Everything posted by நவீனன்
-
சமையல் செய்முறைகள் சில
சால்மன் ஃபிஷ் ஃபிரை தேவையானவை: மீன் - 8 துண்டு எலுமிச்சைச் சாறு - ஒரு டேபிள்ஸ்பூன் மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன் மிளகுத்தூள் - அரை டீஸ்பூன் உப்பு - முக்கால் டீஸ்பூன் மஞ்சள் தூள் - 2 டீஸ்பூன் எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன் செய்முறை: மீனைக்கழுவி சுத்தம் செய்து மிருதுவான காட்டன் துணியால் மீன் மீது தண்ணீர் இல்லாமல் துடைத்து விடவும். ஒரு பவுலில் மிளகாய்த்தூள், மிளகுத்தூள், மஞ்சள் தூள், உப்பு, எலுமிச்சைச் சாறு ஊற்றி பேஸ்ட் போன்று கலக்கவும். இந்த பேஸ்ட்டை மீனின் இருபுறமுமும் தடவி ஒரு மணிநேரம் ஊறவிடவும். அடுப்பில் நான்ஸ்டிக் தவாவை வைத்து எண்ணெய் விட்டு சூடானதும், ஊறவைத்த மீனைச் சேர்த்து இருபுறமும் வேகவைத்து நிறம் மாறியதும் எடுக்கவும். அதனை டிஸ்யூ பேப்பரில் வைக்கவும். (அதிகப்படியான எண்ணெய் இருந்தால், உறிஞ்சு எடுத்துவிடும்.)
-
கருத்து படங்கள்
- கருத்து படங்கள்
- சமையல் செய்முறைகள் சில
முட்டை மிளகு மசாலா : செய்முறைகளுடன்...! முட்டை மிளகு மசாலா தேவையானவை: வேகவைத்த முட்டை-12 நறுக்கிய பெரிய வெங்காயம்- 4 தக்காளி-3 பூண்டு- 6 முதல் 7 (நறுக்கப்பட்டது) மிளகு-2டீஸ்பூன் உப்பு-தேவையான அளவு பட்டை,ஏலக்காய்-தேவையான அளவு இஞ்சி- சிறிதளவு தக்காளி சோஸ்-1/4 கப் செய்முறை: கடாயில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் பட்டை, ஏலக்காய் சேர்த்து வறுக்கவும். பின்னர் வெங்காயம், பூண்டு, இஞ்சி, தக்காளி சாஸ், சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். அதனுடன் பொடியாக நறுக்கிய தக்காளியை சேர்த்து வதக்கி மிளகு பொடி, உப்பு சேர்த்து கிளறவும். கருவேப்பிலை சேர்த்து ஒரு நிமிடம் கிளறவும். பின்னர் முட்டையை இரண்டாக வெட்டி கிரேவியில் வைக்கவும். முட்டையில் கிரேவி படும்படி கிளறவும். சுவையான முட்டை மிளகு மசாலா ரெடி!- கருத்து படங்கள்
- சமையல் செய்முறைகள் சில
மீன் சூப் : செய்முறைகளுடன்...! தேவையான பொருட்கள் : வஞ்சிர மீன் - 4 துண்டுகள் பெரிய வெங்காயம் - 2 ( பொடியாக நறுக்கியது) மிளகுத்தூள் - 3/4 டீஸ்பூன் மிளகாய்தூள் - 1/2 டீஸ்பூன் செய்முறை: வஞ்சிர மீன் துண்டுகள், பெரிய வெங்காயம், மிளகுத்தூள், மிளகாய்தூள் மற்றும் 5அல்லது 6 டம்ளர் தண்ணீர் ஊற்றி மைக்ரோவேவ் ஓவனில் ஹை பவரில் 8 - 10 நிமிடங்கள் வைக்கவும். இரண்டு நிமிடம் ஸ்டாண்டிங் டைம் விட்டு இறக்கவும். இதில் எலுமிச்சை சாறு சேர்த்து சூடாக பரிமாறவும். விரும்பினால் சிறிதளவு மல்லித்தழை தூவி பரிமாறவும்.- சமையல் செய்முறைகள் சில
இறைச்சி மிருதுவாக வேக வேண்டுமானால் சிறிது நேரம் வினிகர் அல்லது எலுமிச்சைச் சாற்றில் ஊற வைத்து பிறகு வேக அல்லது பொரித்தெடுங்கள். பஞ்சு போல மிருதுவாக இருக்கும்.- சமையல் செய்முறைகள் சில
வெஜிடபிள் சாலட் தேவையானபொருட்கள் 1. வெள்ளரிக்காய் - 1/2 கிலோ 2. கேரட் பெரியது - 1 3. தக்காளி பெரியது - 2 4. பச்சைமிளகாய் பொடியாக நறுக்கியது – தேவையான அளவு 5. எலுமிச்சைச் சாறு - தேவையான அளவு 6. வறுத்து தோலுரித்த நிலக்கடலை - 2 கப் 7. உப்பு - தேவைக்கேற்ப 8. மிளகுதூள் - தேவையானஅளவு 9. கொத்தமல்லித ்தழை - தேவையானஅளவு 10. பட்டாணி - தேவையான அளவு (மக்காச்சோளம் கொண்டு தயார் செய்த மிக்சர் பொட்டலம் சிறிதளவு). செய்முறை வெள்ளரிக்காயையும் தக்காளியையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும் கேரட்டை சீவல் கொண்டு மெல்லியதாக சீவிக்கொள்ளவும் நறுக்கி வைத்திருக்கும் வெள்ளரி, தக்காளி கேரட், பச்சைமிளகாய் மற்றும் வறுத்த நிலக்கடலை ஆகியவற்றை பெரிய பாத்திரத்தில் ஒன்றாக சேர்த்து கிளரவும். தேவைக்கேற்ற அளவு உப்பு, மிளகு தூள் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து மறுபடியும் கிளரவும். பாத்திரத்தில் கிளரி வைத்திருப்பதை அள்ளி காற்று புகாத பாத்திரத்தில் (டப்பர்வேர்) போட்டு அதன் மீது சிறிதளவு மிக்சர் மற்றும் கொத்து மல்லிதழையை தூவி அழுத்தி மூடி வைக்கவும். அரைமணி நேரம் கழித்து எடுத்து உண்ணவும். பயன்கள் உடல் எடை குறைப்பவர்களுக்கு நல்லது. குறிப்பாக தொப்பையைக் குறைக்க உதவும். பார்வைக் கோளாறுகள் நீங்கும். நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்தது. உடல் சூடு தனியும். வயிற்றுப் பிரச்சனை, மலச்சிக்கல் நீங்கும். வெயில் காலத்திற்கு சிறந்ததாகும்- கருத்து படங்கள்
- சமையல் செய்முறைகள் சில
மீன் பிரியாணி மீன் பிரியாணி சமைக்க எளிதானதாக இருப்பதுடன் சுவையும் அதிகமாக இருக்கும் தேவையான பொருட்கள் மீன் - 1/4 கிலோ அரிசி - 2 சுண்டு வெங்காயம் - 150 கிராம் தக்காளி - 150 கிராம் இஞ்சி, பூண்டு விழுது - 2 தேக்கரண்டி் புதினா, கொத்தமல்லி இலை - 1/4 கட்டு மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன் தனியாத்தூள் - 1 தேக்கரண்டி மசள்தூள் - 1/4தேக்கரண்டி தயிர் - 1 கப் உப்பு - தேவையான அளவு எண்ணெய் - 1/2 குழிக்கரண்டி செய்முறை : * மீனை சுத்தம் செய்து துண்டுகளாக்கவும். * வெங்காயம், தக்காளியை பொடியாக நீள வாக்கில் நறுக்கவும். மிளகாயைக் கீறிக்கொள்ளவும். ஒரு அகலமான பாத்திரம் அல்லது குக்கரில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, லவங்கம் சேர்த்து தாளிக்கவும். அடுத்து வெங்காயம், இஞ்சி-பூண்டு விழுது, தக்காளி, புதினா, கொத்தமல்லி இலை இவற்றை ஒன்றன் பின் ஒன்றாகச் சேர்த்து நன்றாக வதக்கவும். * தொடர்ந்து மிளகாய்த்தூள், தனியாத்தூள், மஞ்சள் தூள் சேர்க்கவும். தயிர் மற்றும் போதுமான அளவு உப்பு சேர்த்து மீனை சேர்த்து உடையாமல் வதக்கவும்.பாசுமதி அரிசி ஒன்றரை பங்கும், சாதா அரிசி 2 பங்கும் தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும். பாத்திரத்தில் "தம்" சேர்த்து (ஆவி போகாமல் மூடி வைத்து) சிறிது நேரத்தில் இறக்கவும். * குக்கரில் ஒரு விசில் வந்ததும், குறைந்த தீயில் 10 நிமிடம் வைத்திருந்து அடுப்பை அணைத்து விடவும். * சுவையான மீன் பிரியாணி மணமணக்க ரெடி.- கருத்து படங்கள்
- சமையல் செய்முறைகள் சில
சில்லி இறால் வறுவல் : செய்முறைகளுடன்...! தேவையான பொருட்கள் : இறால் - அரை கிலோ பூண்டு - 8 பல் பச்சை மிளகாய் - 6 மிளகு தூள் - 2 தேக்கரண்டி வெங்காயம் - 100 கிராம் கறிவேப்பிலை - ஒரு கொத்து எண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி உப்பு - தேவையான அளவு செய்முறை: வெங்காயம், பூண்டு மற்றும் பச்சை மிளகாயை பொடியாக நறுக்கவும். எண்ணெய் சூடானதும் கறிவேப்பிலை தாளித்து வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும். பூண்டு சேர்த்து வாசம் அடங்கும் வரை வதக்கி பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். பிறகு மிளகு தூள் சேர்த்து வதக்கி சுத்தம் செய்த இறாலை சேர்த்து வதக்கவும். உப்பு சேர்த்து தீயை குறைத்து சிவக்கும் வரை வறுக்கவும்.- கருத்து படங்கள்
- சமையல் செய்முறைகள் சில
சிக்கன் மக்ரோனி : செய்முறைகளுடன்...! தேவையான பொருட்கள் : மக்ரோனி- 150 கிராம் எழும்பில்லாத சிக்கன் -1/2 கிலோ வெங்காயம்- 2 தக்காளி-1 கறிவேப்பிலை-1 கொத்து பச்சைமிளகாய்-2 இஞ்சி,பூடு விழுது-3 ஸ்பூன் தயிர்- 2 மேசை கரண்டி மஞ்சள் தூள்- 1/4 ஸ்பூன் மிளகாய் தூள்- 1/2 ஸ்பூன் சீரகத்தூள்- 1/2 ஸ்பூன் பட்டை,ஏலக்காய்,கிராம்பு(வாசனைத்தூள்) - 1/2 ஸ்பூன் பட்டை-1 சிறு துண்டு கிராம்பு-2 ஏலக்காய்-3 அன்னாசி பூ-2 பிரிஞ்சி-1 சிக்கன் மசாலா தூள்- 1 ஸ்பூன் தனியா தூள்- 1/2 ஸ்பூன் உப்பு-தேவைக்கு எண்ணெய்- 3 மேசை கரண்டி நெய்- 4 ஸ்பூன் செய்முறை: மக்ரோனியை உப்பு சேர்த்து அவித்து தண்ணீர் வடித்துக்கொள்ளவும். வாணலியில் நெய் மற்றும் எண்ணெய் சேர்த்து பட்டை,ஏலக்காய்,கிராம்பு,அன்னாசி பூ, பிரிஞ்சி சேர்க்கவும். பின்னர் மிளகாய்,கறிவேப்பிலை,வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும். பின் அதில் இஞ்சி,பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக கிளறவும். அதில் தக்காளி பின்னர் எல்லாத்தூள்களையும், தயிர் சேர்த்து வதக்கவும். எண்ணெய் மேலே வந்ததும் சிக்கனை சேர்த்து நன்கு வேகவிடவும். சிக்கன் வெந்ததும் வேக வைத்த மக்ரோனியை சேர்த்து மசாலாவில் உள்ள நீர் வற்ற கிளறி பின் இறக்கலாம்.- கருத்து படங்கள்
- சமையல் செய்முறைகள் சில
புரோட்டீன் ரிச் நட்ஸ் ரைஸ் தேவையானவை: வடித்த சாதம் - ஒரு கிண்ணம், வறுத்த வேர்க்கடலை, கடலைப் பருப்பு - தலா 50 கிராம், முந்திரிப்பருப்பு, பாதாம்பருப்பு - தலா 10, உலர்ந்த திராட்சை - 20, நெய், உப்பு - தேவையான அளவு. செய்முறை: கடாயில் நெய் விட்டு சாதம், உப்பு தவிர, கொடுத்துள்ள எல்லா பொருட்களையும் சேர்த்து பொன்னிறத்தில் வறுக்கவும். அதில் சாதம், உப்பு சேர்த்துக் கலந்து பரிமாறவும். விருப்பப்பட்டால் சிறிது மிளகுத்தூள் சேர்த்துக் கொள்ளலாம். புரோட்டீன் ரிச்சாக உள்ள இந்த நட்ஸ் ரைஸ், உடனடி எனர்ஜி கொடுக்கும்.- சமையல் செய்முறைகள் சில
கேரட் சட்னி தேவையானவை: கேரட் - 1 அல்லது ஒன்றில் பாதி தேங்காய் - அரை கப் அல்லது சின்ன வெங்காயம் தக்காளி - 2 அல்லது புளி சிறிதளவு பச்சை மிளகாய் - 3 (காரத்திற்கு ஏற்ப கூட்டி கொள்ளவும்) கடலைப்பருப்பு, கடுகு - தாளிக்க தலா 1 டீஸ்பூன் சீரகம் - அரை டீஸ்பூன் பெருங்காயம் - ஒரு சிட்டிகை கறிவேப்பிலை - சிறிது எண்ணெய் - சிறிது இஞ்சி - ஒரு சின்ன துண்டு செய்முறை: கேரட் சட்னியை பொறுத்தவரை லேசாக இனிக்கும் என்பதால் பச்சை மிளகாயை சற்று கூடுதலாக வைத்து அரைத்து கொள்ளலாம். உங்களுக்கு காரம் பிடிக்காது என்றால் குறைத்துக் கொள்ளுங்கள். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெயடஊற்றி சூடானதும் கடுகு, கடலைப்பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து தாளித்து கேரட்டை சேர்த்து வதக்கவும். பிறகு சின்ன வெங்காயம், தக்காளி என ஒன்றன் பின் ஒன்றாக வதக்கி நன்கு வதக்கவும். கேரட்டை துருவி சேர்த்தால் எளிதாக வதக்க வரும். பிறகு ஆறியதும் மிக்ஸியில் அனைத்தையும் ஒன்றாக சேர்த்து நன்கு அரைத்து பரிமாறவும். பச்சை மிளகாய் சேர்ப்பதால் இஞ்சியின் அளவை பார்த்து சேர்க்கவும். இரண்டும் சேரும் போது அதிகமாக காரமாக இருக்கும்.- சமையல் செய்முறைகள் சில
பேபி பொட்டேட்டோ ஃப்ரை தேவையானவை: பேபி பொட்டேட்டோ - 5 மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன் கரம் மசாலாத்தூள் - 1 டீஸ்பூன் உப்பு - தே.அளவு எண்ணெய் - தே.அளவு செய்முறை: உருளைகிழங்கை கழுவி அப்படியே முழுதாக எழுத்து ஒரு பவுலில் தேவையானவற்றில் உள்ள அனைத்தையும் சேர்த்து கலந்து மைக்ரோவேவ் அவனில் ஹை பவர் மோடில் நனகு நிமிடங்கள் வைத்து மூடி வெந்ததும் எடுத்து பரிமாறவும்.- கருத்து படங்கள்
- சமையல் செய்முறைகள் சில
- சமையல் செய்முறைகள் சில
வெஜிடபிள் ஓட்ஸ் சூப் தேவையானவை: பால் - 2 கப் பொடியாக நறுக்கிய காய்கறிக்கலவை - 1/2 கப் (காராமணி, கேரட், பீன்ஸ்,காலி ஃப்ளவர், பட்டாணி, அவரைக்காய்) வறுத்த ஓட்ஸ் - 2 டேபிள்ஸ்பூன் பொடியாக நறுக்கிய பூண்டு - 1 டேபிள்ஸ்பூன் வெண்ணெய் - 2 டீஸ்பூன் மிளகுத்தூள் - 1 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு செய்முறை: வாணலியை அடுப்பில் வைத்து வெண்ணெய் சேர்த்து உருகியதும் நறுக்கியப் பூண்டை சேர்த்து சிறிதளவு வதக்கிக் கொள்ளவும். பிறகு, காய்கறிக்கலவையைச் சேர்த்து உப்பு போட்டு மிதமான தீயில் நன்கு வதக்கவும். காய்கறிகள் முக்கால் பதம் வெந்ததும் பாலைச் சேர்க்கவும். பிறகு ஓட்ஸ், மிளகுத்தூள் சேர்த்து மிதமான தீயில் 2 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கவும். காய்கறிகளில் உள்ள சத்துக்கள் அன்றைய நாளை புத்துணர்வுடனும் நிறைவாகவும் வைத்திருக்க உதவும்.- கருத்து படங்கள்
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.
- கருத்து படங்கள்