Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மெசொபொத்தேமியா சுமேரியர்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by மெசொபொத்தேமியா சுமேரியர்

  1. மூன்று லண்டன் Heathrow விமானநிலையத்தில் எல்லாப் பயணப் பொதிகளையும் நிறுத்து சரி என்றபின் எமது சிறிய சூட்கேஸ் எல்லாவற்றையும் பெரிய பொதிகளுடனேயே போடலாம் என்றவுடன் அவற்றை இழுத்துப் பறிக்கும் வேலை மிச்சம் என எண்ணிக்கொண்டு அவற்றையும் போட்டுவிட்டு வெளியே வரத்தான் சிறிய சூட்கேஸ்களுக்கு பூட்டுகள் எதுவும் போடவில்லை என்ற எண்ணம் எழ மனம் திடுக்கிடுகிறது. உடனே கணவரிடமும் மகளிடமும் சொல்லிவிட்டு பதட்டத்துடன் பயணப் பொதிகளைப் போட்ட இடத்துக்குப் போகிறோம். நாம் நின்ற இடத்தில் இன்னொரு குடும்பம் நிற்க அவர்கள் போகுமட்டும் காத்திருந்து எங்கள் hand luggage ஐ மீளப் பெற முடியுமா என்று அந்தப் பெண்ணிடம் கேட்க, அதை செய்ய முடியாது. கொழும்பில் தான் அதை எடுக்கலாம் என்கிறார் அந்தப் பெண். வேறு வழியற்று காலை 6.30 இக்கு விமானத்தில் ஏறி இரண்டு மணி நேரத்தில் சூரிச் விமானத்தில் இருந்து இறங்க கணவரை ஏற்றிச் செல்ல electric வீல் செயாருடன் வந்து காத்திருக்கிறார் ஒரு பெண். எங்களைப் பின்னால் வரும்படி கூறிவிட்டு வேகமாகக் கணவரை அழைத்துக்கொண்டு சென்று ஒரு பெரிய அறையினுள் காத்திருக்கும்படி விடுகின்றார். போனை சாச் செய்யும் வசதியும் இருக்க முகநூல், யூரியூப் என்று நேரம் போவது தெரியாமல் போகிறது. இரவிரவாக சரியாகத் தூங்காததில் கணவர் தலைக்கு ruk சாக்கை வைத்துக்கொண்டு அந்த அகலமான பெஞ்சில் தூக்கவாரம்பிக்க நான் வெளியே சென்றுவிட்டு வருகிறேன் என்று மகள் கிளம்ப நானும் தூங்கினால் நன்றாக இருக்கும் என எண்ணுகிறேன். பவுன் நகைகளும் காசுகளும் என் கைப்பையுள் இருக்க எப்படி நான் நின்மதியாய் தூங்க முடியும்?? எனவே மகள் வருமட்டும் முகநூலில் பொழுதைப் போக்க உணவுகள் சிலவற்றுடன் மகள் வருகிறாள். இங்கு சரியான விலை எல்லாம் என்றபடி எனக்கு உணவுப் பொதியைத் தந்துவிட்டுத் தகப்பனை எழுப்புகிறாள். நான் சென்று பக்கத்தில் இருந்த மெசினில் கோப்பி எடுத்துக்கொண்டு வந்து குடித்தபடி உண்கிறேன். ஐயோ அந்த போனையும் நான் என் hand லக்கேஜ்ஜின் முன் பொக்கற்றில் வைத்துவிட்டேனே. யாரும் எடுத்தால் 800 பவுண்ஸ் எனக்கு நட்டம் என்கிறார் மனிசன். தூங்கி எழுந்ததில் ஏற்பட்ட குழப்பமோ என்று நான் எண்ணியபடி போனைக் கையில வச்சுக்கொண்டு என்னப்பா விசர்க்கதை. 2 வரிசம் பாவிச்ச போனுக்கு ஆரும் உவ்வளவு காசைத் தருவினமே என்கிறேன். தன்ர தம்பியாருக்கு என்னோட வேலைசெய்யிற பிள்ளை ஒரு போன் தந்தது. அது புதுபோனப்பா. அதோட றிசீற்றும் அதுக்குள்ள இருந்தது. அதுகும் நான் உள்ளுக்கு வைக்காமல் வெளிப் பொக்கற்றுக்குள்ள வைச்சிட்டன். அதுகும் பொம்பேயில என்ன நடக்குமோ தெரியேல்லை. என்ன காலபலனோ என மீண்டும் மீண்டும் புலம்ப ஆரம்பிக்க, உங்களுக்கு நல்லா வேணும். எனக்கு ஒரு வார்த்தை கூட இதுபற்றிச் சொல்லாமல் என்ன கள்ளத்தனம் என்கிறேன். எல்லாத்தையுமே உனக்குக் கட்டாயம் சொல்லவேணுமோ? நீ மட்டும் எல்லாம் எனக்குச் சொல்லிப்போட்டோ செய்யிறாய் என்றவுடன் வாயை மூடிக் கொள்கிறேன். ஒருவாறு இரண்டு மணிநேரம் போய்விட்டது. இன்னும் ஒருமணிநேரம் கடத்திவிட்டால் போதும். முகநூலில் மேய்ந்ததில் எனது போனில் சாச் 10% வீதம்தான் இருக்கு எனக் காட்ட சரி இதை சாச்சில் போட்டிட்டு மற்ற போனை எடுத்துப் பாவிப்பம் என எண்ணியபடி சாச் செய்யப் போடுகிறேன். மற்ற போன் என்றவுடன் ஏதோ புதிது என்று எண்ணிவிட வேண்டாம். அது இரண்டு ஆண்டுகளுக்கு முன்புவரை பயன்படுத்திய ஐபோன். அதில் லைக்கா சிம் போட்டு அவசரத்துக்கு இலங்கை, இந்தியா என்று கதைப்பது. தற்போது இலங்கை சென்றால் அங்கத்தே சிம் போட்டுப் பாவிப்பதற்காகக் கொண்டு செல்கிறேன். கைப்பையுள் கைவிட்டு போனைத் தேடுகிறேன் அகப்படவில்லை. அப்போதுதான் நானும் அந்த போனையும் ஐபாட்டையும் என் hand luggage இல் வைத்தது நினைவில் வர நெஞ்சு பாதைக்கிறது. ஐயோ கடவுளே முருகா என் போனையும் ஐபாட்டையும் யாரும் எடுக்காமல் நீதான் காப்பாற்றிக் கொண்டுவந்து என்னிடம் சேர்க்கவேண்டும் என்று மனதுள்ளே சொல்லிக்கொள்கிறேன். என் கணவர் வாய்விட்டு பெரிதாகச் சிரிக்க என் மகளும் சேர்ந்து சிரிக்கிறாள். ஏன் இரண்டு பேரும் உப்பிடிச் சிரிக்கிறியள் என்று எரிச்சலுடன் கேட்கிறேன். உங்கள் போனையும் நீங்கள் hand luggage இல் வச்சிட்டுத்தான் அப்பாவைத் திட்டினீங்களா என்கிறாள். அப்பதான் நான் மனதுள்ளே சொல்வதாய் எண்ணி வாய்விட்டுச் சொல்லிவிட்டேன் என்பது புரிய விட்டுக்கொடுக்காமல் என்னுடையது பழைய போன். துலைந்தாலும் 800 பவுண்டஸ் நட்டம் இல்லை என்கிறேன். கடவுளே கடவுளே அம்மாவின் போன் துலைந்தாலும் பறவாயில்லை. அப்பாவின் போன்மட்டும் வந்து சேரவேண்டும் என்கிறாள் மகள். என் போன் துலையாது என்று எனக்கு நம்பிக்கை இருக்கு என்று மகளுக்குக் கூறினாலும் மனம் முழுவதும் தவிப்பாகவே இருக்க வேறுவழியின்றி ஒரு பக்கமாகச் சரிந்து அந்த பெஞ்சில் கண்களை மூடியபடி படுக்கிறேன். அம்மா எமக்கு நேரமாகிறது. எழும்பி ரொய்லெட் போவதானால் போய் தலையையும் இழுத்துக்கொண்டு வாருங்கள். நான் தயாராகிவிட்டேன். அப்பாவும் ரெடி என்கிறாள். மீண்டும் விமானதில் ஏறி வழமையாகச் செய்வதைச் செய்து இரண்டு திரைப்படங்களும் பார்த்து முடிய பொம்பேயில் தரையிறங்குகிறது விமானம். நான் அன்றுதான் முதன்முதல் அந்த விமானநிலையத்துக்கு வருகிறேன். நாம் இன்னும் இரண்டு மணி நேரத்தில் இலங்கை போகும் விமானத்துக்கு மாறவேண்டும். அங்கும் ஒருவர வந்து கணவரை ஏற்றிக்கொண்டு செல்வதற்காகக் சக்கர நாற்காலியுடன் காத்திருக்கிறார். அவரே எம்மைக் கூட்டிக்கொண்டு செல்ல நின்மதியாகச் செல்கிறோம். விமானம் மாறுபவர்களுக்கு பெரிதாக இடையில் எந்தச் சோதனையும் இருப்பதில்லை. ஆனால் குடிவரவுத் திணைக்களத்தில் எமது கடவுச் சீட்டைப் பாத்து ஏறப்போகும் விமானத்துக்குரிய போர்டிங்பாஸ் தருவார்கள். அதைப் பெற்றுக்கொண்டு போகும்போது எமது பைகளை, நாம் கொண்டு செல்லும் எல்லாவற்றையும் செக் பண்ணவேண்டும் என்கின்றனர். சரி என்று பெல்ட் உட்பட ஆனைத்தையும் ஸ்கான் செய்யும் பெல்ட் இல் வைத்துவிட்டு அந்தப் பக்கம் சென்றால் எல்லாவற்றையுமே திறவுங்கள் பார்க்கவேண்டும் என்றுவிட்டு ஒவ்வொன்றாக ஆராய்ந்து பார்க்க எனக்கு எரிச்சல் வருகிறது. மற்றவர்கள் சிலரை செக் பண்ணாமலே அனுப்புகின்றனர். எழியவங்கள். எங்களை மட்டும் வேணும் எண்டு நிப்பாடி வச்சிருக்கிறாங்கள் என்கிறேன். வாயை மூடிக்கொண்டு நில் அவங்களுக்கும் தமிழ் தெரியலாம் என்று கணவர் சொல்ல நான் அமைதியாகிறேன். எமது பெரிய சூட்கேஸ்களை யாரும் திறக்காமல் இருக்க பாதுகாப்புக்காக பொலித்தீனால் சுற்றியே போட்டோம். மிகுதி பொலித்தீனை இலங்கையிலிருந்து வரும்போது பயன்படுத்துவதற்காக கணவரின் முதுகுப் பையில் வைத்திருந்தோம். அதைக் கொண்டுபோகக் கூடாது என்று எடுத்துவிட்டனர். அதன் விலை £30 பயன்படுத்தியதுபோக மிகுதி £20 வரும். :கணனியை எதற்கு கொண்டு செல்கிறாய் ? :அது என் கணனி :மடிக்கணனி தானே கொண்டு செல்வார்கள்? :அது அவர்கள் பிரச்சனை :இத்தனை பாரமாக இருக்கிறதே :அதனால் உனக்கு ஏதும் பிரச்சனையா ? :நோ நோ நோ என்று சிரித்து மழுப்புகிறான். அம்மா நீங்கள் இங்காலே வாருங்கள். நான் பார்க்கிறேன் என்றுவிட்டு மகள் போய் நிற்க அதன்பின் அவன் எதுவும் பேசவில்லை.
  2. அங்கு வந்திட்டு உங்களுக்குச் சொல்லாமல் இருப்பேனா. நன்றி சுவி அண்ணா அவவுக்கு யாழ் களமே தெரியாதபடியால்த்தானே இத்தனை துணிவா எழுதிறன். நன்றி சுவைப்பிரியன் ஆர் சண்டை பிடிப்பினம் எண்டு பாத்துக்கொண்டிருக்கிறதுதான் வேலையாக்கும்.
  3. நான் போன இடங்களுக்கும் நீங்ககளும் போயுள்ளீர்கள். தொடருங்கள்
  4. உண்மைதான். மற்றைய தளங்களில் எழுதும்போது ஏதோ அந்நிய நாட்டுக்குப் போவது போல் ஓர் உணர்வு. யாழ் இணையத்தில் எழுதும்போதுதான் கருத்துக்களத்தினூடாக வரும் விமர்சனங்கள் எழுதும் எமக்கு மிகுந்த உற்சாகத்தையும் நிறைவையும் தருகின்றன குமாரசாமி. அது அத்தாருக்கு மட்டும் இல்லை உங்கள் எல்லாருக்கும் வரும்தான். ஆனா உணக்களுக்கு அந்தக் கொடுப்பினை இல்லை 😂
  5. ஒரு ஆண்டுக்கு முன்னர் அரிசி உட்பட பல மளிகைப் பொருட்களை இங்கிருந்து அனுப்பியவர்களும் உண்டு. வேறவழி?
  6. அப்பாடா ஒருவாறு ஒரே மூச்சில் வாசித்து முடித்திட்டன். இன்னும் கொஞ்சம் எழுதியிருக்கலாம். நீங்கள் உங்கள் கதைகளை எல்லாம் தொகுப்பாகப் போடுங்கள் அண்ணா. எல்லாமே விறுவிறுப்பான கதைகள் தானே. ஆனாலும் வேலை வெட்டி இல்லாமல் எல்லாவற்றையும் இரசித்து அறிந்துகொள்கிறீர்கள் என்று நன்றாகவே தெரிகிறது. லா செப்பலில் கடையும் கண்முன்னே விரிந்தது அண்ணா.
  7. இரண்டு என் நண்பியும் நானும் அடிக்கடி பலதையும் திட்டமிட்டுக்கொண்டோம். தான் கிட்டத்தட்ட 6000 டொலர் சேர்த்து விட்டதாகவும் போவதற்கிடையில் 10000 டொலர் சேர்த்துவிடுவேன் என்றும் யாரும் யாரிடமும் கடன் கேட்பதில்லை என்றும் செலவுகளை சமமாகப் பிரித்துக்கொள்ளவேண்டும் என்றும் அவள் கூறியபோது எனக்கும் நின்மதியாக இருந்தது. எனது கடைசி மகளின் பட்டப்படிப்பு யூலை மாதம் முடிவடைகிறது. அதன்பின் நாம் கிளம்பலாம் என்றதற்கு செப்டெம்பர் மாதம் தான் தான் வரமுடியும் என்று கூற, இப்பவே விமானச் சீட்டை எடுத்தால் மலிவாக இருக்கும் என்றேன் நான். அந்த மாதம் யாரும் விடுமுறையில் செல்ல மாட்டார்கள் ஆகவே ஒரு மாதத்தின் முன் எடுத்துக் கொள்ளலாம் என்றாள் அவள். சரி அவளுக்கும் என்ன பிரச்சனையோ, கொஞ்சம் பொறுப்போம் என்று எண்ணிக்கொண்டு நானும் அப்பப்ப வேறுவேறு விமானச் சீட்டுகளை மலிவாக இருக்கிறதா என்று பார்த்துக்கொண்டிருந்தேன். எமக்கு அங்கே தேவைபடக்கூடிய சில பொருட்களையும் வாங்கியாயிற்று. சரியாக ஒரு மாதம் இருக்க இனியும் தள்ளிப்போடக் கூடாது என்று எண்ணியபடி அவளுக்கு அழைப்பை ஏற்படுத்தி எத்தனையாம் திகதி புக் செய்வது என்று கேட்டபோது “சொறியப்பா நான் வர ஏலாது, எனக்கும் மனிசனுக்கும் பெரிய பிரச்சனையப்பா என்றவுடன் எனக்கு ஏற்பட்ட ஏமாற்றத்துக்கு அளவே இல்லை. உள்ளுக்குள்ளே சரியான கோபம் கனன்றுகொண்டிருந்தாலும் வெளியே அவளைத் திட்டவேயில்லை. சரி என்று ஒரு வார்த்தையில் கூறிவிட்டு தொலைபேசியை வைக்க பல தடவைகள் மன்னிப்புக் கேட்டு மெசேச் வர அதையும் திறந்து பார்க்காது என் கோபத்தை அவளுக்குக் காட்டுகிறேன். சரி இந்தியா போவது சரிவாராது. ஒஸ்ரேலியாவுக்காவது போகலாம். நீங்கள் எதற்கும் இலங்கை சென்று அங்கிருந்து செல்லலாம் என மனதுள் தனியாக அங்கு செல்வது என்னவோபோல் இருக்க அதைப் பிறகு பார்த்துக்கொள்ளலாம். இப்ப ஊருக்குத்தானே தனியாகப் போகலாம் என முடிவெடுத்து விமானச் சீட்டைப் பார்க்கத் தொடங்க எனக்கும் படிப்பு முடிஞ்சிட்டதுதானே, நானும் ஊருக்கு வரப்போறன் என்றாள் என் கடைக்குட்டி. ஆனால் உங்களோட வந்து ஊர் எல்லாம் சுற்றிப் பார்க்க வரமாட்டியள். எதுக்கும் அப்பாவோடை நான் வாறன். நீங்கள் தனியப் போங்கோ என்றதற்கு உடனே இடைப் புகுந்து கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் போக 55,60 கேட்பான்கள். எதுக்கும் அம்மாவோடையே சேர்ந்து போவம் என்றார் என் ஆத்துக்காறர். எனக்கும் ஒருவிதத்தில அது நின்மதியாய் இருந்தது. இல்லாவிட்டால் நான் தானே இரண்டு பயணப் பொதிகளையும் இழுத்துக்கொண்டு திரியவேண்டும். யாழ்ப்பாணம் போனபிறகு எனக்கும் உங்களுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்று கூறிவிட்டு நானே ரிக்கற்றை புக் செய்கிறேன் என்று கணனியியின் முன் இருந்தாச்சு. நேரடியாகக் கொழும்பு செல்வதற்கு 880 பவுண்டஸ். ஓரிடத்தில் மட்டும் சில மணித்தியாலங்கள் தங்கிச் செல்வது 760 பவுண்டஸ். lufthansa என்னும் ஜெர்மன் விமானத்தில் சுவிசில் நான்கு மணித்தியாலங்களும் பொம்பேயில் இரண்டு மணித்தியாலங்களும் தரித்துச் செல்வதற்கு 440 பவுண்ஸ் மட்டும் என்று இருக்க வேறு எதையும் யோசிக்காமல் டிக்கற்றை புக் செய்தாச்சு. கிட்டத்தட்ட அரைவாசிக்காசு மிச்சம் என்று மனதுள் எண்ணியபடி மனிசனிடம் சொல்கிறேன். எத்தனை கிலோ கொண்டுபோகலாம் என்று கேட்கிறார். அப்போதுதான் என் மண்டையில் உறைக்கிறது. நான் அதைப்பற்றி யோசிக்கவுமில்லை. அதைப் பார்க்கவுமில்லை. உடனே சென்று பார்க்கிறேன் ஒருவருக்கு 23 kg பொதியும் கையில் கொண்டுபோக 8 kg மட்டுமே அனுமதி என்று இருக்க ஐயோ அவசரப்பட்டிட்டனே என்கிறேன். அது என்ன புதிசா. மகளிடம் கொடுத்திருந்தால் அவள் கவனமாக கேட்டுக் கேட்டு புக் பண்ணியிருப்பாள். எல்லாம் நீதான் செய்யவேணும். அங்க வந்து உன்னோடை என்ணெண்டு சமாளிக்கப் போறனோ என்கிறார். நீங்கள் இருவரும் உங்கள் தங்கை வீட்டில் இருந்துகொள்ளுங்கள். நான் சித்தியுடன் நிக்கிறன் என்றுவிட்டு “மூன்று பேர் போறம். உங்கள் சூட்கேசில் முக்கால்வாசி இடம் இருக்கத்தானே போகுது” என்று சமாதானம் சொன்னாலும் உள்மனது போதாது போதாது என்கிறது. DMA என்னும் பார்சல் சேர்விஸ் இங்கே உண்டு. நான்கு தொடக்கம் ஆறு வாரங்களில் பொதிகளை வீட்டிலேயே கொண்டுவந்து தருவார்கள். சிறிய பெட்டியுள் ஒரு இருபது இருபத்தைந்து கிலோ வரை வைக்கலாம் 35 பவுண்டஸ். அடுத்தது ஒரு 45 கிலோ வரை வைப்பது 55 பவுண்டஸ். அதிலும் பெரியது 105 பவுண்டஸ். அவர்களுக்கு தொலைபேசி எடுத்து நடுத்தரப் பெட்டியை தெரிவுசெய்து கொண்டுவரும்படி கூறிவிட்டு தேவையான பொருட்களை வாங்கத் தொடங்கினேன். என் பக்கம் ஒரு 10 பேர். கணவனின் நெருங்கிய உறவினர் ஒரு இருபதுபேர் எனக் கணக்கிட்டு சொக்ளற், பிஸ்கற், நிடோ பால்மா, சவர்க்காரங்கள், ஏலக்காய், ஷாம்பூ, toilet liquid cleaners, kitchen sink and basin cleaner,சேலைகள், சொக்ளற் பௌடர், சோஸ், …… இப்பிடிப் பார்த்துப் பார்த்து வாங்க மூன்று பெட்டி பொருட்கள் சேர்ந்துவிட்டன. கணவருக்குத் தெரியாமல் இரண்டு பெட்டிகளையும் தெரிய ஒரு பெட்டியையும் அனுப்பியாச்சு. கணவரும் மகளும் ஒரு மாதத்தில் திரும்பிவிடுவார்கள் என்பதால் பார்சல்கள் எப்படியும் நான்கு வாரங்களுள் வந்துவிடாது என்னும் நம்பிக்கையில் மனிசனின் திட்டிலிருந்து தப்பித்துவிட்டதாக மகிழ்ந்துபோகிறேன். நான் ஆறு மாதங்கள் நிற்கப் போவதால் எனது கணனியையும் கட்டாயம் கொண்டுசெல்ல வேண்டும் என முடிவெடுத்து நிறுத்துப் பார்த்தால் அதுவே 5 கிலோ என்று காட்டுகிறது. நாட்கள் நெருங்க நெருங்க எனது வீட்டின் conservatory யினுள் நிற்கும் நூற்றுக்கணக்கான பூங்கன்றுகள் செடிக்கொடிகளை எல்லாம் எப்படிப் பார்த்துக்கொள்ளப் போகிறார்களோ என்னும் கவலை கனவிலும் அவற்றைப் பாராமரிக்கச் செய்தது. வாரம் ஒருதடவை எவ்வளவு நீரைக் கன்றுகளுக்கு ஊற்றவேண்டும் என்று ஒவ்வொருவாராகச் சொல்லி ஒருவாறு மனதைத் தேற்றித் தயார் படுத்த, கனடாக்காறி போனேடுத்து என்னடியப்பா எல்லாம் ரெடியா என்கிறாள். நீர் வாராட்டில் நானும் நிண்டிடுவன் என்று நினைச்சீராக்கும் என்கிறேன். எதுக்கும் இரண்டு மூன்று மாதம் கழிய நான் வந்தாலும் வருவன். எதுக்கும் ஒரு அறை எனக்கும் எடுத்துவையும் என்கிறாள். சொறி இம்முறை உமக்காக உம்மை நம்பி நான் எதுவும் செய்யப்போவதில்லை. நீர் வந்தால் உமது அம்மாவுடன் தங்கி எனக்கு போன் செய்யும், வசதிப்படி பிறகு பார்ப்போம் என்கிறேன். பயணத்துக்கு ஒரு வாரம் இருக்க மனிசன் வானில் ஏறும்போது கால் சறுக்கி கெழித்துவிட்டதால் மருத்துவமனைக்குச் சென்று கட்டோடு நொண்டியபடி வர, என்ன இது சகுனம் சரியில்லையோ என மனதுள் கவலை எழுகிறது. அதை வாய் விட்டும் சொல்ல" நான் என்ன நடக்கவே முடியாமலா இருக்கிறன். ஒரு கிழமையில் எல்லாம் மாறிவிடும்" என்கிறார். அம்மா இதுவும் நல்லதுதான். விமானநிலையத்தில் சொன்னால் அப்பாவை electric வீல் செயாரில் கூட்டிக்கொண்டுவந்து விடுவார்கள். முதலில் ஏறவும் விடுவார்கள். நான் பொதிகளுக்குப் பொறுப்பு. நீங்கள் கவலை கொள்ள வேண்டாம் என்கிறாள். எனக்கு உபத்திரவம் இல்லாவிட்டால் சரி என எண்ணிக்கொள்கிறேன்.
  8. இவர் பழைய ஆள் வேறு பெயரில் இப்ப என்றால் பார்த்துத்தானே இருப்பார் நந்தன் 😀 நல்ல ஆசைதான்.
  9. நான் என்ன பொய்யாவா எழுதிறன்.???? உங்கள் மகிழ்ச்சி நல்லாப் புரியுது அண்ணா 😀 வரவே மாட்டா எண்ட துணிவுதான்.😂 😂🤣
  10. ம் தொடரிறன் 😀 அப்பா நீங்கள் உண்மையை எழுதுவதில்லையா?? 😀 ம்கும் 😃 எழுதி முடியத்தான் இதுக்குப் பதில் சொல்லலாம். ஏன் நான் மட்டும் சுதந்திரமாய் இருக்கேல்லையோ? இப்ப படம் போடமுடியாது. எப்ப போடவேணுமோ அப்ப படம் வரும். இங்க விட்டா வேறெங்க எழுதுறது.
  11. இலங்கையில் ஆறு மாதங்கள் நீண்ட நாட்களாகவே எம்மூரில் சென்று வாழவேண்டும் என்ற ஆசை என்னை அலைக்கழித்தபடியே இருந்ததுதான். அதிலும் ஆறு மாதங்களாவது நின்மதியாய் கணவர் பிள்ளைகளின் தொல்லைகள் இன்றி நினைத்த நேரத்தில் தூங்கி எழுந்து, நினைத்ததை உண்டு மகிழ்ந்து, நினைத்த இடங்களுக்குப் போய்வந்து இப்படி இன்னும் சின்னச் சின்ன ஆசைகளை எல்லாம் செய்து முடிக்க வேண்டும் என்ற என் எண்ணத்தை கனடாவில் இருக்கும் என் நண்பியுடன் கதைத்துக்கொண்டிருந்தேன். அடியே நல்ல யோசனை எனக்கும் உப்படித் திரியவேண்டும் என்று ஆசை இருக்கடி. நானும் நீயும் சேர்ந்து போவோமாடி என்றாள். இந்தியா சென்று ஒரு மாதமாவது எல்லா இடங்ககளையும் சுற்றிப் பார்த்துவிட்டு இலங்கை வந்து அங்கு ஒரு மாதம் நின்றபின் அங்கிருந்து ஒஸ்ரேலியா சென்று இரண்டு மூன்று வாரங்கள் அங்கு பார்த்தபின் மீண்டும் இலங்கை வந்து நின்றுவிட்டு திரும்புவதே திட்டம் என்றேன். எனக்கு இந்தியா செல்வதில் விருப்பம் இல்லை என்றவளை நீ முன்னர் அங்கு சென்றுள்ளீரா என்று கேட்க இல்லை என்றாள். நீர் ஒருமுறை சென்றால் மீண்டும் போக ஆசைப்படுவீர் என்று கூறி இந்தியாவில் எந்த இடங்களுக்குப் போகலாம் என்று அவளுக்குக் கூறினேன். நான் விபரித்ததைக் கேட்டபின் அவளுக்கும் ஆசை வந்ததோ என்னவோ சரி உமக்காக வாறன் என்றாள். எனக்கோ மட்டற்ற மகிழ்ச்சி ஒருபுறமாயினும் இவளே எனக்கு இடைஞ்சலாய் வந்திடுவாளோ என்னும் யோசனையும் ஓடிக்கொண்டிருந்தது. அவளை நான் ஒரேயொரு தடவைதான் சந்தித்திருந்தேன். தொலைபேசியில் என்னதான் கதைத்தாலும் அவர்களோடு கூட இருக்கும்போதுதான் அவர்களது குணம் முழுவதுமாகத் தெரியவரும் என்பதும், என் நினைத்ததைச் செய்து முடிக்கும் குணமும் அவளுக்கும் எனக்குமான நட்பில் விரிசலை ஏற்படுத்துமா என்னும் யோசனையையும் தந்தது. இந்தியாவைப் பொறுத்தவரை தங்கு விடுதிகளில் தங்கும்போது சுத்தமான நல்ல விடுதிகளிலேயே தங்கவேண்டி இருக்கும். பணமும் அதற்கேற்ப அதிகமாகவும் இருக்கும். தூர இடங்களுக்குச் செல்லும்போது பொது வாகனங்களில் செல்வது எமக்குச் சரிவாராது. அதற்கும் பாதுகாப்பான வாகனங்களில் செல்வதாயின் அதிக செலவாகும். இதற்கெல்லாம் அவளால் ஈடுகட்டமுடியுமா என்னும் யோசனையும் ஓடியது. சரி உனக்குத் துணையாக அவள் வருகிறாள் தானே. அதுவே பெரிய விடயம். அதனால் பணத்தைப் பற்றி யோசிக்காதே என்றது மனம். இலங்கையில் எனக்கு வசிப்பதற்கு எனது சிறியதாயார் வசிக்கும் என் கனடாத் தங்கையின் வீட்டில் மலசலக்கூட வசதியுடன் ஒரு அறை உண்டு. அந்த அறையுள் 120 - 200 அளவுள்ள கட்டிலும் உண்டு. நானும் கணவரும் சென்றாலோ அல்லது உறவினர்கள் சென்றாலோ இருவர் மட்டும் அங்கு தங்கலாம். அதாவது கணவன் மனைவி ஒட்டி உரசிக்கொண்டு சகித்துக்கொண்டு படுத்தாலும் தனியாக அக்கட்டிலில் படுப்பதுதான் சுகமானது என்பதும் ஒரு நண்பியுடன் அக்கட்டிலைப் பகிரவே முடியாது என்றும் என் மனம் கூற, அவளுடன் கதைக்கும்போது அவளுக்கும் இதைக் கூறினேன். ஒரே ஒரு அறை தான் உங்கள் வீட்டில் இருக்கா? வேறு அறைகளே இல்லையா என்று குத்தலாகக் கேட்டாள் இன்னும் மூன்று அறைகள் இருந்தாலும் ஒரு அறையில் என் சிறிய தாயாரும் மிகுதி இரு அறைகளிலும் இவ்விரண்டு பேராக நான்கு இராமநாதன் அக்கடமியில் கற்கும் மாணவிகளும் இருக்கின்றனர் என்றேன். அப்ப நாங்கள் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து இருப்போம். செலவை இருவருமாகப் பங்கிட்டுக்கொள்வோம் என்றாள் அவள். அது ஒருவிதத்தில் நல்ல யோசனையாக இருந்தாலும் வாடகையே காட்டாமல் இருக்க வீடு இருக்கும்போது எனக்கு ஏன் வீண் செலவு என எண்ணியபடி நீர் உமது அம்மாவுடன் தங்கியிரும். ஒவ்வொருநாளும் வெளியே போகும்போது இருவரும் சேர்ந்து போவோம் என்றேன். உமக்கு என் அம்மாவைப் பற்றி சொன்னால் விளங்காது. நான் அவவிடம் சென்றால் அவதான் எனக்கு முழுப் பாதுகாப்பும் என நினைத்துக்கொண்டு எங்கை போறாய் ? ஆரோடை போறாய்? எத்தினை மணிக்கு வருவாய் என்று சின்னப்பிள்ளை போலவே நடத்துவா. அதுமட்டுமில்லை அயலட்டைக்கெல்லாம் அது இது என்று வாங்கிக் குடு என்று கரைச்சல் வேறை. அதுமட்டுமில்லை இல்லாத கடனெல்லாம் சொல்லி கண்ணீர் விட்டால் எனக்கு ஒண்டும் செய்ய ஏலாமல் போயிடும். அதனால அவவிட்டை நிக்கிறது சரிவாராது என்றாள். சரி யோசிப்பம் என்றுவிட்டு என கணவனின் சகோதரி வீட்டிலும் எல்லா வசதியும் உண்டு. சரி நான் அங்கு நின்றுகொண்டு இவளை எங்கள் வீட்டில் தங்கவைப்போம் என மனதுள் எண்ணிக்கொள்கிறேன். பேச்சு வாக்கில் கணவர் பிள்ளைகளிடம் கூறியபோது உங்களுக்கு விருப்பம் என்றால் போய் நின்றுவிட்டு வாருங்கள் எனப் பிள்ளைகளும்,” நீ போய் இரு. நாங்களும் கொஞ்சநாளைக்கு நின்மதியாய் இருப்பம்” என மனிசனும் கூற இத்தனை இலகுவாகச் சம்மதித்துவிட்டனரே என மகிழ்வும், நான் இல்லாமல் ஆறு மாதம் இருந்து பாருங்கோ. அப்ப தெரியும் என்அருமை என விசனமும் ஏற்பட்டது. அதன் பின் அங்கு போய் எங்கு எல்லாம் செல்வது, யாரை எல்லாம் சந்திப்பது என்று மனதுள் கூட்டிக் கழித்துப் பார்த்ததில் எல்லாமே சரியாக இருப்பதாய்ப் பட நின்மதியுடன் வேலைத் தலத்திலும் நான் ஆறுமாத காலம் அங்கு தங்கியிருப்பது பற்றி கூறத் தொடங்கினேன். நான் வேலை செய்வது எனது நண்பனின் தபாற் கந்தோரில் என்பதனால் அவருக்கும் பகிடிபகிடியாக விடயத்தைக் கூற அவரோ நம்பவில்லை. 2019 ம் ஆண்டு கோவிட் வந்தபோது மெசெஞ்சரில் ஒரு குழுவை உருவாக்கி அதில் “சமூக மீட்சிக்கான உலகளாவிய நண்பர்கள்” என்னும் குழுவை உருவாக்கி அதில் 143 பேர் அப்போது இணைந்திருந்தனர். அதனூடாக அனைவரின் பங்களிப்புடன் பலருக்கும் உணவுப் பொருட்கள் முதல் பல உதவிகளையும் செய்தபடி இருந்தார் சுப்பிரமணிய பிரபா என்னும் முகநூல் பெயருடைய ஒருவர். அவரை உங்களுக்கும் தெரிந்திருக்கலாம். அவரின் செயற்றிட்டம் எமக்குப் பிடித்திருந்தமையால் அவரின் திட்டப்படி ஒருங்கிணைந்த பண்ணை ஒன்றை கிளிநொச்சியில் உருவாக்கி பலருக்கும் வேலைவாய்ப்பைக் கொடுக்கலாம் என்னும் நல்லெண்ணத்தில் புலம்பெயர்ந்து வாழும் எனைப் போன்ற எட்டுப் பேரும் இலங்கையில் இருக்கும் இன்னொருவருமாக பத்துப்பேர் கொண்ட குழு இதில் இணைந்தோம். கடந்த மூன்று ஆண்டுகளாக ஒரேயொருவர் மட்டும் நாட்டுக்குச் சென்று வந்தாலும் பண்ணையை யாருமே சென்று பார்க்கவில்லை. பிரபா அனுப்பும் படங்களிலும் வீடியோவிலும் பண்ணை பரந்து விரிந்து செழிப்பாகக் காணப்பட்டது. நான் அதைப் போய் பார்க்கப்போகிறேன் என்பதும் எனக்கு மகிழ்வையும் ஒரு எதிர்பார்ப்பையும் தந்திருந்தது. ஆரையும் நம்பிக் காசைக் குடுத்திட்டு. உனக்கு வேறை வேலை இல்லை. நான் சொன்னால் கேட்கப் போகிறாயோ? என்ணெண்டாலும் செய்துகொள் என்று பலதடவை மனிசன் புறுபுறுத்தும் நான் கவலைப்படவே இல்லை. என கண்முன்னே பெரிதாய் விரிந்தது பண்ணை. ஒன்று
  12. வழமை போலவே உங்கள் கதை விறுவிறுப்பாகப் போகிறது அண்ணா. தொடருங்கள்
  13. அடடா இத்தனை விறுவிறுப்புடன் கைதேர்ந்த எழுத்தாளர்போல் இக்கதையை நகர்த்தியிருக்கிறீர்கள் வாழ்த்துக்கள் கோஷான்.
  14. யோவ் குமாரசாமி! மூட்டை இல்லை என்று அப்பவே சொல்லியாச்சு😀 எலி கூட இல்லாத சுத்தமான வீடு 🙃
  15. கூட்டிக் களிச்சுப் பார்த்தால் வீட்டை இலைகுழைகள் போட்டு குப்பையாக்கச் சொல்லுறியள் 😀
  16. அதெல்லாம் குடும்ப இரகசியம். உப்பிடிப் பப்பிளிக்கில வச்சுக் கேட்கப்படாது😀 உங்களிலும் பாக்கவோ ????😀 நீங்கள் சொல்லுறது உண்மைதான். உந்தச் சனத்தின்ர தொல்லை தாங்க முடியாமல் எழுதி முடிச்சது. அந்த டொக்டருக்கு என் கதை நல்லாப் பிடிக்கும். நான் என்ன செய்ய?? 😀😂 நானும் அதைத்தான் யோசிக்க நீங்களே சொல்லியாச்சு 😂
  17. அதன்பின்னர் ஒருநாள் வைத்தியாரிடம் தொலைபேசியில் கதைப்பதற்கான நேரத்தை பதிவு செய்துவிட்டுக் காத்திருக்க அழைப்பு வருக்கிறது. அந்த வைத்தியர் மிக இயல்பாக என்னுடன் கதைப்பார். “உமக்கு என்ன பிரச்சனை? “எனக்கு கொஞ்ச நாட்களாக சரியான கடி” “சிறீலங்கா அல்லது இந்தியா போய் வந்தீரா? தலையெல்லாம் பேனோ?” “எனக்கு ஏன் பேன் வருது? அதோடை உந்தக் கோவிட்டுக்குள்ளை நான் ஏன் போகப்போறன் அங்கை எல்லாம்?” “பேன் இல்லை எண்டால் அப்ப எங்க கடி?” நான் 2019 கம்போடியா போனபோது ................................................. .......தொடங்கி எல்லாம் சொல்லி முடிச்சன். “உமக்கு ஏதும் ஒவ்வாமை இருக்கோ? “இல்லை” “இதுக்கு முதல் அதுக்கான டெஸ்ட் செய்தனீரே?” “எதுக்கும் ஒருக்கா அதையும் செய்து பார்ப்பம்.” “ஆனால் அவங்கள் வந்து போன பிறகு எனக்கு ஒரு கடியும் இல்லை.” “அப்ப என்னத்துக்கு எனக்கு அப்பொயின்ற்மென்ட் வச்சநீர்” “இவ்வளவு நாளும் ஏன் எனக்குக் கடி இருந்தது எண்டு தெரிய வேணுமெல்லோ” “இது வடிவாத் தெரியுதுதானே உம்மட நினைப்பு என்று. சிலநேரம் தற்காலிகமா ஏதாவது ஒவ்வாமை கூட உமக்கு வந்திருக்கலாம். உந்த சோப், வோசிங் பவுடர் இதுகளுக்கும் கடிக்கும். றால் நண்டு நல்லாச் சாப்பிடுறநீரோ?” “ஓம் அது நல்லாப் பிடிக்கும்” “சிலபேருக்கு அது கனக்கச் சாப்பிட்டாலும் கடிக்கும். “இரவில நித்திரை ஒழுங்கா வருதா? வேணுமெண்டா ஒரு கடிதம் தாறன். சைகாட்டிஸ்ற் ஒருவரைப் போய் பாருமன்.” “என்னைப் பயித்தியம் ஆக்கப் போறியளோ? எனக்கு நல்லா நித்திரை வருது. ஆளை விடுங்கோ” “நீரா வைத்தியத்துக்கு வந்திட்டு நீரே மருந்தையும் சொல்லுறீர். சரி அப்ப ஒரு மாதம் பாரும். கடிக்காட்டில் சரி. திரும்பவும் கடிக்கிறபோல இருந்தால் வாரும்.” அதோட எல்லாம் முடிஞ்சுது।
  18. அதெல்லாம் சோதிச்சுப் பாக்காமலா இருப்பம் அண்ணா. கம்மல்கள் எல்லாமே திருக்காணியோடுதான் இருக்கின்றன. 😀 இன்று இரவு சொல்லிவிடுகிறேன். 😀

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.