Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

துளசி

கருத்துக்கள பார்வையாளர்கள்
  • Joined

  • Last visited

Everything posted by துளசி

  1. இலங்கை பொருட்களை புறக்கணிப்போம். சென்னையில் கையெழுத்துப் பரப்புரை. இலங்கை பொருட்களை புறக்கணிப்போம் என்ற பரப்புரை தமிழர் பண்பாட்டு நடுவம் சார்பில் இன்று மெரீனா கடற்கரையில் மேற்கொள்ளப்பட்டது . தற்போது தமிழகத்தில் பெரும்பாலான கடைகளில் இலங்கையில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட பிஸ்கட் , இனிப்புகள் , பழங்கள் , இறைச்சி , பருத்தி ஆயத்த ஆடைகள் முதலிய பொருட்கள் விற்பனைக்கு வந்துள்ளது . குறிப்பாக இந்திய அரசு இலங்கைக்கு வரிச் சலுகை அளித்த பின்பு , இலங்கையில் இருந்து நிறைய பொருட்கள் தமிழக சந்தைக்கு வந்த வண்ணம் உள்ளது . இதனால் இலங்கை பொருளாதாரம் பலம்பெரும் வாய்ப்பு உள்ளது . இவ்வாறு இலங்கையின் பொருளாதாரம் பலம்பெற்றால் , இலங்கை அரசு மென்மேலும் ஆயுதம் வாங்கிக் குவிக்க அந்த பணத்தை செலவிடும் . மேலும் இலங்கை ராணுவத்திற்கு இந்த பணம் பயன்படும். ஏற்கனவே தமிழர் பகுதிகளில் இலங்கை ராணுவம் நிரந்தர முகாமிட்டு தமிழர்களுக்கு கொடும் துன்பம் இழைக்கிறது. இந்த நிலையில் இலங்கையின் ஏற்றுமதி பெருகினால் அது இலங்கைக்கு நன்மையை பயக்குமே அன்றி தமிழர்களுக்கு நன்மை பயக்காது . அதனால் இலங்கையின் ஏற்றுமதி சந்தையை முடக்குவது தான் இலங்கையின் மீதான பொருளாதாரத் தடையை வலுப்படுத்தும் என்ற அடிப்படையில் , இலங்கையின் உற்பத்தி பொருட்களை தமிழக தமிழர்கள் யாரும் வாங்க வேண்டாம் என்ற பரப்புரையில் தமிழர் பண்பாட்டு நடுவம் ஈடுபட்டது . ஏற்கனவே இதுபோன்ற பல பரப்புரையில் நாம் ஈடுபட்டிருந்தாலும் , இம்முறை தமிழக மக்களுக்கு நல்லதொரு விழிப்புணர்வை கொடுக்க முடிந்தது. இலங்கையில் இருந்து தயாரித்து வரும் சில திண்பண்டங்களை நாம் கையில் எடுத்துக் கொண்டு போய் மக்களிடம் காட்டினோம். அதை அவர்கள் வாங்கக் கூடாது என்று அறிவுறுத்தினோம், மேலும் 'இலங்கை தயாரிப்பு' என்ற எந்த பொருட்களில் எழுதப்பட்டிருந்தாலும் அவற்றை தமிழர்கள் வாங்கக் கூடாது என்ற பரப்புரை செய்தோம். தமிழர்களுக்கு மட்டும் இந்த செய்தி சேரவில்லை. இந்தியாவில் இருந்து வந்த பிற மாநில மக்களுக்கும் இந்த செய்தியை கொண்டு சேர்த்தோம். பிற மாநிலத்தவர்களும் இனப் படுகொலை செய்த இலங்கையை புறக்கணிப்பதாக உறுதி அளித்தனர். இலங்கை சேவைகள் மற்றும் பொருட்களை புறக்கணிப்போம் என்று அவர்கள் கையெழுத்து மூலம் நமக்கு உறுதி அளித்தனர். ஆயிரக்கணக்கான மக்களுக்கு இது குறித்த தகவல் அடங்கிய துண்டறிக்கைகள் விநியோகம் செய்யப்பட்டது. மக்கள் அனைவரும் ஆர்வமுடன் கையெழுத்து பரப்புரைக்கு ஆதரவு அளித்தனர். காவல்துறையும் நமக்கு பெரும் பிரச்சனையாக இல்லை. மொத்தத்தில் இந்த இலங்கைக்கு எதிரான பரப்புரை பெரும் வெற்றி பெற்றது. இந்த பரப்புரையில் கலந்து கொண்ட தோழர்கள் அனைவருக்கும் நமது மனமார்ந்த நன்றிகள். Rajkumar Palaniswamy (முகநூல்)
  2. "எனது பல ஆண்டுகள் ஆசிரியர் அனுபவதில்.... போராடும் மாணவர்கள் எப்பொழுதும் நன்றாக படிப்பவர்களாக, அதிக மதிப்பெண்களை பெறுபவர்களாக உள்ளனர். அதனால் மாணவர்கள் தொடர்ந்து போராடினால் அவர்கள் படிப்பு பாழாகி விடும் என்று 'அரசியல்வாதிகள்' சொல்வது உண்மை அல்ல!" சென்னை பல்கலை கழக தமிழ்துறை தலைவர் பேராசிரியர் வீ.அரசு ( புதிய தலைமுறை டிவியில்..) (முகநூல்)
  3. இன்று மாறன் குடும்பத்தின் சன் ரைசர்ஸ் அணியிலிருந்தும் ,சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியிலிருந்தும் இலங்கை வீரர்களை வெளியேற்றக்கோரி மாணவர்கள் மெரீனா கடற்கரையில் 'உழைப்பாளர் சிலை' முன் மேற்கொண்ட போராட்ட படங்கள். (முகநூல்)
  4. தோழர்களே ! நாளை ஞாயிறு மாலை 4.00 மணிக்கு சென்னை மெரீனா கடற்கரையில் (கண்ணகி சிலை அருகே) இலங்கை உற்பத்தி பொருட்களை புறக்கணிப்போம் என்ற கையெழுத்து பரப்புரை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளோம். தமிழகமெங்கும் இலங்கை பொருட்கள் இந்திய அரசின் உதவியோடு விற்பனைக்கு வந்துள்ளது . இது குறித்து பொது மக்களுக்கு நாம் விழிப்புணர்வு கொடுக்க வேண்டியுள்ளது. இலங்கையின் பொருளாதாரத்தை முடக்குவதும் நாம் தொடுக்கும் ஒரு வகையான போர் என்பதை உணர்ந்து இலங்கைக்கு எதிரான பரப்புரையில் ஈடுபடுவோம். விருப்பமுள்ள தோழர்கள் இந்த பரப்புரையில் பங்கேற்க வாருங்கள். தொடர்புக்கு : 9566224027 Rajkumar Palaniswamy (முகநூல்)
  5. நேற்று கைது செய்யப்பட மாணவர்கள் மீது இமிகிரேஷன் அலுவலகம் மீது தாக்குதல் மற்றும் கலால்துறை அலுவலகம் மீது தாக்கியது என இரண்டு வழக்குகளை புதுவை காவல் துறை பதிவு செய்தது , இன்று சிறையிலிருந்து அழைத்து வரப்பட்டு நீதி மன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர் , முதன்மை நீதித்துறை நடுவர் அவர்களை 15 நாள் நிதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். அதை தொடர்ந்து காலாப்பட்டு மத்திய சிறைக்கு மூவரையும் அழைத்து சென்றனர். (முகநூல்)
  6. (முகநூல்) -------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- இன்று மாறன் குடும்பத்தின் சன் ரைசர்ஸ் அணியிலிருந்தும் ,சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியிலிருந்தும் இலங்கை வீரர்களை வெளியேற்றக்கோரி மாணவ ஒருங்கிணைப்பாளர் பிரபாகரன் தலைமையில் 50 க்கும் மேற்ப்பட்ட மாணவர்கள் மெரீனா கடற்கரையில் 'உழைப்பாளர் சிலை' முன் அமைதி வழியில் போராட்டம் நடத்தினர். மாணவர்கள் தங்கள் வாயில் கருப்பு துணி அணிந்து அறப்போராட்டத்தில் ஈடுபட்டனர். சில மாணவர்கள் ஈழ மக்களின் துயரை வெளிக்காட்ட தலையிலும் கையிலும் கட்டுக்கட்டியபடி போராட்டத்திற்கு வந்திருந்தனர். மாணவர்கள் எந்த கோஷமும் எழுப்பாமல் அமைதி வழியில் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். அவர்களுக்கு தமிழ் மக்களின் சார்பில் உள்ளம் கனிந்த நன்றிகள்! (முகநூல்) ------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------ புதுவையில் தொடர் போராட்டதை நடத்தியும் ,மாணவர்களின் போராட்டத்தை வழிநடத்திய சட்டகல்லூரி மாணவர்கள் கௌதம பாஸ்கரன் ,பிரபு , பீமாராவ் , மாணவர் கூட்டமைப்பு சாமிநாதன் ஆகியோர் நேற்று (05.04.13) காவல்துறையால் கைது செய்யப்பட்டு 15 நாள் நீதிமன்றகாவலில் அடைக்கப்பட்டனர் , மேலும் 11 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டனர். ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக மத்திய அரசை எதிர்த்து தூர்தஷன் வானொலி நிலையத்தை முற்றுகையிட்டு அடித்து நொறுக்கினர். ஏற்கனவே கலால்துறை அலுவலகம் , இமிகிரேஷன் அலுவலகம், தந்தி தொலைத்தொடர்பு அலுவலகம், தபால் தந்தி அலுவலகம் என அனைத்து மத்திய அரசு அலுவலகங்களையும் அடித்து நொறுக்கி சேதப்படுத்தினர். இதனால் காவல்துறை போராட்டத்தை முன்னின்று நடத்தும் சட்டகல்லூரி மாணவர்களான கௌதம பாஸ்கரன், தமிழ் இளைஞர் கூட்டமைப்பு விழுப்புரம் பிரபு , மாணவர் கூட்டமைப்பு சுவாமிநாதன் ஆகியோரை குறி வைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. படத்தில் : தோழர் முனைவர் கௌதமன் . மாணவர் போராட்டங்களை அடக்குமுறையால் ஒடுக்க நினைக்கும் அரசுகளுக்கு எமது கடும் கண்டனங்கள் !! (முகநூல்)
  7. சென்னையில் காங்கிரஸ் கட்சியினரால் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டியும்- அதற்க்கு பதில் அளிக்கும் விதத்தில் மாணவர்களால் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டியும்... காங்கிரஸ் கட்சியின் சுவரொட்டி. மாணவர்கள் பதில் (முகநூல்)
  8. தனித்தமிழ் ஈழமே நிரந்திர தீர்வு! மாணவர்களின் கலந்தாய்வு கூட்டத்தில் தீர்மானம்! தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த அனைத்து சட்ட கல்லூரி மாணவர்களின் கலந்தாய்வு கூட்டம் 04.04.2013 அன்று சென்னையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தின் நிறைவில் 5 அம்ச தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாக சட்டக் கல்லூரி மாணவர் ஆர்.முருகானந்தம் தெரிவித்தார். இலங்கையில் நடந்தது திட்டமிட்ட இன படுகொலை. அதற்கு நமபத்தகுந்த சுதந்திரமான சர்வதேச விசாரணை நடத்தி ராஜபக்சே உட்பட அவருக்கு துணையாக இருந்த அனைவரையும் தண்டிக்க வேண்டும். தனித்தமிழ் ஈழமே நிரந்திர தீர்வு. அதற்கு ஐ.நா. சபை சார்பாக பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும். இலங்கை அரசின் மீது இந்தியா பொருளாதாரத் தடை விதிக்கும் அதே சூழ-ல் இலங்கை அரசு உடனான அனைத்து உறவுகளையும் துண்டிக்க வேண்டும். தமிழக மீனவர்கள் மீதான இலங்கை இராணுவத்தின் தொடர் தாக்குதலை நிறுத்தும் அதே வேளையில் கட்சத்தீவை மீட்டு எடுக்க வேண்டும். தமிழ் ஈழ வரலாற்றை தமிழ்நாட்டு மாணவர்களின் பாடநூல்களில் சேர்க்க வேண்டும். இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாக தெரிவித்தார். (முகநூல்: loyolahungerstrike)
  9. நேற்றைய செய்தி என்று நினைக்கிறேன். தமிழ்நாட்டு மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து மூன்று அம்சக் கோரிக்கையை முன்வைத்து அவுஸ்திரேலியாவின் பேர்த் மாநகரில் இரண்டு வெள்ளை இனத்தவர்கள் 24 மணி நேர உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரி தஞ்சமடைந்து தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பல ஈழத் தமிழர்களுக்கு பல்வேறு உதவிகளை வழங்கிவரும் Christine Ophius மற்றும் சிங்கள இனவாத அரசுக்கெதிராக பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வரும் Garry Holiday ஆகியோரே இவ் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பேர்த் நேரப்படி இன்று மாலை 6 மணிக்கு ஆரம்பித்த அடையாள உண்ணாவிரதம் நாளை மாலை 6 மணிக்கு நிறைவடையும். உண்ணாவிரதம் ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே உண்ணாவிரதம் ஆரம்பித்த இருவர்களுடனும் இணைந்து பத்துக்கும் மேற்பட்டோர் உண்ணாவிரதம் இருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. உண்ணாவிரதம் இருக்கும் Christine Ophius மற்றும் Garry Holiday ஆகியோரின் கோரிக்கைகளாவன: 1. மனித குலத்துக்கெதிரான போரை நடத்தி போர்க்குற்றம் புரிந்தவர்களை சர்வதேச விசாரணைக்குட்படுத்தி தண்டிக்க வேண்டும். 2. இலங்கை மீது பொருளாதரத் தடை விதிக்கவேண்டும். 3. தமிழர்களின் விருப்பத்தை அறிய பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். (முகநூல்)
  10. இன்று (05.04.2013) வெள்ளி காலை 11.30 மணியளவில் நாமக்கல் மாவட்டம் திருச்சங்கோடு தபால் நிலையத்தில் ரயில் முன்பதிவு செய்யும் எந்திரத்தை முன்னாள் மத்திய அமைச்சர்,காந்திசெல்வன் திறந்து வைத்துப் பேசிக் கொண்டிருந்தபோது தமிழீழ ஆதரவு மாணவர்கள் கூட்டியக்கத்தைச் சார்ந்த நாங்கள், தபால் நிலையத்தை இழுத்துப் பூட்டி அமைச்சரை சிறை பிடித்தோம். பிறகு மத்திய அரசைக் கண்டித்து முழக்கமிட்டோம். சாலை மறியலிலும் ஈடுபட்டோம். காவல் துறையினர் எங்களிடம் கெஞ்சிக் கேட்டு சாவியை வாங்கி அமைச்சரை விடுவித்தனர். அதன் பிறகு அமைச்சர் எங்களிடம் பேச முற்பட்டார். நாங்கள் அதற்கு இடம் அளிக்காமல் முழக்கமிட்டோம். அவமானப் பட்ட அமைச்சர் தனது சகாக்களோடு அவ்விடத்தை விட்டுச் சென்றார். தி.மு.க.தமிழீழ மக்களுக்கு செய்த துரோகத்தை மாணவர்கள் நாங்கள் மன்னிக்கவோ, மறக்கவோ,மாட்டோம்.என்பதை இப்போராட்டத்தின் மூலம் தமிழகத்திற்கு உணரச்செய்துள்ளோம். http://www.facebook.com/photo.php?v=124820974376111&set=vb.100005446268820&type=2&theater (முகநூல்)
  11. புலிக் கொடியுடன் இலண்டன் நகரை உலுக்கிய தமிழர்கள். கடும் குளிரின் மத்தியிலும் மீண்டும் ஒருமுறை அலைகடலாய் திரண்டு தமது உணர்வுகளை, ஈழத்தின் மீதான அசைக்க முடியாத பற்றுறுதியை உலகிற்கு எடுத்துக்காட்டிய பிரித்தானிய தமிழர்கள். லண்டனில் நடைபெற்ற இந்த மாபெரும் எழுச்சிப் பேரணியில் சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பங்கேற்றனர் . தமிழீழத்திற்கான பொது வாக்கெடுப்பு நடாத்தக்கோரியும், 65 ஆண்டுகால இன அழிப்பிற்கு நீதி வழங்கும் வகையில் ஐ.நா. சர்வதேசசுயாதீன விசாரணையை நடாத்த வலியுறுத்தியும், இன்று லண்டனில் மாபெரும் ஆர்ப்பாட்டம் பேரணி இடம்பெற்றது. பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்ட இவ் ஆர்ப்பாட்டப் போரணி இன்று பி.ப 2:30 மணிக்கு ரவல்கர் சதுக்கத்தில் இருந்து புறப்பட்டு பிரித்தானியப் பிரதமரின் இல்லம் முன்பாக ஆர்ப்பாட்டத்தோடு பி.ப 4:00 மணிக்கு நிறைவடைந்தது. இப் பேரணியில் கலந்து கொண்டு மக்கள் முன்னிலையில் தென்னிந்திய தமிழ் திரைப்பட இயக்குனரும், தமிழீழ ஆதரவாளருமான பாரதிராஜா அவர்கள் சிறப்புரையாற்றினார். (முகநூல்)
  12. இலங்கை அரசுக்கு எதிராக சென்னையில் மார்ச் 19 ஆம் திகதி திரைப்பட இயக்குனர் அமீர் தலைமையில் நடந்த உண்ணாவிரதம் தொடர்பான வீடியோ. http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=94756
  13. Kollywood gathers at T Nagar Apr 02, 2013 As planned, the K-Town actors staged a hunger strike today, 2nd April, against the Sri Lankan Government, at the Nadigar Sangam office, T Nagar. The protest was attended by industry biggies including, Rajinikanth, Kamal Haasan, Ajith, Suriya, Karthi, Dhanush, Simbu, Vikram, Arjun, Arya, Vishal, Jiiva, Bharath, Jayam Ravi, Srikanth, Ameer, Sathyaraj, Sarath Kumar, Vijay Kumar, Arun Vijay, Sibi Raj, Nasser, Siva Kumar, Udhayanidhi Stalin, Vijay Sethupathy, Premgi, Powerstar Srinivasan, Siva Karthikeyan, Vijay Vasanth, Ashwin K and many others. Among the ladies were Radhikaa Sarath Kumar, Trisha, Lakshmi Rai, Oorvasi, Radha, Dhansikaa, Monica, Namitha, Ramya Krishnan, Lakshmy Ramakrishnan, Sonia Agarwal and Kasthuri. Kamal Haasan arrived only in the evening, supposedly due to his unnavoidable commitments. Vijay on the other hand couldnt attend the protest due to his Australian schedule for Thalaivaa. However, he expressed his support for the protest through a letter, which Sarath Kumar read out in public during the demonstration. http://behindwoods.com/tamil-movies-cinema-news-10/kollywood-gathers-at-t-nagar-ajith-rajinikanth-02-04-13.html
  14. மேலும் சில லண்டன் போராட்ட படங்கள். http://www.vivasaayi.com/2013/04/video-photo.html ------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- நோர்வேயில் நடைபெற்ற கவனயீர்ப்பு நிகழ்வு. தமிழ்நாட்டு மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக உலகெங்கும் புலம் பெயர் தமிழர்களின் போராட்டங்கள் தொடர்ந்து வருகின்றன. நோர்வே மக்கள் அவை , தமிழர் ஒருங்கிணைப்புக் குழு தமிழ்நாட்டு மாணவர்களுக்கு ஆதரவாகவும் , தமிழ்நாட்டு சட்டமன்ற தீர்மானங்களை இந்திய அரசு மதித்து அதை நடைமுறைப்படுத்த கோரியும் இன்று நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் இந்திய தூதரகத்தின் முன்னர் நடத்திய கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். வழக்கம் போல இந்திய தூதரக ஜனநாயகப் பண்பின்படி இந்தியத் தூதரகம் தமிழர்களின் கோரிக்கையை நேரடியாக வாங்க மறுத்த பின்னர் தமிழர்களின் கோரிக்கைகள் தூதரகத்தின் அஞ்சல் பெட்டியில் போடப்பட்டன. நீதி கிடைக்கும் வரை தூங்க மாட்டோம். (முகநூல்)
  15. லண்டனில் இன்று நடைபெற்ற போராட்டத்தின் போது எடுக்கப்பட்ட படங்கள். (முகநூல்) இலங்கையில் நடந்தது மிகப் பெரிய திட்டமிட்ட இனப்படுகொலை. அந்த மாபெரும் இனப்படுகொலையைச் செய்த பாதகனை உலக நீதிமன்றின் முன் நிறுத்த வேண்டும். நாங்கள் எந்த நாடுகளில் வாழ்ந்தாலும் பேதம் பார்க்காமல் எல்லாத் தமிழ் மக்களும் ஒன்றாகச் சேர்ந்து தமிழீழத்துக்காகப் போராட வேண்டும் என லண்டனில் பாரதிராஜா முழக்கம். (முகநூல்)
  16. வியாழன், 4 ஏப்ரல் 2013 சங்கக்காராவை நீக்கு: சன் டிவி அலுவலகம் முற்றுகை! மாணவர்கள் கைது! சென்னை சன் டிவி முன்பு இன்று காலை மாணவர்கள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். சன் ரைசர்ஸ் அணியை ஏலத்தில் எடுத்துள்ள சன் டிவி குழுமம் அதில் சங்கக்காரா என்ற சிங்களவரை கேப்டனாக நியமித்துள்ளது உடனே அவரை நீக்குக என்று மாணவர்கள் ஆர்பாட்டம் நடத்தினர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர். சன் ரைசர்ஸ் அணியில் சங்கக்காரா தவிர திசரா பிரைரா என்ற இன்னொரு சிங்கள வீரரும் இடம்பெற்றுள்ளார். இருவரையும் அணியிலிருந்து நீக்கக்கோரி மாணவர்கள் ஆர்பாட்டம் செய்தனர். சாஸ்தா பொறியியல் கல்லூரி மாணவர்கள் பிரபாகரன் என்ற மாணவர் தலைமையில் சன் டிவி அலுவலகம் முன்பு திரண்டனர். இந்தப் போராட்டத்தில் 50க்கும் மேற்பட்ட பல்வேறு கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் ஈடுபட்டனர். மாணவர்களுக்கு அஞ்சி அங்கு கடும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. சன் டிவி அலுவலகத்திற்குள் மாணவர்கள் நுழைந்து விடுவார்களோ என்ற அச்சத்தில் போலீசார் மாணவர்களை சுற்றி வளைத்து நின்றனர். இந்த போராட்டம் குறித்து மாணவர் பிரபாகரன் கூறியிருப்பதாவது: சன் டிவிக்கு எதிராக திடீரென இந்தப் போராட்டத்தை நடத்தவில்லை. ஏற்கனவெ கலாநிதிமாறனுக்கு சங்கக்காராவை நீக்கக்கோரி கடிதம் எழுதினோம், மின்னஞ்சலும் அனுப்பினோம். பத்திரிக்கையாளர்கள் மூலம் எங்கள் எதிர்ப்பை பதிவு செய்தோம். ஆனால் கலாநிதிமாறனிடமிருந்து எந்த வித பதிலுமில்லை. இலங்கையில் காமன்வெல்த் மாநாடு நடத்தக்கூடாது என்று கடிதம் எழுதுகிறார் கருணாநிதி ஆனால் பேரனின் அணியில், சன்ரைசர்ஸ் அணியில் சிங்கள வீரர்கள் இடம்பெற்றிருப்பதை அவரால் தடுக்க முடியவில்லை. மாறாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார். தமிழ் உணர்வைக் காட்டிலும் கருணாநிதிக்கு வியாபார நோக்கம்தான் பெரிதாகிவிட்டது. என்று கூறியுள்ளார் மாணவர் பிரபாகர்ன். இந்த ஆர்பாட்டம் காரணமாக சன் டிவி நிறுவனம் அமைந்துள்ள எம்.ஆர்.சி. நகரில் பெரும் பதட்டம் ஏற்பட்டது. http://tamil.webdunia.com/newsworld/news/tnnews/1304/04/1130404047_1.htm

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.