Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

துளசி

கருத்துக்கள பார்வையாளர்கள்
  • Joined

  • Last visited

Everything posted by துளசி

  1. இன்று தலைநகர் சென்னையில் நடைபெற்ற தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பின் அனைத்து மாவட்ட பிரதிநிதிகள் பங்கேற்ற கூட்டத்தில் இறுதித் தேர்வு வரையில் இந்த போராட்டத்தை தக்கவைத்துக்கொள்ள நூதனமான முறையிலும் அனைத்து உலக மக்களும் பங்கேற்கும் வகையில் போராட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. நேரில் வர இயலாத சில மாவட்ட பிரதிநிதிகளுக்கு இந்த முடிவு தொலைபேசி மூலம் தெரிவிக்கப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டது. மாணவர்களாகிய நாங்கள் எங்களது வகுப்பறையில் தினமும் காலை 11 முதல் 11:02 வரை இரண்டு நிமிடங்களுக்கு மௌனம் கடைபிடிப்போம். நம் தமிழினம் படும் துன்பங்களை இந்த உலகம் உணரும் வரையில், ஐநா மன்றம் ஈழத்தில் பொது வாக்கெடுப்பு நடத்தும் வரையில் தினமும் இரண்டு நிமிடங்கள் மௌனத்தை தொடருவோம். இந்த மௌனப் புரட்சியை அனைத்து உலக மாணவ சமுதாயத்துக்கும் பரப்புவோம். இன்று அனைத்து மாவட்ட மாணவர்களும் ஈழத்தில் பொது வாக்கெடுப்பு நடத்த வலியுறுத்தி இரண்டு நிமிடம் மௌனம் செலுத்தியபோது எடுக்கப்பட்ட படம். கீழுள்ள கடிதத்தை அனைத்து மொழிகளிலும் மொழிபெயர்த்து இணையதளத்தில் வெளியிடப்படும். ஓ உலக மனிதர்களே! உலக நாடுகளே !! உங்களைப் போல் ஒருவராய் சக பயணியாய் எல்லையில்லா இப்பரந்த பூமியில் வாழப் பிறந்த ஈழத் தமிழர்களாகிய எங்களை, யாதும் ஊரே! யாவரும் கேளிர் என்று பேதம் பார்க்காமல் எல்லோரையும் நேசித்து வாழ்ந்த எங்களை, மனித நாகரிகத்திற்கும் அறிவிற்கும் ஒவ்வாத வகையில் இனம், மதம், நிறம், மொழி பார்த்து, கருத்து பேதம் கொண்டு எம் உயிரை, உடலை, உணர்வை, உருக்குலைத்து கொன்று சிதைக்கின்றனரே! எம் தாயை, தமக்கையை, சேயை ஒரு துளி இரக்கமின்றி வெறிபிடித்து அழித்து, செத்த பிணத்தையும் புணர்ந்து தீக்கிரையாக்கி எம்மக்களை காற்றோடு காற்றாய் மண்ணோடு மண்ணாய் புதைக்கின்றனரே! இதை பார்த்துக்கொண்டிருப்பது மனித நீதியா? உங்களின் மனசாட்சிக்கு ஏற்புடையதுதானா? ஒரு கணம் சிந்தியுங்கள். வீடிழந்து நாடிழந்து எம்மக்களில் பல இலட்சம் பேர் உலகெங்கும் உயிர்பிழைக்க ஓடுகின்றனரே! பாராமுகம் காட்டும் அண்டை இந்தியநாட்டில் பல இலட்சம் பேர் தஞ்சம் அடைந்துள்ளனரே! ஒன்றரை இலட்சம் பேர் கொல்லப்பட்டனரே! இன்றும் தினம் தினம் எம்மவர் பிடித்துச் செல்லப்பட்டு காணாமல் ஆக்கப்படுகின்றனரே! எம் பெண்டிரின் நிலை சொல்லக்கூடியதா? உறவிழந்து, உடமையிழந்து, உணர்ச்சி செத்து உரிமை பெற வழியின்றி வாடும் எம்மை மனிதராய் வாழ வழி காட்ட மாட்டீரா? இந்த அழிவை தடுத்து நிறுத்த மாட்டீரா? இவ்வுலகில் வாழும் மனிதர் எந்நாட்டவராக இருந்தாலும் அவர்களின் அடிப்படை வாழ்வுரிமையை பாதுகாப்பதாகச் சொல்லும் ஐநா மன்றமே “எம்மண்ணில் எங்களின் வாழ்வை நாங்களே தீர்மானிக்க இப்போதேனும் பொதுவாக்கெடுப்பு நடத்துக ! We Want Referendum.” மனித நேயத்தோடு எங்களின் நிலையையும் எம்மைப் போன்று உலகமெங்கும் பல நாடுகளில் பெரும்பான்மையோரால் நசுக்கி அழிக்கப்படும் பரிதாபப்பட்ட சிறுபான்மை மக்களின் துயரத்தையும் மனதில் நினைத்து இழப்பிற்கு வருந்தியும் மீதமிருப்போரை வாழ வைக்கவும் ஒவ்வொரு நாளும் (காலை 11 முதல் 11.02 வரை) 2 நிமிடங்கள் எழுந்து நின்று மௌனம் கடைப்பிடியுங்கள். உங்களின் மனித நேயத்தை மௌனத்தால் உலகுக்கு தெரியப்படுத்துங்கள். உங்கள் மௌனம் உலகத்தாரின் மனசாட்சியை தட்டி எழுப்பட்டும். மாணவர் தொடக்கும் இம்மௌனப் புரட்சி உலகெங்கும் பரவட்டும். இம்மௌன மொழி அடக்கி ஆளும் நாடுகளின், ஐநா மன்றத்தின் காதுகளை கண்களை சிந்தையை தட்டி எழுப்பும் வரை தொடரட்டும். தன் நாட்டின் நலமொன்றே பெரிதென்றெண்ணி பிற மனித உயிர்களை துச்சமாக மதிக்கும் உலக நாடுகளின் போக்கு மாறட்டும்! மாபெரும் வலிமையுடன் மனிதரின் வாழ்வுரிமை நிலைநாட்டப்படட்டும். வையம் வாழ வாழும் பண்பை இவ்வுலகம் கற்கட்டும். ஈழம் மலரட்டும் ! மானுடம் வெல்லட்டும் ! ! http://www.facebook.com/photo.php?v=446970508717379&set=vb.100002133006250&type=2&theater (முகநூல் : loyolahungerstrike)
  2. சன்ரைசர்ஸ் அணியில் சிங்களவனை கேப்டனாக நியமித்து விட்டு ஈழ தமிழர்களுக்காகவே டெசோ என்று சொல்ல எப்படி ஐயா உங்களுக்கு மனம் வருகிறது? சன் தொலைகாட்சிக்கு உங்கள் கண்டனத்தை தெரிவிக்க... தொலைபேசி எண் - 04444676767... (முகநூல்)
  3. சன்ரைசெர்ஸ் அணியில் , 2 சிங்கள ஆட்டக்காரர்கள், என்ன சொல்கிறார் கலாநிதி மாறன்? தீர்க்கமான ஒரு முடிவு இன்னும் எடுக்கப்படவில்லை, ஏன்? சங்ககாராவின் பேட்டி படித்தேன், ஒட்டு மொத்த தமிழர்களின் குரல் ஓசை கேட்கவில்லை போல் இருக்கிறது, புறப்படு தமிழா கலாநிதி மாறனை முற்றுகையிட, தமிழனை ஏமாற்றியது போதும், தமிழர்கள் இனியும் ஏமாறமாட்டர்கள் (முகநூல் : loyolahungerstrike)
  4. ஞாயிற்றுக்கிழமையும் கல்லூரிகள் இயங்கும் மாணவர்களின் போராட்டம் காரணமாக கடந்த சில நாட்களாக பல்கலை., கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இந்நிலையில், 03.04.2013 புதன்கிழமை முதல் வகுப்புகள் துவக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து விடுமுறையை ஈடுகட்ட கூடுதல் நாட்களில் கல்லூரிகளை நடத்தி கொள்ள பொறியியல் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையும் வகுப்புக்களை நடத்தி, பாடங்களை நடத்தலாம் என அண்ணா பல்கலை., துணைவேந்தர் பத்திரிகையாளர்களிடம் கூறினார். nakkheeran (முகநூல்) ----------------------------------------------------------------------------------------------------------------------------------- GTV யில் 8 மணிக்கு விவாதம், தலைப்பு “தனி ஈழமா ?! சுயாட்சியா?! (முகநூல்)
  5. The Hindu இல் வந்துள்ள IIT-Kharagpur மாணவர் போராட்ட செய்தி. IIT-K students rally The students of IIT-Kharagpur organised a signature campaign to create an awareness among the student community about the human right violations in Sri Lanka against the ethnic Tamil community. They highlighted the following points during their awareness campaign. To conduct an international independent investigation on the human rights violations and genocide killings. To give equal rights and political power to the linguistic minorities living in Sri Lanka. Requesting India to register a strong protest and concerted action against the Sri Lankan government over this issue. The students also successfully organised a peaceful rally last week. More than 300 students belonging to different states participated, registering their solidarity with the issue. http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-educationplus/iitk-students-rally/article4567943.ece?fb_action_ids=10151586079109402&fb_action_types=og.likes&fb_source=other_multiline&action_object_map={%2210151586079109402%22%3A236843026457224}&action_type_map={%2210151586079109402%22%3A%22og.likes%22}&action_ref_map=[]
  6. என் ஈழ நண்பர்களே உங்களுக்கு... எங்களை மன்னிக்க கோரி ஒரு கடிதம் !!! கவலை வேண்டாம் இனி விடியலை நோக்கி நம் பயணம் !!! நங்கள் போர்களத்தை கண்டதில்லையே; உங்கள் நிலையை ஊடகங்களும் எங்களுக்கு கூறவில்லையே; எங்களுக்கும் உங்களுக்கும் அந்த சமயம் தொடர்பும் இல்லையே; எங்கள் மானம் விற்ற அரசியல்வாதிகளும் எங்களுக்கு சொல்லவிலையே; உங்கள் அன்றைய நிலையை "முடியலயே முடியலயே ! எங்களால் உங்களை காக்க முடியலயே! முடியலயே முடியலயே ! எங்களால் நம் மானம் காக்க முடியலயே!" அப்போது எங்களை கொன்றபோது அமைதி காத்தவர்களே !! இன்று என்னடா அக்கறை என்று நீங்கள் கேட்பது சரி தான்! இப்போது போராடும் மாணவர்கள் அப்போது குழந்தைகள் என்பதை மறக்க வேண்டாம்; இப்போது போராட்டத்திற்கு கை கொடுப்பவர் அப்போது கொடுக்கவில்லை மறக்க வேண்டாம்; இப்போது உள்ள சமுக வலைத்தளங்கள் அப்போது இல்லை மறக்க வேண்டாம்; இப்போது உள்ள அளவிற்கு விழிப்புணர்வு அப்போது இல்லை மறக்க வேண்டாம்; இனி நீங்கள் எதற்கும் இனி கொதிக்க வேண்டாம்: இனி எதுவாயினும் !!! நாங்கள் போராட்டத்தை நிறுத்த போவதில்லை ! இனி எம்மக்களுக்கும் தமிழுக்கும் உயிர் தரவும் தயார் ! அதாவது உயிர் என்பது இங்கு விழிப்புணர்வு ! செத்த பிணமாய் நடமாடும் சுயநலவாதிகளுக்கு... விழிப்புணர்வு என்னும் உயிர் கொடுத்து போராடுவோம்... வென்றெடுப்போம் தமிழ் ஈழம் !!! இப்படிக்கு, என்றும் தோழமையுடன், தன்மானம் சக்ரவர்த்தி (முகநூல்)
  7. தமிழக மாணவர் போராட்டத்துக்கும் தமிழீழத்துக்கும் தமிழர்கள் அல்லாத வெளிநாட்டவர்களும் ஆதரவளிக்கும் காணொளி. http://www.youtube.com/watch?v=f-_lDi3jL48&feature=youtu.be (முகநூல்)
  8. தமிழக உளவுத்துறையின் கண்காணிப்புக்கு உள்ளாகியிருக்கும் அந்த 50 முகநூல் நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்! facebook ன்னா வெட்டி அரட்டை இல்லே ன்னு நீங்க தான் நிரூபிச்சிருக்கிங்க ! (முகநூல்) ----------------------------------------------------------------------------------------------------------------------------------- தமிழீழப் படுகொலையை அடுத்து தமிழீழ இசுலாமியர் மக்கள் மீது சிங்கள பெளத்த பேரினவாதம் வெறியை அவிழ்த்து விட்டிருக்கிறது. தொடர்ச்சியாக இசுலாமியர் மீதான தாக்குதல் நிகழ்த்துவதை கண்டித்து பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா இன்று மாலை 4மணிக்கு இலங்கை தூதரகத்தினை முற்றுகை இடுகிறார்கள். தமிழீழ விடுதலைக்காக தொடர்ந்து குரல் கொடுத்துவரும் பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியாவின் போராட்டத்தில் இணைந்து கொள்வோம். புது தில்லியில் உள்ள ஐ. நா தலைமை அலுவலத்தினை தனது தேசிய அரசியல் கட்சித் தலைவர்களால் முற்றுகையிட்டு தமிழீழ விடுதலைக்கான போராட்டத்தினை நடத்திய இந்தத் தோழர்களின் குரல் நம்குரல். தொடர்பிற்கு 9940045320.. பகிர்க. - திருமுருகன் காந்தி - (முகநூல்)
  9. (முகநூல்) வரும் வியாழன் 04.04.2013 அன்று மாலை 06.00 மணிக்கு மறைமலை நகரில் நடைபெறும் தெருமுனை பொதுக்கூட்டம் .....அனைவரும் வருக ......கருத்துக்களை பெறுக. (முகநூல்)
  10. அவசர செய்தி. கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் நகரில் கலவரம்- மாணவர்கள் மீது காங்கிரஸார் சரமாரி தாக்குதல். மனித சங்கிலி போராட்டம் நடத்த வந்த அனைத்து கல்லூரி மாணவர்கள் மீது காங்கிரஸ் குண்டர்கள் வன்முறை, தடியடி, பேனர்கள் கிழிப்பு. காங்கிரஸ் எதிர்த்தாலும் மாணவர்கள் போராட்டம் வெற்றிகரமாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. காங்கிரஸ் கைக்கூலி ராஜேஷ் குமாரை வன்மையாக கண்டிக்கிறோம். குமரி மாவட்டத்தில் காங்கிரஸ் கோட்டை உடைகிறது. மாணவர் போராட்டம் வெல்லட்டும். (முகநூல் : loyolahungerstrike)
  11. தமிழீழத்திற்கான மாணவர் போராட்ட குழு சார்பாக இன்று திருவாரூரில் தபால் நிலையம் பூட்டு போடும் போராட்டத்தில் 100 மாணவர்கள் கைது, தபால் நிலையம் இன்று 1 மணி நேரம் பணி முடக்கம். (முகநூல்)
  12. சூர்யா மற்றும் கார்த்தி ரசிகர் மன்றத்தினர் நடத்திய உண்ணாவிரதம். ஈழத்திற்காக போராடுவோம். இதில் ஈழம் முதல்படுத்தி காட்ட பட்டிருக்கிறதா அசிங்கதிலும் அசிங்கம் ஈழத்துக்கு போராட சொன்னால் போராடுகிறார்கள் கூத்தாடிக்காக தமிழினம் அழியும் காரணம் இதுவே..... மக்களே புரிஞ்சிகோங்க தமிழகம் ஏன் முன்னேறவில்லை என்று இனி எவரேனும் இப்படி செய்தால் அவர்களுக்கு பாடம்புகட்ட தமிழன் முன்வர வேண்டும் ... (முகநூல்)
  13. இன்று [31.3.2013] கோவை காந்திபுரம் தமிழ்நாடு உணவக அரங்கில் தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பின் ஆலோசனை கூட்டம் நடந்தது. கோவை மாவட்டத்திலுள்ள அனைத்து கல்லூரிகள் சார்பாக 86 பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். மாணவர் போராட்டம் அடுத்தகட்டமாக மக்கள் போராட்டமாக மாற்ற இந்த கலந்தாய்வு நடந்தது.. மாணவர் போராட்டத்தை மக்கள் போராட்டமாக மாற்றும் விதமாக . சாதாரண மக்களுக்கும் ஈழத்தில் நடந்தது என்ன என்பதை பற்றி புரியவைக்க 'போற்குற்றமல்ல இனப்படுகொலையே, இலங்கை அல்ல தனி தமிழ்' ஈழமே !!' என்ற தலைப்பின் கீழ் வரும் ஏப்ரல் மாதம் 20,21 தேதிகளில் புகைப்பட, ஓவிய கண்காட்சி.. காணொளி திரைகாட்சி மற்றும் கருத்தரங்கு மாணவர்களின் கலை நிகழ்சிகளோடு ஏற்பாடு செய்வது என முடிவெடுக்கப்பட்டுள்ளது . . கையெழுத்து இயக்கம் , மாதிரி பொது வாக்கெடுப்பு போன்ற நிகழ்வுகள் கண்காட்சியின் ஒரு அங்கமாக நடத்தப்பட இருக்கிறது.. இவன். தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு.. (முகநூல் : loyolahungerstrike)
  14. தேனி மாவட்டம் கம்பம் நகரில் நகர மாணவர் கூட்டமைப்பு சார்பில் இலங்கை தமிழர் படுகொலையை கண்டித்தும், மத்திய அரசு நடவடிக்கை எடுக்காததை கண்டித்தும் கண்டன பேரணி, ஆர்பாட்டம் நடைபெற்றது. -------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- விருதுநகரில் , நேற்று அமைதி வழியில் போராடிய மாணவர்கள் மீது , குண்டர்களை கொண்டு தாக்கிய காங்கிரஸ் கட்சியினரை கண்டித்து அனைத்து கல்லூரி மாணவர்களும் ஒன்றிணைந்து போராட வேண்டியது அவசியம் அதற்கான முன்னெடுப்பு பணிகளை அந்த பகுதியில் உள்ள மாணவர்கள் அனைத்து கல்லூரி மாணவர்களிடம் பேசுங்கள். -------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாணவர்களையும் கொண்டு ஒரு மாபெரும் மனித சங்கிலி நடத்தலாம். it should happen in crowed area like bustand, theatres, railway station,etc.. With thamil eezham posters n banners... SAME TIME... ALL COLLEGE STUDENTS... Pls Arrange for that.. (முகநூல் : loyolahungerstrike)
  15. தனி ஈழமா ? தனித் தமிழ் நாடா ? இந்தியாவே முடிவு செய் ! தமிழக சட்டமன்ற தீர்மானத்தை புறக்கணித்த இந்திய அரசுக்கு தமிழர்கள் நாம் கொடுக்கும் கடைசி வாய்ப்பு . இரண்டு விருப்பத் தேர்வுகள் உள்ளது. ஒன்று தமிழக சட்டமன்ற தீர்மானம் முன்மொழிந்த தமிழீழம் குறித்த பொது வாக்கெடுப்புக்கு இந்தியா துணை செய்ய வேண்டும் அல்லது தமிழ் நாட்டை தனி நாடாக இந்தியா அறிவிக்க வேண்டும். இரண்டில் ஏதாவது ஒன்றை இந்தியா தேர்வு செய்தாக வேண்டும். இனி தமிழர்களின் (மாணவர்களின் ) கோரிக்கையாக இதுவாகவே இருக்க வேண்டும். (முகநூல்) ------------------------------------------------------------------------------------------------------------------------------- தமிழக உளவுத்துறை பேஸ்புக்கில் முக்கிய நபர்களின் அப்டேட்டுகளை கூர்ந்து கவனித்து வருவதாக தகவல்..." (முகநூல்)

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.