Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

துளசி

கருத்துக்கள பார்வையாளர்கள்
  • Joined

  • Last visited

Everything posted by துளசி

  1. மாவீரர்களுக்கு வீரவணக்கம்.
  2. இது ரத்தபூமி.. இங்கல்லாம் வரப்புடாது... (முகநூல்)
  3. மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்.
  4. மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்.
  5. விசுகு அண்ணா, ரொம்ப அநியாயம். நீங்கள் நிலா அக்காவை பாட்டி என்று அழைப்பதால் நான் அவரை பூட்டி என்று அழைத்தேன். நீங்கள் என்னையே பூட்டி என்று அழைத்தால் நீங்கள் எனக்கு பூட்டன் என்றும் நான் உங்களுக்கு பூட்டப்பிள்ளை என்றும் கொள்ள வேண்டியிருக்கும். சொல்லிட்டன்.
  6. நிலா பூட்டிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.
  7. வரும் மே மாதம் 19 ஆம் தேதி , பாலச்சந்திரன் கொல்லப்பட்ட அதே தினத்தில் நான்காம் ஆண்டு தமிழினப்படுகொலைக்கான நினைவேந்தல் நிகழ்வு.... எத்தனை வருடங்கள் கடந்தாலும் இந்த இனப்படுகொலையை தமிழினம் மறக்காது என்பதை உலகிற்கு உணர்த்த வேண்டும். ஒவ்வொரு வருடமும் தமிழர் கடலில் கரையோரம் பெரும் திரளாய் குடும்பத்துடன் பங்கேற்போம். (முகநூல்)
  8. தூய சேவியர் கல்லூரி நிர்வாகம் திட்டமிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ தோழர்களை பழி வாங்கும் நோக்கில் அவர்களை செய்முறை தேர்வில் fail ஆக்குவதற்காக பாடம் எடுக்கும் ஆசிரியர்களை தேர்வாளர் பொறுப்பில் இருந்து வன்மத்துடன் மாற்றியுள்ளது. இதனை நாம் தொடர்ந்து எதிர்த்து குரல் கொடுப்பதன் மூலமே மாற்ற முடியும். தோழர்களே. தூய சேவியர் கல்லூரியில் பயிலும் மாணவர்கள் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட முதல் தலைமுறை மாணவர்கள். அனைவருமே வறுமை கோட்டுக்கு கீழே உள்ளவர்கள். பெரும்பாலான மாணவர்கள் மூன்றாம் ஆண்டு மாணவர்கள். வாளாக நேர்காணலில் செலக்ட் ஆகி வேலையில் சேரப் போகிறவர்கள். இவர்களின் படிப்பை நம்பி காத்திருக்கும் ஏழை குடும்பங்கள். தோழர்களே உரத்து குரல் எழுப்புங்கள். Rev. Fr. Principal 9443466276; Rev. Fr. Secretary 9443118342 Rev. Fr. Rector 9486558265 ; Rev. Fr. Hod 9443997607(Fr. Xavier Antony) (முகநூல்: loyolahungerstrike)
  9. மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்.
  10. (முகநூல்: loyolahungerstrike) ---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- வணக்கம் ., மற்றவர்களைப் போல மாணவர்களும் ஏதேனும் ஒரு அரசியல் கட்சியில் இணைவது இயல்பான ஒரு நிகழ்வு. ஆனால் சர்வதேச அரங்கை சலசலப்பாக்கிய மாணவர் போராட்டத்தை துவங்கி வைத்த லயோலா கல்லூரி மாணவர்களே தி.மு.க வில் இணைந்ததை போல போலியான, இழிவான செயலை தி.மு.க. செய்ததால் தான் தி.மு.கவை மாணவர்களாகிய நாங்கள் எதிர்த்தோம். இந்த செயலை யார் செய்தாலும் அவர்களையும் எதிர்ப்போம். யார் வேண்டுமானாலும் தமிழ் உணர்வாளர், மனித உரிமை ஆர்வலர் எனும் முறையில் மாணவர்களாகிய எங்களுடைய போராட்டத்திற்கு ஆதரவு அளிக்கலாம்; ஆனால் யாரும் ஆளுமை செலுத்த முடியாது. நாங்களும் எந்த ஒரு அரசியல் கட்சியையோ, இயக்கத்தையோ ஒருபோதும் ஆதரிக்க மாட்டோம். தூற்றுவோர் தூற்றட்டும். எதையும் தாங்கும் இதயம் கொண்ட மாணவர்களாகிய எங்களுடைய போராட்டம் தொடரும்.... வெல்லும். தமிழ் ஈழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு சார்பாக , ஜோ பிரிட்டோ . (முகநூல்: loyolahungerstrike)
  11. ஈழத் தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு ஆதரவு தெரிவித்து, மேட்டுப்பாளையத்தில் உள்ள உருளைக்கிழங்கு மண்டிகள் முழு கடையடைப்பில் ஈடுபட்டுள்ளன. (முகநூல்: loyolahungerstrike) பி.கு: மண்டிகள் என்றால் என்ன? யாராவது தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.
  12. எமக்கு வேண்டியது எல்லாமே ஈழம் மட்டும் தான்... பறக்க நினைக்காமல், சொல்லுக்கு முன் செயலோடு சாதிப்போம் இந்த ஆண்டில்...! அனைவருக்கும் எமது இதய பூர்வமான சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துக்கள்...! (முகநூல் : loyolahungerstrike) ------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- தமிழ் ஈழ விடுதலைக்காக போராடிய திருச்சி மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ராமநாதபுரத்தில் மாணவர் கூட்டமைப்பின் சார்பில் இன்று ஒருநாள் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது. (முகநூல் : loyolahungerstrike)
  13. தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பின் அடுத்தக்கட்ட முன்னெடுப்பாக வரும் 12/05/2013 முதல் 17/05/2013 வரை தமிழகத்தின் 32 மாவட்டங்களிலிருந்தும் "தமிழீழ விடுதலைக்கான மாணவர் சுடர் பயணம்" 8 கோடி தமிழர்களை நோக்கி பயணிக்க இருக்கிறது. அப்பயணம் இறுதியாக மே 17 அன்று தஞ்சாவூரில் உள்ள "முள்ளிவாய்க்கால் நினைவிடத்தில் " வந்து சேர்கிறது. தமிழகத்தின் அனைத்து பகுதியிலிருந்து வரும் "சுடர்களை" அய்யா பழ.நெடுமாறன் மற்றும் அய்யா இரா.நல்லகண்ணு ஆகியோர் தஞ்சையில் பெற்றுக்கொள்வர். இச்சுடர் பயணத்தின் இரு முதன்மையான நோக்கங்கள், 1) 8 கோடி தமிழர்களின் உணர்வை வெளிப்படுத்தும் தமிழக சட்டமன்ற தீர்மானமான "தமிழீழத்திற்கான பொதுவாக்கெடுப்பு" என்ற கோரிக்கையை , இந்தியா அரசின் அரசுக் கொள்கையாக அறிவிக்க வலியுறித்தியும், மேலும் இத்தீர்மானத்தை இந்தியாவே ஐ. நா. அவையில் முதன்மையான தீர்மானமாக கொண்டுவர வலியுறுத்தல். 2) இலங்கையில் நடைபெற இருக்கிற காமன்வெல்த் நாடுகளின் மாநாட்டை , இந்தியா - இலங்கையில் நடத்தக்கூடாது என்பதை வலியுறுத்தல். இந்த மாபெரும் மாணவர் மற்றும் மக்கள் திரள் சுடர் பயணத்தில் பங்கெடுப்பது தமிழனாய் பிறந்த , மாந்த நேய பற்றுள்ள ஒவ்வொருவரின் தலையாய கடமையாகும். மேலும் இச்சுடர் பயணத்திற்கு தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து தரப்பு மக்களும் பேராதரவு தந்து மாணவர்களுக்கு உந்து சக்தியாக திகழவேண்டும் என இக்கூட்டமைப்பு அன்புடன் கேட்டுக்கொள்கிறது. இச்சுடர் பயணம் பற்றிய தகவலறிய தொடர்பு கொள்க: சீ.தினேஷ் -ஒருங்கிணைப்பாளர் :செல்-9791162911 (முகநூல்)
  14. எதுக்கும் எப்படி என்னை கூப்பிடுவீர்கள் என்றொருக்கா சொல்லுங்கோ. மட்டுக்கள் விட்டு வைக்கிறார்களா என்று பார்க்கிறேன். விட்டு வைத்தால் நீங்கள் என்னை அப்படியே அழைக்கலாம். - தேவையற்ற ஒரு வரியை நீக்கியுள்ளேன் -
  15. இலங்கை (ஈழத்) தமிழ் மக்களின் படுகொலையைக் கண்டித்தும், எஞ்சியுள்ள தமிழ் மக்களின் உரிமை, நீதியை நிலைநாட்டவும் குரல் கொடுக்கும் படி திருத்தந்தை பிரான்சிஸ்கு தமிழ் நாடு மாணவர்கள் கூட்டமைப்பு வேண்டுகோள்! மாணவர்கள் போப்பிற்கு அனுப்பிய கடிதம் வருமாறு : வணக்கத்திற்குரிய திருத்தந்தை பிரான்சீஸ் அவர்களுக்கு! உலகெங்கிலும் வாழும் 150 மில்லியன் (15 கோடி) தமிழ் மக்களின் சார்பாக வணக்கத்தையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம். ஏழைகள், நோயாளிகள், பாதிக்கப்பட்டோரின் பங்காளியாகவும், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக் குரலாகவும், மறுக்கப்படும் மனித நேய உரிமைகளுக்கு உயிர்கொடுப்பவராகவும், மனித உரிமை மீறல்களை தடுத்து நிறுத்தும், உலகின் மனசாட்சியாக உலகத் தலைவர்களில் உயர்ந்து விளங்கும் 120 கோடி உலக கத்தோலிக்க மக்களின் தலைவர் திருத்தந்தை (ஞடியீந) என்பதை அறிவோம். மார்ச் 13, 2013 அன்று திருத்தந்தையாக தேர்வு செய்யப்பட்ட நீங்கள், புனித பிரான்சீஸ் அசிசியாரின் பெயரைத் தேர்வு செய்ததையும், இதுவரை எளிமைக்கும், ஏழைகள், ஒடுக்கப்பட்டவர்களின் பங்காளராக விளங்குவதிலும் பேர் போனவர் என்பதை கண்டு உலக மக்களுடன் தமிழக இளைஞர்களும் மகிழ்கின்றோம். ஈஸ்டர் பண்டிகையின்போது (இயேசுவின் உயிர்ப்பு நாள்) திருத்தந்தை தாங்கள் வழங்கிய செய்தியில்: “கிறிஸ்துவே நம் அமைதி, அவர் வழியாகவே இவ்வுலகம் முழுவதற்கும் அமைதி வழங்க முடியும். மத்திய கிழக்குப் பகுதிக்காக, குறிப்பாக இணக்கத்தின் பாதையைக் கண்டுகொள்ள முயலும் இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனியர்களுக்கும் இடையே அமைதி நிலவ, பல காலமாக தொடர்ந்து வரும் சண்டைகள் நிறுத்தப்படுவதற்கு உதவும் பேச்சுவார்த்தைகள் ஆர்வமுடனும், மன உறுதியுடனும் மீண்டும் துவக்கப்பட; ஈராக்கின் அமைதிக்காக அங்கு அனைத்து வன்முறைகளும் நிறுத்தப்பட; எல்லாவற்றிற்கும் மேலாக சிரியாவில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு பாதுகாப்பும், உதவியும் ஆறுதலும் எதிர்நோக்கி நிற்கும் எண்ணற்ற அகதிகளுக்காகவும்; ..... வன்முறை மோதல்களை அனுபவித்துக் கொண்டிருக்கும் ஆப்பிரிக்காவுக்கும் அமைதி தேவை. மாலி நாட்டில் இணக்கமும், நிலையான தன்மையும் கொணரப்படவும், வன்முறைக் கும்பல்களால் குழந்தைகள் கூட பிணைக் கைதிகளாக வைக்கப்பட்டு, அப்பாவி மக்களின் வாழ்வு அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ள நைஜீரியாவில் அமைதி திரும்பவும், மத்திய ஆப்பிரிக்க குடியரசின் அமைதி திரும்பவும்” என்று குரல் கொடுத்துள்ளீர்கள். மேலும், “ஆசியாவில் குறிப்பாக கௌரிய தீபகற்பத்தில் அமைதி திரும்பட்டும்.... ஒப்புரவின் புதுப்பிக்கப்பட்ட உணர்வு வளரட்டும்” என்று கூறியுள்ளீர்கள். உலக நாடுகளில் நடைபெறும் மதக்கலவரங்கள், மனித உரிமை மீறல்கள், வன்முறைகள், கொலைகள் நிறுத்தப்பட வேண்டும் என்று குரல் கொடுத்த நீங்கள், ஏறக்குறைய 50 ஆண்டுகளுக்கு மேலாக ஈழத் தமிழர்கள் இலங்கையில் உரிமைகள் மறுக்கப்பட்டு, இரண்டாம் தரக் குடிமக்களாக நடத்தப்பட்டு வந்ததையும், 1983 ஆம் ஆண்டிற்குப் பின் ஈழத் தமிழர்களை இலங்கை அரசு திட்டமிட்டு அழிக்கும் முயற்சியில் ஈடுபட்டு, 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற இலங்கை இராணுவத்திற்கும், விடுதலைப் புலிகளுக்குமிடையிலான போரில், அப்பாவி ஈழத் தமிழர்கள் ஒன்றரை இலட்சம் பேர் திட்டமிட்டு கொல்லப்பட்டுள்ளனர். போர் முடிவுக்கு வந்த நான்கு ஆண்டுகளுக்குப் பின்பும் இலங்கை இராணுவம் தமிழர் பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து, எஞ்சியுள்ள ஈழத்தமிழர்களை அழிக்கும் தமிழ் இனப்படுகொலையை இலங்கை அரசு செய்து வருகிறது. இது குறித்து ஐ.நா. சபையும் உலக நாடுகளும் கண்டனம் தெரிவித்து இலங்கை அரசுக்கு எதிராக தீர்மானம் கொண்டுவந்துள்ள நிலையில் தாங்கள் எதுவுமே கூறாதது மிகவும் ஆச்சரியமாக உள்ளது. இலங்கையில் எஞ்சியுள்ள மக்களை மீள்குடியமர்த்தும் பணியானது சரிவர நடக்கவும், தமிழர் பகுதிகளிலிருந்து இலங்கை இராணுவம் உடனடியாக விலக்கப்படவும், தமிழ் மீனவர்கள் தாக்கப்படுவது நிறுத்தப்படவும், 2009 இறுதிக்கட்ட போரில் அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்டது ஒரு இனப்படுகொலை, வரலாறு காணாத மனித உரிமை மீறல், ஒரு போர் குற்றம் என்று கூறி இலங்கை அரசு மீது உரிய நடவடிக்கை எடுக்கவும், இலங்கையில் சிங்களர்களுக்கு இணையாக ஈழத் தமிழர்களுக்கு அரசியல் சாசன ரீதியில் சம உரிமை வழங்கப்படவும், உரிய நீதி கிடைத்து, நிரந்தர அரசியல் தீர்வு கண்டு அமைதியான ஈழம் காணவும் குரல் கொடுப்பீர்கள் என்று 150 மில்லியன் உலகத் தமிழர்கள் சார்பாக இந்தியாவின் தமிழ் நாட்டு கல்லூரி மாணவர்கள் அமைப்புகள் பணிவுடன் கேட்டுக்கொள்கிறது. என்றும் உங்களது ஆசீரால், ஆன்மீக மற்றும் சமூகப் பணிகளால் இவ்வுலகம் புதுப்பிக்கப்பட வாழ்த்துகின்றோம். தங்களின் ஆசீர் வேண்டும். தமிழ்நாடு கல்லூரி மாணவர்கள் அமைப்பு (முகநூல்: loyolahungerstrike)
  16. தோழர்களே!!! அவசரம்!! லயோலா மாணவர்கள் தங்கள் உண்ணாவிரதத்தை கைவிட்ட பிறகு உடனேயே நெல்லையில் முதலாக உண்ணாவிரத அறப்போராட்டத்தை தொடங்கிய நெல்லை புனித சவேரியர் கல்லூரி மாணவர்களுக்கு தற்போது கல்லூரி நிர்வாகமும்,கல்லூரி முதல்வரும்,துறை தலைவரும் கல்வி சார்ந்த விடயங்களில் அந்த மாணவர்களுக்கு உரிமைகளை மறுத்து வருகின்றனர். போராட்ட காலத்தில் எழுதாமல் விடப்பட்ட தேர்வுகளுக்கு மறுதேர்வு நடத்த கோரி மாணவர்கள் விடுத்த கோரிக்கையை கல்லூரி நிர்வாகம் மறுத்துள்ளது. கல்லூரி முதல்வரிடம் மாணவர்கள் முறையிட்ட போது, அவர் கூறியது:: ”உங்கள் துறைத்தலைவர்(HOD) மறுதேர்வு நடத்த சம்மதித்தால் நான் மறுதேர்வு நடத்த அனுமதிக்கிறேன்” என்று கூறியுள்ளார்.. தங்கள் துறைத்தலைவரிடம் மாணவர்கள் இது பற்றி கேட்ட போது அவர் மழுப்பலாகவே பதிலளித்து வருகிறார். இதை காணும் போது கல்லூரி நிர்வாகமும், முதல்வரும், துறைத்தலைவரும் இணைந்து நடத்தும் நாடகமா?? என்ற சந்தேகம் மாணவர்கள் மனதில் எழுந்துள்ளது.பொதுவாகவே போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் எதிராக நிர்வாகம் செயற்படுவதாக தெரிகிறது.. தமிழீழ விடுதலை போராட்டத்தில் பங்கேற்ற மாணவர்களுக்கு அவர்களின் மறுதேர்வு எழுதி தங்கள் கல்வியை தொடரும் உரிமையை மீட்டுகொடுக்கும் கடமை நமக்கும் உள்ளது.. துறைத்தலைவரின் பெயர் :சேவியர் அந்தோனி (Xavier Antony) துறை: விஸ்காம் Viscom HOD தொடர்பு எண்: 9443997607.. இந்த எண்ணை தொடர்பு கொண்டு அந்த துறைதலைவரிடம் கனிவோடு பேசி மாணவர்களின் மறுதேர்வு எழுதும் உரிமையை அவர்களுக்கு மீட்டு கொடுக்குமாறும் முகநூல் தோழர்களிடம் கேட்டுக்கொள்கிறோம். (முகநூல்: loyolahungerstrike)
  17. உங்களுக்கே இது ஓவரா இல்லை. நான் உங்களுக்கு அக்கா இல்லை. தங்கை...
  18. மு.க.ஸ்டாலின் கொமடி!!!!!! டெசோ அமைப்பு தான் இலங்கை தமிழர் பிரச்சனையை உலக அரங்கிற்கு கொண்டு சென்றது. தமிழக மாணவர்கள் நடத்திய எழுச்சிமிகு போராட்டமும் இலங்கை தமிழர் பிரச்சனையில் உலக நாடுகள் தலையிட காரணமாக அமைந்தது. (முகநூல்: loyolahungerstrike)

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.