Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

துளசி

கருத்துக்கள பார்வையாளர்கள்
  • Joined

  • Last visited

Everything posted by துளசி

  1. 07.11.2013 பொதுநல அமைப்பிலிருந்து சிங்கள பேரினவாத இலங்கையை முற்றிலுமாக நீக்க வேண்டும். பொதுநல வய மாநாட்டை சிங்கள பேரினவாத இலங்கையில் நடத்த கூடாது. பொதுநல வய மாநாட்டில் இந்திய அரசு பங்கேற்க கூடாது என வலியுறுத்தியும் தமிழர்கள் விரோத இந்திய அரசை கண்டித்தும் நாம் தமிழர் கட்சி நாகை வடக்கு மாவட்டம், மயிலாடுதுறை தொடர்வண்டி நிலையத்தில் நடைபெற்ற தொடர்வண்டி மறியல் போராட்டம். போராட்டத்தில் கலந்து கொண்ட 100 நாம் தமிழர் கட்சியினர் காவல்துறையால் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார்கள். (facebook)
  2. (facebook) ------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- காமன் வெல்த் மாநாட்டில் இந்திய அரசு பங்கேற்க கூடாதென வலியுறுத்தி திருச்சி,கலால் மற்றும் சுங்க வரித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்ட திருச்சி மாவட்ட நாம் தமிழர் கட்சி தோழர்கள் 50பேர் கைது..... (facebok)
  3. நாளை காலை (12-11-2013) 10 மணி அளவில் திருவான்மியூர் தொடர் வண்டி நிலையத்தில் காமன் வெல்த் மாநாட்டில் இந்தியா சார்பாக யாரும் கலந்து கொள்ள கூடாது என்றும் காமன் வெல்த் அமைப்பில் இருந்து இலங்கையை நீக்க வேண்டும் என்றும் மாபெரும் தொடர் வண்டி மறியல் போராட்டம் வாருங்கள் தமிழர்களே ........... நாம் தமிழர் கட்சி தென் சென்னை கிழக்கு மாவட்டம் (facebook) "பொதுநலவாய மாநாட்டை இலங்கையில் நடத்தாதே! பொதுநலவாய மாநாட்டை இந்தியாவே புறக்கணி ! பொதுநலவாய அமைப்பில் இருந்து இலங்கையை நீக்கு ! தமிழர் தாய்நிலத்தில் பொது வாக்கெடுப்பு நடத்து ! இனப்படுகொலை செய்த இலங்கை மீது சர்வதேச விசாரணை நடத்து ! அதுவரைக்கும் இலங்கை மீது பொருளாதாரத் தடை போடு!!" என்று கோரிக்கைகளை முன்னெடுத்து நாளை காலை 10 மணிக்கு திருப்பூர் நாம் தமிழர் கட்சி தொடர்வண்டி மறியல் செய்கிறது..... தாய்த்தமிழ் உறவுகள் அனைவரும் நாளை காலை 10 மணிக்கு திருப்பூர் தொடர்வண்டி நிலையம் முன்பு கூடவும்..... (facebook) ---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- "தனி ஈழம் அமையாவிட்டால் தனி தமிழ்நாடு உருவாகும்" என்ற கோரிக்கை முழக்கத்தோடு அனைத்து கல்லூரி மாணவர்கள் சார்பில் கருமத்தம்பட்டி (கோவை) யில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் ! (facebook)
  4. இலங்கையில் காமன்வெல்த் மாநாடு நடப்பதை எதிர்த்தும், அதில் இந்தியா கலந்து கொள்ள கூடாதென்றும் வலியுறித்தி கடந்த ஒரு மாதமாக தமிழகத்தில் நாம் தமிழர் கட்சி முன்னெடுத்த போராட்டங்கள்/மறியல்கள்/ஆர்பாட்டங்கள்/முற்றுகைகளின் தொகுப்பு:- -------------------------------------------------------------------------- 10/11/2013 அன்று நாகப்பட்டிணம் மாவட்டம் சார்பாக ரயில் மறியல்/கைது. 10/11/2013 அன்று .நீலமலை நாம் தமிழர் தமிழக எல்லை யில் மாபெரும் முற்றுகை/கைது. 10/11/2013 அன்று திருப்பூரில் தொடர் வண்டி மறியல்/கைது. 09/11/2013 அன்று ராமநாதபுரம் மாவட்டம் சார்பாக ஆர்ப்பாட்டம்/கொடும்பாவி எரிப்பு/கைது. 09/11/2013 அன்று திருவள்ளூர் கி.மாவட்டம் சார்பாக மாதவரத்தில் பட்டினிப்போராட்டம். 07/11/2013 அன்று நாம் தமிழர் கட்சி வால்பாறை சார்பில் ஆர்ப்பாட்டம். 08/11/13 அன்று பாலமேட்டில் உள்ள தபால் அலுவலகம் முன் முற்றுகை போராட்டம். 07/11/2013 அன்று திருநெல்வேலி மே.மா சார்பாக சங்கரன் கோவில் ரயில் மறியல் போராட்டம்/கைது. 07/11/2013 அன்று திருப்பரங்குன்றம் ஒன்றியம் சார்பாக பெருங்குடியில் ஆர்பாட்டம்/கைது. 07/11/2013 அன்று மயிலாடுதுறையில் தொடர் வண்டி மறியல் போராட்டம்/கைது. 06/11/2013 அன்று கோவையில் தொடர்வண்டியை மறித்து நாம் தமிழர் கட்சியினர் போராட்டம்/கைது. 05/11/2013 அன்று மதுரை கிழக்கு ஒன்றியம் சார்பில் யானைமலையின் உச்சியில் போராட்டம். 05/11/2013 அன்று நீலமலையில் மத்திய அரசு அலுவலகம் முற்றுகைப் போராட்டம்/கைது. 05/11/2013 அன்று கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் ஆர்ப்பாட்டம். 05/11/2013 அன்று புதுச்சேரியில் அண்ணன் சீமான் தலைமையில் பேரணி, பொதுக்கூட்டம். 04/11/2013 அன்று திருவண்ணாமலை மாவட்டம் சார்பாக போராட்டம். 01/11/2013 அன்று சிவகங்கையில் சாகும் வரை பட்டினி போராட்டம் தொடக்கம். 01/11/2013 அன்று வேலூர் மாவட்டம் சார்பாக தபால் நிலைய பூட்டு போடும் போராட்டம்/கைது. 29/10/2013 அன்று ஆற்காடு மாவட்டம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்/கைது. 29/10/2013 அன்று கன்னியாகுமரி மாவட்டம் முன்சிறை ஒன்றியத்தில் விழிப்புணர்வு நடைபயணம். 27/10/2013 அன்று கோவை மாவட்டம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம். 26/10/2013 அன்று விழுப்புரத்தில் உண்ணாநிலை போராட்டம் 25/10/2013 அன்று சென்னை திருவான்மியூரில் பெருந்திரள் கண்டன பொதுக்கூட்டம்.. 22/10/2013 அன்று திருப்பூர் மாவட்டம் சார்பில்மத்திய அரசு அலுவல முற்றுகை போராட்டம்/கைது. 21/10/2013 அன்று மதுரை மாவட்டம் சார்பில் பாஸ்போர்ட் அழுவலகம் முற்றுகை/கைது. 20/10/2013 அன்று கூடலூரில் நீலமலை மாவட்டம் சார்பில் ஒரு நாள் உண்ணாவிரதம். 20/10/2013 அன்று கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கண்டன ஆர்ப்பாட்டம்.. 19/10/2013 அன்று நெல்லை நாம் தமிழர் கட்சியின் சார்பில் கண்டன ஆர்பாட்டம். 18/10/2013 அன்று திருப்பூர் முழு கடை அடைப்பு போராட்டத்தில் பங்கெடுப்பு. 17/10/2013 அன்று கும்பகோணத்தில் தெருமுனை பிரச்சாரம்.. 16/10/2013 அன்று கோவை மேற்கு மாவட்டம் சார்பில் மத்திய அரசு அலுவுலக முற்றுகை/கைது. 15/10/2013 அன்று தஞ்சை வடக்கு மாவட்டம் சார்பில் விழிப்புணர்வு பிரச்சாரம். 15/10/2013 அன்று திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையில் பட்டினி போராட்டம். 08/10/2013 அன்று கோவையில் மாணவர் பாசறை சார்பில் உண்ணாவிரதம். # போராட்ட களத்தில் நாம் தமிழர் கட்சி.. (facebook)
  5. இனக்கொலை இலங்கையில் நடங்கும் காமன்வெல்த் மாநாட்டைப் புறக்கணிக்க வலியுறுத்தித் தொடங்கியது ஐ.டி. துறையினரின் மனிதச் சங்கிலிப் போராட்டம். (facebook)
  6. நாளை நடக்கும் முழுகடையடைப்புக்கு ஆதரவாக மறைமலைநகரில் நாளை காலை 10மணிக்கு கடையடைப்பு மற்றும் ஆர்பாட்டம் நடைபெறவிருக்கிறது.சிறப்பு அழைப்பாளராக த.வெள்ளையன் அவர்கள் கலந்து கொள்கிறார்.வாய்ப்புள்ளவர்கள் கலந்து கொள்ளுங்கள்.. கோரிக்கை: காமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் நடத்தாதே! காமன்வெல்த் கூட்டமைப்பிலிருந்து இலங்கையை நீக்கு! (facebook)
  7. வருகின்ற 12ஆம் தேதி , இலங்கையில் காமன்வெல்த் மாநாடு நடப்பதை கண்டித்து கடையடைப்பினை வணிகர் சங்கம் அறிவித்திருக்கிறது.. இதே போல ரயில் மறியல் போராட்டங்களையும் இந்த காலத்தில் நடத்தலாம் என அமைப்புகள் கூடி முடிவெடுத்திருக்கின்றன. தோழர். கோவை.ராமகிருட்டிணன் இதை அறிவித்திருக்கின்றார். இதற்கு பல அமைப்புகள் தமுமுக, எஸ்டிபிஐ, மதிமுக, தமிழக வாழ்வுரிமைக் கட்சி, நாம்தமிழர் உடபட பலரும் ஆதரவு அளித்திருக்கிறார்கள்... தோழர்களே வரும் வாரத்தில் விரிவாக பல இடங்களில் நிகழும் போராட்டங்களில் கலந்து கொண்டு “அடிமை நாடுகளுக்கு” எதிர்ப்பினை தெரிவிப்போம். Thirumurugan Gandhi (facebook)
  8. 09.11.2013 இனப்படுகொலை இலங்கையில் காமன்வெல்த் மாநாடு நடத்தாதே, பொதுவாக்கெடுப்பை உடனே நடத்து உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து கல்லூரி மாணவர்கள் தொடர்ந்த உண்ணாவிரத போராட்டத்தின் 5 வது நாளான இன்று முடிவுக்கு வந்தது. ஈழத்திலிருந்து தமிழ் தேசிய கூட்டமைப்பை சேர்ந்த ஆனந்தி சிரிதரன் அவர்கள் கைபேசியில் தொடர்புகொண்டு உடலை வருத்தும் போராட்டத்தை கைவிட்டு மாற்று வழியில் போராட கேட்டுக்கொண்டார். ஆனூர் ஜெகதீசன் முன்னிலையில் சத்யராஜ் முடித்துவைத்தார். (facebook)
  9. இனப்படுகொலை இலங்கையில் காமன்வெல்த் மாநாட்டிற்கு எதிராகவும், இந்தியா அதைப் புறக்கணிக்க வலியுறுத்தியும், சேனல்4 வெளியிட்ட தமிழீழ ஊடகவியலாளர் இசைப்பிரியா பாலியல் வல்லுறவு மற்றும் கொலையைக் கண்டித்தும் தமிழ்நாடு ஊடகவியலாளர்கள் அமைப்பிலிருந்து இன்று சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். (facebook)
  10. தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு -பொள்ளாச்சி தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பின் சார்பாக ... இன்று(09.11.13) காலை 9 மணி முதல் காமன்வெல்த் மாநாடு எதிர்ப்பு பற்றிய துண்டறிக்கையை பொள்ளாச்சி பேருந்துநிலையம் முன்பு மாணவர்கள் ,பொதுமக்கள் அனைவருக்கும் வழங்கி விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தனர் .. (facebook)
  11. என் அன்பு தாய் தமிழ் உறவுகளுக்கு என் பணிவு கணிந்த வணக்கங்கள்..... உங்கள் அனைவருக்கும் தாய்மையான வேண்டுகோள் நம் இன்று மாலை 6 மணியளவில் தந்தி தொலைக்காட்சியில் நம் உறவுகளை கொத்துக்கொத்துக்காக கொன்று குவித்த "இறுதிப்போரின் இரத்த சாட்சிகள் " "No fire zone " என்னும் நிகழ்ச்சியை ஒலிபரப்பு செய்கிறது.... இந்த செய்தியை அனைவரிடமும் பகிருங்கள் அனைவரும் பாரக்க சொல்லி வற்புறுத்துங்கள்... குறிப்பாக உங்கள் வீட்டு பெண்மணிகளை பார்க்க சொல்லுங்கள் ..... நம் போராட்டத்திற்கு இது மேலும் உதவும் ..... நாம் போராடுவது நமக்காக அல்ல நம் இனத்திற்காக ,அடிமைப்பட்டு இருக்கும் நம் தலைமுறைகளுக்காக.... தமிழா இலக்கு ஒன்று தான் இனத்தின் விடுதலையே... (facebook)
  12. 5ஆவது நாளாக 3 மாணவர்கள் உண்ணாவிரதம்! இருவருக்கு சோர்வு! ’காமன்வெல்த் மாநாட்டுக்கு எதிரான மாணவர்கள்’ எனும் பதாகையின் கீழ், சென்னை லயோலா கல்லூரி மாணவர் செம்பியன், புதுச்சேரி சட்டக்கல்லூரி மாணவர் இளவரசன் அப்பு, சென்னை எஸ்.ஆர்.எம். பொறியியல் கல்லூரி மாணவர் ரத்தினவேலன் ஆகியோர், கடந்த செவ்வாய் முதல் காலவரையற்ற உண்ணாநிலைப் போராட்டம் இருந்துவருகின்றனர். முதல் நாளன்று வள்ளுவர் கோட்டம் அருகில் உண்ணாநிலையைத் தொடங்கிய இவர்களை, கைதுசெய்து, போராட்டத்தை நிறுத்த போலீஸ் முயன்றது. அதையடுத்து, இம்மாணவர்கள் மூவரும் சென்னை பெரம்பூரில் உள்ள-வணிகர் சங்கங்களின் பேரவை தலைமையகத்தில் உண்ணாநிலையைத் தொடர்ந்தனர். அங்கும் அவர்களைக் கைதுசெய்ய போலீஸ் முயன்றது. அங்கிருந்த வணிகர் பேரவைத் தலைவர் வெள்ளையன் மற்றும் இன உணர்வாளர்களின் கடும் எதிர்ப்பால், போலீஸ் பின்வாங்கியது. இன்று நவ.8ஆம் தேதியன்று ஐந்தாவது நாளாக மூன்று மாணவர்களும் உண்ணாநிலைப் போராட்டத்தைத் தொடர்ந்துவருகின்றனர். இதற்கிடையில், இளவரசன், ரத்தினவேலனுக்கு நலக்குறைவு ஏற்பட்டு, மருத்துவர்கள் பரிசோதித்துவிட்டுச் சென்றுள்ளனர். உலகுதழுவிய அறநெறிகளை அப்பட்டமாக மீறி, இனப்படுகொலைக்கு உடந்தையாக இருந்த சக்திகளுக்கு எதிராக, அறப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவிக்கிறோம். அதே நேரம், அவர்களின் உடல்நலம் எத்தனை நாள்களுக்கு இந்தப் போராட்டத்துக்கு ஒத்துழைக்கும் என்பதையும் எண்ணிப் பார்க்கவேண்டி இருக்கிறது. இனப்படுகொலை நடத்திய இலங்கையில் காமன்வெல்த் மாநாட்டை நடத்தாதே! எனும் முழக்கத்துடன், காமன்வெல்த்தை எதிர்த்து போராடியவர்கள் மீதான தேசியப் பாதுகாப்பு சட்ட வழக்குகளையும் உடனே திரும்பப் பெறவேண்டும், கைதுசெய்யப்பட்டவர்களை விடுதலை செய்யவேண்டும் என்றும் மூன்று மாணவர்களும் வலியுறுத்துகின்றனர். (facebook)
  13. இசைப்பிரியா படுகொலையைக் கண்டித்து தூத்துக்குடியில் பத்திரிக்கையாளர்கள் ஆர்ப்பாட்டம் இசைப்பிரியா படுகொலையைக் கண்டித்தும், காமன்வெல்த் அமைப்பிலிருந்து இலங்கையை நீக்க வலியுறுத்தியும் தூத்துக்குடியில் பத்திரிக்கையாளர்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தூத்துக்குடி பாளை ரோட்டில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் மோகன்ராஜ் தலைமை தாங்கினார். பிரஸ் மீடியா அசோசியேஷன் தலைவர் முருகன் முன்னிலை வகித்தார். மனித உரிமை பாதுகாப்பு மையம் வழக்கறிஞர் ராமசந்திரன், அனைத்து இந்திய இளைஞர் பெருமன்ற செயலாளர் வழக்கறிஞர் சந்தணசேகர், ஐஜேக மாவட்ட பொருளாளர் இசக்கிராஜா உட்பட பலர் கண்டன உரியாற்றினர். ஆர்ப்பாட்டத்தில், இலங்கையில் உச்சக்கட்ட போர் நடந்த போது சிங்கள ராணுவத்திடம் சிக்கிய இலங்கை தமிழ் ஊடக செய்திவாசிப்பாளர் இசைபிரியாவை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு மிக கொடூரமான முறையில் கொலை செய்த ராஜபக்சே தலைமையிலான இலங்கை அரசை வன்மையாக கண்டித்து கோஷங்கள் எழுப்பப்ட்டன. இலங்கையில் நடந்த இறுதிகட்ட போரில் ஆயிரக்கணக்கான ஈழத் தமிழர்களை சிங்கள ராணுவம் கொன்று அழித்தது. பெண்கள், குழந்தைகள், அப்பாவி பொதுமக்களை தடை செய்யப்பட்ட ஆயுதங்களை பயன்படுத்தி படுகொலை செய்து போர் குற்றம் புரிந்த இலங்கையில் காமன்வெல்த் மாநாடு நடத்த தடை விதிப்பதுடன், காமன்வெல்த் அமைப்பிலிருந்தே இலங்கையை நீக்க 52 நாடுகள் நடவடிக்கை எடுக்க‌வேண்டும். இந்திய-இலங்கை ஒப்பந்தப்படி உரிமைகளைப் பெற்றுத் தர மத்திய அரசு எந்த முயற்சியும் எடுக்கவில்லை. காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் மன்மோகன் சிங் பங்கேற்றால் அது அதிபர் ராஜபட்சேவின் போர்க்குற்றங்களை அங்கீகரிப்பது போல் அமையும். எனவே இலங்கையில் நடைபெற உள்ள காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளக் கூடாது என்று வலியுறுத்தப்பட்டது. http://www.pathivu.com/news/27950/57//d,article_full.aspx
  14. (facebook) ராஜீவ் காந்தி சிலையை உடைத்த வீரத் தமிழர்கள் மகாலிங்கம் , தமிழன் வடிவேலு ஆகியோருக்கு நம் வாழ்த்துகளை பகிர்வோம்! காங்கிரஸ்காரர்கள் வீதியில் இறங்கி சாலை மறியல் செய்ய வேண்டுமென்றால் ராஜீவ் காந்தியின் சிலையை உடைத்தால் மட்டும் தான் அது சாத்தியமாகும். தமிழ் நாட்டில் ராஜீவ் சிலையை சேதப் படுத்துவதை தவிர வேறு எதுவும் செய்து விட முடியாது. ஆந்திராவில் ராஜீவ் காந்தியின் சிலையை இருக்கும் இடத்தில் இருந்து அகற்றி வீதியில் இழுத்து வந்துள்ளனர் தெலுங்கர்கள். அந்த நிலை இங்கு வரவில்லை என்றாலும் இது ஒரு நல்ல தொடக்கமே. விரைவில் எங்கெல்லாம் ராஜீவ் சிலை இருக்கிறதோ அங்கெல்லாம் இப்படிப்பான சிலை உடைப்பு தன்னிச்சையாக நடைபெற வேண்டும். அவ்வாறு செய்வது மட்டுமே காங்கிரஸ் காரர்களை சாலை மறியல், போராட்டம் செய்யத் தூண்டும். தொடர்ந்து காங்கிரஸ் கயவர்களை தூங்க விடாமல் செய்வதே தமிழர்களின் தலையாய பணியாக இருத்தல் வேண்டும். Rajkumar Palaniswamy (facebook) சோனியா, மன்மோகன் கொடும்பாவியை செருப்பால் அடித்து எரித்த புதுச்சேரி தந்தை பெரியார் திராவிடர் கழக்த்தினர் 55 பேரை போலீசார் கைது செய்தனர் (facebook)
  15. இலங்கையில் நடைபெற உள்ள காமன்வெல்த் மாநாட்டில் இந்திய பிரதிநிதிகள் யாரும் பங்கேற்கக் கூடாது என வலியுறுத்தி வரும் 12ஆம் தேதி தமிழகம் தழுவிய முழு அடைப்புப் போராட்டம் நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மதிமுக, தந்தைப் பெரியார் திராவிடர் கழகம், உள்ளிட்ட 21 அமைப்புகள் இதற்கான அழைப்பினை விடுத்துள்ளன. அன்றைய தினம் ரயில் மறியல் போராட்டங்களை நடத்தவும் திட்டமிட்டுள்ளதாக சென்னையில் இன்று செய்தியாளர்களைக் கூட்டாகச் சந்தித்த இந்த அமைப்புகளின் பிரதிநிதிகள் தெரிவித்தனர். இதே தினத்தில் வணிகர் சங்கம் அழைப்பு விடுத்துள்ள கடை அடைப்புப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ள இவர்கள், இலங்கை அரசுக்கு எதிரான இந்த போராட்டத்திற்கு அனைத்துத் தரப்பினரும் ஆதரவு தர வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர். காமன்வெல்த் மாநாட்டில் இந்திய அரசு சார்பில் யாரும் பங்கேற்கக் கூடாது என்பதை வலியுறுத்தி நடத்தப்பட்ட போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்கள் மீதான வழக்குகள் அனைத்தையும் மாநில அரசு கைவிட வேண்டும் என்றும் இந்த அமைப்பினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். (facebook) பொதுநலவாய் (காமன்வெல்த்) மாநாட்டை இலங்கையில் நடத்தக்கூடாது எனக்கோரியும், மீறி நடந்தால் அதில் இந்தியா அரசு பங்கெடுக்கக் கூடாது எனக்கோரியும் மயிலாடுதுறையில் தொடர் வண்டி மறியலில் ஈடுபட்ட 100 க்கும் மேற்பட்ட நாம் தமிழர் கட்சியினர் மாவட்ட செயலாளர் கலியபெருமாள் தலைமையில் கைது... (facebook)
  16. இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க்ககூடாது, தமிழக மீனவர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தும் சிங்கள இராணுவத்தின் மீது இந்திய அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கக்கோரியும், தமிழீழ விடுதலைப் புலிகளின் ஊடகத்துறையில் பணியாற்றிய இசைப்பிரியாவை படுகொலை செய்த ராசபக்சே அரசின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கக்கோரியும் நாகை மாவட்ட தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாநில துணைப் பொதுச்செயலாளர் கருப்பு சரவணன் தலைமையில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற உள்ளது. தமிழின உணர்வாளர்கள் அனைவரும் ரயில் மறியல் போராட்டத்தில் கலந்துக் கொள்ள அழைக்கிறோம். இடம்: இரயில் நிலையம், சீர்காழி - நாகை மாவட்டம் நாள்: 12/11/2013 ( செவ்வாய்க்கிழமை) நேரம்: காலை 10.00 மணி அளவில் (facebook)
  17. பொள்ளாச்சியில் மாணவர்கள். இனப்படுகொலை செய்த இலங்கையில் காமன்வெல்த் மாநாட்டை நடத்தாதே! காமன்வெல்த் கூட்டமைப்பிலிருந்து போர்க்குற்றம் புரிந்த இலங்கையை நீக்கு!! இலங்கையில் காமன்வெல்த் மாநாட்டை நடத்தக்கூடாது என அணைத்து நாடுகளும் அறிவிக்கவேண்டும்!!! காமன்வெல்த்தின் செயலாளராக இருக்கும் இந்தியாவின் கமலேஷ்சர்மா வை உடனடியாக பொறுப்பிலிருந்து விலகவேண்டும்!!! என பல கோரிக்கைகளுடன் பள்ளி மாணவ,மாணவிகள் கருப்பு பட்டை உடையில் அணிந்து சென்றனர்.... (facebook)
  18. பொள்ளாச்சியில் நாளை 6.11.13,புதன் காலை 10மணியளவில் அனைத்துகட்சிகளின் சார்பில் காமன்வெல்த் எதிர்ப்பு கண்டனஆர்ப்பாட்டம். அனைவரும் உணர்வுடன் கலந்துகொள்ளவும் (facebook)
  19. வள்ளுவர் கோட்டத்தில் இன்று பட்டினிப் போராட்டத்தை துவக்கிய செம்பியன் உள்ளிட்ட மாணவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு, கைது செய்யப்பட்டு பின் விடுதலையாகியிருக்கிறார்கள். (facebook)
  20. நாம் தமிழர் திருப்பரங்குன்றம் ஒன்றியம் சார்பாக காமன்வெல்த் அமைப்பிலிருந்து இலங்கையை நீக்க வேண்டும், அங்கே நடைபெறும் மாநாட்டில் இந்தியா கலந்துகொள்ளக்கூடாது என்பதை வலியுறுத்தி பெருங்குடியில் விமானநிலையம் முன்பு ஆர்பாட்டம். நாள் : 07-11-2013 (facebook) ------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------ சிவகங்கையில் பட்டினி போராட்டத்தில் ஈடுப்பட்ட தோழர்களை காவல் துறை வலுக்கட்டாயமாக கைது செய்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளது தொடர்புக்கு 9943412507 (facebook) ------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------ புதுச்சேரியில் நாம் தமிழர் கட்சி சார்பாக இன்று நடைபெற்ற இனப்படுகொலை இலங்கையில் காமன்வெல்த் மாநாடா? அதில் இந்தியா பங்கேற்பதா? கண்டன பொதுக்கூட்டம். (facebook) இனவெறி இலங்கையில் காமன்வெல்த் மாநாட்டை கண்டித்து புதுச்சேரியில் நாம் தமிழர் கட்சி சார்பாக இன்று நடைபெற்ற பொதுக்கூட்டம், பேரணி.. (facebook) http://www.youtube.com/watch?v=gWoC3uj2cmo&feature=youtu.be&hd=1 (facebook)

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.