Everything posted by துளசி
-
இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணி! (ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும்.)
ஆந்திரா ஜோதி என்ற தெலுங்கு பத்திரிகையில் 02.04.2013 அன்று வந்துள்ள செய்தி.. Tamil Nadu students's Uprising!! - ANDRA JYOTHY Evils of Lanka!! - ANDHRA JYOTHY (முகநூல்)
-
இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணி! (ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும்.)
தமிழ் நாட்டு மாணவர்களுக்கு ஆதரவாக பெல்ஜியமில் நடந்த ஆர்ப்பாட்டம். 03-Apr-2004 புதன் அன்று மதியம் Antwerp Central Station முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை ஓருங்கிணைத்து அதற்கான அனுமதியை பெற்று கொடுத்தவர் என் அருமை பெல்ஜியம் நண்பர் Geert. இதற்கு முன்னால் ஒருமுறை கூடங்குளம் மக்களுக்கு ஆதரவாக நடந்த ஆர்பாட்டத்தில் இவருடன் கலந்துகொண்டேன். தமிழ் மக்களுக்கு ஆதரவாக பல நேரங்களில் உதவியாக இருப்பவர். தனி தமிழ் ஈழம் ஒன்றே குறிக்கோள் என்ற லட்சியத்துடன் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் பலர் கூடியிருந்தனர். என்னுடன் தமிழ் நாட்டை சேர்ந்த கார்த்திக் ராமன் கலந்து கொண்டார். We want - தமிழ் ஈழம், Our leader - பிரபாகரன், War Criminal - Srilanka President Rajabaksha, We Support - தமிழ் students போன்ற வாசகங்களை விண்ணை முட்டும் அளவிற்கு உரைத்து கொண்டிருதோம். நிச்சியமாக அங்கே கூடியிருந்த பெல்ஜியம் மக்கள் ஒரு நொடியாவது தமிழ் ஈழ மக்களின் வலியை புரிந்து கொண்டிருப்பார்கள். அவர்களாகவே முன்வந்து எங்கள் கோரிக்கைகளை கேட்டறிந்தார்கள். புலன்பெயர்ந்த தமிழ் ஈழ மக்கள் தமிழ் நாட்டு மாணவர்களுக்கு தங்கள் நன்றியை கண்ணீர் மல்க தெரிவித்தனர். ஈழம் கிடைத்து விடும் என்ற நம்பிக்கை வந்துவிட்டதாக சொன்னார்கள். ஒரு பெரியவர் எங்கள் கையை பிடித்து தமிழ் நாட்டு மாணவர்களுக்கு என் நன்றி என்று சொல்லி கண்ணீர் விட்டு அழுதார். பல நாட்களாக வறண்டு போயிருந்த என் கண்களிலும் கண்ணீர். மாணவர்கள் மட்டும் தான் எங்கள் ஒரே நம்பிக்கை என்று கூறினார். இந்த போராட்டத்தில் கலந்து கொண்டதற்கு நன்றி என்று சொன்னார். ஈழம் கிடைப்பதில் என் சுயநலம் அடங்கிருப்பதாக சொன்னேன். என்னவென்று கேட்டார். ஈழம் கிடைத்தவுடன் முதல் ஆளாக நான் immigration apply செய்வேன் என்று சொன்னேன். அதற்கு அவர், தமிழ் நாட்டு மக்களுக்கு விசா தேவையில்லை என்று சொன்னார். சில நாட்கள் முன் புதிய தலைமுறை தொலைகாட்சியில் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் சொன்னது "புலன்பெயர்ந்த தமிழ் மக்கள் அங்கே நன்றாக செட்டில் ஆகி விட்டார்கள். இனிமேல் அவர்கள் திரும்பி வரமாட்டார்கள்". இது முற்றிலும் பொய். நான் பேசிகொண்டிருந்த ஒவ்வொருவருடைய பேச்சிலும் மூச்சிலும் தமிழ் ஈழம் மட்டுமே இருந்தது. ஒவ்வொரு விடியலிலும் ஈழம் மலராதா என்று ஏங்குவதாக சொன்னார்கள். என் இனிய நண்பர் முருகதாஸ், 20 வருடங்களுக்கு மேலாக பெல்ஜியமில் வசிக்கிறார். சில நாட்களுக்கு முன்பு அவரிடம் proper document இல்லை என்று சொல்லி அவரை arrest செய்து ஸ்ரீலங்காவிற்கு நாடு கடத்த முயற்சி செய்தது பெல்ஜியம் ஆரசு. Geert அட்வைஸ் படி அவர் document submit செய்துள்ளார். இதனால் இன்னும் சில மாதங்களில் அவர்க்கு Citizenship கிடைக்கும். 20 வருடங்களாக இருந்த இவர் இதை எப்போதோ செய்திருக்கலாம். ஆனால் அவருடைய ஆசை என்றாவது ஒரு நாள் ஈழம் அமையும் என்று ஏங்கி கொண்டிருக்கிறது. ஆர்பாட்டம் முடிந்தவுடன் எங்களில் ஒரு சிலர் முருகதாசன் வீட்டிற்கு சென்று அடுத்த கட்ட போராட்டத்தை பற்றி விவாதித்து கொண்டிருந்தோம். நீண்ட நாட்களுக்கு பிறகு சரியான மனிதர்களோடு அரசியல் பேச முடிந்தது. அவர்களுடைய பேச்சில் இருந்து கலைஞர்(TESO ) மேல் அவர்களுக்கு சுத்தமாக நம்பிக்கை இல்லை என்று புரிந்தது. தமிழ் ஈழ மக்களோடு பெசிகொண்டிருப்பதால் நேரம் போவதே தெரியவில்லை, train miss செய்துட்டேன் . மணி என்ற நண்பர் என்னை Leuven வரை வந்து ட்ரோப் செய்தார். ஒரு மணி நேர பயணத்தில், பல போராட்ட கதைகளை என்னிடம் சொல்லிக்கொண்டே வந்தார். முன்பு திரு.வை.கோ பெல்ஜியம் வரும் பொது இவருடைய காரில், நான் அமர்ந்துள்ள இருகையில் தான் பயணித்தாராம். சீமான் மீது மிகுந்த மரியாதையை வைத்துள்ளார். சொந்தங்களை இழந்த மக்களிடமிருந்து எனக்கு புது சொந்தம் கிடைத்ததாக நினைகிறேன். Shenthilkumar Subburam (முகநூல்)
-
இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணி! (ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும்.)
பெல்ஜியத்தில் நடைபெற்ற போராட்டத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோ... (முகநூல்)
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
மெசோ அக்காவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்...
-
இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணி! (ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும்.)
இணையதள நண்பர்கள் இங்கே சென்று தமிழின விரோதி சன் குழுமத்தை கண்டிக்கலாம் facebook https://www.facebook.com/sunrisershyderabad twitter https://twitter.com/SunRisers (முகநூல்)
-
இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணி! (ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும்.)
புலம்பெயர் உறவுகளே கவனம். ஒருசிலர் தம்மை தமிழக உறவுகளாக கூறிக்கொண்டு பொது முகநூல் தளங்களில் புலம்பெயர் தமிழர்களுக்கெதிராக படு கேவலமாக கருத்தெழுதி வருகிறார்கள். அதை பார்த்து உணர்ச்சிவசப்பட்டு தமிழக உறவுகளுக்கெதிராக கருத்து வைத்து விடாதீர்கள். இது தமிழக மற்றும் புலம்பெயர் தமிழர்களை பிரிக்க சிலர் மேற்கொள்ளும் முயற்சி.
-
இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணி! (ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும்.)
இலங்கை வீரர்களின் படத்தை கூட விட்டு வைக்கவில்லை எங்கள் தமிழக உறவுகள். தமிழக உறவுகளே நன்றி... (முகநூல்)
-
இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணி! (ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும்.)
தமிழ் ஈழத்திற்காக மதுரை தானி (ஆட்டோ) ஓட்டுனர்கள் போராட்டம் இலங்கையில் தனி தமிழ் ஈழம் அமைய வேண்டும், ராஜபக்சேவை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தி தண்டனை பெற்றுத்தர வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சிகளும் தமிழ் இன உணர்வாளர்களும் வலியுறுத்தி வருகின்றனர். தமிழகம் முழுவதும் கல்லூரி மாணவர்களும் இந்த பிரச்சினையை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட் டனர். மதுரையில் இன்று ஆட்டோ டிரைவர்களும் இதே கோரிக்கைக்காக வேலை நிறுத்தம் மற்றும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். (முகநூல்)
-
இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணி! (ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும்.)
தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு சார்பாக கோவையில் வருகிற 20,21 தேதிகளில் நடைபெற இருக்கும் 'போர்குற்றமல்ல இனப்படுகொலையே.. இலங்கை அல்ல தனி தமிழீழமே ' என்ற மாபெரும் புகைப்பட ஓவிய கண்காட்சி , காணொளி திரைகாட்சி மற்றும் கருத்தருங்கினை ஏற்பாடு செய்வதில் மாணவர்கள் முழுவீச்சில் தங்களை ஈடுபடுத்திகொண்டுள்ளனர்.. இக்கண்காட்சியில் மாணவர்களின் கலை நிகழ்சிகளோடு கையெழுத்து இயக்கம் மற்றும் மாதிரி பொது வாக்கெடுப்பு நடத்த இருப்பது குறிப்பிடத்தக்கது. இக்கண்காட்சியின் நோக்கம் மாணவர் போராட்டத்தை மக்கள் போராட்டமாக மாற்றுவதோடு மட்டுமல்லாமல் தமிழீழம் பற்றிய விழிப்புணர்வை அனைத்து தரப்பு மக்களிடமும் கொண்டு சேர்ப்பதே ஆகும். இவன் தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு.. (முகநூல்: loyolahungerstrike)
-
இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணி! (ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும்.)
மனித சங்கிலி போராட்டம் தொடர்பான மேலும் சில படங்கள். (முகநூல்)
-
இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணி! (ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும்.)
மாணவர்களுக்கு ஆதரவாய் எட்டு கி.மீ மனித சங்கிலி போராட்டம். ஈழ மக்களின் நலனுக்காக வேண்டி முக்கிய கோரிக்கைகளை வைத்து கடந்த இரண்டு வாரங்களுக்கு மேல் போராடி வரும் மாணவர்களுக்கு ஆதரவாக இன்று மாலை பொது மக்களும் வியாபாரிகளும் மனித சங்கிலி போராட்டத்தை நடத்தினார்கள். சென்னை தரமணி டைடல் பார்க்கை அடுத்த எஸ்.ஆர்.பி நிறுத்தம் தொடங்கி பழைய மகாபலிபுரம் சாலையில் கோழிங்கநல்லூர் வரை தொடர்ந்து எட்டு கிலோ மீட்டர் நீளத்திற்கு இந்த போராட்டம் நடந்தது. பொது மக்கள் வியாபாரிகள், ஆட்டோ ஓட்டுனர்கள்,பள்ளி மாணவர்கள் சிறுவர்கள், பெண்கள் என்று பலரும் இந்த போராட்டத்தில் முனைப்போடு பங்கேற்றார்கள். இந்த மனித சங்கிலியில் ஐயா பழ. நெடுமாறன், வியாபாரிகள் சங்க தலைவர் வெள்ளையன், இயக்குனர்கள் புகழேந்தி தங்கராஜ், கௌதமன், மதிமுக நிர்வாகி பாலவாக்கம் சோமு, நாம் தமிழர் கட்சியின் செய்தி தொடர்பாளர் ஆவல் சீமான்,வேளச்சேரி மணிமாறன்,காஞ்சி ராஜன்,தசரதன், பிரபாகரன் உள்ளிட்ட பல நிர்வாகிகளும் பங்கேற்றார்கள்.ஈழத்திற்கு ஆதவாகவும் ராஜபக்சேவுக்கு எதிராகவும் முழக்கமிட்டபடி போராட்டம் நீண்டு நடந்து முடிந்தது. (முகநூல்)
-
இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணி! (ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும்.)
'IPL' சன் ரைசஸ் அணியிலிருந்து இனப்படுகொலை நாடான இலங்கை வீரர்களை வெளியேற்ற கோரி சன் தொலைக்காட்சி அலுவலகம் நாளை மாணவர்களால் முற்றுகை .. Date: 04.04.2013 Place: Murasoli Maran Towers 73, MRC Nagar Main Road, MRC Nagar, Chennai - 600 028 (முகநூல்)
-
இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணி! (ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும்.)
தமிழ் ஈழ விடுதலைக்காக சென்னை செம்பரம்பாக்கம் சாஸ்தா பொறியியல் கல்லூரி மாணவர்களின் கருப்பு அடையாளப் போராட்டம்… (முகநூல்) கல்லூரிகள் திறப்பு: கறுப்பு பேட்ஜ் அணிந்து வந்தனர் மாணவர்கள் மாணவர்கள் நடத்திய போராட்டங்களால் மூடப்பட்டிருந்த தமிழகத்தின் அனைத்துக் கல்லூரிகளும் இன்று திறக்கப்பட்டன. இருப்பினும் எதிர்ப்புகளை தொடர்ந்து தெரிவிக்கும் வகையில் கருப்பு பேட்ஜ் அணிந்து வகுப்புகளுக்கு சென்றனர் மாணவர்கள். அப்பாவித் தமிழர்களைக் கொன்று குவித்த இலங்கை அதிபர் ராஜபக்சவைப் போர்க்குற்றவாளியாக அறிவிக்க வேண்டும், இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கல்லூரி மாணவர்கள் தமிழகம் முழுவதும் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர். மாணவர்களின் இந்த எழுச்சி போராட்டங்களால், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், கடந்த மார்ச் 15-ஆம் தேதி முதல் காலவரையின்றி மூடப்பட்டன. இதேபோல் பொறியியல் கல்லூரிகளுக்கும், மார்ச் 18-ஆம் தேதி முதல் விடுமுறை அளிக்கப்பட்டது. நடப்பாண்டிற்கான இறுதி தேர்வுகள் நெருங்கி வருவதாலும், மாணவர்களின் கல்வி பாதிக்கப்படாமலும் இருக்க, தமிழகத்தில் மூடப்பட்ட அனைத்துக் கல்லூரிகளும், இன்று திறக்கப்பட்டன. அப்போது வகுப்புகளுக்கு வந்த மாணவர்கள், தங்களின் எதிர்ப்புகளை தொடர்ந்து பதிவு செய்யும் வகையில் கருப்பு பேட்ஜ் அணிந்து வந்தனர். இறுதித் தேர்வுகள் முடியும் வரை தொடர்ந்து கருப்பு பேட்ஜ் அணிந்து வருவது என்றும், அடுத்த கட்டப் போராட்டங்கள் குறித்து மாணவர் அமைப்பினருடன் கலந்து பேசிய பின்னர் முடிவு செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும், தினமும் ஒரு கல்லூரி வீதம் கருப்பு பேட்ஜ் போராட்டம் நடைபெறும் என்றும் மாணவர் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. http://puthiyathalaimurai.tv/tn-colleges-reopened
-
இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணி! (ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும்.)
ஈழத்தமிழர் விவகாரம் காரணமாக கால வரையற்று மூடப்பட்டு இருந்த அனைத்து பொறியியல் கல்லூரிகளும் இன்று. திறக்கப்பட்டன. மாணவர்களின் போராட்டத்தால் மொத்தமாக 15 நாள் விடுமுறை விடப்பட்டு இருக்கிறது. பாடங்கள் எதுவும் எடுத்து நடத்தி முடிக்கப்படவில்லை. தேர்வுகளும் நெருங்கி விட்டன . ஆக இந்த 15 நாள் விடுமுறையை ஈடுகட்ட இன்று முதல் தினம் 9 மணி நேரம் கல்லூரிகள் இயங்கும் என்றும், சனி, ஞாயிறு விடுமுறை கூட கிடையாது என்றும் கல்வித்துறை அறிவித்து இருக்கிறது . இது ஒருபக்கமானாலும், மறுபக்கம் இன்று கல்லூரி வந்த மாணவர்கள் அனைவரும் 'கருப்பு பேட்ஜ்' அணிந்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. (முகநூல்)
-
இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணி! (ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும்.)
தமிழினத்திற்கு மரணம் தான் முடிவா? வாக்காளர் அடையாள அட்டைகளை தீயிலிட்டு கொளுத்திய மாணவர்கள் "தனி தமிழ் ஈழம் வேண்டும்". உலக அளவில் பரந்து விரிந்து கிடக்கும் ஈழத் தமிழ்ர்களிடம் பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் போன்ற கோரிக்கைளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மாணவர்கள் போராட்டம் தீவிரமடைந்து நடந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் கடலூர் மாவட்ட மாணவர்கள் பல கட்ட போராட்டங்களை நடத்தி உள்ளனர். புதன் கிழமை இன்று (03/04/2013) விருத்தாசலம் பேருந்து நிலையம் முன்பு திரண்ட மாணவர்கள் இந்திய அரசே.. மரணம் தான் முடிவா தமிழினத்திற்கு.. வாக்காளர் அடையாள அட்டை இனி எதற்கு என்று தங்களுடைய வாக்காளர் அடையாள அட்டையை தீயிலிட்டனர் இந்த போராட்டம் மீண்டும் அடுத்த வடிவம் பெறும். தமிழ் ஈழம் பெறும் வரை மாணவர்கள் போராட்டம் ஓயாது என்றனர் போராட்ட மாணவர்கள். (முகநூல்) ------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------ தமிழீழமும் மாணவர் கடமையும்... கருத்தரங்கம்...5-4-2013, வெள்ளி மாலை 3.00 மணிக்கு ,காயத்ரி மகால், காங்கயம் சாலை,வேலன் ஓட்டல் எதிரில்... திருப்பூர். தவறாது வருக. (முகநூல்: loyolahungerstrike)
-
இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணி! (ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும்.)
நடிகர்களின் உண்ணாவிரதத்தில் பல குறைகள் இருப்பதாக பலர் முகநூலில் தெரிவித்துள்ளார்கள். எவ்வாறாயினும் நடிகர்கள் உண்ணாவிரதமிருப்பது நிச்சயம் மாணவர் போராட்டத்துக்கு ஒரு பிரச்சாரமாக அமையும். எனவே அவர்கள் உண்ணாவிரதம் வரவேற்கப்பட வேண்டிய ஒன்றே...
-
இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணி! (ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும்.)
நடிகர்களின் உண்ணாவிரதத்தில் மாணவன் ஜோ. பிரிட்டோவின் உரை..
-
இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணி! (ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும்.)
போர்க்குற்றத்தில் ஈடுபட்ட இலங்கை தண்டிக்கப்பட வேண்டும்: நடிகர்கள் ஆவேசம் இலங்கை தமிழர்களுக்காக உண்ணாவிரதம் இருந்த நடிகர்கள் தெரிவித்த கருத்து வருமாறு:- விஷால்:- இலங்கையில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு உரிமைகள் கிடைக்க வேண்டும். மத்திய அரசு இதில் தலையிட்டு தமிழர்களின் மறுவாழ்வுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். போர்க்குற்றத்தில் ஈடுபட்டவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். நாசர்:- இலங்கை தமிழர்களுக்காக உலகம் முழுவதும் மக்கள் ஆதரவு கரம் நீட்டி வருகின்றனர். நடிகர் சங்கமும் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளது. இலங்கை தமிழர்களின் கோரிக்கையான தமிழ் ஈழம் எப்போதோ அமைந்து இருக்க வேண்டும். இவ்வளவு உயிர்ச் சேதம் ஏற்பட்ட பிறகும் அவர்கள் கோரிக்கை நிறைவேறாதது வருத்தம் அளிக்கிறது. இந்த எழுச்சி உலகத்தின் காதுகளில் விழும். இனியாவது விடியல் ஏற்படட்டும். பிரகாஷ்ராஜ்:- மனிதர்களின் அடிப்படை உரிமையை பறிப்பதற்கு எவருக்கும் உரிமை இல்லை. இலங்கையில் நடந்துள்ளது மோசமான செயல்பாடுகள். தமிழ் இனம் அழிக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிராக மாணர்கள் நடத்தும் போராட்டத்தை விட்டுவிட வேண்டும். இலங்கை மக்களுக்கு விடியல் ஏற்படட்டும். இலங்கை பிரச்சினை தொடர்பாக தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை மத்திய அரசு ஏற்று செயல்படுத்த வேண்டும். அதுவரை போராட்டம் நீடிக்கும். கோவை சரளா:- இலங்கை தமிழர் பிரச்சினையில் மத்திய அரசு தலையிட தமிழகம் முழுவதும் மக்கள் ஒன்றிணைந்து போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். உரிமைக்காகவே இப்போராட்டம், ஈழ தமிழ் மக்களுக்கு விடிவு ஏற்பட வேண்டும். பரத்:- இலங்கை தமிழர்கள் நம் உடன்பிறப்புக்கள். அவர்கள் எந்த வகையிலும் பாதிக்கப்படக்கூடாது. மத்திய அரசு தலையிட்டு மறுவாழ்வுக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு தெரிவித்தனர். http://www.paristamil.com/tamilnews/view-news-MjYwNTc4MjYw.htm#.UVt-wjeG2Qs
-
இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணி! (ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும்.)
அண்ணாமலைப் பல்கலை மாணவர்கள் உண்ணாவிரதம் திருச்சியில் கல்லூரி மாணவர்கள் அரசியல் கட்சியினரால் தாக்கப்பட்டதை கண்டித்து அண்ணாமலைப் பல்கலைக்கழக கலை, அறிவியல் மற்றும் வேளாண் புல மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்தனர். பின்னர் மாணவர்கள் சுமார் 50 பேர் அண்ணாமலைநகர் பூமா கோயில் முன்பு ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் மாலை 5 மணிக்கு பேராசிரியர் செல்லப்பன் உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார். (முகநூல்: loyolahungerstrike)
-
இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணி! (ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும்.)
(முகநூல்)
-
இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணி! (ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும்.)
ஈழ விடுதலைக்கான போராட்டம்: இடம்: பெங்களூர் நாள் : ஏப்ரல் 6,சனிக்கிழமை அன்பார்ந்த நண்பர்களுக்கு: ஈழத்தில் நடந்த இனப்படுகொலைக்கு நியாயம் கேட்டு வருகிற ஏப்ரல் முதல் வாரத்தில் பெங்களூரில் ஒரு கவன ஈர்ப்பு போராட்டத்தை முன்னெடுக்கலாம் என்று நண்பர்கள் பலரோடு கடந்த வாரங்களில் விவாதித்து வந்தோம்.எந்த வகையில் போராட்டத்தை முன்னெடுக்கலாம் என்று விவாதித்த போது, ஏற்கனவே ஏப்ரல் 6ஆம் தேதி பெங்களூர் தமிழ் மக்கள் சார்பாக, ஈழ மக்களுக்கான ஒரு வலுவான போராட்டம் முன்னெடுக்கப் படுவதாக தகவல் அறிந்தோம். அன்றைய போராட்டத்தை முன்னெடுக்க அய்யா பழ. நெடுமாறனும், வைகோவும் பெங்களூருக்கு வரவிருக்கிறார்கள். நம் நோக்கம் கோரிக்கை எல்லாம் ஒன்று தான். அது ஈழ மண்ணில் கடந்த அறுபது ஆண்டுகளாக,சிங்களனின் தொடர் அடக்குமுறைக்கு உள்ளாகி வரும், எம் உறவுகள் அனைவரும்,சிங்களனின் அடக்குமுறைகளில் இருந்து விடுபட்டு, தங்களுக்கான, சுதந்திர தமிழீழ தாயகத்தை அமைத்து கொள்ள, சர்வதேச நாடுகள் உதவியுடன் பொது வாக்கெடுப்பு ஒன்று நடத்த பட வேண்டும். ஏப்ரல் 6ஆம் தேதி பெங்களூரில் முன்னெடுக்கப்படும் போராட்டத்தின் கோரிக்கையும் அதுவே என்பதால்,தனித் தனியாக போராட்டத்தை முன்னெடுப்பதற்கு பதிலாக, நண்பர்களின் ஆலோசனை படியே, நாமும் அந்த போராட்டத்தில் கலந்து கொண்டு, போராட்டத்தை வலுப்பெற செய்வது தான் மிகச்சரியாக இருக்கும் என்று எண்ணுகிறோம். உணர்வுள்ள தமிழர்கள் அனைவரும் அந்த போராட்டத்தில் கலந்து கொண்டு, போராட்டத்தை வலுப்பெற செய்வது, தமிழர்கள் நம் ஒவ்வொருவரின் கடமையாகும். போராட்டம் வார இறுதி நாளான சனிக்கிழமை என்பதால், சாக்கு போக்குகளை தவிர்த்து விட்டு களம் காணுவோம். போராட்ட இடமும்,நேரமும் இன்னும் முடிவு செய்யப்படவில்லை.முழுமையான தகவல் தெரிந்தவுடன் உங்களோடு பகிர்ந்து கொள்ள ஆவலாய் இருக்கிறோம். தயாராகுங்கள் நண்பர்களே! பெங்களூரில் இப்படி ஒரு நிகழ்வு நடக்கிறது என்பதே பலருக்கு தெரியாமல் இருக்கிறது. எனவே தயவு செய்து நண்பர்களே! இந்த செய்தியை பகிர்ந்தால், பலர் வந்து கலந்து கொள்ள உதவியாக இருக்கும். நன்றி! பெங்களூர் தமிழ் நண்பர்கள். பொறியாளர். ஆன்டனி வளன் (முகநூல்)
-
இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணி! (ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும்.)
students will wear black band on 3rd april & attend colg demanding indian govt to remove 13 srilankan players from IPL team,,,,,,,,,pls forward nd share it....!!!!!! (முகநூல்)
-
இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணி! (ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும்.)
மாணவர்களை தொடர்ந்து தற்பொழுது பொதுமக்களும் தமிழீழ போராட்ட களத்தில்.... தமிழீழ இன படுகொலையை கண்டித்து பொதுமக்கள் சார்பாக நாளை (03.04.2013) மாலை SRP Tools முதல் OMR சாலையில் மனித சங்கிலி போராட்டம், OMR சாலையில் வேலை செய்யும் தகவல் தொழல் நுட்ப பணியாளர்கள் மற்றவர்களும், வாய்ப்பு உள்ளவர்கள் தவறாமல் கலந்து கொள்ளவும், முடிந்தால் செய்தியை மற்றவர்களுக்கு பகிரவும்...... மனித சங்கிலியில் கலந்து கொண்டு தமிழீழதிற்கான நமது ஆதரவினை பதிவு செய்வோம் ! (முகநூல்)
-
இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணி! (ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும்.)
மீண்டும் கல்லூரிகள் திறக்கபடுகின்றன . மாணவர்கள் , அவரவர் உள்ளூர் நிலைமைகளுக்கு , ஏற்ப அமைதி அறவழி போராட்டங்களை சிந்தியுங்கள் . கல்லூரி மாணவர்கள் மற்றும் மாணவியர் அனைவரிடமும் ஆதரவு தர கோரி பேசுங்கள் , நிச்சயம் அனைவரும் ஆதரவு தருவார்கள். இரண்டு நிமிடம் அமைதி என்பது செய்ய கூடியவர்கள் செய்யட்டும் . அதை விட , கல்லூரி வளாகத்திற்கு முன் , சாலையோரத்தில் யாருக்கும் எந்த வித இடைஞ்சல் இல்லாமல் , மாணவர் சங்கிலி கைகோர்ப்பு என்று ஒவ்வொரு கல்லூரிக்கும் முன்னர் ஏன் செய்ய கூடாது ? கல்லூரிக்குள் இரண்டு நிமிட அமைதி போராட்டம் அது கல்லூரி மாணவர்களிற்கு மட்டுமே தெரியும் , கல்லூரிக்கு வெளியே இப்படி அமைதியான சங்கிலி கோர்வையை மாணவர்கள் ஒழுங்கு அமைத்தால் மட்டுமே அது பொது மக்களின் மனதை உலுக்கும். ஒவ்வொரு போராட்டத்தையும் வெகு ஜன செய்தியாக்குங்கள் .: (முகநூல் : loyolahungerstrike)
-
இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணி! (ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும்.)
Vicky Pillai தமிழ் ஈழம் ஒன்றே குறிக்கோள். தோழர்களே மன்றாடி கேட்டுக்கொள்கிறேன் தயவு செய்து உங்கள் முகநூலின் சுயவிவர படமாக loyola hunger strike, சுயவிவர படத்தை பாவிக்கவும், தமிழ் ஈழம் காணும் வரை உங்களின் சொந்த சுயவிவர படத்தை பாவிப்பதை தவிர்க்கவும். எல்லோரும் ஒரே குரல் கொடுப்பது போல், ஒரே சுயவிவர படத்தை பயன் படுத்துவோம், முடிந்த அளவுக்கு உங்களின் நண்பர்களையும், உறவினர்களையும் மாற்ற செய்யுங்கள், தமிழ் இன ஒற்றுமை ஓங்குக ஒற்றுமையை உலகத்துக்கு வெளிபடுத்துவோம். சுய விவர படத்தை மாற்ற உதவி தேவைபடுபவர்கள் அணுகலாம் நன்றி. please share. --------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- வணக்கம் நண்பர்களே. நாளை காலை 9மணிக்கு சென்னை எழில் நகரில் உள்ள தீயணைப்பு நிலையம் அருகில் ஆர்பாட்டம், போரட்டம் எழில் நகர் வியாபரிகள் மற்றும் ஆட்டோ ஒட்டுநர்கள் தலைமையில் நடைபெற உள்ளது. காலை 9 மணி அளவில். (முகநூல் : loyolahungerstrike)