Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

துளசி

கருத்துக்கள பார்வையாளர்கள்
  • Joined

  • Last visited

Everything posted by துளசி

  1. மதுரை அனைத்து கல்லூரி மாணவர்கள் தொடர்ந்து இரண்டு மணிநேரமாக வருமானவரித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு தனி தமிழ் ஈழ கோரிக்கைகளை கோஷமிட்டனர். பின்னர் சற்றுமுன் நூற்றுகணக்கான மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். (முகநூல் : loyolahungerstrike)
  2. யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் சுவரொட்டிப் போராட்டம் - கிழித்தெறிந்த சிறீலங்காப் புலனாய்வாளர்கள். தமிழர்களின் தீர்வாக தனித் தமிழீழம் அங்கிகரிக்கப்பட வேண்டுமென்று போராடிவருகின்ற தமிழக மாணவர்களுக்கு ஆதரவாக யாழ். பல்கலைக்கழகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன. எழுச்சிமிகு வாசகங்களுடன் இந்தச் சுவரொட்டிகள் காணப்பட்டன. ஆனால், இந்தச் சுவரொட்டிகள் ஒட்டப்பட்ட சில மணி நேரங்களிலேயே யாழ்.பல்கலைக் கழகத்திற்குள் நுழைந்த இராணுவப் புலனாய்வாளர்கள் அந்தச் சுவரொட்டிகளைக் கிளித்தெறிந்தனர். நேற்று விடுமுறை நாளாக இருந்த போதிலும் யாழ். பல்கலைக்கழகத்தில் மாணவர்களின் நடமாட்டம் கணிசமானளவு இருந்தது. பல்கலைக்கழக நூலகத்திற்;கு வருகை தந்த மாணவர்கள் மற்றும் இதர செயற்பாடுகளுக்காக வருகை தந்த மாணவர்களுமாக மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாகவே இருந்தது. இந்த நிலையில், காலை எட்டு மணியளவில் பல்கலைக்கழக விளம்பரப் பலகைகள், மாணவர் பொது அறை, மாணவர் ஒன்று கூடும் இடங்கள் மற்றும் மரங்கள் போன்றவற்றில் தமிழக மாணவர்களுக்கு ஆதரவான சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன. “உறவுக்கு கை கொடுத்த உறவுகளே நீங்கள் இன்று உரிமைக்கும் தோள் கொடுக்கிறீர்கள்” “தமிழக உறவுகளே நீங்கள் தரணியில் பாவலர்கள் ஈழத் தமிழரின் காவலர்கள்” “தமிழீழமும் தமிழகமும் ஐந்தெழுத்து மந்திரம், ஐந்தெழுத்து மந்திரத்தை ஆயுள் வரை மறக்கமாட்டோம்”, “தலைவன் வழி நடந்து தமிழீழம் காண்போம். தமிழன் என்று சொல்லி தரணியை ஆள்வோம்”;. “தமிழக உறவுகளே நீங்கள் எம் இதயம். உங்கள் உணர்வுகளே ஈழத்தின் உதயம்”;, “தமிழக முதல்வரே தரணியின் முதல்வரே ஈழத்தின் தாய் நீ எங்கள் தமிழீழத்தின் தாய் நீ” “கடந்த காலத்தை மறவுங்கள். வருகின்ற காலத்தை நினையுங்கள். வாழ்கின்ற வையகத்தை அமையுங்கள். தமிழ் ஈழத்தை எமக்காக அமையுங்கள்”;. “செங்களத்தை எமக்காய் அமைத்து சிங்களத்தை நாம் சிதறடிப்போம்” “ஈழத்தில் இன்று நாம் சிறைப்பறவை. நாளைய உலகில் நாம் விடுதலைப் பறவை”, “தமிழக மாணவரே உங்கள் மனங்களில் எங்கள் சிந்தனைகள் எங்கள் மனங்களிலோ உங்கள் சாதனைகள்”;. “கல்வி மட்டும் எம் வாழ்க்கையல்ல, தமிழ் இனத்தைக் காப்பதும் கடமையாகும்” “உலகில் எழுச்சி மிக்க இனமாக நாம் உருவெடுப்போம். புதிய வாழ்வு சமைப்போம் நாம் புதிய சாதனை படைப்போம்” “உங்கள் எழுச்சி எங்கள் உயர்ச்சி எங்கள் உயர்ச்சி உங்கள் மலர்ச்சி” “நாங்கள் வெல்வோம் நாளைய உலகில் நாங்கள் வெல்வோம்” போன்ற பல எழுச்சி வாசகங்கள் இந்தச் சுவரொட்டிகளில் எழுதப்பட்டிருந்தன. இந்தச் சுவரொட்டிகள் தொடர்பான தகவல்கள் கிடைத்தவுடன் நான்கு மோட்டார் சைக்கிள்களில் யாழ். பல்கலைக்கழகத்திற்குள் நுழைந்த சிறிலங்கா இராணுவப் புலனாய்வுத் துறையினர் அந்த துண்டுப் பிரசுரங்களைத் தேடித் தேடிக் கிளித்தெறிந்தனர். அகப்பட்ட மாணவர்கள் சிலரை விசாரித்த புலனாய்வுத் துறையினர் அவர்களை அச்சுறுத்திவிட்டுச் சென்றுள்ளனர். இதேவேளை எதிரியின் குகைக்குள் இருந்துகொண்டே யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் சுவரொட்டிப் போராட்டமொன்றை நடத்தியுள்ளமை பெருமைப்பட வேண்டிய விடயமாகவே நோக்கப்படுகின்றது. பொங்கு தமிழர்களாய் பொங்கி எழுந்த யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் எந்த தடை வரினும் அதனை உடைத்து வெற்றி பெறுவார்கள் என்பது உறுதி. அதேபோன்று தமிழக மாணவர்களும் எந்த தடைவரினும் ஈழத் தமிழருக்கான போராட்டங்களைக் கைவிட மாட்டார்கள் என்பது உறுதியாகத் தெரிகின்றது. இவர்களின் போராட்டம் நிச்சயமாக வெற்றி பெறுமென்றும் யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் சுவரொட்டிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. (முகநூல் : loyolahungerstrike)
  3. தமிழக மாணவர் போராட்ட செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள அனைவரும் loyolahungerstrike முகநூல் பக்கத்தில் like செய்யுங்கள். இப்பொழுது 30,255 likes http://www.facebook.com/tamilnaduhungerstrike
  4. யாயினி அக்காவுக்கும் விசுகு அண்ணாவின் மனைவிக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். அண்மையில் பிறந்தநாள் கொண்டாடிய அனைவருக்கும் பிறந்தநாள் வாழ்த்துகள்.
  5. பூந்தமல்லி சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டவர்களுக்கு அடிப்படை தேவைகளுக்காக அரசாங்கத்தால் ஒரு நாளைக்கு 70 ரூபாய் வழங்கப்பட்டு வந்தது, இந்த ரூபாயில் தான் இவர்களின் அனைத்து தேவைகளையும் இவர்கள் கவனித்துக்கொள்ளவேண்டும். இந்த தொகையில் பாதி இவர்களுக்கு பொருட்கள் வாங்கி தரும் தலையாரிக்கே செலவாகிவிடும் என்பதே உண்மை. இதனால் இந்த தொகை தங்களின் தேவைகளை பூர்த்தி செய்ய போதுமானதாக இல்லையென்று இந்த தொகையை உயர்த்தி தரவேண்டும் அல்லது அரசாங்கமே தங்களின் தேவையை பூர்த்தி செய்யவேண்டும் என்று பூந்தமல்லி சிறப்பு முகாம் வாசிகள் கடந்த 9 மாதங்களாக இந்த தொகையை வாங்க மறுத்து புறக்கணித்து வந்தனர். அவர்களுக்கான அடிப்படை தேவைகளை அவர்களை பார்க்க வரும் உறவினர்கள் மூலம் பூர்த்தி செய்து வந்தனர். ஆனால் கடந்த 20 நாட்களாக அவர்களை பார்க்க வரும் எந்த உறவினர்களையும் கியூ பிரிவினர் அனுமதிப்பதில்லை. இனி 10 நாட்களுக்கு முன் அனுமதி வாங்கினால் மட்டுமே பார்க்க அனுமதிக்க முடியும் என்று அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டு வந்தனர். இதனால் சிறப்பு முகாமில் இருப்பவர்கள் கடந்த இருபது நாட்களாக வெளியிலிருந்து எந்த உணவு பொருட்களும் கிடைக்காமல் தனிமைபடுத்தப்பட்டனர். உறவினர்கள் சந்திப்பதற்கு வெளிநாட்டினர் சட்டபிரிவில் எந்த இடத்திலும் இல்லாத இந்த கெடுபிடிகளை எதிர்த்து 27/03/2013 முதல் சந்திரகுமார் என்பவர் உண்ணாவிரதத்தை தொடர்ந்தார். சந்திரகுமாரை பார்க்க வந்த அவர் மனைவிக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் அவரும் சிறப்பு முகாம் வாசலிலேயே உண்ணாவிரதத்தை தொடர்ந்துவந்தார். இந்நிலையில் நேற்று மாலை உண்ணாவிரதம் இருந்த சந்திரகுமாரின் மனைவி கைது செய்யப்பட்டுள்ளார். அவரையும் அவரது இரண்டு குழந்தைகளையும் தற்போது புழல் சிறையில் அடைத்து வைத்துள்ளது காவல் துறை . தனது குடும்பம் கைதான செய்தியை அறிந்த சந்திர குமார் நேற்று இரவு தூக்க மாத்திரைகளை நிறைய உட்கொண்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார் . அவரை சக முகாம் வாசிகள் காப்பாற்றி அரசுக்கு தகவல் கொடுத்தனர் . அவரை அவசரமாக சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு வந்து சேர்ந்தனர் காவல் துறை . சந்திர குமார் தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப் பட்டுள்ளார். சட்ட விரோதமாக இந்த ஈழத் தமிழர்கள் பூந்தமல்லி சிறையில் வெளிநாட்டவர் சட்டத்திற்கு புறம்பாக அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் முகாம்களில் குடும்பத்தோடு வாழ சட்டப்படி அனுமதி இருந்தாலும் காவல் துறை அதை அனுமதிப்பதில்லை . அதற்கு எதிராகத் தான் இப்போது சந்திர குமார் போராட்டம் செய்து முடிவில் மருத்தவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார் . சொந்தநாட்டில் ஈழத் தமிழர்கள் அகதி ஆக்கப்பட்டனர். இப்போது தாய் தமிழகத்திலும் அவர்கள் உரிமைகள் இழந்து அகதியாக , அடிமையாக வாழ்கின்றனர். தமிழக அரசு இலங்கைக்கு எதிராக தீர்மானம் போட்ட அதே வேளையில் இங்குள்ள ஈழத் தமிழர்களை காப்பாற்றும் நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் என்பதே தமிழர்களின் கோரிக்கையாக உள்ளது. (முகநூல்)
  6. மாணவர்களுக்கு அண்ணன் சுப.உதயகுமாரன்- (ஒருங்கிணைப்பாளர், அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம்) அவர்களின் அன்பு வேண்டுகோள். ''ஈழப் படுகொலைகள் நடந்து நான்கு ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், இப்போதுதான் அது முழுமையான மக்கள் போராட்டமாக மாறிக்கொண்டிருக்கிறது. ஐ.நா-வில் மனித உரிமை அமர்வுகள் முடிந்துவிட்ட நிலையில், போராட்டங்களும் முடிந்துபோனால் அது பின்னடைவாகிவிடும் என்னும் நிலையில், மாணவர்கள் ஈழ மக்களுக்காகக் கிராமங்களுக்குச் செல்ல வேண்டும். ஈழ மக்களின் விடிவுக்காகச் சர்வதேசச் சமூகத்தை நம்பியிருக்கும் நிலையில், தமிழகத்தில் இருந்து உருவாகும் அழுத்தங்களே இந்திய அரசுக்கு நெருக்கடியை உருவாக்கும். இது ஒரு தொடக்கம்தான். இன்னும் எட்ட வேண்டிய இலக்கை மனதில் வைத்துக்கொண்டு, சாத்வீகமான போராட்டங்களை மாணவர்கள் தொடர வேண்டும்!'' (முகநூல்)
  7. தமிழக சட்டபையில் நிறைவேற்றிய தனித் தமிழீழ வாக்கெடுப்புக்கான தீர்மானம் இந்திய நாடாளு மன்றத்திலும் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என தமிழக மாணவர் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. (முகநூல்)
  8. மலேசியா எங்கும் தமிழர் முன்னேற்ற அமைப்பும் இளையோர்களும் மாணவர்களும் வீதி எங்கும் தொடரும் ஆர்ப்பாட்ட பேரணிகள், தமிழீழத்துக்கான கோசங்களும் மற்றும் தமிழகத்து மாணவர்களுக்கான ஆதரவாக குரல்களும் ஓங்கி ஒலிக்கின்றன. மேலும் மலேசிய மக்களில் கவனத்தை ஈர்த்து மகிந்த ராஜபக்சேவின் புகைப்படத்தை வீதியில் போட்டும் செருப்பால் அடித்தும் அதன்மேல் வாகனங்களை ஏற்றியும் வினோதமான முறையில் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். மலேசிய எங்கும் இளையோர்களாலும் மாணவர்களாலும் சுதந்திரத் தமிழீழத்துக்கான வழிகோல் கிடைக்கும் வரை நாம் தொடர்ந்து போராடுவோம் என மலேசியாவில் உள்ள இளையோர்களும் மாணவர்களும் தெரிவித்துள்ளனர். (முகநூல்) ------------------------------------------------------------------------------------------------------------------------------ பாரிஸில் , ஈபிள் டவர் முன்பு கவன ஈர்ப்பு போராட்டத்தில் தமிழ் சொந்தங்கள் . (முகநூல்)
  9. நேர்படப்பேசு நிகழ்ச்சியில் நடந்தது இதுதான். வீடியோவை பாருங்கள். அன்பார்ந்த உலகதமிழ் முகநூல் நண்பர்களே புதியதலைமுறை தொலைக்கட்சிக்கு ஆதவும் இ வி கே எஸ் இளங்கோவனுக்கு எதிர்ப்பும் தெரிவியுங்கள் இந்த சம்பவம் மிகவும் கண்டிக்கத்தக்கது http://www.facebook.com/photo.php?v=576907705661081&set=vb.100000255716394&type=2&theater (முகநூல்)
  10. நேற்றைய நேர்படப் பேசு நிகழ்ச்சியில், புதிய தலைமுறைக்கும், தீவிரவாதிகளுக்கும் (விடுதலைப் புலிகளை மேற்கோள்காட்டி) தொடர்புண்டு, CBI விசாரணை செய்யச் சொல்வொம் என்று மிரட்டிய காங்கிரசின் EVKS இளங்கோவனுக்கு, இன்றைய நேர்படப் பேசு நிகழ்ச்சியில் புதிய தலைமுறை அளித்த பதில் புதிய தலைமுறை ஒரு வயதே ஆனா மழலைதான்... ஆனால் எவருக்கும் மண்டியிடாத மழலை... யார் மிரட்டலுக்கும் பயப்படமாட்டோம். மக்களின் ஆதரவுடன் இப்போதுபோல் எப்போதும் நடுநிலையோடு சமூக முன்னேற்றத்திற்காக பாடுபடுவோம்.. # # நீங்க நடுநிலையா இருக்கும் வரை நாங்களும் உங்களுடன் இருப்போம் புதிய தலைமுறையே... உறுதியாக இருங்கள், இறுதி வரைப் போராடுவோம்... புதிய தலைமுறை படைப்போம்.. மாணவர்களைத் தாக்கியது, தமிழ் மக்களை ஒட்டுமொத்தமாக ஒழித்தது மட்டுமில்லாது, மீடியாக்களையும் மிரட்டும் காங்கிரசை அடியோடு அழிப்போம்...நாட்டைவிட்டே ஓடவைப்போம்.. (முகநூல்)
  11. திருச்சியில் சட்டக் கல்லூரி மாணவர்களை காங்கிரஸ் பிரமுகர்கள் தாக்கியதைக் கண்டித்து புதுக்கோட்டையில் மாணவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். காங்கிரஸ் பிரமுகர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாணவர்கள் கூறினார்கள். ------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- சிவகங்கை மாவட்டம் காளையார் கோயிலில் தமிழ் ஈழத்தில் பொது வாக்கெடுப்பு நடத்த கோரியும், திருச்சியில் சட்டக்கல்லூரி மாணவர்களை தாக்கிய காங்கிரசார் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் - தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு ஆர்பாட்டம். ------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- தஞ்சையில் திருச்சி மாணவர்களை தாக்கிய அயோக்கியர்களை கைது செய்ய கோரி மாவட்ட ஆட்சியர் இடத்தில் புகார் அளிக்க சென்ற பொழுது, மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். ------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- இலங்கையை ஆதரிக்கும் நாடுகளின் பொருட்களை புறக்கணிப்போம் - கோவை மாணவர் கூட்டமைப்பு. தொடர்ந்து பேசிய மாணவர் கூட்டமைப்பினர், ''தனித்தமிழ் ஈழம் தேவையில்லை எனவும் ஒன்றுபட்ட இலங்கை மட்டுமே போதுமானது என கூறும் தமிழீழத்திற்கு எதிரான அரசியல் கட்சிகளை புறக்கணிக்க வேண்டும். தமிழீழம் மட்டுமே பிரச்னைக்கு தீர்வு. ஜெனீவா தீர்மானத்தில் இலங்கைக்கு ஆதரவாகவும், நடுநிலையுடனும் செயல்பட்ட நாடுகளின் உற்பத்தி பொருள்களை புறக்கணிப்போம். ராஜபக்சேவை போர்குற்றவாளியாக சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தும் வரை இந்தப் போராட்டம் ஓயாது" --------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- போற்குற்றவாளிகளான சிங்கள அரசும் - போருக்கு துணைபோன இந்திய அரசும் இணைந்து பங்கு பெரும் ஐ பி எல் போட்டியை புறக்கணிப்போம் ! எதிரிகளையும் துரோகிகளையும் தோலுரிப்போம் ! (முகநூல் : loyolahungerstrike)
  12. (முகநூல் : loyolahungerstrike) -------------------------------------------------------------------------------------------------------------------------------------------- (முகநூல் : loyolahungerstrike) ---------------------------------------------------------------------------------------------------------------------------------- (முகநூல் : loyolahungerstrike) ----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- தஞ்சை மாவட்ட பூதலூர் அருகில் ( திருச்சி-தஞ்சை இரயில் வழியிலுள்ள ) அய்யனாபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம மக்கள் எதிர்வரும் 30-12-2013 அன்று அய்யனாபுரம் இரயிலடி முன்னபாக தமிழீழத்தில் நடைபெற இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணை வேண்டி ஒருநாள் அடையாள உண்ணாநோன்பு அறப்போராட்டம் நடைபெற உள்ளது .தஞ்சை -திருச்சி மாவட்டங்களிலுள்ள உணர்வாளர்கள் பொது மக்கள் கலந்துகொண்டு தமிழீழ விடுதலைக்கு நமது பங்காளிப்பை கொடுப்போம். "தமிழரின் தாகம் தமிழீழ தாயகம் " (முகநூல் : loyolahungerstrike) ------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------ வணக்கம் நண்பர்களே நாளை 30-03-2013 நம் ஈழத் தமிழ் உறவுகளுக்காக தனித் தமிழீழ நாடு வேண்டி கோவை காந்திபுரம் தமிழ்நாடு உணவகம் முன்பாக ஒருநாள் அடையாள உண்ணாவிரதம் கோவை மாவட்ட தங்க நகை தொழிளாளர் நண்பர்கள் மற்றும் 80வது வார்டு தமிழ் உணர்வாளர்கள் இணைந்து நடத்த இருக்கிறோம் எனவே அனைவரும் கலந்து நம் உறவுகளுக்கு ஆதரவு அளிக்க வேண்டுகிறோம், பேச: முரளி 9894864644 கார்த்திக் பாரதி 9042007489 (முகநூல் : loyolahungerstrike) -------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- பூபதி நகர் பொது மக்களுடன் சட்ட கல்லூரி மாணவர்கள் ஒரு நாள் உண்ணாவிரதம். தொடர்புக்கு - பிரதீப்: 9941586869 (முகநூல் : loyolahungerstrike)
  13. மாணவ ஒருங்கிணைப்பாளர் திவ்யாவை குண்டுக் கட்டாக தூக்கிப் போட்டு பொலிஸ் அராஜகம்! சென்னையில் உள்ள மெரீனா கலங்கரை விளக்கம் அருகே உள்ள அகில இந்திய வானொலி நிலையத்தை பூட்டுப் போடும் அறவழிப் போராட்டம் இன்று நண்பகல் மாணவர்களால் முன்னெடுக்கப்பட்டது. அகில இந்திய வானொலி நிலையத்தைச் சுற்றிலும் நான்கடுக்குப் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. ஆயிரக்கணக்கான பொலிஸார் குவிக்கப்பட்டிருந்தனர். மன்மோகன் சிங், சோனியாகாந்தி, ராஜபக்ஸ ஆகியோருக்கு எதிராக விண் அதிரும் கோஷங்களை மாணவர்கள் எழுப்பினார்கள். மத்திய அரசின் அலுவலகங்களை முற்றிலும் முடக்கும் போராட்டமாக இந்தப் போராட்டம் அமைந்திருந்தது. இந்த அறவழிப் போராட்டத்தில் திரளான மாணவர்கள் பங்கேற்றனர். இறுதியில் வானொலி நிலையத்தை நோக்கி மாணவர்கள் ஊர்வலமாக செல்ல முற்பட்ட போது, மாணவர்கள் பொலிஸாரால் மிருகத்தனமாக நடாத்தப்பட்டனர். போராட்ட ஒருங்கிணைப்புக் குழு மாணவியான திவ்யாவை பொலிஸார் குண்டுக் காட்டாகத் தூக்கி வானில் ஏற்றினர். அப்போது திவ்யா பொலிஸ் அராஜகம் ஒழிக என்று கதறினார். மற்றைய மாணவர்களையும் பொலிஸார் தகாத வார்த்தைகளினால் திட்டினர். தமிழக அரசின் ஏவலின் பெயரில் பொலிஸ் மாணவர்கள் மீது அடக்குமுறைகளை ஏவி மிருகத்தனமாக நடந்து கொண்டமையானது மாணவர்கள் மத்தியில் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இனி முழுவீச்சில் மத்திய அரசுக்கு எதிரான போராட்டங்கள் தமிழகம் எங்கும் முன்னெடுக்கப்படும் என மாணவ ஒருங்கிணைப்பாளர் திவ்யா கூறினார். (முகநூல்)
  14. மதுரை மாணவர்கள் போராட்டம் நாளை. இடம் -மதுரை லேடிடோக் கல்லூரி எதிரில் உள்ள Employees' Provident Fund Organisation அலுவலகம் முற்றுகை நேரம் - காலை 10 மணி தொடர்புக்கு - 7200998864 அனைத்து தமிழ் ஈழ ஆதரவாளர்களும் பெருந்திரளாக கலந்து கொள்வோம் (முகநூல் : loyolahungerstrike) ------------------------------------------------------------------------------------------------------------------------------- திருச்சி சட்ட கல்லூரி மாணவர்கள் தாக்கப்பட்டத்தை கண்டித்து சென்னை டாக்டர் அம்பேத்கர் சட்டக்கல்லூரி மாணவர்கள் சென்னை சத்தியமூர்த்தி பகவன் எதிரில் உள்ள தமிழ் நாடு தேசிய காங்கிரஸ் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். போராட்டம் நடத்திய மாணவர்களை காவல்துறை கைது செய்துள்ளது. (முகநூல் : loyolahungerstrike)
  15. அகில இந்தியா வானொலி முற்றுகையின் போது . ------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- ரொறன்டோ பல்கலைக்கழகத்தின் ஸ்காபரோ மாணவர் உண்ணாவிரதம் --------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- சட்டசபையில் பொது வாக்கெடுப்பு தீர்மானம் மாணவர்களிற்கு கிடைத்த வெற்றி ; அவர்களின் போராட்ட அழுத்தத்திற்கு கிடைத்த வெற்றி என்பதில் துளி அளவு கூட சந்தேகம் இல்லை ஆனால் மாணவர்கள் நாங்கள், எங்களை பாராட்ட வேண்டும் என்று ஆசை கொள்ளவில்லை. எங்கள் அனைவரின் நோக்கம் தமிழர்கள் இனி மேலும் கண்ணீர் விட்டு அழாதபடிக்கு ஒரு நிம்மதியான, சுதந்திரமான, உரிமையான, அவர்களுக்குண்டான தேசம்; அது ஈழம் ; அதை பெறும் வரை எங்கள் அறவழி பணி தொடரும் . இப்போதைய தமிழக அரசின் தீர்மானத்தை இந்திய மத்திய அரசு பரிசீலித்து , தமிழக சட்ட மன்றத்தை மதித்து , இலங்கையுடனான தமது வெளியுறவு கொள்கையை மாற்ற வேண்டும் . அந்த மாற்றம் வேண்டும் அதுவே எங்களிற்கான வெற்றியாக இருக்கும். எங்களிற்கு தேவை வெற்று பாராட்டல்ல. (முகநூல்)
  16. மதுரையில் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாகவும், திருச்சியில் காங்கிரசாரால் மாணவர்கள் தாக்கப்பட்டதை கண்டித்தும் அனைத்து கல்லூரி மாணவர் சங்கம் சார்பாக நாளை 28-03-2013 அன்று தொடர் முழக்க போராட்டம் நடைபெற உள்ளது. இடம் : மதுரை காளவாசல் நேரம் : காலை 9.30 மணிக்கு நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் : தினேஷ் பாண்டியன் : 9994693356 ராமச்சந்திரன் : 8870384777 விக்னேஷ் : 9600422192 (முகநூல் : loyolahungerstrike)
  17. இலங்கையில் நடைபெற்ற தமிழர் இனப்படுகொலையை கண்டித்தும் குற்றவாளி ராஜபாட்சேவை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தி விசாரிக்க வலியுறுத்தியும் தமிழ் ஈழம் தழைக்கவும் தமிழன் என்ற உணர்வோடு நம்மையெலாம் ஒன்றுபடுத்தி தமிழர்களுக்கு ஆதரவாக தனி ஈழத்திற்கு ஆதரவாக போராடிவரும் மாணவர்களுக்கு நன்றி சொல்லும் விதமாக சாதி கட்சி கலப்படமின்றி தமிழ் இன உணர்வோடு ஐடிசி தொழிலாளர்கள் நடத்தும் பிரமாண்ட ஒருநாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் நானும் கலந்துக் கொண்டு முழக்கமிட உள்ளேன் என்பதை இவ்வேளையில் மகிழ்ச்சியுடன் உங்களுடன் பகிர்ந்துக் கொள்கிறேன் தமிழ் இன உணர்வாளர்கள் அனைவரும் கலந்துக் கொள்ளலாம் நாள்: 29-03-2013 இடம்: காரமடை பேருந்து நிலையம் மேட்டுப்பாளையம், கோவை (முகநூல் : loyolahungerstrike)
  18. அண்மைச்செய்தி. இலங்கையில் பொது வாக்கெடுப்பு நடத்த தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம். இலங்கை நட்பு நாடு என்ற வாதத்தை நிறுத்த வேண்டும் எனவும் முதலமைச்சர் ஜெயலலிதா வலியுறுத்தல். (முகநூல்) பி.கு: யாராவது இது தொடர்பான இணைப்பை கண்டால் யாழில் இணையுங்கள். ---------------------------------------------------------------------------------------------------------------------------------------- அவசரம் ! கேளம்பாக்கம் ஓ.எம்.ஆர் சாலையில் உள்ள ஆனந்த் இன்ஸ்டியுட் ஆப் ஹையர் ஸ்டடிஸ் கல்லூரியை சேர்ந்த நூற்றிற்கும் மேற்பட்ட மாணவர்கள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர் , மேலும் அவர்களின் போராட்டத்தை வழி நடத்த ஆள் இல்லாத காரணத்தினால் அடுத்து என்ன செய்வது என்று தெரியமால் சோர்வாக உள்ளனர் , அப்பகுதியில் உள்ள கட்சி சார்பற்ற தோழர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் அவர்களை சந்தித்து சரியாக வழிநடத்துங்கள் , மேலும் இணைய நண்பர்கள் அவர்களை தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவியுங்கள் , அது அவர்களை மேலும் போராட ஊக்கமளிக்கும் தொடர்புக்கு :- தினேஷ் 9543845283 யூசுப் 9688260209 ஜோஸ் 9942340047 (முகநூல் : loyolahungerstrike) ------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------ இன்று காவல்துறையின் கடும் பாதுகாப்பை மீறி மாணவர்கள் சென்னையில் இருக்கும் அகில இந்திய வானொலி நிலையத்தை இழுத்து மூடும் போராட்டத்தை நடத்தினர். (முகநூல் : loyolahungerstrike)
  19. சென்னையில் நடக்க இருக்கும் ஐ.பி.எல் கிரிக்கெட் விளையாட்டை பார்க்கச் செல்லும் ரசிகர்களே , மாணவர்களே தயவு செய்து இது போன்ற பதாகைகள் , வாசகங்கள் எழுதிய அட்டைகளை உங்களுடன் எடுத்துச் செல்லுங்கள். அதை விளையாட்டின் போது காட்டுங்கள். இதன் மூலம் இந்தியாவில் உள்ள மற்ற மக்களுக்கும் நமது செய்தியை கொண்டு போகலாம் ! (முகநூல் : loyolahungerstrike)
  20. திருச்சியில் காங்கிரஸ் குண்டர்களால் தாக்கப்பட்டு கால் உடைத்த நிலையில் இந்த மாணவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். மேலும் பல மாணவர்கள் கவலைக்கிடம். (முகநூல் : loyolahungerstrike)
  21. நண்பர்களே ! இந்த பக்கம் , ஈழம் அடையும் வரை , ஈழத்திற்கான பொது வாக்கெடுப்பு என்று ஐக்கிய நாடுகள் சபையில் ஏதேனும் ஒரு நாடு சரத்தை பதியும் வரை , தமிழகத்தில் வராது வந்த மாமணி போல எழுந்த தன்னெழுச்சியான மாணவர் போராட்டத்தை எப்படி ஒவ்வொரு அடுத்த கட்டதிற்க்குள்ளும் கொண்டு செல்லவேண்டும் என்பதற்கு உதவியாக , களத்தில் உள்ள மாணவர்களிற்கு தகவல் அளித்து உதவும் ஒரு இடமாக மட்டுமே இருக்க வேண்டும் என்று விரும்புகிறோம். தங்களது தனிப்பட்ட கோபங்களை, எதற்கும் பயன்படாத 'திட்டு' வார்த்தைகளை கொண்டு பதிய ; தங்களது ஆத்திரங்களை இங்கே எழுத்துகளில் காட்ட ; ஒரு அமைப்பை அல்லது இயக்கத்தை குறைசொல்லும் பிறிதோர் அமைப்பு அல்லது இயக்கம் அல்லது தனி நபர் என்று ; எந்த பழக்கத்தையும் இந்த பக்கத்தில் தயவு செய்து பதிய வேண்டாம் . ஒற்றை நோக்கம் ஒரே நோக்கம் ஈழம் மட்டுமே , தமிழகத்தில் எழும் மாணவர் எழுச்சி இந்தியாவின் மன நிலையை , இந்தியாவின் இலங்கைக்கான அயலுறவு கொள்கையை மாற்றம் கொள்ள செய்யவேண்டும் என்பதுவே மாணவர் போராட்டத்தின் அச்சாணி கொள்கை. ஈழ தமிழர்களிற்கு இந்தியாவில் (தமிழகத்தில்) எவ்வளவு ஆதரவு உள்ளது என்பதை உலகம் முழுக்க உள்ள எல்லா நாடுகள் உணர வேண்டும் . அதற்க்கு ஒவ்வொரு போராட்டத்தையும் பதிந்து வையுங்கள் வீடியோ , போடோக்கள் முக்கியம் . இப்போதைக்கு காமன் வெல்த் நாடுகளில் அங்கம் வகிக்கும் ஐம்பத்து நான்கு நாடுகளிற்கும் நாம் இலங்கை படுகொலை ஆவணங்களை அனுப்பி , இனபடுகொலை செய்த இலங்கையை ராஜபக்சேவை அங்கீகரிக்காதீர்கள் என்ற முக்கிய பணியை, இணையத்தில் உள்ளாவாறே செய்ய வேண்டும். அதற்க்கு ஒரு சரியான ஆவண படம் தயாரிக்க வேண்டும் அதற்க்கு உதவும் நண்பர்கள் இங்கே உள்ளார்களா ? இருந்தால் பதியவும். அடுத்து முக்கியமாக , இந்திய அரசு உணரும் பொருட்டு அதே நேரம் தமிழகத்தில் மக்கள் ஆதரவு பெற்று , மத்திய அரசு அலுவலக முடக்க பணிகளை முன்னெடுப்பது எப்படி என்று மாணவர்கள் தம் உள்ளூர் சூழலுக்கு ஏற்ப திட்டமிட்டு கொண்டு பணிகளை செய்து வருகிறார்கள். எதிர்பார்த்தபடியே,இந்த பக்கத்தில் சிங்களவர்கள், ஒட்டுக்குழுக்கள் பலர் ஊடுருவி உள்ளார்கள் அவர்கள் இதை, இந்த பக்கத்தை தடை செய்ய கோரிக்கை அளிக்கலாம் , (ஏற்கனவே இரண்டு லக்ஷம் பேர் பார்த்த , நமது பக்கத்தின் ,ஒரு படத்தை தடை செய்து உள்ளார்கள்) நாமும் நாளை அல்லது நாளை மறுநாள் , இந்த பக்கத்தின் பிரதியான ஒரு இணைய தளத்தை உருவாக்க போகிறோம் . அந்த தளம் பற்றிய பதிவுகளை வெகு விரைவில் அறிவிக்கிறோம். நாள் ஒன்றிற்கு இருபத்தி இரண்டு மணி நேரம் இயங்கி இந்த பக்கத்தை உயிர்ப்புடன் வைத்து வருகிறோம் , இதே பணியை ஈழத்திற்காக ஈழம் அடையும் வரை எங்களது குழு செய்யும். விரைவில் , புதிய தளம் பற்றி அறிவிப்பை வெளியிடுகிறோம். Mr.KChennai (முகநூல் : loyolahungerstrike)
  22. ஆல் இந்தியா றேடியோ/all india radio மாணவர்கள் முற்றுகை/ காவல்துறை பலத்த பாதுகாப்பு. (முகநூல் : loyolahungerstrike) ---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- Tomorrow TYO (Tamil Youth Org.) Students Protest in Hannover, Germany 4pm - 6 pm 27.03.2013 Place: Kröpcke (near railwaystation) , Hannover (முகநூல் : loyolahungerstrike) ---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் “ஓயாது இனி ஓயாது மாணவர் போராட்டம் ஓயாது!!! தனி ஈழம் அமையும் வரை எங்கள் போராட்டம் குறையாது. மத்திய அரசே! மாநில அரசே! உனக்கு எனக்கு போராட்டமா? தமிழனுக்கான போராட்டமா?” என்று வானதிர மயிலாடுதுறை நகரமே ஸ்தம்பிக்கும் அளவிற்கு கரவொலியை எழுப்பி அஞ்சலகத்திற்கு பூட்டுப்போட பேரணி ஊர்வலமாக சென்ற மாணவர் கூட்டமைப்பினர் கைதாகியுள்ளனர். (முகநூல் : loyolahungerstrike) ------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------ மாணவர்களே! கவனம்! உங்களை வன்முறைப் பாதையில் திருப்ப சதி நடக்கிறது. அறப் போராட்டத்தை மட்டுமே தொடருங்கள்! காங்கிரஸ் கட்சியின் அடாவடித்தனத்தை மக்களிடம் கொண்டு செல்லுங்கள். தங்கள் பிள்ளைகளை அடித்தவர்களை மக்கள் பார்த்துக் கொள்வார்கள். (முகநூல்) ------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- காங்கிரஸ் புதைக்கப்பட வேண்டிய களம் மற்றும் காலம் இதுதான் ! அதையும் அறவழியிலேயே செய்கிறோம். (முகநூல் : loyolahungerstrike) ------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------ அகில இந்திய வானொலி நிலையத்தை இழுத்து மூடும் அற வழிப் போராட்டத்தை நடத்திய 200க்கும் மேற்பட்ட பல கல்லூரிகளை சேர்ந்த மாணவ-மாணவிகளை தமிழக காவல்துறை கண்மூடிதனமாக தாக்கி வண்டியில் ஏற்றி உள்ளனர்.. மைலாப்பூர் நாகேஸ்வரராவ் பூங்கா அருகில் சமுதாயக் கூடத்தில் அடைக்கப் பட்டு உள்ளனர்.. மாணவ-மாணவிகள் பலர் காயமடைந்துள்ளனர் தொடர்புக்கு 09500044452 (முகநூல்)

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.