற்ற இரவுகள்; ஓய்வற்ற நாட்கள்; கடற்புலி வீரர்களின் கடுமையான கடற்பயிற்சி. வெடிமருந்துப் படகினை எதிரியின் தளத்தோடும் மோதும் செயல்முறையை, கணேஸ் சலிப்பின்றிக், களைப்பின்றிப் பயின்றான். அந்த நாள் வந்தது – சர்வதேச செய்தி நிறுவனங்களின் அலைவரிசைகளில் புலிகள் இயக்கத்தை முதன்மைப்படுத்திய நாள் அது. சாமம் கழிந்த நள்ளிரா வேளை. சமர் ஆரம்பித்துவிட்டது; பூநகரியில் புயல் வீசத் தொடங்கிவிட்டது. நாகதேவன்துறை கடற்படைத் தளத்தைச் சூழ்ந்த புலிகளின் கடல் – தரை வழிகளிலான ஆக்ரோசமான பாய்ச்சல். அங்கிருந்தஇ ‘றாடர்’ கோபுரமும் தகவல் பரிவர்த்தனை நிலையமும் தான் கணேசின் இலக்கு. உரிய நேரம் வந்தது. உத்தரவுக்காக காத்திருந்தவன், இதுதான் உரிய தருணம் என்பதைத் தானாகவே தீர்மானித்தான்; புறப்பட்டான். கடலில் – தனது தளத்தைச் சுற்றி – எதிரி அமைத்திருந்த முட்கம்பி வேலிகளை எகிறிக் கடந்து பாய்ந்தது கணேசின் வெடிமருந்துப் படகு. இலக்குப் பிசகாத தாக்குதல். தொடரும் வெடியோசைகளுக்கு நடுவே கடலதிரும் குண்டோசை. கண்ணிமைப்பொழுதில் பிரகாசித்த ஒளிப்பிழம்பு. யாழ்ப்பாணக் கடல்நீரேரியில், தமிழர்களின் பிணங்களை மிதக்கச் செய்தவர்களை, அதே கடல் நீரேரியிலேயே பிணங்களாக மிதக்கச் செய்து விட்டு, உப்பு நீராக உறுமாறிப் போனான் அந்த வீரன்! “மனித தியாகத்தின் இமயத்தைத் தொட்டுவிட்ட இந்த இனிமையானவர்களை நான் அறிவேன். அவர்களது நெஞ்சத்தின் பசுமையில் ஊற்றெடுத்த உணர்வுகளையும் நான் புரிவேன். ஏதோ ஒன்று, மனித விடிவை நோக்கி நகரும் உந்து சக்தியாக அவர்களை ஆட்கொண்டிருந்தது. அந்த விடுதலையின் தாகத்தைத் தீர்ப்பதற்கு, எதையும் செய்ய அவர்கள் தயாராக இருந்தார்கள்” – தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்கள். நன்றி: விடுதலைப்புலிகள் இதழ் (மார்கழி – தை, 1994). https://thesakkatru.com/black-sea-tiger-mejor-kanesh-kuyilan/
-
கடற்கரும்புலி மேஜர் கோபி
கடற்கரும்புலி மேஜர் கோபி நவம்பர் 10, 2020/தேசக்காற்று/கடற் கரும்புலிகள்/0 கருத்து சாவுக்கு விலங்கிட்ட நெருப்பு மனிதர்கள் கடற்கரும்புலி மேஜர் கோபி / குமணன். ‘ஒப்பறேசன் தவளை’க்கு இன்னும் பத்தே நாட்கள் தான் இருக்கின்றன. கோபி ஊருக்குப் போனான். தாயினதும், தனயனதும் மகிழ்ச்சிகரமான ஒரு சங்கமம். பாசம் கரைபுரண்ட அன்பு முத்தங்களின் பரிமாற்றம். எப்பவோ கேட்க வேணும்போல இருந்த தனது நீண்டகால மனஉளைச்சலை அம்மா, மகனிடம் இப்போது வெளிப்படுத்தினாள். “உனக்குக் காலும் இல்லைத்தானே தம்பி…… இனியும் இயக்கத்தில இருந்து என்னப்பன் செய்யப்போறாய்……? அந்தத் தாயுள்ளம் ஏக்கங்களோடு ஆதங்கப்பட்டது. “காலில்லாட்டியும் பரவாயில்லையம்மா…… இயக்கம் என்னைப் பார்த்துக் கொள்ளும்…… நான் கடலில வேலை செய்வன் கடற்புலிகளில படகு ஓடுவன்……” “கடலில நேவி வந்திட்டா என்னடா தம்பி செய்வாய்……? ……!” இது அன்னையின் அச்சம். அது இயல்பானது; அவன் புரிந்துகொண்டான். புன்னகையோடு பதில் வந்தது. “பயப்படாதீங்க அம்மா…… பொடியள் இருக்கிறாங்கள் என்னைக் காப்பாத்துவாங்கள்; விடமாட்டாங்கள்.” அம்மாவால் ஏற்றுக்கொள்ள முடியவில்லைத்தான். இருப்பினும், முகத்தில் திருப்தி தெரிந்தது. பழைய நண்பர்கள் சேர்ந்தனர்; ‘பிரிந்தவர் கூடினால்……!’ அது ஒரு ஆரவாரமான சந்திப்பு. “அடுத்த மாவீரர் நாளுக்கு எங்கட வீட்டுக்காரரும் துயிலுமில்லம் போவினமடாப்பா” – கோபி சொல்லி வைத்தான். “இவன் நல்ல பகிடிவிடுறான்,” நண்பர்கள் ரசித்துச் சிரித்தனர். “எங்கட வீட்டு ஒழுங்கைக்கு ‘கோபி வீதி’ எண்டு பேர்வைக்க வேண்டிவரும்” – கோபி இதையும் சொல்லி வைத்தான். நாலைந்து நாட்கள் இனிமையாகக் கழிய, எல்லோரிடமும் விடைபெற்றுக்கொண்டு கோபி போய்விட்டான். 1989 ஆம் ஆண்டின் மையப் பகுதியில், அவன் தன்னை ஒரு விடுதலைப்புலி வீரனாக்கிக் கொண்டான். ‘சேரா பிறாவோ’ முகாமின் 2ஆவது தொகுதியில் பயிற்சி எடுக்கும் காலத்திலேயே, அவனது ஆற்றல்கள் வெளிப்படத் துவங்கின. மன்னார் மாவட்டப் படையணியிலிருந்து, பல்வேறு சண்டைகளிலும் பங்காற்றித் தனது திறன்களைக் காட்டிய கோபி, சிலாபத்துறை இராணுவ முகாம் மீது நாம் தொடுத்த மிகப்பெரிய தாக்குதல் முயற்சியின்போது, பலத்த காயத்துக்குள்ளானான். சிகிச்சை முடிந்து – காயம் மாறி – அவன் வந்த பின்பு, ‘சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி’யின் உருவாக்கத்திற்கென மன்னார் மாவட்டத்திலிருந்து தெரிவுசெய்து அனுப்பப்பட்ட புலிகளின் அணி, அவனையும் கொண்டிருந்தது. சாள்ஸ் அன்ரனி படையணி, அவனது ஆற்றல்களுக்கும் திறமைகளுக்கும் களம் அமைத்துக் கொடுத்தது என்று சொல்லலாம். அந்தப் படையணி எதிரியை எதிர்கொண்ட ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், அந்த வீரன் தீரத்துடன் களமாடினான். சாள்ஸ் அன்ரனி படையணியில், கண்ணிவெடிப்பிரிவில் தான் அவனது பணி துவங்கியது. கால அசைவில் தளபதி பால்ராஜின் பாராட்டுக்களைப் பெற்ற போராளிகளுள் ஒருவனாக அவன் வளர்ந்தான். சிங்களப் படையினர் விழி இமையாது காவலிருக்கும் அரண்களின் ஊடுகளுக்குள் அந்த வீரனது இரவுகள் கழியும். தனது பாதுகாப்பிற்கெனத் தன்னைச்சூழ எதிரி விதைத்து வைத்திருக்கும் மிதிவெடிகளையும் பொறிவெடிகளையும் அகற்றிவிட்டு, அவனது அழிவிற்கென, அவனுக்கு நடுவில் எமது வெடிகுண்டுகளையும் கண்ணிப்பொறிகளையும் நாட்டும் அபாயகரமான பணி அவனுடையதாக இருந்தது. எதிரி குடியிருந்த இடங்களுக்கெல்லாம் அவன் குண்டு கொண்டு போனான். கண்ணிவெடிப் பிரிவில் திறமையான முறையில் செயலாற்றும் போதே துணிகரமாக அவன் பார்த்த வேவு வேலைகளும், வேவுப் பணியில் அவன் காட்டிய ஈடுபாடும்இ அவனை ஒரு வேவுப்படை வீரனாக்கியது. அவனது ஆர்வத்திற்கும் ஊக்கத்திற்கும் வழி அமைத்து நெறிப்படுத்திய தளபதி பால்ராஜ், கண்ணிவெடிப் பிரிவில் செயற்படும் அதே சமயத்திலேயே இராணுவ வேவுப்பிரிவில் செயற்படவும் அவனை நியமித்தார். உயிராபத்து நிறைந்த சூழ்நிலைகளில் – எதிரியின் உள்ளங்கையில் ஏறி அவனது கைரேகைகளை மனனஞ்செய்து – மதிநுட்பம் மிக்க விதமாக கோபி செய்த வேவுப் பணிகள் அதிசயமானவை. தாக்குதல் திட்டங்களைத் தயாரிக்கின்ற போது, அவற்றின் பயன்பாடுகளின் தார்ப்பரியங்கள் உணரப்பட்டன. ஆனையிறவுக்குக் கிழக்கே – தட்டுவன்கொட்டியில் – சிங்களப் படையின் 22 காவலரண்களை வீழ்த்திய தாக்குதலின் வெற்றிக்காக, மேஜர் கிண்ணியோடு சேர்ந்து அவன் ஓய்வற்று உழைத்தான். தாக்குதல் இலக்கு தெரிவுசெய்யப்பட்டதிலிருந்து சண்டை முடிந்து வெளியேறுகின்ற வரை, இடைப்பட்ட காரியங்கள் எல்லாவற்றிலும் கோபி இருந்தான். இதன் பின்னர், பூநகரிக்குத் தெற்கே பள்ளிக்குடாப்பகுதிக் காவலரண்கள் மீதான பெரியதொரு தாக்குதலிற்கான தயாரிப்புக்கள் செய்யப்பட்டன. அங்கு கோபி, இரவு பகலின்றிப் பாடுபட்டான். தாக்கும் பிரதேசத்தின் ஒரு பகுதிக்கு வேவு பார்த்து, தாக்குதல் அணிகளுள் ஒரு தொகுதிக்குப் பாதை காட்டி, தாக்குதல் குழுவோடு களத்திலும் இறங்கி அந்தத் தாக்குதலில் கோபி ஆற்றிய பங்கு, முக்கியத்துவம் மிக்கது. ஆனாலும், ஆற்ற முடியாத பெரும் சோகம் அவனது இதயத்தைக் கவ்விய இழப்பாக, அந்தத் தாக்குதலில் லெப். கேணல் சுபன் களப்பலியாக நேர்ந்துவிட்டது. அடுத்ததுதான் பலாலி – சிங்கள ஆட்சியாளர்களையும் படைத்தளபதிகளையும் அதிர்ச்சியில் ஆழ்த்திய மிகப் பெரிய தாக்குதல் நடவடிக்கை அது! பலாலி கூட்டுப்படைத்தளத்தின் கிழக்குப் பகுதியில் – விமான இறங்கு தளத்தின் பாதுகாப்பிற்கென இராணுவ நடவடிக்கை ஒன்றின் மூலம் அமைக்கப்பட்ட 4 கிலோமீற்றர் நீளமான பாதுகாப்பு வியூகத்தைப் புலிப்படை வீரர்கள் பிய்த்தெறிந்த வீர சாதனை அது. கெரில்லாப் போர் முறையின் ஒரு புதிய பரிமாண வடிவத்தில் புலிகள் நிகழ்த்திய இந்தப் பெருமெடுப்பிலான தாக்குதலின் திட்டத்தை வரைவதற்கு உறுதுணையாக இருந்த முக்கியமானவர்களுள், கோபியும் ஒருவன். எதிரியின் ஒவ்வொரு அசைவுகளையும் துல்லியமாக அவதானித்து, ஒவ்வொரு அங்குலத்தையும் துணிகரமாக வேவு பார்த்து, தாக்குதலின் போது தாக்குதலணிகளுக்கு வழிகாட்டியாகச் சென்றதோடு மட்டுமே நின்று விடாது – போரிடும் வீரனாய்ச் சண்டையில் இறங்கி, இடது காலை ரவை துளைத்துச் சென்ற பின்பும் சண்டையிட்டு, காயமடைந்த – களப்பலியான – தோழர்களுடன் ஆயுதங்களையும் அகற்றும் வரை, களமுனையிலிருந்து தான் வெளியேற மறுத்து, சோர்ந்து விழுந்து, சுய நினைவிழந்து, ‘இனி இயங்காது’ என்ற காலை மருத்துவர்கள் இதயம் நோக அகற்றிவிட…… அந்த வெற்றியின் பிரசவிப்பிற்காக மூன்று மாதகாலமாக – படுக்கையின்றி, பட்டினி கிடந்து – ஓயாது சுழன்று – அல்லும் பகலும் கசங்கிய அந்த விடுதலைப்புலி, உடல் வேதனையோடும் ஆனால் உளநிறைவோடும் படுத்திருந்தது. ரவையுடைத்துச் சென்ற எலும்பிற்குக் கட்டுப் போட்டுக் கொண்டு, அடுத்த கட்டிலில் படுத்திருந்த நண்பனிடம் கோபி அடிக்கடி சொல்லுவான் – “கால் போனது கவலைதான்; ஆனா அது ஒரு பிரச்சினை இல்லை போராட்டத்துக்காக செய்யிறதுக்கு இன்னும் எவ்வளவோ வழியிருக்குத்தானே……” கோபி! அவன் மிகவும் மிருதுவானவன். எல்லோரும் ஏற்றுக்கொள்ளும் விதமாக அவன் நட்புக் கொள்ளும் முறை அபூர்வமானது. அடுத்தவர்களை அனுசரித்து, அன்புகாட்டி அவன் பழகும் பண்பு அற்புதமானது. தான் நிற்கும் இடம் எல்லாவற்றையுமே கும்மாளச் சிரிப்பாலும், குதூகலத்தாலும் நிறைத்துவிடும் அவனுடைய குணாம்சம் சிறப்பானது. இலட்சிய உறுதியாலும், விடாமுயற்சியாலும், செயற்றிறனாலும் வளர்ந்தவன் அவன். வேவு வேலைகள் கொடுக்கப்படும் போது – ஒப்படைக்கப்பட்ட பணியை முழுமையாகவும், திறமையாகவும் செய்து முடிக்கும் வரை – ‘செய்து முடிக்க வேண்டும்’ என்ற உணர்வின் உந்துதலோடு – திரும்பத் திரும்பப் போய், முயற்சி எடுக்கும் தன்மை அவனுடையது. எப்போதும் சண்டைகளைப் பற்றியே பேச்சு; தாக்குதல்களைப் பற்றியே எண்ணம்; போர்த் திட்டங்களைப் பற்றியே சிந்தனை. தளபதி பால்ராஜுடன் அவன் கதைக்காத நாள் கிடையாது; கதைப்பதற்கு பகலென்றும் இரவென்றும் நேரம் கிடையாது; அந்தக் கதைகளிலெல்லாம் போரன்றி வேறெதுவும் கிடையாது. “அங்கு ஒரு நல்ல ‘ராக்கற்’ இருக்கு”; “இந்த இடத்தில அவன் வழமையா வந்து போறான்”; “அந்தப் பக்கம் அடிக்கக்கூடிய மாதிரி இருக்கு” என்று தான் அந்தப்புலி வீரன் பேசிக்கொண்டிருந்தானே அல்லாமல் – தனது குடும்பத்தின் கஸ்ட நிலையைப் பற்றி, வானமே கூரையான அவர்களின் வாழ்வைப் பற்றி அவன் ஒருபோதும் வாய் திறந்ததில்லை. அது மலையகத்தைச் சேர்ந்த ஒரு தமிழ்க் குடும்பம். கேகாலையில் உள்ள ‘மாவனெல்ல’ தான் சுப்பிரமணியம் ஐயாவினுடைய குடும்பத்தின் பூர்வீகக் குடிநிலம். ஒரு அக்காவிற்கும் மூன்று தம்பிகளிற்கும் இடைப்பட்டவனாக, 1973 யூன் 6இல் பிறந்தவனுக்கு செல்வலிங்கம் எனப் பெயரிட்டு, கண்ணன் என்று செல்லமாக அழைத்தனர். அந்தக் குடும்பத்தின் நிறைவான பொருளாதார வாழ்வை மட்டுமல்ல, அவர்களின் மகிழ்ச்சியையும் நிம்மதியையும் சேர்த்து சிங்களப் பேரினவாதம் சிதைத்தது. பத்து வருடங்களுக்கு முன்னர், இலங்கைத் தீவையே இரத்த களமாக்கி, தமிழர்கள் மீது கோரமான இன வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்ட போது, விரட்டியடிக்கப்பட்ட குடும்பங்களுள் அதுவும் ஒன்று. அல்லல்பட்டுவந்த பல்லாயிரக்கணக்கான தமிழர்களோடு, அந்தக் குடும்பத்தையும் தாங்கிக் கொண்டது தமிழீழம். மன்னாரில், பல்லவராயன்கட்டு கிராமத்தில் அவர்கள் குடியேறும் போது, கோபிக்கு பத்தே வயதுதான். ‘சிங்களவர்களோடு தமிழர்கள் ஒருகாலத்திலும் சேர்ந்து வாழ முடியாது’ என்பது, ஒரு ஆழமான உண்மையாக அந்தப் பிஞ்சு நெஞ்சில் அப்போதேயே பதிந்தது. நன்றாகப் படிக்கவேண்டுமென்றும், நல்ல அறிவாளியாக வளர வேண்டுமென்றும் அந்தச் சிறுவனுக்கு நிறைய ஆசை. அதில் ஊக்கமும் ஆக்கமும் கொண்ட பள்ளிக்கூட மாணவனாக அவன், 9ஆம் வகுப்புவரை பாடசாலைக்கப் போனான். படம் பார்க்கவென்று அம்மா கொடுக்கும் பணத்தை வாங்கிச் சென்று, படிப்பதற்கு புத்தகங்கள் வாங்கி வந்து சேர்க்கும் அளவுக்கு இருந்தது அவனது கற்கும் ஆர்வம். ஆனால், உக்கி உதிரும் கூரையும் சொரிந்து சரியும் திண்ணையுமாக அந்தக் கொட்டில் வீட்டின் ஏழ்மை நிலையினால், அவனது ஆர்வத்திற்கும் முயற்சிக்கும் ஒத்துழைக்க முடியாநிலை. இந்த வேதனை அவனது மனதைப் பாரமாக அழுத்தும் வேளைகளில் எல்லாம், தாங்கள் அவலமாக ஓடிவந்த அந்த நாள், அவனது நினைவில் உறைக்கும். விரிவாக்கம் கண்டு வந்த விடுதலைப் போராட்டத்தில், தானுமொரு தமிழ்க்குடிமகன் என்ற வகையில், தனக்குரிய பங்கை உணர்ந்துகொள்ள அவன் தவறவில்லை. படித்து முன்னேறவேண்டுமென ஆர்வத்தோடு வாங்கிய பாடப்புத்தகங்களிற்குள், ஒளித்து வாங்கி வந்த போராட்ட நூல்களை மறைத்துப் படிக்க அவன் துவங்கினான். அந்தச் சிறுவன் வளர வளர அவனுள் அரும்பியிருந்த விடுதலை உணர்வும் விஸ்வரூபம் எடுத்து வந்தது. அது ஒரு கட்டாயக் கடமையாகவும் அவனுள் பரவியது. கடற்புலிகள் அணி அந்த வீரனைத் தனதாக்கிக்கொண்டது. 1993 இன் ஆரம்பத்தில் தான். எதிரியானவன் சிறந்த சண்டைப்படகுகளுடனும், நவீன ஆயுதங்களுடனும் கடலில் வருகின்றான். எம்மிடமிருப்பது குலையாத ஆன்ம உறுதியும், எமது உயிரும் தான். இவற்றைக் கொண்டு நாங்கள் அவனைச் சந்தித்தேயாக வேண்டும் என்ற கருத்தைச் சுமந்து வாழ்ந்த அந்த வேங்கையின் கரும்புலிக் கனவு நனவாகஇ சந்தர்ப்பமும் கிடைத்தது. கிளாலிக் கடலில் எதிரியைத் தேடியலையும் வெடிமருந்துப் படகொன்றுக்கு கோபி சொந்தக்காரனாயிருந்தான்; இன்னொன்றுக்குக் கணேஸ். வரதனும் மதனும் உடைத்த பின், நாகதேவன்துறையில் மிஞ்சிக் கிடந்த விசைப்படகுகள் புலிகளின் கைக்கு மாறும் வரை அவைதான் அவர்களின் குறி. இலக்குகளைத் தேடி அவர்கள் போனார்கள்; ஆனால், இலக்குகள் அவர்களை விட்டுத் தப்பியோடிக்கொண்டிருந்தன. கடலலைபோல் காலமும் கரைய, வந்து சேர்ந்தன ‘ஒப்பறேசன் தவளை’யின் நாட்கள் – கோபியின் கடைசி 48 மணிநேரங்கள் அவை – யாழ். கடல்நீரேரியின் ஓரத்தோடு – கௌதாரி முனைக்கும் பள்ளிக்குடாவிற்கும் மேற்கே – இந்துமா சமுத்திரத்தின் ஆர்ப்பரிக்கும் அலைகளை ஊடறுத்து அவனது படகு விரையும். அவனைக் காணும் எதிரியின் பீரங்கிப் படகுகள் மண்டைதீவுப் பக்கமாக எட்டத்துக்கு விலகும். “உங்களை நம்பியே தரையில் எங்கள் போராளிகள் போரிடுகின்றார்கள். சமர் முடிந்து அவர்கள் முற்றாக வெளியேறும் வரை நேவி இறங்காமல் பாதுகாக்க வேண்டிய பெரும் பொறுப்பு உங்களிடமுள்ளது” சண்டைக்கு முன்னர் தலைவர் சொன்னதை ஒவ்வொரு கணமும் அவன் நினைவு படுத்திக்கொண்டான். நடுக்கடலில் இயந்திரம் பிசகும், படகு உடனடியாகக் கரைக்கு விரையும்; அவனது ‘அவசரம்’ அவசரப்படுத்தும்; திருத்தவேலை துரிதமாகும்; படகு மீண்டும் புறப்படும். அந்த இரண்டு நாட்களுக்குள் இது அடிக்கடி நடந்தது. இப்படியாக வந்து வந்து போனவனை – கடைசித் தடவைக்குப் பிறகு – “அதே சிரித்த முகத்தோடு” நாங்கள் காணவில்லை…… எங்கள் கோபி! ‘கடலில நேவி வந்தால் பொடியள் காப்பாத்துவாங்கள்’ என்று அம்மாவிடம் சொல்லி விட்டு வந்தாயா… எப்படியடா முடியும்? எங்களால் நெருங்க முடியாத உயரத்தில் நீ; எங்களால் எட்ட முடியாத உயரத்தில் உனது இலட்சிய வேட்கை! நண்பா! இந்த இலட்சியத்தை அடையும் வரை – அதே வழிகாட்டலில் – நாம் அணிவகுப்போம். சென்று வா! “மனித தியாகத்தின் இமயத்தைத் தொட்டுவிட்ட இந்த இனிமையானவர்களை நான் அறிவேன். அவர்களது நெஞ்சத்தின் பசுமையில் ஊற்றெடுத்த உணர்வுகளையும் நான் புரிவேன். ஏதோ ஒன்று, மனித விடிவை நோக்கி நகரும் உந்து சக்தியாக அவர்களை ஆட்கொண்டிருந்தது. அந்த விடுதலையின் தாகத்தைத் தீர்ப்பதற்கு, எதையும் செய்ய அவர்கள் தயாராக இருந்தார்கள்” – தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்கள். நன்றி: விடுதலைப்புலிகள் இதழ் (மார்கழி – தை, 1994). https://thesakkatru.com/black-sea-tiger-mejor-gobi-kumanan/
-
இறைவனிடம் கையேந்துங்கள்
நிறைவான மனதில் மறைவான ஏக்கம் திரையாக வந்து தினம் என்னை தாக்கும் கருவாக நெஞ்சில் உருவான பாசம் கற்பனைகள் கோடி தினம் அள்ளி வீசும் ஒரு நாள் என் நெஞ்சில் ஆழ்ந்தது துன்பம் அடைக்கலம் வேண்டி 7. அழுதது கொஞ்சம் அப்போது அண்ணலை உள் மனதில் ஏத்தி கற்பனை உலகில் நான் மூழ்கி போனேன் நம் ஊரின் எல்லையை எம் வேந்தர் அடைந்தார் என்றொரு செய்தியை கேட்டு எந்தன் செவிகள் கனவெல்லாம் வாடி கரை ந்தோடி நானும் மன்னரை நாடி நான் போனேன் தேடி கடும் வெயிலும் மழையும் தடை விரித்த போதும் காருண்யர் அன்பு குடையாக மாறி கண்ணுக்கு சுர்மா கல்புக்கு கலிமா நாவுக்கு ஸலவாத் அலங்காரமாகி நெடும் பாதை ஓரம் விரைந்தோடும் நேரம் கலைத்தாலும் தேகம் குறையாத வேகம் ஏக்கங்கள் பலமாய் எனை வாட்டினாலும் எண்ணங்கள் பலதாய் மனக் கண்ணில் மோதும் எம் நெஞ்சில் வாழும் பூமானை நோக்கி பேராவலுடன் ஸலாம் உரைக்க வேண்டும் உள்ளத்தில் தேங்கிய உளைச்சல்கள் நீங்க உத்தமருடன் உரையாட வேண்டும் பெருமானின் பேச்சில் நிறைவான மூச்சில் பெரும் பாவச் சுமையும் பறந்தோட வேண்டும் விடை பெறும் நேரம் விரைந்தாலும் உம்மை விலகாமல் என்னுயிர் கறைந்தோட வேண்டும் பலவாறு எண்ணம் சுமந்தது உள்ளம் அடைந்தேனே நானும் நம் ஊரின் எல்லை அங்கிங்கும் அலைந்தேன் அன்பரை தேடி மனம் உடைந்து போனேன் காணாமல் வாடி பெரும் பாவம் இழைத்தேன் பாக்கியம் இழந்தேன் என் வாழ்க்கை வீணே என்றெண்ணி அழுதேன் கண்ணிமைகள் நனைய திடுக்கிட்டு எழுந்தேன் கண்டவை அனைத்தும் கனவென்று உணர்ந்தேன் இறைவா என் ஆசையில் தவறேதும் உண்டா நான் கொண்ட காதலில் குறையேதும் உண்டா குறையேதும் இருப்பின் அடியோடு நீக்கி பெருமானின் காட்சி நொடியேனும் தருவாய்
-
மேஜர் தங்கேஸ்
மேஜர் தங்கேஸ் நவம்பர் 10, 2020/தேசக்காற்று/சரித்திர நாயகர்கள்/0 கருத்து 41971 பங்குனித் திங்கள் 21ம் திகதி நம்பியார் இராமச்சந்திரன் தம்பதிகளின் செல்வப் புதல்வனாய் மறத்தமிழ் மகனாய் முத்துக்கள் விளையும் பூமி முருங்கனில் ராஜேந்திரம் என்னும் பெயருடன் இம்மண்ணில் உதித்தான். இவன் மிகவும் வறிய குடும்பத்தில் பிறந்தும் இவனது தந்தை இவனின் ஆரம்பக்கல்வியை மன்னார் முருங்கன் மகாவித்தியாலயத்தில்; பயிற்றுவித்தார். இவன் ஆசிரியர்கள் மத்தியில் நற்பெயருடனும் திறமையானவனாகவும் செயற்பட்டு வந்தான். இவனது திறமைகளைக் கண்டு ஆசிரியர்கள் இவனை மகாவித்தியாலயத்தின் மாணவர் தலைவனாக நியமித்தனர். இக்காலப் பகுதியில் எமது கிராமம் இந்திய ஆக்கிரமிப்பாளர்களால் சுற்றி வளக்கப்பட்டு தேசவிரோதிகளால் காட்டிக் கொடுக்கப்பட்டும் வந்தது. இக் காலப்பகுதியில்தான் இவன் எமது நாட்டில் நடக்கும் செயல்களுக்கு ஒரு முற்றுப்புள்ளி இடவேண்டும் என்ற நோக்குடன் இவன் தனது நண்பர்களிடம் ‘மச்சான் நாம் அடிமைகளாய் வாழ்கிறதை விட விடுதலைக்காய் போராடி சாவதுமேல், நான் ஒரு முடிவு எடுத்திட்டன் நான் இயக்கத்திலை இணையப் போறன்” என்று கூற அவனுடன் நண்பர்களான 2ம் லெப் நவாசும், லெப்ரினன் றொபேட்டும் 1988 இல் இணைந்து எமது அமைப்பில் பதிவாகினர். பதிவானதும் இவனுக்கு தங்கேஸ் என்னும் பெயர் சூட்டப்பட்டு மன்னாரில் 9 வது அணியில் பயிற்சி பெற்றான். இவன் பயிற்சி முகாமில் திறமையாக பயிற்சி பெற்று பொறுப்பாளர் மத்தியில் நற்பெயருடன் விளங்கியவன். பயிற்சி முடிந்ததும் அரசியல் வேலைத்திட்டத்திற்காய் தனது சொந்த கிராமத்திற்கே அனுப்பப்படுகிறான். இவன் தனது கிராம மக்களுக்கு எங்கள் அமைப்பைப் பற்றியும், எமது போராட்டத்தையும் தெளிவு படுத்தியவன். அத்தோடு இவன் நின்று விடவில்லை. இவனது திறமைகளைக் கண்ட மன்னார் மாவட்ட சிறப்புத் தளபதியாக இருந்த லெப்ரினன் கேணல் சுபன் அண்ணன் அப்போது மன்னார்த் தீவுப் பொறுப்பாளராக இருந்த லட்சுமன் அண்ணனுடன் இவனை விட்டார். அங்கும் கொடுக்கும் வேலைகளை திறம்பட செய்து முடித்தான். அக்காலப் பகுதியில் 2ம் கட்ட ஈழப்போர் ஆரம்பமாகியது. அந்நேரம் மன்னார் பழைய பாலம் என்னும் இடத்தில் நிலை கொண்டுள்ள சிறீலங்கா இராணுவம் மீது தாக்குதல் நடாத்த பொறுப்பாளர்களால் திட்டம் தீட்டப்பட்டு தாக்குதல் நடாத்தப்படுகின்றது. இத்தாக்குதலில் தங்கேசும் பங்குபற்ற அனுமதி கிடைத்தது. இத்தாக்குதலில் ஏராளமான படையினர் கொல்லப்பட்டனர். இம்முகாம் முற்றாக தாக்கி அழிக்கப்பட்டது. இத்தாக்குதலில் இவன் திறமையாக செயல்பட்டு களமாடினான். அத்துடன் மன்னாரில் நடை பெற்ற பல தாக்குதல்களில் தனது திறமைகளை வெளிக் கொணர தவறவில்லை. இதற்காக தளபதியிடம் பாராட்டுக்கள் பல பெற்றான். இவனது திறமைகளைக் கண்ட மன்னார் மாவட்ட சிறப்புத் தளபதியாக இருந்த லெப்ரினன் கேணல் சுபன் அண்ணன் 1991ல் தன்னுடன் தங்கேசை எடுத்துக் கொள்கிறார். இந்நேரம் சிலாபத்துறைக்கு கொண்டச்சியிலிருந்து வரும் இராணுவத்திற்கு தாக்குதல் நடாத்த சுபன் அண்ணாவால் திட்டம் வகுக்கப் படுகின்றது. இக்தாக்குதலுக்கு தங்கேசின் திறமையான செயல்கனைக்கண்டு தங்கேசை ஒரு குழுவிற்கு அணித்தலைவனாக அனுப்புகின்றார். இத்காக்குதலிலும் தங்கேஸ் தனது திறமையைக் காட்டத்தவறவில்லை. இத்தாக்குதலில் இவன் விழுப்புண் அடைகின்றான். பின் 1992 காலப்பகுதியில் மன்னார் மாவட்ட சிறப்புத் தளபதியால் இவன் வேறு துறைக்கு விடப்படுகின்றான். இங்கும் இவனது திறமைகள் வெளிபடுத்தப்பட்டு வளர்க்கப் படுகின்றது. அத்துறையிலும் இவனது திறமைகளைக்கண்டு பொறுப்பாளர்களின் பாராட்டைப் பெற்று ஓர் படி வளர்கின்றான். அதன் பின்பு தங்கேஸ் தாக்குதல்களுக்கு செல்ல வேண்டும், எதிரியை எல்லையை விட்டு என்ற நோக்கத்துடன் தான் தாக்குதல்களுக்கு செல்வதற்கு பொறுப்பாளரிடம் அனுமதி கேட்கின்றான். இவனது தொடர்ச்சியான வற்புறுத்தலால் அப்போது மன்னார் மாவட்ட சிறப்புதளபதியாக இருந்த யான் அண்ணன் அவனை தாக்குதல் குழுவில் குறிப்பிட்ட சில அணிகளுக்கு பொறுபாளனாக விடுகின்றார். இந்நேரம் தான் பூநகரி தவளைத் தாக்குதல் திட்டமிடப்பட்டு தாக்குதலும் வெற்றிகரமாக நடாத்தப்பட்டது. இத்தாக்குதலில் தங்கேஸ் மிகவும் திறம்பட தனது அணிகளை நகர்த்தி தாக்குதல்களை வேகப்படுத்திய வேளை எதிரியின் தாக்குதலால் காயமடைகின்றான். பின் 1994ல் மாவட்ட சிறப்பு தளபதியால் மாவட்ட வேவு அணிக்கு இரண்டாவது பொறுப்பாளனாக தங்கேஸ் விடப்படுகின்றான். தாக்குதல்களில் மட்டுமல்ல வேவு வேலைகளிலும் எதிரியின் காவலரன்களுக்கு அண்மையில் சென்று வேவு பார்த்து வந்தான். பின் மாவட்ட சிறப்புத் தளபதியின்; மெய்க்காப்பாளனாக இவன் தேர்ந்து எடுக்கப்படுகின்றான். இதன் பின்பு இவன் பல தாக்குதல்களுக்கு தலைமை தாங்கி தாக்குதல்களை நடாத்துவதற்கு சிறப்புத் தளபதி அனுமதிக்கின்றார். அதன்படி இவனும் பல தாக்குதல்களை வெற்றிகரமாக செய்து முடிக்கின்றான். இவ்வேளையில் தான் யாழ் குடாநாட்டில் சிங்கள அரசால் திட்டமிடப்பட்டு இனஅழிப்பை குறிக்கோளாகக் கொண்டு நடாத்தப்பட்டது சூரியக்கதிர் இராணுவ நடவடிக்கை. இத் தாக்குதலில் ஓர் அணியை வழிநாடாத்தும் பொறுப்பு அவனுக்கு வழங்கப்பட்டது. அதை இவன் மிகுந்த சந்தோசத்துடன் ஏற்று தனக்கு கொடுக்கப்பட்ட பகுதியில் எதிரியை முன்னேற விடாது தனது கட்டுபாட்டினுள் வைத்திருக்கின்றான். இதற்கு முன் நடாத்தப்பட்ட இடிமுழக்க நடவடிக்கையில் தலையில் விழுப்புண் அடைந்தும் அவன் சளைக்கவில்லை. அக்காயத்துடன் தனது மக்கள் விடுதலை பெற வேண்டும், தனது மண் பறி போகக் கூடாது என்ற சிந்தனையுடன் மழை என்றும் பராது தனக்குரிய கடமைகளை செய்தவண்ணமே காணப்பட்டான். இந் நேரம்தான் எமக்கு தாங்கமுடியாத சோகம் ஒன்று காத்திருந்தது. 10.11.1995 அன்று தங்கேசின் வோக்கி அலறுகிறது. ‘கலோ தங்கேஸ்’ தங்கேஸ் தனது வோக்கியை எடுத்துக் கதைக்கிறான். அந்நேரம் எதிரியானவன் தனது தாக்குதலை அதிகரிக்கின்றான். தங்கேஸ் அவசரமாகவும் தனது உறுதி தளராத குரலிலும் கூறுகிறான். ‘அண்ணை என்ர உயிர் இருக்குமட்டும் எதிரி ஒரு அங்குலம் தானும் அரக்க முடியாது. வேறை ஒன்றும் இல்லை. நன்றி அவுட்’ என்ற பதிலே தங்கேசுவிடம் இருந்து கிடைத்தது. அதன் பிறகு தங்கேஸ் கட்டளைகளைப் பிறப்பித்தவாறு எதிரியின் தாக்குதல்களை முறியடித்தவாறு எதிரி மீது தாக்குதல் தொடுக்கின்றான். இந்நேரம் எங்கிருந்தோ வந்த எதிரியின் எறிகணை தங்கேசின் அருகில் விழ்ந்து வெடிக்கின்றது. அவ் இடத்தே தங்கேஸ் சத்தமின்றி இப் புனித மண்ணை முத்தமிடுகின்றான். தான் நேசித்த காதலித்த மண்ணிற்காகவும் மக்களுக்காவும் அம் மண்ணிலேயே மடிகின்றான். தங்கேஸ் சாகவில்லை. சரித்திரமாகிவிட்டான். நினைவுப்பகிர்வு: போராளி சு.கீரன். https://thesakkatru.com/mejor-thangesh/
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள் https://thesakkatru.com/
- மெசொபொத்தேமியா சுமேரியர்.jpg
-
இறைவனிடம் கையேந்துங்கள்
காலை வணக்கங்கள் எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க 🙏 கோமான் நபிகள் தோன்றாவிட்டால் குர்ஆன்
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
முற்றிலும் புதுசா டிஃபரண்டான சுவையில் மொறு மொறுப்பான ஸ்னாக்ஸ்
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
1kg மாவில் 2kg பிஸ்கட் தீபாவளிக்கு இப்படி செஞ்சி பாருங்க
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
ருசியான ஆப்பிள் பாயாசம்
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
பேக்கரி சுவையில் குலாப் ஜாமூன்
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
1 கிலோ முறுக்கு மாவு அரைப்பது 60 முறுக்கு வெள்ளையான மொறு மொறு முறுக்கு
-
மாவீரர் புகழ் பாடுவோம்
நிலவும் வானும் கடலும்
-
மாவீரர் புகழ் பாடுவோம்
பாடும் பறவைகளே
-
மாவீரர் புகழ் பாடுவோம்
விண் வரு மேகங்கள் பாடும்
-
மாவீரர் புகழ் பாடுவோம்
ஆழ கடல் எங்கும்
-
இறைவனிடம் கையேந்துங்கள்
வைகுண்டஏகாதசி - ஸ்ரீரங்கநாதர் பாடல்
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
வேற பிரச்சனையில் மினக்கெட்ட படியால் சமையலுக்கு நேரம்வரவில்லை 1 கப் மாவு இருந்தா பாம்பே அல்வா இதுபோல செஞ்சி பாருங்க தீபாவளிக்கு 4 விதமான ஸ்வீட் இதுபோல செஞ்சி பாருங்க 1kg அரிசி மாவில் தீபாவளிக்கு முறுக்கு இதுபோல செஞ்சி பாருங்க 1
-
இறைவனிடம் கையேந்துங்கள்
குன்றெல்லாம் குமரா உன் இடமல்லவா கொண்டாடும் தெய்வமே முருகனல்லவா சென்னிமலை சுப்ரமணிய சாமிக்கு . . . அரோகரா . . . நின்றருளும் அருணாச்சலன் பிள்ளையல்லவா தாயும் தந்தையும் நீயல்லவா எனக்கு தாயும் தந்தையும் நீயல்லவா
-
இறைவனிடம் கையேந்துங்கள்
வேலவனுக்கு மூத்தவனே விக்கன விநாயகனே
-
இறைவனிடம் கையேந்துங்கள்
துஞ்சலும் துஞ்சல் - நால்வர் அருளிய நமசிவாய பதிகங்கள் | சோலார் சாய் | சிவலோகம் | பக்தி டிவி துஞ்சலும் துஞ்சல் இல்லாத போழ்தினும் நெஞ்சகம் நைந்து நினைமின், நாள்தொறும்; வஞ்சகம் அற்று அடி வாழ்த்த, வந்த கூற்று அஞ்ச உதைத்தன, அஞ்சு எழுத்துமே. நமச்சிவாய நமச்சிவாய நமச்சிவாய நமச்சிவாய மந்திரம் நான்மறை ஆகி, வானவர் சிந்தையுள் நின்று, அவர்தம்மை ஆள்வன; செந்தழல் ஓம்பிய செம்மை வேதியர்க்கு அந்தியுள் மந்திரம் அஞ்சு எழுத்துமே. நமச்சிவாய நமச்சிவாய நமச்சிவாய நமச்சிவாய ஊனில் உயிர்ப்பை ஒடுக்கி, ஒண்சுடர் ஞான விளக்கினை ஏற்றி, நன்புலத்து ஏனை வழிதிறந்து ஏத்துவார்க்கு, இடர் ஆன கெடுப்பன, அஞ்சு எழுத்துமே. நமச்சிவாய நமச்சிவாய நமச்சிவாய நமச்சிவாய நல்லவர் தீயர் எனாது, நச்சினர் செல்லல் கெடச் சிவமுத்தி காட்டுவ; கொல்ல நமன்தமர் கொண்டு போம் இடத்து அல்லல் கெடுப்பன, அஞ்சு எழுத்துமே. நமச்சிவாய நமச்சிவாய நமச்சிவாய நமச்சிவாய கொங்குஅலர் வன்மதன் வாளிஐந்து; அகத்து அங்குள பூதமும் அஞ்ச; ஐம் பொழில் தங்கு அரவின் படம் அஞ்சும்; தம் உடை அங்கையில் ஐவிரல்; அஞ்சு எழுத்துமே. நமச்சிவாய நமச்சிவாய நமச்சிவாய நமச்சிவாய தும்மல் இருமல் தொடர்ந்த போழ்தினும், வெம்மை நரகம் விளைந்த போழ்தினும், இம்மை வினை அடர்த்து எய்தும் போழ்தினும் அம்மையினும் துணை அஞ்சு எழுத்துமே. நமச்சிவாய நமச்சிவாய நமச்சிவாய நமச்சிவாய வீடு பிறப்பை அறுத்து மெச்சினர்; பீடை கெடுப்பன; பின்னை நாள்தோறும் மாடு கொடுப்பன; மன்னு மாநடம் ஆடி உகப்பன, அஞ்சு எழுத்துமே. நமச்சிவாய நமச்சிவாய நமச்சிவாய நமச்சிவாய வண்டு அமர் ஓதி மடந்தை பேணிண, பண்டை இராவணன் பாடி உய்ந்தன; தொண்டர்கள் கொண்டு துதித்தபின், அவர்க்கு அண்டம் அளிப்பன அஞ்சு எழுத்துமே. நமச்சிவாய நமச்சிவாய நமச்சிவாய நமச்சிவாய கார்வணன், நான்முகன், காணுதற்கு ஓணாச் சீர்வணச் சேவடி செவ்வி, நாள்தோறும் பேர்வணம் பேசிப் பிதற்றும் பித்தர்கட்கு ஆர்வணம் ஆவன, அஞ்சு எழுத்துமே. நமச்சிவாய நமச்சிவாய நமச்சிவாய நமச்சிவாய புத்தர், சமண் கழுக்கையார், பொய்கொளாச் சித்தத் தவர்கள் தெளிந்து தேறின வித்தக நீறு அணிவார் வினைப் பகைக்கு அத்திரம் ஆவன அஞ்சு எழுத்துமே. நமச்சிவாய நமச்சிவாய நமச்சிவாய நமச்சிவாய நற்றமிழ் ஞானசம்பந்தன், நால்மறை கற்றவன் காழியார் மன்னன் உன்னிய அற்றம்இல் மாலை ஈர்ஐந்தும் அஞ்சு எழுத்து உற்றன் வல்லவர் உம்பர் ஆவரே நமச்சிவாய நமச்சிவாய நமச்சிவாய நமச்சிவாய
-
இறைவனிடம் கையேந்துங்கள்
நம்புங்கள் செபியுங்கள் நல்லது நடக்கும் துன்பங்களோ துயரங்களோ சோதனையோ வேதனையோ பதுவை புனிதர் பரிந்துரைப்பார் எல்லாம் வல்லவர் நடத்தி வைப்பார் மனச்சுமையோ பாரங்களோ உடற்பிணியோ ஊனங்களோ பதுவை புனிதர் பரிந்துரைப்பார் எல்லாம் வல்லவர் நலம் தருவார் வறியவரோ சிறியவரோ முதியோரோ இளையோரோ பதுவை புனிதர் பரிந்துரைப்பார் எல்லாம் வல்லவர் அணைத்துக் கொள்வார்
-
இறைவனிடம் கையேந்துங்கள்
இயேசுவின் இருதயமே என்றும்; இரங்கிடும் அருள் மயமே உந்தன் ஆசியும் அருளும் சேர்த்து வந்தால் எங்கள் ஆனந்தம் நிலைபெறுமே - 2 1. இறைவனுக்கிதயம் உண்டு - அந்த இதயத்தில் இரக்கம் உண்டு - 2 - என்றும் இரங்கிடும் இறைவன் இருப்பதனால் எங்கள் அனைவர்க்கும் மகிழ்ச்சி உண்டு - 2 2. கடவுளின் கருணை உண்டு அந்த கருணைக்கும் உருவம் உண்டு -2 என்றும்; உருவத்தில் உதித்தேழும் உயிர் அதனால் எங்கள் உள்ளத்தில் உவகை உண்டு