Everything posted by மெசொபொத்தேமியா சுமேரியர்
-
இலங்கையில் ஆறு மாதங்கள்
மெசொபொத்தேமியா சுமேரியர் replied to மெசொபொத்தேமியா சுமேரியர்'s topic in யாழ் 25 அகவை - சுய ஆக்கங்கள்யாழ்ப்பாணத்தில் ஓட்டோக்காரர் சரியான அதிக விலை வெளிநாட்டவர்க்கு. கடைக்காரரின் பேச்சை நம்புவதல்ல பிரச்சனை. மகளின் 750 சொன்ன தொப்பிக்கு குறைத்தே கொடுத்திருந்தேன். பசி ஒருபுறம் மனிசன் ஓட்டோ பிடித்தாரா இல்லையா என்ற டென்ஷன் மறுபுறம். கணவர் வந்தால் ஓட்டோ தான் வந்திட்டுதே எதுக்குக் குடை என்று சொன்னாலும் சொல்வார் என்ற பயம் வேறு. வாங்கிக்கொண்டு வெளியே வந்தாச்சு. அதில என்ன குற்றம்???? . அவ தன் பணத்தில் தானே நகை வாங்கி அணிந்துள்ளா. உணக்கட அநியாயம் பெரிய அநியாயமாய் இருக்கே. கூடுதலாக அப்படித்தான் இங்கும் செய்வது. அதிலும் சில தில்லுமுல்லு நடப்பதுதான்.
-
இலங்கையில் ஆறு மாதங்கள்
மெசொபொத்தேமியா சுமேரியர் replied to மெசொபொத்தேமியா சுமேரியர்'s topic in யாழ் 25 அகவை - சுய ஆக்கங்கள்கரடிப் போக்குச் சந்திக்கு போக வெறும் 400 ரூபாய்கள் தான். அவன் எங்களிடம் கேட்டது மிக அதிகம். நகைநாட்டுப் போட்டாலும் அது நாங்கள் கஷ்டப்பட்டு உலைச்சுக்க சம்பாதிச்ச பணம் அண்ணா. இலங்ககையில் பார்த்தால் எல்லோருக்கும் தான் எம்மோடு ஒப்பிடும்போது கஸ்டம். அதுக்காக பாக்கிறவை எல்லாருக்கும் தானதருமம் செய்தால் நாணக்கள் கடன் பட்டுத்தான் திரும்ப இங்கு வரவேண்டும். கொழும்பில் மீட்டர் ஓட்டோ. ஒரு ஏழெட்டுக் கிலோமீட்டர் போகவே 1000 ரூபாய்தான். தமிழர் பகுதிகளில் மிக மோசம். இப்போதெல்லாம் கணனிகள் சிறியனவாக வந்துவிட்டனவே.
-
இலங்கையில் ஆறு மாதங்கள்
மெசொபொத்தேமியா சுமேரியர் replied to மெசொபொத்தேமியா சுமேரியர்'s topic in யாழ் 25 அகவை - சுய ஆக்கங்கள்உண்மைதான் குமாரசாமி. இங்கு கொரியன் சைனீஸ் உணவகங்களில் டிப்ஸ் பணத்தை முதலாளிகளே எடுப்பதாகக் கேள்வி.
-
இலங்கையில் ஆறு மாதங்கள்
மெசொபொத்தேமியா சுமேரியர் replied to மெசொபொத்தேமியா சுமேரியர்'s topic in யாழ் 25 அகவை - சுய ஆக்கங்கள்எட்டு வீட்டுக்குப் போகும்போது ஒரு லட்ச ரூபாய்களை எடுத்துச் சென்று எல்லோரும் நிற்கும்போது தங்கையின் கைகளில் கொடுக்கும்படி கணவரிடம் சொல்ல மறு பேச்சுப் பேசாமல் எடுத்துச் சென்று கொடுக்கிறார். அதன் பின்தான் என்னால் நிம்மதியாக உண்ண முடிகிறது. ஆனாலும் என்ன, அது முடிய மாறிமாறி அந்தக் கோவில் இந்தக் கோவில் விரதம் என்று ஒரு மாதமாக ஒரே மரக்கறிதான் என்பது வேறுகதை. ஆனால் நாங்கள் அங்கு தொடர்ந்து நிற்கவில்லை என்பது எம்மைக் காப்பாற்றிவிட்டது. அடுத்தநாள் கிளிநொச்சி செல்வதற்குக் கிளம்பி காலை 9.30 இக்கு இணுவிலுக்கு வரும் தொடருந்தில் ஏறி அமர்ந்தாச்சு. இரண்டாம் வகுப்பு டிக்கட் ஒருவருக்கு 350 ரூபாய்கள். மூன்றாம் வகுப்பில் எக்கச்சக்கமான சனம். ஓரளவு புதிய தொடருந்து. சுத்தமாகவும் இருக்க பாராக்குப் பார்ப்பதும் கதைப்பதுமாகப் பொழுதுபோக யாழ் ப்பாணத்தில் இரு சிறுவர்களுடன் ஒரு குடும்பம் ஏறி எமக்கு அடுத்த பக்கத்து இருக்கைகளில் அமர்கின்றனர். மனைவி நல்ல நகைநட்டுகள் போட்டு அழகான ஆடையும் அணிந்திருக்க கணவனும் பிள்ளைகளும் கூட நல்ல ஆடையுடன் பார்க்க நல்ல குடும்பம் போல் இருக்கிறது. தொடருந்து புறப்பட்டவுடன் இருக்கைகளில் இருக்காமல் இரு பையன்களும் சாண்டில்சுடன் இருக்கைகளின் மேல் தாவுவதும் குதிப்பதும் தாயை ஏதோ கரைசல் குடுப்பதும் இந்தத் தொங்கலில் இருந்து அந்தத் தொங்கல் வரை ஓடுவதுமாக ஒரே அட்டகாசம். கணவனும் மனைவியும் பிள்ளைகள் ஏதோ சாகசம் செய்வதுபோல் பார்த்துக்கொண்டு இருக்க எனக்கு எரிச்சல் வருகிறது. என் முகத்தைப் பார்த்தே நான் ஏதோ சொல்லப் போகிறேன் என்று எண்ணி என் கணவர் நீ கொஞ்ச நேரம் கண்ணை மூடிப்படு என்கிறார். நானும் சரியென தலையை ஒருபக்கம் சாய்த்து கண்களை மூட தூக்கம் நன்றாக வருகிறது. எவ்வளவுநேரம் தூக்கினேனோ தெரியாது என் கன்னத்தில் எதுவோ விழுந்ததுபோல் இருக்கத் திடுக்கிட்டு விழித்து அங்கும் இங்கும் பார்க்கிறேன். கணவர் ஒரு பிஸ்கட் பக்கற்றை என் காலடியில் இருந்து மெதுவாக எடுக்கிறார். பிஸ்கட் சாப்பிடவே என்னை எழுபின்நீங்கள் என்று கேட்க மகள் சிரிக்கிறாள். உதில சிரிக்க என்ன இருக்கு என்று கேட்க, மனிசன் பிஸ்கட்டை எடுத்து அந்தப் பக்கம் உள்ளவர்களிடம் நீட்ட அந்தப் பையன் வெடுக்கென கணவனின் கைகளிலிருந்து அதைப் பிடுங்குகிறான். அவன் எறிந்த பக்கட்தான் என் கன்னத்தில் விழுந்திருக்கு என எனக்குப் புரிகிறது. பிஸ்கற் பக்கற்றை கண்டபடி பிரித்து உடைத்து எடுத்து உண்கிறான் அவன். மற்றப் பையனும் ஓடிவந்து தானும் பறித்து உண்கிறது. காலின் கீழே பிஸ்கட் தூள்கள் கொட்டுண்டு கிடக்கின்றன. தாயும் தகப்பனும் எதுவித சுரணையுமின்றிப் பார்த்துக்கொண்டிருக்க நீங்கள் ஒழுங்கக்காகப் பிய்த்துக் கொடுங்கோ என்று சொல்ல வாயெடுக்க, மகள் வேண்டாம் அம்மா என கண்களால் சைகை காட்ட நான் மறுபுறம் திரும்பிக் கொள்கிறேன்.கணவர் மகளுக்கு எல்லா இடங்களையும் காட்டிக் காட்டி ஏதேதோ சொல்லியவண்ணம் வர நான் என் பண்ணை பற்றியே எண்ணியபடி வருகிறேன். ஒன்றரை மாணித்தியாலத்தில் கிளிநொச்சியை சென்றடைகிறோம். முன்னரே ஹோட்டல் ஒன்றை தொலைபேசியில் தொடர்புகொண்டு புக் செய்து வைத்ததனால் ஓட்டோ ஒன்றை கூப்பிடுகிறோம். கடும் வெயிலாக இருக்கிறது. ஹோட்டலின் பெயரைக் குறிப்பிடுகிறார் கணவர். 1500 ரூபாய்கள் வரும் என்கிறார் ஓட்டோக்காரர். அவ்வளவு தூரமா என்கிறேன் நான். கரடிப்போக்குச் சந்திக்குப் போக அவ்வளவு தேவையில்லையே தம்பி என்று கணவர் கூற 1000 ரூபாய்க்குக் குறைக்க ஏலாது என்கிறான். சரி என ஏறி அமர்ந்தால் ஒரு மூன்று கிலோமீற்றர் போக கோட்டல் தெரிகிறது. கீழே கடைகள் இருக்க முப்பது படிகள் நடந்து மேலே ஏறிப் போகக் கோட்டல். உள்ளே சுத்தமாக இருக்கிறது. ஆனால் யாரையும் காணவில்லை. தொலைபேசியில் அந்த இலக்கத்துக்கு அழைத்து யாரும் இல்லையா என்று கேட்க, நான் போன் செய்யிறன் உடனே வருவார்கள் என்கிறார் ஒருவர். நாம் சோபாவில் அமர்ந்து ஐந்து நிமிடங்கள் காத்திருக்க ஒரு பெண் வருகிறார். எங்களைக் கடந்து சென்றவர் எம்மை திரும்பியும் பார்க்காமல் சென்று வரவேற்பு மேசையில் எதையோ தேடுகிறார். நான் எழுந்து சென்று நீங்கள் இங்கு வேலை செய்பவரோ என்று கேட்கிறேன். ஓம் பொறுங்கோ வாறன் என்றுவிட்டு லாச்சியை இழுத்தும் பார்க்கிறா. பின் வேறு ஒன்றைத் திறந்து திறப்பையும் ஒரு கொப்பியையும் எடுக்கிறா. வெளிநாடா? உங்கட பாஸ்போட்டுகளைத் தாங்கோ என்கிறா. நான் கணவரின் பாஸ்போட்டை மட்டும் கொண்டுவந்து கொடுக்க, மற்றதுகள் என்கிறா. என்ன மற்றதுகள் என்கிறேன் நான். பாஸ்போட் என்கிறா. நாங்கள் குடும்பம் ஒரு பாஸ்போட் காணும் என்கிறேன். அவர் வேறொன்றும் பேசாமல் பெயரை எழுதிவிட்டு பாஸ்போட்டைத் தந்துவிட்டு வாங்கோ என்றபடி முன்னால் சென்று பக்கத்தில் இருக்கும் ஒரு அறையைத் திறக்கிறா. வெளியே யன்னல் இல்லாத அந்த அறை சிறிதாகவும் இருட்டாகவும் இருக்க நாம் இரு கட்டில்களுடன் மூன்றுபேர் தங்குவதற்குரிய அறைகள் தானே கேட்டோம். இது சிறிதாக இருக்கிறது. வேறு அறை காட்டுங்கள் என்கிறேன். அப்ப மேலேதான் போகவேண்டும் என்றபடி மேலே செல்ல நாமும் பின்தொடர்கிறோம். அந்த அறை பெரிதாக இருக்கிறது. AC, Fan எல்லாம் இருக்கிறது. Toilet ஐ எட்டிப் பார்க்க சுத்தமாக இருக்கிறது. மகள் உடனே கட்டிலின் மேலே ஏறிச் சாய்ந்தபடி TV பார்க்க ஆரம்பித்துவிட்டாள். சூட்கேசை வைத்துவிட்டு நானும் ஏறி அமர்கிறேன். கணவர் ஏசியை போட நன்றாக இருக்கிறது. இப்ப மதிய உணவுக்குச் செல்வோமா என்கிறார் கணவர். ஒரு மணித்தியாலம் செல்லச் செல்வோமென்று மகள் கூற சரி என்று கூறிவிட்டு நானும் கணவரும் AC குளிரில் கட்டிலில் சாய்கிறோம். உடனே கதவு தட்டும் சத்தம் கேட்க என்னடாய்து என்று எழுந்து சென்று நான் கதவைத் திறந்தால் ஒரு றேயில் கோப்பிக் கோப்பைகளை நீட்டுகிறார். நாம் கேட்கவில்லையே என்கிறேன். இது ஃப்ரீ தான் என்கிறார். நன்றி சொல்லிவிட்டு வாங்கி மற்றவர்களுக்கும் கொடுக்கிறேன். நன்றாகச் சீனி போட்டு nescafe வாசனையுடன் இருக்கிறது. குடித்து முடிய மீண்டும் நீட்டி நிமிர்ந்து கட்டிலில் படுக்க எத்தனை சுகம் என எண்ணியபடி நன்றாகத் தூங்கிவிட மீண்டுமெழுந்தபோது ஒரு மணிமுப்பது நிமிடம் என தொலைபேசி சொல்கிறது. கீழே இறங்கிச் சென்றால் பக்கங்களில் இரண்டு மூன்று சிறு உணவகங்கள். ஒரு கடையில் நுழைகிறோம். அங்கும் இங்கும் வேலையாட்கள் செல்கிறார்கள். ஒருவர் கூட எம்மை வாருங்கள் என்று கூப்பிடவில்லை. ஒரு நிமிடம் நின்று பார்த்துவிட்டு வாங்கோ வேறு கடைக்குப் போவோம் என்று கூறி வெளியே வந்து போவோர் சிலரை இங்கு எது நல்ல உணவகம் என்று கேட்க சிலர் தெரியாது என்கின்றனர். சிலர் இன்னும் சில கடைகளைக் காட்டுகின்றனர். ஓட்டோ காரரிடம் கேட்டால் காட்டுவார்கள் என எண்ணி அவற்றை மறித்தால் அவை ஆட்களோடு செல்வதால் நிறுத்தவில்லை. வீட்டில் இருந்து வரும்போது தொப்பியையும் கொண்டுவரவில்லை. கண்ணுக்கு எட்டிய தூரம்வரை நிறுத்தியிருக்கும் ஓட்டோவையும் காணவில்லை. ஓட்டோவைப் பிடியுங்கள் என்றுவிட்டு நானும் மகளும் ஒரு கடையுள் நுழைந்து குடை இருக்கா என்று கேட்கிறோம். மகள் தொப்பிகளைப் பார்த்து ஒன்றை எடுக்க நான் குடை என்ன விலை என்று கேட்க 2500 ரூபாய்கள் என்கிறார் கடைக்காரர். நான் ஒரு கூடையைத் தெரிவுசெய்து எடுக்க அதில் 1200 என்று விலை தொங்குகிறது. இதில் 1200 என்று போட்டிருக்க நீங்கள் இரு மடங்கக்காகச் சொல்கிறீர்களே என்கிறேன். அது பழைய விலை தங்கச்சி. இப்ப விலை கூடீற்றுது. அதை கிழிக்க மறந்துபோனன் என்கிறார். தொப்பிக்கும் அதற்கும் சேர்த்து 3000 ரூபாய்களைக் கொடுத்துவிட்டு வெளியே வர கணவர் ஓட்டோவை மறித்துப் பேசிக்கொண்டிருக்கிறார். நல்ல உணவகம் என்றால் மூன்று மைல் செல்லவேண்டுமாம் அம்மாச்சி பக்கத்தில் இருக்காம் என்கிறார். மகளும் ஒன்லைனில் பார்த்துவிட்டு இரண்டு மூன்று உணவகங்கள் தூர இருக்கு என்கிறாள். எதற்கும் அம்மாச்சிக்கே இப்ப போவோம். மாலை உணவுக்கு அங்கே போகலாம் என்கிறேன். அங்கு சென்று பார்த்தால் நிறையப்பேர் இருக்கிறார்கள். 2017 இல் வந்தபோது இருந்த அம்மாச்சி உணவகம் சுத்தமாக இருந்தது. தொங்கலில் வெறுமையாக இருந்த மேசையில் சென்று அமர்கிறோம். மேசையில் ஆங்காங்கே உணவுப் பருக்கைகள் கிடக்கின்றன. உண்ட தட்டுக்களும் யாரும் எடுப்பாரற்றுக் கிடக்க கணவர் அங்கு வேலை செய்த பெண்ணை கூப்பிட்டு துடைக்கும்படி கூற அவர் தண்ணீருடன் ஒரு துண்டைக் கொண்டுவந்து துடைத்துவிட்டுப் போகிறார். நல்ல காலம் நான் டிசு கொண்டுசென்றதால் அதை எடுத்து நன்றாக மேசையைத் துடைத்துவிட்டு உணவை எடுக்கச் செல்கிறேன். மகளும் பின்னே வர அவளையும் கேட்டு விருப்பமானவற்றை வாங்கி வருகிறோம். அப்பம், இடியப்பம் எல்லாம் ஆறிபோய் இருக்கு. நான் வழமைபோல தோசை, வடை. மகள் எடுத்த இட்லியும் ஆறிப்போய் இருந்தாலும் சாம்பார் சூடாக இருக்கிறது. நான் தேநீர் எடுக்க தகப்பனும் மகளும் பிரெஸ் பழச்சாறுகளை எடுக்கின்றனர். நான் எழுந்து சென்று ஒரு பெண்ணிடம் பேச்சுக் கொடுக்கிறேன். ஏன் முன்புபோல் சுத்தமாக இல்லை என்று கேட்க இப்பதான் லஞ்ச் டைம் முடிந்து பழையவர்கள் போக நாங்கள் வந்துள்ளோம். அதுதான் இப்படி என்று சமாளிக்கிறார். பொரித்த மோதகமும் பார்க்க நன்றாக இருக்க அதில்ஒரு ஆறை பார்சல் செய்துகொண்டு வெளியே வர உனக்கு ஏன் தேவை இல்லாத வேலை என்கிறார் கணவர்.
-
இலங்கையில் ஆறு மாதங்கள்
மெசொபொத்தேமியா சுமேரியர் replied to மெசொபொத்தேமியா சுமேரியர்'s topic in யாழ் 25 அகவை - சுய ஆக்கங்கள்லண்டனில் கட்டாயம் டிப்ஸ் கொடுக்கும் வழக்கம் இல்லை. அதுவும் காட் இல் பயணம் செலுத்திவிட்டு எழுந்து போவார்கள். சில உணவகங்களில் முதலாளி அரைவாசியை எடுப்பதும் உண்டு. நல்ல உணவாக இருந்துஅவர்களும் எம்மை நன்கு கவனித்தால் அவர்களுக்கு நாமாகவே கொடுப்பதும் உண்டு. இங்கு லெபனான் Buffet உணவகம் ஒன்று உண்டு. ஒருவருக்கு £60. பச்சை சிவப்பு என்று இரு நிறக் கட்டைகள் இருக்கும். பச்சையை நிமிர்த்தி வைத்தால் விதவிதமாக இறைச்சிகளை கொண்டுவருவார்கள். சிவப்பை வைத்தால் வரமாட்டார்கள். ஆனால் அதற்குமுன்னரே சலாட் நூடில்ஸ் என வைத்திருப்பார்கள். ஒரு குறிப்பிட்ட உணவுக்கு மிஞ்சி உண்ண முடியாது. அங்கு என் மகள் 10 பவுண்சை டிப்ஸ் ஆக வைத்துவிட்டு வர நான் திட்டினேன். ஏற்கனவே 180 பவுண்டஸ் உணவுக்காகக் கொடுத்திருக்கிறோமே என. ஆனால் அவள் சொன்னாள் அவர் நாம் பச்சைக் கட்டையை நிமிர்த்திவைத்த நேரம் எல்லாம் எம்மைக் காக்க வைக்காது சுடச் சுடக் கொண்டுவந்ததற்கே வைத்தேன் என்றாள். என நண்பிகளோடு சென்றபோது 12 பவுண்டஸ் சேவிஸ் சார்ஜ் என்று போட்டு பில் கொண்டுவந்தார்கள். என் நண்பி அதைப்பார்த்துவிட்டு சேவிஸ் சார்ஜ்ஐ பில்லில் இருந்து எடுத்துவிடுமாறு கூற அந்தப் பெண் எடுத்துவிட்டு திரும்பவும் பில் கொண்டுவரச்செல்ல நாம் எல்லாம் ஏன் அப்படிச் செய்தாய் என அவளைக் கேட்டோம். இந்த நாட்டில் optional சேர்விஸ் சாச் என்று போட்டிருந்தால் அதைக் தவிர்க்கும்படி கூற கஷ்டமருக்கு உரிமை இருக்காம் என்றாள். அதன்பின் நாம் எல்லோரும் சேர்ந்து 10 பவுண்சை டிப்ஸ் ஆக வைத்துவிட்டு வந்தோம் .
-
இலங்கையில் ஆறு மாதங்கள்
மெசொபொத்தேமியா சுமேரியர் replied to மெசொபொத்தேமியா சுமேரியர்'s topic in யாழ் 25 அகவை - சுய ஆக்கங்கள்எனக்கும் மடிக் கணனிக்கும் எட்டாத தூரம். ஏனோ தெரியவில்லை என்னிடம் வீட்டில் சிறியதும் பெரியதுமாக இரண்டு மடிக் கணனிகள் இருக்கு.. ஆனாலும் பயன்படுத்துவதில்லை. எனக்குக் கணனித் தொழில்நுட்பம் அதிகம் புரியாததும் காரணமாக இருக்கலாம். நான் கொண்டுபோனது இரண்டு சேலைகள். ஒரு சோடி காப்பு, ஒரு சங்கிலி அவ்வளவே. நாங்கள் பாவம். அங்கு உடுக்கும் சேலை என்ன போடும் நகைகள் என்ன.
-
இலங்கையில் ஆறு மாதங்கள்
மெசொபொத்தேமியா சுமேரியர் replied to மெசொபொத்தேமியா சுமேரியர்'s topic in யாழ் 25 அகவை - சுய ஆக்கங்கள்என்னிடம் இருந்தது 50 இப்பிடியானவர்கள் கேட்பார்களென்று நீங்கள் மாற்றிக் கொண்டுபோவீர்களா ??? உணவு விடுதிகளில் ஐந்து பவுன்சுக்கு மேல் கொடுப்பதில்லை. அதுவும் service charge என்று அறவிட்டால் கொடுப்பதே இல்லை. 😀 திரும்பக் கொண்டு தான் வந்தது. ஏனெனில் அதில் என் தமிழ் பள்ளி ஆவணங்கள் ,வினாத்தாள்கள், வங்கி விபரங்கள் என வீட்டின் அத்தனை அலுவல்களையும் அங்கிருந்து நான் பார்க்கவேண்டி இருந்தது. நன்றி அக்கா
-
இலங்கையில் ஆறு மாதங்கள்
மெசொபொத்தேமியா சுமேரியர் replied to மெசொபொத்தேமியா சுமேரியர்'s topic in யாழ் 25 அகவை - சுய ஆக்கங்கள்அது உங்கள் நம்பிக்கை. போக நாம் டொலர் கொண்டு போகவில்லையே. £50 தாளைத் தான் தூக்கிக் கொடுக்கவேணும். உண்மைதான்
-
இலங்கையில் ஆறு மாதங்கள்
மெசொபொத்தேமியா சுமேரியர் replied to மெசொபொத்தேமியா சுமேரியர்'s topic in யாழ் 25 அகவை - சுய ஆக்கங்கள்ஏழு தேநீர் போடவோ என்கிறா சித்தி. ஓம் கொண்டுவாங்கோ என்றுவிட்டு சாய்மனைக் கதிரையில் இருந்து எழுகிறேன். உள்ளே சென்று வீட்டைப் பார்க்க மனதில் இது இப்ப என் வீடு இல்லை என்னும் எண்ணம் தோன்றி அலைக்கழிக்கிறது. பத்து ஆண்டுகளின் முன்னர் என் கணவரின் சகோதரர் ஒருபுறம், என் அம்மாவின் தங்கை பிள்ளைகள் ஒருபுறம் தமக்குத் தான் வீடு என்று கதைத்துக்கொண்டு திரிந்ததாலும் கணவரின் தொடர் கரைச்சல் காரணமாக அந்த வீட்டை என் தங்கைக்குக் கொடுத்து இரண்டு மாதங்கள் சரியான தவிப்பாகிவிட திரும்ப எனக்குத் தா என்று கேட்டதற்கு நான் விக்கமாட்டான். கேட்காதைங்கோ என்றுவிட்டாள். வேறு காணிகள் வாங்குவதற்கு நான் ஆசைப்பட்டபோதெல்லாம் அங்க ஆர் போய் இருக்கப்போறது சும்மா இரு. என்ர காணி இருக்குத்தானே. வேணுமென்டால் அதில போய் வீடுகட்டி இருக்கலாம் என்னும் கணவரின் அதட்டலாலும் காணிகள் வாங்கும் ஆசையே போய்விட, இப்ப வீட்டுக்குள் நின்று பார்க்கும்போதுதான் அவசரப்பட்டு விற்றுவிட்டேன் என்று மனதில் வேதனை எழுகிறது. தேநீர் குடித்தபின் தங்கை வீட்டுக்குச் செல்கிறோம். வெளிநாடு தோற்றுப்போகுமளவு பார்த்துப்பார்த்து வீட்டைத் திருத்தி வைத்துள்ளனர். 2- 2.20 நீள அகலத்துடன் தேக்குக் கட்டிலும் மெத்தையும் யன்னல் திரைச் சேலைகளும் ஏசியும் என பார்க்கவே ஆசையாக இருக்கிறது. அறையுடனேயே ரொய்லெட் வசதியுடன் கணவரும் வீட்டைச் சுற்றிப் பார்க்கிறார். மகளுக்கும் பிடித்துவிட ஒரு இரண்டு மூன்று நாட்கள் தூங்குவதும் கதைப்பதும் உண்பதுமாக காலம் களிக்கிறது. வீட்டின் முன்பகுதி முழுவதும் விதவிதமாக பூங்கன்றுகள் சாடிகளிலும் நிலங்களிலும் என் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அடுத்த வாரம் அங்குள்ள கருணாகரப் பிள்ளையார் கோவில் தேர் என்பதனால் எனக்கும் மகளுக்கும் சேலை வாங்குவது சட்டை தைக்கக் கொடுப்பது என்று நேரம் ஓடிப்போக மனிசன் வேட்டி கட்டிக்கொண்டு மேலே ஒன்றும் போடாமல் கோயிலுக்குத் தயாராகி வருகிறார். அப்பா சேர்ட்டை மறந்திட்டியள் என்று சிரிக்கிறாள். கோயிலுக்கு உள்ளே சேர்ட் போடக்கூடாது என்று மச்சாள் சொல்ல எதுக்கும் சேர்ட்டைப் போட்டுக்கொண்டு வாங்கோ. உள்ள போகும்போது கழற்றி இடுப்பில் கட்டிக்கொண்டு போகலாம் என்கிறேன். கோயிலில் முன்பு போல் பெரிதாகக் கூட்டம் இல்லை. இணுவிலுக்கும் உரும்பராய்க்கும் நடுவே இருப்பதால் இரு ஊரவரும்முன்னர் நிறையவே வருவார்கள். இம்முறை சிறிய குழந்தைகளையும் இளம் பெண்களையோ ஆண்களையோ அல்லது கொஞ்சம் வயது முதிர்ந்தவர்களையோ அங்கு காணமுடியவில்லை. எங்கள் வயதை ஒத்தவர்கள் தான் அதிகம் காணப்பட்டனர். விசாரித்தபோது பிள்ளைகளுக்குப் பள்ளி. பெரியவர்களும் யூனி, வேலை. மற்றவர்கள் வரப் பஞ்சியில் வரவில்லை என்றனர். அம்மன் கோவிலுக்கு என்றால் நிறையப்பேர் லீவு போட்டுவிட்டும் வருவினம். இந்தக் கோவிலுக்குக் குறைவு என்கிறா மச்சாள். சனம் குறைவாக இருந்தது பார்க்க ஒரு மாதிரித்தான் இருந்தது. நான் சாதாரணமாகவே கோயில்களுக்குச் செல்வதில்லை. மகளுக்காகவும், சரி கன நாட்கள் தேர் பார்த்து. போவோம் என்று போனது. கடும் வெயில் வேறு. காலையில் உணவுமில்லை. தேர் மெதுவாக நகர நகர கால்களிலும் வெயிற்சூடு மட்டுமன்றி குறுணிக் கற்கள் குற்றுவதும் தாங்கவே முடியாததாகிவிட்டது. மூன்றாவது வீதிவரை பொறுமையோடு இருந்த எனக்குப் பொறுமை போய்விட தேரைக் கடந்து சென்று செருப்பை எடுக்கவும் ஏலாமல் தவிப்புடன் நிற்கிறேன். வெறுங்காலுடன் வீடும் செல்ல முடியாது. மேற்கொண்டு தேருக்குப் பின்னால் போவதில்லை என்று முடிவெடுத்து தண்ணீர்ப் பந்தல் ஓரமாக நிற்கிறேன். கணவர் தூரத்திலிருந்து பார்த்துவிட்டாற்போல் என்னருகே வருகிறார். சர்க்கரைத் தண்ணீர் அல்லது மோர் குடிக்கப் போகிறாயா என்று கேட்க சரியான விடாய் தான் ஆனாலும் வேண்டாம் என்கிறேன். மகளும் தகப்பனும் சர்க்கரைத் தண்ணீர் வாங்கிக் குடிக்கின்றனர். ஒரு வாளியில் தண்ணீர் வைத்து சில்வர் கப்புகளைக் கழுவிக் கழுவி அடுக்குகிறார்கள். என்ர செருப்பை எடுத்துக்கொண்டு வாறியளோ ? நான் போகப்போறன் என்கிறேன். நான் அப்பாவுடன் வருகிறேன் என்கிறாள் மகள். தேர் தெற்கு வீதிக்கு நகர மச்சாளிடம் திறப்பை வாங்கிக்கொண்டு வீட்டுக்கு வந்து ஒரு தேநீர் போட்டுக் குடித்தபின்னர் தான் மனம் அசுவாசமடைகிறது. அடுத்தநாள் கோட்டையைச் சுற்றிப் பார்க்கச் செல்வோம் என முடிவெடுத்து பேருந்தில் யாழ்ப்பாணம் சென்று அங்கிருந்து நடந்து செல்கிறோம். என் ஒன்றுவிட்ட அண்ணா சிவகுமாரனுடன் சேர்ந்து சில விடயங்களைச் செய்ததாலும், துரையப்பா கொலைவழக்கில் கைதாகி கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் சிறையில் இருந்தார். அவரைப் பார்ப்பதற்கு அம்மா என்னையும் அழைத்துக்கொண்டே கோட்டைச் சிறைக்குச் செல்வார். அகளிக்குள் முதலைகளெல்லாம் இருக்கின்றனவோ இல்லையோ. நான் அம்மாவுடன் அதைக் கடந்து உள்ளே செல்லும்வரை முதலை பாய்ந்து வந்து இழுத்தாலும் என்ன செய்வது எனப் பயந்தபடி அம்மாவின் கையை இறுக்கிப் பிடித்தபடி செல்வேன். இப்ப எல்லாம் தரைமட்டமாகிக் கிடப்பதைப் பார்க்க மகிழ்ச்சி ஏற்பட்டாலும் எத்தனை உயிர்கள் இதற்காகக் காவு கொள்ளப்பட்டன என எண்ணும்போது வேதனையாகவுமிருந்தது. இப்போது முன்னர் போன பாதை அன்றி வேறு பாதை அமைக்கப்பட்டிருந்தது. நானும் கணவரும் இலங்கை ஐடி வைத்திருந்தபடியால் எமக்கு 100 ரூபாய்களும் மகளுக்கு 1250 ரூபாய்களும் அறவிட்டனர். எக்கச்சக்கமான சிங்கவர்கள், சிங்களப் பள்ளி மாணவிகள் என சிங்களப் பிரதேசத்தில் நிற்பதுபோன்ற எண்ணமே ஏற்பட்டது. நாம் போனது 11 மணிக்கு கடும் வெயில். ஒரு 15 நிமிடத்தில் பார்த்துவிட்டு மேலே இருந்த ஒரு மரத்தடியில் வேரில் நான் இருக்க கணவனும் மகளும் புல்லின்மேல் அமர்கின்றனர். மகள் கோட்டையைப் பற்றிக் கேள்விகள் கேட்க நானும் கணவரும் தெரிந்தவற்றைக் கூறுகிறோம். மீண்டும் வெளியில் வந்து முனியப்பர் கோவிலடியிலும் சிறிதுநேரம் இருந்துவிட்டு பக்கத்தில் இருக்கும் நூலகத்தையும் பார்ப்போம் என்று சொன்னால் அங்கும் நிறைய ஆட்கள். ஆனால் நூலகத்தில் ஏதோ வேலை நடப்பதாகக் கூறி யாரையும் உள்ளே விடவில்லை. வெளியே சென்று உணவருந்தலாம் என்று பார்த்தால் வீதிகளில் ஓட்டோவைக் காணவில்லை. யாழ் பேருந்து நிலையம்வரை சென்று அங்கிருந்து ஒரு ஓட்டோவை அமர்த்திக்கொண்டு ஒரு நல்ல கோட்டலாகக் கொண்டுபோக முடியுமா என்று கேட்க, தட்டாதெருவுக்குக் கிட்ட ஒன்று இருக்கு. அங்கு போகலாமா என்று சாரதி கேட்கிறார். சரி என அங்கு சென்றால் அதைப் பார்க்க நல்ல உணவகம் போலவே இல்லை. ஆனால் சரியான சனம். மணமும் நன்றாகவே இருக்கு. ஆக எடுப்பு எடுக்காதை சாப்பிட்டுப் பார்ப்பம். நல்லம் இல்லை என்றால் இனிமேல் வராமல் விடுவம் என்கிறார். மகளும் தகப்பனுக்கு சப்போட செய்ய நாம் ஓரிடத்தில் அமர்கிறோம். ஒரு மட்டன் பிரியாணியும் 2 சீபூட் பிரைட் ரைஸ்சும் மாம்பழ, அன்னாசி யூசும் மாறும் கோலாவும் ஓடர் செய்துவிட்டு காத்திருக்கிறோம். சுற்றிவரப் பார்த்தால் ஏ லெவல் படிக்கும் மாணவர்கள் போல. ஒரு பத்துப்பேர் ஒரு பெரிய மேசையைச் சுற்றி அமர்ந்திருக்கின்றனர். அனேகமாக பக்கத்தில் இருக்கும் ஆண்கள் கல்லூரி மாணவர்களாய்த்தான் இருக்க வேண்டும். கடைகளில் வந்து உண்ணுமளவு இப்ப மானவர்களின் நிலை மாறிவிட்டதா என்கிறேன். ஏனம்மா ஏதாவதொரு மாணவனின் பிறந்தநாளாகக் கூட இருக்கலாம் தானே என்கிறாள் மகள். என்ன வெளிநாட்டுக் காசாய் இருக்கும் என்று கணவர் கூற, அதைப் பற்றி உங்களுக்கு என்ன? நீங்களா பணம் கொடுக்கப் போகிறீர்கள் என்கிறாள். முதலில் யூசைக் கொண்டு வருவார்கள் என்று பார்த்தால் எதையும் காணவில்லை. யாரிடமும் கேட்கலாம் என்றாலும் அவர்களையும் காணவில்லை. சிறிது நேரத்தில் எல்லாம் ஒன்றாக வருகிறது. கரண்டியும் ரிசுவும் தரமுடியுமா என்று கேட்க கொண்டுவந்து தருகிறார். உணவு நினைத்ததிலும் மேலாக நன்றாகவே இருக்கிறது. டிசேர்ட் இல்லையோ என்கிரா மகள். றியோவில் போய் உண்போம் என்கிறார் மனிசன். ஐஸ்கிரீம் சாப்பிட இன்னொருநாள் தனியப் போவம். இப்ப இங்க ஏதும் இருக்கா கேட்பம் என்றுவிட்டு அதில் நின்ற வேலையாளைக் கூப்பிட்டு என்ன இருக்கு என்று கேட்க வனிலா ஐஸ் மட்டும்தான் இருக்கு என்கிறார். அதை வாங்கி ஆடிப்பாடி உண்டு விட்டு வெளியே செல்கிறோம்.
-
இலங்கையில் ஆறு மாதங்கள்
மெசொபொத்தேமியா சுமேரியர் replied to மெசொபொத்தேமியா சுமேரியர்'s topic in யாழ் 25 அகவை - சுய ஆக்கங்கள்😂 😃 சொல்ல மாட்டனே நன்றி
-
இலங்கையில் ஆறு மாதங்கள்
மெசொபொத்தேமியா சுமேரியர் replied to மெசொபொத்தேமியா சுமேரியர்'s topic in யாழ் 25 அகவை - சுய ஆக்கங்கள்கவனமாகக் சேமிச்சு வையுங்கோ. விசாரணைக்கு உதவும். அவசரப்படக்கூடாது 😃
-
இலங்கையில் ஆறு மாதங்கள்
மெசொபொத்தேமியா சுமேரியர் replied to மெசொபொத்தேமியா சுமேரியர்'s topic in யாழ் 25 அகவை - சுய ஆக்கங்கள்சித்தியையாவது சமாளிக்கலாம். புருஷனை சமாளிக்கிறதுதான் சரியான கடினம். சரி பிழையை ஒருக்காக்க சொல்லிப்போட்டு விடாமல் திரும்பத் திரும்பச் சொல்லி .. ................😀 சரி மாறிச் சொல்லிப்போட்டான். இது ஒரு தப்பா. 😃🙂
-
இலங்கையில் ஆறு மாதங்கள்
மெசொபொத்தேமியா சுமேரியர் replied to மெசொபொத்தேமியா சுமேரியர்'s topic in யாழ் 25 அகவை - சுய ஆக்கங்கள்ஆறு தகப்பனிடம் பணத்தை வாங்கிக்கொண்டு சென்றவள் சிறிது நேரத்தில் வருகிறாள். குந்தி இருக்க சரியான கஸ்டம் அம்மா. எல்லா இடமும் இப்பிடியான ரொய்லெட் தான் இருக்கா? பெரும்பாலும் இதுதான். ஆனால் கோட்டல்களில் வெஸ்டர்ன் டாய்லெட் தான். கூடுதலான வீடுகளிலும் இப்ப இருக்கு. ஆனால் சுத்தமாக வச்சிருக்கினமோ தெரியாது என்கிறேன். ரொய்லெட் சரியில்லை எண்டால் நான் மாமி வீட்டை அல்லது அம்மம்மா வீட்டிலயோ நிக்கமாட்டான் என்கிறாள். என் கணவரின் தங்கை வீட்டில் புதிதாக எல்லாம் செய்திருப்பதனால் நீர் கோட்டலில் தங்கவேண்டி இராது என்கிறேன். மீண்டும் பிரயாணம் தொடர இருபக்கமும் பரந்த நிலங்கள் கவனிப்பாரற்றுக் கிடக்கின்றன. முன்பு தலைகளற்று நின்ற பனை மரங்கள் ஒன்றையும் காணவில்லை. சிறிய பனைகள் ஆங்காங்கே தெரிகின்றன. 2003 இல் சென்றபோது எத்தனை பரபரப்பாக இருந்த வீதி இப்போது அங்கொன்றும் இங்கொன்றுமாய் வாகனங்கள் தெரிகின்றன. கிளிநொச்சியை நெருங்க சிறிது வாகன நெரிசல் தெரிகிறது. கணவரின் ஊர் இணுவில் என்றாலும் அவரின் தந்தை கிளிநொச்சியில் வேலை பார்த்ததால் சிறு வயதுமுதல் இருபது வயதுவரை அங்கேயே இருந்தார். கிளிநொச்சியைப் பார்த்தவுடன் சிறு பிள்ளைபோல் “இதால போனால் நாங்கள் இருந்த வீட்டுக்குப் போகலாம், இதுதான் நான் படிச்ச பள்ளிக்கூடம்” என ஒவ்வொன்றையும் மகளுக்குக் காட்டி மகிழ்ந்தபடியே வந்தார். அவரின் குதூகலத்தைப் பார்த்து இதில கொஞ்ச நேரம் நிப்பாட்டட்டா அண்ணை என்றார் சாரதி. சீச்சீ நீங்கள் தொடர்ந்து ஒடுங்கோ, பிறகு இங்க வருவம்தானே என்கிறார். மக்கள் தொகை குறைந்து விட்டதையும் வாகனங்கள் அதிகரித்து விட்டதையும் மின்வெட்டு, பெற்றோல் தட்டுப்பாடு, பொருட்களின் விலை அதிகரிப்பு, தட்டுப்பாடு போன்றவவை பற்றியும் கணவரும் சாரதியும் பேசியபடி வருகின்றனர். ஆனையிறவைக் கடந்தபின் பாழடைந்த நிலையில் இரசாயானத் தொழிற்சாலை தெரிய அதன் நிலை பார்க்க மனதைப் பிசைகிறது. பழைய நினைவுகளும் எழுகின்றன. 80 களில் எமது பாடசாலையில் எம்மை அங்கு தொழிற்சாலையைப் பார்ப்பதற்காகக் கூட்டிவந்தனர். சுற்றிப் பார்த்தபின் சிறிது நேரம் எம் கடன்களைத் தீர்க்க வேலை செய்வோர் தங்கியிருந்த தங்குமிடத்தில் விட்டனர். ரொய்லெட் போய்விட்டு நாம் உடனே வெளியே வரவில்லை. அங்கிருந்த சீப்பை எடுத்து காற்றுக்குக் கலைந்து போயிருந்த தலைகளை இழுத்துச் சரிசெய்துகொண்டிருந்தபோது எங்கள் மிஸ் வந்துவிட்டார். "ஆற்றையன் பொருளை எப்படி எடுப்பீர்கள்? அது முதல் அன் கையீனிக். எல்லாரும் முதல்ல வெளியே வாங்கோ" என ஏசியது நினைவில் வந்து போக ஏதோவொரு உணர்வு என்னை ஆட்கொண்டது. இருமருங்கும் நிலங்கள் கேட்பாரற்றுக் கிடந்தன. சில வயல்கள் உழுதபடியும் சிலது அப்படியேயும் இருந்தது. வயல் விதைக்க இன்னும் நாளிருக்கு என்றார் மனிசன். மண்ணெண்ணைத் தட்டுப்பாட்டினால் பலர் இப்ப தோட்டங்களையே செய்யாமல் கை விட்டுட்டினம் என்கிறார் சாரதி. யாழ்ப்பாணத்தை நெருங்க நெருங்க கட்டட நெரிசலும் அதிகரிக்க கிட்ட வந்துவிட்டோம் என்ற மகிழ்ச்சி ஏற்படுகிறது. 2003 இல் நான் என் குடும்பத்துடன் இலங்கை சென்றபோது என் பெற்றோரும் ஒரு சகோதரியும் இரு வாரங்கள் செல்ல அங்கு வர இருந்தபடியால் எனக்கு எந்தப் பிரசனையும் என் சித்தியால் ஏற்படவில்லை. நானும் கணவரும் 2017 இல் சென்றபோது தன் வீட்டிலேயே முதலில் வந்து இறங்கவேண்டும் என என் சித்தி ஒரே ஆர்ப்பாட்டம். என் கணவரின் தாய் இருந்தபடியால் என் அம்மா வீட்டுக்குத்தான் போகவேண்டும் எனக் கணவர் கண்டிப்புடன் சொன்னது மட்டுமன்றி அதுதானே நியாயமும் கூட என நானும் சம்மதித்துவிட என் மச்சாள் வீடிலேயே போய் இறங்கியாச்சு. இரண்டு நாட்களாய் சித்தி என்னுடன் கதைக்கவே இல்லை. நான் பிறந்து வளர்ந்த “நிவேதகிரி” என்ற பெயரைத் தாங்கி இன்றுவரை நிற்கும் வீடுதான் அது என்றாலும் கணவருடன் வரும்போது அவருடன் தானே நிற்பது முறை. இத்தனைக்கு இரு வீடுகளுக்கும் இடையில் ஐந்து நிமிட நடை. அதன்பின்னர் 2019 இல் நான் தனியாக வந்தபோது என் மச்சாளிடம் முன்கூட்டியே சொல்லிவிட்டு சித்தி இருக்கும் எங்கள் வீட்டிலேயே தங்கினேன். அதை எண்ணிப்பார்த்துவவிட்டு, முதலில் என் சூட்கேஸ்களை என் சித்தி வீட்டில் இறக்கிவிட்டுவிட்டு மிகுதியை உங்கள் தங்கை வீட்டில் இறக்கவேண்டும் என்கிறேன். கணவரும் சரி என்று கூற என் வீட்டின் முன் வான் நிற்கிறது. என் பொதிகளை எல்லாம் இறக்கியவுடன் நீங்கள் அங்கே போய் பொதிகளை இறக்கிவிட்டு வாங்கோ என்கிறேன். சாரதியிடம் நீங்கள் ஒரு ஐந்து நிமிடம் நில்லுங்கோ என்றுவிட்டு என் பொதிகளை மகளும் கணவரும் உள்ளே கொண்டுவர உள்ளே இருந்து சித்தி வருகிறா. அவவின் முகத்தில் அத்தனை மகிழ்ச்சி. எங்கே சித்தி இவற்றை வைக்கிறது என்று நான் கேட்க, முன்னால் உள்ள அறையைக் காட்டுகிறா. அதற்குள் பொதிகளை வைத்தவுடன் இதுமட்டும் தானோ என்கிறா. மூன்று பேர் எப்படி இந்த அறையில் தங்கமுடியும். அதனால் இவர்கள் இருவரும் தங்கை வீட்டில். நான் மட்டும் தான் இங்கே என்கிறேன். அதுவும் சரிதான் என்று கூற நாம் வெளியே வந்து அமர்கிறோம். இரு கதிரைகள் மட்டும் இருக்கின்றன. என்ன சித்தி. இரண்டு கதிரைகளை வாங்கிப் போடுவதற்கு என்ன என்கிறேன். முன்னர் நான் வந்தபோதும் இதே இரண்டு கதிரைகள் இருக்க நான்கு கதிரைகளை வாங்கிப் போட்டிருந்தேன். அவை எங்கே என்று கேட்க எண்ணிவிட்டு உடனே நிறுத்திவிட்டேன். ஏனெனில் உன் சித்தியிடன் காசு இல்லை என்று நீ வாங்கிப் போட்டானியோ என அப்பப்போ திட்டுவார் கணவர். அதனால் பின்னர் கேட்போம் என்று பேசாமல் இருந்துவிட்டேன்.
-
இலங்கையில் ஆறு மாதங்கள்
மெசொபொத்தேமியா சுமேரியர் replied to மெசொபொத்தேமியா சுமேரியர்'s topic in யாழ் 25 அகவை - சுய ஆக்கங்கள்எனக்குப் புரியும்படி கூறுங்கள்। என்ன பயிற்சி ??? நான் இம் முறை பெரிதாகப் படங்கள் எடுக்கவே இல்லை. நீங்கள் பார்த்த ஆம்புட்டும் தான் 🤣
-
இலங்கையில் ஆறு மாதங்கள்
மெசொபொத்தேமியா சுமேரியர் replied to மெசொபொத்தேமியா சுமேரியர்'s topic in யாழ் 25 அகவை - சுய ஆக்கங்கள்நன்றி அண்ணா யாரும் அதுபற்றி ஒருவரிடமும் முறைப்பாடு செய்வதில்லை. முன்பு சென்றபோது இடையில் கிளிநொச்சியில் ஒரு இடம். இருவர் வெளியே இருக்கின்றனர். 100 ரூபாய் தரும்படி கேட்க எதுவும் கதைக்காமல் காசைக் கொடுத்துவிட்டு உள்ளே சென்றால் வயிற்றைக் குமட்டிக்கொண்டுவர வெளியே வந்ததும் இவ்வளவு காசை வாங்கிக்கொண்டு இதில சும்மா இருக்கிறியள். தண்ணி அடித்துக் கழுவினால் என்ன என்று திட்டிவிட்டுத்தான் வந்தது. வெளிநாட்டுக் காரருடன் பெரிதாகப் பிரச்சனைப் படுவதில்லை.
-
இலங்கையில் ஆறு மாதங்கள்
மெசொபொத்தேமியா சுமேரியர் replied to மெசொபொத்தேமியா சுமேரியர்'s topic in யாழ் 25 அகவை - சுய ஆக்கங்கள்ஐந்து கணவர் சொல்லிவைத்த வான் வந்துவிட்டதா என்று பார்த்துக்கொண்டிருக்க நானும் மகளும் இரு வண்டில்களில் பொதிகளை வைத்தபடி இருக்கிறோம். செப்டெம்பர் மாதமாகையால் பெரிதாக வெய்யிலின் உக்கிரம் இருக்கவில்லை. ஆனாலும் ஒருவித புழுக்கம் வந்து அப்பிக்கொள்கிறது. பலரும் வந்து எங்கே மடம் போகணும். எங்கள் வண்டியில் வாருங்கள் என்று கேட்டுக்கொண்டே இருக்க இவ்வளவு தூரம் வருகிறோம். வாகனம் ஒழுங்கு செய்யாமலா வருவோம் என்னும் எரிச்சல் எழுகிறது. சிறிது நேரத்தில் எமக்குரிய வான் வர ஏறி அமர்ந்தபின் தான் அப்பாடா என்று இருக்கிறது. கணவர் முன்னால் இருந்து சாரதியுடன் கதைத்தபடி வருகிறார். நானும் மகளும் இரு மருங்கும் புதினம் பார்த்தபடி வருகிறோம். அப்படியே தூங்கியும் விட்டோம். நிவேதா நிவேதா என்று அன்பொழுக கணவரின் அழைப்பு மெதுவாகக் கேட்க கண்விழித்தால் வாகனம் ஒரு உணவகத்துக்கு முன்னால் நிற்கிறது. இது நல்ல உணவகமாம். உனக்குத்தான் அடிக்கடி பசிக்குமே. இங்கேயே சாப்பிட்டிட்டுப் போவம் என்கிறார். அவர் சொன்னவுடன் எனக்கும் பசிப்பது போல இருக்க சரி சாப்பிடுவம் என்றுவிட்டுக் கீழே இறங்குகிறேன். இது எந்த இடமென்று சாரதியிடம் கேட்க மாதம்பை முருகன் கோவில் இது என்கிறார். கோயிலின் கோபுரத்தின் முன் பெரிய பெரிய தலைகளின் உருவங்கள் காணப்படுகின்றன. ஓரளவு பெரிய உணவகம் தான். இருந்தாலும் உணவு எப்படி இருக்குமோ என்னும் யோசனையும் எழுகிறது. சாரதியும் கணவரும் இடியப்பம் சொல்ல நானும் மகளும் தோசையும் உழுந்து வடையும் ஓடர் செய்ய எல்லாருக்கும் உழுந்துவடை கொண்டுவாங்கோ என்கிறார் மனிசன். சாப்பிட முதல் டீ குடிப்பம் என்று அதற்கும் சொல்கிறார். ஒரு ஐந்து நிமிடங்களில் மசாலா போட்ட தேநீர் வர, இத்தனை விரைவாக வந்துவிட்டதே சூடாய் இருக்கோ என நான் வாயில் வைத்துப் பார்க்க கடும் சூடு. வாயில் தேனீர் சுட்டுவிட, என்ன அவதி கொஞ்சம் ஆறட்டுமன் என்றுவிட்டு, தான் எடுத்துக் குடிக்கிறார். சிறிது நேரத்தில் வடைகள் வருகின்றன. நல்ல பெரிதாக பார்ப்பதற்கு நன்றாக இருக்க எடுத்து உண்கிறேன். அந்த நேரப் பசிக்கோ என்னவோ மிகவும் சுவையாக இருக்கிறது. தோசையும் யாழ்ப்பாணச் சம்பலும் வரும் என்று பார்க்க சட்னியும் சாம்பாரும் வருகிறது. இடியப்பத்துக்கு அந்தச் சம்பல் வர எனக்கும் கேட்போமா என ஒரு செக்கன் எண்ணிவிட்டு இதுவும் சுவையாக இருக்குத் தானே என்று எண்ணியபடி உண்கிறேன். அப்போதுதான் பார்க்கிறேன். சில்வர் தட்டின் மேல் ஒரு மெல்லிய பொலிதீன் போடப்பட்டு அதில் உணவு வைக்கப்பட்டிருக்கு. என்ன இவங்கள் ஏன் பொலிதீன் போட்டிருக்கிறார்கள். பார்க்க அரியண்டமாக இருக்கு என்று கூற, இங்கு எல்லாக் கடையிலும் இப்ப இதுதான் என்கிறார் சாரதி. வாழையிலைக்குத் தட்டுபாடோ என்கிறார் மனிசன். கழுவிற பஞ்சிக்காண்டி இதுதான். ஆனால் வேளைக்கு உக்கிப்போயிடுமாம் என்கிறார். உண்டு முடிய கணவர் எனக்கு இன்னொரு தேநீர் குடிக்கவேணும். வேற யாருக்கும் வேணுமோ என்று கேட்க நான் எனக்கும் என்கிறேன். சாரதியும் மகளும் தமக்கு வேண்டாம் என்கின்றனர். நான் வானுக்குள் இருக்கிறேன். வாங்கோ என்றுவிட்டு சாரதி செல்ல எம் தேநீர் வருகிறது. நல்ல சாயமும் சீனியும் போட்டு நல்ல சுவையாக இருக்கு. வடை ஏதும் கட்டிக்கொண்டு போவமோ என்கிறேன் நான். இவ்வளவு சாப்பிட்டது பத்தாதே. இன்னும் நாலு மணித்தியாலத்தில வீட்டை போயிடலாம். தங்கச்சி சமைச்சு வச்சிட்டுப் பார்த்துக்கொண்டிருப்பாள். அதுக்கிடையில எங்காவது கடைகள் வரும்தானே என்கிறார். நாங்கள் சென்று அமர்ந்ததும் பிரயாணம் தொடங்குகிறது. பார்க்கும் இடம் எங்கும் சிற்றோடைகள், ஆறுகள். சிங்களப் பகுதி நல்ல செழிப்பானதுதான் என நான் எண்ணிக் கொள்கிறேன். ஒரு ஒருமணிநேரம் ஓடியதும் வீதியில் இளநீர் வித்துக்கொண்டிருப்பது தெரிய இளநீர் குடிப்பம் என்றவுடன் கணவர் சாரதியை நிறுத்தச் சொல்கிறார். சாரதி வேண்டாம் என்று மறுக்க குடியுங்கோ என்று அவரிடம் நீட்டுகிறார். கன காலத்தின் பின் இளநீர் சுவையாக இருக்கிறது. இங்க 50 ரூபா. யாழ்ப்பாணத்தில 100 ரூபா என்கிறார் சாரதி. வானுக்குள்ள இடம் இருக்குத் தானே. ஒரு குலையை இங்கேயே வாங்கிக் கொண்டு போவம் என்கிறேன். சரி என்று கணவர் கூற குலை வானுக்குள் ஏறுகிறது. சாரதி மிக நிதானமாக வாகனத்தை ஓட்டுகிறார். அப்பப்ப அங்கே நிக்கிறாங்கள். இங்கே நிக்கிறாங்கள் என்று போனில் கதைத்தபடி வர, யார் நிக்கிறாங்கள் என்று சொல்கிறீர்கள் என்று கேட்கிறேன். உவங்கள்தான் என்று அவர் கூற, போலீஸ் காரர் ஒருவர் கைகாட்டி எமது வானை நிறுத்துகிறார். சாரதி போலீசைக் கடந்து வந்து வானை நிப்பாட்டிவிட்டு நிற்கிறார். லைசென்சைப் பார்ப்பான்களோ என்று கணவர் கேட்க இன்சூரன்ஸ் இருக்கோ என்றும் பார்ப்பினம் என்றுவிட்டு தொடர்ந்து இறங்காமல் இருக்க, எல்லாம் இருக்குத்தானே? கெதியா இறங்கிப்போய் காட்டிப்போட்டு வாங்ககோவன் என்கிறார் மனிசன். அவர் தானே மறிச்சவர். அவரே வரட்டும் . நான் என்ன களவே எடுத்தனான் உவைக்குப் பயப்பட என்று சாரதி கூற எனக்கு சிறிது பயமாக இருக்க நான் கண்ணாடியில் பார்க்கிறேன் அந்தப் போலீஸ் எம்மை நோக்கி நடந்து வருவது தெரிகிறது. வரும்போதே யன்னலால் உள்ளே எட்டிப் பார்த்துவிட்டு சிங்களத்தில் ஏதோ கேட்க சாரதியும் தன் ஆவணங்களை எடுத்துக் காட்டிவிட்டு உள்ளே வைக்க நானும் எமது கடவுச் சீட்டுகளை வெளியே எடுக்கிறேன். எங்கிருந்து வருகிறீர்கள் என்று கணவரைப் பார்த்துக் கேட்க யூக்கே என்றுவிட்டு உடனேயே லண்டன் என்கிறார். அவன் பாஸ்போட்டைக் கேட்காமல் அப்பால் நகர நான் அவற்றை மீண்டும் கைப்பையுள் வைக்கிறேன். இன்னும் கொஞ்ச நேரத்தில் புத்தளம் வந்துவிடும் என்கிறார் சாரதி. அதற்குள் என்மகள் அதன்பின் அனுராடபுரவோ என்று கேட்க, என்னடா எனக்கே தெரியாது இவள் எப்படிச் சொல்கிறாள் என எண்ணியபடி அனுராதபுரமோ என்று அவளைத் திருப்பிக் கேட்க தன் போனைத் தூக்கிக் காட்ட அதில் இலங்கை மப் தெரிகிறது. நான் மீண்டும் கண்ணசந்துவிட்டேன். நல்ல தூக்கம். இம்முறை மகள் என்னை எழுப்புகிறாள். இது எந்த இடம் என்று கேட்க முறிகண்டி வந்திட்டுது, கும்பிட்டிடிட்டுப் போவம் என்று கணவர் கூற நான் இறங்குகிறேன். கால்களையும் முகத்தையும் கழுவிவிட்டு செருப்புகளைக் கழற்றி வைத்து விட்டு வெறும் காலில் நடக்க நிலம் பயங்கரச் சூடு. குறுணிக் கற்களும் குத்துகின்றன. ஏதோ சுற்றிக் கும்பிட்டுவிட்டு வந்தால் ஏதும் சாப்பிடுவோமா என்கிறார் கணவர். ஒரு கடைக்குள் சென்றால் இரண்டு மேசையும் வாங்குகளும் போடப்பட்டிருக்கு. எனக்கு அங்கு இருக்கவே பிடிக்கவில்லை. ஆனாலும் தேநீருக்காக இருக்கிறேன். கணவர் ரோள்சும் வடையும் சொல்ல ஒரு தட்டில் உழுந்துவடை, கடலைவடை, சமோசா, றோள்ஸ் எல்லாம் கொண்டுவந்து வைக்க நாம் இவ்வளவும் கேட்கவில்லையே என்கிறேன். நீங்கள் சாப்பிடுவதற்கு மட்டும்தான் காசு எடுப்ம் என்றபடி வேலையாள் நகர்கிறார். நான் ஒரு றோள்ஸ் எடுத்து உண்கிறேன். சரியான எண்ணையாக இருக்கிறது. அரைவாசி கடித்தபடி கணவரிடம் கொடுக்கிறேன். மேற்கொண்டு எதுவும் உண்ணப் பிடிக்கவில்லை. தேநீரை மட்டும் அருந்திவிட்டு வெளியே வந்து மற்றக் கடைகளை வேடிக்கை பார்க்கிறேன். எதற்கும் டாய்லெட் போவோம் என எண்ணியபடி பையை மகளிடம் கொடுத்துவிட்டுப் போய் நின்றால் கட்டணம் 5 ரூபாய்கள் என்று கூறுகிறார் வாசலில் நிர்ப்பவர். மீண்டும் வந்து கணவரிடம் பணத்தை வாங்கிக்கொண்டு போய் கொடுத்துவிட்டு உள்ளே சென்றால் மணம் தாங்க முடியவில்லை. யாழ்ப்பாணம் போகுமட்டும் அடக்கேலாது என்று மூக்கைப் பொத்திக்கொண்டு கடனை முடித்து வந்தாயிற்று. நானும் போட்டு வரட்டோ என்கிறாள் மகள். நீர் சமாளிப்பீரோ தெரியேல்லை. போய்ப் பாரும் என்கிறேன்.
-
இலங்கையில் ஆறு மாதங்கள்
மெசொபொத்தேமியா சுமேரியர் replied to மெசொபொத்தேமியா சுமேரியர்'s topic in யாழ் 25 அகவை - சுய ஆக்கங்கள்சீச்சீ நான் அவனைத் திட்டவில்லையே. கதைச்சனான் 🤣 வேற வழியில்லை. நான் படம் போடுமட்டும் தலை வெடிக்காமல் பார்த்து கொள்ளுங்கோ 😂
-
புலம்பெயர்ந்த ஈழத் தமிழரின் எதிர்காலம் - பகுதி 2
வாழ்த்துகள் இணையவன். என்னைக் கேட்டால் சரியானதொரு முடிவையே எடுத்துள்ளீர்கள். எமது நாடுபோல் எதுவும் எமக்கு மகிழ்வைத் தராது. நானும் கணவரும் எப்பவோ உந்த முடிவை எடுத்துவிட்டோம். மற்றவர்க்காக எமது வாழ்வை வாழவே கூடாது.
-
இலங்கையில் ஆறு மாதங்கள்
மெசொபொத்தேமியா சுமேரியர் replied to மெசொபொத்தேமியா சுமேரியர்'s topic in யாழ் 25 அகவை - சுய ஆக்கங்கள்அதையும் கொடுத்துவிட்டால் நின்மதியாய் செல்லலாம் அன்று காலை நான்கு மணி மட்டில் தான் விமானம் தரையிறங்கியது. மழை வேறு தூறிக்கொண்டு இருந்தது. அதனால்த்தான் தப்பியிருக்கும் என நினைக்கிறேன். இரண்டு மணிநேரம் என்பதானாலும் இருக்கலாம். மொத்தம் மூன்று 😀 😂🤣
-
இலங்கையில் ஆறு மாதங்கள்
மெசொபொத்தேமியா சுமேரியர் replied to மெசொபொத்தேமியா சுமேரியர்'s topic in யாழ் 25 அகவை - சுய ஆக்கங்கள்இது உங்கள் மைண்ட் வொய்ஸ் போலயல்லோ இருக்கு நான்என்ன கதையா எழுதிறன். 😂 உது எல்லாம் கேட்கப்படாது. அதெண்டா உண்மைதான்
-
இலங்கையில் ஆறு மாதங்கள்
மெசொபொத்தேமியா சுமேரியர் replied to மெசொபொத்தேமியா சுமேரியர்'s topic in யாழ் 25 அகவை - சுய ஆக்கங்கள்நான்கு , கிட்டத்தட்ட முக்கால் மணிநேரமாகிவிட்டது நாம் இறங்கி. மீண்டும் எல்லாப் பொருட்களையும் பைகளில் வைத்து எடுத்துக்கொண்டு செல்லத் தயாராக, கணவனைத் தள்ளுபவர் சர்க்கர நாற்காலியைத் தள்ள ஆரம்பிக்க, நாமும் பைகளைத் தோள்களிலும் கைகளிலும் காவியபடி நடக்க, கணவரை அவன் சிறிது வேகமாகத் தள்ளிக்கொண்டு செல்வதாகப் படுகிறது. நானும் ஓட்டமும் நடையுமாகச் செல்லத் தொடங்க “அம்மா மெதுவாகப் போங்கோ. அவர் வேகமாகப் போய் எமக்காகப் பார்த்துக்கொண்டு நிக்கட்டும்” என்கிறாள். எனக்கு மனம் கேட்கவில்லை. புதிய விமான நிலையம் வேறு. எதுக்கும் கொஞ்சம் வேகமாக நடப்பமென்று சொல்லி நடக்க ஒரு Lift இற்குள் இருந்து இங்க வாங்கோ என்ற கணவரின் அழைப்புக் கேட்க அதை நோக்கிச் செல்கிறோம். அதற்குள் ஏறியவுடன் “இவன் ஐந்து டொலர் தரும்படி கேட்கிறான்” என்கிறார் மனிசன். “அவனுக்கு எதற்கு ஐந்து டொலர் ? அதுகும் அவனுக்கு எதற்குக் கொடுக்கவேண்டும். அப்பிடி அவன் கேட்கிறதே பிழை” என்கிறேன். அதுதான் விரைவாகத் தள்ளிக்கொண்டு வந்தவரோ என்றபடி அவனை ஒரு பார்வை பார்க்கிறேன். "ஒண்டும் குடுக்கத் தேவையில்லை அப்பா. அது அவரின் தொழில்" என்கிறாள் மகள். அதற்குள் லிப்ட் கதவு திறக்க, கணவரைத் தள்ளியபடியே எனக்குக் காசு எதுவும் வேண்டாம் என்கிறான் அவன். அவனுக்குத் தமிழில் நாம் கதைத்தது புரிந்துவிட்டதோ என்னும் ஐயம் எழுகிறது. நானும் மகளும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்கிறோம். நாம் எமது விமானத்துக்குரிய இடத்தை அடைந்துவிட்டோம். கணவர் எழுந்து அமர்ந்துகொள்ள நானும் மகளும் அருகில் அமர்கிறோம். அழகான ஏயாபோர்ட். ஒருக்கால் சுற்றிப் பார்த்துவிட்டு வருவோமா என்று மகளைக் கேட்கிறேன். நானும் வரட்டோ என்கிறார் கணவர். இவ்வளவையும் காவிக்கொண்டு போக ஏலாது. நாங்கள் வந்து விடுறம். அதன்பின் நீங்கள் போங்கோ என்கிறேன். திடுமென என் போடிங் பாசைக் காணவில்லை என்கிறாள் மகள். எங்கேயாவது மாறி வைத்திருப்பாய் பாரென்றுவிட்டு எமது பைகள் உட்பட எல்லா இடமும் தேடியும் அதைக் காணவில்லை. அவர்கள் செக் பண்ணிய இடத்தில் தான் தவறியிருக்கும். நான் பார்த்துவிட்டு வருகிறேன் என்றுவிட்டு மகள் செல்ல எனக்குப் பதட்டமாகிறது. மகள் போய் அரைமணி நேரத்துக்கு மேலாகியும் வராததால் எனக்குப் பதட்டம் அதிகரிக்க, நான் கொஞ்சத் தூரம் சென்று பார்க்கிறேன். கண்ணுக்கெட்டிய தூரம்வரை அவள் இல்லை. போன் செய்து பார்க்க அதுவும் நெட்வேக் பிரச்சனைபோல. போன் வேலை செய்யவில்லை. மாறி எங்காவது சென்றுவிட்டாளோ அல்லது வேறு என்னவோ என் மனம் போன போக்கில் என் கற்பனையும் செல்கிறது. நீங்கள் இருங்கோ. நான் போய் தேடிக்கொண்டுவருக்கிறேன் என்று கூற, "பிறகு நீ துலைஞ்சு நாங்கள் தேட ஏலாது. அவள் வந்திடுவாள். நீ உதிலை இரு" என்கிறார். நான் வந்து அவருக்குப் பக்கத்து இருக்கையில் இருந்தாலும் எனக்கு இருப்புக் கொள்ளுதில்லை. மறுபடியும் எழுந்து அங்கும் இங்கும் நடந்தபடி வழிபார்த்து நிற்கிறேன். எமது விமானத்தில் ஏறுவதற்கு அரை மணி நேரம் இருக்கிறது. எல்லோரும் தயாராகுங்கள் என விமானச் சேவையினர் ஒலிபரப்புச் செய்கின்றனர். எனக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. விடுவிடுவென அந்தக் gate இக்கு அருகில் இருக்கும் கவுண்டருக்குச் சென்று மகளின் பாஸ்போட்டைக் கொடுத்து விபரத்தைக் கூறி ஒருமுறை அவளின் பெயரைக் கூறி உடனே வருமாறு அழைக்கும்படி கேட்கிறேன். அவரோ உடனே இன்னொரு போடிங் பாசைத் தயார் செய்துவிட்டு மகளின் பெயரைக் கூறி வரும்படி அழைக்கிறார். நான் போடிங்பாசையும் பாஸ்போட்டையும் வாங்கிக்கொண்டு திரும்புகிறேன். மகள் தூரத்தில் வருவது தெரிகிறது. என்னருகில் வந்தவுடன் “நீங்கள் தான் சொன்னீர்களா என்னைக் காணவில்லை என்று. நான் சின்னப் பிள்ளையா துலைய” என்கிறாள். போய் இவ்வளவு நேரம். எனக்குப் பயம் வரும் தானே என்று கூறியபடி பாஸ்போட்டையும் போர்டிங் பாசையும் நீட்டுகிறேன். என்னுடையதை அங்கு எங்குமே காணவில்லை. அதனால் அங்கு கதைத்து நானும் எடுத்துக்கொண்டு தான் வந்தேன் என்றுகூற நின்மதிப் பெருமூச்சு விட்டபடி கணவர் இருக்குமிடம் செல்கிறோம். விமான நிலையத்தைச் சுற்றிப்பார்த்து ஒரு படம் கூட எடுக்கவில்லையே என்று கவலை ஏற்பட்டாலும் சரி திரும்பவும் இந்த வழியால் தானே வரவேண்டும். அப்போது வடிவாகப் படம் எடுத்துக்கொள்வோம் என மனதைத் தேற்றிக்கொள்கிறேன். அடுத்த மூன்று மணி நேரத்தில் கட்டுநாயக்காவில் விமானம் தரையிறங்குகிறது. நான் 2019 இல் என் நூல் வெளியீட்டுக்காகச் சென்றிருந்தபடியால் பெரிதாக எனக்குப் பரபரப்பு ஏற்படவில்லை. ஆனாலும் படபடப்பு. போன் மற்றும் ஐபாட் என் சூட்கேசில் இருக்கிறதா ????இல்லையா ??? என்னும் படபடப்பு. குடிவரவுத் திணைக்களத்தில் எந்தக் கெடுபிடியும் இல்லை. நான் கணவர் பிள்ளைகளைக் கவனிக்காது என் கைப்பையையும் கொண்டு விரைவாக பயணப் பொதிகள் வரும் இடத்தை அடைகிறேன். அவை இன்னும் வர ஆரம்பிக்கவில்லை. என்ன இன்னும் சூட்கேசைக் காணவில்லை. என்ன செய்யிறாங்கள் என்று கணவனைப் பார்த்துச் சொல்கிறேன். எப்படியும் உங்கள் போன் கிடைக்கப்போவதில்லை அம்மா. அது எப்ப வந்தால் என்ன என எரிச்சலூட்டுகிறாள் மகள். கடைக்குட்டி மூன்று வயதில் வந்தபின் இப்போதுதான் வருவதனால் அங்கும் இங்கும் புதினம் பார்த்தபடி இருக்கிறாள். ஒருவாறு பொதிகள் வர ஆரம்பிக்க எனது பொதி பத்தாவதாய் வர உடனே எடுத்து சிப்பைத் திறந்து பார்க்கிறேன். என் போனும் ஐபாடும் இருக்க மனதில் பெரும் நிம்மதி ஏற்படுகிறது.
-
இலங்கையில் ஆறு மாதங்கள்
மெசொபொத்தேமியா சுமேரியர் replied to மெசொபொத்தேமியா சுமேரியர்'s topic in யாழ் 25 அகவை - சுய ஆக்கங்கள்உங்களுக்குப் பொறாமை கண்டியளோ 😂 காக்கவைக்க எனக்கு என்ன ஆசையா??? கணனியில குந்த எனக்கும் நேரம் வரவேணும் எல்லோ ?
-
கொட்டும் பனிக்குள் 2023 புதுவருடம்.
போனதுதான் போனீர்கள். நீங்களும் ஒருமுறையாயினும் சறுக்கிப்பார்த்திருக்கலாம் அண்ணா
-
இலங்கையில் ஆறு மாதங்கள்
மெசொபொத்தேமியா சுமேரியர் replied to மெசொபொத்தேமியா சுமேரியர்'s topic in யாழ் 25 அகவை - சுய ஆக்கங்கள்நல்ல சந்தோஷமாக்கும். ஒருதற்றையும் துலையேல்லை அண்ணா. ஒரு பழைய யாழ் உறவுதான் இந்தப் பெயரில் வருகுது எண்டு உங்களுக்கும் விளங்கித்தானே இருக்கும் அண்ணா.
-
மலருக்கு தென்றல் பகையானால்.........!
யாழ் கள இளசுகளுக்கு ஏற்றமாதிரி நல்ல கிழுகிழுப்பாகக் கதையை நகர்த்தி நன்றாக நிறைவு செய்திருக்கிறீர்கள் அண்ணா.