Jump to content

நவீனன்

வரையறுக்கப்பட்ட அனுமதி
  • Posts

    85545
  • Joined

  • Last visited

  • Days Won

    480

Everything posted by நவீனன்

  1. சுக்கு மிளகுக் குழம்பு செய்வது எப்படி வயிற்று உபாதைகளுக்கு இந்த சுக்கு மிளகுக் குழம்பை அடிக்கடி செய்து சாப்பிடலாம். சூடான சாதத்தில் இந்த குழம்பை ஊற்றி சாப்பிட்டால் சூப்பராக இருக்கும். தேவையான பொருட்கள் : மிளகு - 1 டீஸ்பூன் சுக்கு - அரை டீஸ்பூன் மிளகாய் வற்றல் - 2 கறிவேப்பிலை - 2 கொத்து உளுத்தம் பருப்பு, துவரம் பருப்பு - தலா 1 டீஸ்பூன் பூண்டு - 4 பல் தனியா - 1 டீஸ்பூன் புளி - ஒரு எலுமிச்சை அளவு எண்ணெய், உப்பு - தேவையான அளவு செய்முறை : புளியை கரைத்து கொள்ளவும். மிளகு, சுக்கு, மிளகாய் வற்றல், கறிவேப்பிலை, உளுத்தம் பருப்பு, துவரம் பருப்பு, தனியா ஆகியவற்றைச் சிறிதளவு எண்ணெயில் தனித்தனியாக வாசனை வரும் வரை வறுத்து ஆற வைக்கவும். நன்றாக ஆறியதும் அவற்றுடன் பூண்டு சேர்த்து மிக்சியில் போட்டு நைசாக அரைத்து கொள்ளவும். கடாயை அடுப்பில் வைத்து நல்லெண்ணெய் ஊற்றி கொதிக்க ஆரம்பித்தவுடன் அதில் கரைத்த புளிக் கரைசலை ஊற்றி கொதிக்க விடவும். புளிக்கரைசல் நன்றாக கொதிக்க ஆரம்பித்தவுடன் அதில் தேவையான அளவு உப்பு சேருங்கள். அடுத்து அதில் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்துத் தளதளவெனக் கொதிக்கவிடுங்கள். குழம்பில் எண்ணெய் தனியாகப் பிரிந்து வரும்போது இறக்கி சிறிதளவு வெல்லம் சேர்த்து இறக்கவும். சூப்பரான சுக்கு மிளகுக் குழம்பு ரெடி. https://www.maalaimalar.com
  2. குழந்தைகளுக்கு விருப்பமான சாக்லெட் பன்னகோட்டா குழந்தைகளுக்கு சாக்லெட் பன்னகோட்டா என்றால் மிகவும் பிடிக்கும். இன்று இந்த சாக்லெட் பன்னகோட்டாவை வீட்டிலேயே செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : ஃப்ரெஷ் கிரீம் - 1 கப், பால் - 50 மி.லி., தண்ணீர் - 2 டேபிள்ஸ்பூன், சைனா கிராஸ் - 1 கிராம், குக்கிங் சாக்லெட் - 100 கிராம், சர்க்கரை - 50 கிராம், வெனிலா எசென்ஸ் - 1/4 டீஸ்பூன். செய்முறை : குக்கிங் சாக்லெட்டை பொடியான துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும். அடுப்பில் கடாயை வைத்து அதில் தண்ணீர் ஊற்றி கொதிக்க விட்டு சைனா கிராஸ் சேர்க்கவும். சைனா கிராஸ் தண்ணீருடன் நன்கு கலந்து கரையும் நிலைக்கு வரும் வரை கொதிக்க விடவும். இன்னொரு கடாயில் கிரீம், பால், சர்க்கரை சேர்த்து மிதமான தீயில், இந்தக் கலவை கரையும் வரை கொதிக்க வைக்கவும். நன்றாக கொதிக்க ஆரம்பித்தவுடன் இத்துடன் நறுக்கிய சாக்லெட், வெனிலா எசென்ஸ் இரண்டையும் கலந்து சாக்லெட் முழுவதுமாக உருகும் வரை கைவிடாமல் கலக்கவும். திக்கான பதம் வந்தவுடன் இந்த கலவையை கண்ணாடி டம்ளர்களில் ஊற்றி 5 மணி நேரம் குளிர வைக்கவும். சூப்பரான சாக்லெட் பன்னகோட்டா ரெடி. https://www.maalaimalar.com
  3. ஆஹா... என்ன ருசி! திவ்யா சுவைமிக்க பிரியாணியாக இருந்தாலும் அதற்கு சைட் டிஷ்ஷாக வெங்காயப் பச்சடி தேவைப்படுகிறது. அதேபோல புரோட்டாவுக்குக் குருமா, சப்பாத்திக்கு தால், இடியாப்பத்துக்குத் தேங்காய்ப்பால், காரக் குழம்புக்குப் பொரியல், சாம்பாருக்கு வறுவல், மோர் சாதத்துக்கு மிளகாய் வற்றல் என்று குறிப்பிட்ட காம்பினேஷனுடன் சாப்பிட்டுப் பழகிவிட்டோம் நாம். இந்த ரசனைக்கேற்ப பிரட்டல், வதக்கல், கூட்டு, வறுவல், மசாலா என்று ருசி அள்ளும் சைட் டிஷ் ரெசிப்பிகளைச் சுவைக்கத் தூண்டும் படங்களுடன் அளித்திருக்கிறார் தூத்துக்குடியைச் சேர்ந்த சமையல் கலைஞர் திவ்யா. காலிஃப்ளவர் முட்டை பிரட்டல் தேவையானவை: காலிஃப்ளவர் - மீடியம் சைஸ் காலிஃப்ளவரில் பாதி (சிறிய பூக்களாக நறுக்கவும்) முட்டை - ஒன்று வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்) சீரகம் - அரை டீஸ்பூன் கறிவேப்பிலை - சிறிதளவு சீரகத்தூள் - கால் டீஸ்பூன் மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன் மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன் பட்டை - ஒன்று (சிறியது) அன்னாசி மொட்டு - ஒன்று கல்பாசி - ஒரு சிட்டிகை அல்லது ஒரு சிறிய இலை எண்ணெய் - 6 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு மசாலா அரைக்க: தேங்காய் - 2 இன்ச் நீளத் துண்டு பட்டை - ஒன்று (சிறியது) தோல் சீவிய இஞ்சி - சிறிய துண்டு பூண்டு - 5 பல் செய்முறை: மசாலா அரைக்கக் கொடுத்துள்ள பொருள்களை ஒன்றாகச் சேர்த்துச் சிறிதளவு தண்ணீர்விட்டு விழுதாக அரைத்து எடுக்கவும். முட்டையை உடைத்து ஊற்றிச் சிறிதளவு உப்பு சேர்த்து நன்றாக அடித்து எடுக்கவும். தண்ணீரில் உப்பு, மஞ்சள்தூள், காலிஃப்ளவர் பூக்களைச் சேர்த்து நன்கு கொதிக்கவிடவும். பிறகு இறக்கி, நீரை வடிகட்டி, பூக்களைத் தனியாக எடுக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு பட்டை, சீரகம், அன்னாசி மொட்டு, கல்பாசி சேர்த்து வதக்கவும். அதனுடன் கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும். பிறகு காலிஃப்ளவர் பூக்கள், மிளகாய்த்தூள், சீரகத்தூள், அரைத்த விழுது, தேவையான உப்பு சேர்த்து வதக்கவும். பச்சை வாசனை போன பிறகு ஓரமாக வாணலியில் ஒதுக்கிவிட்டு, நடுவில் சிறிதளவு எண்ணெய்விட்டு உடைத்த முட்டையைச் சேர்த்து நன்றாக வதக்கவும். முட்டை முக்கால்வாசி வெந்ததும் காலிஃப்ளவர் கலவையுடன் சேர்த்து நன்றாகக் கிளறி இறக்கிப் பரிமாறவும். இது, பொடிமாஸ் போல இருக்கும். முட்டை இல்லாமலும் செய்யலாம். கத்திரிக்காய் வதக்கல் தேவையானவை: கத்திரிக்காய் - 5 (நீளவாக்கில் மெல்லிய துண்டுகளாக நறுக்கவும்) மிளகாய்த்தூள் - ஒன்றரை டீஸ்பூன் எண்ணெய் - 6 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு செய்முறை: வாணலியில் எண்ணெய்விட்டுச் சூடாக்கி, கத்திரிக்காய் சேர்த்து நன்றாக வதக்கவும். அதனுடன் மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து வதக்கவும். பிறகு மூடி போட்டுக் குறைந்த தீயில் ௭ட்டு நிமிடங்கள் நன்றாக வேகவிடவும். நடுநடுவே திறந்து கிளறிவிடவும். (இல்லையெனில் கருகிப்போய்விடும்). நன்றாகச் சுருள வதங்கியதும் இறக்கிப் பரிமாறவும். புடலங்காய் - தேங்காய்ப்பால் கூட்டு தேவையானவை: புடலங்காய் - ஒன்று (தோல் சீவி, விதை நீக்கி, சிறிய துண்டுகளாக்கவும்) தோலுரித்த சின்ன வெங்காயம் - 5 (பொடியாக நறுக்கவும்) முதல் தேங்காய்ப்பால் - ஒரு கப் இரண்டாவது தேங்காய்ப்பால் – ஒன்றரை கப் கறிவேப்பிலை - சிறிதளவு சீரகம் - அரை டீஸ்பூன் கடுகு - அரை டீஸ்பூன் சிறிய பச்சை மிளகாய் - ஒன்று (இரண்டாகக் கீறவும்) உப்பு - தேவையான அளவு எண்ணெய் - 2 டீஸ்பூன் செய்முறை: வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, சீரகம், கறிவேப்பிலை, பச்சை மிளகாய் தாளிக்கவும். அதனுடன் வெங்காயம், புடலங்காய் துண்டுகளைச் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும். பிறகு இரண்டாவது தேங்காய்ப்பால், உப்பு சேர்த்து மூடி வேகவிடவும். காய் நன்கு வெந்த பிறகு முதல் தேங்காய்ப்பாலை ஊற்றிக் கொதிக்கவிடவும். தேங்காய்ப்பால் வற்றியதும் இறக்கவும். பனீர் - கேப்ஸிகம் புர்ஜி தேவையானவை: பனீர் - 100 கிராம் வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கவும்) தக்காளி - ஒன்று (பொடியாக நறுக்கவும்) பொடியாக நறுக்கிய குடமிளகாய் - 2 டேபிள்ஸ்பூன் பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கவும்) தோல் சீவி, துருவிய இஞ்சி - ஒரு டீஸ்பூன் பூண்டு - 2 பல் (பொடியாக நறுக்கவும்) மிளகாய்த்தூள் - கால் டீஸ்பூன் மல்லித்தூள் (தனியாத்தூள்) - அரை டீஸ்பூன் கரம் மசாலாத்தூள் - கால் டீஸ்பூன் சீரகத்தூள் - கால் டீஸ்பூன் (விரும்பினால்) கொத்தமல்லித்தழை – சிறிதளவு சீரகம் - ஒரு டீஸ்பூன் எண்ணெய் - 2 டீஸ்பூன் நெய் - 2 டீஸ்பூன் (விரும்பினால்) உப்பு - அரை டீஸ்பூன் செய்முறை: வீட்டில் செய்த பனீராக இருந்தால் விரல்களால் நன்கு பிசையவும். கடையில் வாங்கிய பனீராக இருந்தால் வெந்நீரில் ஒரு நிமிடம் போட்டு எடுத்துத் துருவவும். வாணலியில் எண்ணெய், நெய்விட்டுச் சூடாக்கி, சீரகம் தாளிக்கவும். அதனுடன் இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். பிறகு வெங்காயம், தக்காளி, குடமிளகாய் சேர்த்துச் சிறிது நேரம் வதக்கவும். அதனுடன் மிளகாய்த்தூள், மல்லித்தூள், கரம் மசாலாத்தூள், சீரகத்தூள், உப்பு சேர்த்துப் பச்சை வாசனை போக வதக்கவும். பிறகு பனீர், கொத்தமல்லித்தழை சேர்த்துக் கிளறி இறக்கிப் பரிமாறவும். புடலங்காய் - பாசிப்பருப்புக் கூட்டு தேவையானவை: புடலங்காய் - 200 கிராம் (தோல் சீவி, விதை நீக்கி, சிறிய துண்டுகளாக்கவும்) பாசிப்பருப்பு - 2 கைப்பிடி அளவு தோலுரித்த சின்ன வெங்காயம் - 5 தக்காளி - ஒன்று (பொடியாக நறுக்கவும்) கறிவேப்பிலை - சிறிதளவு பச்சை மிளகாய் - ஒன்று கடுகு - அரை டீஸ்பூன் சீரகம் - முக்கால் டீஸ்பூன் பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை மஞ்சள்தூள் - 2 சிட்டிகை எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன் உப்பு - தேவையான அளவு செய்முறை: தக்காளியுடன் வெங்காயம், அரை டீஸ்பூன் சீரகம் சேர்த்து மிக்ஸியில் ஒரு சுற்றுவிட்டு எடுக்கவும். (விழுதாக அரைக்கக் கூடாது). குக்கரில் பாசிப்பருப்புடன் மஞ்சள்தூள், உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்துப் பருப்பு மூழ்கும் அளவு தண்ணீர்விட்டுக் குழைவாக வேகவைத்து எடுக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு, கறிவேப்பிலை, கீறிய பச்சை மிளகாய், மீதமுள்ள சீரகத்தை தாளிக்கவும். அதனுடன் அரைத்த தக்காளி - வெங்காயக் கலவையைச் சேர்த்துப் பச்சை வாசனை போக வதக்கவும். பிறகு, புடலங்காய் சேர்த்து வதக்கி, தேவையான அளவு தண்ணீர், உப்பு சேர்த்து வேகவிடவும். புடலங்காய் வெந்ததும், வேகவைத்த பாசிப்பருப்பு சேர்த்து நன்றாகக் கிளறி, கலவை கெட்டியானதும் இறக்கவும். உருளைக்கிழங்கு - தேங்காய்ப்பால் மசாலா தேவையானவை: உருளைக்கிழங்கு - 3 (வேகவைத்து, தோல் நீக்கி மசிக்கவும்) நறுக்கிய வெங்காயம் - ஒரு டீஸ்பூன் கறிவேப்பிலை - சிறிதளவு கொத்தமல்லித்தழை - சிறிதளவு தேங்காய்ப்பால் - ஒரு கப் மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன் மல்லித்தூள் (தனியாத்தூள்) - முக்கால் டீஸ்பூன் மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன் பட்டை - 2 சிறிய துண்டு கடுகு - அரை டீஸ்பூன் எண்ணெய் - 5 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு செய்முறை: வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு, பட்டை, கறிவேப்பிலை தாளிக்கவும். அதனுடன் வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு மிளகாய்த்தூள், மல்லித்தூள், மஞ்சள்தூள், உப்பு சேர்த்துப் பச்சை வாசனை போக வதக்கவும் (தேவையானால் சிறிதளவு தண்ணீர் சேர்க்கலாம்). அதனுடன் தேங்காய்ப்பால் சேர்த்து நன்றாகக் கிளறவும். பிறகு, மசித்த உருளைக்கிழங்கு சேர்த்து, அடுப்பை சிறு தீயில் வைத்து வேகவிடவும். தேங்காய்ப்பால் நன்கு வற்றியதும் கொத்தமல்லித்தழை சேர்த்துக் கிளறி இறக்கவும். வெண்டைக்காய் கிரிஸ்பி ஃப்ரை தேவையானவை: வெண்டைக்காய் - 300 கிராம் அரிசி மாவு - அரை கப் சாட் மசாலாத்தூள் - கால் டீஸ்பூன் சீரகத்தூள் - 2 டீஸ்பூன் மிளகுத்தூள் அல்லது மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு செய்முறை: வெண்டைக்காயை ஈரத் துணியால் துணியால் துடைத்து வைக்கவும். பிறகு ஒரு இன்ச் துண்டுகளாக்கவும். வெண்டைக்காயுடன் அரிசி மாவு, சாட் மசாலாத்தூள், சீரகத்தூள், மிளகுத்தூள் அல்லது மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து நன்கு கலக்கவும். பிறகு, சிறிதளவு தண்ணீர் தெளித்து நன்றாகப் புரட்டவும். வாணலியில் எண்ணெயைக் காயவைத்து வெண்டைக்காய் துண்டுகளைப் போட்டுப் பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும். உருளை 65 தேவையானவை: உருளைக்கிழங்கு - ஒன்று (வேகவைத்து, தோல் நீக்கி, சிறிய துண்டுகளாக்கவும்) மைதா மாவு - 2 டீஸ்பூன் அரிசி மாவு - 2 டீஸ்பூன் சோள மாவு (கார்ன் ஃப்ளார்) - ஒரு டீஸ்பூன் மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன் சீரகத்தூள் - முக்கால் டீஸ்பூன் கரம் மசாலாத்தூள் - கால் டீஸ்பூன் சிவப்பு ஃபுட் கலர் - 2 சிட்டிகை (விரும்பினால்) உப்பு - தேவையான அளவு எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு செய்முறை: மைதா மாவு, அரிசி மாவு, சோள மாவு, மிளகாய்த்தூள், சீரகத்தூள், கரம் மசாலாத்தூள், சிவப்பு கலர், உப்பு, சிறிதளவு தண்ணீர் ஆகியவற்றைச் சேர்த்துக் கலக்கவும், அதனுடன் உருளைக்கிழங்கு துண்டுகளைப் போட்டு நன்றாகப் புரட்டவும். வாணலியில் எண்ணெயைக் காயவைத்து உருளைக்கிழங்குத் துண்டுகளைப் போட்டுப் பொரித்தெடுக்கவும். சிறு உருளை - மிளகு வறுவல் தேவையானவை: சிறிய உருளைக்கிழங்கு - 200 கிராம் மிளகுத்தூள் - அரை டேபிள்ஸ்பூன் மிளகு - அரை டீஸ்பூன் (ஒன்றிரண்டாகத் தட்டவும்) சீரகத்தூள் - ஒரு டீஸ்பூன் தோல் சீவிய இஞ்சி - ஒரு இன்ச் துண்டு (நசுக்கவும்) பூண்டு - 2 பல் (தட்டவும்) கறிவேப்பிலை - சிறிதளவு எண்ணெய் - 8 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு செய்முறை: உருளைக்கிழங்கை நன்கு கழுவி, சிறிய க்யூப்ஸ் அல்லது துண்டுகளாக வெட்டவும். தோலை உரிக்கத் தேவை இல்லை (விருப்பப்பட்டால் உரித்துக்கொள்ளலாம்). பாத்திரத்தில் தண்ணீருடன் உப்பு சேர்த்து நன்றாகக் கலக்கவும். அதில் உருளைக்கிழங்கு துண்டுகளைச் சேர்த்து 10 நிமிடங்கள் ஊறவிடவும். (இப்படிச் செய்வதால் வறுத்த உருளைக்கிழங்கு மொறுமொறுப்பாக இருக்கும்). வாணலியில் எண்ணெய்விட்டு கறிவேப்பிலை, இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்கவும். பிறகு உருளைக்கிழங்கு துண்டுகள், மிளகுத்தூள், சீரகத்தூள், உப்பு சேர்த்து அடுப்பை சிறு தீயில் வைத்து வதக்கவும். பதினைந்து நிமிடங்கள் கழித்து வெந்த பிறகு மிளகுத்தூள் சேர்த்து நன்றாக ஒரு நிமிடம் புரட்டி இறக்கவும். வெண்டைக்காய் புளிக்கூட்டு தேவையானவை: வெண்டைக்காய் - 10 தோலுரித்த சின்ன வெங்காயம் - 5 (பொடியாக நறுக்கவும்) பெரிய வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்) தக்காளி - ஒன்று (பொடியாக நறுக்கவும்) பூண்டு - ஒரு பல் (சிறியது) இஞ்சி - பூண்டு விழுது - அரை டீஸ்பூன் கறிவேப்பிலை - சிறிதளவு புளி - சிறிய நெல்லிக்காய் அளவு மிளகாய்த்தூள் - கால் டீஸ்பூன் (விருப்பப்பட்டால் அரை டீஸ்பூன் சேர்க்கலாம்) சீரகம் - கால் டீஸ்பூன் கடுகு - கால் டீஸ்பூன் எண்ணெய் - 4 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு செய்முறை: வெண்டைக்காயைச் சுத்தம் செய்து ஒரு இன்ச் துண்டுகளாக்கவும். புளியை ஊறவைத்து, கரைத்து வடிகட்டவும். வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு, சீரகம், கறிவேப்பிலை தாளிக்கவும். அதனுடன் சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம், பூண்டு, இஞ்சி - பூண்டு விழுது, உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கவும். பிறகு தக்காளி சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும். அதனுடன் வெண்டைக்காய் சேர்த்து 2 நிமிடங்கள் நன்கு வதக்கி, சிறிதளவு தண்ணீர் தெளித்து வேகவிடவும். பிறகு, புளிக்கரைசலை ஊற்றிக் கொதிக்கவைத்து, நீர் ஓரளவு வற்றியதும் இறக்கவும். https://www.vikatan.com/
  4. சாதத்திற்கு அருமையான நண்டு வறுவல் தோசை, இட்லி, நாண், சப்பாத்தி, சாம்பார் சாதம், சாதத்திற்கு தொட்டுக்கொள்ள அருமையான நண்டு வறுவல் செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : நண்டு - அரை கிலோ சின்ன வெங்காயம் - 50 கிராம் தக்காளி - 2 மிளகாய்த் தூள் - ஒரு டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு மஞ்சள் தூள் - சிறிதளவு வதக்கி அரைக்க: பூண்டு பல் - 10 மிளகு - 2 டீஸ்பூன் தாளிக்க: நல்லெண்ணெய் - தேவையான அளவு சோம்பு - அரை டீஸ்பூன் கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை - சிறிதளவு செய்முறை : வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும். அரைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சிறிது எண்ணெயில் வதக்கி ஆறவைத்து நைசாக அரைத்து கொள்ளவும். நண்டை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு சோம்பு தாளித்து, வெங்காயம் போட்டு சிவக்க வதக்குங்கள். வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளியை சேர்த்து நன்றாக வதக்கவும். அடுத்து அதில் அரைத்த மசாலா, மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்துப் பச்சை வாசனை போகும்வரை வதக்குங்கள். அடுத்து அதில் நண்டு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிடுங்கள். நண்டு வெந்து, மசாலா கெட்டியாகி நண்டுடன் சேர்ந்ததும் கொத்தமல்லித்தழை தூவி பரிமாறவும். சூப்பரான நண்டு வறுவல் ரெடி. https://www.maalaimalar.com
  5. காலிஃப்ளவர் கோரிஸன்ட்ஸ் தேவையானவை: மைதா மாவு – ஒரு கப் காய்ச்சி ஆறவைத்த பால் – அரை கப் வெண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன் பேக்கிங் பவுடர் – அரை டீஸ்பூன் உப்பு – தேவையான அளவு ஃபில்லிங் செய்ய: காலிஃப்ளவர் துருவல் – ஒரு கப் பொடியாக நறுக்கிய குடமிளகாய் – அரை கப் ஸ்வீட் கார்ன் முத்துகள் – ஒரு டீஸ்பூன் ரெட் சில்லி ஃப்ளேக்ஸ் – ஒரு டீஸ்பூன் சீரகத்தூள் – ஒரு டீஸ்பூன் இஞ்சி - பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன் உப்பு – தேவையான அளவு செய்முறை: மைதா மாவுடன் பால், பேக்கிங் பவுடர், உப்பு, சிறிதளவு வெண்ணெய் சேர்த்துக் கெட்டியாகப் பிசையவும். வாணலியில் சிறிதளவு வெண்ணெய்விட்டு உருக்கி, ஃபில்லிங் செய்ய கொடுத்துள்ள பொருள்களைச் சேர்த்து வதக்கி ஆறவிடவும். மாவை உருண்டைகளாக்கவும். ஓர் உருண்டையைப் பெரிய வட்டமாகத் தேய்க்கவும். அதன்மீது சிறிதளவு வெண்ணெய் தடவி மைதா தூவவும். இதன் ஒரு பாதியை மையப் பகுதியை நோக்கி மடிக்கவும். இரண்டாவது பகுதியையும் அதேபோல் மடிக்கவும். வலது பக்கத்திலிருந்து இடது பக்கமாக, இடது பக்கத்திலிருந்து வலது பக்கமாகக் கிடைமட்டமாக (horizantal) மடிக்கவும். இப்போது சதுர வடிவம் கிடைக்கும். பிறகு, மீண்டும் இதைப் பெரிய சதுரமாகத் தேய்த்து, குறுக்காக வெட்டி மெல்லிய முக்கோண வடிவத் துண்டுகளாக்கவும்.அதன் அகலமான ஓரத்தில் சிறிதளவு ஃபில்லிங்கை வைத்துப் பிறை நிலா வடிவில் உருட்டி, ஓரங்களை லேசாக வளைத்து நிலா வடிவில் செய்யவும். இதேபோல் எல்லா உருண்டைகளையும் செய்துகொள்ளவும். இவற்றை வெண்ணெய் தடவிய பேக்கிங் ட்ரேயில் இடைவெளிவிட்டு அடுக்கவும். பிறகு 180 டிகிரி ப்ரீஹீட் செய்த அவன் (oven) உள்வைத்து 20 நிமிடங்கள் `பேக்’ செய்து எடுக்கவும். மேலே சிறிதளவு வெண்ணெய் தடவி, தக்காளி சாஸ் அல்லது மயோனைஸுடன் பரிமாறவும். https://www.vikatan.com
  6. சூப்பரான மீன் குருமா செய்வது எப்படி அ-அ+ சூடான சாதத்தில் மீன் குருமா சேர்த்து சாப்பிட்டால் சூப்பராக இருக்கும். இன்று இந்த மீன் குருமாவை செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : (வாழை மீன் அல்லது நெத்திலி மீன் மட்டும்) வாழை மீன் - 3 தேங்காய் - அரை மூடி பச்சை மிளகாய் - 20 வெங்காயம் - 2 நாட்டுத் தக்காளி - 4 இஞ்சி, பூண்டு விழுது - 2 டீஸ்பூன் மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன் சோம்பு - 1 டீஸ்பூன் புளிப்பு மாங்காய் - 1 கொத்தமல்லி - ஒரு கையளவு செய்முறை : வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும். பச்சை மிளகாயை நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும். வாழை மீனை நன்றாக கழுவி துண்டுகளாக வெட்டி கொள்ளவும். தேங்காயுடன் சோம்பு சேர்த்து மிக்சியில் போட்டு நைசாக அரைத்து கொள்ளவும். மாங்காயை பெரிய துண்டுகளாக வெட்டி கொள்ளவும். கடாயில் எண்ணெய் சூடானதும் சோம்பு போட்டு தாளித்த பின் வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு நன்றாக வதக்கவும். வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கி பச்சை வாசனை போனவுடன் மாங்காய், தக்காளியை சேர்த்து வதக்கவும். * அடுத்து அதில் மஞ்சள் தூளை சேர்த்து அரைத்த தேங்காய் கலவை, சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாக கொதித்து பச்சை வாசனை போனவுடன் மீன் போட்டு 10 நிமிடம் மிதமான தீயில் வைத்து கடைசியாக கொத்தமல்லி தழை தூவி இறக்கவும். * சுவையான மீன் குருமா ரெடி. https://www.maalaimalar.com/
  7. சத்து மாவு - முளைக்கட்டிய பச்சைப்பயறு புட்டு அ-அ+ சத்து மாவு - முளைக்கட்டிய பச்சைப்பயறு புட்டு இரும்புச்சத்து, கால்சியம் நிறைந்தது. உடலுக்கு தேவையான பலத்தை தரவல்லது. இதன் செய்முறையை பார்க்கலாம். தேவையான பொருட்கள் : சத்து மாவு - ஒரு கப், தேங்காய்த் துருவல் - கால் கப், உப்பு - சிட்டிகை, முளைக்கட்டிய பச்சைப்பயறு - கால் கப், நேந்திரன் பழத் துண்டுகள் - ஒரு கப். செய்முறை : வெறும் வாணலியில் சத்து மாவை வாசனை வரும் வரை வறுத்து எடுக்கவும். வறுத்த மாவில் உப்பு, வெது வெதுப்பான தண்ணீர் சேர்த்து உதிரியாக புட்டு மாவு பதத்தில் கலந்து கொள்ளவும். அதனுடன் பயறு சேர்த்து கலக்கவும். கலந்த மாவை இட்லி தட்டில் பரத்தி ஆவியில் வேக வைத்து எடுக்கவும். அதனுடன் தேங்காய்த் துருவல், நேந்திரன் பழத்துண்டுகள் சேர்த்து கலக்கவும். கடலைக் கறியுடன் பரிமாறலாம். https://www.maalaimalar.com
  8. எடையைக் குறைக்கும் சிறுதானியங்கள்! ஜெ.கலைவாணி - படங்கள்: தே.அசோக்குமார் சிறுதானிய உணவே நம் பாரம்பர்ய உணவுமுறை. அது மட்டுமல்ல... சிறுதானியங்களில் அடங்கியுள்ள ஊட்டச்சத்து ஆரோக்கியத்துக்கு அஸ்திவாரம் அளிக்கும். எடை குறைக்க விரும்புகிறவர்களுக்கு இனிமை சேர்க்கும். நல்லவை எல்லாம் அள்ளித்தரும். இனிவரும் காலம் வரகு, சாமை, தினை, குதிரைவாலி, கம்பு, கேழ்வரகு, சோளம் ஆகிய சிறு தானியங்களுக்குப் பொற்காலம் என்றே சொல்லலாம். அந்த அளவு மக்களிடத்தில் சிறுதானியங்களின் சிறப்பு பற்றிய விழிப்பு உணர்வு அதிகரித்து வருகிறது. இந்த ஆர்வத்துக்குச் சுவை சேர்க்கும் அருமையான, துல்லியமான மில்லெட் ரெசிபிகள் நம் கைவசம் இருந்தால்தானே சமையலறை கமகமக்கும்? அதற்கான ரெசிப்பிகளை அளிக்கிறார் சென்னையைச் சேர்ந்த சமையல் கலைஞர் ஜெ.கலைவாணி. எளிமையாகச் செய்யக்கூடிய இந்த உணவுகளுக்கு ஏராளமான பலன் உண்டு. தினை - பச்சைப்பயறு ஊத்தப்பம் தேவையானவை: தினை அரிசி - அரை கப் முளைவிட்ட பச்சைப்பயறு - அரை கப் காய்ந்த மிளகாய் - நான்கு இஞ்சி - அரை அங்குலம் (நறுக்கியது) பெருங்காயம் - கால் டீஸ்பூன் கறிவேப்பிலை - 2 ஈர்க்கு (நறுக்கியது) வெங்காயம் - 2 (நறுக்கியது) எண்ணெய், உப்பு - தேவையான அளவு துருவிய கேரட் - அரை கப் செய்முறை: தினையை 2 மணி நேரம் ஊற வைத்துக்கொள்ளவும். முளைகட்டியப் பச்சைப்பயறைத் தினை அரிசியுடன் இஞ்சி, மிளகாய், பெருங்காயம், உப்பு சேர்த்துத் தண்ணீர்விட்டு இட்லி மாவுப் பதத்துக்குக் கெட்டியாக அரைத்துக்கொள்ளவும். அதில் வெங்காயம், கேரட், கறிவேப்பிலை சேர்த்துக் கலந்துகொள்ளவும். தோசைக்கல்லைக் காயவைத்து மாவை வார்க்கவும். தேய்க்காமல் அப்படியே மூடி வைத்து வேகவிட்டு இருபுறமும் எண்ணெய்விட்டுத் திருப்பிப்போட்டு இட்லிப் பொடி தூவி எடுத்து, காரமான தக்காளி - வெங்காயச் சட்னியுடன் பரிமாறவும். சைட்டிஷ் சேர்க்காமல் சாப்பிட்டாலும் சுவையாக இருக்கும். கேழ்வரகு சேமியா - கொள்ளு வடை தேவையானவை: கேழ்வரகு சேமியா - ஒரு கப் கொள்ளு மாவு - அரை கப் கடலைப்பருப்பு - அரை கப் வெங்காயம் - ஒன்று (நறுக்கியது) பச்சை மிளகாய் - 2 (நறுக்கியது) உப்பு - தேவையான அளவு கறிவேப்பிலை - 2 ஈர்க்கு (நறுக்கியது) இஞ்சி - ஒரு சிறிய துண்டு (நறுக்கியது) செய்முறை: கேழ்வரகு சேமியாவை மூன்று நிமிடங்கள் தண்ணீரில் நனைத்து வடிகட்டி எடுத்துக்கொள்ளவும். கொள்ளுவை வறுத்து மாவாக்கிக் கொள்ளவும். கடலைப்பருப்பை அரை மணி நேரம் ஊறவைத்து அரைத்துக்கொள்ளவும். ஊறிய முழுப் பருப்பை ஒரு டீஸ்பூன் தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் அரைத்த கடலை மாவுடன் இஞ்சி, வெங்காயம், பச்சை மிளகாய், உப்பு, கறிவேப்பிலை, கொள்ளு மாவு ஊறிய கடலைப்பருப்பு சேர்த்து வேண்டிய அளவு தண்ணீர் விட்டு வடை மாவுப் பதத்துக்குக் கலந்து கேழ்வரகு சேமியாவைச் சேர்த்து வடையாகத் தட்டி, வாணலியில் எண்ணெய்விட்டு வடையைப் போட்டு முறுகலாகப் பொன்னிறத்துடன் வறுத்து எடுக்க, சுவையான கேழ்வரகு சேமியா - கொள்ளு வடை ரெடி. குறிப்பு: இஞ்சி - பூண்டு விழுது சேர்த்தும் செய்யலாம். வரகு - கம்பங்களி தேவையானவை: வரகரிசி - கால் கப் கம்பு மாவு - 2 கப் தண்ணீர், உப்பு - தேவையான அளவு செய்முறை: வரகரிசியைத் தண்ணீரில் வேகவிடவும். முக்கால்வாசி வெந்து வரும்போது அதில் உப்பு மற்றும் கம்பு மாவைக் கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்துக் கிளற வேண்டும். மாவு கட்டியாக ஆகாதவாறு கிளறி, தேவைப்பட்டால் சுடுநீர் சிறிது சேர்த்து, கரண்டியால் கிளறி பின் கைகளில் சுடச்சுட உருட்டினால், களி ரெடி. இதற்குக் காரக் குழம்பு, கீரைக் குழம்பு தொட்டுக்கொள்ள ஏற்றது. களியைப் பொறுத்தவரை சுடச்சுடச் சாப்பிட வேண்டும். வெள்ளரிக்காய், வெங்காயப் பச்சடி மற்றும் மொச்சைக்குழம்புடன் சாப்பிட மிகவும் ஏற்றது. உடல் பலமடையும். வியாதிகள் அண்டாது. கம்பு - பீர்க்கங்காய்த் துவையல் தேவையானவை: கம்பு - கால் கப் பீர்க்கங்காய்த் தோல் - ஒரு கப் (நறுக்கியது) காய்ந்த மிளகாய் - ஐந்து உளுத்தம்பருப்பு - இரண்டு டீஸ்பூன் இஞ்சி - ஒரு சிறிய துண்டு புளி - பெரிய நெல்லி அளவு உப்பு - தேவையான அளவு எண்ணெய் - ஒரு டீஸ்பூன் தேங்காய் - இரண்டு துண்டுகள் செய்முறை: கம்பு தானியத்தை வெறும் வாணலியில் பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும். அதே வாணலியில் உளுத்தம்பருப்பைப் பொன்னிறமாக வறுத்து எடுக்கவும். வாணலியில் சிறிது எண்ணெய்விட்டு பீர்க்கங்காய்த் தோல், காய்ந்த மிளகாய், இஞ்சி, தேங்காய், உப்பு ஆகியவற்றை வறுத்து ஐந்து நிமிடங்கள் ஆறவைக்கவும். இத்துடன் புளியையும் சேர்த்து வறுத்து மொத்தமாக எடுத்து உப்புச் சேர்த்து மிக்ஸியில் துவையலாக அரைத்து எடுக்க, சுவையான கம்பு - பீர்க்கங்காய்த் துவையல் ரெடி. அப்பளக்கூட்டுக் கம்பு ஊறல் தேவையானவை: கம்பு மாவு - அரை கப் சோள மாவு - அரை கப் சமையல் சோடா - ஒரு சிட்டிகை தயிர் - 2 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு கொத்தமல்லித்தழை - சிறிதளவு செய்முறை: பாத்திரத்தில் கம்பு மாவு, சோள மாவு, சமையல் சோடா, தயிர், உப்பு, கொத்துமல்லித்தழை சேர்த்து, தண்ணீர் விட்டுப் பிசைந்து உருட்டி இரண்டு அளவாகப் பிரித்து இட்லித் தட்டில் வைத்து 15 நிமிடங்கள் ஆவியில் வேகவைத்து எடுக்கவும். பின்பு இதை அடுப்பிலிருந்து இறக்கி ஆறவைக்கவும். சிறு சிறு வட்டமாக நறுக்கி, தோசைக்கல்லில் எண்ணெய்விட்டுச் சிவக்க வைத்து எடுத்துக்கொள்ளவும். அல்லது வட்டமாக நறுக்கிய கம்பு கட்லெட்டை வாணலியில் எண்ணெய்விட்டுப் பொரித்தும் எடுத்துக்கொண்டு அப்பளக்கூட்டுடன் சாப்பிடலாம். அப்பளக்கூட்டு செய்ய தேவையானவை: கடலைப்பருப்பு - அரை கப் பெருங்காயம் - அரை டீஸ்பூன் பச்சை மிளகாய் - 2 (நறுக்கியது) மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை தண்ணீர் - ஒரு கப் சுட்ட அப்பளம் - 8 சோம்புத்தூள் - அரை டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு கொத்தமல்லித்தழை - சிறிதளவு செய்முறை: குக்கரில் கடலைப்பருப்பு, மஞ்சள்தூள், பச்சை மிளகாய், பெருங்காயத்தூள் சேர்த்து, நான்கு விசில் விட்டு இறக்கவும். சோம்புத்தூள் சேர்த்து, தேவைக்கேற்ற அளவு தண்ணீர்விட்டு ஒரு கொதிவந்ததும் உப்பு சேர்க்கவும். கொத்துமல்லித்தழை தூவி, அதில் அப்பளத்தை உடைத்துப்போட்டுக் கிளறி, கம்பு வறுவலின் மீது வைத்துப் பரிமாறவும். கம்பு ஃப்ரை செய்யாமலும் அப்பளக்கூட்டுடன் சேர்த்துச் சாப்பிடலாம். குதிரைவாலி - பாசிப்பருப்புக் கஞ்சி தேவையானவை: குதிரைவாலி - ஒரு கப் பாசிப்பருப்பு - அரை கப் கடுகு, உளுத்தம்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன் காய்ந்த மிளகாய் - ஒன்று (தாளிக்க) கறிவேப்பிலை - இரண்டு ஈர்க்கு எண்ணெய், உப்பு - தேவைக்கேற்ப மிளகு - ஒரு டீஸ்பூன் (பொடித்தது) பெருங்காயம் - சிறிதளவு செய்முறை: பாசிப்பருப்பு, பெருங்காயம் சேர்த்துத் தண்ணீர் ஊற்றி வேகவிடவும். வேகும்போது, குதிரைவாலி அரிசியைச் சேர்த்துக் குழைய வேகவிடவும். வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்துத் தாளித்துக் கஞ்சியில் ஊற்றவும். ஊறுகாய் மற்றும் துவையலுடன் பரிமாறவும். பசி நேரத்துக்கு ஏற்ற சிறந்த கஞ்சி இது. காரத்துக்குக் காய்ந்த மிளகாயைத் தவிர்த்துவிட்டு, மிளகு ஒன்றிரண்டாகப் பொடித்துச் சேர்த்துக் கொள்ளலாம். கம்பு - பச்சைப்பயறு - வெல்ல மசியல் தேவையானவை: கம்பு - அரை கப் பச்சைப்பயறு - அரை கப் துருவிய வெல்லம் - அரை கப் ஏலக்காய்த்தூள் - ஒரு டீஸ்பூன் செய்முறை: பச்சைப்பயறையும் கம்பையும் ஒரு இரவு முழுவதும் ஊறவைத்துக் கொள்ளவும். மறுநாள் அதை குக்கரில் வைத்துக் குறைவாகத் தண்ணீர்விட்டு, நான்கு முதல் ஐந்து விசில் வரை அடி பிடிக்காமல் வேகவைக்கவும். பிறகு குக்கர் மூடியை ரிலீஸ் செய்துவிட்டுத் தண்ணீரை வடித்து, பருப்பை வேறு பாத்திரத்துக்கு மாற்றி, அதில் வெல்லம், ஏலக்காய்த்தூள் சேர்த்து மசித்துக்கொள்ளவும். இதை ஃபிரிட்ஜில் வைத்து தினமும் சாப்பிடலாம். நான்கு நாள்கள் வரை கெடாமல் இருக்கும். பனிவரகு - மஷ்ரூம் - டொமேட்டோ சூப் தேவையானவை: பனிவரகு - கால் கப் (வேகவைத்தது) கார்ன் மாவு - 2 டீஸ்பூன் தக்காளிச் சாறு - ஒரு கப் கொத்தமல்லி - அரை கப் (நறுக்கியது) மஷ்ரூம் - 10 (நறுக்கியது) பூண்டு - 10 பல் நெய் - 2 தேக்கரண்டி சோயா சாஸ் - அரை டீஸ்பூன் பட்டை - ஒரு துண்டு உப்பு, மிளகுத்தூள் - தேவையான அளவு செய்முறை: மஷ்ரூமைச் சுத்தம் செய்து நறுக்கி வைக்கவும். பூண்டுப் பல்லைத் தோல் நீக்கி நறுக்கி வைக்கவும். மிளகைப் பொடி செய்துகொள்ளவும். வாணலியில் நெய்விட்டுக் காய்ந்ததும் பட்டை சேர்த்துத் தாளிக்கவும். நறுக்கிய பூண்டு சேர்த்து வதக்கவும். சோயா சாஸ் விடவும். வேகவைத்த மஷ்ரூமை இதில் புரட்டி எடுக்கவும். தக்காளிச் சாற்றை ஊற்றிக் கொதிக்கவிடவும். பின், மூன்று கப் நீர் விட்டுத் தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொதிக்கவிடவும். வேகவைத்த பனிவரகைச் சேர்க்கவும். மஷ்ரூம் வெந்ததும் கார்ன் மாவை நீரில் கரைத்து ஊற்றவும். மிளகைத் தூவி ஒரு கொதிவிட்டுக் கலந்து பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை தூவி எடுக்கவும். சுவையான சூப் தயார். சோளம் - கோதுமை அல்வா தேவையானவை: கோதுமை மாவு - ஒரு கப் சோள மாவு - அரை கப் வெல்லம் - ஒரு கப் முந்திரி, திராட்சை - தலா ஒரு டீஸ்பூன் ஏலக்காய்த்தூள் - 2 டீஸ்பூன் நெய் - கால் கப் செய்முறை: வெல்லத்தை அரை டம்ளர் தண்ணீர் விட்டு கரைத்து வடிகட்டிக் கொள்ளவும். வாணலியில் கோதுமை மாவு, சோள மாவை நெய்விட்டு தனித்தனியாக வறுத்துக் கொள்ளவும். பின்னர் வாணலியில் இரண்டு மாவையும் ஒன்றாகச் சேர்த்து, கரைத்து வைத்த வெல்லத் தண்ணீரை மாவில் ஊற்றி, வேகமாகக் கிளறிக் கொண்டே இருக்கவும். நெய்விட்டு கிளற கிளற அல்வா பதத்தில் சுருண்டுவரும். நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சையைச் சேர்த்து, ஏலக்காய்த்தூள் தூவி கிளறி இறக்கி வைத்துப் பரிமாறவும். சாமை - பச்சைப்பயறு - நல்லெண்ணெய் சாதம் தேவையானவை: சாமை சாதம் - 2 கப் பச்சைப்பயறு - கால் கிலோ தக்காளி - 2 (அரைத்த ஜூஸ்) வெங்காயம் - 2 (நறுக்கியது) கறிவேப்பிலை - ஒரு கொத்து இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன் சோம்புத்தூள் - அரை டீஸ்பூன் மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன் மிளகாய்த் தூள் - 2 டீஸ்பூன் கரம் மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன் உப்பு, எண்ணெய் - தேவையான அளவு தாளிக்க: பட்டை, பிரிஞ்சி இலை, ஏலக்காய், மராத்தி மொக்கு, கிராம்பு - தலா 2 நல்லெண்ணெய் - தேவையான அளவு செய்முறை: பச்சைப்பயறை வாணலியில் இட்டு, பொன்னிறமாக வறுத்து குக்கரில் சேர்த்து மூழ்கும் அளவு தண்ணீர்விட்டு நான்கு முதல் ஐந்து விசில் வரை நன்கு வேகவைத்துக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய்விட்டு, தாளிக்க வேண்டியதைச் சேர்த்து அதில் கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்துப் பொன்னிறமாக வதக்கி, இஞ்சி - பூண்டு விழுதைச் சேர்த்துக் கிளறி, சோம்புத்தூள், மஞ்சள்தூள், சிறிதளவு உப்பு சேர்த்து வதக்கவும். இதில் மிளகாய்த்தூள் மற்றும் கரம் மசாலாத்தூள் சேர்த்துக் கிளறி அரைத்த தக்காளி விழுதைச் சேர்க்கவும். ஒரு கொதிவந்ததும், வேகவைத்த பயறை மட்டும் சேர்த்து கரண்டியால் மசித்துக் கிளறிவிடவும். எண்ணெய் பிரிந்து வரும்வரை கிளறவும். வேகவைத்த தண்ணீரையும் சேர்த்துக் கொதிக்க வைத்து இறக்கவும். சாமையை 10 நிமிடம் ஊறவைத்து, பின் சாதமாக வடித்து ஆறவிடவும். இலையில் சாமை சாதத்தை வைத்துச் சூடான பச்சைப்பயறு மசாலாவைச் சேர்த்து நல்லெண்ணெய் ஊற்றிச் சாப்பிடவும். https://www.vikatan.com/
  9. நெத்தியிலே ஒரு குங்குமபொட்டு நெற்றியிலே ஒரு குங்குமப்பொட்டு தேன் போலே கட்டிய கூந்தலில் மல்லிகை மொட்டு மீன் போலே வெட்டிய மாம்பழக் கட்டியிலே செய்த பூப்போலே தொட்டதும் கையில் ஒட்டுது வண்ணம் பால் போலே கன்னிப் பருவம் துள்ளும் அழகே ஆனந்தம்
  10. சத்து நிறைந்த முள்ளங்கி - பூசணி சப்பாத்தி பொதுவாக காய்கறிகளை இப்படி சப்பாத்தியுடன் சேர்த்து சாப்பிடும் போது வயிறு நிரம்பி இருப்பதுடன் உடல் எடையும் குறையும். தேவையான பொருட்கள் : கோதுமை மாவு - 2 கப், முள்ளங்கி துருவல் - கால் கப், பூசணி துருவல் - அரை கப், பச்சைமிளகாய் விழுது - ஒரு டீஸ்பூன், கொத்தமல்லி விழுது - 2 டீஸ்பூன், சீரகத்தூள் - அரை டீஸ்பூன், இஞ்சி விழுது - அரை டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - 3 டீஸ்பூன். செய்முறை: முள்ளங்கி துருவலை லேசாக பிழிந்து கொள்ளவும். பூசணி துருவலை நன்றாக பிழிந்து கொள்ளவும். கோதுமை மாவுடன் முள்ளங்கி துருவல், பூசணி துருவல், பச்சைமிளகாய் விழுது, கொத்தமல்லி விழுது, இஞ்சி விழுது,சீரகத்தூள், உப்பு சேர்த்து சப்பாத்திக்கு பிசைவது போல் பிசைந்து அரை மணி நேரம் அப்படியே வைக்கவும். இந்த மாவை சிறிது எடுத்து சிறிய சப்பாத்திகளாக இட்டு, சூடான தோசைக்கல்லில் போடவும். மிதமான தீயில் வேக விட்டு எடுத்துப் பரிமாறவும். சூப்பரான முள்ளங்கி - பூசணி சப்பாத்தி ரெடி. இதற்கு தால் அல்லது தயிர் பச்சடியைத் தொட்டுக் கொள்ளலாம்.
  11. உனக்கு மட்டும் உனக்கு மட்டும் ரகசியம் சொல்வேன் - அந்த ரகசியத்தை ஒருவருக்கும் சொல்லி விடாதே உனக்கு மட்டும் உனக்கு மட்டும் ரகசியம் சொல்வேன் - அந்த ரகசியத்தை ஒருவருக்கும் சொல்லி விடாதே
  12. Ahasthiyan, நுணா இருவருக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.