Jump to content

துளசி

கருத்துக்கள பார்வையாளர்கள்
  • Posts

    8892
  • Joined

  • Last visited

  • Days Won

    11

Everything posted by துளசி

  1. திருப்பூர் சிக்கன்னா அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் காமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் நடத்தக்கூடாது என வலியுறுத்தி இன்று வகுப்புக்களை புறக்கணிப்பு செய்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். (facebook)
  2. நாம் தமிழர் கட்சியின் திருப்பூர் வடக்கு மாவட்டம் சார்பில் இன்று திருப்பூரில் உள்ள தொலை தொடர்புத் துறை அலுவலகம் முற்றுகையிடப் பட்டது.....பொதுநலவாய மாநாட்டை இரண்டு லட்சம் தமிழர்களைக் கொன்ற இலங்கையில் நடத்தாதே,,,,பொதுநலவாய அமைப்பில் இருந்து இனப்படுகொலை செய்த இலங்கையை நீக்கு,,,, பொதுநலவாய மாநாட்டில் பங்கேற்காதே!!!, கொலைகார சிங்கள அரசை காப்பாற்ற முனையாதே!!! என்கிற கோரிக்கைகளை முன்னிறுத்தி போராடிய 50க்கும் மேற்பட்ட நாம் தமிழர்களை கைது செய்தது காவல்துறை.... இந்திய அரசைப் பணிய வைத்து , இலங்கையை பொதுநலவாய அமைப்பில் இருந்து நீக்கவும் நாம் தொடர்ந்து போராடுவோம்.. மக்கள் மன்றத்தில் தொடர்ந்து எடுத்துச் செல்வோம்...காங்கிரசையும் அதற்குத் துணை போகும் திராவிடக் கட்சிகளையும் இம்மண்ணில் இருந்து விரட்டியடிப்போம்... (facebook)
  3. 22-10-13 இலங்கையில் காமன்வெல்த் மாநாட்டை நடத்தாதே. இந்தியாவே கலந்து கொள்ளாதே என்ற கோரிக்கையோடு,சென்னை துறைப்பாக்கம் டி.பி.ஜெயின் கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தை தொடங்கிவிட்டார்கள். இந்த மாணவர்களை அடுத்து மற்ற கல்லூரி மாணவர்களும் போராட்டத்தில் குதிப்பார்களோ. தமிழகம் தழுவிய போராட்டமாக மாறுமோ என்ற அச்சத்தில், சென்ட்ரல் டீம் ‘தகவலை திரட்டத்’ தொடங்கியிருக்கிறது. (facebook)
  4. நேற்று (22-10-13) டி.பி.ஜெயின் கல்லூரி மாணவர்கள் 250 பேர், இலங்கையில் காமன் வெல்த் மாநாடு நடைபெறக் கூடாது என்று கல்லூரி வளாகத்தில் போராட்டம் நடத்திய காட்சி ! "தினத்தந்தி செய்தியில் " (facebook)
  5. “நாம் தமிழர்” கட்சி நடத்தும் ‘ஆளுநர் மாளிகை’ முற்றுகைப் போராட்ட தேதி மாற்றப்பட்டுள்ளது. அனுமதி இல்லாத காரணத்தினால் 24ஆம் தேதி மாற்றப்பட்டுள்ளது. Thirumurugan Gandhi (facebook)
  6. காமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் நடத்தக்கூடாது என்பதை வலியுறுத்தி ஹைதராபாத்தில் நடந்த உள்ளரங்கு கூட்டத்தில் (facebook)
  7. காமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் நடத்தக்கூடாது என்பதை வலியுறுத்தி ஹைதராபாத்தில் நடந்த உள்ளரங்கு கூட்டத்தில் இலங்கையில் காமன்வெல்த் மாநாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து சமூக ஆர்வலர் ஜெர்மனியை சார்ந்த கேப்ரியேல் அம்மா ( தமிழ் நன்றாக பேசுவார்) உரையாற்றுகிறார். (facebook)
  8. 19-10-2013 நடைபெற்ற மனித சங்கிலி போராட்டம் தொடர்பாக மேலும் சில படங்கள்..... (200 அடி நீளமுள்ள படங்கள் ! தந்தை பெரியார் திராவிடர் கழக ஏற்பாடு) ஜெயபால் ராமையா (facebook)
  9. தமிழ் இனப்படுகொலை செய்த இலங்கையில் காமன் வெல்த் மாநாடு நடத்தாதே ! என்ற கோரிக்கையை வலியுறுத்தி, 19-10-2013 மாலை 4 மணி முதல் 6 மணி வரை, மனிதச் சங்கிலி போராட்டம் கோவை காந்திபுரத்தில் ! அனைத்துக் கட்சி, அமைப்புக்கள் சார்பாகச் சிறப்பாக நடைபெற்றது ! ஆயிரகணக்கான போர்குணமிக்க போராளிகள் இன உணர்வுடன் தமிழீழ இன அழிப்புப் படங்களை நெஞ்சில் சுமந்து, கலந்து கொண்டு, 2 மணிநேரத்திற்கும் மேல் தங்களது போராட்ட கோரிக்கைகளை வான்முட்ட எழுப்பினார்கள் ! ஜெயபால் ராமையா (facebook)
  10. october 17 இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியாவே கலந்து கொள்ளாதே.... கோரிக்கையை வலியுறுத்தி நாம் தமிழர் கோவை மேற்கு மாவட்டம் சார்பில் மத்திய அரசு அலுவுலகம் முற்றுகையிடப்பட்டது! தோழர்கள் கைது! (facebook) காமென்வெல்த் மாநாட்டினை இலங்கையில் நடத்தக்கூடாது என்பதை வலியுறுத்தி நாம் தமிழர் கட்சி சார்பாக கும்பகோணம் மேலக்காவிரியில் தெருமுனை பிரச்சாரக் கூட்டம் நடைப்பெற்றது. இக்கூட்டத்திற்கு நகரத்துணைச்செயலாளர் கோ.வடிவேல் தலைமை தாங்கினார். நகரத்துணைத்தலைவர் திருநாவுக்கரசு முன்னிலை வகித்தார். நகரச்செயலாளர் மீ.ரகமதுல்லா ஒருங்கிணைத்தார். மாவட்ட கலை பண்பாட்டு செயலாளர் பிரதீப் நன்றி கூறினார். கூட்டத்தில் மாவட்டச்செயலாளர் வழக்கறிஞர் வினோபா ,மாநில இளைஞர் பாசறை செயலாளர் வழக்கறிஞர் மணி செந்தில் ஆகியோர் உரையாற்றினர். இக்கூட்டத்தில் மாவட்ட வழக்கறிஞர் பாசறை செயலாளர் வழக்கறிஞர் ஆனந்த் ,மாவட்டப் பொருளாளர் கண்ணன், மாவட்ட மாணவர் பாசறை செயலாளர் தினேசு , ஒன்றியச்செயலாளர் ஜெஸ்டீன், மாவட்ட இளைஞர் பாசறை இணைச்செயலாளர் ஒவியர் கார்த்திக்கேயன் உள்ளீட்ட பலர் கலந்துக் கொண்டனர். அப்பகுதி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக துண்டறிக்கைகளும் வழங்கபட்டன. (facebook)
  11. காமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் நடத்தக் கூடாது என்பதை வலியுறுத்தியதோடு காமன் வெல்த் மாநாட்டிற்கு துணை போகும் பிரித்தானியா நாட்டின் பொருட்களை கொளுத்தி போராட்டம் செய்தனர் தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை. இப்போராட்டத்திற்கு திரு வெள்ளையன் அவர்கள் தலைமை தாங்கினார் . இப்போராட்டத்திற்கு நாம் தமிழர் கட்சியும் , மாணவர் கூட்டமைப்பும் ஆதரவு அளித்தனர். பிரித்தானிய நாட்டின் தயாரிப்பான ஆர்லிக்ஸ், அமாம் வழலை (சோப்பு) , ப்ரூ குளம்பித் தூள், அன்னபூர்ணா, நெச்ட்லே, யூனிலீவர் தயாரிப்புகள் போன்ற பல்வேறு பொருட்களை தீயிட்டு எரித்தனர் வணிகர்கள். பிரித்தானிய அரசு இலங்கைக்கு ஆதரவு வழங்கினால் தமிழகத்தில் பிரித்தானிய பொருட்களை புறக்கணிக்க வணிகர்கள் பரப்புரை செய்வோம் என்று முழங்கினர் வணிகர் சங்கத்தினர். இதன் மூலம் பிரித்தானிய அரசுக்கு பெரும் அழுத்தம் கொடுத்துள்ளனர் தமிழ்நாடு வணிகர் பேரவை. இனத்திற்காக போராடிய வணிகர் பேரவைக்கு பாராட்டுகள். (facebook)
  12. இலங்கையில் காமன்வெல்த் மாநாடு நடக்கக் கூடாது - மெரினாவில் மாணவர்கள் போராட்டம், பேரணி, கையெழுத்து பரப்புரை. வரும் நவம்பர் மாதம் இலங்கையில் இனப்படுகொலை செய்த ராஜபக்சேவின் தலைமையில் காமன் வெல்த் மாநாடு நடைபெறுகிறது. இம்மாநாட்டில் இந்திய அரசும் கலந்து கொள்கிறது . இனப்படுகொலை செய்த இலங்கை நாட்டில் பன்னாட்டு மாநாடு நடந்தால் அது இலங்கையில் நடந்த இனப்படுகொலை மற்றும் போற்குற்றங்களை மூடி மறைக்கும் செயலாக மாறும். எனவே உலக நாடுகள் இலங்கையை தனிமை படுத்த வேண்டும் . தமிழர்களுக்கு நீதி கிடைத்திட வேண்டும். இந்தியா உள்ளிட்ட நாடுகள் அங்கு நடக்கும் மாநாட்டை ஒட்டுமொத்தமாக புறக்கணிக்க வேண்டும் . ஒருவேளை அங்கு மாநாடு நடந்தாலும் , அதில் இந்தியா பங்கேற்கக் கூடாது , இலங்கையை காமன்வெல்த் கூட்டமைப்பில் இருந்து நீக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன் வைத்து இன்று சென்னை மெரீனா கடற்கரையில் தமிழக மாணர்வர்கள் போராட்டம் நடத்தினர். அப்போது பொதுமக்களிடம் இது குறித்து விழிப்புணர்வு செய்யப்பட்டு அவர்களிடம் கையெழுத்தும் பெறப்பட்டது. இந்திய அரசே இலங்கையில் நடக்கும் காமன்வெல்த நாட்டை புறக்கணி என்ற முழக்கமும் முன்வைக்கப்பட்டது. பின்பு மாணவர்கள் உழைப்பாளர் சிலையில் இருந்து காந்தி சிலை வரை சுமார் 3 கி மீ வரை விழிப்புணர்வு பேரணி நடத்தினர். காமன்வெல்த் மாநாட்டை புறக்கணித்த கனடா நாட்டிற்கு நன்றியும் தெரிவித்து பதாகை ஏந்தினர் மாணவர்கள். Rajkumar Palaniswamy (facebook)
  13. மோடி வருகையை எதிர்த்து சென்னையில் மாணவர்கள் போராட்டம்- போலீஸுடன் தள்ளுமுள்ளு சென்னை: குஜராத் முதல்வரும், பாஜகவின் பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடி சென்னைக்கு வருவதை கண்டித்து சென்னையில் பல இடங்களில் மாணவர்கள், மகளிர் அமைப்பினர் போராட்டம் நடத்திக் கைதானார்கள். சென்னை அண்ணா சாலையில், தாராபூர் டவர் அருகே இந்திய மாணவர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. போராட்டக்காரர்களைக் கலைக்க போலீஸார் முயன்றபோது இரு தரப்புக்கும் இடையே பெரும் தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதையடுத்து போலீஸார் தடியடி நடத்தினர். இதில், ஜனநாயக மாதர் சங்கத்தைச் சேர்ந்த 2 பெண்களும், மாணவர்களும் தாக்கப்பட்டனர். ஒரு மாணவரை போலீஸார் லத்தியால் தாக்கியதில் அவரது சட்டை கிழிந்தது. இதையடுத்து மாணவர்கள் சாலை மறியலில் குதித்தனர். அவர்களை துணை போலீஸ் கமிஷனர் கிரி அமைதிப்படுத்தினார். பின்னர் அனைவரும் கைது செய்யப்பட்டனர். அதேபோல மெரீனா கடற்கரையில், காந்தி சிலை அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. அதிலும் பெரும் திரளானோர் கலந்து கொண்டனர். இதேபோல புரட்சிகர மாணவர், இளைஞர் முன்னணி சார்பில் சென்னை சென்டிரல் ரயில் நிலையம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்திலும் பலர் பங்கேற்றுக் கைதானார்கள். போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் அம்பானிகளின் எடுபிடியான நரேந்திர மோடி தமிழகத்திற்கு வரக் கூடாது என்று கூறி கோஷமிட்டனர். http://tamil.oneindia.in/news/tamilnadu/students-agitate-against-narendra-modi-185592.html
  14. இன்று 18-10-2013 மாலை கோவை செஞ்சிலுவைச் சங்கம் முன்பாக இலங்கையில் காமன் வெல்த் மாநாடு நடக்கக் கூடாது ! என அனைத்துக் கட்சி, அமைப்புக்கள் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது ! ஜெயபால் ராமையா (facebook)
  15. மாணவர்கள்-இளைஞர்கள் கலந்தாய்வு கூட்டம் ----------------------------------- இடம்:மதுரை நாள்:20.10.13 இணையுங்கள்: 9080655521,8015902062. தமிழர் தலைமுறையாய் எழுவோம்... (facebook: loyolahungerstrike)
  16. நாளை “நாம் தமிழர்” கட்சி நடத்தும் ‘ஆளுநர் மாளிகை’ முற்றுகைப் போராட்டத்தில் பெரும்திரளாய் கலந்து கொள்ளுங்கள்... மே17 இயக்கம் தனது தோழர்களுடன் நாளையும் கலந்துகொள்கிறது.... அனைவரையும் பங்கேற்க அழைக்கிறோம். திருமுருகன் காந்தி. (facebook)
  17. காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளக் கூடாது என்பதை வலியுறுத்தி தமிழகம் தழுவிய அளவில் பல போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. மேலும்,தோழர் தியாகுவின் பட்டினிப் போராட்டத்தைப் பற்றிய தகவல்களை தமிழகம் தழுவிய அளவில் கொண்டு சேர்க்கவும், தமிழகம் தழுவிய அளவில் போராட்டங்களை முன்னெடுப்பது பற்றி அனைத்து தோழர்களிடம் கலந்தாலோசிக்கவும் நமது தோழர்கள் சென்றுள்ளார்கள். இதுவரையில் அறிவிக்கப்பட்டுள்ள போராட்டங்கள் : அக். 15 - சென்னையில் ஆர்ப்பாட்டம் - தமிழக வாழ்வுரிமைக் கட்சி அக். 16 - கும்பகோணத்தில் இரயில் மறியல் அக்.16 - தஞ்சாவூரில் இரயில் மறியல் அக். 17 - ஆளுநர் மாளிகை முற்றுகை - நாம் தமிழர் கட்சி அக். 18 - திருப்பூரில் முழு கடையடைப்பு அக். 18 - திருச்சியில் முழு கடையடைப்பு அக். 18 - தமிழகம் தழுவிய அளவில் இந்திய அரசு அலுவலகங்கள் முற்றுகை மற்றும் இரயில் மறியல் இந்த வாரத்திற்குள் தமிழகம் தழுவிய இரயில் மறியல் நடத்தப் போவதாக அனைத்து மாணவர் இயக்கங்கள் அறிவிப்பு. தமிழகத்தில் 10 மாவட்டங்களில் பொறுப்பேற்பதாக தமிழீழத்திற்கான மாணவர் போராட்டக் குழு அரிவிப்பு கோவையில் அனைத்து இயக்கங்கள் ஆலோசனைக் கூட்டம் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மதுரையில் இன்று மாலை நடைபெறுகிறது. விரைவில், மேலும் பல போராட்ட அறிவிப்புகள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. # தமிழர் போராட்டம் பரவுகிறது. (facebook)
  18. இலங்கை காமன்வெல்த் மாநாடு எதிர்ப்பு கூட்டு இயக்கம், கோவை அனைத்து கட்சிகள் – இயக்கங்கள், தமிழ் தேசிய அமைப்புகள் இன்று (15.10.2013) கோவை தந்தை பெரியார் படிப்பகத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் இலங்கையில் எதிர்வரும் நவம்பர் மாதத்தில் நிகழ உள்ள காமன்வெல்த் நடத்த கூடாது என்றும் அவ்வாறு மாநாட்டினை நடத்தினால் அதில் இந்தியா கலந்து கொள்ள கூடாது என வலியுறுத்தி ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இலங்கையில் இந்த மாநாட்டை நடத்துவதன் மூலம் ஈழ தமிழர்களை இனபடுகொலை செய்த ராஜபக்சே தலைமையிலான இலங்கை அரசை இனபடுகொலை தொடர்பான போர் குற்றத்திலிருந்து காப்பற்றுவதாக அமைவதோடு மேற்படி மாநாடு நிகழ்வது காமன்வெல்த் நெறிமுறைகளுக்கு எதிரானது ஆகும் என்று ஏகமனதாக இவ்வனைத்து கட்சி – அமைப்புகள் கூட்டத்தில் தீர்மானிக்கபட்டது.மேற்படி தீர்மானத்தை வலியுறுத்தி பொது மக்கள்,மாணவர்களை திரட்டி தொடர் போராட்டங்களை நடத்துவது என்றும் முடிவு செய்யபட்டது. 18.10.2013 - வெள்ளி கிழமை - கோவை செஞ்சிலுவை சங்கம் முன்பு ஆர்பாட்டம். 19.10.2013 - சனிக் கிழமை - கோவை காந்திபுரத்தில் மனித சங்கிலி 22.10.2013 -செவ்வாய் கிழமை-கோவை BSNL அலுவலம் முற்றுகை இந்த கூட்ட்த்தில் 28 அமைப்புகள் கலந்துக் கொண்டன.புரட்சிகர மாணவர் முன்னணி, புரட்சிகர இளைஞர் முன்னணியினர் தமிழீழ விடுதலை ஆதரவு மாணவர் இயக்கத்தின் சார்பாக கலந்துக் கொண்டனர். (facebook)
  19. தியாகு அவர்களின் உண்ணாவிரதத்தை தொடர்ந்து இன்று தமிழக வாழ்வுரிமை கட்சி போராட்டம் நடத்தியது. இதில் கட்சி பேதமின்றி அனைவரையும் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதில் 10,000 பேரளவில் கலந்து கொண்டுள்ளார்கள். இது தொடர்பான செய்தி, படங்களை பார்க்க : http://www.yarl.com/forum3/index.php?showtopic=130804&p=948008 எதிர்வரும் 17 ஆம் திகதி நாம் தமிழர் கட்சியினர் சார்பில் சீமான் அண்ணாவின் தலைமையில் ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இடம்: ஆளுநர் மாளிகை நேரம்: காலை 10 மணி. (facebook)
  20. செங்கல்பட்டில் மாணவர்களுக்கும் காவல்துறைக்கும் இடையில் கைகலப்பு. செங்கல்பட்டில் மாணவர்கள் இன்று இலங்கையில் காமன்வெல்த் நடத்தாதே என்ற கோரிக்கையை முன்வைத்து நெடுசாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர் . அங்கு வந்த காவல்துறையினர் மாணவர்களை தாக்கினர் , இதனால் மாணவர்களுக்கும் காவல்துறைக்கும் இடையில் கைகலப்பு ஏற்பட்டது (facebook)
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.