Everything posted by உடையார்
-
இறைவனிடம் கையேந்துங்கள்
எடுத்து வருகிறேன் கொடுத்து மகிழ்கிறேன்
-
இறைவனிடம் கையேந்துங்கள்
புது வானம் புது பூமி
-
முதல் வித்து 2ம் லெப். மாலதி
மாலதி-ஈழப் போரரங்கின் துருவ நட்சத்திரம் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் வித்தாகிய விடுதலைப்புலிகளின் பெண் படையணியின் முதல் போராளி மாலதியின் நினைவு நாளையிட்டு, அவரின் தோழி ஒருவரின் நினைவு பதிவுகளை இலக்குடன் பகிர்ந்து கொண்டார். இப்பதிவின் முக்கிய பகுதிகள் இங்கே இலக்கின் வாசகர்களுக்காக பகிரப்படுகிறது. 1986 ஆம் ஆண்டு தாயகப்பகுதி எங்கும் சிறீலங்கா இராணுவம் மிக மோசமான தனது நகர்வுகளை மேற்கொண்டிருந்தது. அப்போது தமிழர்கள் மீதான சிறீலங்கா அரசின் அடக்குமுறைகளுக்கு எதிராக பல இயக்கங்கள் போராட ஆரம்பித்திருந்தன. அந்நேரத்தில் நான் எனது சொந்த இடமான திருகோணமலை மாவட்டத்திலிருந்து இடம்பெயர்ந்து முல்லைத்தீவுப் பகுதிக்கு எனது குடும்பத்தினருடன் வந்து அங்கு ஒரு முகாமில் தங்கியிருந்த போது தமிழீழ விடுதலைப்புலிகளின் அமைப்பில் என்னை இணைத்துக் கொண்டேன். அந்தக் காலப்பகுதியில் இயக்கங்களில் பெண்களும் இணைய ஆரம்பித்திருந்தனர். 1986ஆம் ஆண்டு விடுதலைப்புலிகள் அமைப்பில் இணைந்து கொண்ட பெண்களின் ஒரு குழுவினர் முதன்முதலாக கடல் வழியாக பயிற்சிக்காக இந்தியாவிற்கு அனுப்பப்பட்டனர். அக்குழுவில் நானும் உள்ளடக்கப்பட்டிருந்தேன். கடல் வழியாகச் சென்ற எங்கள் குழுவை தமிழகத்தில் உள்ள மதுரையில் தங்க வைத்தனர். தாயகத்தில் இருந்து பயிற்சிக்காக வந்த மற்றொரு குழுவில் மாலதி வந்திருந்தாள். நாங்களனைவரும் மதுரையில் ஈழ ஆதரவாளர் ஒருவரின் வீட்டில் தங்கியிருந்தோம். மாலதி மிகச் சுறுசுறுப்பும், கலகலப்பும் மிக்கவள். அவள் இருக்கும் இடம் எப்போதும் சிரிப்பின் ஒலியில் மூழ்கியிருக்கும். அவளுக்கு வயதானவர்கள், குழந்தைகள் என்றால் இன்னமும் குதுகலமாகி விடுவாள். சில நாட்களின் பின் நாங்கள் பயிற்சிக்காக வேறு இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டோம். அது பெரிய காட்டுப்பகுதி. அக்காட்டிற்குள் அமைந்துள்ள ஆற்றங்கரையின் அருகிலேயே எமது பயிற்சிக்கான இடம் தெரிவு செய்யப்பட்டிருந்தது. இந்த இடத்தில் பயிற்சி முகாமைத் தயார் செய்வதுதான் எமக்கான முதல் பணியாகவும், பயிற்சியாகவும் இருந்தது. அது மிக கடினமான பணியாகும். நாங்கள் பலதரப்பட்ட மாவட்டங்களில் இருந்து வந்து ஒன்று சேர்ந்திருந்தோம். பயிற்சி முகாம் தயாராகிப் பின் பயிற்சிகள் ஆரம்பிக்கப்பட்டு நாட்கள் மிக வேகமாக உருண்டுகொண்டிருந்தது. ஒரு நாள், பயிற்சியின் போது ஆண்கள் இராணுவத்தினராகவும், பெண்கள் புலிப்படையாகவும் செயற்பட வேண்டும் என்ற கட்டளை எமக்கு வழங்கப்பட்டது. அந்த பயிற்சிக்கு எமக்கு தனித்தனியாகப் புள்ளிகளும் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. நாங்கள் ஒவ்வொருவரும் சித்தியடைந்தே ஆகவேண்டும். அதில் ஆண் போராளிகள் இராணுவத்தினர் போன்று முகாம் அமைத்து இருக்க வேண்டும். பெண் போராளிகள் ஒவ்வொருவரும் அந்த முகாமின் தகவல்களை சேகரிக்க வேண்டும். ஆனால் அந்த இராணுவத்தினரிடம் சிக்கி விடக்கூடாது. பிடிபட்டால் எமக்கு சிறந்த புள்ளிகள் கிடைக்காது. அது சாதாரண பயிற்சி கிடையாது. உண்மையாகவே ஒரு இராணுவ முகாமுக்குள் செல்வது போன்றே தோன்றியது. ஆண் போராளிகள் இராணுவம் போன்று மிகச் சிறப்பாக செயற்பட்டனர். இதில் மாலதிக்கு வேடுவர் வேடம். அவள் வேட்டைக்குச் செல்வது போல் சென்று அந்த இராணுவ முகாம் குறித்த தகவல்களைச் சேகரிக்க வேண்டும். நாம் அனைவரும் மறைமுகமாக அந்த முகாம் குறித்த தகவல்களை பெற்று வந்து விட்டோம். இதில் மாலதி முதல் முயற்சியில் இராணுவத்தினரிடம் பிடிபட்டு விட்டாள். அப்போது அவள், தான் வேட்டைக்குத்தான் வந்தேன் என்று கூறி ஒருவாறு சமாளித்துத் தப்பித்து வந்து விட்டாள். ஆனால் கட்டளைப்படி தகவல் எடுக்காமல் திரும்ப முடியாது. எனவே அவள் மீண்டும் தன் வேடுவ அலங்காரத்தைப் பலப்படுத்திக்கொண்டு இராணுவ முகாமுக்குள் சென்று அந்த முகாமுக்குள் பெண்களை சித்திரவதை செய்து கொண்டிருக்கும் முக்கிய தகவலை எடுத்து வந்துவிட்டாள். ஆனால் எந்த இராணுவத்தினரும் அவளைக் காணவில்லை. அந்தளவுக்கு மிகச்சிறப்பாக அந்த பயிற்சியை முடித்திருந்தாள். அந்த பயிற்சியில் அவளுக்குத்தான் அதிக பாராட்டு. மற்றொரு பயிற்சியில் பற்றைகளுக்குள் ஒரு குழு மறைந்திருக்க வேண்டும், மற்றொரு குழு மறைந்திருப்பவர்களைத் தேடி கண்டுபிடிக்க வேண்டும். ஆனால் மாலதியால் இயல்பாகவே ஒரு இடத்திலேனும் அமைதியாக இருக்க முடியாது. ஏதோ ஒரு பகிடி சொல்லி அனைவரையும் சிரிக்க வைத்துக் கொண்டே இருப்பாள். இந்த பயிற்சியில் அவளின் வாய் சும்மாவே இருக்கவில்லை. அவள் பெருமூச்சு விடுவதே பெரிய சத்தமாக இருக்கும். அதை வைத்தே அவளுடைய குழு கண்டிபிடிக்கப்பட்டு விடும் என்ற பயம் அனைவருக்கும் இருந்தது. இந்த பயிற்சியில் மாலதியுடன் பெண் போராளி ஒருவர் இணைந்திருந்தார். இருவரும் ஒரு புதருக்குள் மறைந்திருந்தனர். அவர்கள் மற்றொரு குழுவால் தேடப்பட்டுக் கொண்டிருந்தனர். இந்த நேரத்தில் மாலதியின் பகிடி வார்த்தைகளையும், அவளின் பெருமூச்சு சத்தத்தையும் அடக்க, அவருடன் பயிற்சியில் இருந்த அந்தப் பெண் போராளி, மாலதியின் காலில் தொடர்ந்து கிள்ளிக்கொண்டே இருந்திருக்கிறாள். அவர் கிள்ளியதில் கோபமும், வலியும் அடைந்த மாலதி, எந்த சத்தமும் போடாமல் தேடுதல் வேட்டை முடியும் வரையில் அமைதியாக அந்தப் போராளியை முறைத்துக்கொண்டிருந்து பயிற்சியை வெற்றியுடன் நிறைவு செய்திருந்தாள். பயிற்சி முடிந்து முகாம் வந்த மாலதி, புதரின் மறைவில் இருக்கும் போது குறித்த அந்தப் போராளி தன்னை கிள்ளியதைக் காட்டினாள். உண்மையிலேயே பாவமாகத்தான் இருந்தது. ஏனெனில் தொடை, கால் பகுதிகள் அவர் கிள்ளியதில் வீங்கிப்போய் இருந்தது. ஆனால் அவள் அதற்கும் ஒரு பகிடி சொல்லி அனைவரையும் சிரிக்க வைத்து விட்டாள். பின்னொருநாள் எமது பயிற்சி முகாமில் வைக்கப்பட்டிருந்த ஆயுதங்களுக்கு ஆபத்து என்ற செய்தி, தலைமைக்கு கிடைத்திருந்தது. அவர்கள் உடனடியாகச் செயற்பட்டு எம் அனைவரையும் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தினர். பயிற்சி முகாம் முழுமையான பாதுகாப்பு வலயத்திற்குள் கொண்டுவரப்பட்டது. ஒரு பதுங்கு குழிக்குள் இருவர் என, பாதுகாப்பு கடமைக்கு அமர்த்தப்பட்டோம். சந்தேகத்திற்கு இடமாக எதுவும் தென்பட்டால் உடனே சுடும்படி கட்டளை பிறப்பிக்கப்பட்டிருந்தது. எம்முடன் ஆண் போராளிகளும் காவல் கடமையில் இருந்தனர். அப்போது, யாரோ ஓடுவது போல் தோன்ற, ஒரு ஆண் போராளி அத்திசை நோக்கி சுட ஆரம்பிக்க, நாமும் எம் துப்பாக்கிகளில் இருந்த ரவைகள் தீரும் வரையில் சுட்டுத் தீர்த்தோம். மறுநாள் காலை –பாரதி மாஸ்ரர், பொன்னம்மான் ஆகியோர் வந்தனர். சிறுகச்சிறுக சேர்த்து பயிற்சிக்காக கொண்டுவரப்பட்ட ரவைகள் தீர்ந்து விட்டன. எம்மிடம் வீணாக ஒரு குண்டும் துப்பாக்கியை விட்டு வெளிவரக்கூடாது என்று அறிவுறுத்தித் தந்திருந்த ரவைகள் அத்தனையும் காடு முழுவதும் சிதறிக்கிடந்தது. ஆனால் அப்போது சந்தேகத்திடமாக எவரும் வரவில்லை. அது எம்முடைய தவறான கணிப்பினால் நடைபெற்ற சம்பவம். இதைக் கண்ட பொன்னம்மான் அதிர்ந்து போனார். அந்தக் காலப்பகுதியில் இயக்கம் ஆயுதங்கள் வாங்குவதற்கு பெரும் சிரமப்பட்டு பணத்தை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து வந்த காலம். எம் நடவடிக்கையினால் பொன்னம்மான் மனமுடைந்து கொட்டிலுக்குச் சென்று படுத்துக்கொண்டார். வெளியில் வரவேயில்லை. நாம் அப்போதுதான் எம் தவறை உணர்ந்து, அழுது மன்னிப்பு கேட்டோம். ஆனால் அது மன்னிக்கக் கூடிய தவறு கிடையாது. மாலதியும், அழுது கொண்டே இருந்தாள். எப்போதும் ஆயுதங்களின் முக்கியத்துவத்தைப்பற்றி கூறிக்கொண்டே இருப்பார் பொன்னம்மான். அவரால்தான் நாம் ஆயுதங்களை பாதுகாக்கவும் நேசிக்கவும் கற்றுக்கொண்டோம். இதில் மாலதி, ஒரு குழந்தையைப்போல துப்பாக்கியைப் பார்த்துக் கொள்வாள். பயிற்சி முடிந்தபின் நாம் தாயகம் அழைத்து வரப்பட்டோம். அது மிகக் கடுமையான கடற்பயணம். மன்னாரில் வந்திறங்கினோம். நாட்டுக்கு வந்த பின் வலிந்து தாக்குதல், பதுங்கித் தாக்குதல் என்று அனைத்து தாக்குதல் நடவடிக்கையிலும் பங்கு கொண்டோம். அவையனைத்தும் வெற்றிச் சண்டைகள்தான். இவ்வாறு தினந்தினம் சண்டைகள் நடந்து கொண்டேயிருக்கும். அதேநேரம் தேசியத் தலைவரின் ஆலோசனைதான் எங்களை முன்நகர்த்தியிருந்தது. எங்களது சின்னச் சின்ன விஷயங்களில் தலைவர் மிகக் கவனம் எடுத்து நடந்து கொள்வார். மக்களுக்கும் பாதிப்பு வரக்கூடாது, போராளிகளுக்கும் இழப்புக்கள் வரக்கூடாது என்பதில் தலைவர் கவனமாக இருந்தார். இலங்கை இராணுவத்தினர் மீது மேற்கொள்ளப்பட்ட முதல் கரும்புலி மில்லர் அண்ணாவின் கரும்புலித் தாக்குதலுக்கு பின்தான் இந்திய – இலங்கை ஒப்பந்தம் வந்தது. அதனடிப்படையில் இந்திய இராணுவம் அமைதிப்படையாக எமது தாயகப்பகுதிக்குள் நுழைந்தது. அவர்களுடனான பேச்சுவார்த்தைகள், ஆயுதக்கையளிப்பு, திலீபனின் உண்ணாவிரதம், திலீபனின் சாவு என நாட்கள் கடந்து இந்திய இராணுவத்துடனான சண்டை தொடங்கியது. அப்போது தலைவர் அனைத்து போராளிகளுடனும் கலந்துரையாடினார். கவனமாக இருக்க வேண்டும் என்று அவர் ஒவ்வொரு போராளிகளுக்கும் சொல்லியிருந்தார். இந்த காலப்பகுதியில் மாலதியின் குழந்தைத்தனம் மாறி அவள் ஒரு பொறுப்பான போராளியாக மாறியிருந்தாள். அவள் தினமும் துப்பாக்கியைச் சுத்தப்படுத்திக் கொண்டே இருப்பாள். தாக்குதலுக்கு எந்த இடைஞ்சலும் வரக்கூடாது என்பதில் அவள் கவனமாக இருந்தாள். இந்திய இராணுவத்தின் தாக்குதல்கள் பல இடங்களில் எதிர்பார்க்கப்பட்டது. இராணுவத்தினர் நாவற்குழியில் இருந்து – கோப்பாய் சந்திக்கு வருவார்களென எதிர்பார்த்து பெண் போராளிகளான நாங்கள் மட்டும் ஒரு அணியாக கோப்பாய்ச் சந்தியில் நிறுத்தப்பட்டோம். நாவற்குழியில் இருந்து கோப்பாய் வரும் பகுதியில் எங்களுடைய 30 பேர் கொண்ட அணி பாதுகாப்பில் ஈடுபட்டிருந்தது. ஒரு அணியில் 15 பேர் என பிரிக்கப்பட்டு, காவற்கடமையில் ஈடுபட்டோம். மாலதி ஒரு அணியில் இருந்தாள். 100 மீட்டர் இடைவெளியில் ஒரு காவல் பதுங்கு குழி என பதுங்குகுழிகள் வீதியின் இரு பக்கங்களிலும் அமைக்கப்பட்டிருந்தது. நாவற்குழியில் இருந்து கோப்பாய் நோக்கி சரக்கு லொறிகள் தினமும் வரும். ஆனால் அன்று வழமைக்கு மாறாக அதிக அளவில் லொறிகள் வந்தது. “இண்டைக்கு நிறைய லொறிகள் வருகிறதே” என கோப்பாய் பகுதிக்குப் பொறுப்பாக இருந்த பொறுப்பாளரிடம் கேட்டபோது, அவர் “இந்த லொறிகளில் ஆமி மறைந்து வந்தாலும் வருவார்கள். அதனால் ஒவ்வொரு லொறியாக செக் பண்ணி அனுப்புங்கோ” என்று கூறினார். இதனால் காவலிலிருக்கும் போராளிகள் அந்த லொறிகளை மறித்துச் சோதனை செய்து அனுப்பிக்கொண்டிருந்தனர். அப்போது அதிகாலை. கஸ்தூரியும், ரஞ்சினியும் காவற்கடமையிலிருந்து விலகும் நேரம் வந்தது. அவர்களை மாற்றிவிட தயாவும், மாலதியும் சென்றிருந்தனர். அந்நேரம் பார்த்து ஒரு வாகனம் வந்தது, அதை கஸ்தூரியும், ரஞ்சியும் மறித்து சோதனை செய்ய முற்படும் போது அதில் இராணுவத்தினர் வந்திருந்தனர். சண்டை தொடங்கியது. மாலதி உடனே பாதுகாப்பு நிலையை எடுத்துக்கொண்டு தாக்குதலைத் தொடுக்க ஆரம்பித்தாள். அவளிலிருந்து 100 மீட்டர் இடைவெளியில் நின்ற நாங்களும் தாக்குதலைத் தொடுக்கின்றோம். இதில் மாலதி கொஞ்சம் பின்னுக்கு ஓடி வந்து நிலையெடுத்து மீண்டும் தாக்கினாள். அது மிகப்பெரும் சண்டையாக இருந்தது. இராணுவம் பெரும் எடுப்பில் தொடர்ச்சியாக வந்துகொண்டே இருந்தது. நாங்களும் எங்களுடைய முழுப்பலத்தையும், பிரயோகித்து தாக்குதலை நடத்திக்கொண்டு இருந்தோம். அனைவரும் பெண் போராளிகள். முதன் முதலாக பெண் போராளிகள் மட்டும் தனித்து ஒரு பெரும் படைக்கு எதிராக செய்த சண்டை அது. அப்போது நன்றாக விடிந்து விட்டது. நாங்கள் யாரும் பின்வாங்கவில்லை. காயப்பட்ட குரல்கள் எங்கள் தரப்பிலும் கேட்டுக்கொண்டிருந்தது, இராணுவத்தின் தரப்பிலும் கேட்டுக்கொண்டிருந்தது. இராணுவத்தில் சிலர், இறந்த தமது சகாக்களின் உடலையும், காயப்பட்டவர்களையும் இழுத்துக்கொண்டு பின்னுக்கு போய்க்கொண்டிருந்தனர். இது அனைத்தையும் பார்த்துக்கொண்டே சண்டையைத் தொடர்ந்து கொண்டிருந்தோம். ஒரு கட்டத்தில் மாலதி காயப்பட்டு விட்டாள். நான் நின்ற பக்கம் இராணுவம் பெரிதாக வரவில்லை. ஆனால் மாலதி நின்ற பக்கத்தால் நிறைய இராணுவத்தினர் வந்து கொண்டிருந்தனர். ஏனெனில் கோப்பாயைப் பிடிப்பதற்கு மாலதி நின்ற பக்கத்தால் முன்னேறுவது தான் இராணுவத்திற்கு இலகுவாக இருந்தது. அதனால் அந்த பகுதியில் கடுமையான தாக்குதலை அவன் தொடுத்துக் கொண்டிருந்தான். இதை அறிந்த நாங்கள், மாலதியின் பகுதிக்குச் செல்லத்தொடங்கியிருந்தோம். அப்போது “நான் காயப்பட்டு விட்டேன்” என்று மாலதி கத்துவது கேட்டது. காயப்பட்ட போராளிகளை எக்காரணம் கொண்டும் விடக்கூடாது என்பது தேசியத் தலைவரின் கட்டளையாகும். அப்போது நாங்கள் மாலதியை பின்னுக்கு கொண்டு வர முயற்சித்தோம். ஆனால் மாலதி “நான் குப்பி கடிக்கப்போகிறேன், என்னால் முடியாது. என்னை நீங்கள் கொண்டு போகமாட்டியள். என்னை விட்டுட்டு என்ர ஆயுதத்தைக்கொண்டு போய் அண்ணாட்ட கொடுங்கோ, என்ன விட்டுட்டு நீங்கள் சண்டைய பிடியுங்கோ” எனத் திரும்பத் திரும்ப உயிர் பிரியும் வரையில் கூறிக்கொண்டே இருந்தாள். அப்போது தலைவரின் கட்டளைப்படி, முன் களமுனைக்கு ஆண்போராளிகள் வந்தார்கள். சண்டை தொடர்ந்தது. நாங்கள் பின்னரங்கிற்கு வந்தோம். ஆனால் கஸ்தூரி, ரஞ்சி, தயா ஆகியவர்களைக் காணவில்லை என்பது எமக்கு அப்போதுதான் தெரிய வந்தது. இருந்தும் எமக்கு அவர்களின் உடல்களும் கிடைக்கவில்லை. காயப்பட்டதாகவும் நாங்கள் அறியவில்லை. அந்தநேரம் மாலதி வீரச்சாவைத் தழுவியிருந்தாள். அவளின் வித்துடல் மட்டும்தான் எம்மிடம் இருந்தது. இந்த சூழலில் அந்த மூவரும் ஒன்று காணாமல் போயிருக்கலாம், அல்லது இராணுவத்தினரால் கடத்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் தலைமையிடம் இருந்ததன் காரணத்தினாலும் வீரச்சாவை உறுதிப்படுத்தும் நிலையில் மாலதியின் வித்துடல் இருந்ததாலும் தமிழீழ விடுதலைப் புலிகளின் பெண் போராளிகளில் முதன் முதலில் வீரச்சாவடைந்த போராளியாக 2ம் லெப்டினன் மாலதி மதிப்பளிக்கப்பட்டு வருகின்றாள். அதே நேரம் கஸ்தூரி, ரஞ்சி, தயா ஆகியோர் மாவீரர் பட்டியலில் பின்னர் இணைக்கப்பட்டனர். பின்னர் மாலதியின் பெயரில் விடுதலைப் புலிகள் மகளிர் படையணியில் ஒரு படைப்பிரிவு உருவாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. மாலதி வீரமுடன் போரிட்டு மடிந்த இந்நாளை தமிழீழ பெண்கள் எழுச்சி நாளாகவும் நினைவுகூரப்படுகின்றது. தமிழர் வரலாற்றில் பெண்கள், போர்க்களத்திற்குச் சென்றதை புறநானூற்றில் பார்த்தோம். பிந்திய மன்னராட்சி காலங்களின் போதும் பெண்கள் போர்க்களம் சென்றிருந்தனர். ஆனால் ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னர் தமிழீழத்தில் ஆயிரக்கணக்கான படைவீரர்களை எதிர்த்து, தடுத்து நிறுத்தி தமிழீழத்துப் பெண்கள் போரிட்டு களத்திலே வீழ்ந்து உலக வரலாற்றின் போர்க்களப்பதிவின் புதிய பக்கத்தைத் திறந்து வைத்தார்கள். ஈழ விடுதலைக்கு தன் உயிரை விதையாக்கிய 2ம் லெப்டினன் மாலதியின் நினைவாக மாலதி படையணி பெரும் பெண்கள் படையை தன்னகத்துள் கொண்டு உருவாக்கம் பெற்று எம் வரலாற்றில் பதிவாகியது. இந்த நேரத்தில், மாலதியின் விடுதலை வேட்கையை எண்ணத்தில் ஏந்தி, தமிழீழப் போரரங்கில் களப்பலியான பல்லாயிரக்கணக்கான வீரப் பெண்மணிகளை மனதில் நிறுத்தி. இன்று ஏற்பட்டுவரும் உலக மாற்றங்களுக்கு ஏற்ப தகவமைத்து எமது உரிமைகளை மீட்டெடுக்க நாம் அனைவரும் அறிவியல் ரீதியில் தயாராக வேண்டும். அதுவே அந்த மாவீர்ர்களுக்கான அஞ்சலியும் கூட. எழுத்து வடிவம் அருணா https://www.ilakku.org/மாலதி-ஈழப்போரரங்கின்-த/
-
இறைவனிடம் கையேந்துங்கள்
அகிலம் வாழ்ந்திட... மகிமை சிறந்திட... அஹ்மது நபி பிறந்தார் || E.M.HANIFA ISLAMIC SONGS.
-
இறைவனிடம் கையேந்துங்கள்
விண்மீது நீந்துகின்ற மேகங்களே... வளமான மதீனாவுக்கு || நெல்லை அபுபக்கர்
-
இறைவனிடம் கையேந்துங்கள்
பொம்ம பொம்மதா தைய தையனக்கு தின்னாக்கு னக்குதின் பஜன்கரே உத்தமித்த நாக்குதிமி தித்தாம் தித்தாம் தோம் தை தை கணபதி நாம் ஸதா பொம்ம பொம்மதா தைய தையனக்கு தின்னாக்கு னக்குதின் பஜன்கரே உத்தமித்த நாக்குதிமி தித்தாம் தித்தாம் தோம் தை தை கணபதி நாம் ஸதா திம்மிக்கிடுகிட திம்மிகிடுகிட திக்குத்தாள திம்மிக்கிட தாகிடுத தாகிடுத தள தவோடுதாம் திம்மிக்கிடுகிட திம்மிகிடுகிட திக்குத்தாள திம்மிக்கிட தாகிடுத தாகிடுத தள தவோடுதாம் உத்தமித்த நாக்குதிமி தித்தாம் தித்தாம் தோம் தை தை கணபதி நாம் ஸதா அவருவாசுவே கரம்பாஜிதி அகேநாம்சதுர் கணராஜா தாள மந்திர பஹுத் தாம்ஸத் ஸுரமண்டலகீ ஸுரபாஜா பொம்ம பொம்மதா தைய தையனக்கு தின்னாக்கு னக்குதின் பஜன்கரே உத்தமித்த நாக்குதிமி தித்தாம் தித்தாம் தோம் தை தை கணபதி நாம் ஸதா வேணுவாஸரே அம்ருத குண்டலகீ தாரிக்கிரிகிட தாரிக்கிரிகிட தவால்கஜா வேணுவாஸரே அம்ருத குண்டலகீ தாரிக்கிரிகிட தாரிக்கிரிகிட தவால்கஜா நாரத தும்புரு வைணவ ஜாகே நாரத கணமே உவஸர்கா நாரத தும்புரு வைணவ ஜாகே நாரத கணமே உவஸர்கா திம்மிக்கிடுகிட திம்மிகிடுகிட திக்குத்தாள திம்மிக்கிட தாகிடுத தாகிடுத தள தவோடுதாம் உத்தமித்த நாக்குதிமி தித்தாம் தித்தாம் தோம் தை தை கணபதி நாம் ஸதா அவரு வாசுவே கரம்பாஜிதி த்ரிமி த்ரிமி த்ரிமி த்ரிமி மிருதங்கா அவரு வாசுவே கரம்பாஜிதி த்ரிமி த்ரிமி த்ரிமி த்ரிமி மிருதங்கா நவாபு ஸாரங்கி சித்தாரி கினரி அவரு வாசுகை முகர்சிங்கா நவாபு ஸாரங்கி சித்தாரி கினரி அவரு வாசுகை முகர்சிங்கா பொம்ம பொம்மதா தைய தையனக்கு தின்னாக்கு னக்குதின் பஜன்கரே உத்தமித்த நாக்குதிமி தித்தாம் தித்தாம் தோம் தை தை கணபதி நாம் ஸதா உத்தமித்த நாக்குதிமி தித்தாம் தித்தாம் தோம் தை தை கணபதி நாம் ஸதா
-
இறைவனிடம் கையேந்துங்கள்
வேல் முருகா வேல் முருகா வேல் வேல் முருகா வேல் முருகா வேல்
-
இறைவனிடம் கையேந்துங்கள்
முக்குறுணி பிள்ளையாரே
-
இறைவனிடம் கையேந்துங்கள்
திருப்பதி வாசா திருமகள் நேசா தினம் உன்னை பணிவேன் ஸ்ரீ வெங்கடேசா மனம் உருக பாடுகிறேன் மலர் பாதம் நாடுகிறேன் கொடுப்பாய் உந்தன் திருவருளே கும்பிட சேரும் செல்வங்களே உனை கும்பிட சேரும் செல்வங்களே கோவிந்தா ஸ்ரீ கோவிந்தா வேங்கடராமனா கோவிந்தா மஞ்சள் ஆடையில் உன் தலம் வந்து மங்களம் வேண்டி தவம் இருப்பேன் நெஞ்சினில் உந்தன் நினைவை ஏந்தி நித்தம் மலையை சுற்றிடுவேன் காத்திட வேண்டும் கோவிந்தா கருணை கடலே கோவிந்தா பொன்மணி வைரம் பூட்டிய உந்தன் தரிசனம் நானும் காண வந்தேன் உன் நிழல் தன்னில் என் மனம் இருக்க உன் திருத்தலமே நாடி வந்தேன் விண்ணும் மண்ணும் தந்தவன் நீயே வேதாச்சலனே உனை மறவேன் கண்ணா என்றும் காப்பவன் நீயே கை தொழுதேனே உன் பதமே
-
இறைவனிடம் கையேந்துங்கள்
இறைவனின் வானக விருந்து தந்தார்
-
இறைவனிடம் கையேந்துங்கள்
நீயே நிரந்தரம் இயேசுவே
-
லெப். கேணல் விக்ரர்
லெப். கேணல் விக்ரர் வீரத்தளபதி விக்ரர். மன்னார் பனங்கட்டிக்கொட்டு கிராமத்தில் 1963ம் ஆண்டு பிறந்த மருசலனின் பியூஸ்லஸ் என்ற தளபதி விக்ரர் மன்னார் புனித சவேரியார் ஆண்கள் கல்லூரியில் கல்வி பயின்றவர். எமது விடுதளைப்போர்ராட்டமானது பறந்து விரிந்து, ஆழ வேருன்றி பெருகிவிட்டதாக தனக்கே உரித்தான வளர்ச்சி கண்டு நிற்பதைக் உலகம் புரிந்து கொண்டுள்ளது. அன்று எமது குரல்கள் அடங்க்கிக்கிடந்தன, எமக்கான குரல்களும் கேட்காது கிடந்தன, இன்று எட்டி நின்றவர்களும் எமக்காக குரல்கொடுகின்றனர். இது ஒரு கால மாற்றம் இந்த மாற்றத்தை எம் இனத்திற்கு பெற்றுத் தந்த பல்லாயிரக்கணக்கான மாவீரர்களின் வரிசையில் அத்திவார்கக் கற்களாகி நிற்கும் விக்டர் போன்ற வீரத்தலபதிகளை தமிழினம் மறக்காது. விடுதலைப் பயிரானது ஆதிக்க பாதங்களினால் மிதிபட்டுப் போய்விடுமோ, பேரினவாதிகளின் பெருமூச்சினில் கருகிவிடுமோ என்ற ஏக்கம் நிறைந்த காலங்களிலெல்லாம் தலைவருக்குப் பக்க பலமகா நின்று விடுதலைப் பயிரை உரமிட்டுப் பாதுகாத்துத் தந்த மூத்த தளபதிகளை வரலாறு நிச்சயம் பதிவு செய்யும். விடுதலைப்புலிகள் இராணுவ அழுத்தங்களுக்கு விட்டுக்கொடுக்கவோ அல்லது அரசியல் அழுத்தங்களுக்கு விளைபோகக்கூடியவர்களோ அல்லர் என்பதை மிகப்பெரிய வரலாற்று சாதனை ஒன்றினூடாக சர்வதேச சமூகத்துக்கு சத்தியம் செய்து கொடுத்த சாதனையாளன் தளபதி விக்ரர். 12,10.1986 அன்று மன்னார் மாவட்டம், அடம்பன் பகுதி சூற்றிவளைக்க வந்த நூற்றுக்கணக்கான சிங்களப்படையினரை எண்ணிக்கையில் குறைந்தளவு போராளிகளைக் கொண்டு முற்றிலும் பாதகமான சூழ்நிலையிலும்…. அதிகலை வேளையிலும் “இரண்டில் ஒன்று, ஒன்று அவன் அல்லது நாங்கள்” என்ற துணிவு மிகுந்த வார்த்தைகளை எங்கள் தொலைத்தொடர்பு சாதனங்களூடாக வழங்கிவிட்டு களத்திலே நேரில் இறங்கி வியூகம் அமைத்து, ஊடறுத்து, சிதைத்து, சடலங்கள் ஆயுதங்களை அள்ளி, சிறைபிடித்து என்றவாறு தாக்குதலை நகர்த்தி ” ஓட விடாதே”, “பார்த்துப் பார்த்து விழுத்து”, “ஹெலியை இறக்கவிடாதே”, இறங்கிய ஹெலியை பறக்கவிடாதே” என்றெல்லாம் தனது சுடுவிரல் அசைவினால் நெறிப்படுத்தி நின்ற வெற்றிகரமான சூழ்நிலையின் இறுதிக் கணத்தில் தளபதி விக்டரின் தொடர்பை இழந்து நின்ற அன்றைய சோகம் நிறைந்த நினைவுகளை பகிர்வதில் மனம் நிறைவடைய மறுக்கிறது. நாட்டுக்கு நாடு நடைபெற்ற யுத்தம்போன்று சர்வதேச யுத்த விதிகளுக்கு அமைவாக படையினரின் சடலங்களை ஒப்படித்தும், சிறைக் கைதிகளை பரிமாற்றம் செய்தமையும் விடுதலைப் போராட்ட வரலாற்றில் இன்றுவரை விடுதலைப்புலிகள் கடைப்பிடித்துவரும் நடைமுறையினை சிறிலங்கா அரசும், சர்வதேசமும் புரிந்துகொண்டிருக்கும். சிறிலங்காப் படையினரை சிறைப்பிடித்தும், படையினரின் சடலங்களை மீட்பதும் தமிழ்மக்கள் மத்தியில் மெல்லமெல்ல துளிர்விட்ட விடுதலைப் போராட்டம் மீதான நம்பிக்கையினை மேலும் பலபடிகள் பாய்ந்து செல்லவைத்த அற்புத நிகழ்வாகவே தளபதி விக்ரர் தலைமையிலான அன்றைய தாக்குதல் சம்பவம் அமைந்திருந்தது. 1983ம் ஆண்டு யாழ் திருநெல்வேலியில் சிங்களப் படையினருக்கு எதிரான கண்ணிவெடித் தாக்குதலில் முக்கிய பாத்திரம் வகித்த தளபதி விக்ரர் அவர்கள் தமிழீழப் பகுதியில் தலைவரின் நேரடி வழிகாட்டலில் நடைபெற்ற இராணுவத்திற்கு எதிரான தாக்குதலிலும் பங்குபற்றியவர் என்பதுவும் குறிப்பிடத்தக்கது. 1985ம் ஆண்டு மன்னார் போலிஸ் நிலையத் தகர்ப்பின் பொது பாதகமான சூழ்நிலைகளையும் பொருட்படுத்தாது எமது அணியினை நகர்த்தி இடையில் ஒன்று கூட்டி ஒழுங்குபடுத்தி மீண்டும் வேகமாய் நிதானமாய் நகர்த்தி “ராதா ஸ்ராட்”, “குமரன் ஸ்ராட்” (லெப். கேணல் குமரப்பா) என்று ஆரம்பக் கட்டளைகளை அணித்தளைவர்களுக்கு வழங்கி குறுகிய நேரத்தில் போலிஸ் நிலையத்தை வெற்றி கொண்டு ஒரே ஒரு போராளியின் வீரச்சாவுடன் ஏனையோரை கடல் கடந்து பத்திரமாக கரைசெர்ப்பது வரையில் தளபதியின் வழிகாட்டல் என்பது மறக்கமுடியாத நினைவாகி நிற்கிறது. அன்றைய வெற்றிகரத் தாக்குதலை பி.பி.சி செய்தியாளர் தெரிவிக்கும் போது விடுதலைப்புலிகளின் மதிநுட்பமும், துணிவும் நிறைந்த வெற்றிகரத் தாக்குதல் என வர்ணித்தார். மன்னார் மக்கள் அன்றைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தி தளபதி விக்ரருக்கு தங்கச் சங்கிலி பரிசளித்து கெளரவித்தனர். பெரும் மகிழ்வுடன் மக்களை வரவேற்கும் பண்பு. மிமிர்ந்து உயர்ந்த அழகிய தோற்றம், அன்புத் தலைவரை இதயச் சுவர்களில் சுமந்து நின்று வழிப்படுத்திய அன்றைய நாட்கள் மறக்க முடியாதவை. எமது விடுதலை இயக்கம் பிரசவித்த அக்கினி குஞ்சு என்பது மகளிர் படையணியின் வளர்ச்சி பற்றி எமது தலைவரின் வாக்கிற்கு உயிர் கொடுத்த தளபதியாக விக்டர் அன்று செயல்ப்பட்டார் எமது பெண் போராளிகளுக்கு முதன் முதல் களம் கற்றுக்கொடுத்து இன்று வியக்க வைக்கும் வளர்ச்சியை பெற்று நிற்கும் எமது விடுதலைப்புலிகள் மகளிர் படையணியின் மூத்த சகோதரனாகவே திகழ்ந்தார். தனது சிறந்த நிறைவான குரல்வளத்தால், பாடும் திறமையால் போராளிகளின் மனதை மற்றுமொரு கோணத்தில் இடம்பிடித்தும் தளபதி விக்டருக்கு இருக்கும் இன்னும் ஒரு சிறப்பு அம்சம். கைத்துப்பாக்கியை அழகாக கழற்றி குறிதவறாது சுட்டுக்காட்டி, கமராவை கையாள்வதும், கலையை ரசிப்பதும் இயற்கையிலேயே அழகுணர்ச்சியுடன் பழகிவந்த தளபதி அவர்கள் எமது தலைவரால் வளர்க்கப்பட்டவர் என்பதில் நாம் பெருமையடைகிறோம். இன்று எமது விடுதலைப் போராட்டமானது ஆயிரம் படையினரை ஒரே நாளில் களத்திலிருந்து அப்புறப்படுத்திய வரலாற்று வளர்ச்சியை பெற்று நிற்பதை உற்று நோக்கும் போது மிகுந்த பக்குவத்துடன் எமது தாயக விடுதலைப்பயணம் நகர்ந்து செல்வதை இலகுவில் இனங்கண்டு கொள்ளமுடிகிறது. இன்றும் அன்றும் எமது தலைவர் அவர்களின் நேர்த்தியான வழிகாட்டலினால் மிக மிக உன்னத நிலையை எமது போராட்டம் சந்தித்து நிற்கிறது என்பது தெளிவாகின்றது. என்றுமில்லாதவாறு எழுட்சி கொண்டு எமது மக்கள் நிற்கும் இவ்வேளையில் தாயகப்பற்றுணர்வுடன் ஆயிரம் ஆயிரம் விக்ரர்கள் புதிது துதிதாக எழுந்து வரவேண்டும் இதுவே இன்றுள்ள வரலாற்றுத் தேவையாகும். நன்றி: சூரியப் புதல்வர்கள் 2004. https://thesakkatru.com/mannar-district-special-commander-lieutenant-colonel-victor/
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள் https://thesakkatru.com/
-
இறைவனிடம் கையேந்துங்கள்
அருள் புரிவாய் ரஹ்மானே அண்ணல் நபி
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
- இறைவனிடம் கையேந்துங்கள்
ஓம் சரவணபவ ஓம்- இறைவனிடம் கையேந்துங்கள்
பாவம் தீர்க்க வேல் முருகா- இறைவனிடம் கையேந்துங்கள்
மருளாடி அழைத்தோம் மாரியாத்தா- இறைவனிடம் கையேந்துங்கள்
அதிசயங்கள் செய்கிறவர் நம் அருகில் இருக்கின்றார்- இறைவனிடம் கையேந்துங்கள்
அனுதினமும் உம்மில் நான் வளர்ந்திடவே- இறைவனிடம் கையேந்துங்கள்
மமதை கொள்ளாதே...மவுத்தை மறக்காதே- இறைவனிடம் கையேந்துங்கள்
உலகம் தோன்றிட காரணமான... உத்தம நபி மகள்- இறைவனிடம் கையேந்துங்கள்
உலகத்தை ஆளுகின்ற- இறைவனிடம் கையேந்துங்கள்
கவடிகள் ஆடுது கந்தனென பாடுகின்றது- இறைவனிடம் கையேந்துங்கள்
நன்றி என்று சொல்லு நெஞ்சே நல்ல தெய்வம் - இறைவனிடம் கையேந்துங்கள்
Important Information
By using this site, you agree to our Terms of Use.