Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நவீனன்

வரையறுக்கப்பட்ட அனுமதி
  • Joined

  • Last visited

Everything posted by நவீனன்

  1. சூப்பரான ஸ்நாக்ஸ் சிக்கன் லாலிபாப் விடுமுறை நாட்களில் குழந்தைகளுக்கு விருப்பமான சிக்கனை வைத்து சூப்பரான சிக்கன் லாலிபாப் செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். தேவையான பொருட்கள்: சிக்கன் விங்ஸ் - 1/2 கிலோ (தோல் நீக்கப்பட்டது) எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு சோள மாவு - 2 டேபிள் ஸ்பூன் சோயா சாஸ் - 2 டேபிள் ஸ்பூன் வினிகர் - 1 டீஸ்பூன் மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் இஞ்சி பேஸ்ட் - 2 டீஸ்பூன் பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன் அஜினமோட்டோ - 1/4 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு மாவிற்கு... மைதா - 6 டேபிள் ஸ்பூன் சோள மாவு - 6 டேபிள் ஸ்பூன் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி - 1 டேபிள் ஸ்பூன் பொடியாக நறுக்கிய பூண்டு - 1 டேபிள் ஸ்பூன் பொடியாக நறுக்கிய இஞ்சி - 1 டேபிள் ஸ்பூன் வினிகர் - 1 டேபிள் ஸ்பூன் மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன் முட்டை - 1 அஜினமோட்டோ - 1/2 டீஸ்பூன் ஆரஞ்சு நிற கேசரி பவுடர் - 1/2 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு தண்ணீர் - தேவையான அளவு செய்முறை : முதலில் சிக்கன் விங்ஸை நன்கு நீரில் சுத்தமாக கழுவி, அதில் உள்ள நீரை முற்றிலும் வடித்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு சிக்கன் விங்ஸை எடுத்து, அதனை கத்தியால் கீறி, அதன் நடுலே உள்ள ஒல்லியான எலும்பை நீக்கிவிட்டு, நல்ல தடிமனான எலும்பின் ஒரு பக்கமாக, சதைப்பற்றைக் கொண்டு வர வேண்டும். இதுப்போன்று அனைத்து சிக்கன் விங்ஸையும் செய்து கொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தில் சிக்கன் விங்ஸை போட்டு பின் அதனுடன் சோள மாவு, சோயா சாஸ், வினிகர், மிளகாய் தூள், இஞ்சி பூண்டு பேஸ்ட், அஜினமோட்டோ, உப்பு போட்டு, நன்கு பிரட்டி, 2 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு ஒரு பாத்திரத்தில் மாவிற்கு கொடுத்துள்ள அனைத்து பொருட்களையும் போட்டு, நன்கு கெட்டியான மாவாக தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பிசைந்து கொள்ள வேண்டும். சிக்கனானது 2 மணிநேரம் நன்கு ஊறியப் பின்னர், ஒரு அகன்ற வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், ஒவ்வொரு சிக்கன் துண்டையும் பிசைந்து வைத்துள்ள மாவில் பிரட்டி எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால், சுவையான சிக்கன் லாலிபாப் ரெடி!!!
  2. தயிர் சாதத்திற்கு சூப்பரான வெங்காய ஊறுகாய் மாங்காய், எலுமிச்சை, பூண்டு ஊறுகாய் சாப்பிட்டு இருப்பீங்க. வெங்காயத்தில் ஊறுகாய் செய்தால் சூப்பராக இருக்கும். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம். தேவையான பொருட்கள் : புளி - எலுமிச்சை அளவு பெரிய வெங்காயம் - அரை கிலோ வெல்லம் - ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் - 5 டேபிள்ஸ்பூன் வெந்தயப்பொடி- ஒரு டீஸ்பூன் பெருங்காயத்தூள்- ஒரு டீஸ்பூன் மிளகாய்த்தூள் - ஒன்றரை டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன் செய்முறை : வெங்காயத்தை நீளமாக நறுக்கி நறுக்கி வைத்துக்கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விடாமல் புளியைச் சேர்த்து லேசாக வதக்கி ஆறியதும் சிறிது தண்ணீர் ஊற்றி பேஸ்ட் போன்று மிக்ஸியில் அரைத்துக்கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். இத்துடன் புளி பேஸ்ட், வெந்தயப் பொடி, பெருங்காயத்தூள், மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து மசாலா வாசனை போகும் வரை வதக்கவும். எண்ணெய் சுருண்டு வந்ததும் பொடித்த வெல்லம் சேர்த்து கிளறி இறக்கவும். சூப்பரான வெங்காய ஊறுகாய் ரெடி. ஆறியதும் கண்ணாடி பாட்டிலில் போட்டு வைத்தால் சீக்கிரம் கெட்டுப்போகாது.
  3. நாள்பட்ட சளியை குணமாக்கும் தூதுவளைக் குழம்பு ஆஸ்துமா, நாள்பட்ட சளி, இருமலால் பாதிக்கப்பட்டவருக்கு நலம் தரும் ஆரோக்கிய உணவு இந்த தூதுவளைக் குழம்பு. இதன் செய்முறை இப்போது பார்க்கலாம். தேவையான பொருட்கள் : முள் நீக்கிய தூதுவளை இலை - ஒரு கைப்பிடி, மிளகு - ஒரு டீஸ்பூன், துவரம் பருப்பு - ஒரு டீஸ்பூன், பச்சரிசி - ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 1, பெருங்காயம் - சிறிதளவு, புளி - சிறு நெல்லிக்காய் அளவு, மஞ்சள்தூள் - 2 சிட்டிகை, கடுகு - அரை டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு, நல்லெண்ணெய் - ஒரு டீஸ்பூன். செய்முறை : புளியை நீரில் ஊறவைத்து, கரைத்து வடிகட்டிக்கொள்ளவும். மிளகு, துவரம் பருப்பு, பச்சரிசி, காய்ந்த மிளகாய் இவற்றை தனித்தனியே வெறும் கடாயில் வறுத்துக்கொள்ளவும். தூதுவளைக் கீரையை ஒரு சொட்டு நல்லெண்ணெய் விட்டு வதக்கி, வறுத்து வைத்த பொருட்களுடன் அரைத்துக்கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, பெருங்காயம் சேர்த்து வறுத்து, அரைத்த விழுது, உப்பு, புளிக் கரைசல் சேர்த்து, பச்சை வாசனை போகும் வரை கொதிக்கவைத்து இறக்கி சூடாக சாதத்துடன் பரிமாறவும். தேவையெனில் தாளிக்கும்போது பொடியாக நறுக்கிய பூண்டு, வெங்காயம் சேர்த்துக்கொள்ளலாம்.
  4. சாதத்திற்கு அருமையான பேபி உருளை மோர்க்குழம்பு மோர்க்குழம்பில் உருளைக்கிழங்கு சேர்த்து செய்தால் அருமையாக இருக்கும். இன்று இந்த மோர் குழம்பை செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : பேபி உருளைக்கிழங்கு - கால் கிலோ, பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், பெரிய வெங்காயம் - 2, புளிக்காத மோர் - 200 மில்லி. மோர்க்குழம்பு மசாலா செய்ய: மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, பூண்டு - 5 பல், இஞ்சி - ஒரு இஞ்ச் அளவு, தேங்காய்த் துருவல் - 2 டேபிள்ஸ்பூன், கடலைப்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன், துவரம்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன், பச்சரிசி - அரை டேபிள்ஸ்பூன், மல்லி (தனியா) - 1 டீஸ்பூன், பச்சை மிளகாய் - 2. தாளிக்க: எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன், கடுகு - 1 டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிது, கொத்தமல்லித்தழை - சிறிதளவு, சீரகம் - 1 டீஸ்பூன். செய்முறை : வெங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும். தயிரை நன்றாக கரைத்து கொள்ளவும். ஒரு மணி நேரம் ஊறவைத்த கடலைப்பருப்பு, துவரம்பருப்பு, பச்சரிசியுடன் மல்லி (தனியா), பச்சை மிளகாய், பூண்டு, இஞ்சி, தேங்காய்த் துருவல், மஞ்சள்தூள் ஆகியவற்றைச் சேர்த்து மையாக அரைக்கவும். பேபி உருளையை தோல் சீவி இரு துண்டுகளாக நறுக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு தாளித்து நறுக்கிய வெங்காயம், சீரகம், கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லித்தழையைச் சேர்த்து வதக்கவும். இதில், பேபி உருளையைச் சேர்த்து வதக்கவும். பின்னர் அரைத்த மசாலாவைச் சேர்த்து நன்கு வதக்கவும். பெருங்காயத்தூள், சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும். உருளைக்கிழங்கு நன்றாக வெந்தவுடன் கடைசியாக புளிக்காத மோரைச் சேர்த்து இறக்கவும். சூப்பரான பேபி உருளை மோர்க்குழம்பு ரெடி. குறிப்பு: வெள்ளைப்பூசணி, சுரைக்காய், , வாழைத்தண்டு, புடலங்காயிலும் மோர்க்குழம்பு செய்யலாம்.
  5. முட்டை - சிக்கன் சப்பாத்தி ரோல் பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளுக்கு, லன்ச் பாக்ஸில் வைத்து அனுப்ப ஏற்றது இந்த முட்டை - சிக்கன் சப்பாத்தி ரோல். இதன் செய்முறை இப்போது பார்க்கலாம். தேவையான பொருட்கள் : சப்பாத்தி - 4, முட்டை - 4, சிக்கன் (எலும்பு இல்லாதது) - 300 கிராம், பெரிய வெங்காயம் - 2, மிளகுதூள் - கால் டீஸ்பூன், மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, கொத்தமல்லி - சிறிதளவு, உப்பு - சுவைக்கேற்ப. அரைக்க : மிளகு - கால் டீஸ்பூன், சோம்பு, சீரகம் (இரண்டும் சேர்த்து) - கால் டீஸ்பூன், இஞ்சி - ஒரு துண்டு, பூண்டு - 3 பல், பட்டை - 1. செய்முறை : சிக்கனை சிறு துண்டுகளாக நறுக்கி, நன்கு கழுவி வைத்துக்கொள்ளுங்கள். வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும். அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை லேசாக நீர் விட்டு அரைத்து கொள்ளவும். கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயத்தை போட்டு வதக்கவும். வெங்காயம் நன்றாக வதங்கியதும் அரைத்த விழுது, மஞ்சள் தூள், மிளகுத்தூள் போட்டு நன்கு வதக்குங்கள். பச்சை வாசனை போனதும், சிக்கன் துண்டுகளையும் போட்டு, சிறிது உப்பு, கொத்தமல்லி போட்டு, சுருள சுருளக் கிளறி இறக்குங்கள். முட்டையுடன் மஞ்சள்தூள், உப்பு, மிளகுதூள் சேர்த்து அடித்துக்கொள்ளுங்கள். தோசைக்கல்லைக் காயவைத்து, தீயை நன்கு குறைத்துவைத்து, சப்பாத்தியை கல்லில் போட்டு, அதன் மேல் முட்டையை ஊற்றிப் பரப்பிவிட்டு, அந்த லேயர் மேல் சிக்கன் மசாலாவைத் தூவி, (தோசைக்கல்லில் இருக்கும்போதே) சப்பாத்தியை அப்படியே பாய் போல மெதுவாக சுருட்டுங்கள். கல்லின் சூட்டுக்கு, ரோல் நன்கு சிக்கன், முட்டை கலவையுடன் பிடித்துக்கொள்ளும். அப்படியே சுற்றிலும் எண்ணெய் விட்டு, திருப்பிவிட்டு வேகவிடுங்கள். இது வேக 5 நிமிடமாகும். வெந்தபிறகு சிறு துண்டுகள் போட்டுப் பரிமாறுங்கள். சூப்பரான முட்டை - சிக்கன் சப்பாத்தி ரோல் ரெடி. குறிப்பு: மதியம் செய்து மிச்சமான சிக்கன் கிரேவி இருந்தாலும், இந்த சப்பாத்தி ரோல்ஸ் செய்யலாம். குழந்தைகள் விரும்பிச் சாப்பிடுவார்கள்
  6. சில்லி_சப்பாத்தி தேவையான பொருள்கள் - சப்பாத்தி - 4 பெரிய வெங்காயம் - 2 தக்காளி - 1 பச்சை மிளகாய் - 1 தக்காளி சாஸ் - 2 மேஜைக்கரண்டி மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி சிவப்பு புட் கலர் - சிறிது மல்லித்தழை - சிறிது உப்பு - சிறிது எண்ணெய் - 4 மேஜைக்கரண்டி செய்முறை - 1.சப்பாத்தி, தக்காளி, வெங்காயம் மூன்றையும் சிறிய துண்டுகளாக வெட்டி வைக்கவும். 2. பச்சை மிளகாயை இரண்டாக கீறி வைக்கவும். புட் கலரை சிறிது தண்ணீர் விட்டு கரைத்து வைக்கவும். 3.அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் சிறிது உப்பு சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கியவுடன் தக்காளி சேர்த்து வதக்கவும். 4.தக்காளி நன்கு வதங்கியதும் மிளகாய் தூள், தக்காளி சாஸ், கரைத்து வைத்துள்ள கலர் தண்ணீர் எல்லாவற்றயும் சேர்த்து ஒரு நிமிடம் கிளறவும். 5.பிறகு அதனுடன் சப்பாத்தி துண்டுகளை சேர்த்து நன்கு கிளறி இறுதியில் மல்லித்தழை தூவி அடுப்பை அணைக்கவும். சுவையான சில்லி சப்பாத்தி ரெடி.
  7. சத்தான ப்ரோக்கோலி கேரட் சாலட் ப்ரோக்கோலி, கேரட்டில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று இது இரண்டையும் வைத்து சுவையான சாலட் செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : ப்ரோக்கோலி - 100 கிராம் கேரட் - 50 கிராம் பெங்களூர் தக்காளி - 1 பெரிய வெங்காயம் - 1 உப்பு - தேவையான அளவு புதினா - சிறிதளவு கொத்தமல்லித்தழை - சிறிதளவு குடைமிளகாய் - 50 கிராம் விதைகள் நீக்கவும் மிளகுத் தூள் - தேவையான அளவு. செய்முறை : ப்ரோக்கோலியை தண்டுடன் நறுக்கி வைக்கவும். வெங்காயம், புதினா, கொத்தமல்லி, குடைமிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும். தக்காளியை துண்டுகளாக நறுக்கி வைக்கவும். நறுக்கிய ப்ரோக்கோலியைக் கடாயில் சேர்த்து அரை பதம் வேகும் வரை வதக்கவும். அதனுடன் நறுக்கிய குடைமிளகாயைச் சேர்த்து வதக்கி இறக்கவும். ஒரு பாத்திரத்தில் வதக்கிய குடைமிளகாய், ப்ரோக்கோலி, கேரட், தக்காளி, பெரிய வெங்காயம், போதுமான உப்பு, மிளகுத்தூளை சேர்த்து நன்றாக பிரட்டவும். கடைசியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை, புதினா சேர்த்து காய்கறிகள் மீது தூவினால் சுவையான ப்ரோக்கோலி சாலட் ரெடி.
  8. சப்பாத்திக்கு சத்தான பாலக் கீரை பருப்பு கூட்டு சப்பாத்தி, சாதத்திற்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் இந்த பாலக் கீரை பருப்பு கூட்டு. இந்த கீரை கூட்டை எப்படி செய்வது என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : பாலக்கீரை - 2 கைப்பிடி, துவரம்பருப்பு - 1/4 கப், தேங்காய்ப்பூ - 2 டேபிள்ஸ்பூன், பூண்டு பற்கள் - 4, மிளகாய்ப்பொடி, மல்லிப்பொடி - தலா 1/2 டீஸ்பூன், சீரகப்பொடி- 1 டீஸ்பூன், மஞ்சள்பொடி, உப்பு, எண்ணெய் - தேவைக்கு தாளிக்க : காய்ந்த மிளகாய் - 2 கடுகு, உளுந்தம் பருப்பு - தலா 1/4 டீஸ்பூன். செய்முறை : பாலக்கீரையை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும். சீரகப்பொடி, தேங்காய்ப்பூவை நைசாக அரைத்து கொள்ளவும். துவரம்பருப்பை நன்றாக கழுவி மஞ்சள்பொடி, பூண்டு சேர்த்து மூழ்கும் வரை நீர் விட்டு மலர வேகவைத்து எடுக்கவும். பாலக்கீரையை நறுக்கி நீர் சேர்த்து மல்லிப்பொடி, மிளகாய்ப்பொடி, உப்பு சேர்த்து சிறிது நேரம் வேக விட்டு இறக்கி மத்தினால் மசிக்கவும். அல்லது மிக்சியில் சுற்றவும். வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் காய்ந்த மிளகாய், கடுகு, உளுந்தம் பருப்பு போட்டு தாளித்து பருப்புடன் கீரை, அரைத்த தேங்காய் சேர்த்து கொதித்ததும் இறக்கிப் பரிமாறவும். சூப்பரான பாலக் கீரைக் கூட்டு ரெடி. இந்தப் பாலக் கீரை கூட்டை சப்பாத்திக்கு சைடு டிஷ் ஆகவும் மதிய உணவுடனும் சேர்த்துச் சாப்பிடலாம்.
  9. தயிர் சாதத்திற்கு சூப்பரான பூண்டு ஊறுகாய் ஊறுகாயில் நிறைய வகைகள் உள்ளன. அதில் ஒன்றாக பூண்டு ஊறுகாயை எப்படி எளிமையான முறையில் வீட்டில் செய்வதென்று பார்க்கலாம். தேவையான பொருட்கள்: பூண்டு - 1 கப் எலுமிச்சை சாறு - 1/2 கப் சீரகம் - 1 1/2 டேபிள் ஸ்பூன் வெந்தயம் - 1 டேபிள் ஸ்பூன் மல்லி - 2 டேபிள் ஸ்பூன் உப்பு - தேவையான அளவு மிளகாய் தூள் - 4 டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன் நல்லெண்ணெய் - 1/4 கப் செய்முறை : பூண்டை தோல் உரித்து தனியாக வைக்கவும். சீரகம், வெந்தயம், மல்லியை தனித்தனியாக கடாயில் போட்டு வாசனை வரும் வரை வறுத்து ஆறியதும் மிக்சியில் போட்டு பொடித்து கொள்ளவும். ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெயை ஊற்றி காய்ந்ததும், பூண்டை போட்டு வதக்க வேண்டும். பூண்டு வதங்கம் போதே அரைத்து வைத்துள்ள பொடியை போட்டு அதனுடன், உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து நன்கு கிளறிவிட வேண்டும். அடுத்து எலுமிச்சை சாற்றை விட்டு, நன்கு கெட்டியாகும் வரை அடுப்பில் வைக்க வேண்டும். சற்று கெட்டியானதும், இறக்கி அதனை குளிர வைத்து, ஒரு காற்றுப் புகாத பாட்டிலில் போட்டு, பயன்படுத்த வேண்டும். இப்போது பூணடு ஊறுகாய் தயார்!!!
  10. மாலை நேர ஸ்நாக்ஸ் ஸ்பெஷல் தயிர் வடை வடையை சட்னி வைத்து சாப்பிடுவதற்கு பதிலாக அதில் தயிர், மசாலா தூள், காரா பூந்தி சேர்த்து மாலை நேரத்தில் சாப்பிட்டால் சூப்பராக இருக்கும். தேவையான பொருட்கள் : முழு வெள்ளை உளுந்து - ஒரு கப், கெட்டித் தயிர் - 2 கப், பால் - அரை கப், பச்சை மிளகாய் - 2, பாதாம், முந்திரி - தலா 8, மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், சீரகத்தூள் - அரை டீஸ்பூன், காரா பூந்தி - தேவைக்கு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு. செய்முறை : உளுந்தை நன்றாக கழுவி ஒரு மணி நேரம் ஊறவிட்டு, கொஞ்சம் கொஞ்சமாக நீர் தெளித்து, மாவு பொங்கி வர ஆட்டி எடுக்கவும். தயிரை நன்கு கடைந்து அதில் பாதியளவு எடுத்து… பால், சிறிது உப்பு சேர்த்துக் கலந்து வைக்கவும். முந்திரி, பாதாம், பச்சை மிளகாய் மூன்றையும் சேர்த்து நைஸான விழுதாக அரைக்கவும். இந்த விழுதுடன் சிறிதளவு உப்பு, மீதமுள்ள தயிர் சேர்த்து நன்கு கலக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் உளுந்து மாவை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து வடைகளாகத் தட்டி எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும். பொரித்த வடைகளை பால் - தயிர் கலவையில் 10 நிமிடம் ஊறவைத்து எடுத்து, ஒரு அகலமான தட்டில் வைக்கவும். பரிமாறுவதற்கு 15 நிமிடம் முன்பு அதன் மேல் முந்திரி - தயிர் கலவையை ஊற்றி, மேலே சீரகத்தூள், மிளகாய்த்தூள் காரா பூந்தி தூவி பரிமாறவும். சூப்பரான ஸ்பெஷல் தயிர் வடை ரெடி.
  11. குழந்தைகளுக்கு விருப்பமான சிக்கன் பொடிமாஸ் குழந்தைகளுக்கு சிக்கன் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று குழந்தைகளுக்கு பிடித்தமான சிக்கன் பொடிமாஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையானப் பொருட்கள் : சிக்கன் துண்டுகள் - அரை கிலோ, சின்ன வெங்காயம் - 50 கிராம், பச்சை மிளகாய் - ஐந்து, எண்ணெ‌ய் - அரை கப், கறிவேப்பிலை - இரண்டு கொத்து, கடுகு - ஒரு டேபிள் ஸ்பூன், உளுந்து - அரை டீஸ்பூன், சீரகம் - ஒரு டேபிள் ஸ்பூன், கடலைப் பருப்பு - 4 டேபிள் ஸ்பூன், தேங்காய் துருவல் - தேவையான அளவு, உப்பு - தேவையான அளவு. செய்முறை : சிக்கனை நன்றாக கழுவி கொள்ளவும். சின்ன வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும். சிக்கனை சிறிதளவு உப்பு சேர்த்து வேகவைத்து எடுத்துக்கொள்ளவும். வேக வைத்த சிக்கனை உதிர்த்து கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து எ‌ண்ணெ‌ய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுந்து, சீரகம் சேர்த்து தாளிக்கவும். எல்லாம் நன்கு சிவந்ததும் பச்சை மிளகாய், வெங்காயம், கறிவேப்பிலை போட்டு இரண்டு நிமிடம் வதக்கவும். வெங்காயம் சற்று வதங்கியதும் சிக்கன் துண்டுகளைப் போட்டு, ஐந்து நிமிடம் வதக்கவும். கடைசியாக தேங்காய்த் துருவல் சேர்த்து இரண்டு நிமிடம் கழித்து இறக்கி பரிமாறவும். சூப்பரான கோழி பொடிமாஸ் ரெடி.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.