Jump to content

துளசி

கருத்துக்கள பார்வையாளர்கள்
  • Posts

    8892
  • Joined

  • Last visited

  • Days Won

    11

Everything posted by துளசி

  1. சோழி அண்ணாவுக்கும் புத்து அண்ணாவுக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். வைதேகி என்பவர் யார் என்று தெரியாவிட்டாலும் அவருக்கும் பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
  2. யாழ் அன்பு அண்ணாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
  3. 3.10.13அன்று காலை 10மணியளவில்,100க்கும் மலேசிய மக்களை ஒருங்கிணைத்து இனப்படுகொலை இலங்கையில் காமன்வெல்த் மாநாட்டை நடத்தாதே என கண்டன கூட்டம் நடத்திய மலேசிய நண்பர்கள் கலை முகிலன்,தமிழ் திறன்,கண்ணம்மா,வீர சிங்கம்,அறிவேந்தன்,பூமுகன் உள்ளிட்ட நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்... (facebook)
  4. --------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- (facebook)
  5. நண்பர்களே! "தமிழீழ விடுதலைக்கான மாணவர் சுடர் பயணம் " மாணவர்களால் முன்னெடுக்கப்படுகிறது. நீங்கள் அவர்களுக்கு செய்யும் பேருதவி... பகிருங்கள் ! உங்கள் நண்பர்கள் 10 பேருக்காவது பகிருங்கள்.! பயணத்தில் பங்கெடுங்கள். (facebook)
  6. 3 இலட்சம் தமிழரின் பிணத்தின் மீது காமன்வெல்த்தா எனும் முழக்கத்துடன் இலங்கையில் காமன்வெல்த் மாநாட்டை நடத்தக் கூடாது என தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மாணவர்கள் கையெழுத்துப் பரப்புரையையும் மேற்கொண்டுள்ளனர்... (facebook)
  7. தமிழகத்தில் பிரிட்டிஷ் நிறுவனம் முற்றுகை அக் 12, 2013 இனப்படுகொலை இலங்கையில் காமன்வெல்த் மாநாட்டை நடத்தாதே இலங்கையை காமன்வெல்த் நாடுகளின் கூட்டமைப்பில் இருந்து நீக்கு என்ற கோரிக்கையை முன்னிறுத்தி, இங்கிலாந்து பொருட்களை புறக்கணிக்கும் போராட்டத்தை விஜயா மாலில் இயங்கும் இங்கிலாந்து நிறுவனமான Marks & Spencers -ஐ முற்றுகையிட்டு பாலச்சந்திரன் மாணவர் இயக்கத்தினர் போராட்டம் நடத்தினர். இப்போராட்டத்தில் 50 மேற்பட்ட மாணவர்கள் கைதாகியுள்ளனர். கைது செய்யப்பட்ட மாணவர்கள் தற்பொழுது வடபழனி ராஜாமால் மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ளனர். (facebook)
  8. ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம் காமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் நடத்தக்கூடாது, காமன்வெல்த் விதிகளை மீறிய இலங்கையை காமன்வெல்த் அமைப்பிலிருந்து நீக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து இன்று ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம் நடைபெற்றது. முற்றுகை போராட்டத்தை SDPI கட்சி ஒருங்கிணைத்தது. இதில் தமிழர் வாழ்வுரிமை கட்சி நிறுவனர் வேல்முருகன், விடுதலை சிறுத்தைகள் கட்சி, திராவிடர் விடுதலை கழகம், தந்தை பெரியார் திராவிடர் கழகம், மே பதினேழு இயக்கம் கலந்துகொண்டது. சைதாப்பேட்டை பனகல் மாளிகையிலிருந்து தொடங்கி ஆளுநர் மாளிகை முற்றுகையிட் சென்றபோது நூற்றுக்கணக்கான தோழர்கள் கைது செய்யப்பட்டனர். (facebook)
  9. ஞாயிறு 13-10-2013, மாலையில் தோழர் தியாகு பட்டினிப் போராட்டம் இருக்கும் இடத்தில் அனைவரும் சந்திப்போம். பெரும் திரளாய் தோழருக்கான ஆதரவினை வழங்குவோம். மே பதினேழு இயக்கம். (facebook) ------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- வருகின்ற 25 அக்டோபர், வெள்ளிக்கிழமையில் , காமன்வெல்த் மாநாட்டினை இலங்கைக்கு தாரைவார்த்து இனப்படுகொலையை அங்கீகரித்தும், தனது சுயநலத்திற்காக மக்களை வேட்டையாடுவதை நியாயப்படுத்தியும் செயல்படும் இந்தியா- இங்கிலாந்து அலுவலகங்களை முற்றுகையிடுவோம். அடிமை நாடுகளின் மாநாட்டினை இலங்கையில் நடத்துவதன் மூலமாக இந்தியாவின் பிராந்திய நலனையும், பொருளாதார முதலீடுகளையும், சந்தைப்படுத்தலையும் மேலும் அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலகின் பிராந்திய நலனையும் முன்னெடுக்கமுடியும் என்பதற்காக இந்தியாவும், இங்கிலாந்தும் கடுமையாக முயன்று வருகிறது. போலி ஜனநாயக நாடுகளான இவை இன்றளவும் இலங்கைக்கு உதவி வருவது மனித குலத்திற்கு மிக மிக ஆபத்தானது. இந்தியாவின் ஏர்டெல் நிறுவனமும், இங்கிலாந்து நிறுவனங்களும் இந்த மாநாட்டிற்கு முகவர்களாக செயல்படுவதை நாம் அறிவோம். இதை நாம் முறியடித்தாகவேண்டும். மேலும், கோரிக்கையானது மேற்குலகமும், இந்தியாவும் முன்வைக்கும் செயல்திட்டத்தின் அடிப்படையில் அல்லாது , நமது அடிப்படை உரிமை சார்ந்த கோரிக்கையினை முன்னிலைப்படுத்துவது அவசியமாகும். மேற்குலம்-இந்தியாவின் வேலைதிட்டத்திற்குள் நாம் சிக்கிக்கொள்ளக்கூடாது. இந்த அடிப்படையில் “பொதுவாக்கெடுப்பு” எனும் கோரிக்கையை வென்றெடுக்க உறுதி பூணுவோம். நமது கோரிக்கையை நாமே தீர்மானிப்போம். அடையாளப்போராட்டமாக முடியாமல், அழுத்தம் தரும் போராட்டமாக மாற்றுவது உங்கள் கைகளில் இருக்கிறது. அனைவரும் திரள்வதை வேண்டுகிறோம். மே பதினேழு இயக்கம் (facebook)
  10. இலங்கையில் பொதுநலவாய மாநாடு நடக்கத் கூடாது என்றும் , இலங்கையை பொதுநல நாடுகளின் பட்டியில் இருந்து நீக்க வேண்டியும், இலங்கைக்கு பிரித்தானியா துணை போகக் கூடாது என்று வலியுறுத்தியும் நேற்று லண்டனில் பிரதமர் அலுலகத்தின் முன்பு தமிழர்கள் கவன ஈர்ப்பு போராட்டம் நடத்தினர். இந்த கோரிக்கைகளுக்கு பிரதமர் செவி சாய்க்கா விட்டால் நவம்பர் 15 ஆம் தேதி பிரதமர் அலுவலகம் முன்பு மாபெரும் போராட்டம் நடக்கும் என்ற செய்தியை கொடுத்துள்ளனர் தமிழர்கள். போராட்டம் நடத்திய தமிழர்களுக்கு பாராட்டுகள். இது ஒரு நல்ல தொடக்கமாக அமைந்துள்ளது . இதே போல் உலகெங்கும் வாழும் தமிழர்கள் அந்தந்த நாடுகளின் பிரதமருக்கு இப்படியான அழுத்தத்தை கொடுக்க வேண்டும். எப்படியாவது இலங்கையில் நடைபெறும் பொதுநலவாய மாநாட்டை தடுத்து நிறுத்துதல் வேண்டும் . (facebook) செங்கல்பட்டு சட்ட கல்லூரி மாணவர்கள் இனப்படுகொலை இலங்கையை காமன்வெல்த் கூட்டமைப்பில் இருந்து நீக்க கோரி பிரிட்டிஷ் பொருட்களை தீயிட்டுக் கொளுத்திய போது, நேற்று கைது செய்யப்பட்டனர். (facebook) நேற்று நள்ளிரவு 12.12மணிக்கு, இனப்படுகொலை இலங்கையை காமன்வெல்த் கூட்டமைப்பில் இருந்து நீக்க கோரி காலவரையறையற்ற பட்டினிப் போரை தொடங்கிய 3 மதுரை மாணவர்கள் கைது செய்யபட்டு உள்ளனர்.... (facebook) மதுரை மாணவர்களின் கைதைத் தொடர்ந்து, 5 செங்கல்பட்டு சட்ட மாணவர்கள் இனப்படுகொலை இலங்கையை காமன்வெல்த் கூட்டமைப்பில் இருந்து நீக்க கோரி கால வரையற்ற பட்டினிப் போரை தொடர்ந்துள்ளனர்.... (facebook) 100க்கும் மேற்பட்ட செங்கல்பட்டு சட்ட கல்லூரி மாணவர்கள் இனப்படுகொலை இலங்கையை காமன்வெல்த் கூட்டமைப்பில் இருந்து நீக்க கோரி பிரிட்டிஷ் பொருட்களை தீயிட்டுக் கொளுத்திய பின்,தொடர்வண்டி மறியல் செய்த போது.... (facebook)
  11. தோழர் தியாகு 6 ஆம் நாள் பட்டினி போராட்டம் ! காஞ்சி மக்கள் மன்றம், மே 17 இயக்கம், மதிமுக, மமக, தமக நடிகர் சத்யராஜ் மற்றும் பல இயக்க தோழர்கள் ஆதரவு.... (facebook)
  12. தோழர்.தியாகுவுக்கு ஆதரவாக 2 வது நாளாக இடிந்தரையில் உண்ணாவிரதம்! இலங்கையில் காமன்வெல்த் மாநாடு நடத்தக்கூடாது என வலியுறுத்தி சென்னையில் உண்ணாவிரதம் இருந்து வரும் தோழர்.தியாகுவுக்கு ஆதரவாக இடிந்தகரை இளைஞர்கள் இன்று உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர். கூடங்குளம் அணுஉலைக்கு எதிரான இடிந்தகரை மக்கள் போராட்டத்தின் 783வது நாளான இன்று, இலங்கையில் காமன்வெல்த் மாநாடு நடத்தக் கூடாது என்பதற்காகவும், இந்தியா காமன்வெல்த் மாநாட்டுக்கு செல்லக்கூடாது என்பதற்காகவும் சென்னையில் உண்ணாவிரத போராட்டம் நடத்தும் தியாகுக்கு ஆதரவாக, இடிந்தகரை இளைஞர்கள் இன்று (06-10-2013) உண்ணாவிரதம் இருந்து தங்கள் எதிர்ப்பை இந்திய அரசுக்கும், இலங்கைக்கும் தெரிவித்தனர். (facebook)
  13. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலையோடு தொடர்புடைய சிதம்பரம்,கார்த்திக்கேயன்,MK. நாராயணன் ஆகியோரை உண்மை அறியும் ஆய்வுக்கு உட்படுத்த மாணவர்கள் நடத்தும் கையெழுத்து இயக்கத்துக்கு ஆதரவாக தமிழக வாழ்வுரிமை கட்சி நிறுவனர் வேல்முருகன். (facebook)
  14. இலங்கையில் நடக்க இருக்கும் காமன்வெல்த் மாநாட்டை வேறு நாட்டிற்கு மாற்ற கோரி இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் சார்பில் சென்னையில் உள்ள பிரிட்டிஷ் தூதரகத்திற்கு சென்று மனு கொடுக்க இருக்கிறோம்.. தேதி: 10.10.2013, வியாழக்கிழமை நேரம்: காலை 9 மணி. வாய்ப்புள்ள இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் இணைந்துகொள்ளவும் .. தொடர்புக்கு:9940364232 event page: https://www.facebook.com/events/197501000432904/
  15. உண்ணாவிரதமிருக்கும் தியாகு அவர்களை சத்யராஜ் சந்தித்தார் !! (facebook) வெற்றி அல்லது வீரச்சாவு. அக்டோபர் 8ம் தேதி அய்யாவின் 8ம் நாள் உண்ணாவிரத போராட்டத்தில் 4 மாணவர் அமைப்புகளை சேர்ந்தவர்கள் கலந்து கொள்ள உள்ளனர்... 1. தமிழ் ஈழ விடுதலைக்கான மாணவர் போராட்டக்குழு 2. தமிழ் நாடு மாணவர் பேரவை.. 3. பாலச்சந்திரன் மாணவர் இயக்கம். 4. தமிழ்நாடு மாணவர் கூட்டமைப்பு ஆகிய அமைப்புகளை சேர்ந்த மாணவர்கள் வரும் 8ம் தேதி அய்யாவின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து ஒரு நாள் உண்ணாவிரதம் இருக்க உள்ளனர். அனைவரும் வள்ளுவர் கோட்டத்தை நோக்கி அணிதிரள்வோம்.. (facebook)
  16. தமிழினப் படுகொலை செய்த இலங்கை காமன்வெல்த் மாநாட்டில் இந்திய அரசே கலந்து கொள்ளாதே! என்று கோரி ‘வெற்றி அல்லது வீரச்சாவு’ என்ற முழக்கத்துடன் சாகும் வரை உணவு மறுப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தோழர் தியாகுவிற்கு ஆதரவாக சேவ் தமிழ்சு இயக்கத் தோழர்கள் 40 ற்க்கும் மேற்பட்டோர் ஒரு நாள் உண்ணாநிலை போராட்டத்தில் நேற்று ஈடுபட்டனர். (facebook)
  17. தோழர் தியாகு அவர்களுக்கு ஆதரவு வழங்கும் விதமாக மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் இன்று ஒரு நாள் உண்ணாவிரதம் இருந்தபொழுது.. (facebook) தோழர்.தியாகு அவர்களின் உண்ணாவிரத போராட்டத்துக்கு ஆதரவாக இடிந்தகரையில் 500 க்கும் மேற்பட்ட பெண்களுடன் அணு சக்திக்கு எதிரான மக்கள் இயக்கம் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் 05.10. 2013 (facebook)
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.