Everything posted by உடையார்
-
இறைவனிடம் கையேந்துங்கள்
தொழுது கொள்ளுங்கள் அல்லாஹ்வை
-
இறைவனிடம் கையேந்துங்கள்
குல்ஹு அல்லாஹு அஹது
-
இறைவனிடம் கையேந்துங்கள்
குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா குறை ஒன்றும் இல்லை கண்ணா குறை ஒன்றும் இல்லை கோவிந்தா குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா குறை ஒன்றும் இல்லை கண்ணா குறை ஒன்றும் இல்லை கோவிந்தா கண்ணுக்குத் தெரியாமல் நிற்கின்றாய் கண்ணா கண்ணுக்குத் தெரியாமல் நின்றாலும் எனக்குக் குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா வேண்டியதைத் தந்திட வேங்கடேசன் என்றிருக்க வேண்டியது வேறில்லை மறைமூர்த்தி கண்ணா மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா திரையின்பின் நிற்கின்றாய் கண்ணா கண்ணா திரையின்பின் நிற்கின்றாய் கண்ணா - உன்னை மறையோதும் ஞானியர் மட்டுமே காண்பார் என்றாலும் குறை ஒன்றும் எனக்கில்லை கண்ணா குன்றின்மேல் கல்லாகி நிற்கின்ற வரதா குன்றின்மேல் கல்லாகி நிற்கின்ற வரதா குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கலிநாளுக்கிரங்கி கல்லிலே இறங்கி நிலையாகக் கோவிலில் நிற்கின்றாய் கேசவா கலிநாளுக்கிரங்கி கல்லிலே இறங்கி நிலையாகக் கோவிலில் நிற்கின்றாய் கேசவா குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா யாதும் மறுக்காத மலையப்பா யாதும் மறுக்காத மலையப்பா உன் மார்பில் ஏதும் தர நிற்கும் கருணைக் கடல் அன்னை என்றும் இருந்திட ஏது குறை எனக்கு என்றும் இருந்திட ஏது குறை எனக்கு ஒன்றும் குறையில்லை மறை மூர்த்தி கண்ணா ஒன்றும் குறையில்லை மறை மூர்த்தி கண்ணா மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா
-
இறைவனிடம் கையேந்துங்கள்
என்ன புண்ணியம் செய்தேனோ
-
இறைவனிடம் கையேந்துங்கள்
பழ பழ பழனிமலை
-
இறைவனிடம் கையேந்துங்கள்
விந்தை கிறிஸ்தேசு ராஜா! உந்தன் சிலுவையென் மேன்மை (2) சுந்தரமிகும் இந்த பூவில் எந்த மேன்மைகள் எனக்கிருப்பினும் – விந்தை 1. திரண்ட ஆஸ்தி, உயர்ந்த கல்வி செல்வாக்குகள் எனக்கிருப்பினும் குருசை நோக்கிப் பார்க்க எனக்கு உரிய பெருமைகள் யாவும் அற்பமே – விந்தை 2. உம் குருசே ஆசிக்கெல்லாம் ஊற்றாம் வற்றா ஜீவ நதியாம் துங்க ரத்த ஊற்றில் மூழ்கித் தூய்மையடைந்தே மேன்மையாகினேன் – விந்தை 3. சென்னி, விலா, கை, கானின்று சிந்துதோ துயரோடன்பு, மன்னா இதைப் போன்ற காட்சி எந்நாளிலுமே எங்கும் காணேன் – விந்தை 4. இந்த விந்தை அன்புக்கீடாய் என்ன காணிக்கை ஈந்திடுவேன் எந்த அரும் பொருள் ஈடாகும்? என்னை முற்றிலும் உமக்களிக்கிறேன் – விந்தை
-
இறைவனிடம் கையேந்துங்கள்
சீர் இயேசு நாதனுக்கு ஜெயமங்களம் ஆதி திரியேக நாதனுக்கு சுபமங்களம் பாரேறு நீதனுக்கு பரம பொற்பாதனுக்கு நேரேறு போதனுக்கு நித்திய சங்கீதனுக்கு – சீர் இயேசு ஆதி சரு வேசனுக்கு ஈசனுக்கு மங்களம் அகிலப் பிரகாசனுக்கு நேசனுக்கு மங்களம் நீதிபரன் பாலனுக்கு நித்திய குணாளனுக்கு ஓதும் அனுகூலனுக்கு உயர் மனுவேலனுக்கு – சீர் இயேசு மானாபி மானனுக்கு வானனுக்கு மங்களம் வளர் கலைக் கியானனுக்கு ஞானனுக்கு மங்களம் கானான் நல நேயனுக்குக் கன்னி மரிசெயனுக்கு கோனார் சகாயனுக்கு கூறு பெத்த லேயனுக்கு – சீர் இயேசு பத்து லட்ச ணத்தனுக்குச் சுத்தனுக்கு மங்களம் பரம பதத்தனுக்கு நித்தனுக்கு மங்களம் சத்திய விஸ்தாரனுக்குச் சருவாதி காரனுக்கு பத்தர் உபகாரனுக்குப் பரம குமாரனுக்கு – சீர் இயேசு
-
இறைவனிடம் கையேந்துங்கள்
யா செய்யதீ ஹபீபி | ஸலாம் பாடல்
-
இறைவனிடம் கையேந்துங்கள்
அண்ணல் நபி பொண் முகத்தை
-
இறைவனிடம் கையேந்துங்கள்
மாசம் தைமாசம்
-
இறைவனிடம் கையேந்துங்கள்
ஸ்ரீ சக்ர ராஜ சிம்மாஸனேஸ்வரி
-
இறைவனிடம் கையேந்துங்கள்
சாமகான பிரியே
-
இறைவனிடம் கையேந்துங்கள்
இயேசு என்ற திருநாமத்திற்கு எப்போதுமே மிகத் தோத்திரம் 1. வானிலும் பூவிலும் மேலான நாமம் வல்லமையுள்ள நாமமது தூயர் சொல்லித் துதித்திடும் நாமமது – இயேசு 2. வேதாளம் பாதாளம் யாவையும் ஜெயித்த வீரமுள்ள திரு நாமமது நாமும் வென்றிடுவோம் இந்த நாமத்திலே – இயேசு 3. பாவத்திலே மாலும் பாவியை மீட்கப் பாரினில் வந்த மெய் நாமமது பரலோகத்தில் சேர்க்கும் நாமமது – இயேசு 4. உத்தம பக்தர்கள் போற்றித்துதித்திடும் உன்னத தேவனின் நாமமது உலகெங்கும் ஜொலித்திடும் நாமமது – இயேசு 5. சஞ்சலம் வருத்தம் சோதனை நேரத்தில் தாங்கி நடத்திடும் நாமமது தடைமுற்று மகற்றிடும் நாமமது – இயேசு
-
இறைவனிடம் கையேந்துங்கள்
1. என்னோடிரும், மா நேச கர்த்தரே, வெளிச்சம் மங்கி இருட்டாயிற்றே; மற்றோர் சகாயம் அற்றபோதிலும், நீங்கா ஒத்தாசை நீர், என்னோடிரும். 2. நீர்மேல் குமிழிபோல் என் ஆயுசும், இம்மையின் இன்ப வாழ்வும் நீங்கிடும்; கண் கண்ட யாவும் மாறி வாடிடும்; மாறாத கர்த்தர் நீர், என்னோடிரும். 3. நியாயம் தீர்ப்போராக என்னண்டை வராமல், சாந்தம் தயை கிருபை நிறைந்த மீட்பராக சேர்ந்திடும்; நீர் பாவி நேசரே, என்னோடிரும். 4. நீர் கூடநின்று அருள் புரியும்; பிசாசின் கண்ணிக்கு நான் தப்பவும் என் துணை நீர், என் தஞ்சமாயிரும்; இக்கட்டில் எல்லாம் நீர் என்னோடிரும். 5. நீர் ஆசீர்வதித்தால் கண்ணீர் விடேன்; நீரே என்னோடிருந்தால் அஞ்சிடேன்; சாவே, எங்கே உன் கூரும் ஜெயமும்? நான் உம்மால் வெல்ல நீர் என்னோடிரும். 6. நான் சாகும் அந்தகார நேரத்தில் உம் சிலுவையைக் காட்டும்; சாகையில் விண் ஜோதி வீசி இருள் நீக்கிடும்; வாழ்நாள் சாங்காலிலும் என்னோடிரும்
-
கடற்கரும்புலி கப்டன் சிவகாமி
கடற்கரும்புலி கப்டன் சிவகாமி நெஞ்சை விட்டகலாத நினைவுகளில் என்றும் கடற்கரும்புலி கப்டன் சிவகாமி. அவள் ஒரு ஓட்ட வீராங்கனை. அவள் பங்குபற்றுகின்ற ஓட்டப்போட்டிகள் அனைத்திலுமே பரிசு வாங்காமல் வந்ததில்லை. எந்த நேரமும் கால்கள் நிலத்தில் படாதவாறு துறுதுறுத்தபடி பறந்து திரிவாள். சிவகாமி என்ற போராளி ‘மின்னல்’ என்ற சிறிலங்கா இராணுவ நடவடிக்கையில் மணலாற்றில் வீரச்சாவடைந்ததை நினைவு கூர்ந்து, செல்வி என்ற இவளுடைய இயற்பெயர் ‘சிவகாமி’ ஆனது. இவளும் மேஜர் மதுசாவும் நெருங்கிய தோழிகள். இயக்கத்துக்கு வந்தபின் சிவகாமி தன் போராட்ட வாழ்க்கையில் மதுசாவுடனேயே இருந்தாள். அந்த உறவு; மதுசா திருமலைக் கடலுக்குக் கரும்புலியாகச் சென்ற சமயம் தனக்கும், மதுசாவுக்கும் ஒன்றாக வாய்ப்புக் கிடைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு, அது நிறைவேறாமல் போக, தன்னைவிட்டுப் பிரிந்து போன மதுசாவுக்காய் உள்ளுக்குள் அழுதாலும் மேன்மேலும் உறுதியாய் நின்றது. அவள் பிறந்து வளர்ந்து மீன் குஞ்சுபோல் நீந்தப் பழகிய மயிலிட்டிக் கடற்கரைக்கு ஒரு முறை போய் வந்தது அவளுக்கு மறக்க முடியாத அனுபவம். அடிக்கடி கரையில் நின்றபடி பேய் குடிகொண்ட பூமியாய் தூரத்தே தெரிகின்ற தன் ஊரைச் சுட்டிக்காட்டி ‘நனவிடை தோய்பவள்’ உண்மையாகவே அந்த வாய்ப்புக் கிடைத்த போது அங்கு போய் வந்தாள். எல்லோரிடமும் ‘‘என்ர ஊருக்குப் போய்வந்தனான்’’ என்று கூறிக்கூறி மாய்ந்து போனாள். குழந்தை போல எதையும் சொல்லிக் குதூகலிக்கின்ற பண்பினாலோ என்னவோ, எங்கள் சிவகாமி மனதளவில் ஒரு குழந்தைபோல எல்லோருக்குள்ளும் நிறைந்து போனாள். மேஜர் மதுசா திருமலைக் கடற்பரப்பில் வீரச்சாவடைந்ததை அடுத்து, அந்தக் கடலிலேயே தானும் வீரச்சாவடைய வேண்டும் என்பதை மனதளவில் வரித்துக்கொண்டாள். ‘‘மதுசாக்கா வெடிச்ச கடலிலதான் நானும் போக வேண்டும்’’ என்ற அவளது ஆசை போல, 1995.10.17 அன்று எங்கள் சிவகாமி திருமலையின் ஆழமான கடலலையோடு கரைந்து போனாள். அதன்போது சிறிலங்காக் கடற்படைக்குச் சொந்தமான ஒரு துருப்புக்காவிக் கப்பலும், ஒரு டோராப் படகும், ஒரு தரையிறக்கும் கப்பலும் வெடித்துச் சிதறின. எங்கள் சிவகாமியைப் போல மேலும் மூன்று கரும்புலிகளையும் கடலன்னை தன்னோடு அணைத்துக்கொண்டாள். எங்களுக்குத் தெரியும் திருமலையில் புலிக்கொடி பறக்கும்வரை அந்தக் கடலன்னை தனது பிள்ளைகளைத் தனக்குள் எடுத்துக் கொண்டே இருப்பாள் என்று. அதுவரை எங்கள் கரும்புலிகள் ஒயப்போவதில்லை அந்தக் கடல் அலைகளைப் போலவே. நன்றி: களத்தில் இதழ் 110 (12.06.1996). https://thesakkatru.com/black-sea-tiger-captain-sivagami/
-
இறைவனிடம் கையேந்துங்கள்
தென் பாண்டி சீமையிலே இன்ப தீனை பரப்பியவர்
-
கடற்கரும்புலி கப்டன் கண்ணாளன்
கடற்கரும்புலி கப்டன் கண்ணாளன் கடமை… 2004ம் ஆண்டு 26 ஆம் நாள். ஆழிப்பேரலை அனர்த்தம் நம் மண்ணிலும் பல உயிர்களைக் காவு கொண்டதோடு, பெரும் அழிவுகளையும் ஏற்படுத்தியிருந்தது. இந்த அழிவுக்குள் மட்டக்களப்பு கதிரவெளியைச் சொந்த இடமாகக் கொண்டிருந்த கடற் கரும்புலி கண்ணாளனின் குடும்பமும் சிக்கிவிட்டது. நிலைமையை அறிந்து அவனை அவனது ஊரிற்கு விடுமுறையில் அனுப்பியாயிற்று. அங்கு அவனுக்காக பணிகள் நிறையவே இருந்தது. குடும்பத்தை நிமிர்த்தி, எஞ்சியவர்களுக்கான இருப்பிடம், உணவு, உடை, என அத்தியாவசியமான தேவைகளைக் கவனிப்பதில் இருந்து எல்லமே அவன்தான். வீட்டின் இல்லாமை போhக்க அவன் உழைக்க வேண்டியதாயிற்று… ஆனால், முதன்மையான தாக்குதல் ஒன்றிக்காக பயிற்சித் திட்டங்கள் எல்லாம் நிறைவு செய்த நிலையில் அவன்… ஓர் அளவுகோலில் ‘’பாசம்’’இ ‘‘கடமை’’ என்றை இரண்டையும் நிறுவை செய்தான். அவனது மனச்சாட்சி முன் ‘‘கடமை’’ என்ற பக்கம் தாண்டு கொண்டது. அவன் முடிவெடுத்தான். தன் நிலைமையை அந்தத் தாக்குதல் நடவடிக்கைக்குப் பொறுப்பானவரிடம் சென்று கதைத்தான். ‘‘ நான் அந்த நடவடிக்கையைச் செய்யப் போறன்… இனி இந்த நடவடிக்கைக்காகப் புதுசா ஒருவருக்குப் பயிற்சி கொடுத்து வளர்த்தெடுக்க எவ்வளவு காலம் எடுக்கும்… என்னால இந்த நடவடிக்கையில் எந்தவொரு காலதாமதமும் ஏற்படக்கூடாது… ஆனா… என்ற குடும்பத்த நீங்கள் பார்க்க வேண்டும்… குடும்பத்தின் வறுமை நிலையைக் கண்டபோதும் அவன் தன் இலக்கிலிருந்து பின்வாங்காது தன் கடமையைச் சரிவரச் செய்தான். அவன் வேறுயாருமல்ல காலிமுகத் துறைமுகத்தில் வரலாறு எழுதிய கடற் கரும்புலிகளில் ஒருவரான கடற் கரும்புலி கப்டன் கண்ணாளன்… ‘‘ஈன்ற பசி காண்பான் ஆயினும் செய்யற்க சான்றோர் பழிக்கும் வினை’’ என்ற வள்ளுவன் கூற்றுக்கு எடுத்துக்காட்டான பெரு வீரனாய் கண்ணாளன். நினைவுப்பகிர்வு: பிரமிளா. நன்றி – விடுதலைப் புலிகள் இதழ் (04.09.2008). https://thesakkatru.com/black-sea-tiger-captain-kannalan/
-
இறைவனிடம் கையேந்துங்கள்
கையேந்தி கேளுங்கள் இறைவனிடத்திலே
-
இறைவனிடம் கையேந்துங்கள்
கோதையின் திருப்பாவை வாசகன் எம்பாவை கூப்பிடும் குரல்கேட்டு கண்ணன் வந்தான் மாதவர் பெரியாழ்வார் மன்னவர் குலத்தாழ்வார் ஒதியமொழி கேட்டு கண்ணன் வந்தான் (கோதையின் திருப்பாவை) வாரணம் அணியாக வலம்வரும் மணநாளில் மாதவன் வடிவாகக் கண்ணன் வந்தான் மார்கழிப் பனிநாளில் மங்கையர் இளம்தோளில் கார்குழல் வடிவாகக் கண்ணன் வந்தான் ஆவணிப் பொன்னாளில் ரோகிணி நன்னாளில் அஷ்டமிதிதி பார்த்துக் கண்ணன் வந்தான் அந்தியில் இடம்மாறி சந்தியில் முகம்மாறி சிந்தையில் சிலையாகக் கண்ணன் வந்தான் பொன்மகள் பாஞ்சாலி பூந்துகில் தனைகாக்க தென்றலின் வடிவாகக் கண்ணன் வந்தான் போர்முகம் பார்த்தனின் புயங்களைக் காத்திட கீதையின் வடிவாகக் கண்ணன் வந்தான் ஏழைக் குசேலனுக்கு்த் தோழமை தாள்தந்து வாழவைப்பேன் என்று கண்ணன் வந்தான் வாழிய பாடுங்கள் வலம்வந்து தேடுங்கள் வந்துநிற்பான் அந்தக் கண்ணன் என்பான்!
- இறைவனிடம் கையேந்துங்கள்
-
இறைவனிடம் கையேந்துங்கள்
வேல் முருக பக்தி - என்னப்பா என்னையனே
- இறைவனிடம் கையேந்துங்கள்
- இறைவனிடம் கையேந்துங்கள்
-
இறைவனிடம் கையேந்துங்கள்
கோர சிலுவையிலே
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள் https://thesakkatru.com/