Everything posted by உடையார்
-
இறைவனிடம் கையேந்துங்கள்
ஐங்கரனை ஒத்தமனம் ஐம்புலம கற்றிவளர் அந்திபக லற்றநினை வருள்வாயே அம்புவித னக்குள்வளர் செந்தமிழ்வழுத்தி உன்னை அன்பொடுது திக்கமனம் அருள்வாயே தங்கியத வத்துணர்வு தந்தடிமை முத்திபெற சந்திரவெ ளிக்குவழி யருள்வாயே தண்டிகைக னப்பவுசு எண்டிசைம திக்கவளர் சம்ப்ரமவி தத்துடனே அருள்வாயே மங்கையர்சு கத்தைவெகு இங்கிதமெ னுற்றமனம் உன்றனைநி னைத்தமைய அருள்வாயே மண்டலிக ரப்பகலும் வந்தசுப ரட்சைபுரி வந்தணைய புத்தியினை யருள்வாயே கொங்கிலுயிர் பெற்றுவளர் தென்கரையி லப்பரருள் கொண்டுஉட லுற்றபொருள் அருள்வாயே குஞ்சரமு கற்கிளைய கந்தனென வெற்றிபெறு கொங்கணகி ரிக்குள்வளர் பெருமாளே கொங்கணகி ரிக்குள்வளர் பெருமாளே
-
இறைவனிடம் கையேந்துங்கள்
என்கூடவே இரும் ஓ இயேசுவே நீரில்லாமல் நான் வாழ முடியாது ' என்பக்கத்திலே இரும் ஓ இயேசுவே நிரில்லமால் நான் வாழ முடியாது ( 2 ) 1 இருளானவாழ்க்கையிலே வெளிச்சம் ஆனிரே உயிரற்ற வாழ்க்கையிலே ஜீவன் ஆனிரே ( 2 ) என்வெளிச்சம் நீரே என் ஜீவனும் நீரே எனக்கெல்லாமே நீங்கதானப்பா ( 2 ) - என்கூடவே ' 2 . கண்ணீர் சிந்தும் நேரத்தில் நீர் தாயுமானீரே காயப்பட்ட நேரத்தில் நீர் தகப்பனானீரே என் அம்மாவும் நீரே என் அப்பாவும் நீரே எனக்கெல்லாமே நீங்க தானப்பா ( 2 ) - என் கூடவே 3 . வியாதியின்நேரத்தில் வைத்தியரானீரே சோதனை நேரத்தில் நண்பரானிரே என்வைத்தியர் நீரே என் நண்பரும் நீரே எனக்கெல்லாமே நீங்க தானப்பா ( 2 ) என் கூடவே
-
இறைவனிடம் கையேந்துங்கள்
அப்பா பிதாவே அன்பான தேவா அருமை இரட்சகரே ஆவியானவரே ரோ. 8:15 1 எங்கோ நான் வாழ்ந்தேன் அறியாமல் அலைந்தேன் என் நேசர் தேடி வந்தீர் நெஞ்சார அணைத்து முத்தங்கள் கொடுத்து நிழலாய் மாறி விட்டீர் நன்றி உமக்கு நன்றி - அப்பா 2 தாழ்மையில் இருந்தேன் தள்ளாடி நடந்தேன் தயவாய் நினைவு கூர்ந்தீர் கலங்காதே என்று கண்ணீரைத் துடைத்து கரம் பற்றி நடத்துகிறீர் - நன்றி 3 உளையான சேற்றில் வாழ்ந்த என்னை தூக்கி எடுத்தீரே சங். 40:2 கல்வாரி இரத்தம் எனக்காக சிந்தி கழுவி அணைத்தீரே - நன்றி வெளி. 1:6
-
இறைவனிடம் கையேந்துங்கள்
எங்கும் நிறைந்தவனே அல்லாஹ்
-
இறைவனிடம் கையேந்துங்கள்
அல்லாஹு யா அல்லாஹ்... ரஹ்மானும் நீ அல்லாஹ்
-
இறைவனிடம் கையேந்துங்கள்
அம்மா அம்மா உனை பார்த்தேன்
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
சப்பாத்தி, இட்லி, தோசை,பரோட்டாக்கு பக்கா சைடு டிஷ் ஒருமுறை செய்து சாப்பிடுங்க
-
இறைவனிடம் கையேந்துங்கள்
ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம், என்றுபூதி ஆகமணி மாதவர்கள் பாதமலர் சூடுமடி யார்கள்பத மேதுணைய, தென்றுநாளும் ஏறுமயில் வாகனகு காசரவ ணாஎனது ஈசஎன மானமுன, தென்றுமோதும் ஏழைகள்வி யாகுலமி தேதெனவி னாவிலுனை யேவர்புகழ் வார்மறையு, மென்சொலாதோ நீறுபடு மாழைபொரு மேனியவ வேலஅணி நீலமயில் வாகவுமை, தந்தவேளே நீசர்கட மோடெனது தீவினையெ லாமடிய நீடுதனி வேல்விடும, டங்கல்வேலா சீறிவரு மாறவுண னாவியுணு மானைமுக தேவர்துணை வாசிகரி, அண்டகூடஞ் சேருமழ கார்பழநி வாழ்குமர னேபிரம தேவர்வர தாமுருக, தம்பிரானே
-
இறைவனிடம் கையேந்துங்கள்
அயிகிரி நந்தினி - தமிழ் பாடல்வரிகள்
-
இறைவனிடம் கையேந்துங்கள்
அமைதியின் தெய்வமே இறைவா
-
இறைவனிடம் கையேந்துங்கள்
இறைவா நீ ஒரு சங்கீதம்
-
இறைவனிடம் கையேந்துங்கள்
யா ரசூலே... யா ஹபிபே... ரஹ்மத்துல் லில் ஆலமீன்
-
இறைவனிடம் கையேந்துங்கள்
அருள் மழை பொழிவாய்
-
இறைவனிடம் கையேந்துங்கள்
துளசிகத்திற் கிள்ளியெடுத்து
-
இறைவனிடம் கையேந்துங்கள்
நாடித் தேடித் தொழுவார்பால் நானத் தாகத் திரிவேனோ மாடக் கூடற் பதிஞான வாழ்வைச் சேரத் தருவாயே பாடற் காதற் புரிவோனே பாலைத் தேனொத் தருள்வோனே ஆடற் றோகைக் கினியோனே ஆனைக் காவில் பெருமாளே ஆனைக் காவில் பெருமாளே
-
இறைவனிடம் கையேந்துங்கள்
முந்தி முந்தி
-
இறைவனிடம் கையேந்துங்கள்
உள்ளத்தை கொள்ளை கொண்ட
-
இறைவனிடம் கையேந்துங்கள்
வெள்ளி நிலா ஓடத்திலே விட்டிருக்கும் தாய் மரியே
-
இறைவனிடம் கையேந்துங்கள்
கள்ளமில்லா ஒரு வெள்ளிநிலா - Kallamila oru velli nila கள்ளமில்லா ஒரு வெள்ளிநிலா என உள்ளமெல்லாம் வரும் தெள்ளமுதாய் தீராத பாசமே நறும் தேனான இயேசுவே அன்பே பாரினில் நீயும் நானும் ஒன்றாய் வாழ்வது வாழ்க்கையே வாரும் தேவா வாருமே 1. எங்கே நோக்கினும் தனிமையே உனை என் மனம் மறந்ததேன் தீமையே - கண்களும் நீரினில் ஆடுதே இறைக் கர்த்தருன் பூமுகம் தேடுதே தேவ தேவா சிலுவை நாதா திரும்ப நாவினில் வாருமே -2 தாகம் யாவும் தீருமே தூய வாழ்வைத் தாருமே தாயும் நீயாய் சேயும் நானாய் வாழவேண்டும் நாளுமே 2. எல்லாம் தேவனின் மகிமையே அதை எங்ஙனம் புகழ்வது ஏழையே என் மனம் நீ வரும் போதிலே பெரும் நிம்மதி ஆயிரம் வாழ்விலே வாழ்வும் நீயே வழியும் நீயே உயிரும் நீ இனி தேவனே - 2 வாரும் நாவில் இயேசுவே நீயும் நானும் பேசவே ஆயன் நீயாய் தோளில் நானாய் வாழவேண்டும் நாளுமே
-
இறைவனிடம் கையேந்துங்கள்
நூரு அய்ணீ யா க்கைரு க்கல்கில்லாஹ் (2) யா நபி....ம்ம்ம்..... யா நபி....ஆ......... யா நபி உங்கள் திருமுகம் ஒரு கனம் வேண்டுகிறேன் யா நபி அதை கனவிலும் நினைவிலும் வேண்டுகிறேன் உங்கள் திருமுகம் வேண்டும் பெருமானே அந்த மலர் முகம் வேண்டும் எம்மானே அந்த ஒரு முகம் வேண்டும் பெருமானே அந்த ஒளி முகம் வேண்டும் எம்மானே நான் என்ன செய்தேனோ ஏது செய்தேனோ எந்தன் மனம் அதை அறியவில்லை என் நபிமுகம் காணும் பாக்கியம் எனக்கு தடையின் காரணம் புரியவில்லை எங்கள் இறைவா......எங்கள் இறைவா பிழையிருந்தால் அதை பொறுப்பாய் நபி பொருட்டால் பிழை பொறுப்பாய் எந்தன் இறைவா நபி பொருட்டால் எந்தன் இறைவா (2) ( யா நபி ) ( உங்கள் திருமுகம் ) ஒரு தம்பதிகள் கொண்ட தத்துப்பிள்ளை அது சொந்தமில்லை என தெரியவில்லை சொந்த தாயும் தந்தையும் வந்த நிலை இந்த குழந்தை அவருக்கு சொந்தமில்லை (2) இந்த நிலையே தான்......இந்த நிலையே தான் அன்று சஹாபிகள் என் நபியை பிரிந்த அந்த கணம் இந்தப் புவியினிலே...... இந்தப் புவியினிலே எந்த துன்பங்கள் அதற்கு ஈடாகும் அந்த வலியினை நானும் உணருகிறேன் நீ தருவாயே என கதறுகிறேன் (2) (யா நபி) (உங்கள் திருமுகம்) என் காதல் வலிகள் தீர வில்லை என் காதல் ஹபீபை காணவில்லை என் கண்ணில் கண்ணீரும் கரையவில்லை என் புலம்பலும் கதறலும் ஓயவில்லை உம் முகம் காணும்... உம் முகம் காணும் கணம் மரணம் என்றால் அந்த மரணம் எனக்கு உயர்வாகும் அந்த மரணம் எனக்கு உயர்வாகும் (யா நபி) (உங்கள் திருமுகம்) யா நபி....ம்ம்ம்.....யா நபி....ஆ......... (யா நபி) (உங்கள் திருமுகம்)
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
நன்றி அண்ணா, இன்று நிம்மதியே போச்சு, இப்பதான் உயிர் வந்திச்சு, 🙏
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள் https://thesakkatru.com/
-
இறைவனிடம் கையேந்துங்கள்
கருணை உள்ளம் கொண்டவன்
-
இறைவனிடம் கையேந்துங்கள்
மூலவட்ட மானகுரு பாதங் காப்பு; முத்திக்கு வித்தான முதலே காப்பு; மேலவட்ட மானபரப் பிரமங் காப்பு! வேதாந்தங் கடந்துநின்ற மெய்யே காப்பு; காலவட்டந் தங்கிமதி யமுதப் பாலைக் கண்டுபசி யாற்றிமனக் கவடு நீக்கி ஞாலவட்டஞ் சித்தாடும் பெரியோர் பாதம் நம்பினதா லுரோம னென்பேர் நாயன் றானே. கண்ணாடி சிலமூடித் தனுப்பி னாலே கருவதனை யறியாமல் மாண்டு போனான் விண்ணாடிப் பாராத குற்றம் குற்றம் வெறுமண்ணாய்ப் போச்சுதவன் வித்தை யெல்லாம்; ஒண்ணான மவுனமென்றே யோகம் விட்டால் ஒருபோதுஞ் சித்தியில்லை! வாதந் தானும் பெண்ணார்தம் ஆசைதன்னை விட்டு வந்தால் பேரின்ப முத்திவழி பேசுவேனே. பேசுவேன் இடைகலையே சந்த்ர காந்தம்; பின்கலைதா னாதித்தனாதி யாச்சு; நேசமதாய் நடுவிருந்த சுடர்தான் நீங்கி நீங்காம லொன்றானா லதுதான் முத்தி; காதலாய்ப் பார்த்தோர்க்கிங் கிதுதான் மோட்சம்; காணாத பேர்க்கென்ன காம தேகஞ் சோதனையாய் இடைகலையி லேற வாங்கிச் சுழுமுனையில் கும்பித்துச் சொக்கு வீரே. வாங்கியந்தப் பன்னிரண்டி னுள்ளே ரேசி வன்னிநின்ற விடுமல்லோ சூர்யன் வாழ்க்கை? ஓங்கியிந்த இரண்டிடமு மறிந்தோன் யோகி; உற்றபர மடிதானே பதினாறாகும்; தாங்கிநின்ற காலடிதான் பன்னி ரண்டு; சார்வான பதினாறில் மெள்ள வாங்கி ஏங்கினதைப் பன்னிரண்டில் நிறுத்தி யூதி எழுந்தபுரி யட்டமடங் கிற்றுப் பாரே. பாரையா குதிரைமட்டம் பாய்ச்சல் போச்சு பரப்பிலே விடுக்காதே சத்தந் தன்னை; நேரையா இரண்டிதழி னடுவே வைத்து நிறைந்தசதா சிவனாரைத் தியானம் பண்ணு; கூரையா அங்குலந்தா னாலுஞ் சென்றால் குறிக்குள்ளே தானடக்கிக் கொண்ட தையா! ஆரையா உனக்கீடு சொல்லப் போறேன் அருமையுள்ள என்மகனென் றழைக்க லாமே.
-
இறைவனிடம் கையேந்துங்கள்
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய புத்தி கெட்டு மயங்கி ஓடாதே மனமே புத்தி கெட்டு மயங்கி ஓடாதே🙏 🙏