Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உடையார்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by உடையார்

  1. சின்னக் கண்ணன் அழைக்கிறான்! ராதையை, பூங் கோதையை, அவள் மனம் கொண்ட ரகசிய ராகத்தைப் பாடிச் சின்னக் கண்ணன் அழைக்கிறான்! சின்னக் கண்ணன் அழைக்கிறான்! கண்கள் சொல்கின்ற கவிதை இளம் வயதில் எத்தனை கோடி? என்றும் காதலைக் கொண்டாடும் காவியமே புதுமை மலரும் இனிமை! அந்த மயக்கத்தில் இணைவது உறவுக்குப் பெருமை! (சின்னக் கண்ணன்) நெஞ்சில் உள்ளாடும் ராகம் இது தானா கண்மணி ராதா? உன் புன்னகை சொல்லாத அதிசயமா? அழகே இளமை ரதமே! அந்த மாயனின் லீலையில் மயங்குது உலகம்! (சின்னக் கண்ணன்)
  2. சீதக் களபச் செந்தா மரைப்பூம் பாதச் சிலம்பு பலவிசை பாடப் பொன்னரை ஞாணும் பூந்துகில் ஆடையும் வன்னமருங்கில் வளர்ந்தழ கெறிப்பப் பேழை வயிறும் பெரும்பாரக் கோடும் வேழ முகமும் விளங்குசிந் தூரமும் அஞ்சு கரமும் அங்குச பாசமும் நெஞ்சிற் குடிகொண்ட நீல மேனியும் நான்ற வாயும் நாலிரு புயமும் மூன்று கண்ணும் மும்மதச் சுவடும் இரண்டு செவியும் இலங்குபொன் முடியும் திரண்டமுப் புரிநூல் திகழொளி மார்பும் சொற்பதம் கடந்த துரியமெய்ஞ் ஞான அற்புதம் நின்ற கற்பகக் களிறே! முப்பழ நுகரும் மூஷிக வாகன! இப்பொழு தென்னை ஆட்கொள வேண்டித் தாயா யெனக்குத் தானெழுந் தருளி மாயாப் பிறவி மயக்கம் அறுத்துத் திருந்திய முதலைந் தெழுத்தும் தெளிவாய்ப் பொருந்தவே வந்தென் உளந்தனில் புகுந்து குருவடி வாகிக் குவலயந் தன்னில் திருவடி வைத்துத் திறமிது பொருளென வாடா வகைதான் மகிழ்ந்தெனக் கருளிக் கோடா யுதத்தால் கொடுவினை களைந்தே உவட்டா உபதேசம் புகட்டியென் செவியில் தெவிட்டாத ஞானத் தெளிவையும் காட்டி ஐம்புலன் தன்னை அடக்கும் உபாயம் இன்புறு கருணையின் இனிதெனக் கருளிக் கருவிக ளொடுங்கும் கருத்தினை யறிவித்(து) இருவினை தன்னை அறுத்திருள் கடிந்து தலமொரு நான்கும் தந்தெனக் கருளி மலமொரு மூன்றும் மயக்கம் அறுத்தே ஒன்பது வாயில் ஒருமந் திரத்தால் ஐம்புலக் கதவை அடைப்பதும் காட்டி ஆறா தாரத்(து) அங்குச நிலையும் பேறா நிறுத்திப் பேச்சுரை யறுத்தே இடைபிங் கலையின் எழுத்தறி வித்துக் கடையிற் சுழுமுனைக் கபாலமும் காட்டி மூன்றுமண் டலத்தின் முட்டிய தூணின் நான்றெழு பாம்பின் நாவில் உணர்த்திக் குண்டலி யதனிற் கூடிய அசபை விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து மூலா தாரத்தின் மூண்டெழு கனலைக் காலால் எழுப்பும் கருத்தறி வித்தே அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும் குமுத சகாயன் குணத்தையும் கூறி இடைச்சக் கரத்தின் ஈரெட்டு நிலையும் உடல்சக் கரத்தின் உறுப்பையும் காட்டிச் சண்முக தூலமும் சதுர்முக சூக்கமும் எண் முகமாக இனிதெனக் கருளிப் புரியட்ட காயம் புலப்பட எனக்குத் தெரியெட்டு நிலையும் தெரிசனப் படுத்திக் கருத்தினில் கபால வாயில் காட்டி இருத்தி முத்தி யினிதெனக் கருளி என்னை யறிவித்(து) எனக்கருள் செய்து முன்னை வினையின் முதலைக் களைந்து வாக்கும் மனமும் இல்லா மனோலயம் தேக்கியே யென்றன் சிந்தை தெளிவித்(து) இருள்வெளி யிரண்டுக்(கு) ஒன்றிடம் என்ன அருள்தரும் ஆனந்தத்(து) அழுத்தியென் செவியில் எல்லை யில்லா ஆனந் தம்அளித்(து) அல்லல் களைந்தே அருள்வழி காட்டிச் சத்தத்தின் உள்ளே சதாசிவம் காட்டிச் சித்தத்தின் உள்ளே சிவலிங்கம் காட்டி அணுவிற்(கு) அணுவாய் அப்பாலுக்(கு) அப்பாலாய்க் கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி வேடமும் நீறும் விளங்க நிறுத்திக் கூடுமெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி அஞ்சக் கரத்தின் அரும்பொருள் தன்னை நெஞ்சக் கருத்தின் நிலையறி வித்துத் தத்துவ நிலையைத் தந்தெனை யாண்ட வித்தக விநாயக விரைகழல் சரணே!
  3. கொலைகொண்ட போர்விழி கோலோ வாளோ விடமிஞ்சு பாதக வேலோ சேலோ குழைகொண்டு லாவிய மீனோ மானோ ...... எனுமானார் குயில்தங்கு மாமொழி யாலே நேரே யிழைதங்கு நூலிடை யாலே மீதூர் குளிர்கொங்கை மேருவி னாலே நானா ...... விதமாகி உலைகொண்ட மாமெழு காயே மோகா யலையம்பு ராசியி னூடே மூழ்கா வுடல்பஞ்ச பாதக மாயா நோயா ...... லழிவேனோ உறுதண்ட பாசமொ டாரா வாரா எனையண்டி யேநம னார்தூ தானோர் உயிர்கொண்டு போய்விடு நாள்நீ மீதா ...... ளருள்வாயே அலைகொண்ட வாரிதி கோகோ கோகோ எனநின்று வாய்விட வேநீள் மாசூ ரணியஞ்ச ராசனம் வேறாய் நீறா ...... யிடவேதான் அவிர்கின்ற சோதிய வாரார் நீள்சீ ரனலங்கை வேல்விடும் வீரா தீரா அருமந்த ரூபக ஏகா வேறோர் ...... வடிவாகி மலைகொண்ட வேடுவர் கானூ டேபோய் குறமங்கை யாளுட னேமா லாயே மயல்கொண்டு லாயவள் தாள்மீ தேவீழ் ...... குமரேசா மதிமிஞ்சு போதக வேலா ஆளா மகிழ்சம்பு வேதொழு பாதா நாதா மயிலந்தண் மாமலை வாழ்வே வானோர் ...... பெருமாளே.
  4. இயேசுவின் திருநாம கீதம் என் நெஞ்சிலே எந்நாளுமே சங்காக முழங்கிட வேண்டும் 1. நான் பாடும் பாடல் நானிலமெங்கும் எதிரொலித்திட வேண்டும் ஆ..ஆ..ஆ..ஆ...ஆ... உள்ளம் உடைந்தோர் உவகை இழந்தோர் உணர்வு பெற வேண்டும் உவகை பெற வேண்டும் உவகை பெற வேண்டும்... 2. பல கோடிப் புதுமைகள் செய்தது இயேசுவின் இணையில்லாத் திருநாமம் ஆ..ஆ...ஆ..ஆ...ஆ... வாழவைப்பதும் வாழ்விக்கப் போவதும் அருள் தரும் ஒரு நாமம் இயேசுவின் திருநாமம் இயேசுவின் திருநாமம். 3. நல் வானும் மண்ணும் அதில் நிறை யாவும் ஒரு மொழி பேசிடனும் ஆ..ஆ..ஆ..ஆ..ஆ.. வழியாம் வாழ்வாம் இயேசுவின் நாம ஒலிதான் கேட்டிடனும் ஜெகம் எதிர்ஒலித்திடனும் ஜெகம் எதிர்ஒலித்திடனும்...
  5. தமிழகத்து தர்ஹாக்கள் மனதையும் கவரும் பாடல் இது மாஷா அல்லாஹ்🙏
  6. ருசியான முட்டை சேமியா ஒருமுறை செஞ்சு பாருங்க
  7. சிக்கன் பிரியாணி செய்வதற்கு தேவையான பொருட்கள் : பிரியாணி தூள் அன்னாசிப்பூ 2 ஏலக்காய் 12 கிராம்பு 8 பிரியாணி இலை 2 கறுவா சிறிய துண்டு மிளகு 1/2தே.க சின்னசீரகம் 1தே.க பெரிஞ்சீரகம் 1தே.க சிக்கன் மசாலா சிக்கன் 750g பிரியாணி தூள் தேவையான அளவு தனி மிளகாய் தூள் 1தே.க மஞ்சள்த்தூள் 1/4தே.க உப்பு தேவையான அளவு உள்ளி இஞ்சி பேஸ்ட் 1தே.க கட்டியான தயிர் 4மே.க புதினா இலை + கொத்தமல்லி இலை சிறிதளவு தேசிப்புளி பாதி தேங்காய் எண்ணெய் 3மே.க பிரியாணி நெய் 1மே.க தேங்காய் எண்ணெய் 4மே.க பிரியாணி இலை 2 கறுவா சிறிய துண்டு அன்னாசிப்பூ 1 ஏலக்காய் 6 மிளகு 10 கராம்பு 5 பெரிய வெங்காயம் 1 தக்காளி 1 ப.மிளகாய் 3 அரிசி 500g (3கப்) தண்ணீர் 3கப்
  8. 1 கப் சாதம் இருந்தா பூப்போல சாஃப்ட்டான இடியாப்பம் 10 நிமிசத்தில் ரெடி
  9. ஓருரு வாகிய தாரகப் பிரமத்து ஒருவகைத் தோற்றத்து இருமர பெய்தி ஒன்றா யொன்றி யிருவரிற் றோன்றி மூவா தாயினை முருகா மூவா தாயினை முருகா மூவா தாயினை இருபிறப் பாளரின் ஒருவ னாயினை ஓராச் செய்கையின் இருமையின் முன்னாள் நான்முகன் குடுமி இமைப்பினிற் பெயர்த்து மூவரும் போந்து இருதாள் வேண்ட ஒருசிறை விடுத்தனை முருகா ஒருசிறை விடுத்தனை முருகா ஒருசிறை விடுத்தனை ஒருநொடி யதனில் இருசிறை மயிலின் முந்நீ ருடுத்த நானிலம் அஞ்ச நீவலஞ் செய்தனை முருகா நீவலஞ் செய்தனை நால்வகை மருப்பின் மும்மதத் திருசெவி ஒருகைப் பொருப்பன் மகளை வேட்டனை ஒருவகை வடிவினி லிருவகைத் தாகிய மும்மதன் தனக்கு மூத்தோ னாகி நால்வாய் முகத்தோன் ஐந்துகைக் கடவுள் அறுகு சூடிக்கு இளையோ னாயினை ஐந்தெழுத் ததனில் நான்மறை யுணர்த்து முக்கட் சுடரினை இருவினை மருந்துக்கு ஒருகுரு வாயினை முருகா ஒருகுரு வாகினை முருகா ஒருகுரு வாகினை ஒருநாள் உமையிரு முலைப்பா லருந்தி முத்தமிழ் விரகன் நாற்கவி ராஜன் ஐம்புலக் கிழவன் அறுமுகன் இவன் என எழில்தரும் அழகுடன் கழுமலத் துதித்தனை அறுமீன் பயந்தனை ஐந்தரு வேந்தன் நான்மறைத் தோற்றத்து முத்தலைச் செஞ்சூட்டு அன்றி லங்கிரி இருபிள வாக ஒருவேல் விடுத்தனை காவிரி வடகரை மேவிய குருகிரி இருந்த ஆறெழுத்து அந்தணர் அடியிணை போற்ற ஏரகத்து இறைவன் என இருந்தனையே முருகா முருகா முருகா முருகா
  10. உச்சிப்பிள்ளையாரே | விநாயகர் பாடல்
  11. யாரிடம் செல்வோம் இறைவா வாழ்வு தரும்
  12. மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள் https://thesakkatru.com/
  13. அல்ஹம்துலில்லாஹ் தமிழகத்து தர்காகளை பார்த்துவருவேம்
  14. சகல சௌபாக்கியங்களும் தந்திடும் காஞ்சி ஸ்ரீ காமாக்ஷி அம்மன் ஸ்தோத்திரம்-
  15. எடுத்து வருகிறேன் கொடுத்து மகிழ்கிறேன்
  16. மாலதி-ஈழப் போரரங்கின் துருவ நட்சத்திரம் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் வித்தாகிய விடுதலைப்புலிகளின் பெண் படையணியின் முதல் போராளி மாலதியின் நினைவு நாளையிட்டு, அவரின் தோழி ஒருவரின் நினைவு பதிவுகளை இலக்குடன் பகிர்ந்து கொண்டார். இப்பதிவின் முக்கிய பகுதிகள் இங்கே இலக்கின் வாசகர்களுக்காக பகிரப்படுகிறது. 1986 ஆம் ஆண்டு தாயகப்பகுதி எங்கும் சிறீலங்கா இராணுவம் மிக மோசமான தனது நகர்வுகளை மேற்கொண்டிருந்தது. அப்போது தமிழர்கள் மீதான சிறீலங்கா அரசின் அடக்குமுறைகளுக்கு எதிராக பல இயக்கங்கள் போராட ஆரம்பித்திருந்தன. அந்நேரத்தில் நான் எனது சொந்த இடமான திருகோணமலை மாவட்டத்திலிருந்து இடம்பெயர்ந்து முல்லைத்தீவுப் பகுதிக்கு எனது குடும்பத்தினருடன் வந்து அங்கு ஒரு முகாமில் தங்கியிருந்த போது தமிழீழ விடுதலைப்புலிகளின் அமைப்பில் என்னை இணைத்துக் கொண்டேன். அந்தக் காலப்பகுதியில் இயக்கங்களில் பெண்களும் இணைய ஆரம்பித்திருந்தனர். 1986ஆம் ஆண்டு விடுதலைப்புலிகள் அமைப்பில் இணைந்து கொண்ட பெண்களின் ஒரு குழுவினர் முதன்முதலாக கடல் வழியாக பயிற்சிக்காக இந்தியாவிற்கு அனுப்பப்பட்டனர். அக்குழுவில் நானும் உள்ளடக்கப்பட்டிருந்தேன். கடல் வழியாகச் சென்ற எங்கள் குழுவை தமிழகத்தில் உள்ள மதுரையில் தங்க வைத்தனர். தாயகத்தில் இருந்து பயிற்சிக்காக வந்த மற்றொரு குழுவில் மாலதி வந்திருந்தாள். நாங்களனைவரும் மதுரையில் ஈழ ஆதரவாளர் ஒருவரின் வீட்டில் தங்கியிருந்தோம். மாலதி மிகச் சுறுசுறுப்பும், கலகலப்பும் மிக்கவள். அவள் இருக்கும் இடம் எப்போதும் சிரிப்பின் ஒலியில் மூழ்கியிருக்கும். அவளுக்கு வயதானவர்கள், குழந்தைகள் என்றால் இன்னமும் குதுகலமாகி விடுவாள். சில நாட்களின் பின் நாங்கள் பயிற்சிக்காக வேறு இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டோம். அது பெரிய காட்டுப்பகுதி. அக்காட்டிற்குள் அமைந்துள்ள ஆற்றங்கரையின் அருகிலேயே எமது பயிற்சிக்கான இடம் தெரிவு செய்யப்பட்டிருந்தது. இந்த இடத்தில் பயிற்சி முகாமைத் தயார் செய்வதுதான் எமக்கான முதல் பணியாகவும், பயிற்சியாகவும் இருந்தது. அது மிக கடினமான பணியாகும். நாங்கள் பலதரப்பட்ட மாவட்டங்களில் இருந்து வந்து ஒன்று சேர்ந்திருந்தோம். பயிற்சி முகாம் தயாராகிப் பின் பயிற்சிகள் ஆரம்பிக்கப்பட்டு நாட்கள் மிக வேகமாக உருண்டுகொண்டிருந்தது. ஒரு நாள், பயிற்சியின் போது ஆண்கள் இராணுவத்தினராகவும், பெண்கள் புலிப்படையாகவும் செயற்பட வேண்டும் என்ற கட்டளை எமக்கு வழங்கப்பட்டது. அந்த பயிற்சிக்கு எமக்கு தனித்தனியாகப் புள்ளிகளும் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. நாங்கள் ஒவ்வொருவரும் சித்தியடைந்தே ஆகவேண்டும். அதில் ஆண் போராளிகள் இராணுவத்தினர் போன்று முகாம் அமைத்து இருக்க வேண்டும். பெண் போராளிகள் ஒவ்வொருவரும் அந்த முகாமின் தகவல்களை சேகரிக்க வேண்டும். ஆனால் அந்த இராணுவத்தினரிடம் சிக்கி விடக்கூடாது. பிடிபட்டால் எமக்கு சிறந்த புள்ளிகள் கிடைக்காது. அது சாதாரண பயிற்சி கிடையாது. உண்மையாகவே ஒரு இராணுவ முகாமுக்குள் செல்வது போன்றே தோன்றியது. ஆண் போராளிகள் இராணுவம் போன்று மிகச் சிறப்பாக செயற்பட்டனர். இதில் மாலதிக்கு வேடுவர் வேடம். அவள் வேட்டைக்குச் செல்வது போல் சென்று அந்த இராணுவ முகாம் குறித்த தகவல்களைச் சேகரிக்க வேண்டும். நாம் அனைவரும் மறைமுகமாக அந்த முகாம் குறித்த தகவல்களை பெற்று வந்து விட்டோம். இதில் மாலதி முதல் முயற்சியில் இராணுவத்தினரிடம் பிடிபட்டு விட்டாள். அப்போது அவள், தான் வேட்டைக்குத்தான் வந்தேன் என்று கூறி ஒருவாறு சமாளித்துத் தப்பித்து வந்து விட்டாள். ஆனால் கட்டளைப்படி தகவல் எடுக்காமல் திரும்ப முடியாது. எனவே அவள் மீண்டும் தன் வேடுவ அலங்காரத்தைப் பலப்படுத்திக்கொண்டு இராணுவ முகாமுக்குள் சென்று அந்த முகாமுக்குள் பெண்களை சித்திரவதை செய்து கொண்டிருக்கும் முக்கிய தகவலை எடுத்து வந்துவிட்டாள். ஆனால் எந்த இராணுவத்தினரும் அவளைக் காணவில்லை. அந்தளவுக்கு மிகச்சிறப்பாக அந்த பயிற்சியை முடித்திருந்தாள். அந்த பயிற்சியில் அவளுக்குத்தான் அதிக பாராட்டு. மற்றொரு பயிற்சியில் பற்றைகளுக்குள் ஒரு குழு மறைந்திருக்க வேண்டும், மற்றொரு குழு மறைந்திருப்பவர்களைத் தேடி கண்டுபிடிக்க வேண்டும். ஆனால் மாலதியால் இயல்பாகவே ஒரு இடத்திலேனும் அமைதியாக இருக்க முடியாது. ஏதோ ஒரு பகிடி சொல்லி அனைவரையும் சிரிக்க வைத்துக் கொண்டே இருப்பாள். இந்த பயிற்சியில் அவளின் வாய் சும்மாவே இருக்கவில்லை. அவள் பெருமூச்சு விடுவதே பெரிய சத்தமாக இருக்கும். அதை வைத்தே அவளுடைய குழு கண்டிபிடிக்கப்பட்டு விடும் என்ற பயம் அனைவருக்கும் இருந்தது. இந்த பயிற்சியில் மாலதியுடன் பெண் போராளி ஒருவர் இணைந்திருந்தார். இருவரும் ஒரு புதருக்குள் மறைந்திருந்தனர். அவர்கள் மற்றொரு குழுவால் தேடப்பட்டுக் கொண்டிருந்தனர். இந்த நேரத்தில் மாலதியின் பகிடி வார்த்தைகளையும், அவளின் பெருமூச்சு சத்தத்தையும் அடக்க, அவருடன் பயிற்சியில் இருந்த அந்தப் பெண் போராளி, மாலதியின் காலில் தொடர்ந்து கிள்ளிக்கொண்டே இருந்திருக்கிறாள். அவர் கிள்ளியதில் கோபமும், வலியும் அடைந்த மாலதி, எந்த சத்தமும் போடாமல் தேடுதல் வேட்டை முடியும் வரையில் அமைதியாக அந்தப் போராளியை முறைத்துக்கொண்டிருந்து பயிற்சியை வெற்றியுடன் நிறைவு செய்திருந்தாள். பயிற்சி முடிந்து முகாம் வந்த மாலதி, புதரின் மறைவில் இருக்கும் போது குறித்த அந்தப் போராளி தன்னை கிள்ளியதைக் காட்டினாள். உண்மையிலேயே பாவமாகத்தான் இருந்தது. ஏனெனில் தொடை, கால் பகுதிகள் அவர் கிள்ளியதில் வீங்கிப்போய் இருந்தது. ஆனால் அவள் அதற்கும் ஒரு பகிடி சொல்லி அனைவரையும் சிரிக்க வைத்து விட்டாள். பின்னொருநாள் எமது பயிற்சி முகாமில் வைக்கப்பட்டிருந்த ஆயுதங்களுக்கு ஆபத்து என்ற செய்தி, தலைமைக்கு கிடைத்திருந்தது. அவர்கள் உடனடியாகச் செயற்பட்டு எம் அனைவரையும் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தினர். பயிற்சி முகாம் முழுமையான பாதுகாப்பு வலயத்திற்குள் கொண்டுவரப்பட்டது. ஒரு பதுங்கு குழிக்குள் இருவர் என, பாதுகாப்பு கடமைக்கு அமர்த்தப்பட்டோம். சந்தேகத்திற்கு இடமாக எதுவும் தென்பட்டால் உடனே சுடும்படி கட்டளை பிறப்பிக்கப்பட்டிருந்தது. எம்முடன் ஆண் போராளிகளும் காவல் கடமையில் இருந்தனர். அப்போது, யாரோ ஓடுவது போல் தோன்ற, ஒரு ஆண் போராளி அத்திசை நோக்கி சுட ஆரம்பிக்க, நாமும் எம் துப்பாக்கிகளில் இருந்த ரவைகள் தீரும் வரையில் சுட்டுத் தீர்த்தோம். மறுநாள் காலை –பாரதி மாஸ்ரர், பொன்னம்மான் ஆகியோர் வந்தனர். சிறுகச்சிறுக சேர்த்து பயிற்சிக்காக கொண்டுவரப்பட்ட ரவைகள் தீர்ந்து விட்டன. எம்மிடம் வீணாக ஒரு குண்டும் துப்பாக்கியை விட்டு வெளிவரக்கூடாது என்று அறிவுறுத்தித் தந்திருந்த ரவைகள் அத்தனையும் காடு முழுவதும் சிதறிக்கிடந்தது. ஆனால் அப்போது சந்தேகத்திடமாக எவரும் வரவில்லை. அது எம்முடைய தவறான கணிப்பினால் நடைபெற்ற சம்பவம். இதைக் கண்ட பொன்னம்மான் அதிர்ந்து போனார். அந்தக் காலப்பகுதியில் இயக்கம் ஆயுதங்கள் வாங்குவதற்கு பெரும் சிரமப்பட்டு பணத்தை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து வந்த காலம். எம் நடவடிக்கையினால் பொன்னம்மான் மனமுடைந்து கொட்டிலுக்குச் சென்று படுத்துக்கொண்டார். வெளியில் வரவேயில்லை. நாம் அப்போதுதான் எம் தவறை உணர்ந்து, அழுது மன்னிப்பு கேட்டோம். ஆனால் அது மன்னிக்கக் கூடிய தவறு கிடையாது. மாலதியும், அழுது கொண்டே இருந்தாள். எப்போதும் ஆயுதங்களின் முக்கியத்துவத்தைப்பற்றி கூறிக்கொண்டே இருப்பார் பொன்னம்மான். அவரால்தான் நாம் ஆயுதங்களை பாதுகாக்கவும் நேசிக்கவும் கற்றுக்கொண்டோம். இதில் மாலதி, ஒரு குழந்தையைப்போல துப்பாக்கியைப் பார்த்துக் கொள்வாள். பயிற்சி முடிந்தபின் நாம் தாயகம் அழைத்து வரப்பட்டோம். அது மிகக் கடுமையான கடற்பயணம். மன்னாரில் வந்திறங்கினோம். நாட்டுக்கு வந்த பின் வலிந்து தாக்குதல், பதுங்கித் தாக்குதல் என்று அனைத்து தாக்குதல் நடவடிக்கையிலும் பங்கு கொண்டோம். அவையனைத்தும் வெற்றிச் சண்டைகள்தான். இவ்வாறு தினந்தினம் சண்டைகள் நடந்து கொண்டேயிருக்கும். அதேநேரம் தேசியத் தலைவரின் ஆலோசனைதான் எங்களை முன்நகர்த்தியிருந்தது. எங்களது சின்னச் சின்ன விஷயங்களில் தலைவர் மிகக் கவனம் எடுத்து நடந்து கொள்வார். மக்களுக்கும் பாதிப்பு வரக்கூடாது, போராளிகளுக்கும் இழப்புக்கள் வரக்கூடாது என்பதில் தலைவர் கவனமாக இருந்தார். இலங்கை இராணுவத்தினர் மீது மேற்கொள்ளப்பட்ட முதல் கரும்புலி மில்லர் அண்ணாவின் கரும்புலித் தாக்குதலுக்கு பின்தான் இந்திய – இலங்கை ஒப்பந்தம் வந்தது. அதனடிப்படையில் இந்திய இராணுவம் அமைதிப்படையாக எமது தாயகப்பகுதிக்குள் நுழைந்தது. அவர்களுடனான பேச்சுவார்த்தைகள், ஆயுதக்கையளிப்பு, திலீபனின் உண்ணாவிரதம், திலீபனின் சாவு என நாட்கள் கடந்து இந்திய இராணுவத்துடனான சண்டை தொடங்கியது. அப்போது தலைவர் அனைத்து போராளிகளுடனும் கலந்துரையாடினார். கவனமாக இருக்க வேண்டும் என்று அவர் ஒவ்வொரு போராளிகளுக்கும் சொல்லியிருந்தார். இந்த காலப்பகுதியில் மாலதியின் குழந்தைத்தனம் மாறி அவள் ஒரு பொறுப்பான போராளியாக மாறியிருந்தாள். அவள் தினமும் துப்பாக்கியைச் சுத்தப்படுத்திக் கொண்டே இருப்பாள். தாக்குதலுக்கு எந்த இடைஞ்சலும் வரக்கூடாது என்பதில் அவள் கவனமாக இருந்தாள். இந்திய இராணுவத்தின் தாக்குதல்கள் பல இடங்களில் எதிர்பார்க்கப்பட்டது. இராணுவத்தினர் நாவற்குழியில் இருந்து – கோப்பாய் சந்திக்கு வருவார்களென எதிர்பார்த்து பெண் போராளிகளான நாங்கள் மட்டும் ஒரு அணியாக கோப்பாய்ச் சந்தியில் நிறுத்தப்பட்டோம். நாவற்குழியில் இருந்து கோப்பாய் வரும் பகுதியில் எங்களுடைய 30 பேர் கொண்ட அணி பாதுகாப்பில் ஈடுபட்டிருந்தது. ஒரு அணியில் 15 பேர் என பிரிக்கப்பட்டு, காவற்கடமையில் ஈடுபட்டோம். மாலதி ஒரு அணியில் இருந்தாள். 100 மீட்டர் இடைவெளியில் ஒரு காவல் பதுங்கு குழி என பதுங்குகுழிகள் வீதியின் இரு பக்கங்களிலும் அமைக்கப்பட்டிருந்தது. நாவற்குழியில் இருந்து கோப்பாய் நோக்கி சரக்கு லொறிகள் தினமும் வரும். ஆனால் அன்று வழமைக்கு மாறாக அதிக அளவில் லொறிகள் வந்தது. “இண்டைக்கு நிறைய லொறிகள் வருகிறதே” என கோப்பாய் பகுதிக்குப் பொறுப்பாக இருந்த பொறுப்பாளரிடம் கேட்டபோது, அவர் “இந்த லொறிகளில் ஆமி மறைந்து வந்தாலும் வருவார்கள். அதனால் ஒவ்வொரு லொறியாக செக் பண்ணி அனுப்புங்கோ” என்று கூறினார். இதனால் காவலிலிருக்கும் போராளிகள் அந்த லொறிகளை மறித்துச் சோதனை செய்து அனுப்பிக்கொண்டிருந்தனர். அப்போது அதிகாலை. கஸ்தூரியும், ரஞ்சினியும் காவற்கடமையிலிருந்து விலகும் நேரம் வந்தது. அவர்களை மாற்றிவிட தயாவும், மாலதியும் சென்றிருந்தனர். அந்நேரம் பார்த்து ஒரு வாகனம் வந்தது, அதை கஸ்தூரியும், ரஞ்சியும் மறித்து சோதனை செய்ய முற்படும் போது அதில் இராணுவத்தினர் வந்திருந்தனர். சண்டை தொடங்கியது. மாலதி உடனே பாதுகாப்பு நிலையை எடுத்துக்கொண்டு தாக்குதலைத் தொடுக்க ஆரம்பித்தாள். அவளிலிருந்து 100 மீட்டர் இடைவெளியில் நின்ற நாங்களும் தாக்குதலைத் தொடுக்கின்றோம். இதில் மாலதி கொஞ்சம் பின்னுக்கு ஓடி வந்து நிலையெடுத்து மீண்டும் தாக்கினாள். அது மிகப்பெரும் சண்டையாக இருந்தது. இராணுவம் பெரும் எடுப்பில் தொடர்ச்சியாக வந்துகொண்டே இருந்தது. நாங்களும் எங்களுடைய முழுப்பலத்தையும், பிரயோகித்து தாக்குதலை நடத்திக்கொண்டு இருந்தோம். அனைவரும் பெண் போராளிகள். முதன் முதலாக பெண் போராளிகள் மட்டும் தனித்து ஒரு பெரும் படைக்கு எதிராக செய்த சண்டை அது. அப்போது நன்றாக விடிந்து விட்டது. நாங்கள் யாரும் பின்வாங்கவில்லை. காயப்பட்ட குரல்கள் எங்கள் தரப்பிலும் கேட்டுக்கொண்டிருந்தது, இராணுவத்தின் தரப்பிலும் கேட்டுக்கொண்டிருந்தது. இராணுவத்தில் சிலர், இறந்த தமது சகாக்களின் உடலையும், காயப்பட்டவர்களையும் இழுத்துக்கொண்டு பின்னுக்கு போய்க்கொண்டிருந்தனர். இது அனைத்தையும் பார்த்துக்கொண்டே சண்டையைத் தொடர்ந்து கொண்டிருந்தோம். ஒரு கட்டத்தில் மாலதி காயப்பட்டு விட்டாள். நான் நின்ற பக்கம் இராணுவம் பெரிதாக வரவில்லை. ஆனால் மாலதி நின்ற பக்கத்தால் நிறைய இராணுவத்தினர் வந்து கொண்டிருந்தனர். ஏனெனில் கோப்பாயைப் பிடிப்பதற்கு மாலதி நின்ற பக்கத்தால் முன்னேறுவது தான் இராணுவத்திற்கு இலகுவாக இருந்தது. அதனால் அந்த பகுதியில் கடுமையான தாக்குதலை அவன் தொடுத்துக் கொண்டிருந்தான். இதை அறிந்த நாங்கள், மாலதியின் பகுதிக்குச் செல்லத்தொடங்கியிருந்தோம். அப்போது “நான் காயப்பட்டு விட்டேன்” என்று மாலதி கத்துவது கேட்டது. காயப்பட்ட போராளிகளை எக்காரணம் கொண்டும் விடக்கூடாது என்பது தேசியத் தலைவரின் கட்டளையாகும். அப்போது நாங்கள் மாலதியை பின்னுக்கு கொண்டு வர முயற்சித்தோம். ஆனால் மாலதி “நான் குப்பி கடிக்கப்போகிறேன், என்னால் முடியாது. என்னை நீங்கள் கொண்டு போகமாட்டியள். என்னை விட்டுட்டு என்ர ஆயுதத்தைக்கொண்டு போய் அண்ணாட்ட கொடுங்கோ, என்ன விட்டுட்டு நீங்கள் சண்டைய பிடியுங்கோ” எனத் திரும்பத் திரும்ப உயிர் பிரியும் வரையில் கூறிக்கொண்டே இருந்தாள். அப்போது தலைவரின் கட்டளைப்படி, முன் களமுனைக்கு ஆண்போராளிகள் வந்தார்கள். சண்டை தொடர்ந்தது. நாங்கள் பின்னரங்கிற்கு வந்தோம். ஆனால் கஸ்தூரி, ரஞ்சி, தயா ஆகியவர்களைக் காணவில்லை என்பது எமக்கு அப்போதுதான் தெரிய வந்தது. இருந்தும் எமக்கு அவர்களின் உடல்களும் கிடைக்கவில்லை. காயப்பட்டதாகவும் நாங்கள் அறியவில்லை. அந்தநேரம் மாலதி வீரச்சாவைத் தழுவியிருந்தாள். அவளின் வித்துடல் மட்டும்தான் எம்மிடம் இருந்தது. இந்த சூழலில் அந்த மூவரும் ஒன்று காணாமல் போயிருக்கலாம், அல்லது இராணுவத்தினரால் கடத்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் தலைமையிடம் இருந்ததன் காரணத்தினாலும் வீரச்சாவை உறுதிப்படுத்தும் நிலையில் மாலதியின் வித்துடல் இருந்ததாலும் தமிழீழ விடுதலைப் புலிகளின் பெண் போராளிகளில் முதன் முதலில் வீரச்சாவடைந்த போராளியாக 2ம் லெப்டினன் மாலதி மதிப்பளிக்கப்பட்டு வருகின்றாள். அதே நேரம் கஸ்தூரி, ரஞ்சி, தயா ஆகியோர் மாவீரர் பட்டியலில் பின்னர் இணைக்கப்பட்டனர். பின்னர் மாலதியின் பெயரில் விடுதலைப் புலிகள் மகளிர் படையணியில் ஒரு படைப்பிரிவு உருவாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. மாலதி வீரமுடன் போரிட்டு மடிந்த இந்நாளை தமிழீழ பெண்கள் எழுச்சி நாளாகவும் நினைவுகூரப்படுகின்றது. தமிழர் வரலாற்றில் பெண்கள், போர்க்களத்திற்குச் சென்றதை புறநானூற்றில் பார்த்தோம். பிந்திய மன்னராட்சி காலங்களின் போதும் பெண்கள் போர்க்களம் சென்றிருந்தனர். ஆனால் ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னர் தமிழீழத்தில் ஆயிரக்கணக்கான படைவீரர்களை எதிர்த்து, தடுத்து நிறுத்தி தமிழீழத்துப் பெண்கள் போரிட்டு களத்திலே வீழ்ந்து உலக வரலாற்றின் போர்க்களப்பதிவின் புதிய பக்கத்தைத் திறந்து வைத்தார்கள். ஈழ விடுதலைக்கு தன் உயிரை விதையாக்கிய 2ம் லெப்டினன் மாலதியின் நினைவாக மாலதி படையணி பெரும் பெண்கள் படையை தன்னகத்துள் கொண்டு உருவாக்கம் பெற்று எம் வரலாற்றில் பதிவாகியது. இந்த நேரத்தில், மாலதியின் விடுதலை வேட்கையை எண்ணத்தில் ஏந்தி, தமிழீழப் போரரங்கில் களப்பலியான பல்லாயிரக்கணக்கான வீரப் பெண்மணிகளை மனதில் நிறுத்தி. இன்று ஏற்பட்டுவரும் உலக மாற்றங்களுக்கு ஏற்ப தகவமைத்து எமது உரிமைகளை மீட்டெடுக்க நாம் அனைவரும் அறிவியல் ரீதியில் தயாராக வேண்டும். அதுவே அந்த மாவீர்ர்களுக்கான அஞ்சலியும் கூட. எழுத்து வடிவம் அருணா https://www.ilakku.org/மாலதி-ஈழப்போரரங்கின்-த/

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.