Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மெசொபொத்தேமியா சுமேரியர்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by மெசொபொத்தேமியா சுமேரியர்

  1. இலங்கைப் புத்தக்கத்தைத்தான் கேட்டனர். கொண்டுபோனது இங்கிலாந்துப் புத்தகம்.
  2. முப்பது தர முடியாதா என்றேன். ஒத்துக்கொள்ள மாட்டேன் என்றுவிடனர். நான் ஒருநாளும் அவர்களைத் தள்ள அனுமதித்ததில்லை. போன தடவை நாம் கதைத்துக்கொண்டு நிற்க அவர்களே வண்டி தள்ளுகிறோம் என்று ஒன்றைத் தள்ளவும் தொடங்க, மகள் நாமே தள்ளுவோ வீடு எந்தபின் விட்டுவிட்டுப் போய்விட்டனர். எனக்கும் கொஞ்சம் பயமாகத்தான் இருந்தது. கூடக் கேட்டால் என்ன செய்வது என்று. நல்லகாலம் நாற்பதுடன் நிறுத்திவிட்டனர். பிரச்சனை நமக்கு அல்வா சாப்பிடுவது போல 😂
  3. அட நீங்களும் இன்னும் நாட்டுப் பக்கம் போகவில்லையா எழுத மனமே வருதில்லை. ஒன்றாவது எழுதலாம் என்று .. .. .. நன்றி அக்கா வருகைக்கு. ஒவ்வொன்றிலும் 43,42 சிலநேரம் விட்டுவிடுவார்கள் என்ற நப்பாசை 😀 கையில் கொண்டுபோவதை அளவாய்க் காட்டிவிட்டு பின் கொஞ்சம் மேலதிகமாக வைத்தது வேறுகதை 😀 அது வேறை இது வேறை 😂
  4. ஒருவர் 40 கிலோ கொண்டு செல்லலாம் என்றதில் இருவருக்கும் 80 கிலோ அனுமதி. அதைவிட 7 கிலோ கையில் கொண்டுபோகலாம். இரு பெரிய சூட்கேஸ் முழுதும் அங்குள்ளவர்களுக்குக் கொடுப்பதற்கான ஆடைகள், சொக்களற், ஓட்ஸ், கப் சூப்பக்கற், பிஸ்கட் இப்படி கண்டதை எல்லாம் வாங்கி நிரப்பி அதிலும் கிலோ கூடி ஒரு நான்கு கிலோ சொக்ளற்றும் மடிக் கணனியும் மகளிடன் திரும்பக் கொடுத்து ஒருவாறு விமானத்தில் ஏறி அமர்ந்தாயிற்று. மிகப் பெரிய விமானத்துள் ஆயிரம் பேருக்கும் அதிகமாக இருந்திருப்பார்கள் என நினைக்கிறேன். வலது பக்கமாக உணவு கொடுத்து முடிந்த பின் ஒரு மணி நேரத்தின் பின்னரே எமக்கான உணவு வந்து சேர்ந்தது. பக்கத்து இருக்கைக்கு உணவு வரும்போது வயிறும் மனமும் தயாரானாலும் உணவு வராத கடுப்பும் ஏமாற்றமும் சேர்ந்து இன்னும் பசியை அதிகரிக்க நன்றி கூடச் சொல்லாமல் உணவை வாங்கி உண்டு கோபத்தைக் குறைத்துக்கொண்டேன். முன்னர் எமிரேட்ஸின் கவனிப்பு மிகையாகவும் உணவும் தரமாக இருக்கும். இம்முறை மிகுந்த ஏமாற்றம்தான். இம்முறை எனது தம்பியும் எம்முடன் வந்திருந்தான். அவன் 39 ஆண்டுகளாக தாயகம் செல்லவில்லை. முன்னர் ஆனையிறவில் கைதாகி ஒருவாரம் சிறையில் இருந்தவன். தடைசெய்யப்பட்ட பட்டியலில் அப்பாவின் பெயர் போட்டபோது இலங்கை பாதுகாப்புப் பிரிவினரின் இணையத்தளத்தில் அவனும் நானும் லண்டனில் இருக்கிறோம் என்பது வரை பெயர் விபரங்களுடன் போட்டிருந்தார்கள். அதைப் பார்த்ததில் இருந்து அந்தப் பக்கமே போகமாட்டேன் என்று இருந்தவனை, நான் உன்னோடு வாறன். எது நடந்தாலும் நான் பார்த்துக் கொள்ளுவன் என்னும் நம்பிக்கையில் என்னோடு வந்திருந்தான். விமானத்தை விட்டு இறங்கி ஒன்லைன் விசாப் படிவத்தைக் காட்டி எனக்கும் கணவருக்கும் ஒருமாத விசா வழங்கியபின்னும் எமக்கு முன்னால் போனவனை நிறுத்திவைத்துவிட்டு உள்ளே ஒரு அறைக்கு அழைத்துப் போக நானும் கணவரும் சேர்ந்தே போக, எம்மை இருக்கச் சொல்லிவிட்டு தம்பியை மட்டும் அழைத்து அவனின் பாஸ்ட்டை திரும்பத்திரும்பப் பார்ப்பதும் வெளியே போவதும் வருவதுமாக இருக்க, எதனால் பிந்துகிறது என்கிறேன். “இவர் 39 ஆண்டுகளாக இந்தப் பக்கம் வரவில்லை. இவரின் பழைய கடவுச்சீட்டு இருக்கிறதா” அது அவனிடம் இல்லை என்றாலும் வெளியே காட்டிக்கொள்ளாது “எதற்காக நாம் பழைய கடவுச் சீட்டை கொண்டுவரப் போகிறோம்” என்கிறேன். கணவர் காதுக்குள் கொஞ்சம் நைசா கதை என்கிறார். “அது இல்லாமல் இவர் எப்பிடி இந்த நாட்டை விட்டுப் போனார் என்று எங்களுக்குத் தெரியணும் இல்லையா. அதோட இத்தனைகாலம் ஏன் வரவில்லை” என்கிறார். உடனே நான் “எங்கள் குடும்பத்தவர் எல்லோருமே வெளிநாட்டில் தான். அதனால் தம்பி வரவில்லை. இம்முறை எமது ஊரையும் நாட்டையும் பார்க்கத்தான் வந்தவன்” என்கிறேன். “இந்த நாட்டை விட்டுப் போறவைக்கு இங்க பதிவிருக்கோணும்” “இதுக்கு முதல் நிறையப்பேர் பதிவே இல்லாமல் வந்திருக்கினமே” “அது முந்தி. இப்ப கட்டாயம் பதிவு இருக்கவேணும்” நான் எதுவும் பேசாமல் இருக்கிறேன். ஒரு ஐந்து நிமிடம் அவர் கணனியைப் பார்த்துக்கொண்டு இருக்க எனக்குப் பொறுமை போகிறது. “எங்களை அழைத்துப் போக வந்து வெளியே காத்துக்கொண்டிருக்கிறார்கள்” “இவரை நாங்கள் வடிவா விசாரிக்க வேணும். ஒரு ஐந்து ஆறு மணித்தியாலம் செல்லும்” “சரி என்ன செய்யலாம் சொல்லுங்கள்” நான் இறங்கிப் போய் கேட்கிறேன். அவமானமாக இருந்தாலும் வேறு வழி தெரியவில்லை. “கொஞ்சம் பொறுங்க” என்றுவிட்டு யாருக்கோ போன் செய்ய ஒருவன் வருகிறான். பார்த்தால் தமிழன் போல இருந்தாலும் ஆங்கிலத்தில் கதைக்கிறான். இதில யார் கூட கதைக்கிறது என்கிறான். என்னோடு கதையுங்கள் என்று நான் கூற “வாங்க” என்று தமிழில் சொல்ல நான் எழுந்து செல்கிறேன். அறைக்கு வெளியே வந்ததும் கொஞ்சம் பணம் கொடுத்தா எல்லாம் கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவார் என்கிறான். நாங்கள் லீகலா விசா எடுத்துத்தானே வந்தது என்கிறேன். “எவ்வளவு வச்சிருக்கிறீங்க” என்கிறான். நாம் பணம் ஒன்றும் கொண்டுவரவில்லை. பாங்க் காட் தான் இருக்கு என்கிறேன். “ஒரு நாற்பது எடுத்துத் தாங்க” “எங்கே எடுப்பது? “நான் கூட்டீற்றுப் போறன்” நான் கணவரிடம் சென்று காட்டை எடுத்துக்கொண்டு வர, என்னைப் பாதுகாப்பாக அழைத்துச் சென்று வெளியே இருக்கும் ATM இல் பணம் எடுத்தபின் உள்ளே அழைத்து வர அறைக்குள் போக முன்னரே பணத்தை வாங்கிக்கொண்டு உள்ளே சென்று அவரிடம் கூற அவர் உடனே தம்பியின் கடவுச் சீட்டை அவனிடம் கொடுக்க அவனே எம்மை அழைத்துச் சென்று தம்பிக்கு விசாவைக் குத்தி வெளியே விடுகிறான். கோபம் வந்தாலும் ஒன்றும் செய்ய முடியாத கையறு நிலையை எண்ணி மனதை அடக்கிக்கொண்டு வெளியே வர வேறு வழியில்லை என்று மனம் தெளிகிறது. எமக்காக வந்த வான் ஓட்டுனர் வெளியே காத்திருக்க மனம் நிம்மதியடைகிறது. போன இரண்டு நாட்களில் நெருங்கிய உறவினர்களிடம் சென்று பின் எமது வீட்டை சுற்றி கமரா பூட்டி, எனது செடிகளுக்கு சொட்டுநீர் பாசனக் குழாய்கள் பூட்டி முடிய ஒன்றரை வாரங்கள் போய்விட, அதன்பின்னர்தான் இந்தியா போனால் அந்த வங்கி அலுவலையும் ஒருக்காப் பார்க்கலாம் என்று நான் நினைவுபடுத்த, சரி நானும் வாறன். எனக்கும் சேர்த்து டிக்கற் போடு என்று மனிசன் சொல்ல எனக்கு மகிழ்ச்சி ஏற்படுகின்றது. பலாலியால் போவோமா என்று மனிசன் கேட்க, கொழும்பு போய் போவதே அதிக கிலோ கொண்டு வரலாம் என்கிறேன். பாலாலியால் போனவர்கள் உளவு இயந்திரத்தில் போனதுபோல் இருந்ததாகக் கூறியதும் ஒரு காரணம். அடுத்த நாளே விமானச் சீட்டுப் பெற்றுக்கொண்டதும் அடுத்த மூன்று நாட்களில் சென்னை செல்ல ஆயத்தம் ஆயாச்சு. ஒருவருக்கு போகவர 69 ஆயிரம் ரூபாய்கள். ஒன்லைனில் சென்னை T நகரில் ஒரு நாளுக்கு 3000 இந்திய ரூபாய்களுக்கு கோட்டல் புக் செய்து ஒருவாறு போய் இறங்கியாச்சு. அந்தக் கோட்டலுக்கு அண்மையில் சில உணவகங்களும் இருந்ததில் மூன்று நேரமும் மிகச் சுவையான உணவுகள் உண்டுவிட்டு கடைகளை மேலோட்டமாகப் பார்த்துவிட்டு ஒன்றுக்கு இரண்டு தேநீரும் குடித்துவிட்டு மனநிறைவுடன் இரவு ஏசியைப் போட்டுவிட்டுப் படுத்தால், சிறிது நேரத்தில் கால் கைகளில் கடி. மூட்டைப் பூச்சியாக்குமென்று துடித்துப் பதைத்து எழுந்தால் சில நுளம்புகள் பறக்கின்றன. இரவு பத்துமணி. இந்த நேரத்தில் எங்கே வேறு இடம் மாறுவது? ஏசியைக் கூட்டி விடுறன். உது மொத்தப் போர்வை தானே. இழுத்துப் போர்த்திக்கொண்டு படு என்கிறார் கணவர். பிரையாணக் களைப்பில் ஒருவாறு தூங்கி காலை எழுந்து பல் விளக்கக் குளியலறைக்குச் சென்றால் கண்ணாடியில் தெரிந்த என் முகத்தைப் பார்த்து நானே பயந்துவிட்டேன்.
  5. நன்றி கருத்துக்கும் வருகைக்கும். நல்ல ஆசைதான் 😀 மிக்க நன்றி அண்ணா நன்றி புங்கை உண்மைதான் அண்ணா. மேலதிக பொ திக்கு 150 பவுண்டஸ். அதிலும் ரிக்கற்றுக்கு 100 பவுண்ட்ஸ் கூடக் குடுக்கலாம். எந்த விமானத்திலும் உணவு இப்ப நன்றாகவே இல்லை
  6. அரபு நாடுகளில் அரபுக்காரர்கள் செய்யும் பாலியல் வன்கொடுமைகள் மறைக்கப்படுகின்றன. வெளிநாட்டு அப்பாவிகள் தான் மாட்டுப்பட்டு கல்லடி படுகிறார்கள். இதுபற்றி எழுதினால் அது நீட்ட கட்டுரையாகிவிடும்
  7. நல்லாத்தான் நொந்துபோனியள். நகைச்சுவைக் கவிதை நன்றாகவே இருக்கு.
  8. நான் இந்தியா செல்வது இது ஐந்தாவது தடவை. முதல் தடவை சென்றது என் பதினைந்தாவது வயதில் என் அம்மா மற்றும் தம்பியுடன். இணுவிலில் இருந்த சண்முகலிங்கம் என்பவர் ஆட்களை குழுவாக இந்தியாவின் பல தலங்களுக்கும் ஒவ்வொரு ஆண்டும் கூட்டிச் செல்பவர். அந்தமுறை என் அம்மா கற்பித்த ஆரம்பப் பள்ளியின் ஆசிரியர்கள் சேர்ந்து ஒரு பத்துப்பேர் சேர்ந்து இந்தியச் சுற்றுலாவுக்குத் திட்டமிட்டிருந்தனர். என் வயதின் காரணமாக என்னைத் தனியே விட்டுச் செல்ல என் அம்மா விரும்பவில்லை. அதனால் எனக்கு அடித்தது அதிட்டம். எனக்குப் பின் பிறந்த ஒரு தம்பியையும் இரு தங்கைகளையும் அம்மாவின் பெற்றோர் சகோதரிகளுடன் விட்டுவிட்டு ஆறே வயதான என் கடைக் குட்டித் தம்பியையும் எம்மோடு அழைத்து வந்திருந்தார். முதலில் ஊரில் இருந்து கிளம்பி தலை மன்னார் சென்று அங்கிருந்து கப்பலில் இராமேஸ்வரம் சென்று அங்கிருந்து தொடருந்தில் பயணம் எது பின்னர் எமக்காக ஒழுங்கு செய்திருந்த மகிழுந்தில் ஒவ்வொரு ஊராகச் சென்று மீண்டும் ஒரு மாதத்தின் பின்னர் ஊர் வந்து சேர்ந்தோம். முதலாவது அந்தக் கப்பல் பயணமே எனக்கு எத்தனையோ அனுபவங்களையும் மகிழ்ச்யையும் தந்தது என்றாலும் அதுபற்றி எழுதும் ஆர்வம் எனக்கு இதுவரை எழுந்ததில்லை. அதன் பின் பதினாறு ஆண்டுகளின் பின்னர் திருமணமாகி கணவர் பிள்ளைகளுடன் சென்றபோது என் தந்தையும் கணவரின் பெற்றோரும் எம்முடன் வந்தனர். அப்போது என் நண்பியின் தமக்கை போர் சூழல் காரணமாக இந்தியா சென்று அங்கு ஒரு சொந்த வீட்டையும் கட்டி மேல்மாடியில் உள்ள மூன்று அறைகளை இந்தியாவுக்கு வருபவர்களுக்கு வாடகைக்கு விடுவார். எமக்கும் அது பாதுகாப்பு என்று கருதியதால் நாமும் மகிழ்வாகவும் நிம்மதியுடனும் அங்கு இருக்க முடிந்தது. அடுத்த நாளே அவரிடம் கதைத்தபோது அவரே ஒரு டாடா சுமோ ஜீப் ஒன்றை எங்களுக்காக ஒழுங்குசெய்து தந்தார். ஒருமாதம் மீண்டும் கோவில்கள் அரண்மனைகள் முக்கிய இடங்கள் என்று அதில் திரிந்தபோதும் பார்த்த இடங்களை மீண்டும் பார்த்தபோதும் எனக்குச் சலிக்கவில்லை. ஆனால் ஜீப்புக்கு செலுத்திய தொகைதான் தலைசுற்ற வைத்தது. ஆனாலும் அதுபற்றி என் கணவரைத் தவிர யாரும் கவலைப்படவில்லை. ஆனாலும் மீண்டும் இனி இந்தியா போவதே இல்லை என்று என் கணவர் கூற எனக்கோ மீண்டும் போய் இந்தியா முழுவது திரிந்துவிட்டு வர வேண்டும் என்னும் அவா கூடியது. எல்லோரும் இருந்து இதுபற்றிக் கதைத்துக்கொண்டிருந்தபோது அந்த எம்மூர் அக்கா “நீர் இங்கை ஒரு பாங்க் ஏக்கவுண்ட் திறந்துபோட்டுப் போனால் வருஷா வருஷம் கொஞ்சக் காசை அனுப்பினால் உமக்கு ஊர் சூத்திப் பாக்க காசும் சேர்ந்திடும்” என்று சொல்ல எனக்கும் அது நல்ல யோசனையாகத் தெரிய ஒருவாறு கணவரை சம்மதிக்க வைத்து வங்கிக் கணக்கொன்றை எங்கள் இருவரின் பெயரிலும் திறந்தாச்சு. அடுத்த இரண்டு ஆண்டுகளில் ஒரு ஐநூறு டொச் மாக்குகள் மட்டும் அனுப்பி அதன்பின் 2001 இல் கணவரின் தம்பியின் திருமணத்துக்குச் சென்றபோது இன்னும் ஒரு ஆயிரம் என்று போட்டாலும் மனிசன் மட்டும் எங்கட நாடும் இல்லை. உன்ர விசர் கதையைக் கேட்டு எக்கவுண்டில காசைப் போட்டாச்சு. திரும்பக் கிடைக்குமோ இல்லையோ என்று எப்பவும் எதிர்மறையாக ஏச, கடைசிவரையும் போகாது என்று மனிசனுக்குக் கூறினாலும் எனக்கும் ஒரு வீதப் பயம் இருந்தது என்னவோ உண்மை. அதன்பின் 2014 இல் என் நூல் வெளியீட்டுக்குச் சென்றபோது மனிசன் வேண்டாம் வேண்டாம் என்று சொல்லியும் கேளாமல் இன்னும் ஒரு இரண்டாயிரம் பவுண்சுகளையும் கொண்டுசென்று முன்னர் போட்டவைகள் எல்லாவற்றையும் சேர்த்து மூன்று ஆண்டுகள் நிரந்தர வாய்ப்பில் இட்டுவிட்டு வந்தாச்சு. மூன்று ஆண்டுகளின் பின்னர் தானாகவே புதுப்பிக்கப்படும். அப்போது உங்களுக்குக் கடிதம் மூலம் அறியத் தருவோம் என்றதுடன் சரி. எந்தக் கடிதமும் வரவில்லை. இப்ப மனிசன் எதுவும் சொல்லாமலே எனக்குப் பயம் எழ, வங்கி முகாமையாளருடன் தொலைபேசியில் கதைக்க அவரும் நீங்கள் பயம் கொள்ள வேண்டாம். உங்களுக்கு நான் மெயில் ஒன்று போடுகிறேன் என்று சொன்ன கையோடு அதுவும் வந்து சேர, அதன் பின்தான் எனக்கு நிம்மதி வந்தது. அது நடந்து படிக்கட்டு ஆண்டுகளாகியும் மீண்டும் இந்தியா செல்லும் வாய்ப்பு எனக்குக் கிட்டவில்லை. ஏனெனில் என் கணவருக்கு இந்தியா என்றாலே வேப்பங்காயாகவே இருந்ததும் பிள்ளைகள் கல்வி, திருமணம் என்னும் சுழலும் இந்தியாவைப் பற்றி நினைக்கவே நேரம் இல்லை என்றானது. கடந்த ஆண்டு நான் ஆறு மாதங்கள் இலங்கை சென்ற போது எனது சுவிஸில் இருக்கும் நண்பி ஒருத்தியும் நானும் உன்னுடன் வர ப்போகிறேன் என்றதும் உடனே எனக்கு அவளுடன் இந்தியா செல்ல வேண்டும் என்னும் அவா எழ அவளிடம் கேட்கிறேன். அவள் இதுவரை இந்தியா சென்றதில்லை. இனிச் செல்லும் ஆர்வமும் தனக்கு இல்லை என்று கூற சரி இலங்கையிலாவது இருவரும் சேர்ந்து திரிந்து இடங்கள் பார்க்கலாம் என்றதுடன் நான் எங்கெங்கு செல்லலாம் ஆவலுடன் பட்டியலிட்டயபடி காத்திருக்க, அவளோ கடைசி நேரத்தில் தான் தனிய இலங்கை வருவது தன் கணவருக்குப் பிடிக்கவில்லை என்று கூறி வாராமலே விட்டது வேறு கதை. இம்முறை என் வளவில் மேலதிக மரக்கன்றுகள், செடி கொடிகள் எல்லாம் வைப்பதற்கு ஏற்ற காலம் ஒக்டோபர் என்பதால் நான் விமானச்சீட்டு முதலே எடுத்து வைத்தபடி காத்திருக்க, வாங்கிய வீட்டையும் வளவையும் நான் வடிவாப் பார்க்கவே இல்லை. நானும் உன்னுடன் வாறன் என்று மனிசன் சொல்ல சரி என்று அவருக்கும் பயணச் சீட்டு எடுக்க வெளிக்கிட இப்ப நான் வர ஏலாது. டிசம்பர் அல்லது தை மாதம் போவம் என்று கூற நான் ஏற்கனவே ஒக்டோபருக்கு எடுத்திட்டனே என்கிறேன். பரவாயில்லை மாத்து என்று சொல்ல, டிசம்பரில் விலை ஆயிரம் தாண்டியது. சரி தை மாதம் போடுவோம் என்று இணையத்தில் தேடினால் எல்லா 23-30 kg மட்டுமே கொண்டுபோகலாம் என்று காட்ட 40kg பொதிகள் கொண்டுபோகக் கூடிய விமானம் எமிரேட்ஸ் மற்றும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் இரண்டும் தான். அதில் என் தேர்வு எமிரேட்ஸ் தான். ஏனெனில் உணவும் கவனிப்பும் நன்றாக இருக்கும் என நான் எண்ணினேன். எல்லாம் எதிர்மாறாக இருந்தது வேறுகதை. வரும்
  9. வரவர பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்தவண்ணமே இருக்கின்றன. இவர்களுக்கு பொதுவெளியில் வைத்து கல்லால் எறிந்து கொள்ளும் தண்டனை கொடுத்தால் மாத்திரம் தான் மற்றவர்கள் கொஞ்சம் பயப்படுவார்கள்.
  10. அது முடிஞ்சு ஆறுமாதாமாகப் போகுது 😄 சரியாய் சொன்னீர்கள் 😂 அதுக்கும்தான்
  11. கொஞ்சம் மவுசை உருட்டினீர்கள் என்றால் பழையது வரும் 😂
  12. அவன் தூரத்தில் வரும்போதே துர்நாற்றம் ஒன்று வீச அந்தப் பெரிய கண்ணாடியை மீறி சிறிய கடிதங்கள் மட்டுமே போகக்கூடிய இடைவெளியூடாக அந்த நாற்றம் என் மூக்கில் அறைய நான் என்னை அறியாமலேயே கைகளால் மூக்கைப் பொத்திவிட்டு ஒரு வாடிக்கையாளருக்கு முன் அப்படிச் செய்வது அழகல்ல எனறு எண்ணி கைகளைக் கீழே விட, அவன் அந்த இடைவெளியால் தாளைத் தருகிறான். அவனுக்குரிய பணத்தைக் கொடுத்துவிட வழமைபோல் நன்றி கிருஷ்ணா என்றபடி திரும்புகிறான். அவன் கைகளில் வைத்திருந்த பொருட்கள் அப்போதுதான் என் கண்ணில் தெரிகின்றன. "உன் பெயர் என்ன" "மார்ட்டீன்" "எதற்கு இந்த வண்ணக் கட்டிகளையும் பென்சில்களையும் வாங்கிக்கொண்டு செல்கிறாய்" "நான் ஆர்ட் கீறுவதில் மாஸ்ரேஸ் முடித்திருக்கிறேன். எனக்குத் தோன்றும் நேரங்களில் படங்கள் கீறுவேன்" "உனக்குக் குடும்பம் இருக்கிறதா" "யாரும் இப்போ இல்லை" "வீடு கூட கவுன்சில் தரவில்லையா" "எனக்கு வீடு இருக்கிறது. இரவில் மட்டும் அங்கு சென்று தூங்குவேன்" "என்னைத் தவறாக நினைக்காதே. உன்னில் ஒரு கூடாத மணம் வருகிறது. இத்தனை படித்த நீ ஏன் சுத்தமாக இருக்கக் கூடாது." "ஓகே" என்றுவிட்டு அவன் செல்ல, வெளியே கடையில் தட்டுக்களில் பொருட்களை அடுக்கிக்கொண்டிருந்த ஒருவர் "என்ன அக்கா. ஏன் இப்பிடி மணக்குது என்று அவனுக்குச் சொன்னீர்கள்" "அப்பவாவது அவன் குளித்து உடைமாற்றிக்கொண்டு வருக்கிறானா என்று பார்ப்போம். எத்தனை நாட்கள்தான் அவனின் நாற்றத்தைத் தாங்குவது" "நீக்கள் சொன்னது போலத்தான் எங்கட முதலாளியும் அவனுக்கு ஒருநாள் சொன்னவர். அவன் அதைக் கேட்டிட்டு "ஜோன் எனக்கு ஒண்டும் சொல்லாதை. நான் இப்பிடித்தான் இருப்பன். எனக்கு மில்லியன் வியூவேர்ஸ் இன்ஸ்ரகிறாமில் இருக்கினம். உனக்குப் பிடிக்காட்டில் நான் எதிர்ப்பக்கம் இருக்கிற கடையில போய் இருக்கிறன்" என்றானாம். அதன்பின் முதலாளி வாயே திறக்கிறேல்லை. ஆனால் நீங்கள் பொம்பிளை எண்டதால ஒண்டும் சொல்லாமல் போறான். நான் சிரித்துவிட்டு என் அழுவலைப் பார்க்கிறேன். அடுத்த நாள் வேலையை ஆரம்பித்து பத்து நிமிடம் செல்ல மார்ட்டீன் என்னை நோக்கி வந்து குட் மோர்னிங் கிருஷ்ணா என்கிறான். நேற்று அவனுடன் கதைத்த பின் எனக்கு அவன்மேல் ஒரு மதிப்புக் கூடியிருந்தது. அதற்குக் காரணம் அவன் படித்திருக்கிறான் என்பது மட்டுமல்லாமல் நான் வேலை முடிந்து செல்லும்போது அவன் மட்டையில் வரைந்து முடித்திருந்த அந்த அழகிய அர்த்தம்பொதிந்த ஓவியமும்தான். இன்று நான் சுத்தமாக வந்திருக்கிறேன் என்று தன் ஆடையையும் தொட்டுக் காட்ட அப்பதான் அட இவனில் இன்று எந்தத் துர்நாற்றமும் வீசாததை நான் கவனிக்கவில்லையே என வியந்தபடி மிக்க நன்றி மார்ட்டீன். என் பேச்சு உன்னை காயப்படுத்தியிருந்தால் மன்னித்துக்கொள் என்கிறேன். இல்லை இல்லை. நான் ஒன்றும் நினைக்கவில்லை. கடவுள் உன்னை ஆசீர்வதிக்கட்டும் என்றபடி திரும்பிச் செல்ல என் மனம் நிம்மதி அடைகிறது. கடைக்கு வரும் பலரும் அவனுக்கு பணம் கொடுப்பது மட்டுமன்றி அவனைக் கூட்டிவந்து அவனுக்குத் தேவையான உணவுகளைக்கூட வாங்கிக் கொடுப்பார்கள். அங்கு மெசினில் கோப்பி அல்லது தேநீர் கூட அவனாகவே வாங்குவதுமுண்டு. மற்றவர்களும் வாங்கிக் கொடுப்பதும் உண்டு. சில நேரங்களில் கையில் பணம் இல்லாதபோது கடையில் நிற்போரிடம் கடன் சொல்லி வாங்கிவிட்டுப் பணம் சேரும்போது கொடுத்தும்விடுவான். இப்ப இரண்டு வாரங்களாக அவனைக் கடைக்கு முன் காணவில்லை. அவன் மன அழுத்தம் காரணமாக மீண்டும் வைத்தியசாலைக்குச் சென்றுவிட்டானோ? காலையில் எழுந்து பல்விளக்கி முகம் கழுவுகிறானோ என்று கூடத் தெரியாது. குடும்பம் இல்லை. வேறு தொந்தரவுகள் இல்லை. வீதியிலேயே இருப்பதால் வீடு இருந்தாலும் கரண்ட் காசுகூடக் கட்டும் தேவை இல்லாத அவனுக்கே மன அழுத்தம் என்றால் இத்தனை சுமைகளைத் தாங்கி இத்தனைகாலம் குடும்பமாய் வாழும் எனக்கு எத்தனை மனஅழுத்தம் இருக்கவேண்டும். அதனைக்கும் அசையாது இத்தனை மனத்திடத்துடன் நான் இருக்கிறேன் என்னும் பெருமிதமும் எனக்குள் ஏற்படாமல் இல்லை. இருவாரம் ஒரு மாதமாகி ஆறு ஏழு மாதங்களாகியும் அவன் மீண்டும் வரவேயில்லை. அவன் தொடர்ந்தும் மருத்துவமனையில் தான் இருக்கிறானா?? அன்றி அவனுக்கு எதுவும் நேர்ந்துவிட்டதா என்னும் பதைப்பும் என்னுள் எழுந்து மடிய பலரிடம் விசாரித்தும் அவனைப்பற்றி யாருக்கும் எதுவும் தெரியவேயில்லை. அவன் இருக்கும் இடத்தில் அவன் வைத்துவிட்டுப் போன அந்த மட்டையும் சில நிறம் தீட்டும் பென்சில்களும் கேட்பாரற்று அங்கேயே இன்றுவரை கிடக்கின்றன.
  13. சத்தியமாய் நான் இதை மறந்தே போனன். மன்னியுங்கள் மறந்துவிட்டேன் உண்மையை ஒத்துக்கொள்ளத்தானே வேணும்.
  14. காருக்கு நான்கு சில்லுக்கள் என்பதால் ஒண்டும் நடக்காது 😄 வாங்குவன். இன்னும் வாங்கேல்லை.😄 இன்னும் இல்லை.😀
  15. ஆரவன் என்னை வெருட்டியதாகச் சொன்னது ??😃 அதேதான் எல்லாத்திலையும் ஒரு சலிப்பு வந்திட்டுது. கிழமையில இரண்டு தடவை கட்டாயம் முழுகுவமல்லோ 😃 உங்களுக்குத் தெரியுது ஒண்டுதான் எண்டு நீங்களே எப்பிடி முடிவெடுப்பியள் 😀 அப்பிடியா ? எனக்குத் தெரியவில்லை
  16. இன்னும் நிறைய இருக்கு அக்கா ஆனால் களைத்துவிட்டது எழுதி. கடல் வற்றாதுதான். ஆனால் நாங்கள் நதி. ஆதலால் வற்றும்.😂 இதுக்கு மிஞ்சி எழுதி ஆர்வம் இல்லை.
  17. நான்தான் மறந்திட்டன் 😄 எனது பெறாமகன் கூட சித்தி பொலிஸ் மறிச்சால் வாய் காட்டிப்போடாதேங்கோ என்று. இரு தடவை மறித்துவிட்டு உடனே விட்டுவிட்டார்கள். இனி சிங்களம் படிக்கிற மூட்டும் இல்லை. என்ன விதிக்கப்பட்டிருக்கோ பார்ப்போம். இத்தனை காலத்தில் இம்முறைதான் தோம்பு என்பதையே நான் கேள்விப்பட்டது.
  18. கொன்றாக் குடுத்தால் இழுத்தடித்துத்தான் வேலை நடக்கும். தினக்கூலி அன்றே குடுப்பதானால் ஓரளவு வேலை நடக்கும். இந்த செப்டெம்பர் போய் ஸ்கூட்டியில தான் முல்லைத்தீவு வவுனியா கிளிநொச்சி எல்லாம் போய் வரவேண்டும் என்று மனிசன் சொல்லிக்கொண்டு இருக்கிறார். எனக்கு அதை நினைக்கவே நெஞ்சு திக் திக் எண்ணுது இப்பவே. நாம் இருவரும் போய் இருக்கும்போது கட்டாயம் சிறிய கார் ஒன்று எடுப்போம். எமக்குத் தந்த தோம்பில் யாரும் கையொப்பம் இட்டதுபோல் தெரியவில்லை அண்ணா. உண்மையை உரத்துச் சொல்வோம் 😃
  19. தோம்பு என்பது கடந்த காலங்களில் யார் யார் காணியை வைத்திருந்தனர். யாரிடமிருந்து எப்ப வாங்கினர் திகதி உறுதி இலக்கம் உட்பட எல்லாம் இருக்கும். A3 அளவில் மடித்துத் தருவார்கள். கச்சேரியில் தான் இருக்கும். நாமே சென்று பணம் கட்டிப் பெற 160 ரூபாய்கள். அடுத்தநாள் எடுத்துத் தருவதற்கு லோயர் அறவிடும் பணம் பிரதி ஒன்றுக்கு 1500 ரூபாய்கள். நாம் புதிதாக சோலை வரியோ அல்லது காணி வாங்கும்போதோ அல்லது மின்சாரம் பெறவோ அது கட்டடாயம் தேவை. எனக்கு இவ்வளவுதான் தெரியும். வேறு யாருக்கும் இதுபற்றித் தெரிந்தால் குறிப்பிடுக. கன காலம் வராவிட்டால் எல்லாருக்கும் உந்தக்கதிதான். இதிலை நீக்கள் எது என்று சொல்லவே இல்லையே. அனேகமா அந்த நடுவில நிற்கும் கண்ணாடிதானே நீக்கள் ????😄
  20. இவரிடம் 40000 ரூபாய்களுக்கு கன்றுகள் வாங்கினேன். நன்றி அண்ணா ஒரு ஆண்டுகளுள் நாம் கண்டுபிடிக்காவிட்டால் ஒன்றும் செய்ய முடியாது என்றார் ஒருவர். உண்மை தெரியவில்லை.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.