Everything posted by துளசி
-
இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணி! (ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும்.)
7000 பேருக்கு மேல் படிக்கும் லயோலா கல்லூரியிலிருந்து ஒரு சில மாணவர்கள் தங்கள் கட்சியின் மாணவரணியில் சேர்ந்த செய்தியை, தமிழீழ விடுதலைக்காக தமிழக மாணவர்கள் போராடிக்கொண்டிருக்கும் இவ்வேளையில் தங்களது கட்சி சார்ந்த தொலைக்காசியில் மீண்டும் மீண்டும் ஒளிபரப்பி ஏதோ போராட்டத்தை துவக்கிவைத்த லயோலா கல்லூரி மாணவர்களே திமுகவிற்கு ஆதரவு தெரிவித்துவிட்டதைப் போல பொது மக்களிடையே ஒரு பொய் பிம்பத்தை ஏற்படுத்த முயல்கிறார்கள் சிலர். ஐநா தீர்மானத்துக்கு பிறகு நீர்த்துப்போய்விடும் என பகல் கனவு கண்டுகொண்டிருந்தவர்கள் நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் இந்த வேளையில் தொடரும் மாணவ போராட்டத்தை கண்டு செய்வதறியாமல் விழிபிதுங்கி நிற்கின்றனர். மார்ச் 8ஆம் தேதி துவங்கி தமிழகம் முழுதும் பரவியிருக்கும் தமிழீழ விடுதலைக்கான இந்த மாணவர் போராட்டம் தங்கள் இலக்கை அடையாமல் ஓயாது. தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு சார்பாக ஜோ பிரிட்டோ (முகநூல்: loyolahungerstrike)
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
வாதவூரான் அண்ணாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
-
இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணி! (ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும்.)
"பிரபாகரன்" இந்த பெயரின்றி இனி தமிழினமும் தமிழ்நாடும் வாழாது.. (முகநூல்)
-
இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணி! (ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும்.)
மாணவர் போராட்டத்தை சீர்குலைக்க மாணவர்களிடையே ஒட்டுக்குழுக்கள் ! இந்திய உளவுத்துறை திட்டம் !! பணம், பதவி, விளம்பரத்திற்கு அப்பாற்பட்டு எழுந்துள்ள மாணவர் எழுச்சியை ஒட்டுக்குழுக்கள் ஏற்படுத்தி சீர்குலைக்க இந்திய உளவுத்துறை திட்டமிட்டுள்ளது என தோழர் ஆ.குபேரன் பேசினார். முற்றிலும் மாணவர்களால் மாணவர்களுக்காக மாணவர்களே ஏற்பாடு செய்யப்பட்டு விருத்தாசலத்தில் நடந்த தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பின் கடலூர் மாவட்டக் பொதுக் கூட்டத்தில் இதுகுறித்து தோழர் ஆ.குபேரன் பேசியதின் சுருக்கமான வடிவம் : ” தமிழீழ விடுதலைக்காக லயோலாவில் பற்றிய சிறு நெருப்பு பற்றிப் பரவி தமிழகமெங்கும் தகிதகித்து நிற்கிறது. 2009-ல் இந்திய- சிங்கள கூட்டுப் படைகள் முள்ளிவாய்க்காலில் நடத்திய இனப்படுகொலைக்கு நீதி கேட்டு நான்கு ஆண்டுகளுக்கு பிறகு வீதிக்கு வந்திருக்கும் மாணவர்களின் பேரெழுச்சி அரசை அதிரச் செய்துள்ளது. வரலாற்று சிறப்புமிக்க மாணவர் எழுச்சியை காவல்துறை அடக்குமுறை, காலவறையற்ற விடுமுறை என முடக்க நினைத்து தோற்றுப் போன அரசும், கங்காணி தேர்தல் கட்சிகளும் தற்போது உளவுத்துறையின் பின்னணியுடன் சீர்குலைவு வேலைகளில் களமிறங்கியுள்ளன. உளவுத்துறை பின்னனியுடன் சீர்குலைவு வேலைகள் செய்யும் அமைப்புசார் மாணவர்களை தமிழீழ விடுதலையின் பெயரில் முன்னிலைப்படுத்துவது, பின்னர் அவர்களைக் கொண்டு தமிழீழத்துக்கும் – தமிழ்த் தேசியத்துக்கும் எதிரான இந்திய தேசிய கருத்தியலை கொண்டுவந்து இந்திய தேசியத்தில் சரணடைய வைப்பது என்பது தான் அது. ஈழப் விடுதலைக்கான மாணவர் போராட்ட சூழலில் முன்வக்கப்படும் முதன்மையான இப்படிப் பட்ட கருத்தியல்களை நாம் இனம் கான வேண்டும்.. அவ்வாறான கருத்தின் போலித் தன்மையை, இந்திய தேசிய இலக்கை தமிழக மாணவர்கள் நாம் உடைத்தெரிய வேண்டும்.. 1) 2009 ஆம் ஆண்டு இந்திய அரசும் சிங்கள அரசும் நடத்திய ஈழத்தமிழர் மீதான இன அழிப்பு இனப்படுகொலை போரை ராஜபட்சே செய்த கொலை போல சித்தரித்து வெறும் ராஜபட்சேவை மட்டுமே குற்றவாளி போல தமிழர்களிடையே முன்னிறுத்துவது. ”இராஜபட்சேவை தூக்கில் போடு” என முழக்கமிட்டு இராஜபட்சேவை திரைப்படத்தில் வரும் வில்லனாக காட்டி “இந்திய தேசியத்தை“ பாதுகாக்கொள்வது.. 2) ”ஒரு தாலிக்காக ஒருலட்சம் தாலி அறுத்த சோனியாவே” என ஈழப் போரை வெறும் சோனியாகாந்தியின் தனிநபர் பழிவாங்கல் பகை நடவடிக்கையாக மட்டுமே மாற்றிவிட்டு இந்திய ”அரசை”ப் பாதுகாத்துக் கொளவது.. 3) இந்திய அரசின் வெளியுறவுக் கொள்கையின் பிழையான வழிமுறையால் இலங்கையை இந்தியா பகை நாடாக கருதவில்லை. இந்தியா அதை மாற்றிக் கொள்ள வேண்டும் என கோரிக்கை வைக்க வைத்து ” இந்திய கருத்தியலுக்க்கு கீழ் ” மாணவர்களை கொண்டு போய் நிறுத்துவது.. 4) ”இந்தியாவின் தேச நலன்., பூகோள பிராந்திய பாதுகாப்பு, இந்திய இறையாண்மை ” பாதுகாக்கும் பொருட்டு ஈழத்தில் தமிழர்கள் போரில் கொல்லப்பட்டபோது தடுக்கமுடியாதது துரதிஷ்ட்டமானது என கருத்துக்களை முன்னிறுத்துவது... 5) எல்லாவற்றிக்கும் மேலாக மக்கள் களத்தில் செயல்படும் மாணவர்களை ஈழ ஆதரவின் பெயரால் தேர்தல் களத்தில் இறக்கிவிட்டு சீர்குலைப்பது என்பது ஆகும். மாணவர்கள் நாங்கள் எந்த தேர்தல் அரசியல் கட்சியும் சாரதவர்கள் ஆனால் , அரசியல் தெரியாதவர்கள் அல்ல.. அவர்கள் திட்டம் வெற்றி பெறாது. உண்மையில்.. ஈழத்தில் ராஜபட்சேவின் தமிழின அழிப்பு போரை நடத்தியது இந்தியாதான்.. இந்தியாவின் போரை நாங்கள் நடத்தினோம் என்று இனப் படுகொலைப் போரை சிங்கள பாரளுமன்றத்தில் ராஜபட்சே அறிவித்தானே அதன் பொருளென்ன ? பணம் கொடுத்து, பயிற்சி கொடுத்து, ராடார்கொடுத்து, ராணுவம் கொடுத்து கொல்லச் சொன்னது இந்தியா அரசு ! கொன்று குவித்தது சிங்கள அரசு ! ஈழத்தில் நடைபெற்ற இனக்கொலைப் போரில் இந்திய அரசும் சிங்கள அரசும் கூட்டுக் குற்றவாளிகள்.. ராஜபட்சே மட்டுமல்ல, பொன்சேகா, கோத்தபய, மன்மோகன் , சோனியா, சிவசங்கரமேனன், பிரனாப் இவர்கள் அனைவரும் தற்சார்பான பன்னாட்டு நீதிமன்றத்தில் புலன் விசாரனைக்கு உட்படுத்தப்பட வேண்டும். “ராசீவ் காந்தி கொலைக்கு பதிலாக சோனியாவின் பழிவாங்கும் நடவடிக்கையென்று யார்சொன்னாலும் நம்பாதீர்கள், உண்மையில் ராசீவ் காந்தி காலத்தில் ராசீவ் காந்தியே அமைதி படை என்ற பெயரில் படையனுப்பி பல்லாயிரக்கணக்கான தமிழர்களை கொன்று குவித்தது யார் தாலியை அறுத்ததின் பதில் நடவடிக்கை ? இந்திய அரசின் வெளியுறவுக் கொள்கையின் பிழையான வழிமுறையால் இலங்கையை இந்தியா பகை நாடாக கருதவில்லை என்பதை ஒருபோதும் நாங்கள் ஏற்க முடியாது.. ஒரு நாட்டின் உள்நாட்டு அரசியல் தத்துவம் தான் அந்நாட்டு அயலுறவுக் கொள்கைகளைத் தீர்மானிக்கும். இந்திய அரசு என்பதே தமிழினத்துக்கு எதிரான பகை அரசு. அதன் நீட்சியாகத்தான் இந்தியா தனது அயலுறவுக் கொள்கைகளை வகுத்து ஈழத்தில் திட்டமிட்டு தமிழர்களை கொன்று குவித்தது.. இன்றைக்கும் தமிழக மீனவர்களை சிங்களர்கள் கொன்று குவிப்பதை வேடிக்கைப் பார்க்கிறது.. ஒன்றரை லட்சம் மனிதப் படுகொலைக்கு பின்னும் இந்தியாவின் சிங்கள ஆதரவு நடவடிக்கைக்கு பிராந்திய நல பாதுகாப்புதான் காரணமென்றால் “ஈழம் அமைந்தால் தெற்காசிய பிராந்தியத்தில் இந்தியாவின் பாதுகாப்பு அரணாக நாங்கள் இருப்போம்” என்று மேதகு தேசியத் தலைவர் பிரபாகரன் நீட்டிய நேசக் கரத்தை வெட்டிவிட்டு இலங்கையுடன் இந்தியா கூட்டு சேர்ந்து இனப்படுகொலையை நடத்தியது எதனால்..? தெற்காசிய கடல் பரப்பில் சீனா வந்தாலும் , அமெரிக்கா வந்தாலும் கவலையில்லை, ஆனால் தமிழினம் வாழக்கூடாது, அழிய வேண்டும் என்று ஆரியவெறியுடன் தமிழீழ அரசை நிர்மூலமாக்கி ஒன்றறை லட்சம் தமிழர்களை கொன்று குவித்தது தமிழினப் பகையன்று வேறென்ன.. ? மாணவர்களே .. ஆரிய இனத்தின் நவீன வடிவம் இந்தியம் ! இன்னொரு கிளை சிங்களம் ! ஈழத்தமிழர்களுக்கு பகை சிங்கள அரசு ! உலகத்தமிழர்களுக்கே பகை இந்திய அரசு ! என்ற தெளிவான சிந்தனையுடன் தமிழீழ விடுதலைக்காக மாணவர் களத்தில் மாணவர்கள் நாம் போராடி வருவது இந்திய அரசுக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. பணம் பதவி விளம்பரத்திற்கு அப்பாற்பட்டு எழுந்துள்ள மாணவர் எழுச்சியை மடைமாற்ற ஒட்டுக் குழுக்கள் மூலம் இந்திய உளவுத்துறை திட்டமிட்டுள்ளது. முள்ளிவாய்க்கால் படுகொலையை முன்னின்று நடத்திய காங்கிரசின் மீதான மக்கள் வெறுப்புணர்வைப் பயன்படுத்தி மாணவர்களின் தனி ஈழ கோரிக்கையை வெறும் காங்கிரசுக்கு எதிரான கோரிக்கையாக மட்டுமே மடைமாற்றும் திட்டத்தில் நாம் வீழ்ந்துவிடக் கூடாது. காங்கிரஸ் எதிர்ப்பு என்ற பெயரால் மாணவர்களை உணர்ச்சி வயப்படுத்தி காங்கிரசுக்கு மாற்றாக இன்னொரு கங்காணி அரசியல் கட்சியின் வாக்கு வங்கியாக மாணவர்களை பயன்படுத்தும் திட்டத்துடன் தேர்தல் அரசியல் கட்சிகள் உள்ளன. இந்தியாவை எதிர்த்து திரண்டு நிற்கும் மாணவர்களை தேர்தல் மாயையில் மீண்டும் இந்திய தேசியத்தில் அடகு வைக்கும் உளவுத்துறையின் சதியும் இதனுடன் ஒருசேர அடங்கியுள்ளன. காங்கிரசுக்கு எதிரான மாற்று அணி என்ற பெயரால் மாணவர்களின் போர்க்குணமிக்க போராட்ட அரசியலை தேர்தல் அரசியலாக மடைமாற்றி காயடிக்கும் வேலையை புறந்தள்ள வேண்டும். 2009 –ல் ஈழப் போரில் இந்திய அரசின் தமிழினப் பகையும், தேர்தல் கங்காணி அரசியல் கட்சிகளின் சீர்குலைவு வேலைகளும் நமக்கான படிப்பினையாக கொள்ள வேண்டும். மாற்று அணி ஒருபோதும் ஈழவிடுதலையைப் பெற்றுத் தராது.. மக்கள்திரள் போராட்ட மாற்று அரசியலே ஈழவிடுதலைக்கான ஒரே வழி ! நமது போராட்டம் இந்திய அரசை நிலைகுலையச் செய்யும் போராட்டமாக இருக்க வேண்டும். இந்திய அரசு தமிழகத்தில் இனி செயல்பட முடியாதபடி நெருக்கடி தரும் போராட்டத்தை நாம் முன்னெடுக்க வேண்டும். வரலாற்று சிறப்புமிக்க மாணவர்ப் போராட்ட எழுச்சியை தேர்தல் கங்காணி அரசியல் கட்சிகளின் காலடியில் வைத்துவிடாமல் தற்சார்போடு மாணவர்கள் நமது தோள்களில் சுமப்போம்.. ! என பேசினார் தோழர். ஆ.குபேரன் . பொதுக் கூட்டத்தில் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகம் உட்பட கடலூர் மாவட்டத்தின் பல்வேறு அரசு மற்றும் தனியார் கல்லூரிகள், தொழிற்பயிற்சி பள்ளி மாணவ ஒருங்கிணைப்பாளர்கள் பங்கேற்று பேசினர். மாணவர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள் , இன உணர்வாளர்கள் என திரளானோர் கூட்டத்தில் பங்கேற்றனர். முன்னதாக பொதுக்கூட்ட மேடையின் அருகே மாணவ்ர் போராட்டம் , ஈழ இனக்கொலை போர் காட்சிகள் அடங்கிய ஆவணப்படங்கள் திரையிடப்பட்டன. தோழர்கள். மாறன், ,பிரவின் , சுப்பிரமணிய சிவா , இளநிலா ஆகியோர் நிகழ்வை ஒருங்கிணைத்திருந்தனர். தொடர்புக்கு : தோழர். ஆ.குபேரன் +91 9042223563
-
இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணி! (ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும்.)
ஜனாதிபதி மஹிந்தவின் உருவ பொம்மை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 100 பேர் கைது. நாகை மாவட்டம் தரங்கம்பாடியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் இலங்கை அரசைக் கண்டித்து இன்று (10.04.2013) சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இலங்கை ராணுவத்தால் சிறை பிடிக்கப்பட்டுள்ள 54 தமிழக மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். தமிழக மீனவர்களை தொடர்ந்து தாக்கும் இலங்கை ராணுவத்தை கண்டிப்பது, தனி ஈழம் அமைய எதிர்ப்பு தெரிவிக்கும் ராஜபக்ஷவை கடுமையாக கண்டிப்பது, தமிழ் இனத்தின் தொப்புள் கொடி உறவுகள் அழிவதை கண்டுகொள்ளாத இந்திய அரசைக் கண்டிப்பது, கச்ச தீவை மீட்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தரங்கம்பாடி பேருந்து நிறுத்தம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. கேரள மீனவர்கள் 2 பேர் சுட்டுக்கொல்லப்பட்டதற்கு உடனடியாக தீவிர நடவடிக்கை மேற்கொண்ட மத்திய அரசு 500 க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் கொல்லப்பட்டதற்கு எந்தவித தீவிர நடவடிக்கையும் எடுக்காததற்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். போராட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்தவர்கள் திடீரென்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து இலங்கை ஜனாதிபதி ராஜபக்ஷ உருவ பொம்மையை எரித்தனர். இதனை அடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட தமிழக வாழ்வுரிமை கட்சியினர் சுமார் 100 பேரை பொலிஸார் கைது செய்தனர். போராட்டத்தால் சென்னை நாகை தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. (முகநூல்)
-
இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணி! (ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும்.)
ஈழத்தமிழர்களுக்கு ஆதரவான மாணவர் போராட்டத்தில் புதுச்சேரியில் மாணவர் போராட்டத்தை முன்னின்று நடத்திய சட்டக்கல்லூரி மாணவர்கள் கௌதம பாஸ்கரன் ,பிரபு ,பீமாராவ் , சுவாமி நாதன் ஆகியோர் போராட்டத்தில் மத்திய அரசு அலுவலங்கள் பல சேதப்படுத்தப்பட்ட வழக்கில் கடந்த வெள்ளிகிழமை (05.04.2013) கைது செய்யப்பட்டனர் . பிரபு ,சுவாமிநாதன் திங்களன்று பிணையில் வெளி வந்தனர் , இன்று (10.04.2013.) கௌதம பாஸ்கரன் , பீமாராவ் ஆகியோர் பிணையில் வெளிவந்தனர் அடக்க நினைத்திடும் சிறைச்சாலை!! எங்களுக்கு அரசியல் கற்ப்பித்திடும் பாடசாலை,!! என்று புன்னகைத்த முகத்துடன் வெளி வந்திருக்கும் மாணவர்களுக்கு, வாழ்த்துக்கள் கோடி. (முகநூல்)
-
இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணி! (ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும்.)
தலைவரின் படம், பெயருடன் கூடிய உணவகம். (முகநூல்)
-
இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணி! (ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும்.)
thank you CSK ,for respecting the Tamil sentiments and for removing the srilankan players from entire IPL series.. (முகநூல்) பி.கு: இது சம்பந்தமான இணைப்பு கிடைத்தால் யாராவது இணையுங்கள்.
-
இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணி! (ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும்.)
தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பின் சார்பாக விருதாசலத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மாணவர் பிரவீன்ராஜ் உரையிலிருந்து தனித்தமிழீழ விடுதலையின் மீதும் விடுதலை புலிகளின் மீதும் மாணவர்கள் வைத்திருந்த்த மதிப்பும் ஈர்ப்பும் தெளிவாகத்தெரிகிறது. மேலும் அவர்களின் அரசியலறிவு மிகவும் கூர்மையாக உள்ளதையும் அறிய முடிகிறது. இன்றைய அரசியல் வாதிகளின் நிலைப்பாட்டையும் ஈழ சிக்கல்களையும் இந்தியாவின் கீழ்த்தரமான நிலைப்பாட்டையும், தமிழக துரோக அரசியலையும் அவர்கள் மேடையில் தோலுரித்துக்காட்டியது பொது மக்களுக்கு புல்லரிக்கச்செய்தது. மேலும் அவர்கள் உரைகளுக்கு நடுவே ஈழப்போரில் காங்கிரசு அரசு இலங்கைக்கு ஆயுதம் உட்பட அனைத்து உதவிகள் செய்ததை காணொளியிட்டும், திமுக வின் மறைமுக ஆதரவை காணொளியிட்டும் காண்பித்தனர். மேலும் மாணவர்கள் சொந்தமாக புரெஜெக்டர் வாங்கி கிராமம் கிராமமாக திரையிட்டு காட்டப்போவதாக அறிவித்தவுடன் மக்கள் வெள்ளத்தில் எழுந்த கரகோஷம் விண்ணை பிளந்தது எனவே மாணவர்கள் கையில் அரசியல் சென்றுவிட்டது அரசியல் வாதிகள் இனி ஓய்வெடுக்கவேண்டியதுதான் தொடர்பிற்கு மாறன் : 99522 24112 பிரவின் : 95000 78349 (முகநூல்) ------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- தமிழீழ விடுதலைக்கான மாணவர்கள் கூட்டமைப்பு , கடலூர் மாவட்டம் சார்பாக நேற்றைய முன்தினம் விருதாச்சலத்தில் நடந்த மாபெரும் மாணவர் பொதுகூட்டத்தில் பல முகநூல் நண்பர்களின் கருத்துகளை பிரதிபலித்த என்னுடைய உரை , இது என்னுடைய முதல் மேடை பேச்சு, பிழை இருந்தால் நண்பர்கள் மன்னிக்கவும்... - பிரவீன்ராஜ் - (முகநூல்)
-
இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணி! (ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும்.)
தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு ஊடகவியலாளர் சந்திப்பு. அன்புடைய ஊடகவியளாள நண்பர்களுக்கு, தமிழீழ விடுதலைக்காக நடைபெற்றுக்கொண்டிருக்கும் மாணவர்களின் போராட்டமானது ஒரு மாதம் நிறைவடைந்துள்ள நிலையில் ஐநா வாக்கெடுப்புக்குப் பின்னர் மாணவர்களது போராட்டமானது ஈழத்தில் நடந்தவற்றை அதன் வரலாற்றை போராட்ட களத்தில் கலந்துகொள்ளாத சக மாணவர்களுக்கு எடுத்துச் செல்லும் பணியை அனைத்து மாவட்டங்களிலும் திறம்பட செய்துகொண்டுள்ளோம். அவ்வகையில் கல்லூரி திறந்த நாள் முதல் தினமும் காலை 11 லிருந்து 11:02 வரையிலான இரண்டு நிமிடங்களுக்கு இருக்கும் இடத்திலேயே எழுந்து நின்று மௌனம் கடைபிடிக்கிறோம். இது இறந்த தமிழர்களுக்கான அஞ்சலி அல்ல. நம் தமிழ் இனம் பட்ட வலியை இவ்வுலகம் உணர்வதற்காக நடத்தப்படும் மௌனப் போராட்டம். ஐநா மன்றம் மூடிய காதுகளை திறக்கும் வரையில் இந்த மௌன போராட்டம் தொடரும். ஐநா மன்றம் தன்னுடைய பொறுப்பை தட்டிக்கழிப்பதாகவே உணர்கிறோம். எனவே அடுத்தகட்டமாக ஐநா வை வலியுறுத்தி எங்கள் போராட்டத்தை துவக்கப் போகிறோம். ஈழத்தில் நடந்த கொடுமைகளையும் வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டியதன் தேவையையும் மனித நேயம் கொண்ட உலக பொதுமக்கள் மற்றும் உலக மாணவர்களிடம் எடுத்துசெல்கிறோம். அடுத்த வாரம் மாணவ கூட்டமைப்பை சேர்ந்த சில மாணவர்கள் தலைநகர் டெல்லி சென்று அங்குள்ள ஜே.என்.யூ.- ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்திற்கு சென்று மாணவர்களிடம் ஈழத்தில் வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டிய நியாயமான கோரிக்கைகளை எடுத்துரைத்து மௌன போராட்டத்திற்கு அந்த மாணவர்களின் ஆதரவையும் கோரவுள்ளோம். தொடர்ந்து அடுத்த கல்வியாண்டு தொடக்கத்திலிருந்து இதே போன்று அனைத்து மாநில மாணவர்களை சந்திப்பதற்கான திட்டத்தை வடிவமைப்போம். ‘தமிழக மாணவர்களின் முறையீட்டு மடல்’ 20க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு அனைத்துலக மாணவ சமுதாயத்திடம் கொண்டு சேர்க்கும் பணியை தொடர்ந்து மேற்கொள்வோம். பல்வேறு கல்லூரியில் தொடர்ந்து நடத்தப்பட்டுக்கொண்டிருக்கும் மாணவர்களின் இந்த அறவழியிலான நூதன போராட்டத்திற்கு சில கல்லூரி நிர்வாகம் தடை போடுகிறார்கள். மாணவர்களின் இந்த அறவழி போராட்ட முறையில் சில கல்லூரி நிர்வாகங்களுக்கு நம்பிக்கையில்லாமல் போவது வருந்தத்தக்க கண்டிக்கத்தக்க செயல். இந்த மௌன போராட்டத்திற்கு தடை விதிக்கும் கல்லூரிகளின் பட்டியல் விரைவில் வெளியிடப்படும். அந்தக் கல்லூரிகளை அந்த மாவட்டத்திலுள்ள மற்ற கல்லூரி மாணவர்கள் முற்றுகை போராட்டம் நடத்துவார்கள். கடந்த 60 ஆண்டு கால ஈழ வரலாற்றை தாங்கி நிற்கும் www.supporttamileelam.org என்ற இணைய முகவரியையும் வாக்கெடுப்பு நடத்துங்கள்(We Want Referendum) என்ற வாசகத்தையும் கொண்ட பேட்ஜ் அணிந்து கல்லூரி செல்வோம். இலங்கையில் தமிழ் இனப்படுகொலை நடத்திமுடிக்கப்பட்டதாக சொல்லப்படும் மே மாதம் 18ம் தேதி அனைத்து மாவட்ட தலைநகரிலும் மாணவர்கள் மற்றும் ஆதரவாளர்கள் பங்கேற்கும் பேரணி நடத்தப்படும். மாலை 4 மணிக்கு தொடங்கும் இந்தப் பேரணி அந்தந்த மாவட்டங்களில் எந்த இடத்தில் தொடங்கி எந்த இடத்தில் முடியும் என்பது பின்னர் அறிவிக்கப்படும். தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு சார்பாக அ.மணிகண்டன் – 72995 69699 (லயோலா கல்லூரி) (முகநூல்: loyolahungerstrike)
-
இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணி! (ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும்.)
இலங்கையில் மாணிக்க விநாயகம் பங்கேற்கவிருந்த நிகழ்ச்சி ரத்து. சென்னை: தமிழுணர்வாளர்களின் போராட்டத்துக்கு மதிப்பளித்து, இலங்கையில் தான் கலந்து கொள்ளவிருந்த இசை நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுவிட்டதாக பின்னணி பாடகர் மாணிக்க விநாயம் தெரிவித்துள்ளார். இலங்கை வவுனியாவில் புதிதாக அம்மன் கோவில் கட்டப்பட்டுள்ளது. இதன் கும்பாபிஷேக விழாவில் இசை கச்சேரி நடத்த சினிமா பின்னணி பாடகர் மாணிக்க விநாயகம் உள்ளிட்ட 25 பேர் இலங்கை செல்ல இருந்தனர். இதற்கு பெரியார் திராவிடர் கழகத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். திருவான்மியூர் சாஸ்திரி நகரில் உள்ள மாணிக்க விநாயகம் வீட்டை முற்றுகையிட்டு போராட்டமும் நடத்தினர். பாடகர்கள் இலங்கை செல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷம் போட்டார்கள். மாணிக்க விநாயகத்திடம் இலங்கை செல்ல வேண்டாம் என வற்புறுத்தி மனுவும் கொடுத்தார்கள். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர். இதையடுத்து மாணிக்க விநாயகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ் உணர்வாளர்களின் எண்ணங்களுக்கு மதிப்பளித்து 11-ந்தேதி (நாளை) இலங்கை வவுனியாவில் உள்ள கோவிலில் கும்பாபிஷேக விழாவினையொட்டி நடைபெற இருந்த இசை நிகழ்ச்சிக்கு நானும், மற்றவர்களும் யாரும் செல்லவில்லை என்பதையும், எங்கள் பயணத்தை ரத்து செய்துவிட்டோம் என்பதை யும் பணிவோடு தெரிவித்துக் கொள்கிறேன்," என்று கூறியுள்ளார். http://tamil.oneindia.in/news/2013/04/10/tamilnadu-manikka-vinayagam-s-programme-sri-lank-173242.html
-
இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணி! (ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும்.)
பாடகர் மாணிக்க விநாயகம் பல தமிழ் உணர்வாளர்களின் எதிர்ப்பின் காரணமாக இலங்கை பயணத்தை நிறுத்தியுள்ளார் -போராடிய தோழர்களுக்கு நன்றி- (முகநூல்)
-
இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணி! (ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும்.)
(முகநூல்) ------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- பாடகர் மாணிக்க விநாயகம் இசை நிகழ்ச்சிக்காக இலங்கை செல்வதை தவிர்க்குமாறு வலியுறுத்தி பெரியார் திராவிடர் கழகத்தினால் போராட்டம் நடத்தப்பட்டது.பின்னர் மனுவும் கையளிக்கப்பட்டது. (முகநூல்)
-
இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணி! (ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும்.)
ஈழத் தமிழர்கள் விடயத்தில் இரட்டை வேடம் வேண்டாம்; பாரத மனித உரிமை பாதுகாப்பு கழகம் மத்திய அரசுக்கு எதிராகப் போராட்டம். ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமையைக் காக்க நடவடிக்கை எடுக்கக் கோரியும், இதில் மத்திய அரசின் இரட்டை வேடத்தைக் கண்டித்தும் பாரத மனித உரிமை பாதுகாப்புக் கழகம் நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் நேற்று பெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தியது. இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர். ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமையை காக்கவும், அவர்கள் சுதந்திரமாகச் செயற்படவும், மனிதநேயமின்றி ஈவு இரக்கமன்றி அப்பாவித் தமிழர்களைக் கொன்று குவித்த இலங்கை ஜனாதிபதியைப் போர்க் குற்றவாளி என அறிவிக்கக் கோரியும் இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது. இந்தியாவின் மாநிலங்களில் ஒன்றான தமிழ்நாடு மாநில மக்களின் உணர்வுகளுக்கும், உரிமைக்கும் மதிப்பு கொடுக்காமல் இரட்டை வேடம் போட்டு மறைமுகமாக இலங்கையை ஆதரிக்கும் மத்திய அரசை வன்மையாகக் கண்டிப்பதாக ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் கோஷம் எழுப்பினார்கள். இந்த ஆர்ப்பாட்டத்தால அந்தப் பகுதியில் சிறிது நேரம் பதற்றம் நிலவியது. பொலிஸாரும் அங்கு குவிக்கப்பட்டனர். http://www.tamilcnn.org/archives/157778.html
-
இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணி! (ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும்.)
தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பின் பத்திரிகைச் செய்தி. "தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பின்" சார்பில் 07/04/2013 ஞாயிறு மாலை திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகில் "மாபெரும் மாணவர் பொதுக்கூட்டம்" நடைபெற்றது. இப்பொதுக்கூட்டத்தை திருச்சி மாவட்ட மாணவர் கூட்டமைப்பு ஏற்பாடு செய்தது. இப்பொதுகூட்டம் காங்கிரஸ் கட்சியினரால் காட்டுமிராண்டித்தனமாக தாக்கப்பட்ட மாணவர்கள் சார்பான கண்டனக்கூட்டமாகவும்,தமிழக சட்டமன்ற தீர்மானமான "தமிழீழத்திற்கான பொதுவாக்கெடுப்பு" என்ற 7 கோடி தமிழர்களின் விருப்பத்தினை இந்திய நாடாளுமன்றத்தில் தீர்மானமாக நிறைவேற்றவும்,அதனடிப்படையில் இந்தியாவே ஐ.நா.வில் "தமிழீழத்திற்கான பொதுவாக்கெடுப்பு" என்ற தீர்மானத்தை கொண்டுவர வலியுறித்தியும் நடைபெற்றது. இப்பொதுக்கூட்டத்தில் "தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பின்" ஒருங்கிணைப்பாளர் சீ .தினேஷ் உள்ளிட்ட 15 க்கும் மேற்ப்பட்ட மாணவர் பிரதிநிதிகள் "தமிழீழமே தீர்வு" என்ற ஒற்றை கோரிக்கையை வலியுறித்திப் பேசினார்.இக்கூட்டத்திற்கு இக்கூட்டமைப்பின் நெறியாளர் களான அய்யா பழ.நெடுமாறன்,அய்யா ஆர்.நல்லகண்ணு ஆகியோர் கலந்துகொண்டு காங்கிரஸ் கட்சியினரின் காட்டுமிராண்டித்தனமான மாணவர்கள் மீதான தாக்குதலைக் கண்டித்ததுடன், தமிழக அரசின் சட்டமன்ற தீர்மானத்தினை மத்திய அரசு உடனடியாக நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற வலியுறுத்தினர்.இக்கூட்டத்திற் கு இந்தி எதிர்ப்பு போராட்ட கால மாணவர் தலைவர் அய்யா ஜெயப்பிரகாசம் கலந்துகொண்டு உரையாற்றினார். எழுச்சியுடன் நடைபெற்ற இக்கூட்டத்தில் மாணவர்களால் கருத்தாழமிக்க கலைநிகழ்ச்சிகளும் , எழுச்சிப் பாடல்களும் பாடப்பட்டன. இதன் தொடர்ச்சியாக ஒவ்வொரு மாவட்டங்களிலும் பல்வேறு வடிவங்களில் பொதுக்கூட்டங்களை முன்னெடுக்க உள்ளதாக அதன் ஒருங்கிணைப்பாளர் சீ.தினேஷ் தெரிவித்தார்.மேலும்மாணவர்களின் எழுச்சிமிக்க போராட்டத்தினை மக்களிடம் கொண்டுசேர்த்த ஊடகங்களை/செய்தித்தாள்களை பாராட்டியதுடன் ,ஊடகங்களின் குரல்வளையை(புதிய தலைமுறை தொலைகாட்சி) நெரிக்கும் விதத்தில் நடந்துகொண்ட ஈ.வீ.கே.எஸ்.இளங்கோவனை இப்பொதுகூட்டம் கண்டிப்பதாகவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.இப்பொதுக் கூட்டத்தில் மாணவர்களும்,பொதுமக்களும் திரளாக பங்கேற்று மாணவர்கள் போராட்டம் "தமிழீழம்" கிடைக்கும்வரை ஓயப்போவதில்லை என்பதை மெய்பித்துக்காட்டியுள்ளது. (முகநூல்)
-
இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணி! (ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும்.)
Krisna Eezham Tamil activist from Canada and iconic youth leader about student upsurge in Tamil Nadu. (முகநூல்)
-
இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணி! (ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும்.)
மாணவர்களின் போராட்டத்திற்கு மற்றும் ஒரு வெற்றி சென்னை ஏர்டெல் நிர்வாகத்தில் பணிபுரிபவர்கள் கம்பெனி முத்திரை பதித்துள்ள சீருடைகளை பாதுகாப்பு கருதி தற்காலிகமாக உடுத்த வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.. (முகநூல்)
-
இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணி! (ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும்.)
திருநெல்வேலி மாவட்டம் மூலக்கரைப்பட்டியில் 09.04.2013 அன்று ஈழ தமிழர்களுக்காக முழு கடையடைப்பு நடைபெறுகிறது. தொடர்புக்கு ... இசக்கிமுத்து. வியாபாரிகள் சங்க தலைவர். செல்: 9366707023 (முகநூல்)
-
இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணி! (ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும்.)
பிரான்சில் வரும் மே 18 அன்று மாபெரும் பேரணி. (முகநூல்)
-
கருத்து படங்கள்
India sorry, power cut (முகநூல்)
-
இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணி! (ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும்.)
இப்படத்தில் காணும் இலங்கை திண்பண்டங்களை எங்கு பார்த்தாலும் வாங்காதீர் . இவைகள் கிடைக்குமிடம் சரவணா ஸ்டோர்ஸ் , நீல்கிரீஸ் , மெக்ரனட், சந்தோஷ் சிறப்பங்காடி மற்றும் தமிழகத்தில் பல அங்காடிகளில் இந்த பொருட்கள் விற்பனைக்கு உள்ளது . ஆகவே தயவு செய்து தின்பண்டங்கள் வாங்கும் போது, அது இலங்கையில் தயாரிக்கப்பட்டதா என்று ஒரு முறை படித்து விட்டு வாங்குங்கள் . இலங்கை தயாரிப்புகளை புறக்கணிப்போம். (முகநூல்)
- கருத்து படங்கள்
-
இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணி! (ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும்.)
விருத்தாச்சலத்தில் மாணவர் பொதுக்கூட்டம் வெற்றிகரமாக நடைபெற்றது. (முகநூல்)
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்.
-
இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணி! (ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும்.)
(முகநூல்)