Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உடையார்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by உடையார்

  1. லெப். கேணல் ஞானி அக்டோபர் 31, 2020/தேசக்காற்று/வெஞ்சமரின் நாயகிகள்/0 கருத்து வெல்வோமெனச் சென்று வென்றவள்: கப்டன் அன்பரசி படையணி துணைத் தளபதி லெப். கேணல் ஞானி சகல ஆயத்தங்களோடும் தயாராவிட்ட ஒரு போர்ப்பயணத்திற்கு இறுதிக்கணங்கள் அவை, கூட்டங்கூட்டமாக கூடிநின்று ஆடியும், பாடியும், பேசிக்களித்துக் கொண்டும் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்திக்கொண்டிருந்தார்கள் போராளிகள். ஒரு திசையிலிருந்து பல குரல்கள் ராகத்தோடு எழுகின்றன. “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் என்றே நீ கூறு வேங்கைகள் ஆனவர் நாங்கள் எந்த வேளையும் சாகலாம் போங்கள்” என்று ஒலித்த அந்தக் குரல்களையும் மீறி, “வேங்கைகள் ஆனவர் நாங்கள் எந்த வேளையும் வெல்லுவோம் போங்கள்” என ஓங்கி ஒலித்தது ஒரு குரல், அந்த இனிமையானதும் உறுதியானதுமான, நம்பிக்கையோடு எல்லோரையும் மீண்டும் சேர்ந்து பாடவைத்ததுமான குரலுக்குரியவள் தான் லெப்.கேணல் ஞானி. தென்தமிழீழத்தில் சிறீலங்கா அரச படைகளினதும் காட்டுமிராண்டித்தனமான அட்டூழியங்களும், கோரத்தாண்டவங்களும் தலைவிரித்தாடிய காலப்பகுதி அது. சுற்றிவளைப்புக்களும், இளைஞர், யுவதிகள் கைதாவதும், காணாமல் போவதும், கண்டகண்ட இடங்களில் எல்லாம் சுட்டு வீசப்படுவதும், வீதிகளில் இரத்த ஆறு பாய்வதும் வழமையான செயற்பாடுகளில் ஒன்றாகிப்போனது. இவைகளுடன் அயற் கிராமமான கொக்கட்டிச்சோலைப் படுகொலையும் சேர்ந்து அன்றைய ஒன்பதாம் வகுப்புப் படித்துக்கொண்டிருந்த சூரியாவும் (பேரின்பநாயகம் சூரியகுமாரி) இன்றைய எமது லெப். கேணல் ஞானியுமான இவளுக்கு விடுதலைப் போராட்டத்திற்கான அத்திவாரக் கற்களாக அமைந்தது. தொண்ணூறின் (1990) இறுதிப் பகுதியில் மட்டு – 02 பயிற்சிப் பாசறையுள் நுழைந்து, பல சிரமங்களுக்கு மத்தியில் கஸ்ரப்பட்டு சூழ்நிலைக்கேற்ப தன்னை புடம்போட்டுக்கொண்டு பயிற்சியெடுத்தவளைப்பற்றி இன்றும் அவளுடன் பயிற்சியெடுத்த போராளிகள் கதை கதையாய் கூறுகின்றனர். அவர்களுள் ஒருத்தி ஞானியுடனான தன் பயிற்சிக்கால நினைவுகளை மீட்டுப்பார்க்கின்றாள். ‘அங்க கொட்டில் அடிக்கிறதில இருந்து கிணறு வெட்டுறதுவரை நாங்கள் தான், ஞானி நல்லா மாஞ்சு வேலை செய்யும், என்ன வேலை செய்தாலும் நல்லாத்தான் இருக்கும், எங்கட பயிற்சி நேரம், எங்கடமுகாம் இருந்த பகுதிகள் எல்லாம் இராணுவம் சுற்றி வளைச்சு, காடு காடா ஓடித்திரிஞ்சு தான் பயிற்சியெடுத்தம், ஒரு முறை எங்கட பழைய இடத்தில் இருந்து இராணுவம் பின்வாங்கிப் போய்விட்டது எண்டாப்போல, நாங்கள் திரும்பி எங்கட இடத்திற்கு போவம் எண்டு போனம். ஒருத்தருக்கும் இருபது நாளா சாப்பாடே இல்லை. காட்டில் உள்ள மிருகங்களை அடிச்சு, உரிச்சு உப்புப்போட்டு அவிச்சுத்தான் சாப்பிட்டது. எத்தனை நாளைக்குத்தான் சாப்பிடுறது. அந்தப்பகுதியிலே மிருகங்களும் இல்லாமப்போச்சு, பின்னே இருபது நாளா பட்டினிதான். எல்லோருக்குமே சரியான களை. போய் ஒரு இடத்தில் எல்லோரும் படுத்திட்டம். இரவோட இரவா இராணுவம் எங்களைச் சுற்றிவளைச்சிட்டுது. எங்களுக்குத் தெரியாது. விடியவும் தான் தெரிஞ்சு அந்த இடத்தில நல்ல சண்டை. அப்ப நாங்கள் புது ஆக்கள் தானே. காயக்காரரையும் தூக்கிக்கொண்டு திரும்பி நின்ற இடத்திற்கு ஓடினோம். காயக்காரரை கட்டுவதற்கோ, தூக்கிப் போடுவதற்கோ ஒரு வசதியுமே இல்லை. ஞானிதான் உடனேயும் கிடந்த உடுப்புக்களைக் கிழித்து காயத்திற்கு கட்டுகள் போட்டு, தன்ர கையாலேயே காட்டுத்தடி முறித்து சாரத்தை அதனுள் புகுத்தி காயக்காரரை தூக்கிச் செல்வதற்கு வசதியாக வழி செய்து அனுப்பினாள். வேறொரு சமயமும் இப்படித்தான், எமது முகாமிற்கு உணவுப்பொருட்கள் வரவேண்டுமானால் ஒரு அருவி கடந்து தான் வரவேண்டும். உணவுக்காகவே அந்த அருவியிடம் நாம் பல போராளிகளைப் பறிகொடுத்துள்ளோம். அப்படியான பெரிய அருவி அது. ஞானியுடன் நாங்கள் ஜந்து பேர் மரக்கறி எடுக்கச்சென்றோம். பத்துமைல் நடந்து அருவியைக் கடக்கவேண்டும். ஒருநாள் வேலை, அன்று முழுதும் எங்களுக்கு காட்டுக்காய்கள் தான் சாப்பாடு. கட்டி நீந்துவதற்கு கயிறு இல்லை. எம்மைக் கரையில் விட்டுவிட்டு ஞானி தனிய நீந்தி அக்கரைக்கு சென்றாள். மறுகரையிலுள்ள போராளிகளுக்கெல்லாம் பெரிய அதிசயம் எப்படி இவர் கயிறில்லாமல் நீந்தி வந்தார் என்று, ‘என்னென்று இதால வந்தனீங்கள்’ என்று கேட்டவர்களுக்கு ‘நான் ரெயினில் வந்தனான்’ சிரிக்காமலேயே பதில் செல்லிவிட்டு, அங்கே கயிறு வாங்கி மரக்கறியை கட்டிவிட்டு தானும் நீந்திவந்து எங்களுடன் சேர்ந்து கொண்டாள். அப்படி சொல்லிக் கொண்டு போனால் நிறையவே சொல்லலாம். அங்கே நடந்த ஒவ்வொரு செயற்பாட்டின் முடிவிலும் ஞானிக்கும் பங்கிருக்கும். என்று கூறினாள் அந்தப் போராளி. பயிற்சிப் பாசறையில் இவளின் இந்தச் செயற்பாடுகள் தான் பயிற்சிகளின் முடிவில் ஒரு பயிற்சி ஆசிரியராக இவளை இனம்காட்டியதுபோலும், பயிற்சி முடிந்ததும் பயிற்சி ஆசிரியராகச் செயல்பட்ட இவள், தான் சண்டைக்குப் போகவேண்டும் என்று பொறுப்பாளருடன் சண்டையிட்டு வெற்றியும் பெற்றாள். இவளின் முதற்சண்டை அருந்தலாவை சிங்களப் பகுதியில் நடந்த சண்டை. ரோந்துவரும் இராணுவத்தை தாக்கவேண்டும். எல்லோரும் நிலையெடுத்திருந்தனர். நேரம் காலை 10.45 மணி, பதினொன்று, பன்னிரெண்டு, பன்னிரெண்டரை என நேரம் ஓடிக்கொண்டிருந்ததே தவிர, இராணுவம் வருவதாக காணவில்லை. என்னடா இவங்களை காணவில்லை என்று கூறிய ஞானி தனது நிலையிலிருந்து அடுத்த நிலைக்கு செல்லவென பிறணைத்தூக்கித் தோளில் அடித்துக் கொண்டு நடந்தவேளை திடீரென அதே இடத்தில் நிலைஎடுத்தாள். முன்னால் பார்த்தாள் இராணுவம் வந்து கொண்டிருந்தது. ஞானியின் முதல்சண்டையை ஞானியே தொடக்கிவைத்தாள். நல்ல உக்கிரச் சண்டை. இவளின் முன்னாலேயே நான்கு இராணுவத்தினரின் உடல்கள் வீழ்ந்து கிடந்தன. முதல் சண்டையே வெற்றிகரமாக முடிந்ததையிட்டு ஞானிக்கு மனதில் அடங்காத பெருமை. கொஞ்சம்கூட ஞானி அந்த இடத்தில் அலட்சியமாக இருந்திருந்தாலும் சண்டை தோல்வியில் முடிந்திருக்கும். தானாகவே முடிவெடுத்து செயல்பட்டதால்தான் எமக்கு அது வெற்றியைப் பெற்றுத்தந்தது. இதில் ஞானியின் பிறணுக்கு சின்னக்காயம். இவள் மயிரிழையில்தான் தப்பியிருந்தாள். அதன் பின்னர் இவளுக்கு சண்டையோகம்தான். எங்கு போனாலும் ஒரே பதுங்கித்தாக்குதல்கள். அடுத்தது பள்ளித்திடல் மினிமுகாம் மீதான தாக்குதல் இதுவும் ஒரு மக்கள் குடியிருப்போடு சேர்ந்த மினிமுகாம். சண்டை ஆரம்பமாகிவிட்டது ஞானியின் மறுபக்கத்துக்கு பிறண் தேவையாக இருந்தது. அழைப்புக் கிடைத்ததும் விரைந்தோடிய ஞானியின் முன்னால் வீரிட்டு அழுதபடியிருந்த சிறு குழந்தை ஒன்று. வாரியணைத்து குழந்தையை ஒரு கையிலும், பிறணை மறுகையிலும் பிடித்துக்கொண்டு வந்து அந்தக் குழந்தையை காவும் குழு மூலம் பின்னால் அனுப்பிவைத்து பெற்றோரிடம் குழந்தையை ஒப்படைக்கக் கூறிவிட்டுத்தான் தொடர்ந்து சண்டையிட்டாள். இச்சண்டையிலும் இராணுவத்தின் பல உடல்கள் கைப்பற்றப்பட்டு, கொண்டுவரமுடியாத காரணத்தால் தகனம் செய்துவிட்டு வந்தனர். ஞானி செல்லும் சண்டைகளில் எல்லாம் ஒரு அதிஷ்ரம் தான், எதிரியின் உடல்கள் எடுக்காமல் விடமாட்டார்கள். அடுத்ததாக சிங்கபுரவில் ரோந்து அணிமீதான தாக்குதல். வெலிகந்தையில் கொழும்பு வீதியில் நடந்த பதுங்கித்தாக்குதல், கள்ளிச்சை – வடமுனையில் நடந்த தாக்குதல் எனக்கூறிக்கொண்டே போகலாம். கள்ளிச்சை வடமுனைத் தாக்குதல், இது மட்டக்களப்பில் முதல் பெண்போராளி களத்தில் வீரச்சாவடைந்த தாக்குதல், ஞானியும், நிலாவும் பக்கத்து பக்கத்து நிலையில் நின்று சண்டையிட்டுக்கொண்டிருந்தனர். இந்த சண்டையணிக்குத் தலைமை தாங்கிச் சென்ற நிலா இச்சண்டையில் வீரச்சாவடைய, அவரின் வோக்கியை எடுத்து மற்றவர்களுக்கு நிலைமையை அறிவித்து தொடர்ந்தும் சண்டையிட்டாள். சண்டைமுடிந்து திரும்பும்போது அவளின் கையில் தனது பிறணும், தோளில் நிலாவின் உடலும் சுமந்துவந்தாள். தொடர்ச்சியாக சண்டைகளும், பதுங்கித் தாக்குதல்களும் என்று பயிற்சி எடுத்த காலம் முதல் தொண்ணூற்றி மூன்று (1993) வரையும் இருபது சண்டைகளுக்கு மேல் ஞானி சென்றுவந்திருந்தாள். இந்தக் காலப்பகுதியில் தான் தேசியத்தலைவர் அவர்களின் பணிப்பின் பேரில் தென்தமிழீழத்தில் இருந்து பல அணிகள் வடதமிழீழம் நோக்கி அழைக்கப்பட்டன. அதில் பெண்கள் படையணியும் அடங்கும். அதில் ஞானியும் தெரிவு செய்யப்பட்டாள். புறப்படும் வரை அவளின் கால் நிலத்தில் நிலையாக நிற்கவில்லை. நாங்கள் யாழ்ப்பாணம் போகப்போகிறோம். அண்ணையைப் பார்க்கப்போறம். அண்ணைக்கு முன்னாலும் நிறைய சண்டைகள் பிடிச்சுக் காட்டுவம் என்று துள்ளித்திரிந்தாள். பயணநாளும் ஆரம்பமானது. பெண்போரளிகள் வண்டி மூலமும், ஆண்போராளிகள் கால்நடையாகப் போவதும் எனத் திட்டம். ஆனால் இவள் விடவில்லை. ஏன் நாங்கள் மட்டும் வண்டியில் போகவேணும், எங்களுக்கு நடக்கத்தெரியாதோ, நாங்களும் நடப்போம் என அடம்பிடித்து, ஆண் போராளிகளுடன் சேர்ந்து நடக்கத் தொடங்கினர். சேறுகளும், தண்ணீர்களும், அருவிகளும் தாண்டி ஏழுநாட்கள் தொடர்ந்து நடை. பதினாறு அருவிகள் நீந்திக்கடக்க வேண்டும். கடந்தனர், ஆனால் இவர்கள் கொண்டுவந்த உலர் உணவு எல்லாம் அருவியோடு போய்விட்டது. பசியோடு நடந்து திருமலையை அடைந்தனர். அங்கு உணவுப்பொருட்கள் சேகரித்து ஆற்றங்கரையோரத்தில் சமைத்துவிட்டு, குளித்துவிட்டு வந்து பார்த்தால் சமைத்துவைத்த இடத்தில் சாப்பாட்டுப் பாத்திரங்கள்கூட இல்லை எல்லாவற்றையும் ஆறு அள்ளிக்கொண்டு போய்விட்டது. எல்லோருக்கும் பெருத்த ஏமாற்றம். அங்கு நின்ற போராளிகளின் தயவால் சிறிது வயிறுகளை நிரப்பிக்கொண்டு மீண்டும் பயணத்தைத் தொடர்ந்து பன்னிரண்டாம் நாள் வடதமிழீழத்தில் கால் பதித்தது ஞானியுடனான படையணிகள். அங்கிருந்து வந்த பெண்கள் அணி இங்கே செயல்ப்பட்டுக் கொண்டிருந்த பெண்கள் படையணியுடன் இணைக்கப்பட்டது. பரந்துபட்ட சிந்தனையும் தமிழீழம் எங்கள் நாடு, நாம் ஒரு தலைமையின் கீழ் உருவாக்கப்பட்ட கிளைகள் எமது உழைப்பு, இந்த நாட்டின் ஒவ்வொரு மூலைக்கும் தேவை என்பவற்றை தெளிவாக உணர்ந்து கொண்ட ஞானியால் இங்கேயே நீண்டகாலங்களுக்கு நின்று செயற்பட முடிந்தது. தனது ஆளுமையாலும், அயராத கடுமையான உழைப்பாலும், முயற்சியாலும், மாலதி படையணியிலும் தமக்கென ஒரு இடத்தைப் பிடித்துக்கொண்டாள். இங்கு இவளது முதல்களம், ஒப்பரேசன் தவளை இதில் காலில் விழுப்புண்ணேந்தினாள். அதன்பின் புலிப்பாய்ச்சல், சூரியக்கதிர், ஓயாத அலைகள் – 01, என பல களங்களில் இவள் பதிவானாள். சூரியக்கதிர் – 01 நடவடிக்கை புன்னாலைக்கட்டுவன் பகுதியூடாக எதிரிப்படைகள் தமது வேகமான ஆக்கிரமிப்புக்களை மேற்கொண்டு வந்துகொண்டிருந்தார்கள். எமது அணிகளை பின்னால் நகர்த்தி நிலைப்படுத்தினால் தான் எம் தரப்பு இழப்புக்களை கொஞ்சமேனும் குறைக்கலாம். நகர்துவதற்கான அவகாசமோ மிகமிகக் குறைவு. அந்தளவுக்கு எதிரிப்படைகளின் நகர்வு வேகமாக இருந்தது. அந்த இடத்தில் ஞானியும் அவளின் 50 கலிபரும்தான் எமக்குக் கைகொடுத்தது. நாம் பாதுகாப்பாக நிலை எடுக்கும் வரைக்கும் காப்புச்சூடு கொடுத்தது. குறுகிய நேரத்திற்கு எதிரிகளின் நகர்வைத் தடுத்து தாக்குதல் தொடுத்தாள். ஓயாதஅலைகள் – 01, சமருக்குச் சென்று வந்தவள் தென்தமிழீழம் சென்று தன் போராளித் தங்கையையும் அழைத்துக்கொண்டு விடுமுறையில் வீட்டுக்குச் சென்று திரும்பிய அந்த மூன்று மாதங்களிலும் கூட அங்கே இரண்டு பதுங்கித்தாக்குதல்களில் பங்குபற்றி அங்கேயே புதிதாக பயிற்சி முடித்த போராளிகளுடன் மீண்டும் வந்துசேர்ந்தாள். இவளது திறமைகளையும் செயற்பாடுகளையும் கண்ட பொறுப்பாளர்களும், தளபதிகளும் இவள் அழைத்துவந்த பிள்ளைகளையே இவளிடம் ஒப்படைத்து ஜெயசிக்குறுய் களத்திற்கு அனுப்பினர். பல வழிகளில் அன்பரசி படையணியின் வளர்ச்சிக்காக உழைத்து, ஜெயசிக்குறுய்க் களத்திலும் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்து அணியொன்றுக்கு பொறுப்பாக செயற்பட்டு, ஓயாதஅலைகள் – 02 தாக்குதல் சம்பவம் வரை ஓயாதிருந்து ஓய்ந்து போன லெப். கேணல் ஞானிபற்றி அன்பரசி படையணியின் சிறப்புத் தளபதி அவர்கள் கூறுகையில்… “இவரைப் பற்றிக் கூறுவதானால் நான் கூறிக்கொண்டே போகலாம். இவரைக் கண்டாலே மற்றவர்களுக்கு தானாகவே ஒரு வீரம் வரும். அப்படியான ஒரு நிமிர்ந்த தோற்றமும், உறுதியும் கொண்டவர். தொண்ணூற்று ஆறாம் (1996) ஆண்டுதான் திரும்பி அன்பரசி படையணிக்கு வந்தவர். மட்டக்களப்பில் இருந்து இவர் புதிய போராளிகளைக் கூட்டிவரும் போது கடவான வீதி என்று ஒரு வீதி அது கடந்து தான் வரவேண்டும். வரும்போது இராணுவத்தினர் பதுங்கியிருந்து தாக்கத்தொடங்கிவிட்டனர். அப்போ அதில நல்ல சண்டை. அதில் திறமையாகச் செயல்பட்டு ஒரு போராளிகள் கூட விடுபடாமல், காயப்படாமல், வீரச்சாவடையாமல் கூட்டிவந்தார். இவர்கள் வரும்போது நிறையவே கஸ்ரங்கள், புதிய போராளிகள், தண்ணீர் இல்லை, சாப்பாடு இல்லை. ஏழுநாட்கள் தொடர்ந்து நடை, இடைஇடையில் பதுங்கித்தாக்குதல்களுக்கும் முகங்கொடுத்து பன்னிரண்டாம் நாள் வந்துசேர்ந்தனர். அவர் கூட்டிவந்த அந்த அணியையே அவரிடம் கொடுத்து, இந்த அணி உங்களுக்குரியது என்று கூறிய மறுவினாடியே நாங்கள் கூறாமலே அணிக்குரிய வேலைகளைத் தொடங்கிவிட்டார். அணியிலுள்ள பொறுப்பாளர்களுடன் கதைத்து, மேலதிக பயிற்சிகளுக்கு ஒழுங்குசெய்து, தானே நேரே நின்று சூட்டுப் பயிற்சி எல்லாம் கொடுத்து இரணைமடுப் பகுதியில் காவலரண் அமைக்கும் பணியில் ஈடுபட்டனர். அவர்கள் வந்த மூன்றாம்நாளே அவர்களுக்குச் சண்டை கிடைத்தது. நல்ல மழை எல்லா இடமுமே தண்ணீரும் சேறும், காப்பரண்களும் எதுவுமில்லை. அதில் நின்று சண்டையிட்டு, இரண்டு ஏ.கே.எல்.எம்.ஜி. எடுத்தனர். இதில் ஞானிக்கு காலில் காயம். அவர் அப்படியேதான் நின்று சண்டைபிடித்தவர். நான் நேரே போய்த்தான் அவரை மருத்துவமனைக்கு அனுப்பியது. அங்கே கூட சும்மா இருக்கமாட்டார். நான் போகும் போதெல்லாம் தன் போராளிகளைப் பற்றித்தான் கேட்பார். காயம் மாறும் முன்னே அவர் சண்டைக்கு வந்துவிட்டார். அவரிடம் எந்த அலட்சியப் போக்கையுமே காணமுடியாது. அதில் இருந்து மாங்குளம் மூன்றுமுறிப்பு பகுதிக்கு சென்ற அணி பல துன்பங்களுக்கு முகம் கொடுக்கவேண்டியிருந்தது. அதேபோன்றுதான் ஒலுமடுப் பகுதியிலும், இந்த கஸ்ரங்களின் மத்தியிலும் போராளிகளின் மனம் சோராது வழிநடத்திய பெருமை ஞானிக்குரியதே. அவரிடம் ஒருவேலையைக் கொடுத்தால் நான் திரும்பிப்போய்ப் பார்க்கவேண்டி அவசியமே இராது. அந்த வேலை சரியாகத்தான் செய்து முடிக்கப்பட்டிருக்கும். அதனால் அவரின் அணியென்றால் எல்லோருக்குமே விருப்பம், அப்படி மென்மையான, ஆளுமையான போராளி. ஒருநாள் நான் காவலரண்கள் பார்த்துக்கொண்டு வரும்போது, தோளில் கட்டையுடன் வந்தார். முன்னால் இரண்டு பிள்ளைகள் பின்னால் ஞானி, ஏனென்றால் கட்டை தூக்கிறதில கஸ்ரம் தனக்கும் தெரிய வேண்டுமாம். பொதுவாகக் கூறப்போனால் இவர் தாக்குதலுக்கு ஒரு திறமையான தளபதி. இவருடைய இந்தத் திறமைகள் தான் இவரை அன்பரசி படையணியின் மூன்றாவது தளபதியாக உயர்த்தியது. இவர் பொறுப்பெடுத்தது ஆறுமாதங்கள் தான் அந்த ஆறுமாதத்துக்குள்ளும் படையணிக்குள் பல பொறுப்பாளர்களை எமக்கு இனம்காட்டினார். இன்னும் இருந்திருந்தால் நிறையவே செய்திருப்பார். இவரின் இழப்பு எமது படையணிக்கே பெரிய இழப்பு. ஓயாதஅலைகள் – 02 சமரில் ஒரு பகுதி வெற்றிக்குக் காரணமானவர்களுள் ஞானியும் ஒருவர். படையணியின் துணைத்தளபதியாகப் பொறுப்பேற்ற பின்னர் அவரின் முதல்களம் இது. இந்தக்களத்திலேயே பல வெற்றிகளுக்குக் காரணமாயிருந்த ஞானியை நாம் இழந்துவிட்டோம்” எனக் குறிப்பிட்டார் அன்பரசி படையணியின் சிறப்புத்தளபதி அவர்கள். எமக்குப் பல புதிய போராளிகளையும், பொறுப்பாளர்களையும், தளபதிகளையும் புடம்போட்டு வளர்த்துத்தந்த பெருமை ஜெயசிக்குறுய் சமருக்கேயுரியது. எமது போராட்ட வளர்ச்சிக்கு பல வழிகளில் கை கொடுத்ததும், இந்தக் களம் தான். அந்த வகையில் ஞானியின் களமுனைச் செயல்பாடுகள் பற்றி மட்டு – அம்பாறை மாவட்ட சிறப்புத் தளபதி அவர்கள் கூறுகையில், “ஞானியைப் பொறுத்தவரையில் அவர் சரியான ஒரு வேலைக்காரி. கஸ்ரங்களுக்குத் தாக்குப்பிடிக்க கூடியவர். விடுமுறையால் வந்ததும் அவரை கொம்பனிப் பொறுப்பாளராகத்தான் நியமித்தோம். பின்னர் சண்டைகளில் அவரின் திறமைகளைப் பார்த்து அன்பரசி படையணிக்குத் துணைத் தளபதியாக நியமித்தோம். மாங்குளம் பகுதியில் இவர்கள் நின்ற பகுதி சரியான பிரச்சினைக்குரிய பகுதி. எந்தநேரமும் சினைப்பிங்தான். அப்படி ஒரு துன்பமான கட்டத்துக்குள் தான் இவர்கள் நின்றார்கள். இரவு – பகல் நித்திரையில்லை. ஒரே சண்டைதான். ஞானியும் பிள்ளைகளுடன் தானும் சேர்ந்து கஸ்ரப்படுவார். அதனால் தான் அன்பரசி படையணிக்குள் அவரால் வேகமாக வளர்ச்சி எடுக்கக்கூடியதாக இருந்தது. இவர்களுக்கு ஓயாதஅலைகள் – 02 சமருக்கு முக்கியமான வேலை கொடுக்கப்பட்டது. இரண்டு கொம்பனி நுழையவேண்டிய பாதை. அதில் ஒரு பாதையை இவர்கள் உடைத்து கொடுக்கவேண்டும். இவர்களுக்கு அது முக்கியமான வேலை. தற்செயலாக தவறுதலாக இருந்தால் இந்தச் சண்டையே பிழைத்திருக்கும். இந்தச் சண்டையில் நான்கு பாதை முக்கியமானது. நான்கும் உடைத்து நான்கு அணிகள் உள்நுழைய வேண்டும். இந்த நடவடிக்கையில் முதல் பாதை பிடித்தது ஞானி ஆக்கள்தான். தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பாதையை குறிப்பிட்ட நேரத்திலேயே பிடித்துவிட்டார்கள். இதில் அவரின் செயற்பாடு ஒரு வேகமான செயற்பாடாக இருந்தது. தங்களுக்குக் கொடுக்கப்பட்ட வேலைகளை முடித்து உள்ளே அனுப்ப வேண்டிய அணிகளை அனுப்பிவிட்டு, பக்கத்து பாதை உடைபடாததால் அந்தப் பகுதியால் செல்லும் அணிகளையும் எடுத்து உள்ளே அனுப்பிவிட்டு, தொடர்ந்தும் செயல்பட்டுக் கொண்டிருக்கும்போது தான் வீரச்சாவடைந்தார். மற்றப்படி அவருக்கென கொடுக்கப்பட்ட வேலைகளை முடித்துவிட்டார். இது பாராட்டத்தக்க ஒரு விடயம். ஞானி உண்மையிலேயே தன்னம்பிக்கை மிகுந்த ஒரு போராளி. அவரின் தனிப்பட்ட குணாம்சங்கள் என்று கூறினால், போராளிகளுடன் நன்றாகச் சேர்ந்து போகக்கூடியவர். மகளிர் படையணியின் தனித்துவத்தையே விரும்புபவர். எதையும் நாங்கள் தனிச்சுச் செய்யவேணும், இன்னும் நிறைய சாதித்துக் காட்டவேணும் என்றெல்லாம் எண்ணமுடையவர். ஞானியும் ஜெயசிக்குறுய் சமர் முழுவதும் நின்ற ஒரு பொறுப்பாளர் அவர். இந்தச் சமர்; இவர்களுக்கு பெரிய ஒரு அனுபவம், அவர் இருந்திருந்தால் பெரிய ஒரு வளர்ச்சியை நோக்கிப் போயிருப்பார். நான் நேரடியாகக் கவனித்த சில விடயங்களில் தங்களது காவலரண்கள் எல்லாவற்றையும் அழகாகத்தான் வைத்திருப்பார். தலைவரின் படமெல்லாம் வைத்து ஒவ்வொரு இடமும் நன்றாகத்தான் இருக்கும். கட்டளைகளை நிறைவேற்றுவதில் கூட ஒரு வேகம் இருக்கும். ஓயாதஅலைகள் – 02 இல்கூட அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட வேலையைத் திறம்படச் செய்வதற்குக் காரணம் அவரின் அர்ப்பணிப்புத் தன்மைதான்.” என்று கூறினார் மட்டு – அம்பாறை மாவட்ட சிறப்புத் தளபதி அவர்கள். லெப். கேணல் ஞானி தனது நீண்டகள வரலாற்றில் தனக்கென ஒரு இடத்தைப் பதித்துக்கொண்டவள். போராட்ட வரலாற்றின் பல வெற்றிப்பாதைகளுக்கு வழித்துணையாக நின்றவள். அன்பரசி படையணியின் வளர்ச்சிக்கு படிக்கல்லாக அமைந்த ஞானியின் வீரமும், செயல்திறனும், வளர்ச்சியும் இன்றும் அவள் வளர்த்த போராளிகளில் தெரிகின்றது. தன்னை வளர்த்த தளபதிகளும்,தான் வளர்த்த போராளிகளும் மனமுருக, “வேங்கைகள் ஆனவர்கள் நாங்கள் எந்த வேளையும் வெல்வோம் போங்கள்” என்று பாடிச் சென்றவள். இந்த சமரில் வென்றோம். ஆனால் ஞானி வரவில்லை. அவள் லெப். கேணல் ஞானியாய்… அவள் இறுதியாகப் பாடிச்சென்ற அந்த இரண்டு பாடல் வரிகளும் எல்லோரின் காதுகளுக்குள்ளும் இப்போதும் ஒலித்துக்கொண்டிருக்கிறது. நன்றி: களத்தில் இதழ் (23.09.1999). https://thesakkatru.com/commander-lieutenant-colonel-gnani/
  2. மேஜர் கனீபா அக்டோபர் 31, 2020/தேசக்காற்று/வெஞ்சமரின் நாயகிகள்/0 கருத்து சாதனைகளின் ஊற்றுக்கண் மேஜர் கனீபா சாதிக்கவேண்டும் என்பதன்றி வேறு சிந்தனைகள் அவளிடம் இருக்கவில்லை. ஓயாத அலைகள் 02இன் போது தனக்குரிய பகுதியை நிச்சயமாகப் பிடிப்பேன். சண்டையில் இரண்டு அதிகாரிகளைப் பிடித்து போனமுறை (1998.02.01இல்) உள்ளே வந்து வீரச்சாவடைந்தவர்களை என்ன செய்தீர்கள் என்று கேட்பேன் என்று தான் சண்டை தொடங்கும் வரை சொல்லிக் கொண்டிருந்தாள். சண்டையின் போதான அவளின் அணியின் நகர்வு இலகுவாக இருக்கவில்லை ஒரு கட்டடக் காடாக இருந்த பெருந்தளத்தை நெருங்குவதற்காய் ஆங்காங்கே சில மரங்கள் கொண்ட நீண்ட வயல் வெளியை எதிரியின் கண்காணிப்பு நிலைகள், அவதானிப்புக் கோபுரங்கள் என்பவை அறியாதவாறு மிக்க கவனமாகக் கடந்து வரிசை வரிசையாக அமைக்கப்பட்டிருந்த முட்கம்பி வேலிகளை சுருள்கம்பிவலைகளை கண்ணிவெடிகளை அகற்றி சூடுகளை வழங்கியவாறு மண் அணைமீதிருந்த வேலியைப் பிரித்து அதன் பின்னிருந்த முட்கம்பி வேலிகளையும் வெட்டி அதன் வழியாக உள்நுழைந்து வலமும் இடமும் மிக நெருக்கமாக அமைக்கப்பட்டிருந்த காவலரண்களை அல்ல காவற்கோட்டைகளைக் கைப்பற்றிக் கொண்டுபோய் சண்டை மிகவும் உக்கிரமாகவே நடந்தது. கனீபாவால் கைப்பற்றப்பட்ட காவலரண்கள் கரடிப்போக்குச் சந்தியில் இருந்து உருத்திரபுரம் போகும் பிரதான சந்தியில் வீதியுடன் அமைந்திருந்ததால் நகரப் பகுதிக்குப் போகும் இராணுவப் பின்னடைவுகளைத் தவிர்க்கும் நோக்குடன் இழந்த காவலரண்களை மீளக்கைப்பற்றுவதில் படையினர் கடுமையாக முயன்றனர். கைப்பற்றிய பகுதியை தக்கவைக்க கனீபாவின் அணியும் உக்கிரமாகப் போராடியது. தமது தளத்தைப் பாதுகாப்பதற்காக ஏற்கனவே பலமான நிலைகளை அமைத்து ஆயுத ஆள்பலத்தை குவித்து வைத்திருந்த படையினருக்கும் குறிப்பிட்டளவு ஆயுத தளவாடங்களுடன் உட்புகுந்த கனீபா அணியினருக்குமிடையே நடந்த கடுமையான சண்டையில் கனீபாவின் அணி அதிக இழப்புக்களைச் சந்தித்தது. உதவிக்கெனப்போன சிறு அணியும் இழப்புக்களைச் சந்திக்க, படையினர் கடும் முயற்சியின் பின் தமது பழைய நிலைகளைப் பிடித்துக்கொள்ள, எஞ்சிய ஒரு சிலருடன் வீரச்சாவடைந்தவர்களின் உடல்கள் ஆயுதங்களுடனும் கனீபா எதிரியின் காவல்வேலிக்கு உள்ளே. கிளிநொச்சியை சூழ பரவலாக நடந்த சண்டையில் ஏனைய பகுதிகள் எம்மால் கைப்பற்றப்பட்டு துடைத்து அழிக்கப்பட்டுக்கொண்டிருக்க, ஒரு சிறு பொறிக்குள் கனீபா தனித்துப்போராடினாள். ஒருபகுதியை உடைத்துக்கொண்டு எஞ்சியவர்களுடன் தப்பி வருமாறு அறிவிக்கப்பட்டபோது வீரச்சாவடைந்தவர்களையும் அவர்களது ஆயுதங்களையும் விட்டு வெளியேற மறுத்துவிட்டாள். காயப்பட்ட போராளிகளை வெளியேற்றியபின்னர், தன்னுடன் எஞ்சியிருந்த ஒரு சிலரையும் வெளியேறுமாறு பணித்தாள். அவர்கள் கனீபாவைத் தனித்துவிட்டு வெளியேற மறுக்க அவர்களை நெருங்கியவாறு நான்கு புறமும் இராணுவம் குவியத்தொடங்க, நிலைமையைக் கூறி இலக்குகளைக் குறிப்பிட்டு தங்களைப் பொருட்படுத்தாது எறிகணைகளை ஏவுமாறு அறிவித்தாள். வீரம் நிறைந்த அந்தச் சண்டையில் கனீபாவை நாங்கள் இழந்தோம். மட்டக்களப்பிலே எமது அமைப்புக்கு ஆதரவான குடும்பமொன்றிலே பிறந்த கனீபா 1990ன் ஆரம்பத்திலே அங்கிருந்து காடுமேடேல்லாம் கடந்து, இராணுவச் சுற்றிவளைப்புகளிலிருந்து தப்பி கால்நடையாக வன்னிக்கு வந்து 07 வது பயிற்சி முகாமிலே தன் பயிற்சியை ஆரம்பித்தபோது அவள் சின்னவள். பயிற்சி முகாம்களிலும் வேறு சந்தர்ப்பங்களிலும் தனக்கு விருப்பமான ‘காகங்களே காகங்களே காட்டுக்கு போவீர்களா’ அவள் ஆடும் நடனம் எல்லோருக்குமே விருப்பமானது. யார் மீதும் கோபப்படாத அவள் மீது யாரும் கோபப்படுவதில்லை. சரியான பகிடிக்காரி ஒரு வால் முளைக்காத குறை என்றாள் அவளோடு நீண்டகாலம் ஒன்றாக நின்ற ஒருத்தி ஆனையிறவுப் பகுதியில் எதிரியின் பலவேகய 2 இற்கான எதிர் நடவடிக்கையின் போது எம்மவர்களால் எதிரியின் அவ்ரோ விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது வீழ்ந்துகொண்டிருந்த விமானத்தை தன்னுடைய அணி வீழ்த்தி விட்டதாக களத்தின் வேறொரு மூலையில் நின்ற தன் தோழிகளுக்கு தொலைத்தொடர்பு சாதனம் மூலம் அறிவிக்க எல்லோரும் நம்பியேவிட்டார்கள். பிறகுதான் உண்மை தெரிந்து தாங்கள் ஏமாந்தது புரிந்து சிரித்தார்கள். எந்தச் சண்டையின் போதுமே அவள் தனது பகிடிக்குணத்தை கைவிட்டதில்லை. எட்டு வருடங்களின் முன் பலாலியைச் சூழவிருந்த காவலரண்களில் குறிப்பிட்ட எண்ணிக்கையானவற்றை மிகுந்த நம்பிக்கையோடு தலைவர் எமது படையணியிடம் தனித்துவமாகப் பொறுப்புக் கொடுத்திருந்த காலப்பகுதியில் தான், வழிமறித்துத் தாக்கும் எமது இப்போதய வளர்ச்சிநிலையின் அத்திவாரம் பலமாக அமைக்கப்பட்டது. அந்த நேரத்தில் வழிமறிப்புச் சண்டை அனுபவம் சிறிதுமற்ற ஆனால் மனஉறுதியில் நம்பிக்கைவைத்த நிலையில் தான் எமது படையணி இன்றைய சூழ்நிலையை எதிர்கொண்டது. ஆரம்பத்தில் மிகநெருக்கமாக அமைந்திருந்த கட்டடங்களிற்கிடையேயும் வாழைத்தோட்டங்களிடையேயும் விழி பிதுங்க காவற்கடமையில் நின்றதும், படையினரும் இவர்களின் பக்கமாகவே அதிக தொல்லைகள் கொடுத்ததும், குறிப்பிட்ட காலத்தின்பின் நிலைமை வேறுவிதமாகி படையினர் இவர்களின் பக்கம் தலையைக் காட்டத் தயங்கியதுவுமாக இன்றுவரை தக்க வைத்துக்கொள்வதையும் கனீபா இடையிடையில் தன் பழைய தோழியருடன் இரைமீட்டுக் கொள்வாள். 1990, 1991 இலே பலாலியைச் சூழவிருந்த காவலரண் பகுதியிலே அவ்வப்போது நடந்த சண்டைகள், ஆகாய கடல்வெளிச்சமர், பலவேகய 1, 11, கட்டைக்காடு மினிமுகாம் தகர்ப்பு, தொண்டைமனாற்றில் ஒருந்து ஒட்டகப்புலம் வரையிலான நூற்றைம்பது காவலரண்கள் அழிப்பு என்பவற்றில் பங்கு கொண்ட, பின் இராணுவ அதிகாரியாகப் பயிற்சி அளிக்கப் பட்டு சண்டைகளுக்கான பயிற்சி ஆசிரியராகக் கடமையாற்றினாள். இவளின் நுணுக்கமான ரசனைக்கும் கலையுணர்வுக்கும் எடுத்துக்காட்டாக அதிகாரிகள் பயிற்சியின் போதான நாடகம் ஒன்று இன்றும் நெஞ்சில் நிழலாடுவதைக் குறிப்பிடலாம். கலை நிகழ்வன்று கல்லூரியே களைகட்டிவிடும், பெண் போராளிகளும் ஆண் போராளிகளும் போட்டியாக நிகழ்ச்சி தயாரிப்பார்கள் தொடர் வகுப்புக்களுக்கும் பயிற்சிகளுக்கும் இடையில் கிடைக்கும் சிறு ஓய்வின் போது அவசர அவசரமாக தயாரித்து சிலவேளைகளில் கடைசி ஒத்திகை கூடச் செய்யாமல் மேடையேறி, ஆனால் தரம் குறையாமல் சமாளித்து அசத்திவிடுவார்கள். அன்று அப்படித்தான் நாடகம் அரங்கேறியது சும்மா ஒருமுறை செய்து பார்த்துவிட்டு மேடையேறும் போது தான் அவரவர் கற்பனைக்கு ஏற்றவாறு ஒப்பனை செய்து கொண்டனர் அவர்களின் திட்டப்படி ஒரு கள்ளுக்கடையை முதலாளி திறக்கும் காட்சியுடன் நாடகம் ஆரம்பமாகும். கனீபாதான் முதலாளி மேடையிலே திரைவிலகியது மேசையொன்றிலே வெள்ளைத்திரவம் நிரப்பப்பட்ட போத்தல்களைக்கண்டு நாடகக்கோஸ்டியே திகைத்துப்போனது. கனீபா உண்மையாக கள்ளை நிரப்பினாளோ, சவர்க்காரத்தை கரைத்து நிரப்பினாளோ என்ற அச்சத்திலேயே குடிப்பதுபோல் நடிக்க வேண்டியவர்களுக்கு வயிறு பகீரென்றது. திரை விலகிய பின்னும் கனீபாவை மேடையில் காணவில்லை. பார்வையாளருக்கு நடுவே இருந்து கனீபாவின் சின்ன உருவம் பட்டுடையுடனும் திருநீற்றுப் பூச்சுடனும் மடித்த சறக்கட்டுடனும் கையில் கொழுத்தப்பட்ட சாம்பிறாணிக் குச்சியுடன் வந்து தாவி மேடையேறியது போத்தல்களைச் சுற்றிசுற்றி சாம்பிறாணிப் புகை காட்டிய கனீபா மேசையின் ஓரத்தில் அவற்றைக் குத்தி நிறுத்திவிட்டு, இரண்டு கைகளாலும் நெற்றியில் குட்டி தோப்புக்கரணமும் போட்டுவிட்டு கல்லாப் பெட்டியில் குந்தினாள். எல்லோருக்குமே சிரிப்பை அடக்கமுடியாமல் போய்விட்டது. நாடகம் தொடர்ந்து நடந்தது கள்ளுக் குடிப்பவர்களாக நடிப்பவர்கள் வெள்ளைத்திரவத்தை மிக அருகில் பார்த்து அது அந்த மாதம் முடியும் வரையில் குடிக்கவேண்டிய தேநீருக்குரிய லக்ஸ்பிறே என்பதை இனம் கண்டு வயிறெரிந்ததும் அவர்களை கனீபா ஒருவாறு சமாளித்தும் எஞ்சியிருக்கும் ஒருசிலரின் நெஞ்சில் இன்றும் பசுமையாக இருக்கின்றது. மேஜர் மதனா, மேஜர் தாரணி இருவருமே கனீபாவின் சகபயிற்சி ஆசிரியர்கள். அப்போது சண்டைக்கான மாதிரிப் பயிற்சி ஒன்று நடந்து கொண்டிருந்தது நடந்த இடம் ஒரு பெரிய இராணுவத்தளத்தின் அயல். பகலில் தொடங்கும் பயிற்சி நள்ளிரவு வரையும் தொடரும் அதன் பின்னர்தான் எல்லோரும் நீண்ட தொலைவில் உள்ள தங்குமிடத்துக்கு நடந்து வந்து சேர்ந்து ஆயுதம் துப்பரவு செய்து குளித்துவிட்டுப் படுப்பார்கள். அன்றிரவு பயிற்சி முடியத் தாமதமாகிவிட்டது பயிற்சியாளர்கள் வந்துவிட்டார்கள் இவர்கள் மூவரையும் காணோம் பயிற்சி நடக்கும் வெளியோன்றிலேயே படுத்து உறங்கிவிட்டு காலையில் தங்குமிடத்துக்கு திரும்பிய மூவரையும் கொட்டில் தேவையில்லை என்று தானே வெட்டையில் போய்ப் படுத்த நீங்கள் இனி இஞ்ச இருக்கவேண்டாம் உடமைகளை தூக்கிக்கொண்டு வெட்டையிலேயே இருங்கோ என்று பொறுப்பாளர் துரத்திவிட்டார். ‘சரியக்கா’ என்றவாறு மூவரும் மறுபேச்சுப் பேசாமல் எல்லாவற்றையும் தூக்கிக்கொண்டு போய்விட்டார்கள் போனவர்கள் என்ன செய்கிறார்கள் என்று பார்ப்பதற்காக மாலையில் பொறுப்பாளர் தேடிப்போனார் அங்கே இலை, குழை, ஓலைகளால் ஒரு வட்டக்குடில் அமைக்கப்பட்டு உள்ளே வெண்மணல் பரப்பப்பட்டு, பொருட்கள் எல்லாம் தட்டி ஒன்றிலே ஒழுங்காக அடுக்கப்பட்டு வாசலில் நல்வரவு எழுதப்பட்டு வாங்கோ அக்கா என்று வரவேற்பு அளிக்கப்பட்டு தேநீர் கொடுத்து உபசரிக்கப்பட்டு ஒன்றுமே நடக்காதது போல கனீபா உரையாடலைத் தொடர்ந்தாள் சவால்களைக் கூட இயல்பாக சமாளிக்கும் வல்லமை அவளிடம் இயல்பாகவே இருந்தது. கனீபாவின் வளர்ச்சியில் மேஜர் துளசிக்கு முக்கிய பங்குண்டு கனீபா சிறுத்தைப் படையணிக்கு பயிற்சி ஆசிரியராக இருந்த காலத்தில் ஒரு தவறு செய்துவிட்டு தண்டனையில் சமைத்துக்கொண்டிருந்தாள். இவளோடு ஒன்றாகவே அடிப்படைப் பயிற்சி எடுத்த துளசி அறிவு முதிர்ச்சியுள்ள நிதானமான போராளி அவருக்கு குடுகுடு என ஓடித்திரியும் கனீபாவில் நல்லநேசம் தண்டனையில் சமைத்துக் கொண்டிருந்த கனீபாவை தான் ஒரு நல்ல நிலைக்கு கொண்டுவருவதாக பொறுப்பாளரிடம் அனுமதி கேட்டு அவளைத் தண்டனையில் இருந்து எடுத்து தன்னுடன் வைத்திருந்தார். ‘இஞ்ச வா கனீபா உனக்கு நான் விளையாட்டு ஒன்று சொல்லித்தாறன்’ என்று அவளைத் தன்னருகே இருத்தி கணினியின் செயற்பாடுகளைச் செய்து காண்பிக்க கனீபாவுக்கு அது ஆச்சரியமான புதுமையான விளையாட்டாக இருக்கவே ஆர்வத்துடன் ஈடுபட்டாள். தான் கணினி கற்பிக்கப்படுவது அறியாமலே அதில் தேர்ச்சி பெற்றுவிட்டாள். அவளுக்கு தன்னையே நம்பமுடியவில்லை தன்னை விளையாட்டாக நல்ல நிலைமைக்கு கொண்டுவந்த துளசியில் அவளுக்குச் சரியான மதிப்பும் பாசமும் எப்போதுமே உண்டு இரண்டு பேருமே ஒன்றாக களத்தில் நின்றபோது கனீபாவின் ஒன்று விட்ட சகோதரியான லெப்.மதனா மட்டு-புளுகுணாவை அதிரடிப்படை தளத் தகர்ப்பில் வீரச்சாவடைய இயக்கத்தில் இணைந்த ஏழு ஆண்டுகளின் பின் அப்போது தான் முதல் முதலாக விடுமுறையில் மட்டக்களப்பிலிருந்த தன் குடும்பத்திடம் போனாள். விடுமுறை முடிந்த ஒரு மாதத்தின் பின் வன்னி திரும்பியவளுக்கு மேஜர் துளசியின் வீரச்சாவு செய்தி அதிர்ச்சியைத் தந்தது. அந்த அதிர்ச்சியுடனேயே ஜயசிக்குறுய் களத்திற்கு திரும்பிவிட்டாள். தன் அணியிலிருந்த போராளிகள் யாரையுமே அவள் கடிந்து கொண்டதில்லை. நெருக்கடியான நேரங்களில் வேலைகள் நடந்து முடிந்திராவிட்டால் நிலைமையின் அவசரத்தை விளக்குவாளே தவிர யாரையும் சினந்ததில்லை. யார் மனதையும் நோகப்பண்ணியதில்லை யாருடைய வாழ்நாள் எவ்வளவு காலம் நீடிக்கும் என்று யாருக்குமே தெரியாததால் எல்லோருக்கும் தனதன்பைக் கொடுத்தாள். எல்லோருக்குமே உதவி செய்யவிரும்பினாள். சண்டைக்குப் புறப்படும் கடைசிநேரத்தில் மறிப்புத் தாக்குதல் அணியை வழிநடத்தப் போகும் லெப். கேணல் செல்வியிடம் ஓடிச்சென்று கவனம் உங்களுக்கு ஏதும் பிரச்சினையெண்டால் எனக்கு அறிவியுங்கோ நான் என்ர வேலையை முடிச்சுட்டு சப்போட்டுக்கு வருவன் என்றாள். கனீபா விருப்பப்பட்ட மாதிரியே பெண் போராளிகள் ஏராளம் படையினரைக் கொன்றனர். தெருவெங்கும் குருதிவடிய சிதறிக்கிடந்த படையினரின் உடலங்களிடையே நாம் நடந்தபோது படையினர் தப்பயோடிய வழியெங்கும் அவர்கள் வீசி எறிந்த ஆயுதங்கள், ஆவணங்கள், உடமைகள், இராணுவப் பட்டிகள், பாதணிகள் இன்ன பிறவெல்லாம் இறைந்து கிடந்தபோது, நிலைகளில் இருந்து பிடுங்கி ஏற்றப்பட்ட பலரக மோட்டார் பீரங்கிகளுடன் இராணுவ வாகனங்கள் நின்றபோது வெற்றிக் கொடியை தளபதி விதுசா அவர்கள் ஏற்றிவைத்தபோது பார்த்து அமைதியுற கனீபா இருக்கவில்லை. நினைவுப்பகிர்வு: மலைமகள் நன்றி – களத்தில் இதழ் (22.04.1999). https://thesakkatru.com/mejor-ganiba/
  3. கரிகாலன் சேணையில் முதல் மாணவி
  4. எங்கள் தோழர்களின் புதை குழியில் மண் போட்டு செல்கின்றோம்
  5. கோகுலத்தில் பசுக்கள் எல்லாம் கோபாலன்
  6. ஒன்பது கோளும் ஒன்றாய் காண
  7. கடற்புலி லெப். கேணல் வரதா அக்டோபர் 30, 2020/தேசக்காற்று/அலைகடல் நாயகர்கள், வெஞ்சமரின் நாயகிகள்/0 கருத்து கடற்புலி லெப். கேணல் வரதா / ஆதி தமிழீழத்தின் முக்கிய துறைமுகப் பட்டணங்களில் ஒன்றான வல்வெட்டித்துறை தனியானதொரு பண்பாட்டின் உறைவிடம்.வல்லவர்களின் துறை வல்வெட்டித்துறை என்பது சாலவும் பொருந்தும்.திரைகடல் ஓடியும் திரவியம் தேடுவதில் வல்லவர்கள் மட்டுமல்ல,வரலாற்றில் பல தசாப்தங்களுக்கு முன்னரே கப்பல் கட்டும் தொழில் நுட்பத்தில் தலை சிறந்தோரையும் கொண்டது தான் வல்வைபூமி.எவருக்குமே கிடைத்தற்கரிய கலியுகக் கடவுளான எமது ஒப்பற்ற பெருந் தலைவன் தமிழீழத் தேசியத் தலைவர் பிறந்த ஊராகவும் இது திகழ்வதால் தமிழீழச் சரித்திரத்தில் இவ்வூர் அழியாப் புகழைப் பெறுகின்றது. இத்தகைய வரலாற்றுப் பெருமை மிக்க இந்த ஊரிலே தான் திரு.திருமதி யோகராசா இணையருக்கு ஒரு அக்கா, இரண்டு அண்ணாக்களுடன் கடைசிச் செல்வப் புதல்வியாக சந்திரகுமாரி எனும் நாமத்துடன் 01.11.1969 இல் எங்கள் வரதா அக்கா வந்துதித்தார். அவர் எமது தேசியத் தலைவருக்கு நெருங்கிய உறவினர் என்ற பெருமையையும் பெரும் பேற்றையும் தமதாக்கிக் கொண்டுள்ளார். அதன் காரணத்தினால் சந்திரகுமாரி அக்காவுக்கு சிறு வயது முதல் இயல்பாகவே மிகுந்த நெஞ்சுரமும் தலைமைத்துவப் பாங்கும் இரத்தத்தில் ஊறியே காணப்பட்டது. அவரது குடும்பமானது மாமிச உணவு உண்ணாத பரம்பரைச் சைவக் குடும்பம் ஆகும். அவரது தந்தையார் அரசாங்க எழுதுவினைஞராகக் கொழும்பு மாநகரத்திலே பணியாற்றி வந்தார். இதனால் சந்திரகுமாரி அக்காவும் தனது சிறு வயதுக் கல்வியை கொழும்பிலே கற்றார். பின்பு 1977ஆம் ஆண்டு தமிழருக்கெதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட மிகப் பாரதூரமான இனக் கலவரத்தின் காரணத்தினால் அவரது குடும்பம் கொழும்பை விட்டு இடம்பெயர்ந்து மீண்டும் வல்வெட்டித்துறையில் வசித்து வந்தனர். சந்திரகுமாரி அக்காவும் தனது மிகுதிப் பாடசாலைக் கற்கை நெறியினை வல்வெட்டித்துறையிலுள்ள மிகவும் பிரபல்யம் பெற்ற கல்லூரியான சாரண இயக்கத்தில் அகில இலங்கை வரை சென்று சாதனை படைத்த யாழ். வல்வை சிதம்பராக் கல்லூரியில் தொடர்ந்தார். எம் தலைவன் பிறந்த மண்ணிலே பிறந்த காரணத்தினால் “கம்பன் வீட்டுக் கட்டுத் தறியும் கவி பாடும்” என்ற முது மொழிக்கேற்ப சந்திரகுமாரி அக்காவும் சிறு வயது முதல் வீரத்தில் மட்டுமல்ல கல்வியறிவிலும் விளையாட்டுத் துறையிலும் சிறந்து விளங்கினார். பாடசாலையில் நடைபெறும் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டிகளின் போது தட்டெறிதல், குண்டெறிதல், மரதன் ஓட்டப்போட்டி போன்றனவற்றில் பங்குபற்றி மிகச் சிறப்பாக விளையாடி தனது இல்லத்திற்கு பல பரிசுக் கேடயங்களையும் பெருமையையும் பெற்றுக் கொடுத்தார். படிப்பிலும் குறை வைக்கவில்லை. 1985ஆம் ஆண்டில் அவர் க.பொ.த சாதாரணதரத்தில் கல்வி கற்றுக் கொண்டிருந்த போது இடம்பெற்ற வல்வை நூலகப் படுகொலை அவர் மனதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. ஆனாலும் தனது கல்வியை மனந் தளராது தொடர்ந்து க.பொ.த சாதாரணதரத்தில் தோற்றி சிறந்த பெறுபேற்றைப் பெற்று க.பொ.த உயர்தரத்தில் 1988வது அணியில் வர்த்தகப் பிரிவைத் தேர்ந்தெடுத்து கல்வி கற்று வந்தார். இவர் க.பொ.த உயர்தரத்தில் கல்வி கற்றுக் கொண்டிருந்த காலப்பகுதியில் 1987 – 1988 களில் இந்திய வல்லாதிக்க இராணுவத்தினரின் கெடுபிடிகளினால் மிகவும் மனமுடைந்து காணப்பட்டிருந்தார். இந்திய இராணுவத்தின் அத்தனை கெடுபிடிகளுக்குள்ளும் தனது கல்வியறிவைப் பூர்த்தி செய்து முடிக்க வேண்டும் என்ற வைராக்கியத்துடன் கல்வி கற்று 1988இல் க.பொ.த உயர்தரத்தில் தோற்றி சிறந்த பெறுபேற்றைப் பெற்றும் இலங்கை அரசினால் தமிழ் மாணவர்களின் மீது திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்பட்ட தரப்படுத்தல் கொள்கை மூலம் ஏற்பட்ட வெட்டுப்புள்ளிப் பிரச்சனையினால் பல்கலைக் கழகத்திற்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் அவர் மிகவும் மனமுடைந்து காணப்பட்டார். பின்பு 1989 ஆம் ஆண்டு காலப்பகுதியில் எமது பெண் போராளிகளின் சுதந்திரப் பறவைகள் அமைப்பில் இணைந்து பணியாற்றி வந்தார். 12.05.1985 இல் க.பொ.த சாதாரணதரம் படிக்கும் போது நடைபெற்ற வல்வை நூலகப் படுகொலை, தரப்படுத்தலின் விளைவாக 1988 இல் க.பொ.த உயர்தரத்தில் ஏற்பட்ட பிரச்சனை, 02.08.1989 இல் நடைபெற்ற வல்வைப் படுகொலை போன்ற நிகழ்வுகளினால் ஏற்பட்ட தாக்கங்கள் அவரை எமது போராட்டத்தின் பால் ஈர்த்தது. இதன்பால் 1990 இல் இரண்டாம் கட்ட ஈழ யுத்தம் ஆரம்பித்த காலப்பகுதியில் சந்திரகுமாரி அக்காவும் “அடுப்பங்கரைகளிலும், சினிமா கொட்டகைகளிலும் சிந்தைகளைப் பறி கொடுத்து தூங்கிக் கிடந்திடாமல் அலங்கார ஆடைகளையும் அழகு ஆபரணங்களையும் அணிந்து திரிந்து போலித்தனமான புளகாங்கிதம் அடையாமல் புரட்சிகரக் கருத்துக்களை உறுதியாகப் பற்றி போர்க் குணம் கொண்ட மங்கையாய்க் களம் புகுந்து எமது நீதியான யுத்தத்தின் மூலம் அநீதியான யுத்தமனைத்திற்கும் முடிவு கட்டலாம்” என்றும் “நாட்டின் விடுதலைப் போராட்டம் என்பது நாயகன் கடமை மட்டுமல்ல நமது கடமையுமாகும்” என்பதனையும் உணர்ந்து எழுச்சி கொண்டு மகத்துவம் மிக்க எம் பெருந் தலைவன் அணியில் இணைந்து மகளிர் பயிற்சிப் பாசறையில் 11வது அணியில் அடிப்படைப் பயிற்சியை நிறைவு செய்து கொண்டு வரதா எனும் பெயர் கொண்டு வரிப்புலியாகினார். பின்னர் அவர்களது பயிற்சி முகாமிலேயிருந்து 150 போராளிகளைத் தேர்ந்தெடுத்து எந்த ஆபத்தான போர்ச் சூழலையும் எதிர் கொண்டு நிற்கவல்ல துணிவாற்றலுள்ள போராளிகளாக மாற்றும் மிகத் திறமையான கடுமையான விசேட பயிற்சிகள் அளிக்கப்பட்டு பலாலிப் பகுதி, யாழ். கோட்டைப் பகுதி போன்ற இடங்களில் போர் முன்னரங்கப் பகுதிகளுக்கு அனுப்பப்பட்டனர். அதில் வரதா அக்காவும் 7 பேர் கொண்ட அணி ஒன்றிற்கு அணித் தலைவியாக சிறிது காலம் யாழ். கோட்டைப் பகுதிக்கு அனுப்பப்பட்டார். பின்பு பலாலிப் பெருந்தளத்தின் போர் முன்னரங்கப் பகுதிகளில் நிலை கொண்டிருந்த பெண் போராளிகளின் போர் அணிகளுடன் இணைந்து இலங்கை இராணுவத்தின் மினி முகாம்கள் மீது துணிகரத் தாக்குதல்களை நடாத்திச் சாதனைகள் படைத்தார். மேலும்,அவர் சைவ உணவு உண்ணுபவராக இருந்ததால் தனக்குரிய சைவ உணவு கிடைக்காத பட்சத்திலும் தான் பசியிருந்தபடி பலாலிப் போர் முனையில் நிற்கும் தனது அணியின் சக போராளிகளுக்கு ஒரு அணித் தலைவி எனும் பொறுப்புடன் ஒரு தாயாக நேரம் தவறாது பெரும் சிரமங்களுக்கு மத்தியில் இராணுவத்தினரின் பதுங்கித் தாக்குதல்களினை வெகு சாமர்த்தியமாகச் சமாளித்துக் கையாண்டு உணவுப் பொட்டலங்களை எடுத்துச் செல்லும் தன்னலமற்ற சேவையையும் புரிந்தார். எமது அமைப்பின் பெண் போராளிகளின் படையணிகள் வளர்ச்சி பெற்று விரிவாக்கம் கண்டதுடன் விடுதலைப் போரிலும் முக்கிய பங்காற்றியது 10.07.1991 இல் தொடங்கிய ஆகாய கடல் வெளிச் சமரின் போது இனங் காணக் கூடியதாக இருந்தது.இப் பெருஞ் சமரில் பெண் போராளிகளைக் கொண்ட பல படைப் பிரிவுகள் தாக்குதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு துணிவாற்றலுடன் வீர சாதனைகள் படைத்தன.இச் சமரில் வரதா அக்காவும் 7 பேர் கொண்ட அணிக்கு அணித்தலைவியாகப் பொறுப்பேற்றுச் சென்று நெஞ்சுறுதியுடனும் ஓர்மத்துடனும் சமரிட்டு வீர சாதனை படைத்தார். இதன் மூலம் சர்வதேச இராணுவ – அரசியல் விமர்சகர்கள் மத்தியில் ஒருமித்த கருத்து ஒன்று உருவானது.அதாவது புலிகள் ஒரு முழு அளவிலான மரபுவழி இராணுவத்தைப் போன்று செயற்பட்டிருக்கின்றார்கள் என்றும் இந்தச் சமரை அவதானிக்கும் போது இலங்கைத் தீவில் இரண்டு இராணுவங்கள் உள்ளது போல் தோன்றுகின்றது என்பதும் ஆகும்.இந்தக் கருத்தானது எமது புரட்சிகர இயக்கத்துக்கு கிடைத்த ஒரு பெரும் வெற்றியே ஆகும்!. ஆனையிறவுச் சமரில் பெண் போராளிகள் முக்கிய பங்கு வகித்ததைத் தொடர்ந்து இலங்கை இராணுவத்தால் மேற்கொள்ளப்பட்ட “மின்னல் இராணுவ நடவடிக்கை” என்ற பெயரால் தமிழீழத்தின் “இதயபூமி” என்றழைக்கப்படும் மணலாற்றில் நடைபெற்ற நடவடிக்கைக்கு எதிராக நடாத்தப்பட்ட தற்காப்புச் சமரிலும் லெப். கேணல் அன்பு அண்ணா தலைமையில் பெண் போராளிகள் பங்கு கொண்டனர். இலங்கை இராணுவத்தின் இவ் இராணுவ நடவடிக்கையின் நோக்கம் வட தமிழீழத்தையும், தென் தமிழீழத்தையும் இரண்டாகப் பிரிப்பதும் எம்மை பலவீனப்படுத்தி அதன் மூலம் யாழ் மாவட்டத்தைக் கைப்பற்றுவதாகும். பெண் போராளிகளுக்கு இம் முறியடிப்புச் சமரானது புதுமையான காட்டுச் சமர் அனுபவமாக இருந்தது. ஏனெனில் காட்டுச் சமர்களில் அவர்கள் அதுவரை பங்கு பெறவில்லை. அக்காட்டைப் பொறுத்தவரை திக்குத் திசை தெரியாது; சூரியன் எங்கே உதிக்கிறது மறைகிறது எனத் தெரியாது; இராணுவம் எங்கிருந்து வருவார்கள் எனத் தெரியாது; காயமடைந்த வீரச்சாவடைந்த போராளிகளைப் பின் தளத்திற்கு நகர்த்துவதற்குப் பாதைகள் இல்லை; இதைவிட இராணுவம் ஏவிய எறிகணைகள் மரங்களில் வீழ்ந்து வெடிப்பதால் அதிக இழப்புக்களைச் சந்திக்க வேண்டியிருந்தது. இருந்தாலும் இக் களமுனையின் முக்கியத்துவத்தை உணர்ந்து போராளிகள் வரைபடங்களின் உதவிகளுடனும் இராணுவத்தின் நகர்வுகளை தொலைத் தொடர்புக் கருவியூடாக (monitoring) ஒட்டுக் கேட்டும் இத் தாக்குதலின் விநியோக நடவடிக்கையை தடையற மேற்கொண்டும் மற்றும் விழுப்புண்ணடைந்த, வீரச்சாவடைந்தவர்களையும் பின் நகர்த்தியும் கடுமையாக நெஞ்சுறுதியுடன் போரிட்டனர். இச் சமரில் வரதா அக்காவும் ஒரு அணிக்கு தலைவியாகப் பொறுப்பேற்று மிகுந்த ஒர்மத்துடனும் உத்வேகத்துடனும் துணிவாற்றலுடனும் சமரிட்டு பின்பு இடது கையில் பாரிய விழுப்புண்ணடைந்து மருத்துவ சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு பின் நகர்த்தப்பட்டார். ஆனையிறவுச் சமரின் பின் வெடிபொருட்கள் மற்றும் மருந்துப் பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவிய காலப்பகுதியிலும் இப் பாரிய முன்னேற்ற நடவடிக்கையை முறியடித்தமை எமக்கு பெரும் வெற்றியே! பின்னர் வரதா அக்கா இடது கையில் ஏற்பட்ட பாரிய விழுப்புண்ணின் காரணத்தினால் அக்கையானது சரிவர இயங்க முடியாமல் இருந்த படியால் 1991 இலிருந்து 1993 ஆம் ஆண்டு ஆரம்ப காலப்பகுதி வரை நீண்ட காலம் மருத்துவ சிகிச்சையிலே இருந்தார். பின்னர் நிதித்துறை மகளிர் பிரிவுக்கு தகுதி வாய்ந்த ஒருவர் பொறுப்பாளராக பதவி வகிக்க தேவை என்றபடியால்,வரதா அக்காவின் தலைமையேற்று நடாத்தும் பாங்கு, பொறுமை, சகிப்புத் தன்மை கல்வித் தகுதி போன்றன இனங் காணப்பட்டு 1993இல் நிதித்துறை மகளிர் பிரிவுக்கு பொறுப்பாளராக உள்வாங்கப்பட்டார். எமது நிதித்துறை மகளிர் பிரிவிலே ஆரம்பத்திலே கணக்காய்வுப் பகுதி, ஆயப்பகுதி போன்ற பகுதிகள் மட்டுமே இருந்தன. வரதா அக்கா கணக்காய்வுப் பகுதியைப் பொறுப்பேற்று நிர்வகித்தார். ஆயப்பகுதியை லெப்ரினன்ட் சாந்தாக்கா பொறுப்பேற்று நிர்வகித்தார். பின்பு லெப்ரினன்ட் சாந்தா அக்கா களப் பணிக்கு சென்றதும் வரதா அக்காவே ஆயப்பகுதியையும் சேர்த்து திறம்பட நிர்வகித்தார். பின்பு எமது நிதித்துறை மகளிர் பிரிவானது கணக்காய்வுப் பகுதி, தையல் பகுதி, உணவு வழங்கல் பகுதி, நகைத் தொழிலகம் ஓட்டுனர் பயிற்சிக் கல்லூரி எனப் படிப்படியாக விரிவாக்கம் கண்டது. 1993 தொடக்கம் 2001 கடற்கரும்புலிகள் அணிக்குச் செல்லும் வரை அவையனைத்தினதும் நிர்வாகப் பணியினையும் திறமையாக மேற்கொண்டதுடன் அத்தகைய நிர்வாகப் பளுவுக்குள்ளும் யாழ்ப்பாணத்தில் நகைவாணிபம், சேரன் களஞ்சியங்கள், கலியுக வரதன் உதிரிகள் வாணிபம், எழிலகம் புடவை வாணிபம் போன்றவற்றிலும். 1996இற்குப் பின்னர் வன்னியில் இளவேனில் எரிபொருள் வாணிபம், கலியுகவரதன் உதிரிகள் வாணிபம் போன்றனவற்றிலும் கணக்காய்வுப் பணியைத் திறம்பட மேற்கொண்டார். மேலும் தனது போராளிகளை துறை சார் வல்லுனர்களாக உருவாக்க வேண்டும் என்ற கொள்கையில் 1994 இல் யாழ் உயர் தொழில்நுட்பக் கல்லூரியில் தானும் கற்கை நெறியை மேற்கொண்டு ஏனைய போராளிகளையும் அக்கற்கை நெறியினை மேற்கொள்ள வழிகாட்டினார். அத்துடன் எமது கணக்காய்வுப் பகுதி பெண் போராளிகளுக்குத் தேவையான மேலதிக வகுப்புக்களுக்கு கற்பிப்பதற்கு யாழில் பிரசித்தி பெற்ற வர்த்தகம், கணக்கியல், ஆங்கிலம் தொடர்பான ஆசிரியர்கள், விரிவுரையாளர்களை ஒழுங்குபடுத்திக் கொடுத்ததுடன் தானும் அவர்களுடன் இணைந்து அக்கற்கை நெறியினை மேற்கொண்டு தனது அறிவாற்றலையும் வளர்த்துக் கொண்டார். எனக்கும் வரதா அக்காவுக்குமான உறவானது 1995 மார்கழி மாதத்திலிருந்து தான் (நாங்கள் அடிப்படைப் பயிற்சி முடித்து நிதித்துறை கணக்காய்வுப் பகுதிக்கு வந்ததிலிருந்து) ஆரம்பித்தது. நாங்கள் 17 வயதில் எமது குடும்ப உறவுகளைப் பிரிந்து முற்றிலும் வித்தியாசமான போராட்ட வாழ்க்கையினில் காலடியெடுத்து வைத்து ஆரம்பித்த போது வரதா அக்கா தான் எங்களை ஒரு தாயைப் போன்ற பரிவுடனும் பாசத்துடனும் அரவணைத்தார். எமக்குத் தாயில்லாக் குறையை அவரே நிவர்த்தி செய்தார். அவருக்கு கோபம் என்பது வந்து நான் ஒருபோதும் கண்டதில்லை. அப்படி கோபம் வந்தாலும் அதனை அடக்கி ஒரு சிறிய சிரிப்புடன் சமாளித்துவிட்டுச் செல்லுவார். அவரிடம் எப்போதும் ஒரு அன்புடன் கலந்த கண்டிப்பும் ஆளுமையும் காணப்படும். அவர் எப்போதும் எங்களை தான் ஒரு பொறுப்பாளர் என்ற ரீதியில் அதிகாரம் செய்து கட்டளையிட்டதும் இல்லை. நாமும் ஒரு போதும் அவரது கட்டளையை மீறியதும் இல்லை. எப்பொழுதும் நாம் செய்யும் சிறு சிறு குறும்புகள், குழப்படிகளை ஒரு தாயைப் போன்ற உணர்வுடன் ரசிப்பார். அதற்கு உதாரணமாக ஒரு சம்பவத்தைக் கூறுகின்றேன். எங்கள் முகாமில் ஒரே வயதுடைய மற்றைய போராளிகளை விட வயதில் குறைந்த ஏழெட்டுப் பேர் இருந்தோம். அதனால் நாங்கள் அந்த வயதிற்குரிய குறும்புகள், குழப்படிகளுடனேயே எப்போதும் காணப்படுவோம். ஒரு நாள் இரவு நேரத்தில் எமது பணி முடித்து முகாம் திரும்பி இரவு உணவினை உட்கொண்டு விட்டு ஒரு அறையில் எல்லோரும் சேர்ந்திருந்த குஷியில் பாட்டு,நடனம் என அமர்க்களப்படுத்திக் கொண்டிருந்தோம். மற்றைய அறையில் சில வயதில் கூடிய போராளிகள் தமது வாணிபங்களின் ஆவணங்களை முகாமில் கொண்டு வந்து வைத்திருந்து பொறுப்பாகப் பணி புரிந்து கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு எங்களின் சத்தமானது இடைஞ்சலுடன் கூடிய தொந்தரவாக இருந்ததின் காரணத்தினால் எங்களை அமைதியாக இருக்கச் சொல்லுமாறு வரதா அக்காவிடம் சென்று புகாரளித்தார்கள். இதனால் வரதா அக்கா எங்களது மகிழ்ச்சியையும் கலைக்க விரும்பாமல் பணிபுரிபவர்களையும் சமாளிக்க வேண்டும் என நினைத்து, முதலாம் கட்டமாக ஒரு போராளியை எச்சரிக்கை செய்ய அனுப்புவார். ஆனால் வந்தவரும் எங்களுடன் சேர்ந்து அந்த அமர்க்களத்தில் ஈடுபடுவார். பின்பு மற்றுமொருவரையும் அனுப்பி அவரும் முதல் அனுப்பியவரை ஒப்பி எங்களுடன் சேர்ந்து அமர்க்களத்தில் ஈடுபட்டதும் இறுதி எச்சரிக்கையாக தானே வரதா அக்கா களத்தில் குதிப்பார். எங்களுடைய மகிழ்ச்சியை உடனேயே தடை செய்யவும் விரும்பாமல் கொஞ்ச நேரமாவது நீடிக்கட்டும் என்று இடைவெளி விட்டு பணி புரியும் மற்றைய போராளிகளின் மனதையும் நோகடிக்காமல் தானே எங்களிடம் வந்து திட்டுவது மாதிரி நடித்து (வாய் மட்டும் தான் எங்களைப் பேசும் அதேவேளை அவரது மூக்கும் கண்ணும் சிரிக்கும்) அதிக பட்ச தண்டனையாக வாய்க்கு துவாய் கட்டும் தண்டனையை மட்டும் தான் தருவார். நாங்கள் அந்தத் துவாயை வாயில் கட்டிக் கொண்டும் எங்கள் அமர்க்களத்தைத் தொடருவோம். வரதா அக்கா தான் பொறுப்பாளர் என்ற சலுகையை ஒரு போதும் எடுத்துக் கொண்டது இல்லை.தன்னைப் போலவே தான் மற்றப் போராளிகள் என்று நினைப்பார். அவர் சைவ உணவு மட்டுமே சாப்பிடுபவராக இருந்ததால் எமக்கு உணவு வழங்கல் பகுதியினால் வரும் உணவில் மரக்கறி உணவினை சிலவேளைகளில் அவர் பணி முடிந்து வரத் தாமதமானால் உணவு முடிந்துவிடும் என்ற காரணத்தினால் ஒரு போராளி எடுத்து ஒளித்து வைப்பதுண்டு. ஆனால் வரதா அக்கா இப்படி தனக்காக பிரத்தியேகமாக உணவு எடுத்து வைப்பதை எப்போதும் விரும்புவதில்லை. நாமும் சில வேளைகளில் பணி முடித்து வரத் தாமதமானால் கறி தீர்ந்து விடும். அதனால் நாங்கள் பசியில் வரதா அக்காவுக்காக எடுத்து ஒளித்து வைத்திருக்கப்படும் கறியினை எப்படியோ தேடிக் கண்டுபிடித்து எடுத்து உண்டு விடுவோம். அதனைக் கண்டதும் வரதா அக்காவுக்கு கறி எடுத்து ஒளித்து வைத்த போராளி எங்களைத் திட்டுவார். ஆனால் வரதா அக்கா “பிள்ளைகளுக்கில்லாத உணவு எனக்கெதுக்கு… அவர்கள் சாப்பிடட்டும்… அவர்களைத் திட்டாதே” என அந்தப் போராளிக்கு கூறிவிட்டு சோற்றுடன் கறிக்குப் பதிலாக பச்சை மிளகாய், வெங்காயத்துடன் தனது உணவினை முடித்துக் கொள்ளுவார். எல்லாப் போராளிகளையும் போலவே வரதா அக்காவும் மக்களை நேசித்த போராளி. எமது வாணிபங்களில் காலாண்டு,அரையாண்டு, ஆண்டிறுதி காலப்பகுதிகளில் இருப்பெடுத்தல் நடவடிக்கைகள் நடைபெறுவதுண்டு. இதனால் பணி முடிய இரவு நேரமாகி விடும். ஆதலினால் அங்கு பணி புரியும் பெண் பணியாளர்களை வரதா அக்காவே தனது உந்துருளியில் ஏற்றிச் சென்று அவர்களது வீட்டில் பாதுகாப்பாக இறக்கிவிட்டு வருவார். அதனால் பணியாளர்களின் பெற்றோர்களும் அவர் மேல் தீராத அன்பும் நன்மதிப்பும் வைத்திருந்தார்கள். மேலும் ஒருமுறை வரதா அக்கா இரவு நேரத்தில் பணி முடித்து ஒரு போராளியுடன் உந்துருளியில் பணியிடத்தில் சைவ உணவு கிடைக்காத படியால் மதிய உணவையும் உண்ணாத காரணத்தினால் மிகுந்த பசியுடன் முகாம் நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்பொழுது அவருக்கு முன்னால் ஒரு உந்துருளியில் பொது மகன் ஒருவர் தனது நிறை மாதக் கர்ப்பிணி மனைவியை ஏற்றிக் கொண்டு உந்துருளியின் முகப்பு விளக்கு பழுதடைந்த காரணத்தினால் இருட்டில் தட்டுத் தடுமாறிச் சென்று கொண்டிருந்தார். இதனை அவதானித்த வரதா அக்கா அவர்களிடம் முகவரியைக் கேட்டு அவர்களது வீடு எமது முகாமிலிருந்து சிறிது தூரத்தில் தான் உள்ளது என்பதை அறிந்து அவரைப் பின் தொடர்ந்து சென்று அவருக்கு தனது உந்துருளி முகப்பு விளக்கின் மூலம் வெளிச்சத்தைப் பாய்ச்சியபடி தனது கடும் பசியையும் மறந்து அவர்களது வீடு வரைக்கும் கொண்டு சென்று பாதுகாப்பாக விட்டுத்தான் வந்தார். அந்தளவுக்கு சாதாரண பொது மக்களை நேசித்த போராளி அவர். இச் சம்பவத்தை அவருடன் வந்த போராளி எமக்கு போட்டுக் கொடுத்து அன்று தொடக்கம் நாங்கள் வரதா அக்காவைக் கண்டால் “குமார் குமார் லைற் அடி கோழிக் கூட்டுக்கு லைற் அடி” என்ற பாடலைப் பாடி கிண்டலடிப்போம். அவரும் “வாறனடி உங்களுக்கு” என்று செல்லமாக கோபித்தபடி, எங்களது கிண்டலை ரசித்தபடி செல்லுவார். எமது பிரிவிலிருந்து களப் பணிகளுக்குப் போய் ஒவ்வொரு போராளியும் வீரச்சாவடையும் போதும் “சேயை இழந்த தாய்ப் பசுவின் வலிக்கொப்பான” வேதனையடைவார். எமது பிரிவிலிருந்து வீரச்சாவடைந்த எல்லா மாவீரர் குடும்பங்களின் இல்லத்திற்கும் தானும் செல்வதோடு மட்டுமல்லாது எங்கள் எல்லோரையும் கட்டாயம் செல்லுமாறு கூறி அவர்களுக்கு தேவையான உதவிகள் அனைத்தையும் தானே முன்னின்று செய்து எங்களையும் செய்விக்க வைப்பார். காலையில் எழுந்து சத்தியப் பிரமாணத்தை முடித்துக் கொண்டதும் எங்கள் எல்லோரையும் ஓட்டப் பயிற்சிக்கு அனுப்பிவிட்டு முகாமில் உள்ள மாவீரர் மண்டபத்திலுள்ள மாவீரர் படங்களுக்கு தனது கையாலே பூக்கொய்து வைத்து கடவுளர்கள் மாதிரி கௌரவித்து வணக்கம் செலுத்தி விட்டுத் தான் தனது அன்றைய பணியை ஆரம்பிப்பார். அத்துடன் மற்றைய புதிய போராளிகளுக்கு மிகவும் அன்பாகவும் ஆர்வத்துடனும் மிகத் தெளிவாக புரியக் கூடிய வகையிலும் கணக்காய்வுப் பணியைக் கற்றுக் கொடுப்பதிலும் வல்லவர். நானும் 1997 இல் க.பொ.த உயர்தரப் பரீட்சையில் தோற்றி விட்டு வரதா அக்காவுடன் தான் முதன் முதலில் கலியுகவரதன் உதிரிகள் வாணிபம், இளவேனில் எரிபொருள் வாணிபம் போன்றவற்றில் பணிக்குச் செல்லும் பேற்றைப் பெற்றேன். அங்கு அவர் எனக்கு கணக்காய்வுப் பணியினையும் பணியாளர்களுடன் அணுகும் முறையினையும் மிகவும் அன்புடனும் ஆர்வத்துடனும் தெளிவாகவும் கற்றுக் கொடுத்தார்.அவருடன் பணி புரிந்த ஒரு வருடத்திலேயே வாணிபங்களின் இலாப நட்ட முடிவுக் கணக்குகளை என்னால் தனியே தயாரித்து முடித்துக் கொடுக்கும் அளவிற்கு என்னை ஆற்றலுடன் வளர்த்து விட்டிருந்தார். அன்று அவர் ஊட்டிய ஊக்குவிப்பும் அறிவும் ஆளுமையும் தான் பின் நாளில் நானும் ஒரு கணக்காய்வு அணியின் அணிப் பொறுப்பாளராக உருவாகுவதற்கு அடித்தளமாக இருந்தது. இப்படி போராளிகளை பணி ரீதியிலும் வளர்த்து விடுவதில் வல்லவர் அவர். எமது போராட்டத்தில் இணைந்த காலம் தொட்டு வரதா அக்காவுக்கு கரும்புலிகள் அணியில் இணைய வேண்டும் என்ற கனவு இருந்து கொண்டேயிருந்தது.எமது தேசியத் தலைவருக்கு ஐந்தாறு தடவைகள் கடிதம் அனுப்பி அனுமதி மறுக்கப்பட்டு வந்தும் மனம் சோராமல் திரும்பத் திரும்ப தன்னைக் கரும்புலிகள் அணியினுள் உள்வாங்குமாறு கடிதம் அனுப்பிக் கொண்டேயிருந்தார். அவரது விடாமுயற்சியினாலும் தான் கரும்புலிகள் அணியில் இணைய வேண்டும் என்ற கொள்கையில் உறுதியாக இருந்ததாலும் 2001ஆம் ஆண்டு ஆரம்ப காலப் பகுதியில் அவரை கடற்கரும்புலிகள் அணியில் உள்வாங்கப்படுவதற்கு அனுமதிக் கடிதம் தேசியத் தலைவரிடமிருந்து வந்தது. வரதா அக்காவுக்கோ தனது ஆசை நிறைவேறி விட்டதையிட்டு மிகப் பெரிய சந்தோசம். ஆனால் எமக்கோ தாயைப் போல பரிவு காட்டிய எங்கள் வரதா அக்காவைப் பிரியப் போகிறோம் என்கிற கவலை. ஆனால் போராளிகள் என்றால் பிரிவும் மறைவும் சகஜம் தானே! நாம் அதனை வலிந்து ஏற்றுக் கொண்டு எமது துயரங்களை மனதில் அடக்கிக் கொண்டு வரதா அக்காவிற்கு விடை கொடுத்தோம். பின்பு கடற்கரும்புலிகள் அணியில் இணைந்து கடல் நீச்சற் பயிற்சி, கடல் கனரக ஆயுதப் (Heavy Weapon) பயிற்சி போன்ற அனைத்துப் பயிற்சிகளினையும் தனது சரிவர இயங்க முடியாத இடது கையுடன் தன்னை விட வயது குறைந்த இளம் போராளிகளுக்குச் சமமாக ஈடுகொடுத்து உத்வேகத்துடனும் அர்ப்பணிப்புடனும் துணிவாற்றலுடனும் மிகுந்த ஈடுபாட்டுடனும் நிறைவு செய்து கொண்டு தனது இலக்கிற்காக காத்துக் கொண்டிருந்தார். அத்துடன் (ரேடார் RADAR) மின் காந்த அலைக் கருவியூடாகக் கடற்படைக்கலன்களின் நகர்வினை அவதானித்து கட்டளையிடும் அதிகாரியாகவும் பணியாற்றினார். 2001 இல் எமது போராட்டமானது பரிணாம வளர்ச்சியடைந்து நாம் யாழ் குடா நாட்டைக் கைப்பற்றும் அளவுக்கு பலமாக இருந்தோம். இலங்கை இராணுவமானது பலவீனமடைந்து காணப்பட்டது. இதன் காரணத்தினால் யாழ் குடாநாட்டையும் மொத்த தமிழீழத்தையும் நாம் மீட்டெடுத்து விடுவோம் என்று பயமடைந்து அப்போதைய இலங்கைப் பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்க நரி மூளையுடன் நோர்வே அரசின் தலையீட்டுடன் 22.02.2002 இல் நிரந்தரமான போர் நிறுத்த ஒப்பந்தத்தில் எம்முடன் இணைந்து கையெழுத்திட்டார். இதனால் மக்கள் இலங்கை அரசின் கபடத் தனத்தை உணராமல் தமக்குத் தீர்வு கிடைத்து விட்டது என மகிழ்ச்சியில் திகழ்ந்தார்கள். 2004 காலப் பகுதியில் வரதா அக்காவும் திருமண வயதைக் கடந்து விட்ட காரணத்தினால் அவரின் தந்தையாரின் வேண்டுகோளிற்கிணங்க தேசியத் தலைவர் அவர்களின் ஒப்புதலுடன் கட்டளைத் தளபதி ஒருவரை இணையேற்றார். திருமணம் ஆகிவிட்டாலும் அவர் கடற்புலிகள் மகளிர் அணியிலேயே தனது பணியினைத் தொடர்ந்து மேற்கொண்டு வந்திருந்தார். 2006 இல் மீண்டும் மூண்ட நாலாம் கட்ட ஈழப் போரின் காரணத்தினால் A9 பாதை மூடப்பட்டு மீண்டும் போர் மேகங்கள் சூழ்ந்தன. இதன் காரணத்தினால் எமது போராட்ட மரபுப்படி “துணைவனும் – துணைவியும் நடைமுறை வாழ்விலும் நாட்டை மீட்கும் மகத்துவமான விடுதலைப் போரிலும் சம பங்கு கொண்டு புறப்பட வேண்டிய வேளை இது தான் புறப்படுவோம்” என்று வரதா அக்காவும் அவரது துணைவரும் தத்தமது படையணிகளுடன் இணைந்து தமது பணியினை செவ்வனே மேற் கொண்டனர். அந்த வகையில் வரதா அக்காவும் கடற்புலிகள் மகளிர் படையணியுடன் இணைந்து (ரேடார் RADAR) மின் காந்த அலைக் கருவியூடாக அவதானிக்கும் தொலை தூர நோக்கி கண்காணிப்பு பிரிவில் கட்டளையிடும் அதிகாரியாக திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டார். 30.10.2006 இல் மட்டக்களப்பில் இருந்து வன்னி நோக்கி காட்டு வழியாக நகர்ந்து வந்து கொண்டிருந்த போது எங்கள் வரதா அக்கா மட்டக்களப்பு வாகரைப் பகுதியில் அரவம் தீண்டி எம்மையெல்லாம் மீளாத் துயரில் ஆழ்த்தி விட்டு மீளாத் துயில் கொண்டு விட்டார். நினைவுப்பகிர்வு: நிலாதமிழ் நன்றி – ஈழ இல்லம் (eelamhouse.com) இணையத்தளம். https://thesakkatru.com/sea-tiger-lieutenant-colonel-varatha-aathi/
  8. லெப்டினன்ட் கேணல் அகிலா அக்டோபர் 30, 2020/தேசக்காற்று/வெஞ்சமரின் நாயகிகள்/0 கருத்து லெப்டினன்ட் கேணல் அகிலா: தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் அவர் ஓர் தனி அத்தியாயம். எங்கள் தலைவரின் சேனைக்குள் உருவான ‘அக்கினிக் குழந்தை’ மெல்ல உயிர்ப்புக்காக உழைத்தவர்களில் லெப்.கேணல் அகிலாவின் பங்கும் அளப்பரியது. அவருள் இருந்த அந்த ஆளுமை, பல்துறை விற்பன்மை, எமது தேசத்தைக் கடந்து பறந்து போன பெருமை….. அவரது தனித்துவமான இடம் நிரப்பப்பட முடியாததுதான். எப்போதுமே காற்சப்பாத்துக்களைக் கழற்றியறியாத கால்கள், நடந்துவரும் போது தனியானதொரு கம்பீரம் நடையிற் தெரியும். அந்த மெல்லிய உருவத்தின் வல்லமை, அதைவிட உறுதியின் வலிமை, எல்லாவற்றிலுமே முன்னுதாரணமான போராளி. அகிலாக்கா எல்லாப் போராளிகளையும் தொட்டுச்சென்ற அவரது நினைவுகள். இழப்பை நெஞ்சம் ஏற்க மறுக்கும் பெயர் கூற முடியாத சதனைகளுக்குள்ளும், இன்னும் ஓரிரண்டு பேருக்குள்ளே உறங்கிப்போன உண்மைகளுக்குள்ளும் அவர் ஆற்றிய பங்கு, அவரது உழைப்பு….. இவை அவரை இனங்காட்ட முடியாத பக்கங்கள். எழுத்திலே வடிக்க முடியாத வரலாற்று நிகழ்வுகள். அவர் இயக்கத்துக்கென சேவையாற்ற புறப்பட்ட காலங்கள் மிக நெருக்கடியானவை. போராட்ட உத்வேகங்க்கொண்ட பெண்களணி ஒன்று, தங்கள் தங்கள் குடும்பங்களுக்குள்ளே போராட்டம் நடத்தி வெளியே வந்து இந்தத் தேசத்துக்காய் தம்மை அர்ப்பணிக்கத் தொடங்கியது. லெப்.கேணல் திலீபணினால் உருவாக்கப்பட்ட ‘சுதந்திரப் பறவைகள்’ அணிக்குள் அவர்கள் ஒன்று திரண்டனர். இருண்மைச் சக்திக்குள் உறங்கிக் கிடந்த மனங்களைத் தட்டியெழுப்ப அவர்கள் அல்லும் பகலும் பாடுபட்டனர். அந்த அணிக்குள் அகிலாவும் தன்னை இணைத்துக் கொண்டார். அன்று தொட்டு இன்றுவரை தனது செயல்களினால் மட்டும் தன்னை இனங்காட்டி வந்தார். அவரது துப்பாக்கியிலிருந்து புறப்படும் ரவைகள் எப்போதுமே இலக்குத் தவறியதில்லை. பெயர் சொல்லக் கூடிய இலக்காளர். அந்த இலக்குத் தவறாத தன்மை அவரது போராட்ட வாழ்வின் எல்லாப் பக்கங்களிலும் ஊடுருவியிருந்தது. எந்த வேலையாயினும் செய்து முடிக்கின்ற வரையில் அவரது அயராத உழைப்பு, செய்து முடிக்க வேண்டும் என்ற ஓர்மம் அவரிடம் தனித்துவமாக விளங்கியது. எல்லாவற்றையும் விட அவரிடமிருந்த பிரச்சனைகளை அணுகினர முறை வித்தியாசமானது. இந்த வேலையை எப்படிச் செய்வது? குறித்த நாட்களுக்குள் செய்து முடிக்க முடியுமா? யோசித்து யோசித்து மண்டையைப் போட்டுக் குழப்பிப் போய் அவர் முன்னாள் நின்றால், இவ்வளவு நேரமும் இதற்காக போய் நின்றோம் என்ற மாதிரி செய்கின்ற வேலை இலகுவானதாகிவிடும். ஒவ்வொரு போராளியையும் சுயமாக வளர்த்தெடுப்பதில் அவர் கொண்டிருந்த நம்மைக்கையும் செயலாற்றலும்…….. எங்கள் நெஞ்சுக்கூட்டுக்குள் அவரை ஆழ இருத்தி விட்டது. எந்த வேலையாக ஓடி அலைந்து திரிந்தாலும் நித்திரையின்றிய இரவுகளைச் சந்தித்தாலும் தானே நேரம் ஒதுக்கி, போராளிகளுக்கு கல்வியூட்டிய அந்த நாட்கள்………. எல்லோரும் எல்லாவற்றையும் அறிந்திருக்க வேண்டும் என்ற அவரது கொள்கை செயலுருப்பெற்றபோது, முகாமில் அனேகமான போராளிகள் இயந்திரங்களைத் திருத்துவதிலிருந்து எவ்வாறு சுவையாகச் சமைப்பது என்பது வரை கற்றிருந்தனர். அவருக்குரிய வரலாற்றின் முகவுரைக்கு எடுத்துக் கொண்ட சில வரிகள் இவை. இந்த அறிமுகத்துக்குரிய லெப்.கேணல் அகிலாவின் கடைசி மூச்சு 30.10.1995ல் சூரியக்கதிர் படர்ந்த காலைப்பொழுதோடு கலந்து போனது. வலிகாமத்தின் மிகப்பெரிய சமருக்குள் ஊரெழுவின் சிவப்பு மண்ணுக்குள் குருதிதோய எங்கள் அகிலாக்கா கலந்து போனார். நெஞ்சை விட்டகலாத நினைவுகளிலிருந்து… நன்றி: களத்தில் இதழ் (12.06.1996). https://thesakkatru.com/lieutenant-colonel-agila-in-charge-of-women-in-intelligence/
  9. மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள் https://thesakkatru.com/
  10. திரிபுரம் எரித்த | சிவமோடு சிவமாக
  11. ஆண்டவரே நீரே மயக்கிவிட்டீர்
  12. ஆண்டவரே உம் பாதம் சரணடைந்தேன்
  13. மணலில் நடந்து... இருளைக் கடந்து... மதினம் புகுந்த நபியே
  14. நீராடும் கண்களோடு.. நெஞ்சம் நிறை பாசத்தோடு || இசைமுரசு E.M. நாகூர் ஹனிபா | இஸ்லாமிய பாடல் நன்றி பையன்
  15. I've been thinkin' 'bout you Thinking 'bout when the sunset is to bless another day Did I dream about you? Cause your the first thing that comes to my mind when I'm awake Boy you had me from the beginning Can't deny we fell in love like shooting stars We were young, we were reckless Champagne toast on us for breakfast We were Gods, we were restless And we both knew that we were blessed with... Good love Boy you got me caught in this good love I really believe that with you, we could, take off, to the, end of, the world Really really found that good love Boy you got me caught in this good love I really believe that with you, I feel, we could, take off, to the, end of, the world, cause we found (Good love, good, good) Oh my god, boy got me feeling like a star In the coupe with the top down bumping Good Love, oh my god They don't really want it with these bars Show off, double up I'm aligned with the eye Heart signs in the air, make ’em dance to this It's the queen in the house, I'm advanced for this For your lighthouse, Imma buy some land for this Lay sand, plant trees, got a plan for this, ya heard Boy you had me from the beginning yeah Can’t deny we fell in love like shooting stars We were young, we were gifted Can't hold us down, we stay uplifted We were Gods, they can't mess with And we both knew that we were blessed with... Good love Boy you got me caught in this good love I really believed that with you, we could, take off, to the, end of, the world Really really found that good love Boy you got me caught in this good love I really believe that with you, I feel, we could, take off, to the, end of,the world , cause we found (Good love, good, good) Boy you got me caught in this good love, good love, good love With you, I feel, we could take off... good love, good love, good love with you, I feel, we could take off.... Fell in love with you (repeat) Can we last forever...

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.