விருந்துக்கேற்றதும் சுலபமாக செய்யக்கூடியதும் ஆன இந்த வித்தியாசமான போண்டாவை செய்து பாருங்கள்!!!
தேவையானவை:
ஜவ்வரிசி - 1 கப்,
நன்கு புளித்த தயிர் - 1 கப்,
கடலை மாவு - 1 டேபிள்ஸ்பூன்,
அரிசி மாவு - 1 டேபிள்ஸ்பூன்,
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 1 டேபிள்ஸ்பூன்,
துருவிய இஞ்சி - 1 டேபிள்ஸ்பூன்,
பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன்,
பொரித்த கடுகு - 1 டீஸ்பூன்,
கறிவேப்பிலை - மல்லித்தழை - சிறிதளவு,
உப்பு - ருசிக்கேற்ப,
எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை:
ஜவ்வரிசியுடன் உப்பு, தயிர் சேர்த்து ஊறவையுங்கள். 4 முதல் 5 மணி நேரம் வரை ஊறவேண்டும்.
பின்னர் அதனுடன் பெருங்காயம், கடலை மாவு, அரிசி மாவு, இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, வெங்காயம், உப்பு, மல்லித்தழை சேர்த்து (இட்லி மாவை விட சற்று) கெட்டியாகக் கலந்துகொள்ளுங்கள்.
எண்ணெயைக் காயவைத்து ஜவ்வரிசி கலவையை சிறு சிறு போண்டாக்களாகக் கிள்ளிப் போட்டு, பொன்னிறமாக சிவந்ததும் எடுங்கள். விருந்துகளுக்கு ஏற்ற வித்தியாசமான போண்டா.
https://detail.chr.cyfeeds.com/content/2a2458d5adf4ad1fdf41090b19d7605b?&actfrom=3