Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

துளசி

கருத்துக்கள பார்வையாளர்கள்
  • Joined

  • Last visited

Everything posted by துளசி

  1. புலம்பெயர் மக்களை குழப்பும் தமிழ்வின் [lankasri ] இணையத்தை வன்மையாக கண்டிக்கின்றோம். அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி, பச்சையப்பன் கல்லூரி, லயோலா கல்லூரி, நந்தனம் கலை கல்லூரி உள்ளிட்ட கல்லூரிகளின் மாணவர்கள் "தமிழீழ ஆதரவு மாணவர்கள் கூட்டமைப்பு' என்கிற புதிய அமைப்பை உருவாக்கியிருக்கிறார்கள் என்று // ஒரு செய்தியினை தமிழ்வின் [lankasri ] என்னும் இணையம் செய்தி வெளியிட்டு புலம்பெயர் மக்களை குழப்புகின்றது. இந்த இணையம் மாணாவர்கள் போராடும் போது அமெரிக்க தீர்மானத்தை ஆதரித்து மாணவர்கள் போராடுவதாக அன்று செய்திவெளியிட்டனர் நாம் அதற்க்கு கண்டனம் தெரிவித்தோம் . அதனால் அச் செய்தி உடனடியாக நீக்கப்பட்டது. ஆனால் இன்று மாணவர்கள் அனைவரும் தமிழீழ ஆதரவு மாணவர்கள் கூட்டமைப்பு என்று ஒரு அமைப்பை உருவக்கினர்கள் என்று செய்தி வெளியிட்டுள்ளனர் நாம் அதனை வன்மையாக கண்டிக்கின்றோம் உடனடியாக செய்தியை நீக்க வேண்டும் என்றும் கேட்டு கொள்கின்றோம் . இவர்களுக்கும் மாணவர்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதை தெரிவித்து கொள்கின்றோம் . இது சு ப வீ மற்றும் திமுக உறுப்பினர்களால் உருவாக்கப்பட்டது இதற்கும் தமிழீழ விடுதலைக்க போராடும் மாணவர்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதை தெரிவித்து கொள்கின்றோம் . தமிழீழ உணர்வோடு போராடும் மாணவர்கள் பற்றிய செய்திகளை அரசியல் ஆதாயங்களுக்க திரிவு படுத்தி வெளியிடுவதை அனைத்து ஊடகங்களும் நிறுத்தி கொள்ளவேண்டும் . தமிழ்வின் [lankasri ] நிறுவனம் மதுரையில் இருந்து இயக்குவது எமக்கு தெரியும் என்பதை தெரிவித்து கொள்கின்றோம் . (facebook: loyolahungerstrike)
  2. வணக்கம். தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு கோவை மாணவர்களின் கலந்தாய்வு முதலாம் திகதி V.O.C மைதானத்தில் நடந்தது.. இக்கலந்தாய்வில் கடந்த 20, 21 தேதிகளில் நடந்த கண்காட்சியின் வரவு செலவு கணக்கு சரிபார்க்கப்பட்டது. திட்டமிட்டபடி கண்காட்சியை V.O.C மைதானத்தில் நடத்த முடியாதபடி காவல் துறை அனுமதி மறுத்தது முதல் சமூக நல கூடத்தில் சிறப்பாக நடத்தி முடித்தது வரை நாங்கள் எதை எதை எல்லாம் தவறவிட்டோம் என ஆலோசித்து அடுத்தடுத்த நிகழ்வுகளில் இத்தகைய குறைகள் ஏற்படாது செல்படுவது குறித்து விவாதித்தோம் . இறுதியாக கண்காட்சிக்கு அனுமதி மறுத்த காவல் துறையை கண்டித்து ஒரு நிகழ்வும் இலங்கையில் உச்சகட்ட போரின் இறுதி நாளான மே18 அன்று ஒரு நிகழ்வு நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.. இவ்விரு நிகழ்வுகளின் திட்டங்கள் அடுத்தடுத்த கலந்தாய்வுகளில் தயார் ஆகும். நிகழ்வுகள் குறித்த தகவல்களுடன் மீண்டும் சந்திக்கிறோம் இவன், தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு கோவை ------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- மே 18 , முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நாளை முன்னிட்டு, "சிறப்பு அகதி முகாம் எனும் முள்வேலிக்குள் சிறை வைக்கபட்டிருக்கும் ஈழத்தமிழ் அகதிகளை விடுதலை செய்து, அனைத்து ஈழத்தமிழ் அகதிகளுக்கும் இரட்டை குடியுரிமை வழங்க வேண்டும்" எனும் ஒற்றை கோரிக்கையை முன்னிறுத்தி "நினைவேந்தல் பேரணியுடன் கூடிய மாபெரும் பொதுகூட்டத்திற்கான" முன்னெடுப்பு நடவடிக்கைகள் , தேர்வுக்கு மத்தியிலும் தமிழகம் முழுவதும் முழு வீச்சில் நடைபெற்றுக்கொண்டு இருக்கின்றது , கடலூர் மாவட்டத்திற்கான செயல் திட்டங்கள் பற்றிய மாணவர்கள் கலந்தாய்வு வரும் ஞாயிரு 05.05.2013 அன்று காலை 11.00 மணியளவில் விருத்தாச்சலத்தில் நடைபெற உள்ளது. கடலூர் மாவட்ட கல்லூரிகளின் மாணவ நிர்வாகிகள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டுகிறோம் . தொடர்புக்கு: - தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு, கடலூர் மாவட்டம் பிரவின் : 95000 78349 மாறன் : 81222 74273 ------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- தன்னெழுச்சியாக நடைபெற்ற மாணவர் போராட்டங்களில் திருநெல்வேலி மாவட்டத்தின் தென்காசி பகுதியில்மாணவர்களை ஒருங்கிணைத்து தீவிரமாக களமாடிய நமது தோழர் சதீஷ் தற்போது கல்லூரி நிர்வாகத்தால் மிகவும் மிரட்டப்பட்டுள்ளார். இந்த மிரட்டலுக்கு அஞ்சாமல் இருந்த நமது தோழரின் குடும்பத்தாரை தற்போது நேரடியாக நிர்வாகம் மிரட்டி வருகிறது. ஏற்கனவே கல்லூரி நிர்வாகத்தின் (இந்த கல்லூரி ஒரு காங்கிரஸ் கட்சியை சார்ந்த நபரின் பினாமி மூலம் இயக்குவதாகவும் தகவல்கள் உள்ளன) முறைகேடுகள் பலவற்றை நேரடியாக சாடிய நமது தோழருக்கு மாணவர்களின் ஆதரவும் அதிகமாகி இருப்பதை தொடர்ந்து அவரை ஒரேடியாக காலி செய்ய நிர்வாகம் முயன்று வருகிறது. அந்த மாணவருக்கு தன்னம்பிக்கை அளிக்கும் வகையில் அவருக்கும், தோழரை மிரட்டி வரும் கல்லூரி நிர்வாகத்திற்கு எதிர்ப்பையும் பதிவு செய்யுமாறு தோழர்களை கேட்டுக்கொள்கிறேன். தோழர் சதீஸ் எண்: 9597000579 கல்லூரி முதல்வரின் எண்: 8012520440 (முகநூல்: loyolahungerstrike)
  3. பிரான்சில் நடைபெற்ற மே தினம். பிரான்சு பாரிஸ் நகரில் நடைபெற்ற மாபெரும் தொழிலாளர் தின போராட்டத்தில் விடுதலையை தேடி நிற்கும் இனங்கள் அனைவரும் பங்குபற்றி தமது விடுதலை போராட்டங்களை வலியுறுத்தியதோடு, போராட்ட குழுக்கள் எல்லோரும் ஓர் அணியில் நின்று போராட வேண்டும் என்பதை வலியுறுத்தினர். தமிழீழ மக்களின் போராட்டத்தை மிகவும் உயர்வாக பார்க்கும் சிலர் வருங்காலத்தில் ஈழத்தமிழர் போராட்டங்களில் பங்கு எடுக்க தமது விருப்பத்தை தெரிவித்தனர். தந்தை செல்வா வழியில் வந்து, அவர்காலத்தில் முன்மொழிந்த தமிழீழ தேசியக்க கொள்கையை தமிழருக்கான ஒரே தீர்வாக எடுத்து, தமிழீழம் என்ற இடைக்கால அரசை உருவாக்கி, அதற்குரிய தேசியக்கொள்கைகளை உருவாக்கி, தமிழீழ மக்களுக்கு வட்டுகோட்டையில் தீர்மானிக்கப்பட்டு, தமிழீழ மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட தமிழீழ சோஷலிச அரசை, முற்போக்கான கொள்கைகளும், சர்வதேசத்தையும், சகல மக்களையும் முன்னிறுத்திய அரசை நடைமுறையில் நடத்திக்காட்டிய தமிழீழப் விடுதலைப் புலிகள் அமைப்பும் அதன் தலைவருமாகிய, எமது தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் வழிகாட்ட தமிழீழ மக்கள், தமீழத்தை மீண்டும் நிலைநாட்டுவோம் என்ற குறிக்கோளுடன் தொழிலாளர் தினப்போராட்டதில் கொட்டும் மழையிலும் தமிழீழ மக்கள் பங்குபற்றினர். (முகநூல்)
  4. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் தூயவன் அண்ணா
  5. மாவீரர்களுக்கு வீர வணக்கம்.
  6. இனிய வணக்கம் தோழர்களே.. நாளை காலை மாணவர்கள் கலந்தாய்வுக்கு நிச்சயமாக வந்துவிடுங்கள் இடம் V.O.C பூங்கா கோவை.. இதுவரை போராட்டங்களில் கலந்துகொள்ளாமல் இருந்த சக தோழர்களையும் நாம் கலந்தாய்வில் பங்குபெற வைப்பதென்பது அவசியம்.. -தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு கோவை- (முகநூல்: loyolahungerstrike)
  7. சாதியை ஒழித்து மதத்தை மறுத்து தமிழராய் நிற்க வேண்டிய தருணம் இது. மாமல்லபுரங்கள் மரக்காணங்கள் தாண்டி வந்து கடலூரில் மே 18 அன்று நாம் தமிழராய் ஒன்றிணைவோம். நாம் பிளவு பட்ட இனம் இல்லை, நாம் வீழ்ந்த இனம் இல்லை என்பதை நிரூபிப்போம். இந்தியாவில் ஒடுக்குமுறைக்கு உள்ளாகும் சக தேசிய இன சகோதர்கள் நம்மோடு கைகோர்க்கும் இந்நிகழ்வில் எழுச்சியோடு பங்கேற்போம் (முகநூல்)
  8. 'ஈழம்: தமிழகம் என்ன செய்ய வேண்டும்?' தமிழகமெங்கும் விளக்கப் பொதுக்கூட்டங்கள்! 'ஈழம்: தமிழகம் என்ன செய்ய வேண்டும்?' என்ற தலைப்பில், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் வரும் மே 2 தொடங்கி 17 அன்று வரை, தமிழகமெங்கும் விளக்கப் பொதுக் கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. தமிழீழ விடுதலை, தமிழகம் எதிர் கொள்ளும் ஆற்று நீர் உரிமை மறுப்புகள், சாதி ஒழிப்பு, அணு உலைத் திணிப்பு உள்ளிட்ட பல்வேறு சிக்கல்களில் தவிக்கும் தமிழினம், இனி என்ன செய்ய வேண்டும் என்று வழிகாட்டும் வகையில் நிகழும் இக்கூட்டங்களில், கட்சியின் முன்னணியாளர்கள் உரையாற்றுகின்றனர். கீரனூர் - 02.05.2013 உரை: தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன் சிதம்பரம் - 04.05.2013 உரை: த.தே.பொ.க. தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் கோ.மாரிமுத்து, த.இ.மு. துணைப் பொதுச் செயலாளர் தோழர் ஆ.குபேரன் மதுரை - 04.05.2013 உரை: தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன் கோவை - 06.05.2013 உரை: த.தே.பொ.க. தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் நா.வைகறை ஈரோடு - 07.05.2013 உரை: த.தே.பொ.க. தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் நா.வைகறை, தமிழக இளைஞர் முன்னணித் தலைவர் தோழர் கோ.மாரிமுத்து ஒரத்தநாடு - 08.05.2013 உரை: த.தே.பொ.க. மாவட்ட செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் ரெ.சிவராசு பாப்பாநாடு - 09.05.2013 உரை: மகளிர் ஆயம் நடுவண் குழு உறுப்பினர் தோழர் மேரி திருச்சி - 09.05.2013 உரை: மகளிர் ஆயம் ஒருங்கிணைப்பாளர் தோழர் அருணா, மக்கள் உரிமைப் பேரவை ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் த.பானுமதி பாபநாசம் - 10.05.2013 உரை: மகளிர் ஆயம் நடுவண் குழு உறுப்பினர் தோழர் மேரி, த.இ.மு. துணைப் பொதுச் செயலாளர் தோழர் ஆ.குபேரன் பட்டுக்கோட்டை - 10.05.2013 உரை: த.தே.பொ.க. தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் குழ.பால்ராசு திருக்காட்டுப்பள்ளி - 11.05.2013 உரை: தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன் சென்னை - 11.05.2013 உரை: த.தே.பொ.க. பொதுச் செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன், த.இ.மு. பொதுச் செயலாளர் தோழர் க.அருணபாரதி ஓசூர் - 12.05.2013 உரை: மக்கள் உரிமைப் பேரவை ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் த.பானுமதி, த.இ.மு. பொதுச் செயலாளர் தோழர் க.அருணபாரதி காட்டுமன்னார்குடி - 15.05.2013 உரை: த.இ.மு. பொதுச் செயலாளர் தோழர் க.அருணபாரதி, த.இ.மு. துணைப் பொதுச் செயலாளர் தோழர் ஆ.குபேரன் தஞ்சை - 15.05.2013 உரை: த.தே.பொ.க. பொதுச் செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன் பெண்ணாடம் - 16.05.2013 உரை: தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித்தலைவர் தோழர் பெ.மணியரசன், மகளிர் ஆயம் ஒருங்கிணைப்பாளர் தோழர் அருணா செங்கிப்பட்டி - 16.05.2013 உரை: த.தே.பொ.க. பொதுச் செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன் குரும்பூர் - 16.05.2013 உரை: த.தே.பொ.க. தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் நா.வைகறை, த.தே.பொ.க. பொதுக்குழு உறுப்பினர் தோழர் செம்பரிதி சாமிமலை - 17.05.2013 உரை: மக்கள் உரிமைப் பேரவை ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் த.பானுமதி,த.தே.பொ.க. தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் பழ.இராசேந்திரன் மேற்கண்ட பொதுக்கூட்டங்களில், தமிழுணர்வாளர்களும், பொது மக்களும் திரளாகப் பங்கேற்க வேண்டுமென அன்புரிமையுடன் கேட்டுக் கொள்கிறோம்! தலைமைச் செயலகம், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பேச: 044-24348911 (முகநூல்)
  9. மாணவர்கள் மத்தியில் சுப.வீ. பேச்சு என்று செய்தி இதில் யார் மாணவர்கள் ?? இவர்களை தமிழீழ மாணவர்கள் போராட்டத்தில் எங்காவது பார்த்ததுண்டா?? "எப்படி அமைதி வழி போராட்டத்தில் ஒரு பின்னடைவு ஏற்பட்டதோ அதே மாதிரி ஆயுதவழி போராட்டத்திலும் ஒரு பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது, பின்னடைவு ஏற்பட்டதை நாம் ஒப்புக்கொள்ள வேண்டும், அதற்காக நாம் வெட்கப்படக்கூடாது" என வடிவேலு பாணியில் மாணவர்கள் முன் என்று சொல்லி திமுக உறுப்பினர்கள் முன் சுப.வீ. பேச்சு (முகநூல்: loyolahungerstrike)
  10. புரட்சி அண்ணாக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். Spoiler உரையாடிய உரையாடாத தமிழீழ சொந்தங்களுக்கு நன்றி. இங்கிட்டு நேரம் அதிகாலை 3 மணி. தூக்கம் வருது. நான் தூங்க போறன்.
  11. இலங்கை தமிழர் பிரச்சனை : ஐபிஎல் பிளே-ஆஃப் சுற்று போட்டிகள் சென்னையில் இருந்து டெல்லிக்கு மாற்றம் சென்னையில் நடைபெறுவதாக இருந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் பிளே-ஆஃப் சுற்று போட்டிகள் இலங்கை தமிழர் பிரச்சனை காரணமாக டெல்லிக்கு மாற்றப்பட்டுள்ளது. இலங்கை தமிழர் பிரச்சினை காரணமாக சென்னையில் நடைபெறும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் இலங்கை வீரர்கள் பங்கேற்க தமிழக அரசு தடை விதித்துள்ளது. இதனிடையே சென்னையில் கடந்த வாரம் நடந்த ஐபிஎல் ஆட்சி மன்ற குழு கூட்டத்தில் இந்த விவகாரம் குறித்து விவாதிக்கப்பட்டது. இந் நிலையில் ‘சென்னையில் நடைபெறுவதாக இருந்த ‘பிளே–ஆஃப்’ சுற்று போட்டிகளை டெல்லியில் நடத்த தற்போது முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் என்.சீனிவாசனுடன் விரிவாக ஆலோசனை நடத்திய பிறகு இந்த மாறுதல் முடிவு எடுக்கப்பட்டதாக ஐபிஎல் தலைவர் ராஜீவ் சுக்லா டெல்லியில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். ‘தமிழக அரசு தனது முடிவில் நிலையாக இருந்ததால் போட்டி டெல்லிக்கு மாற்றப்பட்டதாக அவர் கூறினார். http://www.tamizl.com/?p=7501
  12. மாவீரர்களுக்கு வீர வணக்கம்.
  13. "தமிழீழ விடுதலைக்கான மாணவர் சுடர் பயணம்" நீலகிரி - தஞ்சை நோக்கிய பாதை. 12/05/2013 அன்று காலை 9 மணிக்கு நீலகிரியில் ஆரம்பித்து கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், திருச்சி ஊடாக சென்று 17/05/2013 அன்று தஞ்சை முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் நிறைவு பெறுகிறது. (முகநூல்)

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.