Jump to content

துளசி

கருத்துக்கள பார்வையாளர்கள்
  • Posts

    8892
  • Joined

  • Last visited

  • Days Won

    11

Everything posted by துளசி

  1. சென்னை மெரீனாவில் மே 18 ஆம் திகதி மாணவர்கள் நடத்திய போராட்டமும் மாணவர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட காட்சியும். "ஒரு தலைவன் வரவுக்காய் காத்திருந்தோம் எங்கள் தலைவன் பிறந்தான்" என்ற பாடலை ஒருவர் பாடுகிறார். (facebook)
  2. காவல்துறையின் முற்றுகைக்கு மத்தியிலும் திரண்ட தமிழர்கள் நம்பிக்கை அளிக்கிறார்கள். நினைவேந்தல் நிகழ்வின் முகப்புப் பகுதியில் ‘அதிரடிப்படையை’ குவித்து எங்களுக்கு பாதுகாப்பு தருகிறோம் என்று மக்கள் பங்கேற்பினை தடுத்து முற்றுகை வளையத்தினை ஏற்படுத்தினார்கள். 3.30 மணியில் ஆரம்பித்த முற்றுகை 7.30 மணிவரை இருந்தது. நினைவு நடுகல்லினை வைக்ககூடாது, தடுப்பு கட்டைகள் ’பயங்கரமான ஆயுதமாக’ இருக்கிறது ஆகவே அகற்றவேண்டும் என கொடுத்த நெருக்கடிகள் என காவல்துறையின் நோக்கம் மக்கள் பங்கெடுப்பினை தடுப்பதாகவே அமைந்தது. நினைவேந்தல் நடுகல்லிற்கு அஞ்சலி செலுத்த வந்த மக்களை காவல்துறை தடுத்து அனுப்பிய நிகழ்வும் நடந்தது. இன்னும் பலவிடயங்களை பகிரவேண்டும். தொகுத்து எழுதுகிறோம். - திருமுருகன் காந்தி - (facebook)
  3. அதிமுக ஆட்சியின் அடக்குமுறையும் ஒடுக்குமுறையும் மே-18 அன்று கடலூரில் நடந்த நாம் தமிழர் கட்சியின் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக சேலம் மாவட்டத்தில் இருந்து மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சி.அருண் அவர்களின் தலைமையில் சென்ற பொதுமக்களையும், கல்லூரி மாணவர்களையும், நாம் தமிழர் கட்சியின் தோழர்களையும் அக்கூட்டத்திற்கு செல்லவிடாமல் சேலம் ஆத்தூர்-யை அடுத்து கூட்டுச்சாலை (கூட்டுரோடு) சுங்கச் சாவடியில் காவல்துறையினரால் தடுத்து 200 க்கும் மேற்பட்ட நாம் தமிழரை இரவு 9 மணிவரை மண்டப்பத்தில் சிறை வைத்து திருப்பி அனுப்பினர். பெண்களும் குழந்தைகளும் இதில் இருக்கிறார்களே என்று பாராமல் கூட நமது காவல்துறையினர் இரவு 9 மணி வரை ஒருவரையும் வீட்டிற்கோ பொதுக்கூட்டத்திற்கோ செல்ல அனுமதிக்கவில்லை. அக்கூட்டத்தில் பெரும்திரளாக கலந்து கொள்ளவேண்டும் என்று எண்ணி கடந்த ஒரு மாதகாலமா பெரும் பாடுபட்டு நிதி சேகரித்து, விளம்பரங்கள் செய்து, வீடு வீடாக பிரச்சாரம் செய்து சேர்த்த மக்களின் உணர்வுகளை இந்த ஆட்சியாளர்கள் வீணாக்கிவிட்டனர். ஏன் இந்த அடக்குமுறை, ஒடுக்குமுறை? (facebook)
  4. திருநெல்வேலி மாவட்ட தமிழீழ விடுதலைக்கான மாணவர்கள் கூட்டமைப்பின் சார்பாக மே 18 உலக இனப்படுகொலை தினமான முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல், தமிழக திறந்த வெளி சிறை கூடங்களில் 24 வருடங்களாக அடைபட்டு கிடக்கும் ஈழத்தமிழர்களுக்கு சம குடியுரிமை அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் என்ற ஒற்றைக்கோரிக்கையுடன் நடைபெற்றது. (facebook)
  5. தமிழீழ விடுதலைக்கான மாணவர்கள் கூட்டமைப்பு சார்பாக கடலூரில் நடைபெற இருந்த பேரணி மற்றும் போதுகூட்டதிற்கு கடைசி நேரத்தில் அனுமதி மறுக்கப்பட்டது , காவல்துறையினரின் பல்வேறு நெருக்கடிகளை மீறி ஈழத்தில் இறந்த உறவுகளுக்கு மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடந்தது இதில் ஏரளாமான பொதுமக்கள் கலந்து கொண்டு தம் உறவுகளுக்கு மெழுகு வர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர் .. (facebook)
  6. பேரணிக்கு தமிழக அரசு அனுமதி மறுத்த நிலையில் "தமிழீழத்திற்கான மாணவர் போராட்டக் குழு"வினர் அதை சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகையின் முன்பு நினைவேந்தலாக நடத்தியுள்ளனர். (facebook)
  7. Cameron should review his decision to visit SriLanka: LeeScott “What happened in Sri Lanka was, in my view, a war crime and genocide and it needs to be investigated independently. It is no good asking the government or their allies to investigate. What is required is an independent international investigation to get to the bottom of what happened and to identify the people who need to be brought to justice.” Roger Evans, Conservative London Assembly Member for Havering & Redbridge (facebook)
  8. பிரான்சில் மே 18 பேரணி மழைக்கு மத்தியிலும் நடைபெற்றது. பேரணிக்கு நானும் சென்றிருந்தேன். கையில் பதாகைகளுடன் அனைவரும் ரோஜா மலர் ஏந்தி சென்றோம். பலர் "arrêter le génocide tamouls" என்று பொறிக்கப்பட்ட தமிழீழ வரைபடத்துடன் கூடிய t-shirt அணிந்து சென்றோம். அனைத்தும் பேரணி ஒழுங்கு செய்தவர்களால் இலவசமாகவே தரப்பட்டது. பலர் புலிக்கொடிகளை பிடித்திருந்தார்கள். ஒரு புலிக்கொடியும் பிரான்ஸ் நாட்டு கொடியும் ஐரோப்பா கொடியும் மிக உயரமாக பிடிக்கப்பட்டன. école miliitaire இலிருந்து பேரணி ஆரம்பமானது. "முள்ளிவாய்க்கால் மண்ணே வணக்கம்" என்ற பாடல், "பூக்கள் எரிகிறதே எம் வேர்கள் கருகிறதே" மற்றும் பல பாடல்கள் ஒலிபரப்பப்பிக்கொண்டிருந்தார்கள். பிரெஞ்சு மொழியிலும் பாடல், பிரச்சாரங்கள் ஒலிபரப்பப்பட்டன. பேரணியின் இடையில் மழை வந்து விட்டது. மழைக்கு மத்தியிலும் அனைவரும் பேரணியில் பயணித்தோம். ஆங்காங்கே வேற்றின மக்கள் எமது போராட்டத்தை படமெடுத்தார்கள். eiffel tower அருகே பேரணி பயணித்த போது அங்கு சுற்றுலா வந்த பல மக்கள் எமது போராட்டத்தை படமெடுத்தார்கள். சிலர் வீடியோவும் எடுத்தார்கள். சில வெள்ளைக்கார பெண்மணிகள் எமது முதுகில் தட்டி ஆறுதல் கூறி சென்றார்கள். பேரணி இறுதி இடத்தை அடைந்ததும் இறந்த மக்களுக்காக மௌன அஞ்சலி செலுத்தினோம். பின்னர் அங்கு அமைக்கப்பட்டிருந்த நினைவு தூபியில் பூக்களை வைத்து அஞ்சலி செலுத்தினோம். பின்னர் பலர் உரையாற்றினார்கள். ஒரு எழுச்சிப்பாடலுக்கு சிலர் சேர்ந்து நடனமாடினார்கள். மழை தூறலின் மத்தியிலும் நிலம் ஈரமாக இருந்த போதும் அவர்கள் எழுச்சி நடனமாடியது பாராட்டப்பட வேண்டியது. இலங்கையில் சைவ, இஸ்லாமிய, கிறிஸ்தவ ஸ்தலங்கள் அழிக்கப்பட்டு அவ்விடத்தில் புத்தர் சிலைகள் வைக்கப்படுவதை சொல்லும் வகையில் ஒரு சிறு நாடகம் இடம்பெற்றது. பின்னரும் சிலர் உரையாற்றினார்கள். அத்துடன் நான் அங்கிருந்து வெளியேறி விட்டேன். அதன் பின்னர் நடைபெற்றவை பற்றி தெரியவில்லை. படங்கள் கிடைத்தால் பின்னர் இணைக்கிறேன். மே 18 இன அழிப்பு நினைவு நாளில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி. "பூக்கள் எரிகிறதே எம் வேர்கள் கருகிறதே" என்ற பாடலை நீங்களும் கேளுங்கள்.
  9. லண்டனில் may 18 பேரணி மற்றும் பொதுக்கூட்டம். பிப 1.30 மணிக்கு Hyde Park இல் ஆரம்பமான ஊர்வலம் மாலை 4 மணிக்கு Waterloo Place சென்றடைந்தது. மாலை 3 மணிக்கு Waterloo Place இல் பொதுக் கூட்டம் ஆரம்பமாக இருந்த போதும் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் பேரணியில் கலந்து கொண்டதால் சுமார் 1மணி நேரம் தாமதமாகியே Waterloo Place ஐ பேரணி சென்றடைந்தது. பேரணி நகர்ந்து சென்ற இடம் லண்டன் நகரின் மைய பகுதியாக இருந்ததால் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகளும் பிரித்தானிய மக்களும் இந்த பேரணியை பார்வையிட்டனர். தமிழ் மக்களுக்கு எதிரான இனப்படுகொலையினை வேற்றின மக்களுக்கு எடுத்துக்காட்டும் நிகழ்ச்சிகளும் கவனத்தை ஈர்த்தன. மாலை 4 மணி அளவில் Waterloo Place இல் பிரம்மாண்டமான அளவில் பொதுக்கூட்டம் ஆரம்பமானது. (facebook)
  10. தமிழக அரசின் தடையையும் மீறி கடலூரில் நாம் தமிழர் கட்சயினரின் இன எழுச்சி கருத்தரங்கம் தலைவர் படத்துடன்... நாம் தமிழர் கட்சியினர் வந்த வாகனங்கள் காவல்துறையால் இடைமறிக்கப்பட்டு பலர் தடுத்து வைக்கப்பட்ட போதும் பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டார்கள். இந்திய தேசியத்தால் ஒடுக்கப்படும் சக காஸ்மீரிய தேசிய இனத்தை சார்ந்த விடுதலை போராளி யாசின் மாலிக் தனக்கான காவலையும் மீறி இவ் மாநாட்டில் இடையில் வந்து கலந்து கொண்டார்.. அவர் காஷ்மீர் போராட்டமும் தமிழ்மண் போராட்டமும் ஒன்றே என கூறி தமிழீழப் போராட்டத்தை வாழ்த்தி தமிழீழ விடுதலை என்பது உங்களால் சாத்தியம் என கூறினார். கலை நிகழ்வுகளும் நடந்தன. பொதுக்கூட்டத்தில் காவல்துறை நுழைந்து கலகம் செய்ததாகவும் மேடையின் அருகிலேயே காவல்துறை நின்றதாகவும் இறுதியாக கிடைத்த தகவல் தெரிவிக்கிறது. (facebook)
  11. நாம் தமிழர் கட்சியினரின் கடலூர் கூட்டத்திற்கு திடீர் தடை. ஜெ அரசு நீதிமன்ற தீர்ப்பை மீறி நள்ளிரவில் காவல் துறையை கொண்டு அட்டூழியம். தடை செய்யப்பட்ட தலைவர் பிரபாகரன் படத்தை பேனராக பயன்படுத்தியமைக்காக கூட்டத்திற்கான அனுமதி மறுக்கப்பட்டிருப்பதாக காவல்துறை கூறியுள்ளது. (முகநூல்)
  12. உலகத் தமிழ் அமைப்பின் மே 18 நினைவேந்தல். இந்த முறை தென் இந்தியா முழுவதும்.. மற்ற மாநிலங்களில் இருக்கும் தமிழர்களும் கலந்துகொள்ளுங்கள் (facebook) மதுரையில் மாணவர்கள் பேரணி. சென்னையில் மாணவர்கள் பேரணி (facebook)
  13. தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான தினேஷ் அவர்கள் மாணவர்களின் அடுத்தக்கட்ட போராட்டம் குறித்து "குமுதம் ரிப்போர்ட்டர் " இதழுக்கு அளித்துள்ள பேட்டி. இலங்கையில் கொமென்வெல்த் மாநாடு நடக்க கூடாது என்ற கோரிக்கையையும் உள்ளடக்கி போராடவிருப்பதாக கூறியிருக்கிறார். வாழ்த்துகள். (facebook)
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.