Everything posted by உடையார்
-
எனக்கு பிடித்த வாத்தியங்களின் மொழி
- மாவீரர் புகழ் பாடுவோம்
ஓ வீரனே எங்கள் மண்ணில் ஓ வீரனே ,,,எங்கள் மண்ணில் உன் பெயர் எழுதி வைக்கப்படும் நீ மடியவில்லையேடா உன் கதை முடியவில்லையேடா நீ மடியவில்லையேடா உன் கதை முடியவில்லையேடா ஓ வீரனே எங்கள் மண்ணில் உன் பெயர் எழுதி வைக்கப்படும் நீ மடியவில்லையேடா உன் கதை முடியவில்லையேடா விடுதலைப் புலியாய் நீ வாழ்ந்த நாளை வெடி குண்டு நடுவில் நின்ற உன் தோளை விடுதலைப் புலியாய் நீ வாழ்ந்த நாளை வெடி குண்டு நடுவில் நின்ற உன் தோளை அடிநெஞ்சில் நினைப்பவர்கள் ஆயிரம் உண்டு அதோபார் அவர் கையிலும் வெடிகுண்டு அடிநெஞ்சில் நினைப்பவர்கள் ஆயிரம் உண்டு அதோபார் அவர் கையிலும் வெடிகுண்டு நீ மடியவில்லையேடா உன் கதை முடியவில்லையேடா நீ மடியவில்லையேடா உன் கதை முடியவில்லையேடா நீ மடியவில்லையேடா உன் கதை முடியவில்லையேடா நீ மடியவில்லையேடா உன் கதை முடியவில்லையேடா ஓ வீரனே ,,,எங்கள் மண்ணில் உன் பெயர் எழுதி வைக்கப்படும் நீ மடியவில்லையேடா உன் கதை முடியவில்லையேடா நீ மடியவில்லையேடா உன் கதை முடியவில்லையேடா நீ அடைந்த சாவு இங்கே உயிரானது நீ எரிந்த உயிர் விதை பயிரானது நீ அடைந்த சாவு இங்கே உயிரானது நீ எரிந்த உயிர் விதை பயிரானது தீப்பிடித்து எறிந்த முகாம் எரிகின்றது வீரனே உனது முகம் தெரிகின்றது தீப்பிடித்து எறிந்த முகாம் எரிகின்றது வீரனே உனது முகம் தெரிகின்றது ஓ வீரனே ,,,எங்கள் மண்ணில் உன் பெயர் எழுதி வைக்கப்படும் நீ மடியவில்லையேடா உன் கதை முடியவில்லையேடா நீ மடியவில்லையேடா உன் கதை முடியவில்லையேடா காலமெல்லாம் புலிக்குகையில் நீ தங்கினாய் கண் முடி இன்று நீ படமாய்த் தொங்கினாய் காலமெல்லாம் புலிக்குகையில் நீ தங்கினாய் கண் முடி இன்று நீ படமாய்த் தொங்கினாய் பூ மாலை உன் படத்தில் போடடார் பார்ப்போர் போடடவரே நஞ்சு மாலை ஏற்ரார் பார்ப்போர் பூ மாலை உன் படத்தில் போடடார் பார்ப்போர் போடடவரே நஞ்சு மாலை ஏற்ரார் பார்ப்போர் நீ மடியவில்லையேடா உன் கதை முடியவில்லையேடா நீ மடியவில்லையேடா உன் கதை முடியவில்லையேடா ஓ வீரனே ,,,எங்கள் மண்ணில் உன் பெயர் எழுதி வைக்கப்படும் நீ மடியவில்லையேடா உன் கதை முடியவில்லையேடா- மாவீரர் புகழ் பாடுவோம்
மரணித்த வீரனே ஓ மரணித்த வீரனே- இறைவனிடம் கையேந்துங்கள்
சொற்றுணை வேதியன் சோதி வானவன் பொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கைதொழக் கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும் நற்றுணை யாவது நமச்சி வாயவே. பூவினுக் கருங்கலம் பொங்கு தாமரை ஆவினுக் கருங்கல மரனஞ் சாடுதல் கோவினுக் கருங்கலங் கோட்ட மில்லது நாவினுக் கருங்கல நமச்சி வாயவே. விண்ணுற வடுக்கிய விறகின் வெவ்வழல் உண்ணிய புகிலவை யொன்று மில்லையாம் பண்ணிய வுலகினிற் பயின்ற பாவத்தை நண்ணிநின் றறுப்பது நமச்சி வாயவே. இடுக்கண்பட் டிருக்கினு மிரந்தி யாரையும் விடுக்கிற் பிரானென்று வினவுவோ மல்லோம் அடுக்கற்கீழ்க் கிடக்கினு மருளி னாமுற்ற நடுக்கத்தைக் கெடுப்பது நமச்சி வாயவே. வெந்தநீ றருங்கலம் விரதி கட்கெலாம் அந்தணர்க் கருங்கல மருமறை யாறங்கம் திங்களுக் கருங்கலந் திகழு நீண்முடி நங்களுக் கருங்கல நமச்சி வாயவே. சலமிலன் சங்கரன் சார்ந்த வர்க்கலால் நலமில னாடொறு நல்கு வானலன் குலமில ராகிலுங் குலத்துக் கேற்பதோர் நலமிகக் கொடுப்பது நமச்சி வாயவே. வீடினா ருலகினில் விழுமிய தொண்டர்கள் கூடினா ரந்நெறி கூடிச் சென்றலும் ஓடினே னோடிச்சென் றுருவங் காண்டலும் நாடினே னாடிற்று நமச்சி வாயவே. இல்லக விளக்கது விருள்கெ டுப்பது சொல்லக விளக்கது சோதி யுள்ளது பல்லக விளக்கது பலருங் காண்பது நல்லக விளக்கது நமச்சி வாயவே. முன்னெறி யாகிய முதல்வன் முக்கணன் தன்னெறி யேசர ணாத றிண்ணமே அந்நெறி யேசென்றங் கடைந்த வர்க்கெலாம் நன்னெறி யாவது நமச்சி வாயவே. மாப்பிணை தழுவிய மாதொர் பாகத்தன் பூப்பிணை திருந்தடி பொருந்தக் கைதொழ நாப்பிணை தழுவிய நமச்சி வாயப்பத் தேத்தவல் லார்தமக் கிடுக்க ணில்லையே.- இறைவனிடம் கையேந்துங்கள்
கோதையின் திருப்பாவை வாசகன் எம்பாவை கூப்பிடும் குரல்கேட்டு கண்ணன் வந்தான் மாதவர் பெரியாழ்வார் மன்னவர் குலத்தாழ்வார் ஒதியமொழி கேட்டு கண்ணன் வந்தான் (கோதையின் திருப்பாவை) வாரணம் அணியாக வலம்வரும் மணநாளில் மாதவன் வடிவாகக் கண்ணன் வந்தான் மார்கழிப் பனிநாளில் மங்கையர் இளம்தோளில் கார்குழல் வடிவாகக் கண்ணன் வந்தான் ஆவணிப் பொன்னாளில் ரோகிணி நன்னாளில் அஷ்டமிதிதி பார்த்துக் கண்ணன் வந்தான் அந்தியில் இடம்மாறி சந்தியில் முகம்மாறி சிந்தையில் சிலையாகக் கண்ணன் வந்தான் பொன்மகள் பாஞ்சாலி பூந்துகில் தனைகாக்க தென்றலின் வடிவாகக் கண்ணன் வந்தான் போர்முகம் பார்த்தனின் புயங்களைக் காத்திட கீதையின் வடிவாகக் கண்ணன் வந்தான் ஏழைக் குசேலனுக்கு்த் தோழமை தாள்தந்து வாழவைப்பேன் என்று கண்ணன் வந்தான் வாழிய பாடுங்கள் வலம்வந்து தேடுங்கள் வந்துநிற்பான் அந்தக் கண்ணன் என்பான்!- இறைவனிடம் கையேந்துங்கள்
வருவாண்டி தருவாண்டி மலையாண்டி வருவாண்டி தருவாண்டி மலையாண்டி வரம் வேண்டு வருவோர்க்கு அருள்வாண்டி அவன் வரம் வேண்டு வருவோர்க்கு அருள்வாண்டி ஆண்டி வருவாண்டி தருவாண்டி மலையாண்டி பழனி மலையாண்டி சிவனாண்டி மகனாகப் பிறந்தாண்டி அந்த சிவனாண்டி மகனாகப் பிறந்தாண்டி அன்று சினம் கொண்டு மலையேறி அமர்ந்தாண்டி அன்று சினம் கொண்டு மலையேறி அமர்ந்தாண்டி நவலோக மணியாக நின்றாண்டி நவலோக மணியாக நின்றாண்டி என்றும் நடமாடும் துணையாக அமைந்தாண்டி என்றும் நடமாடும் துணையாக அமைந்தாண்டி அவன் தாண்டி வருவாண்டி தருவாண்டி மலையாண்டி பாலாபிஷேகங்கள் கேட்பாண்டி சுவைப் பஞ்சாம்ருதம் தன்னில் குளிப்பாண்டி பாலாபிஷேகங்கள் கேட்பாண்டி சுவைப் பஞ்சாம்ருதம் தன்னில் குளிப்பாண்டி காலாற மலையேற வைப்பாண்டி காலாற மலையேற வைப்பாண்டி கந்தா என்றால் இங்கு வந்தேனென்று கந்தா என்றால் இங்கு வந்தேனென்று சொல்லி வருவாண்டி தருவாண்டி மலையாண்டி சித்தர்கள் சீடர்கள் பல கோடி அவன் செல்வாக்கு எவர்க்கேனும் வருமோடி சித்தர்கள் சீடர்கள் பல கோடி அவன் செல்வாக்கு எவர்க்கேனும் வருமோடி அவன் செல்வாக்கு எவர்க்கேனும் வருமோடி சித்தர்கள் சீடர்கள் பல கோடி அவன் செல்வாக்கு எவர்க்கேனும் வருமோடி பக்தர்கள் தினந்தோறும் பலர் கூடி பக்தர்கள் தினந்தோறும் பலர் கூடி திருப் புகழ்பாடி வருவார்கள் கொண்டாடி திருப் புகழ்பாடி வருவார்கள் கொண்டாடி வருவாண்டி தருவாண்டி மலையாண்டி பழனி மலையாண்டி பழனி மலையாண்டி பழனி மலையாண்டி- தாயக விடுதலையென்ற உயரிய இலட்சியத்திற்காக அயராது உழைத்த இலட்சிய வீரர்கள்
சூரியத் தேவனின் நேரிய கதிர்கள்… நாடுகடந்து ஓடிய வேர்கள் நாடிய விடுதலை தேடிய பேர்கள் சூரியத் தேவனின் நேரிய கதிர்கள் பாரிஸ் நகரின் வீரியப் புலிகள். தாயகம் தாண்டிய வேகத்தின் தடங்கள் தாய்மண் வணங்கிடும் காவியத் திடங்கள் ஓவியமாகிப் பேசிடும் படங்கள் தீவிரமான போராட்ட வடங்கள். பனியின் மழையிலும் பணிகள் தொடர்ந்தவர் – புலி அணிகள் வென்றிட பணபலம் தந்தவர் புலிகள் பெருமை போற்றிட நடந்தவர் தமிழர் மனதில் பதிந்து படர்ந்தவர். ஈழமுரசாகி முழங்கிய தோழர் எரிமலைக் குரலாய் மூசிய வீரர் – எம் ஜீவகானம் இசைத்திட்ட குயில்கள் – எமக்காய் ஜீவனைக் கொடுத்த நிதர்சனக் கவிகள். கிட்டண்ணா வழிதொடர்ந்த சிட்டுக் குருவிகள் – அவர் தொட்ட திசைகளிற் பாய்ந்த அருவிகள். தட்டித் தட்டிப் புடம் போட்ட தங்கங்கள் எட்டும் விடியலின் இலட்சிய நாயகர்கள். உலகத்தின் நோக்கைத் தமிழர்பாற் திருப்பியவர் உரிமைப் போரினது நியாயத்தை விளக்கியவர் தலைவரின் சொல்லுக்கு செயலாய் நின்றவர் மலைபோன்ற துயரிலும் அசராமல் வென்றவர். வசதிகள் துறந்தவர் வாய்ப்புகள் துறந்தவர் – நடு நிசியிலும் பறந்து நேரங்கள் மறந்தவர். சதியினில் விழுந்து வீரச்சாவினை அணைத்தார் – அவர் பதினெட்டாம் ஆண்டு நினைவிலே நடக்கிறோம்… தேசம் நகர்ந்தும் தேசத்திற்காய் வாழும் தேசப் புதல்வரை எம் தேசம் மறக்காது – தமிழத் தேசம் மலர்கையில் தேசிய வீரரிவர் தேசக் காவலராய் தேசத்தை ஒளிரச்செய்வர். கவியாக்கம்:- கலைமகள். https://thesakkatru.com/sooriya-thevanin-neriya-kathirkal/- இறைவனிடம் கையேந்துங்கள்
முருகனைக் கூப்பிட்டு முறையிட்ட பேருக்கு முற்றிய வினை தீருமே! உடல் பற்றிய பிணி ஆறுமே! வாழ்க்கை முற்றிலுமே நலம் பெற்று இனிதுற மெத்த இன்பம் சேருமே!! (அப்பன் முருகனைக் கூப்பிட்டு) குமரனைக் கும்பிட்டுக் கொண்டாடு வோருக்கு குறைகள் யாவும் போகுமே! அவர் குடும்பம் தழைத் தோங்குமே! சூர சமர வேலாயுதன் பக்கத் துணை கொண்டால் சகல பயம் நீங்குமே!! (ஐயன் முருகனைக் கூப்பிட்டு) அறுமுகனை வேண்டி ஆராதனை செய்தால் அருகில் ஓடி வருவான்! அன்பு பெருகி அருள் புரிவான்! அந்தக் கருணை உருவான குருபரன் என்றுமே கைவிடாமல் ஆளுவான்!! (அப்பன் முருகனைக் கூப்பிட்டு) கந்தனை எண்ணியே வந்தனை செய்வோர்க்கு காரியம் கைகூடுமே! பகை மாறி உறவாடுமே! சிவ மைந்தன் அருளாலே மெய்யறிவுண்டாகி மேன்மை உயர்வாகுமே!! (ஐயன் முருகனைக் கூப்பிட்டு) முருகனைக் கூப்பிட்டு... முருகா!!!- இறைவனிடம் கையேந்துங்கள்
ஸ்தோதிரம் செய்வேனே இரட்சகனை - (3) பாத்திரமாக இம்மாத்திரம் கருணை வைத்த பார்த்திபனை யூத கோத்திரனை - என்றும் ஸ்தோதிரம் செய்வேனே இரட்சகனை - (3) அன்னை மரிசுதனை புல்மீது அமிழ்துக் கழுதவனை - (3) முன்னணை மீதுற்ற சின்னக் குமாரனை முன்னுரை நூற்படி இந்நிலத்துற்றோனை ஸ்தோதிரம் செய்வேனே இரட்சகனை - (3) கந்தை பொதிந்தவனை வானோர்களும் வந்தடி பணிபவனை- (3) மந்தையர்கானந்த மாட்சியளித் தோனை வான பரன் என்னும் ஞான குணவானை ஸ்தோதிரம் செய்வேனே இரட்சகனை - (3) செம்பொன்னுருவானைத் தேசிகர்கள் தேடும் குருவானை - (3) அம்பரமேவிய உம்பர் கணத்தோடு அன்பு பெற நின்று பைம்பொன் மலர் துவி ஸ்தோதிரம் செய்வேனே இரட்சகனை - (3)- இறைவனிடம் கையேந்துங்கள்
கண் மலையின் ஆண்டவரை போற்றுவோமே- தாயக விடுதலையென்ற உயரிய இலட்சியத்திற்காக அயராது உழைத்த இலட்சிய வீரர்கள்
தாயக விடுதலையென்ற உயரிய இலட்சியத்திற்காக அயராது உழைத்த இலட்சிய வீரர்கள் தலைமைச் செயலகம், தமிழீழ விடுதலைப்புலிகள், தமிழீழம். 04.11.1996 பாரிஸ் நகரில் உள்ள விடுதலைப்புலிகள் இயக்கத்தின் அனைத்துலகத் தலைமைச் செயலகத்தில் முக்கிய பணியாளர்களாகப் பணிபுரிந்த திரு.கந்தையா பேரின்பநாதன் (நாதன்) திரு. கஜேந்திரன் (கஜன்) ஆகிய எமது உறுப்பினர்கள் இருவர் பகைவனின் சூழ்ச்சியால் படுகொலை செய்யப்பட்ட நிகழ்வை அறிந்து நான் ஆழ்ந்த கவலையும் வேதனையும் அடைகின்றேன். திரு. நாதன் எமது விடுதலை இயக்கத்தின் ஒரு மூத்த உறுப்பினர் நேர்மையும் கண்ணியமும் மிக்கவர். விடுதலை இலட்சியத்தில் அசையாத உறுதி கொண்டவர். நீண்ட காலமாக சர்வதேச நிதி திரட்டும் பெரும் பொறுப்பைச் சுமந்து உலகெங்கும் அலைந்து அயராது உழைத்தவர். கடும் உழைப்பாலும், செயல்திறனாலும் தமிழீழ விடுதலைப் போருக்கு அவர் ஆற்றிய பணி அளப்பரியது. திரு. கஜன் எமது இயக்கத்தின் பரந்துரை செயற்பாட்டாளராகப் பணி புரிந்தவர். தாயக விடுதலையில் ஆழமான பற்றுடையவர். ஈழமுரசு ஆசிரியராகப் பணியாற்றி எமது இலட்சியப் போருக்கு ஆதரவு திரட்டுவதில் அரும் தொண்டு புரிந்தவர். நிதி சேகரிப்பு, பரந்துரை போன்ற முக்கிய சர்வதேசப் பணிகளில் ஈடுபட்டிருந்த இம் முக்கிய பொறுப்பாளர்கள் கொலையுண்டமை எமது இயக்கத்துக்கு மட்டுமன்றி எமது தேசிய விடுதலைப் போராட்டத்திற்கு ஏற்பட்ட பாரிய இழப்பாகும். பறந்து வளர்ந்து உலகெங்கும் கிளை பரப்பி நிற்கும் எமது விடுதலை இயக்கத்தின் சர்வதேசக் கட்டமைப்பை சீர்குலைத்து அனைத்துலக ரீதியாக எமக்கு அணி திரளும் ஆதரவை முறியடிப்பதற்காக சிங்கள இனவாத அரசு தீவிரமாகத் திட்டமிட்டு செயல்பட்டு வருவதானது உலகறிந்த உண்மை. வெளிநாடுகளில் எமது இயக்கத்தை தடைசெய்து, சர்வதேச தமிழ் சமூகத்திடம் இருந்து பெறப்படும் பங்களிப்பை முடக்கி ஈழத்தமிழரின் சுதந்திர இயக்கத்தை நசுக்கிவிட சந்திரிகா (சிங்கள) அரசு பகிரங்கமாகப் பகீரத முயற்சி செய்கின்றது. சிறிலங்கா அரசின் வெளிநாட்டு ராஜதந்திர நடவடிக்கைகள் இந்த நோக்கங்களைக் கொண்டமை என்பது சர்வதேச சமூகத்திற்குத் தெரிந்த விடயம். இந்த இராஜதந்திர முயற்சிகள் பலனளிக்காது போகவே சிறிலங்கா அரசு நாசகார சூழ்ச்சியில் இறங்கியிருக்கின்றது. இந்தச் சூழ்ச்சியின் கோரமான வடிவமாக இந்தக் கொலைகள் நடைபெற்றதென நாம் நம்புகின்றோம். தமிழருக்கு எதிரான சிறிலங்கா ஆட்சியாளரின் அரச பயங்கரவாதம் இப்பொழுது கடல் கடந்து சென்று சர்வதேச அரங்கில் மேடை ஏறியிருக்கின்றது. அரூபகரங்க்களால் எமது அன்புக்குரியவர்கள் அநியாயமாக உயிர் நீத்துள்ளனர். இக்கோழைத்தனமான கொடூரமான செயலின் நோக்குதாரிகள் யார் என்பதை சர்வதேச உலகம் உணர்ந்து கொள்ள வேண்டும். அப்பொழுது தான் சர்வதேச உலகம் உணர்ந்து கொள்ள வேண்டும். அப்பொழுது தான் சர்வதேச சட்டங்களையும் மனித உரிமைகளையும் மீறும் பயங்கரவாதிகள் யார் என்ற உண்மை உலகிற்குப் புலனாகும். எதிரியின் கையாலாகாத்தனத்தின் அதிட்டமான வெளிப்பாடாகவே நாம் இந்தப் படுகொலைகளைக் கருதுகின்றோம். எமது போராட்டத்திற்கு ஆதரவு நல்கும் உலகத் தமிழ் சமூகத்திற்கு விடுக்கப்பட்ட ஒரு சவால் இது. எதிரியின் இச் சவாலை துணிவுடன் எதிர்கொண்டு தாயாக விடுதலைக்கு தொடர்ந்தும் உறுதியுடன் பணியாற்றுமாறு உலகத் தமிழர்களை நான் வேண்டுகின்றேன். மிகவும் சோதனையான இக்காலகட்டத்தில் நெஞ்சத்தை உலுக்கும் வேதனைகளையும் நாம் சுமந்து நின்று மிகவும் நிதானமாக மிகவும் விழிப்பாக உறுதி தளராது எமது இலட்சியப் பணியைத் தொடர வேண்டும். தாயக விடுதலையென்ற உயரிய இலட்சியத்துக்காக அயராது உழைத்து தமது இன்னுயிரை அர்ப்பணித்த இலட்சிய வீரர்களுக்கு எனது இதய அஞ்சலியைச் செலுத்திக் கொள்கிறேன். “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்” வே. பிரபாகரன் தலைவர். தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழீழம். https://thesakkatru.com/ideal-soldiers-who-worked-tirelessly-for-the-lofty-goal-of-homeland-liberation/- கடற்கரும்புலி லெப். கேணல் அமுதசுரபி
கடற்கரும்புலி லெப். கேணல் அமுதசுரபி எம் மனங்களோடு கலந்து போன கடற்புலி மகளிர் துணைத்தளபதி, கடற்கரும்புலி லெப். கேணல் அமுதசுரபி. தாயகத்தைக் காப்பதற்காய் கனத்த மடிகளாய் கரையைத் தேட முயலும் படகுகள் இயந்திரப் பிழைகளால் வேகம் குறைய, தொடரணியாய் எம் கடற்பரப்பில் நகரும் எதிரிகளோடு மாட்டுப்பட வேண்டிவரும் பொழுதுகளில், அல்பாவின் குரல் உயர் அலை வரிசைச் சாதனத்தில் ஒலிக்க நம்புவோம் நாங்கள் எங்கள் கரை தூரத்தில் இல்லை என்று. “இந்த வாறன். இந்தா வாறன்” உயர் அலை வரிசைத்தாளத்தில் எங்களுக்கு நம்பிக்கையூட்டி, “விடாமல் அடியுங்கோ” என்று கட்டடையிட்டு எங்களின் படகுகளுக்கு தனது படகைக் கொண்டு வந்து காப்பிட்டு, பகைக் கலத்தோடு சண்டை பிடித்து எங்களுக்கு இழப்புகளின்றி கரையேற்றிய அந்த செயல்காரியின் துணிச்சலை வார்த்தைகளுக்குள் அடக்கிவிட முடியாது. சண்டைகளைப் போலத்தான் அல்பா நிர்வாகத்திலும் தனக்கென ஒரு அத்தியாயத்தை உருவாக்கிக் கொண்டிருந்தவள். இயல்பாகவே பெண்கள் என்றால் சமூகத்தில் அவர்களுக்கென்று ஓர் பதிவிருந்தது. அதை அவர்கள் மீறுவதைத் தடுக்குமுகமாக பல கருத்துக்கள் ஒரு திராளாய் உருவாக்கப்பட்டும் இருந்தது. காலகாலமாய் அந்தச் சூழலிற்குள் வாழ்ந்தவர்கள் அக்கட்டுடைத்து வெளிவரும் போது சில தயக்கங்களும் அவர்கள் கூடவே வந்து விட கடலிலும் அதே நிலைதான். தலைவர் அவர்களின் ஆழ் நுண்ணிய பார்வையால் உருவாக்கப்பட்ட கடற்புலி மகளீர் அணியின் செயற்பாடுகள் விரிவு படுத்தபடுகின்றன. ஆனால் அதே வேளை எம்மில் பலர் “பெண்கள் கடலில் இயந்திரத் திருத்தினராக போக முடியாது” எனக் கூறப்போனவர்களும் கடலிற்குப் புதியவர்கள் என்பதனால் திறமையாகச் செயற்பட முடியாமல் போக, இக் கூற்று எல்லோரிலும் படிய முயற்சித்துக் கொண்டிருக்க அல்பா விடவில்லை. சூசை அண்ணாவோடு கதைத்து அவர்கள் எதில் தெளிவில்லாமல் இருக்கிறார்களோ அதை வகுப்புக்கள் மூலமாகத் தெளிவாக்கி, திரும்பவும் அவர்களைக் கடலில் இறக்கி தன்னோடும் கூட்டிக் கொண்டுபோய் பெண்களால் எதுவும் சாதிக்க முடியும் என்ற உண்மையை உணரவைக்கும்வரை அல்பா ஓய்ந்ததேயில்லை. இன்று திறமை மிக்கவர்களாகவும் அனுபவம் வாய்ந்தவர்களுமான பல இயந்திர திருத்துனர்களாக பெண் போராளிகள், “அல்பாக்கா இருந்திருந்தால் நாங்கள் இன்னும் எவ்வளவு சாதிச்சிருப்பம்” என்று சொல்லுமளவிற்கு அல்பா அவர்களோடு வாழ்ந்திருக்கிறாள். “அல்பாக்கா ஆசைப்படுகிற மாதிரி எல்லா நிலைகளிலும் நாங்கள் கடலில் வளரவேணும்.” கண்களில் நீர் தேங்க கடலில் செயல்களினூடே வளர்ந்து வரும் இளைய போராளியின் குரலிது. இந்தக் காலம் அமது தலைவர் அவர்களால் நல்லெண்ண அடிப்படையில் ஒருதலைப் பட்ச்சமான யுத்த நிறுத்தம் நடைமுறைப் படுத்தப்பட்டு இருந்தது. பகைவனைப் போலவே எமது தேவைகளும் உள்ளதால் நாங்களும் கடலோடிக் கொண்ருந்தோம். முல்லைத் தீவியிற்குயரே எதிரியின் டோறாவிற்கு எதிரே எங்களது விநியோகப் படகுகள் மாட்டுப்பட்டு விட்டன. நாங்கள் யுத்த நிறுத்தத்தை நடைமுறைப் படுத்திய போது அரச படைகள் எங்களைத் தாக்கினால் எங்களால் முறியடிப்புத் தாக்குதல் மேற்கொள்ளப்டும் என்றும் அறிக்கை விடப்பட்டிருந்தது. எங்களின் பாதை வழியே எங்களது படகுகள் வரமுற்பட்டுக் கொண்டிருந்தன. பகைக் கலங்கள் விடவில்லை. கலைத்துக் கலைத்துச் சுட்டன. முறியடிப்புத் நடாத்தத் தொடங்கினோம். முறையான போடு, ஒரு டோறா தாண்டு மற்றைய டோறாவை எதிரி கட்டியிழுத்துக் கொண்டு போனான் தாண்டு போகுமளவிற்கு. இந்தச் சண்டையில் அல்பா நின்றாள். எங்களது படகுகளைக் கரைக்கு வரவிடாமல் வரித்துக் கட்டிக் கொண்டு நின்ற எதிரிக்கு, இது எங்கள் கடல் என்று சொல்லாமல் செயலில்க் காட்டியவாறு: “அமுதசுரபி தன்னம்பிக்கைக்கு எடுத்துக் காட்டு. அவருக்கு எந்த வேலையைக் கொடுத்தாலும் சிக்கலில்லாமல் நிறைவேற்றிப் போடுவார்.” அமுதசுரபியைப் பற்றி கடற்புலிகளின் மகளீர் விசேட தளபதி விடுதலையின் மனப்பதிவிது. முல்லைத்தீவிற்குயர நடந்த சண்டையொன்று அல்பாவின் சண்டை ஆளுமைகளாத் தெளிவாக இனங்காட்டியது. சிக்கலான அந்தச் சண்டையில் கூட அல்பா நிதானமாகச் செயற்பட்டு, பாரிய இழப்புக்கள் ஏற்படாமல்ச் செய்தவர். விழுப்புண்ணடைந்த பின்பும் கூட, போராளிகளைப் பத்திரமாகக் கரையேற்றியவள். அல்பாவின் கடற் சமர்க் களங்கள் எப்படி விரிவடைந்தனவோ அதைப் போலத்தான் அவளது ஆளுமைகளும் புத்துயிர்ப்பாகிக் கொண்டிருந்தன. எங்களது கடற்பலத்தையும் யாழ். குடாநாட்டிற்கான அச்சுறுத்தலையும் ஏற்படுத்தியம்பும் களமாக பருத்தித்துறைக்குயர ‘பிறைற் ஓவ் சவுத்’ என்ற கப்பலை வழிமறிக்கும் சண்டை திட்டமிடப்பட்டது. இங்கும் அல்பா நின்றாள். ஒழுங்காக விழுப்புண் மாறாத நிலையிலும் கூட சண்டை பிடிக்க வேண்டும், சாதிக்க வேண்டும் என்ற துடிப்புடன் இந்தக் களமுனைக்கான பயிற்சி ஆரம்பமாகியிருந்த வேளை பெண் போராளிகளின் சூட்டு வலு காணாது என்ற போது அல்பா அப்போராளிகளோடு ஒன்றாகக் கடலிற்குள் போனாள். இரவு பகல் பாராது ஒன்றாய் நின்று அவர்களை குறி தவறாது சூட்டார்களாய் மாற்றும் மட்டும் ஒழுங்காகச் சாப்பிடவோ நித்திரை கொள்ளவோ குளிக்வோ இல்லை. எங்களைப் பற்றி எல்லா நிலைகளிலும் ஒருவரும் குறை கண்டு பிடிக்கக் கூடாது எனச் சொல்லியே அவர்களை உயிரப்பாக்கினாள். அல்பாவை நாங்கள் ஒருபோதும் பொறுப்பாளராய் கட்டளை அதிகாரியாய் பார்த்ததேயில்லை. எந்தப் பணியில் என்றாலும் தானும் ஒரு ஆளாய் பங்கெடுத்துக் கொண்டேயிருப்பாள். நாள் நேரம் எதற்குயர எத்தனை படகுகள் வழிமறித்து ‘பிறைற் ஒவ் சவுத்’ என்ற கப்பலோடு டோறாவையும் தாக்குவது என்ற திட்டங்களும் விளங்கப்படுத்தப் பட்டு படகுகளும் கடலில் இறக்கப்பட்டாயிற்று. எப்போதும் போலவே அல்பா இங்கு வழிப்பாக இருந்தாள். கண்மை மூடியவாறு படுத்திருக்கும் அல்பா, சாதனங்கள் கூப்பிட்டால் எழும்பிக் கதைப்பாள். சண்டை முடிந்து வந்த பின்புதான் தெரிந்தது அவள் நித்திரை கொள்ளவில்லை என்று. அவள் கண்களை மூடிக் கொண்டு எதிரிப் படகை எப்படித் தாக்கியழிப்பது எனறும், எதிரிப் படகை எப்படி வழி நடத்துவது என்பதைப் பற்றியும்தான் யோசித்துக் கொண்டிருந்ததாகக் கூறினாள். ‘பிறைற் ஒவ் சவுத்’ மயிரிழையில் உயிர் தப்பியது பற்றி அவள் வேதனைப் பட்டாள். டோறா தாண்டது காணாது. அடுதத சண்டையில் இதை விட இன்னும் நிறையச் செய்ய வேணும். இது அவளது கனவு. தான் போய்ப் பிடித்த சண்டைகளின் பிழை சரிகளை ஆராய்ந்து அடுத்த சண்டைக்கு தன்னைத் தயார்படுத்தி விடும் சண்டைக் காரி அவள். கடற்புலிகளின் விசேட தளபதி கேணல் சூசை அவர்கள் அல்பாவைப் பற்றி நினைவுப் பதிவினை எடுத்துரைக்கையில், “அமுதசுரபியைக் கூப்பிட்டு ஒரு வேலையையோ அல்லது ஒரு பொறுப்பையோ எடுத்து நடத்தும்படி கூறினால், அவரால் செய்ய இயலுமென்றால் உடனே ஓமென்று சொல்லிப் பொறுப்பெடுத்து நடத்துவார். அப்படி அந்த வேலை எதுவும் சிக்கல் என்றால் அதற்கான காரணத்தைக் கூறி அதில் தேர்ச்சியடைந்து விட்டு குறுகிய காலத்தினுள்ளே சொன்ன வேலையைப் பொறுப்பெடுத்து திறமையாகச் செய்வார்.” எவ்வளவு அற்புதமான செயலுக்குரிய போராளியை நாங்கள் இழந்து விட்டோம் என்ற உணர்வு எப்போதும் நம் மனங்களை அரித்துக் கொண்டேயிருக்கிறது. வருண கிரண நடவடிக்கையால் பகைவன் கடலை இறுக்கிய காலம். எங்களது கடலாதிக்கத்தை பகைவனுக்கு உணர்த்த நாங்கள் வாய்ப்புப் பார்த்திருந்த வேளை… கடலிலும் நிறம் மாறி உயரக் கடலேறிய நுரை கக்கிக் கொண்டிருந்த காலம். 23-09-2001 முல்லைக் கடலில் எம் தரப்பு வழித்திருந்தது பகைக்கல நகர்வைக் கண்காணத்தவாறு. பொருது களம் தொடங்கி சொற்ப பொழுதுகள்… பகைவனின் வலிமை அகன்று கொள்ள, எமது படகிற்குப் பாரிய சேதம். இயந்திரங்கள் வெடிபட்ட அசைய மறுக்க, படகை; கைவிட வேண்டிய நிலை. எதிரிக்கு படகு என்றால் அது பொருள்தான். ஆனால் அது எங்களுக்கோ உயிர். உணர்வும் சதையும், குருதியுமாய் எம் தோழர், தோழிகள் வாழ்ந்த கருவறை. வாய்ப்பேச்சின்றி எமை அரவணைக்கும் தாய். எப்படி அதை எம் கண்ணெதிரே தீ மூட்ட முடியும். அல்பா துடித்துப் போனாள். எப்பாடு பட்டாவது படகைக் கரைக்குக் கொண்டு போகவேண்டும். எங்களத படகுகளின் எண்ணிக்கையோ ஐந்து விரல்களுக்குள்ளடங்க, அவனது படகோ இரட்டைத் தானத்திலிருந்தது. மனோதிடம் உருக் கொள்ள அல்பாவின் கட்டளைப் படி அவளது படகோடு செயலிழந்த படகு தொடுக்கப்பட்டு அதை அவள் இழுக்கத் தொடங்கினாள். ஏற்கனவே கடல் நிலைமையோ மோசம். இன்னுமொரு படகைக் கட்டியிழுப்பதால் வேகமோ குறைவு. இமைத்துளியில் அண்மிக்கும் எதிரியின் படகைத் திருப்பித்தாக்க தொடுவையைக் கழற்றிவிட்டு அல்பாவின் படகு சண்டை பிடிக்கப் போய்விடும். தூர உதிரிப்படகு வந்து அந்தப் படகை தொடுக்கத் தொடங்க எதிரி கிட்ட வந்து விடுவான். திரும்பவும் போய் அடித்துவிட்டு வந்து படகை நூறு மீற்றர் தொடுத்துக் கொண்டு வந்த பிறகு கிட்ட வாற எதிரிக்குப் போய் நெருப்படி கொடுத்துவிட்டு வந்த அன்று அவ்வளவு இடர் நிறைந்த களத்தில்க் கூட அல்பா பதற்றப்படவில்லை நிதானமாய் கரைக்கு நிலைப்பாட்டை அறிவித்து, அந்தப் படகை கைவிடாமல் கரைக்கு கொண்டுவந்து சேர்க்கும் இறுதிவரை அவள் நிலை குலையவில்லை. ஆனால் அவளது மனத்திண்மை எதிரியின் ரவைக்குப் பொறுக்கவில்லைப் போலும். எங்கிருந்தோ வந்த வயிற்றைக் கிழித்து கொண்டு நின்று போனது. அல்பா இப்போது மருத்துவமனையில். போய் வருபவர்களிடம் எல்லாம் தன் வேதனையைப் புறக்கணித்தவாறு சண்டை நிலைப் பாட்டைப் பற்றிக் கேட்டுக் கொண்டிருந்தாள். “படகுகள் எல்லாம் கரைக்கு வந்திட்டுதோ…? படகில் நிக்கிற ஆருக்கும் என்ன பிரச்சினையோ…?” இது தான் அல்பாவின் இறுத்திக் கணங்கள் வரை ஒலித்துக் கொண்டிருந்தது. மாதம் ஒன்றானது மருத்துவ உலகிற்குச் சவால் விட்டாவாறு அல்பா. நாங்கள் போகும் போது புன்னகை உதிர்க்கும் அல்பாவிற்கு இனி ஒரு பிரச்சினையும் இல்லை என்று நாங்கள் நம்பினோம். அவள் காயம் மாறி அவள் இல்லாது நடந்த சண்டையின் சரி பிழைகள் கதைக்க அடுத்த கட்ட மகளீரின் வளர்ச்சி பற்றி திட்டம் போட, புதியவர்களைப்; படகில் ஏற்றுவது பற்றி விதாதிக்க, துணைத் தளபதியாய் பொறுப்பேற்கப் போகும் அல்பாவை வாழ்த்தவென பல மனங்கள் தங்களிற்குள்ளேயே பல சிந்தனைத் துளிகளை வைத்திருக்க எதையும் கேட்காமல், எம் கனவுச் சிறகுகளைப் பிடுங்கியவாறு அந்தச் செய்தி 26-10-2001 அன்று எம் செவிகளுக்குள்ளே அறைந்தது. அல்பா, எங்களது கடற்புலி மகளீர் பிரிவின் வாடை வெள்ளியாய், காலமெல்லாம் பலரை வளர்த்தெடுக்கும் தளபதியாய், ஆளுமையானதொரு கட்டளை அதிகாரியாய் உலாவி எம் சுமைகளுக்குத் தோள் கொடுப்பாயெனக் காந்திருந்த நீயோ கடற்கரும்புலி லெப்.கேணல் அமுதசுரபியாக எம் மனங்களோடு கலந்து போனாய். “அமுதசுரபி” பெயர் தாங்கிய ஒரு சண்டைப் படகு தமிழீழ கடற்புலிகள் அணியில் பல வரலாற்றுச் கடற்சமரில் பங்கு பற்றி பல வெற்றிக்கு வழி வகுத்தன பல வீரரின் தியாகத்துடன். “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்” https://thesakkatru.com/black-sea-tiger-lieutenant-colonel-amuthasurabi/- லெப். கேணல் நாதன்
லெப். கேணல் நாதன் லெப். கேணல் நாதன் தூணாக விளங்கிய ஒரு மாவீரன். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் சர்வதேச செயல்பாடுகளுக்கு தூணாக நின்ற ஒரு போராளி. புலம் பெயர் தமிழர் வாழும் பரப்பெங்கும் இயக்கத்தின் செயல்பாடுகளை பரப்பலாக்கி விடுதலைப் போரின் அடிப்படைத் தேவைகளுக்கு தோள் கொடுத்த மாவீரன். 12 ஆண்டுகள் இயக்கத்தின் கால்களாக நின்று ஓடி ஓடி உழைத்த மாவீரன் நாதன். யாழ்ப்பாணம் அரியாலையில் ஒரு நடுத்தர வர்க்க குடும்பத்தில் பிறந்தவன். தாயின் அரவணைப்பில் வாழ்ந்த நாதன் சிங்கள அரச பயங்கரவாத புயல் எம் தேசத்தை சூறையாடிய போது தாயாலும் சகோரராலும் பிரான்சுக்கு அனுப்பப்பட்டவன். அரச பயங்கரவாத புயல் தமிழர் மண்ணில் விதைத்து விட்ட விடுதலை தாகம் நமது நாதன் உயிரிருப்பை பாதித்து விடக்கூடாது என்பதற்காகவே அல்லது தம் கடைக்குட்டி எங்காவது தப்பிப்பிழைத்து உயிரோடு நிம்மதியாக வாழட்டும் என்ற பேராசையினாலோ அந்தத் தாய் தன் மகனை புலம் பெயர வைத்தாள். பிரான்ஸ் நாதனுக்கு நிம்மதியைத் தரவில்லை. தன் இருப்பின் ஆணிவேர்களை மறந்து விட, மறுத்து விட அவன் தயாராக இல்லை. அகதி வாழ்க்கை, அது தந்த அவலம் சமுதாயத்தின் எதிர்காலம் அது பற்றிய அக்கறை என்பன அவனைச் சிந்திக்க வைத்தது. சாதாரண தன் சக மனிதனைப் போல பிரான்சில் வாழ்ந்து உழைத்து அனைத்து அவமானங்களோடும் சமரசம் செய்து கூனிக்குறுகி வெறுமனே உயிர்வாழ்ந்து விட அவன் தயாராக இல்லை. தன்னை இனம் கண்டு தனக்கு இழைக்கப்படும் அநீதியைக் கண்டு போராட துடிக்கும் ஒரு மானிடனாக அவன் வாழவே விரும்பினான். அவனது போராளித்துவம் இந்த எண்ண ஓட்டத்தில் தான் பிறப்பெடுத்தது. அவன் தன்னை தமிழீழத்தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களது தலைமுறையுடன் இணைத்துக் கொண்ட கருத்துத்தளம் இங்கு தான் பிறப்பெடுத்தது. 1985இல் தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரெஞ்சு பணியகத்துடன் நாதன் தன்னை இணைத்துக் கொண்டான். இயகத்தின் அடிப்படைத் தேவையான நிதி சேகரிப்புப் பணியில் தன்னை முழுமையாய் ஈடுபடுத்திக் கொண்டான். இயக்கத்தின் துடிப்பான உறுப்பினரான இனம் காணப்பட்டு இருந்தான். போராட்டம் கூர்மையடையத் தொடங்கிய காலகட்டங்கள் அவை போராட்டத்தின் தேவைகள் மலை போல குவிந்திருக்க நாதன் இறக்கைக் கட்டி எம் மக்கள் வாழும் வீடுகள் தோறும் நிதி சேகரித்தான். 12 ஆண்டுகளின் பிற்பாடும் எங்கள் நாதனிடம் அதே துடிப்பும் அதே ஆர்வமும் கொஞ்சமும் குறையாது நிலைத்திருந்தது. போர்ப்பயணம் அவனைச் செழுமைப்படுத்தியது. கால ஓட்டத்தில் பிரெஞ்சு பணியகத்தின் நிதி சேகரிப்புப் பணிக்கு முழுமையான பொறுப்பாளனாக அவன் நியமிக்கப்பட்டான். இந்திய இராணுவ ஆக்கிரமிப்புக் கால கட்டத்தில் அவன் செயல்பாட்டுப் பரப்பு சர்வதேச ரீதியாக விஸ்தரிக்கப்பட்டது. பல்வேறு நாடுகளிலும் நடாத்தப்பட்டு வந்த போராட்ட நிதி சேகரிப்பு நடவடிக்கைகளை ஊக்குவிக்கவும் வழிகாட்டவும் மேற்பார்வை செய்யவும் வேண்டிய பொறுப்பு நாதனிடம் கொடுக்கப்பட்டது. அவன் சென்ற நாடெங்கும் வெற்றிகளைக் குவித்தான். அவன் கோட்பாடுகள் பேசி நிதி சேகரிப்பவன் அல்லன். யதார்த்தத்தை சொல்லி காசு கேட்பவன். விமானம் குண்டு போட்டால் எமக்கு விமான எதிர்ப்புப்படை தேவை கடலால் அழித்தால் கடல் கப்பல் வேண்டும் என நடைமுறை பிரச்சினைகளையும் தீர்வுகளையும் விளக்கி நிதி சேகரிப்பவன் நாதன். புலம்பெயர்ந்து வாழும் மக்கள் போர்ச்சூழலில் இருந்து பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால் வேறுபட்ட கலாச்சார பொருளாதார வாழ்க்கை அமைப்பில் உயிர்வாழ்வதால் போர்க்குணமும் விழிப்புணர்வும் புலம்பெயர்ந்த மண்ணில் கேள்விக்குறியாக்கப்பட்டன. சிங்கள அடக்குமுறைகளிலிருந்து தன்னினத்தின் வாழ்விடங்களை மீட்டு எதிர்காலத்தைப் பாதுகாக்க வேண்டுமென்ற தர்மாவேசம் புலம்பெயர்ந்த மண்ணின் பொருளாதார கலாச்சார சூழ்நிலையில் மழுங்கடிக்கப்பட்டு வந்தன. இந்தப் பிரச்சினையை கோட்பாட்டு ரீதியாக எதிர்நோக்கும் எமது இயக்க உறுப்பினர்கள் உள்ளனர். நடைமுறை உதாரணங்கள் ஊடாக மக்களுக்கு தெளிபடுத்த வேண்டுமென்று கருத்துக் கொண்டோரும் உள்ளனர். நாதன் நடைமுறைவாதி நடக்கும் விடயங்களை எடுத்துக் கையாளுபவன். அதற்காகப் போராடுமாறு தூண்டுவான். போராட்டத்தில் நிதியென்பது நாடித் துடிப்பு போன்றது என்று வலியுறுத்துவான். அவனது துடிப்பும் ஆர்வமும் பல இளம் உறுப்பினர்களை உற்சாகப்படுத்தியது. நாதன் பாணியில் நிதி சேகரிப்பு என்பது இன்று நாம் இளம் சமுதாயத்தினருக்கு சொல்லிவரும் முன்னுதாரணமாகும். அனைத்துலகச் செயலகத்தின் நிதிப் பொறுப்பாளராக இயக்கத்தின் தலைமைப்பீடத்தினால் நியமிக்கப்பட்ட நாதன் இயக்கத்துக்கு என்ற சுயமான பொருளாதார திட்டங்களை பல்வேறு முனைகளினுடாக முன்னெடுத்தான். இந்தப் பணியில் அவன் பல்வேறு விமர்சனங்களையும் எதிர்ப்புக்களையும் எதிர்கொண்ட போதும் ஈற்றில் தான் வித்திட்ட திட்டங்களிலிருந்து இயக்கத்திற்கு கனி பறித்தே கொடுத்தான். நாதன் தன் வாழ்நாள் பூராகவும் உணர்வுபூர்வமான மனிதனாகவே வாழ்ந்தான். இலகுவாக உணர்ச்சிவசப்படவும் அதே வேளை அதனை இலகுவாக மறந்து விடவும் அவனால் முடியும். எமது செயல்திட்டங்களின் வெற்றிகளை அனைவரிலும் அதிகமாக குதூகலத்துடன் கொண்டாடும் நாதன் அதே போல் தோல்விகளையும் அதிகமான வேதனையுடன் அனுட்டித்தான். தமிழீழ தேசியத் தலைவர் அவர்களை ஆழமாக நேசித்து அவரின் கரங்களைப் பயன்படுத்துவதன் மூலமே நாங்கள் விடுதலையை வென்றெடுக்க முடியுமென அடிக்கடி இடித்துரைப்பான். அவனது சிறப்பு அவன் தன் சக உறுப்பினர் மேல் வைத்திருந்த பாசமும் அக்கறையும் ஆகும். புலம்பெயர்ந்த மண்ணில் இயக்கப்பணிக்காக எம்மோடு இணையும் பலர் பல்வேறு காரணங்களால் இடைக்காலங்களில் தம் சொந்த வாழ்விற்கு திரும்பி விடுவர். இதேவேளை இயக்கத்தில் தொடர்ந்து இயங்கும் உறுப்பினர்கள் இயக்கச் செயல்பாடுகளின் விரிவாக்கம் காரணமாக பல்வேறு பிரிவுகளுக்கும் சென்றுவிட புதிய இளம் உறுப்பினர்களை எடுத்து பயிற்றுவித்தல் வழிநடாத்துதல் என்பன எமது அமைப்பிற்கு ஒரு தொடர்ச்சியான சுமையாகவே இருந்து வந்தது. இந்தப் புதிய உறுப்பினர்களை உற்சாகப்படுத்தவும் வழிகாட்டவும் அவர்களுக்கு பல மூத்த கரங்கள் தேவைப்பட்டன. இதனை வழங்குவதற்கு நாதன் எப்போதும் தயாராகவே இருந்தான். நிதி சேகரிப்பு என்பது இயக்கத்தின் கடினமான அத்தியாவசியமான அதேவேளை மக்கள் மயப்படுத்தப்படும் ஒரு அரசியல்பணி. பல பேருக்கு மக்களிடம் நிதி சேகரித்தல் என்பது வெறுமனே நிதிசேகரித்தல் என்பதுடன் நின்றுவிடும். ஆனால் சிலருக்கு அந்நிதி களத்தில் நிற்கும் எமது போராளிகளின் கைகளில் தவழும் வரை பூர்த்தியடையாது. அந்தச் சிலரில் எங்களது நாதனும் ஒருவனாக இருந்தான். 12 ஆண்டுகால தன் போராட்ட வாழ்வில் அவன் கடும் உழைப்பு என்பதற்கு உதாரணமாக விளங்கினார். எடுத்த பணி முடிக்கும் வரை அவன் வேறுவிடயங்கள் பற்றிச் சிந்தித்ததே கிடையாது. அந்தப் பணி வெற்றிகரமாக பூர்த்தியடையின் அன்று அவனது இயல்பான குழந்தைத்தனம் எம்மத்தில் ஆனந்த தாண்டவமாடும். நாதனின் வழிகாட்டலில் இயக்கத்தின் பல்வேறு சர்வதேச திட்டங்கள் வேர்விட்ட காலத்தில் அவன் படுகொலை செய்யப்பட்டது எமது விடுதலைப் போரின் முன்னால் பாரிய சவாலாகவே அமைந்தது. அவனது செயற்பாட்டு பரப்பும் அதன் வீச்சும் எமது விடுதலைப் போரை சர்வதேச ரீதியாக உந்தித் தள்ளுகையில் அதனால் அச்சமுற்ற எதிரிகள் நடத்தி முடித்த படுகொலை நாதனை உடலால் எம்மிடமிருந்து பிரித்து உணர்வால் எம்மோடு சங்கமிக்கவைத்து விட்டது. ஒரு விடுதலை தாகம் கொண்டு எமது இயக்கத்தின் முழு நேர உறுப்பினராக தன்னை இணைத்துக் கொண்ட நாதன் தமிழீழ தேசிய தலைவர் அவர்களின் வழிகாட்டுதலில் ஒரு முழுமையான போராளியாக செழுமை பெற்று அந்தப் போர் பயணத்தில் தன்னை உடலால் இழந்து விட்டான். அவன் ஏற்றி வைத்த தியாகத் தீ புலம்பெயர்ந்து வாழும் எம் மக்களை அவர்களது எதிர்காலத்துக்கும் சுபீட்சத்துக்குமான விடுதலைப் போரில் பூரணமாக இணைத்தது. விடுதலை என்கின்ற எமது மக்களின் இலட்சியப் பயணத்தின் வெற்றிக்கு அவன் நடந்த பாதைகள் சுவடுகளாகவே ஆழப் பதிந்து நிற்கின்றன. “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்” https://thesakkatru.com/lieutenant-colonel-nathan/- இறைவனிடம் கையேந்துங்கள்
- கப்டன் கஜன்
கப்டன் கஜன் கப்டன் கஜன் ஒரு எழுதுலகப் போராளி. ஒரு முற்போக்கு கவிஞன். 1988ஆம் ஆண்டு இந்திய இராணுவம் அமைதி பணி புரிந்த காலகட்டம். சிங்கள பேரினவாத அரசு குதூகலித்து நிற்க அகில பாரதம் எம்மீது போர் தொடுத்த காலம் அவை அப்போது எமது மக்களின் இந்திய எதிர்பார்ப்புகள் மெல்ல மெல்ல நொருங்கி தமிழர்கள் தம் சொந்த கால்களில் நின்றே விடுதலையை வென்றெடுக்க வேண்டுமென்ற புவிசார் அரசியல் கோட்பாடுகள் புலப்படத் தொடங்கிய நேரம் அவ்வேளையில் எமது விடுதலை இயக்கத்தின் பிரெஞ்சுப் பணியகம் விடுதலை மாலை என்னும் உணர்வுமிக்க கலைநிகழ்வை மக்கள் மத்தியில் அரங்கேற்றியது. அந்த விடுதலை விழாவில் மக்களின் சமகால கேள்விகளையும் சந்தேகங்களையும் உள்வாங்கி இலக்கியம் என்பது நிகழ்வுகளின் பிரதிபலிப்பு என்ற கோட்பாட்டுடன் மேடையேறியது. இவனா நண்பன் என்ற மண் மணம் சுமந்த நாட்டுக்கூத்து. இதில் எம்மேடைகளுக்கு முற்றிலும் புதிதான இளைஞர்கள் பங்கேற்றுக் கொண்டனர். இவர்களுள் ஒருவனாக உள்வந்த ஒரு கவிஞன் அன்று முதல் தன்னை தன் தேசத்தின் விடுதலைச் செயற்பாட்டுடன் இணைத்துக் கொண்டான். ஆம் நாம் எமது இயக்கம் கவிஞனாகவே கயனை இயக்கத்துக்குள் உள்வாங்கியது. இலக்கியச் சிந்தனை விடுதலை தாகம் சமூக பொறுப்புணர்வுமிக்க ஒரு முற்போக்கு கவிஞனாகவே எமது விடுதலை இயக்கம் கயனை உருவாக்கியது. யாழ்ப்பாணம் கோண்டாவிலில் ஒரு நடுத்தர வர்க்க உழைப்பாளர் குடும்பத்தின் தலைமகனாக பிறந்த கயன் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் கல்வி கற்றவன். இனவாத புயல் எம் தேசத்தின் வேலிகளை பிய்த்தெறிந்த போது பெற்றோரின் எதிர்பார்ப்புகளுக்கு மதிப்புக் கொடுக்க வேண்டுமென்ற மரப ரீதியான சமூக நியதியினால் கட்டாயத்தின் நிமித்தம். இந்த மேற்குலகு நோக்கி பயணித்தவன். தன் சகோதரர்களை ஆழமாக நேசித்த அவன் தன் இளமைப் பொழுதுகளை பாரிஸ் நகரத்தின் அடிப்படைத் தொழிலாளர் வர்க்கத்துடன் கலந்தே பணியாற்ற வேண்டிய சூழலுக்குள் தள்ளப்பட்டான். குடும்பப் பாசம் கொண்ட கயன் மௌனமாக இருந்தாலும் அவனுக்குள் எழுந்த விடுதலை தாகம் அவனை நீண்டகாலம் மௌனிக்கவிடவில்லை. தன் குடும்பத்தை கவனித்தவாறு தன் போனாவினால் அடக்குமுறை மீது போர்த் தொடுத்தான். இயக்கத்தின் கலை பண்பாட்டு பிரிவிற்காக கலாச்சாரம் என்கின்ற பத்திரிகையை உருவாக்கி அதன் ஆசிரியனாகவும் சில காலம் பங்கேற்றான். கயன் தன் அனுபவங்களை சரியான கோணத்தினுள் உள்வாங்கி அதனை தன் எண்ணங்களினால் செழுமைப்படுத்தி அவற்றை தன் போனாவினுள் நிரப்பி சமூகத்தின் விழிப்புணர்வுக்கான ஆயுதமாக்கினான். கலாச்சாரம் இதழில் அவன் பெற்ற அனுபவம் பிற்காலத்தில் அவனால் ஈழமுரசு என்னும் வார இதழை உருவாக்க முடிந்தது. இரு ஆண்டுகளுக்கு மேலாக எமது இயக்கத்தின் பகுதி நேர தொண்டனாக இயங்கிய கயன் இயக்கத் தேவைகள் அதிகரித்த போது தன் முழுமையான விடுதலைப் புலி உறுப்பினனாக இணைத்துக் கொண்டான். எமது மூத்த தளபதி கிட்டு அவர்கள் இலண்டனில் குடிகொண்டு அங்கு சர்வதேச தலைமைச் செயலகத்தை வைத்து அனைத்துலக தொடர்பகம் என செயற்பட தொடங்கிய போது அவருக்கு உதவியாக இயங்குவதற்கு பிரெஞ்சு பணியகத்தினால் தேர்ந்தெடுக்கப்பட்டவன் கயன். தளபதி கிட்டுவின் ஆளுமை மிக்க வழிகாட்டல் அனுபவம் நிறைந்த அறிவுரைகள் சிந்தனைமிக்க செயற்பாடுகள் என்பன அவருடன் முழுமையாகப் பணிபுரிந்த எமது இயக்கத் தோழர்களை செழுமைப்படுத்தி நெறிப்படுத்தியது. கயன் தளபதி கிட்டுவின் புலம்பெயர் வாழ்வில் அதிக காலம் அவருடன் வாழ்ந்த இயக்க உறுப்பினர். எம்மைப் போல கிட்டுவிடம் பேச்சுவாங்கி வளர்ந்தவன் கயன். பிற்காலத்தில் கயனின் செயற்பாடுகளில் இந்த அடையாளங்கள் பல்வேறு பரிணாமங்களில் வெளிப்படுத்தப்பட்டதை நாங்கள் கண்டிருக்கின்றோம். ஈழமுரசு வார இதழை உருவாக்கி அதனை புலம்பெயர்வாழ் மக்களின் தகவல் தொடர்பு மற்றும் கலை பண்பாட்டு ஊடகமாக உருமாற்றிய கயனின் எழுத்தாற்றல் இயக்கத்தின் உத்தியோகபூர்வ சர்வதேசப் பதிப்பான களத்தில் மற்றும் எரிமலை மாத இதழ்களில் வெளிப்பட்டது. இயக்க கலை மாலை கலை பண்பாட்டுப் பிரிவினரால் வெளியிடப்பட்ட ஜீவகானங்கள் மற்றும் ஜீவராகங்கள் ஒலிப்பதிவு நாடாக்களில் அவன் பதித்த கவிதை வரிகள் பல்துறைப் பரிமாணங்களைத் தொட்டு நின்றது. அவன் மக்கள் போர் பற்றி பரணி பாடினான். கண்ணோடு ஒரு கனவு என அவன் எழுதிய பாடல் அவனது கவித்துவத்திற்கு ஒரு சான்றாகும். கயன் மக்கள் மொழி புரிந்தவன். சிரிக்கச் சிரிக்க அவனால் கதை சொல்ல முடியும். தன்னோடு இருக்கும் நண்பர்களை உற்சாகப்படுத்தவும் அவர்களுடைய ஆற்றல்களை வெளிக்கொணரவும் அவனால் முடியும் அவனோடு பழகாமல் அவனை மேலோட்டமாகப் பார்த்தவர்கள் அவனை புரிந்துக் கொள்ள சிரமமப்படுவர். ஏனெனில் அவன் மிகுந்த பிரயத்தனம் செய்து தனக்குத் தானே அமைத்து வைத்திருந்த ஒரு தனிமைத் தோற்றம் அப்படியாய் இருந்தது. ஆனால் அந்தப் பிரமையை ஒரு புதிய இயக்க உறுப்பினராய் கூட இலகுவாக உடைத்து விட முடியும். அதனை தடுக்கும் ஆற்றல் கயனிடம் இல்லை. ஏனெனில் தோழமை உணர்வு என்பது அவனால் எதிர்த்து நிற்க முடியாத ஆயுதம். உண்மையான போலித்தனமற்ற கவிஞனாக வாழ்ந்த அவன் எழுதி வைத்த கவிதைகள் அவன் இறப்பால் எமக்கு உருவாக்கிய இடைவெளியை என்றும் ஈடு செய்யும். கயன் என்ற போராளி எம் தேசத்தின் உயர்வுக்காக உலக வரலாறு இருக்கும் வரை பரணி பாடுவான். “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்” https://thesakkatru.com/captain-kajan/- இறைவனிடம் கையேந்துங்கள்
அத்ரிக்னீ...... யா ஹபீபீ (4) யா நபி... அஸ்ஸலாம்.....(4) கண்ணுக்குள் மின்னிடும் பேரொளி ஊற்றே விண்ணுக்குள் உலவிடும் நூரொளிக் கீற்றே மண்ணுக்குள் மலர்ந்திடும் மதீனத்து பூவே எண்ணுக்குள் ஜொலித்திடும் இருதய நிலவே அண்ணலே ஆருயிர் நபியே.... பொன்னுடல் கொண்டிலங்கும் வடிவே..... வண்ணமே வானோங்கும் புகழே..... நன்னயம் சிறந்தோங்கும் குருவே..... சுவனம் சொக்கும் பேரெழிலே சுவனம் சொக்கும் பேரெழிலே தேடுதே எம்விழிகள் ரெண்டுமே ( கண்ணுக்குள்) கானனும் கண்ணாளர் முகத்தை போக்கனும் பூலோக இருளை ஏகனும் ஏகோனின் அருளை வாருமே வற்றாத ஒளியே தீருமே எம் காதல் வலியை தீருமே எம் காதல் வலியை வாடுதே நினைவூறும் மலரே (கண்ணுக்குள்) பாச மலரை பாடி பரிக்க போதிய காதல் இல்லை... நேசம் தாங்கிய காதல் நபியை பாடிட தகுதியில்லை... கோடி கோடி ஆஷிகீன்கள் பாடி உம்மை மகிழ்ந்திடவே!! தேடி தேடி வாடிப்போகும் தேடும் ஆயிரம் உள்ளங்கள்... [வேந்தர் உங்கள் பார்வை போதும் ஏனைய நோய்கள் குணமாகும்.] (2) ஆனந்தம் வாராதோ வாழ்வில் பேரின்பம் தாரீரோ நபியே வையமே வாழ்த்தோதும் நிதியே ஐயமே போக்கனும் பதியே மறுமையில் ஈடேற்றும் கதியே மறுமையில் ஈடேற்றும் கதியே பாடுதே எம் ஆசை மதியே ( கண்ணுக்குள்)- கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
ஏதோ ஒரு பெரிய பிரச்சனையைப்பற்றி சீரியசாக விவாதங்கள் போய்கிட்டிருக்குபோல🤔 மண்டை காயுது, விரைவில் அறிய தாருங்கள்🙏 உங்கள் அறிவிப்பு எங்களை அமைதியாக இருக்க வைத்தால் நன்று, அல்லது போராட்டங்கள் திண்ணையிலும் எல்லா திரிகளிலும் வெடிக்கும்😁- மாவீரர் புகழ் பாடுவோம்
சாவினை தொழுது- இறைவனிடம் கையேந்துங்கள்
சலங்கை கட்டி- இறைவனிடம் கையேந்துங்கள்
மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன் ஒரு மரமானாலும் பழமுதிர்ச் சோலை மரமாவேன் கருங்கல்லானாலும் தணிகை மலையில் கல்லாவேன் பசும் புல்லானாலும் முருகன் அருளால் பூவாவேன்.. நான்... மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன் ஒரு மரமானாலும் பழமுதிர்ச் சோலை மரமாவேன் பொன்னானாலும் வடிவேல் செய்யும் பொன்னாவேன் பனிப் பூவானாலும் சரவணப் பொய்கை பூவாவேன் தமிழ்ப் பேச்சானாலும் திருப்புகழ் விளக்க பேச்சாவேன் மனம் பித்தானாலும் முருகன் அருளால் முத்தாவேன் நான்... மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன் ஒரு மரமானாலும் பழமுதிர்ச் சோலை மரமாவேன சொல்லானாலும் ஓம் என்றொலிக்கும் சொல்லாவேன் பழச்சுவையானாலும் பஞ்சாமிருதச் சுவையாவேன் அருள் உண்டானாலும் வீடும் பெயரும் உண்டாவேன் தனி உயிரானாலும் முருகன் அருளால் பயிராவேன் நான்... மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன் ஒரு மரமானாலும் பழமுதிர்ச் சோலை மரமாவேன் கருங்கல்லானாலும் தணிகை மலையில் கல்லாவேன் பசும் புல்லானாலும் முருகன் அருளால் பூவாவேன்.. நான்... மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன் ஒரு மரமானாலும் பழமுதிர்ச் சோலை மரமாவேன் முருகா.....முருகா.....முருகா..- இறைவனிடம் கையேந்துங்கள்
தித்திக்கும் தேன்பாகும் திகட்டாத தெள்ளமுதும் தீஞ்சுவை ஆகவில்லையே - முருகய்யா தீஞ்சுவை ஆகவில்லையே தித்திக்கும் தேன்பாகும் திகட்டாத தெள்ளமுதும் தீஞ்சுவை ஆகவில்லையே - முருகய்யா தீஞ்சுவை ஆகவில்லையே எத்திக்கும் புகழ் கந்தன் இன்சொல் எழுத்தினைப் போல இன்பம் ஏதும் இல்லையே - குமரய்யா இன்பம் ஏதும் இல்லையே . அத்தரும் ஜவ்வாதும் அள்ளியே பூசிடினும் அங்கம் மணக்கவில்லையே - முருகய்யா அங்கம் மணக்கவில்லையே அத்தரும் ஜவ்வாதும் அள்ளியே பூசிடினும் அங்கம் மணக்கவில்லையே - முருகய்யா அங்கம் மணக்கவில்லையே சித்தம் மணக்கும் செல்வக் குமரன் பெயரினைப் போல சீர் மணம் வேறு இல்லையே - குமரய்யா சீர் மணம் வேறு இல்லையே . முத்தும் இரத்தினமும் முத்திறைப் பசும்பொன்னும் முதற் பொருள் ஆகவில்லையே - முருகய்யா முதற் பொருள் ஆகவில்லையே சத்திய வேல் என்று சாற்றும் மொழியினைப் போல மெய்ப் பொருள் வேறு இல்லையே - குமரய்யா மெய்ப் பொருள் வேறு இல்லையே . எண்ணற்ற தெய்வங்கள் எத்தனை இருந்தாலும் எண்ணத்தில் ஆடவில்லையே - முருகய்யா எண்ணத்தில் ஆடவில்லையே எண்ணற்ற தெய்வங்கள் எத்தனை இருந்தாலும் எண்ணத்தில் ஆடவில்லையே - முருகய்யா எண்ணத்தில் ஆடவில்லையே மண்ணுக்குள் மகிமை பெற்ற மாமலை முருகன் போல் மற்றொரு தெய்வமில்லையே - குமரய்யா மற்றொரு தெய்வமில்லையே . தித்திக்கும் தேன்பாகும் திகட்டாத தெள்ளமுதும் தீஞ்சுவை ஆகவில்லையே - முருகய்யா தீஞ்சுவை ஆகவில்லையே எத்திக்கும் புகழ் கந்தன் இன்சொல் எழுத்தினைப் போல இன்பம் ஏதும் இல்லையே - குமரய்யா இன்பம் ஏதும் இல்லையே தித்திக்கும் தேன்பாகும் திகட்டாத தெள்ளமுதும் தீஞ்சுவை ஆகவில்லையே - முருகய்யா.- இறைவனிடம் கையேந்துங்கள்
சகல கலைகளும் அருளும் சகலகலாவல்லி மாலை- இறைவனிடம் கையேந்துங்கள்
இறைவனின் பலியில் இணைந்திட- இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள் https://thesakkatru.com/- இறைவனிடம் கையேந்துங்கள்
அமைதியின் தெய்வமே - மாவீரர் புகழ் பாடுவோம்
Important Information
By using this site, you agree to our Terms of Use.