-
Posts
8892 -
Joined
-
Last visited
-
Days Won
11
Content Type
Profiles
Forums
Events
Blogs
Gallery
Everything posted by துளசி
-
நாம் தமிழர் திருப்பரங்குன்றம் ஒன்றியம் சார்பாக காமன்வெல்த் அமைப்பிலிருந்து இலங்கையை நீக்க வேண்டும், அங்கே நடைபெறும் மாநாட்டில் இந்தியா கலந்துகொள்ளக்கூடாது என்பதை வலியுறுத்தி பெருங்குடியில் விமானநிலையம் முன்பு ஆர்பாட்டம். நாள் : 07-11-2013 (facebook) ------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------ சிவகங்கையில் பட்டினி போராட்டத்தில் ஈடுப்பட்ட தோழர்களை காவல் துறை வலுக்கட்டாயமாக கைது செய்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளது தொடர்புக்கு 9943412507 (facebook) ------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------ புதுச்சேரியில் நாம் தமிழர் கட்சி சார்பாக இன்று நடைபெற்ற இனப்படுகொலை இலங்கையில் காமன்வெல்த் மாநாடா? அதில் இந்தியா பங்கேற்பதா? கண்டன பொதுக்கூட்டம். (facebook) இனவெறி இலங்கையில் காமன்வெல்த் மாநாட்டை கண்டித்து புதுச்சேரியில் நாம் தமிழர் கட்சி சார்பாக இன்று நடைபெற்ற பொதுக்கூட்டம், பேரணி.. (facebook) http://www.youtube.com/watch?v=gWoC3uj2cmo&feature=youtu.be&hd=1 (facebook)
-
மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம். சானல் 4ல் வெளியான தமிழர் இனப்படுகொலைக்கான ஆதாரங்களை முன்வைத்து ஈழத்தமிழர்களுக்கு நீதி தேடி சென்னையில் மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம் தொடங்கியுள்ளனர். மாணவர்கள்: செம்பியன், லயோலா கல்லூரி, சென்னை #சிவப்பிரியன் செம்பியன் 9600094493 இளவரசன், சட்டக்கல்லூரி, புதுச்சேரி #Ilavarasan Appu 9092391484 ரத்ன வேலன், எஸ்.ஆர்.எம். பொறியியல் கல்லூரி. #Rathna Velan 9003170934 இடம் : வள்ளுவர் கோட்டம். நாள் : 05-11-2013 காலை 10:00 மணி முதல்... கோரிக்கைகள் மத்திய அரசே ===================== 1) காமன்வெல்த் நாடுகளிடம் கலந்துரையாடி இனப்படுகொலை இலங்கையில் காமன்வெல்த் மாநாட்டை உடனே இரத்து செய். 2) உலக நாடுகளிடம் முறையிட்டு ஈழத் தமிழர் பகுதியில் பொது வாக்கெடுப்பை உடனே நடத்து. சிங்கள குடியேற்றத்தை உடனே நிறுத்து. ------------------------------------------------------------------- மாநில அரசே ===================== 3) மூன்று இலட்சம் தமிழர்களை சீரழித்த இலங்கையின் தூதரகத்தை தமிழக மண்ணிலிருந்து உடனே அகற்று 4) இன உணர்வாளர்கள் மீது பொய்யாக போடப்பட்டுள்ள தேசிய பாதுகாப்பு சட்டத்தை உடனே திரும்பப்பெறு. ----------------------------------------------------- காமன்வெல்த் மாநாட்டுக்கு எதிரான மாணவர்கள். (facebook)
-
சென்னையில் சுடர் பயணம் கிளம்பிய மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களுடன் பேரறிவாளன் தாயார் அற்புதம் அம்மாளும் கைது செய்யப்பட்டு Spencerக்கு எதிரில் உள்ள அண்ணாசாலை காவல் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளனர். மாணவர்களுக்கு முதலில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது பின்னர் சேப்பாக்கத்தில் கூட அனுமதி கொடுத்துள்ளனர். அனுமதி கொடுக்கப்பட்ட இடத்தில் கூடியதற்கு கைது செய்யப்பட்டுள்ளனர். (facebook)
-
நவம்பர் 3,நெய்வேலி மாணவர்கள் இலங்கை காமன் வெல்த் மாநாட்டிற்கு எதிராக கையெழுத்து பிரச்சாரம் மற்றும் பேரணி. குறுகிய நேரத்திற்குள் முதல் போராட்டத்திலேயே 80 இன உணர்வுள்ள மாணவர்களை ஒன்று திரட்டி பல மாநில தொழிலாளர்கள் வசிக்கும் நெய்வேலி NLC மத்திய பேருந்து நிலையத்தில் பிரச்சாரம் நடத்தியுள்ளனர். ஆட்டோ சங்கத் தோழர்களும் மாணவர்களுடன் போராட்டத்தில் சங்கமித்தார்கள் இப்போராட்டத்தை மாணவர் பூவராகவன் ஒருங்கிணைத்துள்ளார் . தெளிவான கோரிக்கைகளுடன் அறவழியில் போராட்டம் நடத்தியுள்ளனர் அறிவார்ந்த மாணவர்கள் . சகோதரி இசைப்பிரியா சித்திரவதைக்குட்பட்டு கொடூரமாக கொல்லப்பட்டு வெளிவந்த சேனல் 4 வீடியோ காட்சிகளை உலகம் பார்த்து பதைக்கிறது ! உலகத் தமிழர்கள் ஒட்டு மொத்தமாய் ரத்தம் கொதிப்பேறி நிற்கிறார்கள் !இதையெல்லாம் புறக்கணித்துவிட்டு இந்தியா இலங்கைக்கு செல்லுமேயானால் தமிழகம் முழுவதும் போராட்டம் வெடிக்கும் என எச்சரித்துள்ளனர் இந்த இளம் போராளிகள் . (facebook)
-
இசைப்பிரியா, பாலச்சந்திரன் என இனப்படுகொலை செய்யப்பட்ட இலட்சக்கணக்கான தமிழர்களுக்கு நீதி கேட்போம்!! இனப்படுகொலையாளர்களை செருப்பால் அடிப்போம்!! ************************************************************************************************ இந்திய,அமெரிக்கா போன்ற நாடுகளின் துணையோடு சிங்கள அரசு இலங்கையில் நடத்திய திட்டமிட்ட இனப்படுகொலையின் கோர சாட்சியாக நம் முன்னே பாலச்சந்திரனின் மரணமும்.இசைப்பிரியாவின் படுகொலையும் நிற்கிறது.. ”இசைப்பிரியாவின் படுகொலை” சிங்கள இனவெறியர்களால் பாலியல் வன்புணர்ச்சி செய்து கொல்லப்பட்ட இலட்சக்கணக்கான பெண்களின் நிலையை இனப்படுகொலையை வேடிக்கைப்பார்க்கும் இவ்வுலகிற்கு அம்பலப்படுத்துகிறது.. இன்னமும் அமைதி காத்துக்கொண்டிருப்போமானால் நாமும் துரோகிகள் தான்.. ஒன்றுபடுவோம்!! வேற்றுமைகளை மறந்து வெடித்து எழுவோம்!! வீதிகளில் இறங்குவோம்!! காமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் நடத்தவேக்கூடாது, தமிழீழத்திற்கான பொதுவாக்கெடுப்பை உடனே நடத்து என்று போர் முழுக்கம் எழுப்புவோம்!! விண்ணதிரட்டும்!! உலக மாந்தர்களின் உறக்கம் கலையட்டும்..!! வாருங்கள் தோழர்களே வருக்கின்ற நவம்பர்-06 அன்று இங்கிலாந்து துணை தூதரகம் முன்பு ஒன்றுகூடுவோம்!! இனப்படுகொலையை நடத்தி விட்டு அதை மூடி மறைக்கவும், நம் விடுதலை போராட்டத்தை நசுக்கவும் துடிக்கும் இந்திய,இங்கிலாந்து அரசுகளுக்கும் அதன் தலைமைகளுக்கும், நம் செருப்பினை தூக்கி காட்டுவோம்.. இனப்ப்டுகொலையாளனை அம்பலப்படுத்துவோம்!! (பாலச்சந்திரன் மாணவர் இயக்கம்) SHOW YOUR SLIPPERS TO INDIA AND BRITISH . SHOW YOUR DISAGREEMENT TO PRINCE CHARLES AND SALMAN KHURSHID FOR THEIR ENTHUSIASTIC PARTICIPATION IN COMMON WEALTH CONFERENCE IN SRI LANKA. THEY ARE DENYING JUSTICE TO EELAM TAMILS. THEY STOP THE LIBERATION TO EELAM TAMIL NATION... SHOW THE WHITE COLONISTS AND INDIAN COLONISTS, WHAT THEY DESERVE. EXPOSE THE RACIST ATTITUDE OF BRITISH AND INDIAN GOVT Slipper waving protest against Indian External Affairs Minister Salman kurshid and British Prince charles who are determined to carry and sponsor the ongoing genocide of Eezham Tamils in lanka and also to Demand Not to conduct Commonwealth in Genocidal Lanka and to conduct referendum among eezham tamils for a Seperate Tamil Nation We invite Students,intellectuals,activists to join hands in our fight against our oppressors on November 6th,2013 TIME=3 PM VENUE= British deputy high commission,Nungambakkam,chennai -- Balachandran students movement, balachandransm2009@gmail.com 9962670409, 9489235319, 9677226318 (பாலச்சந்திரன் மாணவர் இயக்கம்) (facebook)
-
மாவீரர்களுக்கு வீர வணக்கம்.
-
எடு கையில் வெடிகுண்டை புலியே நீ வாடா ! அட இன்னும் சிங்களவன் கையில் உன் நாடா ? வருகின்ற நவம்பர் 27 ஆம் திகதி ஐதராபாத்தில் வைத்து மாவீரர் தினம் அனுசரிக்கப்படும். புலிக்கொடி ஏற்றி எம் தமிழீழத் தாயகத்திற்காக வீரச்சாவெய்திய மாவீரர்களுக்கு நினைவேந்தல் நடைபெறும் தோழர்கள் தயாராகுங்கள் . தமிழர்களின் தாகம் ! தமிழீழத் தாயகம் ! Abdul Khader (facebook)
-
மாவீரர்களுக்கு வீரவணக்கம்.
-
அண்ணா, உண்மையை சொல்லப்போனால் தமிழக முஸ்லிம்கள் பலர் ஈழ விடுதலைப்போராட்டத்துக்கு ஆதரவு. அண்மையில் commonwealth மாநாட்டை புறக்கணிக்கும்படி உருவாக்கப்பட்ட petition இல் கூட பல முஸ்லிம்கள் கையொப்பமிட்டிருந்தார்கள். முகநூல் வைத்திருப்பவர்கள் இந்த நபரை விரும்பினால் follow பண்ணுங்கள். உமர்கயான். தமிழினியன். சே.ஜெ https://www.facebook.com/aimumar இவர் இன அழிப்பிற்கெதிரான இஸ்லாமிய இளைஞர் இயக்கத்தை சேர்ந்தவர். அடிக்கடி பல ஈழத்து போராட்டங்களில் இவர் முகத்தை பார்த்திருப்பீர்கள். இவர் எமது மக்களின் போராட்டங்களில் கலந்துகொள்பவர். எமது போராட்ட செய்திகளை முகநூலில் பகிர்பவர். முக்கியமாக சீமான் அண்ணாவுக்கும் இவருக்கும் நல்ல நட்பு இருக்கிறது. இருவரும் ஒருவர் போராட்டத்தில் மற்றவர் கலந்து கொள்வதுண்டு. திருமுருகன் காந்தி அவர்களுடனும் அவ்வாறே தொடர்பை பேணுபவர். (படம்: முகநூல்)
-
நேற்று, டெல்லியில் "BOYCOTT SRILANKA" "BOYCOTT CHOGM" எனும் முழக்கங்கள் விண்ணை முட்டி உள்ளது.... # போராட்டத் தோழர்களுக்கு வாழ்த்துக்கள். இனப்படுகொலை இலங்கையை காமன்வெல்த் கூட்டமைப்பில் இருந்து அடித்து விரட்டுவோம்... Joe Britto (facebook) ----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- டெல்லியில் இடம்பெற்ற போராட்டம். (facebook) --------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- 60,000 வக்கீல்கள் 31-ந் தேதி கோர்ட்டு புறக்கணிப்பு ! இலங்கையில் நடக்கும் காமன் வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க கூடாது. இலங்கையில் காமன் வெல்த் மாநாடு நடைபெறுவது நியாயமற்றது என்ற கோரிக்கையுடன் தமிழகம் ,புதுச்சேரி வழக்குரைஞர்கள் 60,000 பேர் வருகிற 31 ஆம் திகதி கோர்ட்டை புறக்கணித்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர். (facebook)
-
மாணவர்கள் வணிகர்கள் தொழிலாளர்கள் குழந்தைகளை இணைத்து கொண்டு இனப்படுகொலை இலங்கையில் காமன்வெல்த் மாநாட்டை பிரிட்டிஷ் இளவரசர் புறக்கணிக்க கோரி 10,000க்கும் மேற்பட்டோரின் கையெழுத்து கோரிக்கை மனுவை பிரிட்டிஷ் தூதரகத்தில் இன்று மதியம் ஒப்படைத்தபோது. இருந்தும் பிரிட்டிஷ் பிரதமரும் சார்லசும் காமன்வெல்த் மாநாட்டில் கலந்துகொள்வதாக செய்தி வந்துள்ளதால் அடுத்தக்கட்ட போராட்டம் குறித்து நாளை முடிவெடுக்கப்படும். (facebook)
-
(facebook) (facebook)
-
திருமுருகன் - ஊடக நேர்காணல் இலங்கையில் காமன்வெல்த் மாநாட்டினை நடத்தாதே, பொதுவாக்கெடுப்பு நடத்து, 13வது சட்டத்திருத்தம் மோசடி. - என்கிற கோரிக்கைகளை முன்வைத்து இன்று இந்திய அலுவலகம், இங்கிலாந்து தூதரகத்தினை பல்வேறு கட்சி-இயக்கத்தோழர்களுடன் முற்றுகை இடப்பட்டது. நாள் : 25 அக்டோபர் 2013 சாஸ்த்திரி பவன் , சென்னை ஒருங்கிணைப்பு : மே பதினேழு இயக்கம் https://www.youtube.com/watch?v=7d8XcWlZeZU&hd=1 மே 17 இயக்கம் (facebook)
-
இனப்படுகொலை இலங்கையில் காமன்வெல்த் மாநாட்டை நடத்தாதே இளவரசர் சார்லஸ் பங்கேற்று ராஜபக்சேவுக்கு மகுடம் சூட்டாதே என்ற கோரிக்கையோடு அவருக்கு 5000 பேர் கையெழுத்திட்ட கடிதங்கள் சென்னையில் உள்ள இங்கிலாந்து தூதரகத்தில் ஒப்படைக்கப்பட்டன. மாணவர்கள், வணிகர்கள், தொழிலாளர்கள் இணைந்து பரப்புரை செய்து வாங்கிய கடிதங்களை 5 மாணவர்கள் கட்டாக தூக்கிச்சென்று தூதரக அதிகாரியிடம் ஒப்படைத்தனர். சிவப்ரியன் செம்பியன் (facebook)