Everything posted by துளசி
-
இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணி! (ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும்.)
தமிழக மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக பிரான்சு நாட்டில் இளையோர்கள். தாய்த்தமிழ் நாட்டில் ஈழத்தமிழ் மக்களுக்கு நியாயம் வேண்டிமாணவர்களால் முன்னெடுக்கப்படும் சனநாயகப்போராட்டத்திற்கு ஆதரவும் வலுவும் சேர்க்கும் வகையில் புலம் பெயர்ந்ததமிழர்கள் வாழும் அனைத்து நாடுகளிலும் மாணவர்கள், இளையோர்கள் போராட்டங்களில் ஈடுபட்டுவருகின்றனர். அந்தவகையில் பிரான்சு தமிழ் இளையோர் அமைப்பினர் 30.03.2013 சனிக்கிழமைபி.பகல் 3.30 மணிக்கு பிரான்சின் பெண்கள் புரட்சியின் சாட்சியாக விளங்கிவரும் பத்தில் சின்னத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு ஒன்றுகூடலினை நடாத்தியிருந்தர். தமிழினத்திற்கு விடிவும், நீதியும் வேண்டி தீக்குள் தம்மை நீறாக்கிக் கொண்ட 23 பேரின் நினைவாக மாவீரர்குடும்பத்தைச்சேர்ந்தவர் ஈகைச்சுடர் எற்றிவைத்து அகவணக்கம் செலுத்தப்பட்டு பிரெஞ்சு மொழியில் பலர் உரையாற்றியிருந்தனர். இளையோர்களால் கோசங்கள் எழுப்பப் பட்டது. தாய்த் தமிழ்நாட்டு மாணவர்களின் போராட்டம் பற்றியும் அவர்களுக்கு எவ்வாறு கைகொடுக்கவேண்டும். இன்னும் சனநாயகவழியில் தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என்றும் அதற்கு சகலமக்களும் பங்கு கொள்ளவேண்டும் என்றும் எதிர்வரும் மே 18ம் திகதி நடைபெறவுள்ள ஈகைப்பேரணிக்கு 50 ஆயிரம் மக்கள் கலந்து தமது உணர்வை வெளிப்படுத்தும் வகையில் ஏற்பாடுகள் அனைத்து தமிழர்அமைப்பின் ஒத்துழைப்புடன் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும். பாராளுமன்றத்திலிருந்து தமிழர்போராட்டம் பற்றியும், அடுத்தகட்டசெயற்பாடுகள் கதைக்கவும்,அறிந்துகொள்ளவும் பிரெஞ்சு தமிழீழமக்கள் பேரவையை அழைத்திருந்தமையும் குறிப்பிட்டிருந்தனர். கடும் குளிருக்கு மத்தியிலும் சிறியவர்கள் பெரியவர்கள் என்று பலநூற்றுக்கணக்காக தமிழ் மக்கள் கலந்து கொண்டிருந்தனர். கடந்த 2009ம் ஆண்டு தமிழர்தாயகத்தில் சிங்கள ஆட்சியாளார்களால் நடாத்தப்பட்ட தமிழின அழிப்பின் உச்சகாலத்தில் புலம் பெயர்மண்ணணெங்கும் முகமறியா தமிழர்கள் குறிப்பாக இளையோர்கள் வீதிகளில் இறங்கிபோராடினர். இன்றுநடைபெற்ற போராட்டத்தைபார்க்கும் போது அவ்வாறானதொரு போராட்டம் மீண்டும் தோற்றம் கொண்டுள்ளதை பார்க்கக்கூடியதாகவும், மக்களும் அவ்வாறே பேசிக்கொண்டு சென்றதையும் காணக்கூடியதாக இருந்தது. நம்புங்கள் தமிழீழம் பாடலுடனும், தமிழரின் தாகம் தமிழீழத்தாயகம்,என்னும் தாரகமந்திரத்துடன் ஒன்று கூடல் இனிதேநிறைவு பெற்றது. (முகநூல்)
-
இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணி! (ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும்.)
மாணவர்கள் போராட்டம் என்பது, அனைத்து மாணவர்களும் இணைந்து செய்வது , இதில் ஒரு தலைமையோ , அல்லது ஒரு தலைவரோ என்று யாரும் அறிமுகபடுத்தபடவில்லை , அவ்வப்பொழுது பத்திரிக்கையாளர்களை மாணவர்கள் பிரதிநிதிகள் சந்திப்பது என்றால் அது அனைத்து மாணவர்களிடம் கலந்து ஆலோசித்த பின்னர் ஏற்படும் ஒருமித்த கருத்தை தெரிவிக்கும் மாணவர் ஒருங்கிணைப்பு செய்தியாளர் கூட்டமே , இதில் பிரதானம்., தமிழகம் முழுதும் ஈழ விடுதலை செய்திகளை மாணவர் போராட்டம் மூலம் கொண்டு செல்லும் செயலே, அல்லாமல் ஒரு சில மாணவர்களை போராட்ட பிரதானமாக காட்டும் நோக்கம் அல்ல. இன்னும் கடந்து செல்ல வேண்டிய தூரம் பலவுள்ளது. செய்ய வேண்டிய பணிகள் பலவுள்ளது. அனைத்தையும் திட்டமிடுவோம் இது கூட்டு உழைப்பே. போராடும் ஒவ்வொரு மாணவனும் ,உள்ளூர் சூழல் கருதி போராட்ட திட்டமிடும் அனைவரும் தலைமை பண்பு கொண்டவர்களே . ஏற்கனவே நாம் சொன்னது போல நமக்கு தேவை அடையாளம் அல்ல விடை . முதல் கட்ட போராட்டம் நமது அனைத்து கல்லூரிகள் திறக்கும் வரை என்று காலவரிசைபடுத்தி சொல்லலாம் . முதல் கட்ட போராட்டம் , ஈழ விடுதலை செய்திகளையும் , ஈழமே தமிழர்களிற்கு அவர்களின் வாழ்விற்கு நிரந்தர தீர்வு என்ற செய்தியை தமிழகம் எங்கும் பரப்பி உள்ளது. வரும் பல கட்ட போராட்டங்கள் , ஈழ விடுதலைக்கான நகர்வுகள் ஒவ்வொன்றையும் செய்யும் , அதற்கு தேவை கூட்டு உழைப்பு . இன்னும் இரண்டு அல்லது ஐந்து நாளில் நெல்லையில் பதினான்கு கல்லூரி , பல தொழில் கல்லூரி மாணவர்கள் அமைதியான சாலையோர கைகோர்ப்பு போராட்ட நிகழ்வை ஒருங்கிணைப்பதாக கூறி உள்ளார்கள். இது போலவே கோவையிலும் ஈரோட்டிலும் தர்மபுரியிலும் .., நம் ஒற்றுமை பணி தொடரும் ..மேலும் செய்தியோடு வருகிறோம் .. (முகநூல் : loyolahungerstrike)
-
இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணி! (ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும்.)
ஈழ போராட்டதுக்கு ஆதரவாக முகநூலில் பிரச்சாரம் செய்யும் தமிழ் ஈழ தமிழர்களே. உங்கள் புகைப்படம் மற்றும் பெயர் விலாசம் இதில் எதுவுமே உண்மையான உங்களின் விபரங்களை முகநூலில் போடவேண்டாம். இலங்கை கணினி அவசரச் சேவைப் பிரிவும் இராணுவமும் ஈழ போராட்டத்துக்கு ஆதரவாக முகநூலில் பிரச்சாரம் செய்யும் ஈழ தமிழர்களின் முகநூல் கணக்குகள் தொடர்பான தகவல்கள் திரட்டப்பட்டு வருகின்றன. அந்த வலையில் சிக்கி விடாதீர்கள் . இலங்கை உளவுப் பிரிவினர் ஈழ ஆதரவாளர்கள் போல் தன்னை காட்டிக் கொண்டு பெண்கள் பெயரிலும் தலைவர் பெயரிலும் பேஸ்புக் உள்ளே வருகின்றார்கள் பின்பு உங்கள் விபரங்கள் அறிந்த பின்னர் நீங்கள் இருக்கும் இடத்திலேயே உங்களை கைது செய்வார்கள் பின்பு உங்கள் உயிருக்கு உத்தரவாதம் இல்லை. இலங்கை தமிழர்கள் பேஸ்புக்கில் உங்களுடைய முகவரியை போலியானதாக பதிவு செய்யவும். இதேவேளை உங்கள் பேஸ்புக் கணக்கில் பொய்யான பெயரோ அல்லது பொய்யான முகவரியோ இட்டிருந்தால் அல்லது நீங்கள் பேஸ்புக்கில் முகம் தெரியாத நண்பர்களுடன் உரையாடும் போது உங்கள் தொடர்பான உண்மையான பெயரையோ முகவரியையோ தெரிவிக்காமல் இருந்தால் எந்தவிதமான பிரச்சினையும் வராது. (முகநூல்)
-
இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணி! (ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும்.)
30/03/2013 பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் ´´place de la Bastillé´ ல் தமிழக மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்து நடந்த ஒன்றுகூடலில் பாரிஸ் இளையோரும், மாணவர்களும். ------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------ இன்று (31-3-2013) ஜப்பானில் ஈழத்தமிழர்களுக்காக அருள் ராமலிங்கம் அவர்கள் நண்பர்கள் மற்றும் தமிழ் உணர்வாளர்களுடன் இணைந்து முன்னெடுக்கும் உண்ணா நிலைப் அறப்போராட்டம் மழையையும் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் தொடங்கியது... (முகநூல்)
-
இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணி! (ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும்.)
(முகநூல்)
-
இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணி! (ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும்.)
இலங்கை வீரர்களை இந்தியாவிற்குள் அனுமதிக்காதே..! (முகநூல் : loyolahungerstrike)
-
இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணி! (ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும்.)
நன்றி பையன் அண்ணா இணைப்பிற்கு. அது சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே இன்று (30.03.2013) தமிழ் ஈழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம். இந்தியாவில் நடக்கும் ஐபிஎல் போட்டியில் எந்த மாநிலத்திலும் சிங்களவர்கள் வந்து விளையாடக் கூடாது என்பதை அடிப்படையாக வைத்து இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. அது தொடர்பான சில படங்களை இணைக்கிறேன். (முகநூல்)
-
இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணி! (ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும்.)
(முகநூல்)
-
இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணி! (ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும்.)
மாணவர் போராட்டம் பற்றி ஒரு வரிச் செய்தி கூட வெளியிடக்கூடாது. சன் குழுமம் உத்தரவு. மாணவர்களின் போராட்டங்கள் தற்போது ஐபிஎல் அணிகளில் உள்ள சிங்கள வீரர்களை நோக்கி திரும்பியுள்ள நிலையில், மாணவர்களின் போராட்டம் குறித்து ஒரு வரிச் செய்தி கூட, சன் ஊடகங்களான, தமிழ்முரசு, தினகரன் மற்றும் சன் நியூஸ், சன் டிவி ஆகிய ஊடகங்களில் வந்து விடக்கூடாது என்று சன் நிர்வாகம் அனைத்து மாவட்ட அலுவலகங்களுக்கும் அறிவுரை கூறியுள்ளது. (முகநூல்)
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
je vous en prie (you're welcome) பரவாயில்லை. எழுதி பழகுங்கோ.
-
இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணி! (ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும்.)
(முகநூல்)
-
இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணி! (ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும்.)
ஜெயங்கொண்டம் - செந்துறை சாலையில் உள்ள மருதூரில் இன்று (30.03.2013) ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் மேற்கொள்ளப்பட்டது. இதனையொட்டி மருதூரில் அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டன. அந்த ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டு இலங்கைக்கு எதிராக தங்களது கண்டனத்தை தெரிவித்தனர். (முகநூல்)
-
இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணி! (ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும்.)
விருதுநகர் காங்கிரஸ் எம்.பி. மாணிக் தாகூர் அலுவலகத்தை முற்றுகையிட சென்ற மாணவர்கள் மீது காங்கிரஸ் கட்சியினர் உருட்டுக்கட்டையால் சரமாரியாக தாக்கினர். மாணவர்களை தாக்கியது தொடர்பாக எம்.பி. அலுவலக உதவியாளர் ஜெயமூர்த்தி , பால்பாண்டி, சதீஷ், கார்த்திக் உள்பட சிலரை கைது செய்தனர். (முகநூல்)
-
இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணி! (ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும்.)
ஒரு புத்த பிக்கு தாக்கப்பட்டதற்கு கொதித்து எழுந்தனர் மனித நேயர்கள். தாக்கிய தமிழர்களை அடுத்த நாளே கைது செய்தது கடமை தவறாத காவல் துறை. இங்கு காங்கிரஸ் குண்டர்கள் மாணவர்கள் மீது ஆயுதங்களுடன் கொலைவெறி தாக்குதல் நடத்துகின்றனர். அவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுத்தது காவல் துறை? (முகநூல் : loyolahungerstrike)
-
இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணி! (ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும்.)
நாளை கோவையில் கமலம் துரைசாமி ஹாலில் நடைபெறவிருந்த தமிழீழ விடுதலைக்கான மாணவர் போராட்டம் தமிழ்நாடு உணவகம் அரங்கில் நடைபெறும் . . நாளை (31.3.2013) அன்று காலை 10 மணி அளவில் கோவை காந்திபுரம் தமிழ்நாடு உணவாக அரங்கில் கோவை மற்றும் கோவை சுற்று வட்டார கல்லூரி மாணவர்கள் கலந்து கொள்ளும் கலந்தாலோசனை கூட்டம்.. தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு.. தொடர்புக்கு : ராஜகுரு : 9995098489 ஜெகதீஷ் : 9791497906 பெருமாள் : 9976436528 (முகநூல் : loyolahungerstrike)
-
இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணி! (ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும்.)
நினைவூட்டுகிறோம்! நீங்கள் வரவேண்டுமெனக் கோருகிறோம்!!! தோழர்களே! இடிந்தகரை தமிழினத்தின் விடிந்த கரையாகட்டும்! இடிந்தகரை அடித்தளம் இடியாத கரையாக அமையட்டும்! ஏப்ரல் 7, 2013 ஞாயிறன்று காலை 9 மணிக்கு ஒரு நாள் கலந்தாலோசனைக் கூட்டத்திற்காக இடிந்தகரைக்கு வாருங்கள். தமிழின விடியலுக்காய் தமிழகமெங்கும் இயங்கிக் கொண்டிருக்கும் சிறிய அரசியல் கட்சிகள், மாணவர் பிரதிநிதிகள், மாணவர் அமைப்புக்கள், மகளிர் சங்கங்கள், சமூக இயக்கங்கள், மக்கள் மன்றங்கள், தொழிற்சங்கங்கள் என அனைத்துத் தரப்பினரும் வாருங்கள். அன்புடன் அழைக்கிறோம். தொடர்புக்கு: 9443984091, 9894521344 koodankulam@yahoo.com, mcpushparayan@hotmail.com போராட்டக் குழு அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம் (முகநூல்) ----------------------------------------------------------------------------------------------------------- நாட்குறிப்பில் குறித்திடுக நல்லோரே! கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு சார்பாக 'அணு சக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தின்' ஆதரவுடன் கூடங்குளம் அணு உலையை மூடக் கோரி எதிர்வரும் ஏப்ரல் 20, 2013, சனிக்கிழமை அன்று கன்னியாகுமரியில் இருந்து பேரணியாகச் சென்று கூடங்குளம் அணு உலை முற்றுகையிடப்படும் என்று கூட்டமைப்பின் ஒருங்கிணப்பாளர் திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைவர் தோழர் கொளத்தூர் மணி இன்று அறிவித்திருக்கிறார். வெல்லட்டும் நம் போராட்டம்! S.P.Udayakumar (முகநூல்)
-
இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணி! (ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும்.)
அரசியல் அற்ற மாணவர் புரட்சி படைப்போம். (முகநூல் : loyolahungerstrike)
-
இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணி! (ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும்.)
(முகநூல் : loyolahungerstrike)
-
இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணி! (ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும்.)
தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் தினேஷ் மற்றும் பிரிட்டோ(நான்) ஆகியோரின் கூட்டறிக்கையை இப்பொழுது தான் நான் படித்தேன். கிட்டத்தட்ட 15 நாட்களுக்கு மேலாக மாணவர்களாகிய நாம் அரசியல் சார்பில்லாமல் கொள்கை தெளிவுகளோடு தனித்தமிழ் ஈழம் வேண்டி அறவழியில் போராடி வருகிறோம்.மாணவர்களாகிய நாம் ஒற்றை தலைமைக்கோ இரட்டை தலைமைக்கோ இடம் அளிக்க கூடாது கூட்டுத்தலைமை மட்டுமே முன்னிறுத்தப் படவேண்டும். என்னுடைய பெயரை பயன் படுத்தி தனிப்பட்ட முறையில் யாரும் அறிக்கையோ அல்லது வேறு செயல்களிலோ ஈடு படவேண்டாம் என்று பணிவன்போடு கேட்டுக்கொள்கிறேன். மாணவர்களாகிய நாம் ஒட்டு மொத்த தமிழ் சமுகத்தையும் ஒரே குடையின்கீழ் இணைத்து தனித்தமிழீழம் அமைப்பதற்கு போராடவேண்டி இருக்கிறது. மாணவர்களாகிய நாம் ஒற்றுமையாக இணைந்து போராடுவோம் . வாழ்த்துக்கள். "தமிழ் எங்கள் குருதி ஈழம் அது உறுதி " ஜோ பிரிட்டோ. (முகநூல் : loyolahungerstrike)
-
இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணி! (ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும்.)
காவிரி கரையில் ராஜபக்சே, சோனியா காந்தி, சுப்பிரமணிய சுவாமி ஆகியோர் படங்களுக்கு மாலை போட்டு திதி கொடுக்கும் போராட்டத்தை தமிழீழ ஆதரவு மாணவர்கள் கூட்டமைப்பை சார்ந்த கல்லூரி மாணவ, மாணவிகள் நடத்தினர். காவிரி கரையில் ஒன்று திரண்ட மாணவர்கள் மூவரின் படங்களுக்கு பூ மாலைப் போட்டு, வாழை இலையில் தேங்காய், வாழைப் பழம், பொட்டுக்கடலையுடன் படையல் வைத்தார்கள். தொடர்ந்து, அர்ச்சகர் வேடத்தில் இரண்டு மாணவர்கள் ஓமக் குண்டத்தை உருவாக்கி வேதம் ஓதினார்கள். சோனியா, சுப்பிரமணிசாமி, ராஜபக்சே உறவினர்கள் போல மாணவர்களே வேடம் தரித்து மந்திரம் ஓதி, ஈமச்சடங்கு செய்து, ஒருவருக்கொருவர் கட்டிப் பிடித்து கதறி அழுதார்கள். பின்பு அவர்கள் நெருப்பு குண்டத்தில் இருந்த அஸ்தியை காவிரி ஆற்றில் கரைத்து கைக்குலுக்கி மகிழ்ச்சியை பகிர்ந்துக் கொண்டார்கள். இது குறித்து மாணவர்கள் கூறுகையில், ‘‘இந்த மூன்று பேரும் ஒரு இனத்தையே கருவறுத்தவர்கள். இவர்களுக்கு பாவ மன்னிப்பே கிடையாது. தன் கணவனை இழந்ததற்காக ஒரு இனத்தையே அழித்த சோனியா, சர்வதேச புரோக்கர் சுப்பிரமணியசுவாமி, வில்லன் ராஜபக்கே இந்த மூன்று பேரையும் சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தி தண்டனை வாங்கி தரும் வரை தமிழீழ மாணவர்கள் கூட்டமைப்பு ஓயாது’’ என்றார்கள். (முகநூல் : loyolahungerstrike) ----------------------------------------------------------------------------------------------------------------------------------------------- கைதானாலும்... காவல் வாகனத்தையும் , கைது செய்து அடைக்கும் மண்டபத்தையும் கருத்தரங்கு கூடமாக மாற்றும் மதுரை மாணவர்கள். (முகநூல்)
-
இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணி! (ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும்.)
ஈழத்திற்கான போராட்டத்தை சட்ட ஒழுங்கு பிரச்சனையாக மாற்ற காங்கிரஸ் தலைமை முயல்கிறது. இவனுங்க இங்க தான் இருப்பானுங்க எப்பவேனா திருப்பி அடிகலாம். இப்போதைக்கு இலக்கு ஒன்று தான். இனத்தின் விடுதலை. (முகநூல் : loyolahungerstrike) --------------------------------------------------------------------------------------------------------------------------------- இலங்கை இறுதிப்போரின்போது நிகழ்ந்த இனப்படுகொலையை கண்டித்து, விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் ஆட்டோ ஓட்டுனர்கள் இன்று ஒருநாள் அடையாள உண்ணாவிரதம் மேற்கொண்டனர். (முகநூல் : loyolahungerstrike)
-
இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணி! (ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும்.)
மாணவர்கள் மீது உருட்டுக்கட்டையால் தாக்கிய காங்கிரஸ். வீடியோ இணைப்பு. (முகநூல் : loyolahungerstrike)
-
இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணி! (ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும்.)
IPL க்கு டிக்கெட் வாங்கியவர்கள்..உங்கள் உணர்வை வெளிப்படுத்த மைதானத்தில் பிடிக்க வேண்டிய பதாகைகள். 1. போர் குற்ற காட்சிகள் - WAR CRIME PICTURES 2. இது திட்டமிட்ட இனப்படுகொலை- IT IS STRUCTURAL GENOCIDE 3. இதுவரை 600 இந்திய மீனவர்கள் ஸ்ரீலங்கா ராணுவத்தால் கொல்லப்பட்டுள்ளனர்- SRILANKA ARMY/NAVY SO FAR KILLED 600 INDIANS FISHERMENS. BUT OUR INDIAN GOVT NOT PROTECT US. 4. எங்களது..இந்திய கடமைகளை நாங்கள் சரியாக செய்கிறோம்.. எங்களின் உணர்வுகள் அவமதிக்கப்படுகின்றன. WE DID OUR DUTIES AS A INDIAN FULLY, BUT OUR EMOTIONS WERE INSULTED . 5. ஈழமக்கள்..இலங்கையின் குடிமக்கள் என்றால் சொந்த இராணுவத்தால் ஏன் கொல்லப்பட்டார்கள்??? - IF SRILANKA TAMIL S ARE UNITED SRILANKA CITIZEN , THEN WHY OWN CITIZENS ARE KILLED BY SRILANKAN ARMY?? 6. சேனல் 4 ல் வெளி வந்த இனப்படுகொலை காட்சிகள் பொய்யெனில்..சர்வதேச விசாரணை செய்வதில் தயக்கமேன்??- IF THE CHANNEL 4 "GENOCIDE" VIDEOS ARE FAKE, THEN WHY SRILANKA NOT READY TO ACCEPT "INTERNATIONAL INVESTIGATION". ??? மொழி பெயர்ப்பில் குறையிருப்பின் மன்னிக்கவும். இதனை விட சிறந்த வாசகங்களும்..சிறந்த மொழி பெயர்ப்பும் தேவைப்படுகிறது. மாணவர்களெ..தோழர்களே... உலகம் முழுதும் நமது எண்ணம் சென்று சேர ஒத்துழையுங்கள். உங்களின் சின்ன செயலும்.. பெரிய காரியத்தை சாதிக்க உதவும்! (முகநூல்)
-
இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணி! (ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும்.)
சென்னை சேப்பாக்கம் மைதானத்தின் முன்பு ipl போட்டிகளுக்கு எதிராக நடைபெற்ற மாணவர்களின் போராட்டத்தில் நாமக்கல் மாணவர் தன்மான சக்ரவர்த்தி கலந்து கொண்டு வெயிலின் கொடுமை மாணவர்களுக்கு தெரியாமல் இருக்க நாட்டுப்புற பாடல்களை பாடி உற்சாகப்படுத்தினார். (முகநூல்) ------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- கும்பகோணத்தில் அனைத்து தனியார் பள்ளி ஆசிரியர்கள் போராட்டத்தில் : மிக்க மகிழ்ச்சியான செய்தி,,கும்பகோணத்தில் தனியார் கல்வி நிலைய ஆசிரியர்கள் போராட்டத்தில் இறங்கினர். இப்போதும் போராட்டம் நடைபெற்று வருகிறது . (முகநூல் : loyolahungerstrike) -------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- நாளை (31.3.2013) அன்று காலை 10 மணி அளவில் கோவை காந்திபுரம் கமலம் துரைசாமி ஹாலில் கோவை மற்றும் கோவை சுற்று வட்டார கல்லூரி மாணவர்கள் கலந்து கொள்ளும் கலந்தாலோசனை கூட்டம்.. தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு.. தொடர்புக்கு : ராஜகுரு : 9995098489. (முகநூல் : loyolahungerstrike)
-
இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணி! (ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும்.)
சற்று முன்:திருச்சி மாணவர்கள் காங்கிரஸ் குண்டர்களால் தாக்கபட்டதை கண்டித்து அவர்களை கைது செய்ய கோரி இன்று காலை புதுகோட்டை மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தை முற்றுகையிட்ட மாணவர்கள் காங்கிரஸ் அலுவலகத்துக்கு பூட்டு போட்டு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். முற்றுகை போராட்டத்தில் பங்கேற்ற 130 மாணவர்களை காவல் துறை கைது செய்து அருகே உள்ள திருமண மண்டபத்தில் வைக்கபட்டுள்ளார்கள் மாணவர்களுக்கு உங்கள் வாழ்த்துகளை தெரிவிக்க தொடர்புக்கு: shanmuganathan - 9751466364 nagaa athiyan -8883382058 (முகநூல் : loyolahungerstrike)