Everything posted by துளசி
-
இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணி! (ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும்.)
இலங்கையின் போர்க் குற்றங்களை உலக மக்கள் தெரிந்து கொள்ள நீங்கள் என்ன செய்யலாம்? இலங்கையில் நடந்த போர்க் குற்றங்களை சர்வதேசம் அறிந்திருந்தது என்ற குற்றச்சாட்டுக்குள் சர்வ தேச மக்களை உள்ளடக்க முடியாது. அம் மக்கள் கொடுத்த அதிகாரத்தைப் பயன்படுத்தி ஆட்சிக்கு வந்தவர்கள், அதிகார நலன்களுக்காக சிறிலங்கா அரசுக்குத் துணை போனார்கள், போகிறார்கள். இதனை மாற்றி அங்கு நடந்தது என்ன என்பதை உலக மக்கள் கண்டுனர என்ன செய்யலாம்..? No Fire Zone : இலங்கையின் 2009 இறுதி யுத்தத்தில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல் சம்பவங்களை ஆவணப்படுத்தும் கெலும் மெக்ரேயின் திரைப்படம்.Sri Lanka's Killing Field, Sri Lanka's Killing Fields: War Crimes Unpunished ஆகியவற்றை அடுத்து கெலும் மெக்ரே உருவாக்கிய இலங்கை குறித்த மூன்றாவது ஆவணத்திரைப்படம் இதுவாகும். கடந்த மார்ச் மாதம் ஐ.நா மனித உரிமைகள் கூட்டத்தொடர், மற்றும் ஜெனிவா சர்வதேச மனித உரிமைகள் திரைப்படவிழாவில் திரைக்கு வந்தது No Fire Zone. அதற்கு முன்னதாகவே காமன்வெல்த்திற்கான இங்கிலாந்தின் ஒன்றியம், மற்றும் இந்திய அரசியலாளர்களின் மத்தியில் இத்திரைப்படத்தை கொண்டு போயிருந்தார்கள் திரைப்பட குழுவினர். இம்முறை ஐ.நா மனித உரிமைகள் கூட்டத்தொடரில் இலங்கைக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் அமெரிக்கா மீண்டும் கொண்டுவந்த பிரேரணை வெற்றி பெற்றதற்கு இத்திரைப்படத்தின் திரையிடலும் ஒரு முக்கிய செல்வாக்கு செலுத்தியிருந்தது. அதோடு, இலங்கை ஆளும் அரசை பற்றிய தங்களது நிலைப்பாட்டை பலர் மாற்றிகொள்வதற்கும், 2009ம் ஆண்டு இலங்கையின் இறுதியுத்தத்தில் போர்க்குற்றங்கள் நடந்திருப்பதையும், பல பொதுமக்கள் கொல்லப்பட்டதையும் இது நாள் வரை தெரியாதவர்களும் தெரிந்து கொள்ளவும் வாய்ப்பு உருவானது. இப்போது No Fire Zone திரைப்படத்தை உலகமெங்கும் திரையிடுவதற்கு கொண்டு செல்ல போகிறார்கள் கெலும் மெக்ரே குழுவினர். அடுத்த செவ்வாய்க்கிழமை ( மே.14) இத்திரைப்படம், புரூசெல்ஸில் உள்ள ஐரோப்பிய பாராளுமன்றத்தினுள் திரையிடப்படப்போகிறது. பின்னர் கெலும் மெக்ரே எதியோப்பியாவில் நடைபெறும் அதியாஸ் அபாபா திரைப்பட விழாவுக்கு இத்திரைப்படத்தை கொண்டு செல்கிறார். அதற்கடுத்து, ஆஸ்திரேலியா, கனடா, இந்தியா மற்றும் ஏனைய ஆசிய ஆபிரிக்க நாடுகளுக்கும், ஸகண்டினேவிய, அமெரிக்க நாடுகளுக்கும் இத்திரைப்படம் கொண்டு செல்லப்படவிருக்கிறது. அத்தோடு இப்புதிய திரைப்படத்தின் முழுமையான பதிப்பை வேறு மொழிபெயர்ப்புக்களுடன், தொலைக்காட்சி சேனல்களுக்கும் வழங்கப்போகிறார்கள். எதிர்வரும் நவம்பர் மாதம் இலங்கையில் நடைபெறவுள்ள காமன்வெல்த் நாடுகளின் கூட்டத்தொடருக்கு முன்னதாக தொடர்ச்சியாக உலக நாடுகள் பலவற்றில் இத்திரைப்படம் காட்சிப்படுத்த திரைப்பட குழுவினர் முயற்சி மேற்கொண்டுள்ளனர். 2014ம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவுள்ள மனித உரிமை கூட்டத்தொடருக்கு முன்னதாக உலகில் உள்ள முக்கிய அரசியலாளர்கள், சமூக ஆர்வலர்கள் அனைவரும் இலங்கையின் இறுதி யுத்தத்தில் என்ன நடைபெற்றது என்பதனை தெரிந்திருக்க வேண்டும் என்பது இவர்கள் இலக்கு. ஆக்லாந்திலிருந்து ஆர்ஜெண்டீனா வரை அரசியல் தலைவர்களிடமும், மாணவ குழுக்களிடமும் இத்திரைப்படத்தை கொண்டு செல்லுமாறு நாம் கோரப்படுகிறோம். உலகின் அனைத்து நாடுகளும் ஒருமுறையாவது இத்திரைப்படத்தை பார்த்துவிட நாங்கள் முயற்சிக்கிறோம். இலங்கையில் அதே ஆளும் அரசு தொடர்ந்து ஆட்சி செலுத்துகிறது. இறுதி யுத்தத்தில் நடந்ததாக வெளியிடப்பட்ட அனைத்து போர்க்குற்ற ஆதாரங்களையும் அலட்சியமாக மறுக்கிறார்கள். இறுதி யுத்தத்தில் தாம் மேற்கொண்டது மனிதாபிமான மீட்பு நடவடிக்கை என்கிறார்கள். இத்திரைப்படத்தை நாங்கள் உங்களுக்கு வழங்குகிறோம். வெறுமனே இலங்கையின் இறுதி யுத்தத்தில் என்ன நடந்தது என்பதனை அறிந்திருக்க வேண்டும் என்பதற்காக மாத்திரம் அல்ல. சர்வதேச சமூகத்தையும், பார்வையாளர்களையும் தட்டி எழுப்புங்கள். எங்களுக்கு தேவை நீதி. உங்கள் உதவியில்லாது இது நடைபெறவாய்ப்பில்லை. இப்படத்தை உலகம் முழுவதும் கொண்டு செல்ல உதவுங்கள் என நீள்கிறது அவர்கள் கோரிக்கை. இதற்காக 200,000 யூரோ திட்டத்தில் பிரச்சாரத்தை முன்னெடுக்க தயாராகியுள்ளனர். பிரபல Kickstarter இணையத்தளம் மூலம் அடுத்து வரும் ஒரு மாதத்திற்குள் 20,000 யூரோ நிதி திரட்டுவதற்கு அறிவித்தல் விடுத்திருந்தனர். கடந்த ஏப்ரல் 30ம் திகதி இந்த அறிவிப்பு Kickstarter தளத்தில் வெளியானது. 10 நாட்களுக்குள் குறித்த இலக்கை எட்டிவிட்ட போதும் தற்போது இதன் இரு மடங்கை 40,000 யூரோக்கள் எனும் புதிய இலக்கை நிர்ணயித்திருக்கிறார்கள். எதிர்வரும் மே 30ம் திகதி வரை நிதி திரட்டும் காலக்கெடு Kickstarter இணையத்தளத்தில் தொடரவுள்ளது. எவ்வளவு நிதி திரட்டுகிறமோ, அந்தளவு பிரச்சாரத்தை மேலும் வலுப்படுத்த முடியும் என்கிறார்கள். இது தொடர்பான விபரங்களை பின்வரும் இணைப்பில் காணலாம். http://www.kickstarter.com/projects/599171067/no-fire-zone-impact-distribution?ref=search (facebook; loyolhungerstrike)
-
இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணி! (ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும்.)
மே 18 தமிழினப் படுகொலை நாள் பேரணி அன்புள்ள சக மாணவ நண்பர்களுக்கு , இலட்சக்கணக்கான ஈழத்தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்ட பிறகும், சொந்த மண்ணை விட்டு பல இலட்சம் தமிழர்கள் உலகெங்கும் சிதறி ஓடிய பின்னரும் ஈழத்தில் மீதமிருப்போர் மேலும் மேலும் துன்புறுத்தப்பட்டு வருகின்றனர். இக்கொடுமையைத் தடுத்து நிறுத்த வழியில்லாமல் உலகத் தமிழரெல்லாம் மனம் வெதும்பிய நிலையில் தமிழக மாணவர்களாகிய நம் போராட்டம் எல்லோருக்கும் ஒரு புதிய நம்பிக்கையைக் கொடுத்தது. தமிழக, இந்திய அரசியலில் சில மாற்றங்கள் நிகழ்ந்தன. தமிழக சட்டமன்றத்தில் வரலாற்று முக்கியத்துவமான தீர்மானங்கள் நிறைவேறின. தமிழகத்தில் ஒரு நம்பத்தகுந்த அரசியல் எழுச்சியை ஏற்படுத்தினோம். அதன் தொடர்ச்சியாக, ஈழப்போரில் இறுதி நாட்களில் ஆயிரமாயிரம் பேர் கொன்றுகுவிக்கப்பட்டு ஓர் இனப்படுகொலை நடத்திமுடித்ததாக இந்த உலக நாடுகள் அறிவித்த நாள் மே மாதம் 18, 2009. தமிழினப் இனப்படுகொலையைக் கண்டித்தும், ஐ.நா. மன்றம் உடனடியாக ஈழத் தமிழர்கள் வாழும் பகுதியில் பொது வாக்கெடுப்பு (Referendum) நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து தமிழகத்தின் அனைத்து மாவட்டத் தலைநகரிலும் மாணவர்கள் நாம் ஒன்று திரண்டு உணர்வாளர்களை ஒன்றிணைத்து அமைதி வழியில் பேரணியாக சென்று வலியுறுத்துவோம். ஈழத்தில் இனி ஒன்றும் செய்யமுடியாது வேண்டுமானால் தன்னுரிமை பெற்றுத்தரலாம் என்று நம்பிக்கையிழந்தோரை புறக்கணித்து தமிழீழ விடுதலையை நோக்கி உலகத்தை திரும்பிப் பார்க்க வைக்கும் வலிமை சுயநலமில்லா மாணவ சமுதாயத்திற்கு உண்டு என்பதை நிருபிப்போம். சிங்கள ஆட்சியாளர்களுக்கு நட்பாக இருந்துகொண்டு ஈழத்தமிழர்களை இந்திய அரசு கைவிட்ட நிலையில், பல உலக நாடுகள் இலங்கை அரசுக்கு துணைபோகிற நிலையில், உலக மாணவ சமுதாயத்தையும் உலகெங்கும் உள்ள உண்மையான மனித உரிமைப் போராளிகளையும் உடன்சேர்த்துக்கொண்டு ஐநாவை வலியுறுத்துவதே ஒரே வழியாகும். அதற்கு உலகமாணவ சமுதாயத்தை ஒன்றுபடுத்துவோம். அரசியல் புத்தெழுச்சியை ஏற்படுத்துவோம். ஈழம் மலரட்டும்;! மானுடம் வெல்லட்டும்!! தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு தொடர்பு எண் : 8678962611, 8122863671, 7502272075 தமிழினப் படுகொலை நாள் பேரணி மாவட்டம்------ தொடங்கும் இடம் -------- முடியும் இடம் அரியலூர் இராமநாதபுரம் அரண்மனை வாசல் -------- புதிய பேருந்து நிலையம் ஈரோடு பெரியார் சிலை --------- கருங்கல் பாளையம் கடலூர் (விருத்தாச்சலம்) மங்களம் பேட்டை----------வானொலி திடல் கரூர் அஜந்தா திரையரங்கம் ---------- காமராஜர் சிலை கன்னியாகுமாரி ((நாகர்கோயில்) சுசீந்தரம் கோயில்------சுசீந்தரம் பாலம் காஞ்சிபுரம் ரங்கசாமி குளம் ----------ஆட்சியர் அலுவலகம் ^ செங்கல்பட்டு அரசு மருத்துவமனை --------- பழைய பேருந்து நிலையம் கிருஷ்ணகிரி?? பேருந்து நிலையம் ----------- புதுப்பேட்டை ரவுண்டானா கோவை சிவகங்கை புதுப் பேருந்து நிலையம்------------- ஐந்து விளக்கு சென்னை காந்தி சிலை -------------- மன்றோ சிலை சேலம்- செவ்வாபேட்டை தீ அணைப்பு நிலையம்--சுபாஸ் சந்திர போஸ் மைதானம் தஞ்சாவூர் இரயில் நிலையம் ------------------- திலகர் திடல் தர்மபுரி திண்டுக்கல் குமரன் பூங்கர் ------------------- மணிகூண்டு திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் ------ அண்ணா சிலை திருநெல்வேலி சமாதானபுரம் ---------------- ஜவஹர் திடல் திருப்பூர் பழைய பேருந்து நிலையம் ------ இரயில் நிலையம் திருவண்ணாமலை திருவள்ளூர் திருவாரூர் இரயில் நிலையம் ------------ நகராட்சி அலுவலகம் தூத்துக்குடி தேனி பேருந்து நிலையம் -------------- ஆட்சியர் அலுவலகம் நாகப்பட்டினம் நாமக்கல் எல் எம் ஆர் திரையரங்கம் ---------- அண்ணா சிலை நீலகிரி புதுகோட்டை ஆட்சியர் அலுவலகம்---- பழைய பேருந்து நிலையம் பெரம்பலூர் நீதிமன்றம் ---------- புதிய பேருந்து நிலையம் மதுரை மீனாட்சி கல்லூர-------------- பெரியார் சிலை விருதுநகர் விழுப்புரம் இரயில் நிலையம் --- புதிய பேருந்து நிலையம் வேலூர் அண்ணா திரையரங்கு ------- அண்ணா சிலை புதுச்சேரி பல்கலைக்கழகம் -------------- கோட்டகுப்பம் நாள் : 18 - 05 - 2013 -------------- நேரம் : மாலை 4 மணிக்கு பேரணியின் முடிவில் நம் தலைமுறையிலாவது சாதிகளற்ற சம உரிமை சமுதாயம் படைக்க உறுதிமொழி ஏற்போம். தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு தொடர்பு எண் : 8678962611, 9790847172, 7502272075,8122863671. (facebook:loyolahungerstrike)
-
இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணி! (ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும்.)
முள்ளிவாய்க்கால் ஒரு போராட்டத்தின் முடிவல்ல. இன்னொரு போராட்டத்திற்கான ஆரம்பம். நந்திக்கடல் அழிவின் சின்னமல்ல. நாம் மீளவும் எழுவோம் என்ற நம்பிக்கையின் அடையாளம் நீதி கேட்டு நெருப்பில் நீறாகும் இனம் நாம். வெள்ளிக்கிழமை என்றால், ஒரு கட்டி உப்பையே வெளியில் எடுக்காத எங்கள் மண், கொள்ளிவைக்கவும் யாரும் இன்றி கொத்துக் கொத்தாய் கொல்லப்பட்டுள்ள உடலங்களை தன்னில் சுமக்கிறதே. எம் சகோதரிகளின் மார்பரிந்து, எம் மழலைகள் மீது பொஸ்பரஸ் குண்டுபொழிந்து, எம் முதியவர் உயிரை பட்டினியால் பறித்து, முட்கம்பிவேலிகளுக்குள் எம் உறவுகளை அடைத்து, வெள்ளைக் கொடியை குருதியில் நனைத்து, ஆயிரம் ஆயிரம் எம் உறவுகளை கொன்று குவித்து, முடிந்தது போரென்று உலகுக்கு சிங்களப் பேரினவாதம் முழக்கமிட்ட நாள் மே 18, 2009. ஆயினும், மே மாதம், சோகங்களை மட்டும் சுமப்பதற்கல்ல. விடுதலையை விரைவுபடுத்துவதற்கு, வீரத்திற்கு மூச்சுகொடுப்பதற்கு, தேசத்தை மீட்பதற்கு, தியாகங்களை நினைவு கூருவதற்கு. காலத்திற்கு கைகொடுத்து, ஞாலத்திற்கு நாம் யார் எனக்காட்டுவதற்கு, உலகம் எமக்கு தந்த உத்தரவாதமற்ற சந்தர்ப்பம். எங்களுக்காய் ஒரு 'இராமர்' வரட்டும், எங்களுக்காய் ஒரு 'இயேசுபிரான்' உயிர்கட்டும், என்ற எண்ணத்தை விட, எங்களுக்காய் நாம் போராட வேண்டும் என்ற உணர்வே மேலானாது. அதுவே, காலத்தின் கட்டாயமும், உலகத்தின் நியதியுமாகும். இன்றே சிந்தி, சபதம் எடு, செயல்பாடு. மறந்து விடாதே! நாம் வாழமட்டுமல்ல, எங்கள் மண்ணை ஆளவும் பிறந்தவர்கள். அவலத்தின் நாளையே எண்ணி அழுதபடி வாழாதே. நாம் எழப்போகும் எதிர்காலத்திற்காய், நாம் நிமிர்ந்து நின்ற கடந்த காலத்தையும் நகர்ந்துகொண்டிருக்கும் நிகழ்காலத்தையும் கணி. நாம் முட்கம்பிக்குள் சிக்குண்ட பூவல்ல. எமது மலர்வென்பதே முட்கம்பியில்தான் தோற்றம் பெற்றது. நாம் இன்று தனிமரமாக நிற்கக்கூடும் - ஆனால் நாம் நாளை ஒரு துளிர்விடும் மரமாக மாறுவோம் என்பதை மறந்து விடாதே. அலைகள் முன்னோக்கியே பாயும். நெருப்பு எப்போதும் நேராகவே எரியும். ஓளி எப்போதும் நேர்கோட்டிலேயே செல்லும். அதே போல், சுதந்திர தாகமுள்ள இனம் தன் இறுதி மூச்சுவரை போராடும். சிதறிய பிணங்களும், சிந்திய குருதியும், எம் இழப்பிற்கான எடுத்துக்காட்டு மட்டுமல்ல – எம் மீள் எழுச்சிக்குமானதுதான். காலமும் உலகமும், கைகோர்த்தெழுதிய தீர்ப்பென்று, நலிந்த சிந்தையோடு இருந்துவிடாதே. சூரியன் எழும் திசைதான் கிழக்கு. போராடும் இனத்திற்குத்தான் விடிவு. முள்ளிவாய்க்கால் ஒரு போராட்டத்தின் முடிவல்ல. இன்னொரு போராட்டத்திற்கான ஆரம்பம். நந்திக்கடல் அழிவின் சின்னமல்ல. நாம் மீளவும் எழுவோம் என்ற நம்பிக்கையின் அடையாளம். தமிழா!!! துணிந்திடு, எழுந்திடு, தேசம் விடிந்திடும் வரையினில் போராட்டத்தைத் தொடந்திடு. ச.பா.நிர்மானுசன் (facebook: loyolahungerstrike)
-
இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணி! (ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும்.)
இத்தாலியில் தமிழின அழிப்பு நினைவு நாள். (facebook)
-
இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணி! (ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும்.)
சுவிஸில் தமிழின அழிப்பு நினைவு நாள் 18.05.2013 (facebook) நோர்வேயில் தமிழின அழிப்பு நினைவு நாள் 18.05.2013 (facebook)
-
இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணி! (ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும்.)
தமிழர் பண்பாட்டு நடுவம் நடத்தும் தமிழின அழிப்பு நினைவு நாள் சென்னை மெரீனாவில். (முகநூல்)
-
இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணி! (ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும்.)
Powered by youth, fueled by passion, a campaign solely driven by the resistance of injustice will commence on the 16th of May in memory of the 2009 Tamil Genocide. Canadian-Tamil youth will unite to inform the general public about the horrid events during the height of the civil was in Sri-Lanka. Tamil Youth Organization - Canada (TYO-Canada) marks May 2013 as Tamil Genocide Remembrance Month Tamil youths across Canada have decided to put forth a G for Genocide campaign on Thursday, May 16, 2013 from 4:00 PM - 8:00 PM at Young and Dundas. (facebook)
-
இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணி! (ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும்.)
கனடாவில் தமிழின அழிப்பு நினைவு நாள் 18.05.2013 (facebook)
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீர வணக்கம்
-
இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணி! (ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும்.)
வகுப்பறைக்கு ஒருவர் எழுந்து நிற்போம். களமாடி வென்றெடுப்போம். தொப்புள் கொடி ஈழ உறவுகள் ஒடுக்கப்பட்டும், சிதறியடிக்கப்பட்டும், இனப்படுகொலை செய்யப்பட்டும் துன்பப்பட்டுக்கொண்டிருக்கும் இவ்வேளையில் தாய்த்தமிழகத்திலிருந்து மாணவர்களாகிய நாம் நம் ஆதரவு குரலை உயர்தியிருக்கிறோம். தனி ஈழத்துக்கான பொது வாக்கெடுப்புக்கு தமிழர்களின் போராட்டங்கள் ஒவ்வொரு நாட்டுக்கும் வேறுபடுகிறது. முன்பு ஈழத்தில் ஆயுதப் போராட்டமாகவும், ஐரோப்பாவில் பேரணி, அரசியல் லாபியிங் மூலமாகவும் நடக்கிறது. தமிழகத்தில், ஈழ வரலாற்றை மக்களிடையே கொண்டுசேர்த்து அதன் மூலமாக அரசியல் கட்சிகளுக்கு தமிழீழ கொள்கையில் மாற்றம் கொண்டுவருவதே சிறந்ததாக இருக்கும். சென்ற மாதம் வரை நம்முடன் இணைந்து நின்று போராடிய இறுதியாண்டு மூத்த மாணவர்கள் இறுதித் தேர்வு முடித்துவிட்டு இந்நேரத்தில் முன்னாள் மாணவர்களாக மாறிவிட்டனர். போராட்ட நிலையோ அப்படியே உள்ளது. அடுத்தாண்டு நாமும் மாணவ பருவத்திலிருந்து வெளியேறி இருப்போம். ஆனால் அதற்கு முன் மாணவர்களுக்கான கட்டமைப்பை உருவாக்கிவிட்டு சென்றால்தான் சில சுயநல கட்சிகளிடமிருந்தும், சில சுயநல இயக்கங்களிடமிருந்தும் மாணவ போராட்டத்தை காத்துக்கொள்ள முடியும். வகுப்பறைக்கு ஒருவர் எழுந்து நிற்போம், இறுதி ஆண்டிலிருந்தும் இறுதி ஆண்டுக்கு முந்தைய ஆண்டிலிருந்தும் கல்லூரிக்கு இருவர் மாணவர்களின் கருத்துக்களை சுமந்து வருவோம், மாவட்ட அளவில் குழு அமைத்து மண்டலத்துக்கு ஒருவரை கொண்டு மாநில மாணவர் குழுவை அமைப்போம். சென்னை முதல் கன்னியாகுமரி வரையிலும், நீலகிரி முதல் நாகை வரை உள்ள மாணவர்களின் குரலை ஒன்றிணைப்போம், "முடிவுகள் ஓரிடத்தில் இருந்து கிளம்பாமல் கூட்டுத் தலைமையாக இருக்கும் " தமிழகத்தில் உள்ள மாணவர்களாகிய நாம் இணைந்து நின்று நம் கோரிக்கைகளை மக்களிடம் கொண்டு சேர்ப்போம். அடுத்த ஐநா கூட்டத்தில் நம் குரல் ஓங்கி ஒலிக்கச்செய்வோம். அடுத்த கல்வியாண்டு கல்லூரி திறந்தவுடன் கட்டமைப்பை உறுதிப்படுத்துவோம். உலக வல்லரசுகள் இணைந்து நடத்திய தமிழின படுகொலை தினமான மே 18ஆம் தேதி மாவட்ட தலைநகரங்களில் பேரணியாக சென்று ஈழத்தமிழரிடத்தில் பொது வாக்கெடுப்பு நடத்தக்கோரி ஐநா மன்றத்தை வலியுறுத்துவோம். களமாடி வென்றெடுப்போம். தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு சார்பாக பார்வை தாசன் - (லயோலா கல்லூரி-இறுதி ஆண்டு) -9962891945 (facebook: loyolahungerstrike)
-
இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணி! (ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும்.)
நியூசிலாந்தில் தமிழின அழிப்பு நினைவு நாள். காலம்: 19.05.2013 நேரம்: 6 pm இடம்: Mt eden war memorial hall - 487 Dominion Rd, Mt Roskill (முகநூல்)
-
இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணி! (ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும்.)
தமிழின படுகொலை நாளான மே 18 ஆம் தேதி ஒவ்வொரு மாவட்டத்திலும் தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு சார்பாக பேரணி நடத்துவதற்கு சென்னையில் களப்பணியில் இருக்கும் மாணவர்கள். சென்னையில் உள்ள மாணவர்கள் கோயம்பேட்டில் உள்ள செங்கொடி அரங்கத்திற்கு வந்து கலந்துகொள்வீர்கள் என்ற நம்பிக்கையுடன் ஜோ பிரிட்டோ - 8678962611 மே 18 தமிழின படுகொலை நாளன்று பேரணியில் சந்திப்போம் சக மாணவர்களே.. (facebook: loyolahungerstrike) ------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- பட்டினிப் போராட்டத்தை தொடங்கிய எண்வரில் மூவர் சென்னையில் உள்ள மாணவர்களோடு இணைந்து அடுத்த கட்ட தளத்திற்கு தயாராகி வருகின்றனர். மீதி உள்ள ஐவராகிய திலீபன், லியோ ஸ்டாலின், பால் கென்னத், செம்பியன், ஜோ பிரிட்டோ போன்றோர் மற்ற மாவட்ட மாணவர்களோடு இணைந்து தமிழகம் முழுக்க உள்ள மாணவர்களை சந்தித்து, அவர்களோடு கலந்தாலோசித்து மாணவர் போராட்டத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளனர். விருப்பமுள்ளவர்கள் இணையவும்.. 8678962611. இணைவோம் .களமாடுவோம் .வெல்வோம் !!! (facebook: loyolahungerstrike)
-
இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணி! (ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும்.)
மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பின் சார்பாக வரும் 12/05/2013 முதல் 17/05/2013 வரை தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் "தமிழீழ விடுதலைக்கான மாணவர் சுடர்" தஞ்சை "முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் " சென்றடையும் நினைவேந்தல் நிகழ்வு அறிவிக்கப்பட்டிருந்தது. அவை அனைத்து கல்லூரி மாணவர்களுக்கும் வரும் ஜூன் இரண்டாவது வாரம் வரை தேர்வு இருப்பதால் , மேற்கண்ட "சுடர் பயணம்" தள்ளிவைக்கப்படுகிறது என்பதை தெரிவித்து கொள்கிறோம். சுடர் பயணத்திற்கான மறு தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்பதை கூட்டமைப்பின் சார்பாக தெரிவித்து கொள்கிறோம். இப்படிக்கு , சீ.தினேஷ் ( 9791162911 ) ஒருங்கிணைப்பாளர் , தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு (facebook: loyolahungerstrike)
-
இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணி! (ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும்.)
நோர்வேயில் ஒஸ்லோவில் இடம்பெற்ற மே தினம். (இதில் மே 17 இயக்க திருமுருகன் காந்தி அவர்களும் கலந்து கொண்டார்.) பலூன்களிலும் தமிழீழமும், புலி உருவமும் தென்படுகிறது. (முகநூல்)
-
இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணி! (ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும்.)
தமிழ் இன அழிப்பு நாள் - சிட்னி தமிழரின் வரலாற்றில் மிகவும் கோரமானதும், மறக்கமுடியாததுமான மிகப் பெரும் இன அழிப்பையும், அவலத்தையும் தமிழினம் சந்தித்த அந்த கறுப்பு நாட்களின் நினைவு நாள் மே 18 2013 அன்று சிட்னியில் நினைவுகூர திரண்டு வாரீர் இடம் : Bowman Hall BLACKTOWN காலம் : மே 18 2013 (சனிக்கிழமை) நேரம் : 6.00 pm (முகநூல்)
-
இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணி! (ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும்.)
(முகநூல்)
-
இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணி! (ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும்.)
தமிழினப் படுகொலைக்கு நீதி கேட்டும், இலங்கை புறக்கணிப்பு கோரியும் தமிழகம் தழுவிய இருசக்கர வாகன விழிப்புணர்வு பிரச்சாரம்.. ஜூன் 21 முதல் 29 வரை . பங்குபெற உங்கள் பெயர் மற்றும் அலைபேசி எண்ணுடன் eduservice123@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும்.. (முகநூல்)
-
இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணி! (ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும்.)
(முகநூல்)
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீர வணக்கம்.
- கருத்து படங்கள்
-
இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணி! (ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும்.)
(முகநூல்)
-
இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணி! (ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும்.)
பிரான்சில் நடைபெறும் உண்ணாவிரத போராட்டத்தின் மூன்றாம் நாளின் போது. ஈகைச்சுடரினை மாவீரன் மணிமாறனின் பெற்றோர் ஏற்றி வைத்தனர். அகவணக்கம் செலுத்தப்பட்டு கவனயீர்ப்பு போராட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. வழமைபோல பல வெளிநாட்டு மக்கள் பார்வையிட்டுச்சென்றனர். (முகநூல்) 4 ஆம் நாள் ஏற்கனவே இணைத்து விட்டேன்.
-
இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணி! (ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும்.)
பிரான்சில் நடைபெறும் உண்ணாவிரத போராட்டத்தின் இரண்டாம் நாளின் போது. பிரான்சு வாழ் தமிழ் மூதாளர்களால் முன்னெடுக்கப்படும் தமிழின அழிப்பு நாள் மே 18 4 வது ஆண்டின் நினைவில் முன்னெடுக்கப்படும் அடையாள கவனயீர்ப்பு போராட்டத்தின் இரண்டாம் நாள் (02.05.2013) காலை 10.00 மணிக்கு ஈகைச்சுடரினை கபிலன் சதா ஆகிய இரு மாவீரர்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர் ஏற்றி வைத்தார். அகவணக்கம் செலுத்தப்பட்டு மக்கள் பேரவை உறுப்பினரும், செயற்பாட்டாளருமாகிய திரு.பத்மநாதன் ஐயா அவர்களின் தலைமையில் கவனயீர்ப்பு போராட்டம் ஆரம்பித்தது. வழமை போல பல பிரெஞ்சு மக்களும், வெளிநாட்டு மக்களும் இப்போராட்டத்தை பார்த்து சென்றனர். துண்டு பிரசுரம் வழங்கப்பட்டு கையெழுத்துக்களும் பெறப்பட்டது. பல பாடசாலை மாணவர்களும் பார்வையிட்டு சென்றதோடு அவர்களுக்கு பொறுப்பாக வந்தவர்கள் மாணவர்களுக்கு விளக்கங்கள் கொடுத்ததையும் காணக்கூடியதாக இருந்தது. மாலை 18 மணிக்கு நிறைவு செய்யப்பட்டது (facebook)
-
இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணி! (ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும்.)
பிரான்சில் நடைபெறும் உண்ணாவிரத போராட்டத்தின் முதலாம் நாளின் போது. பிரான்சில் 01.05.2013 அன்று காலை 10.00 மணிக்கு இராணுவ பயிற்ச்சிக் கல்லூரிக்கு முன்பாக உள்ள சமாதான சுவர் எழுப்பப்பட்ட இடத்தில் ஈகைச்சுடர் மாவீரர் குடும்பத்தினரால் ஏற்றி வைக்கப்பட்டு அகவணக்கம் செலுத்தப்பட்டு தலைமை ஆசிரியரும், தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் உறுப்பினருமாகிய திரு. சத்தியதாசன் அவர்கள் தலைமையில் கவனயீர்ப்புப்போராட்டம் ஆரம்பமாகியது. பல வெளிநாட்டவர்கள் ஆயிரக்கணக்கில் வந்து பார்வையிட்டுச் செல்லும் இவ் இடத்தில் தமிழர்களின் போராட்டத்தையும் நியாயமான கோரிக்கைகளுக்கும் ஆதரவளித்து அதற்குரிய படிவத்தில் பலர் கையெழுத்திட்டுச் சென்றதும், துண்டுப்பிரசுரங்களை தாமாகவே கேட்டு வேண்டிச் சென்றதும், எம்மால் கொடுக்கப்பட்ட விளக்கத்திற்கு மதிப்பளித்து பல வெளிநாட்டவர்கள் மற்றும் பிரெஞ்சு மக்களும் சில மணித்தியாலங்கள் அவர்கள் எம்முடன் செலவழித்திருந்தது குறிப்பிடத்தக்கது. (facebook)
-
இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணி! (ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும்.)
பிரான்சில் மே 18 தமிழின அழிப்பு நாளினை முன்னிட்டு முதற்தடவையாக பிரான்சு வாழ்தமிழ் மூதாளர்களால் நடாத்தப்பட்டு வரும் அடையாள கவனயீர்ப்பு உண்ணா மறுப்புப்போராட்டத்தின் 4ம் நாளான நேற்று காலை 10 மணிக்கு கரும்புலி மேஐர் அருணனின் அன்னையார் அவர்கள் ஈகைச்சுடரின ஏற்றி வைத்து அகவணக்கம் செலுத்தப்பட்டது. மாலை 6.00 மணிவரை கவயீர்ப்புப்போராட்டம் நடைபெற்றது. பல வெளிநாட்டவர்களும் பிரெஞ்சு மக்களும் தமது கேள்விகளை தொடுத்திருந்தனர். அவர்களுக்கு மக்கள் பேரவை உறுப்பினர்கள் விளக்கமளித்திருந்தனர் (முகநூல்)