Search the Community
Showing results for tags 'இந்தியா'.
-
கடனில் சிக்கியிருந்த தொழிலாளிக்கு அடித்த ஜாக்பாட் - ரூ 80 லட்சம் மதிப்புள்ள வைரத்தை தோண்டி எடுத்த ஆச்சரியம் படக்குறிப்பு,ராஜு கவுண்ட் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக வைரம் தேடும் பணியில் ஈடுபட்டு வருகிறார் கட்டுரை தகவல் எழுதியவர், செரிலன் மோலன் பதவி, பிபிசி நியூஸ், மும்பை 3 மணி நேரங்களுக்கு முன்னர் மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு சுரங்கத்தில் ஒரு பெரிய வைரத்தைக் கண்டுபிடித்த ஏழை தொழிலாளியின் வாழ்க்கை ஒரே இரவில் மாறிவிட்டது. ராஜு கவுண்ட் என்னும் தொழிலாளி சுரங்கத்தில் கண்டெடுத்த 19.22 காரட் வைரம், அரசாங்க ஏலத்தில் சுமார் 80 லட்சம் ரூபாய் வரை விலை போகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. வைரம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக மத்திய பிரதேசத்தின் பன்னா நகரில் சுரங்கங்களை குத்தகைக்கு எடுத்து வருவதாக ராஜு கவுண்ட் கூறுகிறார். வைரத்துக்கு பேர் போன பன்னா நகரத்தில், விலைமதிப்பற்ற வைரக் கல்லை கண்டெடுப்பதற்காக அங்கிருக்கும் மக்கள் ஆழமற்ற சுரங்கங்களை அரசாங்கத்திடம் இருந்து குறைந்த விலையில் குத்தகைக்கு எடுக்கிறார்கள். மலிவு விலைக்கு வைர சுரங்கங்களை குத்தகைக்கு விடும் அரசாங்கம் மத்திய அரசின் தேசிய கனிம வளர்ச்சிக் கழகம் (என்எம்டிசி), பன்னாவில் இயந்திரங்களின் மூலம் வைரச் சுரங்க பணிகளை மேற்கொண்டு வருகிறது. மேலும், வைரங்களை தேடும் தனிநபர்கள், குடும்பங்கள் மற்றும் கூட்டுறவு குழுக்களுக்கு ஆழமற்ற சுரங்கங்களை இது குத்தகைக்கு விடுகின்றது. அவர்கள் தங்களிடம் இருக்கும் அடிப்படை கருவிகள் மற்றும் உபகரணங்கள் மூலம் வைரத்தை தேடி வருகின்றனர். சுரகங்களில் கண்டுபிடிக்கப்படும் எந்தவொரு வைரக்கல்லும் அரசாங்க வைர அலுவலகத்தில் ஒப்படைக்கப்படும், பின்னர் அரசாங்கம் அந்த கல்லை மதிப்பிடுகிறது. "இந்த சுரங்கங்கள் 200-250 ரூபாய்க்கு [குறிப்பிட்ட காலத்திற்கு] கூட குத்தகைக்கு விடப்படும்" என்று மாநில அரசின் வைர அலுவலக அதிகாரி அனுபம் சிங் பிபிசியிடம் தெரிவித்தார். 2018 ஆம் ஆண்டில், பண்டேல்கண்ட் பகுதியைச் சேர்ந்த ஒரு தொழிலாளி, பன்னாவில் உள்ள ஒரு சுரங்கத்தில் 15 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள வைரத்தைக் கண்டுபிடித்தார். இருப்பினும், இத்தகைய நிகழ்வுகள் அடிக்கடி நடக்காது. அரிதாகதான் நிகழும். படக்குறிப்பு,கண்டெடுக்கப்பட்ட வைரத்தின் மதிப்பு 8 மில்லியன் ரூபாய் வரை இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது ஏழைத் தொழிலாளியின் கைகளில் மின்னிய வைரக்கல் பலர் சிறிய வைர கற்களைக் கண்டுபிடித்திருந்தாலும், ராஜு கவுண்ட் தோண்டி எடுத்திருப்பது பெரிய வைரக்கல். எனவே இது மிகப்பெரிய நிகழ்வு என்று சிங் கூறினார். இரண்டு மாதங்களுக்கு முன்பு பன்னாவிற்கு அருகிலுள்ள கிருஷ்ணா கல்யாண்பூர் பட்டி கிராமத்தில் உள்ள சுரங்கத்தை தனது தந்தை குத்தகைக்கு எடுத்ததாக கவுண்ட் பிபிசியிடம் கூறினார். மழைக்காலத்தில் விவசாயம் மற்றும் கூலி வேலைகள் கிடைக்காத போது அவரது குடும்பம் சுரங்கங்களை குத்தகைக்கு எடுப்பதை வழக்கமாக கொண்டிருப்பதாக அவர் கூறினார். "நாங்கள் மிகவும் ஏழ்மையானவர்கள், வேறு எந்த வருமானமும் இல்லை, எனவே நாங்கள் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற நம்பிக்கையில் இதைச் செய்து வருகிறோம் " என்று அவர் கூறினார். இதற்கு முன்பு மக்களுக்கு வைரம் கிடைத்த கதைகளைக் கேட்ட அவர், தனக்கும் ஒரு நாள் அதிர்ஷ்டம் கிடைக்கும் என்று நம்பியதாக கூறுகிறார். புதன்கிழமை காலை, விலைமதிப்பற்ற வைர கல்லை தேடும் தனது அன்றாட பணியைச் செய்ய அவர் சுரங்கப் பகுதிக்குச் சென்றார். ''உறவினர்களுக்கும் பகிர்ந்தளிக்க போகிறேன்'' படக்குறிப்பு,கவுண்ட் பயன்படுத்திய அடிப்படை உபகரணங்கள் "இது கடினமான வேலை. நாங்கள் ஒரு குழி தோண்டி, மண் மற்றும் பாறை துண்டுகளை வெளியே எடுத்து, அவற்றை ஒரு சல்லடையில் இட்டு, கழுவுவோம். பின்னர் வைரங்களைத் தேட ஆயிரக்கணக்கான காய்ந்த, சிறிய கற்களை கவனமாக சல்லடை செய்வோம்" என்று அவர் விவரித்தார். அன்று மதியம், அவரின் கடின உழைப்புக்கு பலன் கிடைத்தது. இத்தனை நாள் அவர் மேற்கொண்ட கடுமையான முயற்சிகளுக்கு ஈடாக அதிர்ஷ்டம் கதவைத் தட்டியது. "நான் தோண்டி எடுத்த கற்களை சல்லடை செய்து பார்த்தேன், கண்ணாடித் துண்டை போன்று மின்னும் ஒரு கல்லை கவனித்தேன். அதை என் கண்களுக்கு அருகில் வைத்துப் பார்த்தேன், ஒரு மெல்லிய பளபளப்பைக் கண்டேன், என் கைகளில் இருப்பது ஒரு வைரம் என்பதை உணர்ந்தேன்" என்று அவர் விளக்கினார். கவுண்ட் பின்னர் தன் கடின உழைப்பால் கண்டுபிடித்து எடுத்த வைர கல்லை அரசாங்க வைர அலுவலகத்திற்கு கொண்டு சென்றார். அங்கு அது எடைப் போடப்பட்டு மதிப்பீடு செய்யப்பட்டது. அரசாங்கத்தின் அடுத்த ஏலத்தில் இந்த வைரம் விற்கப்படும் என்றும், அரசாங்கத்தின் ராயல்டி மற்றும் வரிகள் கழிக்கப்பட்ட பிறகு கவுண்ட் தனது பங்கைப் பெறுவார் என்றும் சிங் கூறினார். கவுண்ட் இதில் கிடைக்கும் பணத்தைக் கொண்டு தனது குடும்பத்திற்கு ஒரு நல்ல வீட்டைக் கட்டவும், தனது குழந்தைகளை படிக்க வைக்க முடியும் என்றும் நம்புகிறார். அதற்கு முன்பு, அவர் தனது 500,000 ரூபாய் கடனை அடைக்க விரும்புகிறார். தனக்கு வைரம் கிடைத்திருப்பது அனைவருக்கும் தெரிந்துவிடும் என்றெல்லாம் நான் பயப்படவில்லை, காரணம் என்னுடன் வசிக்கும் 19 உறவினர்களிடையே இந்த பணத்தை பிரித்துக் கொடுக்க திட்டமிட்டுள்ளேன் என்கிறார் கவுண்ட். இப்போதைக்கு, தனக்கு பணம் கிடைக்கப் போகிறது என்று தெரிந்து திருப்தியாக இருக்கிறார். "நாளை, நான் வைரத்தை தேட மீண்டும் சுரங்கத்திற்கு செல்கிறேன்," என்றும் அவர் நம்பிக்கையுடன் கூறினார். https://www.bbc.com/tamil/articles/cv2gzzjg8gro
-
ராஜிவ் நோக்கி வந்த 3 தோட்டாக்கள், இந்திரா மீது வீசப்பட்ட கற்கள், காத்திருந்த மோதி - பிரதமர்களை பாதுகாப்பது யார்? பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், ரெஹான் ஃபசல் பதவி, பிபிசி இந்தி 25 ஜூலை 2024, 02:33 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இந்தியாவில் பாதுகாப்பில் ஏற்பட்ட குறைபாடுகள் காரணமாக மகாத்மா காந்தி, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி ஆகியோர் படுகொலை செய்யப்பட்டனர். எந்தவொரு பாதுகாப்பு கட்டமைப்பும், தாக்குபவர்கள் ஊடுருவும் வரை முற்றிலும் உஷார் நிலையில் இருப்பதாகத் தோன்றும். அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு இதற்கு ஒரு சமீபத்திய உதாரணம். டிரம்ப் மீதான தாக்குதலுக்குப் பிறகு அமெரிக்காவில் ஏற்பட்ட பாதுகாப்பு குறைபாடுகள் குறித்த முழுமையான விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதுமட்டுமின்றி உலகெங்கிலும் விஐபிகளின் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ள ஏஜென்சிகளும் தங்கள் அமைப்புகளை மதிப்பாய்வு செய்யத் தொடங்கியுள்ளன. இந்தியாவில் பிரதமரின் பாதுகாப்பு உலகின் வலிமையான ஒன்றாகக் கருதப்படுகிறது. பிரதம மந்திரி இந்திரா காந்தியின் படுகொலைக்குப் பிறகு, பாதுகாப்பை பலப்படுத்த வேண்டிய அவசியம் உணரப்பட்டது. அது தொடர்ந்து மேம்படுத்தப்படுகிறது. வரலாற்று ரீதியாக இதுபோன்ற பல குறைபாடுகள் இந்தியாவில் நடந்துள்ளன. பிரதமர் பதவியில் இருப்பவரின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டபோது, பாதுகாப்பு ஏஜென்சிகள் தர்மசங்கடத்தை சந்திக்க நேரிட்டன. 'எங்க வீட்டுப் பெண்' - தமிழ்நாட்டில் கமலா ஹாரிஸின் பூர்வீக கிராமத்தில் என்ன நடக்கிறது?24 ஜூலை 2024 வைரல் வீடியோவில் இடுப்பு மற்றும் கழுத்து வரை மண்ணில் புதைக்கப்பட்ட 2 பெண்கள் என்ன ஆயினர்?24 ஜூலை 2024 புவனேஷ்வரில் இந்திரா காந்தி மீது தாக்குதல் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,தேர்தல் பிரசாரத்தின் போது பேரணியில் உரையாற்றும் இந்திரா காந்தி புவனேஷ்வரில் 1967ஆம் ஆண்டு பொதுத் தேர்தலின் போது நடைபெற்ற தேர்தல் பேரணியில் இந்திரா காந்தி பேசத் தொடங்கியவுடன், கூட்டத்தில் இருந்த சிலர் மேடை மீது கற்களை வீசத் தொடங்கினர். ஒரு கல் பாதுகாப்பு அதிகாரியின் நெற்றியிலும், மற்றொன்று ஒரு பத்திரிகையாளரின் காலிலும் பட்டது. இதைப் பார்த்த இரண்டு பாதுகாப்புப் பணியாளர்கள் இந்திரா காந்தியின் இரு பக்கங்களிலும் நின்று கொண்டனர். பேச்சை உடனடியாக முடிக்குமாறு பாதுகாப்பு அதிகாரிகள் அவரிடம் கோரிக்கை விடுத்தனர். ஆனால் அவர் அதற்கு செவிசாய்க்கவில்லை. இதற்கிடையில் மேடை மீது அவ்வப்போது கற்கள் வீசப்பட்டன. சிறிது நேரம் கழித்து இந்திரா தனது பேச்சை முடித்துக்கொண்டு மேடையில் போடப்பட்டிருந்த நாற்காலியில் அமர்ந்தார். அவர் தனது உரையை முடித்தவுடன் உள்ளூர் காங்கிரஸ் வேட்பாளர் பேசத் தொடங்கினார். அப்போது மேடை மீதான கல்வீச்சு மீண்டும் தொடங்கியது. "இதைப் பார்த்த இந்திரா காந்தி மீண்டும் மைக் அருகில் சென்று, 'இது என்ன அடாவடித்தனம்? இப்படியா நாட்டை கட்டி எழுப்புவீர்கள்?' என்று கேட்டார். அப்போது பல கற்கள் ஒரே நேரத்தில் வீசப்பட்டதில் ஒரு கல் இந்திரா காந்தியின் முகத்தில் பட்டது . அவர் மூக்கில் இருந்து ரத்தம் வழியத்தொடங்கியது. கல்வீச்சு காரணமாக அவருடைய மூக்கின் எலும்பு உடைந்தது,” என்று இந்திரா காந்தியின் வாழ்க்கை வரலாற்று புத்தகத்தில் கேத்தரின் ஃபிராங்க் குறிப்பிட்டுள்ளார் ஆனால் இந்திரா காந்தி தனது தேர்தல் பிரசாரத்தை நிறுத்தவில்லை. அடுத்த சில நாட்களுக்கு மூக்கில் பிளாத்திரியுடன் அவர் தேர்தல் பிரசாரங்களில் தொடர்ந்து உரையாற்றினார். “நான் பேட்மேனைப் போலவே இருக்கிறேன்,” என்று சிரித்தபடி அவர் கூறினார். இது பிரதமரின் பாதுகாப்பில் ஏற்பட்ட பெரும் குளறுபடியாகும். ப்ளூ புக் (பிரதமருக்கு அளிக்கப்படும் பாதுகாப்பை விளக்கும் புத்தகம்) விதிகளை மீறி மக்கள் மேடைக்கு மிக அருகில் வர அனுமதிக்கப்பட்டனர். இதன் காரணமாக அவர்கள் வீசிய கற்கள் மேடையை அடைந்தன. இது பாதுகாப்பு அமைப்புகளுக்கு ஒரு பாடமாக அமைந்தது. ராஜ்காட்டில் ராஜீவ் காந்தி மீது தாக்குதல் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி இந்திரா காந்தி 1984இல், அவரது தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரிகளால் எப்படி படுகொலை செய்யப்பட்டார் என்பது பற்றி நிறைய எழுதப்பட்டுள்ளது. இது நடந்து இரண்டு வருடங்கள்கூட ஆகாத நிலையில் ராஜீவ் காந்தியைக் கொல்ல முயற்சி நடந்தது. 1986, அக்டோபர் 2 ஆம் தேதி காலை 6:55 மணிக்கு ராஜீவ் காந்தி டெல்லி ராஜ்காட்டில் உள்ள காந்தி சமாதியை நோக்கி சென்று கொண்டிருந்தபோது ஒரு பெரிய சத்தம் கேட்டது. பிரதமருடன் இருந்த பாதுகாப்புப் படையினர் உடனடியாக அவரைச் சுற்றி நின்றுகொண்டனர். சுடப்பட்ட தோட்டா ராஜீவ் காந்திக்குப் பின்னால் இருந்த பூச்செடிகள் மீது பாய்ந்தது. அந்த பூச்செடிகளுக்கு கடந்த சில நாட்களாக தண்ணீர் பாய்ச்சப்பட்டு வந்தது. ஏதாவது வெடிபொருள் அங்கே புதைக்கப்பட்டிருந்தால், அது வெடிக்காமல் தடுப்பதே இதன் பின்னணியில் இருந்த நோக்கம். பாதுகாப்புப் பணியாளர்கள் அனைவரும் உடனடியாக ராஜ்காட் முழுவதும் பரவி, ஒவ்வொரு புதரையும், செடிகளையும் சோதனை செய்யத் தொடங்கினர். அங்கு எதுவும் கிடைக்காததால் சாலையை சுற்றியுள்ள கட்டிடங்களை பார்க்க ஆரம்பித்தார்கள். ஆனால் ராஜீவ் காந்தியை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்திய கரம்வீர் சிங் பதுங்கியிருந்த, கொடிகளால் மூடப்பட்டிருந்த மரத்தை அவர்கள் சோதனை செய்யவில்லை. அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்பை கமலா ஹாரிஸால் தோற்கடிக்க முடியுமா?24 ஜூலை 2024 மூன்று தோட்டாக்கள் சுடப்பட்டன பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ராஜ்காட்டில் உள்ள காந்தி சமாதி எட்டு மணியளவில் மகாத்மா காந்தியின் சமாதியில் மலரஞ்சலி செலுத்திவிட்டு ராஜீவ் காந்தி தனது காரை நோக்கித் திரும்பிச் செல்லத் தொடங்கியபோது, இரண்டாவது புல்லட் சத்தம் கேட்டது. அப்போது ராஜீவ் காந்தியும் குடியரசுத்தலைவர் கியானி ஜைல் சிங்கும் ஒன்றாக தங்கள் கார்களை நோக்கிச் சென்று கொண்டிருந்தனர். "தோட்டா சத்தம் கேட்டவுடன் ஜைல் சிங் ராஜீவ் காந்தியிடம், 'இந்தத் தாக்குதல் எங்கிருந்து வருகிறது?' என்று கேட்டார். 'நான் வந்தபோதும் என்னை இப்படியேதான் வரவேற்றார்கள். இப்போது திரும்பிச்செல்லும்போதும் துப்பாக்கியால் சுட்டு வழி அனுப்புகிறார்கள் போலிருக்கிறது,' என்று ராஜீவ் காந்தி நகைச்சுவையாக பதிலளித்தார்,” என்று 1986 அக்டோபர் 31, ’இண்டியா டுடே’ இதழில் இந்தர்ஜித் பத்வார் மற்றும் தானியா மிடா ஆகியோர் எழுதியுள்ளனர். அவரது குண்டு துளைக்காத மெர்சிடிஸ் காரில் ஜைல் சிங்கை அமரவைத்த ராஜீவ், தன் மனைவி சோனியாவுடன் தனது அம்பாசிடர் காரில் உட்காரப் போகும் போது மூன்றாவது தோட்டா சுடப்பட்டது. ராஜீவ் காந்திக்கு பின்னால் நின்றிருந்த காங்கிரஸ் எம்எல்ஏ பிரிஜேந்தர் சிங் மோவாய் மற்றும் முன்னாள் பயானா மாவட்ட நீதிபதி ராம் சரண் லால் ஆகியோரை தோட்டா தாக்கியது. ராஜீவ் கூச்சலிட்டு சோனியாவை காருக்குள் அமரும்படி சொன்னார். பாதுகாப்புப் பணியாளர்கள் ராஜீவை சூழ்ந்துகொண்டனர். இதற்கிடையில் அடர்ந்த இலைகளால் மூடப்பட்ட மரத்தில் இருந்து புகை எழுவதை பாதுகாப்பு அதிகாரிகள் பார்த்தனர். தங்கள் 9 மிமீ ஜெர்மன் மவுசர் துப்பாக்கியால் பாதுகாப்பு அதிகாரிகள் சுட்டனர். பச்சை நிற உடை அணிந்த வாலிபர் ஒருவர் திடீரென கைகளை உயர்த்தியபடி புதரில் இருந்து வெளியே வருவது தெரிந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி அப்போது அங்கு இருந்த உள்துறை அமைச்சர் பூட்டா சிங் மற்றும் டெல்லியின் துணைநிலை ஆளுனர் எச்.எல்.கபூர் ஆகியோர் அந்த நபர் மீது துப்பாக்கிச் சூடு நடத்த பாதுகாப்பு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர். ஆனால், டெல்லி கூடுதல் போலீஸ் கமிஷனர் கெளதம் கவுல், ‘துப்பாக்கி சூடு நடத்தாதீர்கள்’ என குரல் எழுப்பினார். கரம்வீர் சிங் அங்குள்ள புதர்களுக்குள் நீண்ட நேரமாக பதுங்கி இருந்தது பின்னர் நடத்திய விசாரணையில் தெரியவந்தது. அவரிடமிருந்து ஒரு பெரிய பிளாஸ்டிக் தாள், கைக்குட்டையில் கட்டப்பட்ட வறுத்த பருப்பு, தண்ணீர் நிரப்பப்பட்ட ஜெர்ரிகேன், மற்றும் வலி நிவாரணி மாத்திரைகள் ஆகியவை கைப்பற்றப்பட்டன. ஒரு நாள் முன்னதாக நடந்த தீவிர தேடுதலின் போது நாய்கள் குரைத்து அந்த புதரை அடையாளம் காட்டின. ஆனால் அங்கு தேனீக்கள் இருந்ததால் பாதுகாப்பு ஊழியர்கள் மேற்கொண்டு செல்லவில்லை. ராஜீவ் காந்தி ராஜ்காட்டில் தாக்கப்படலாம் என்று சில நாட்களுக்கு முன் உளவுத்துறை தகவல் வெளியாகியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. பெரிய நிகழ்வுகளுக்கு முன்பு இதுபோன்ற தகவல்கள் பெரும்பாலும் வருகின்றன, எனவே இது வழக்கமான எச்சரிக்கையாக கருதப்பட்டது என்று டெல்லி போலீசார் பின்னர் தெளிவுபடுத்தினர். இந்த பாதுகாப்பு குறைபாடு காரணமாக ராஜீவ் காந்தியின் உறவினரான டெல்லி கூடுதல் போலீஸ் கமிஷனர் கெளதம் கவுல் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். மத்திய பட்ஜெட்டுக்கு பிறகு தங்கம்,வெள்ளி நகைகளின் விலை எவ்வளவு குறைந்தது? இப்போது நகைகளை வாங்கலாமா?24 ஜூலை 2024 பிரதமரின் பாதுகாப்பில் மீண்டும் ஏற்பட்ட ஓட்டை ஒரு வருடம் கழித்து, 1987 அக்டோபரில், ரஷ்ய பிரதமர் நிகோலாய் ரிஷ்கோவ் இந்தியா வந்தபோது பிரதமரின் பாதுகாப்பில் மீண்டும் ஒரு குளறுபடி ஏற்பட்டது. டெல்லி பாலம் விமான நிலையத்தில் இரண்டு பிரதமர்களும் ஒரே காரில் குடியரசு தலைவர் மாளிகைக்கு செல்வதாக முடிவு செய்தனர். இரு பிரதமர்களுக்கு முன்பாக சவுத் பிளாக்கை அடையும் பொருட்டு வெளியுறவு அமைச்சர் நட்வர் சிங், டெல்லி போலீஸ் கமிஷனர் வேத் மார்வாவின் காரில் செல்ல முடிவு செய்தார். இதற்கு ஒரு காரணம் போலீஸ் கமிஷனரின் காரை யாரும் நிறுத்த மாட்டார்கள், அது வேகமாக முன்னோக்கி நகரும் என்பதாகும். நட்வர் சிங் தனது சுயசரிதையான 'ஒன் லைஃப் இஸ் நாட் இன்ஃப்'இல், "நாங்கள் சவுத் அவென்யூவை அடைந்து பின்னர் குடியரசு தலைவர் மாளிகையின் தெற்கு வாயில் நோக்கி திரும்பினோம். அங்கிருந்து சவுத் பிளாக் செல்லும் சாலையை நோக்கி சென்றோம். அப்போது இரண்டு பிரதமர்களின் வாகன அணியும் எங்களுக்கு எதிரில் வந்துகொண்டிருந்தன,” என்று குறிப்பிட்டுள்ளார். “எதிரில் வரும் வாகனங்களின் வழியில் இருந்து நீங்கும்பொருட்டு வேத் மார்வா உடனடியாக காரைப் பின்நோக்கி ஓட்டுமாறு டிரைவரிடம் சொன்னார். காங்கிரஸ் தலைவர் பஜன் லாலின் கார் எங்களுக்குப் பின்னால் வந்ததால் இரண்டு கார்களும் பின்னோக்கிச் செல்ல அரை நிமிடம் ஆனது. ஓரிரு நொடிகள் வித்தியாசத்தில் எங்கள் கார்கள் விஐபி கார்களுடன் நேருக்கு நேர் வராமல் காப்பாற்றப்பட்டது." "இதற்கிடையில் ரஷ்ய பிரதமருடன் வந்த பாதுகாப்புப் பணியாளர்கள் எங்களை நோக்கி துப்பாக்கியை நீட்டினர். இது குறித்து கேள்விப்பட்ட ராஜீவ் காந்தி, உள்துறை அமைச்சர் பூட்டா சிங்கிடம், போலீஸ் கமிஷனர் வேத் மார்வாவை சஸ்பெண்ட் செய்யுமாறு கூறினார். மறுநாள் நான் பிரதமரை சந்தித்தபோது அவர் என்னை மிகவும் ஏசினார்,” என்று முன்னாள் வெளியுறவு அமைச்சர் நட்வர் சிங் தெரிவித்துள்ளார். தொடர்ந்து, "நான் தெளிவுபடுத்த முயற்சித்தேன். ஆனால் அது எந்த விளைவையும் ஏற்படுத்தவில்லை. நீங்கள் பாதுகாப்பு விதிகளை மீறியுள்ள காரணத்தால் ரஷ்ய மெய்க்காப்பாளர்கள் உங்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியிருக்கலாம் என்று அவர் கூறினார். என் காரணமாக வேத் இடைநீக்கம் செய்யப்பட்டதால் நான் மிகவும் சங்கடமாக உணர்ந்தேன். நல்ல விஷயம் என்னவென்றால் சில நாட்களுக்குப் பிறகு பிரதமர் முழு விஷயத்தையும் புரிந்து கொண்டார். வேத் மார்வாவின் இடைநீக்கமும் திரும்பப் பெறப்பட்டது.” என்று குறிப்பிட்டுள்ளார். பட மூலாதாரம்,SENA VIDANAGAMA/AFP VIA GETTY IMAGES படக்குறிப்பு,இந்தத் தாக்குதலுக்குப் பிறகு, இலங்கை அரசும், பாதுகாப்பு நிறுவனங்களும் தலைகுனிய வேண்டியிருந்தது. ராஜீவ் காந்தி பிரதமராக கொழும்பு சென்றிருந்தபோது, இலங்கையின் அதிபர் மாளிகை முற்றத்தில் அவர் தாக்கப்பட்டார். 1987ஆம் ஆண்டு ஜூலை 30ஆம் தேதி, அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டிருந்த ராஜிவ் காந்தியை, இலங்கை கடற்படை அதிகாரி விஜித ரோஹனா பின்னால் இருந்து தாக்கினார். ராஜீவ் காந்தியின் தலையைத் தாக்க முயற்சி செய்யப்பட்டது. ஆனால் தனக்கு பின்னால் ஏதோ நடக்கிறது என்ற உள்ளுணர்வு அவருக்கு ஏற்பட்டது. அதனால் அவருக்கு அதிக காயம் ஏற்படவில்லை. இந்தத் தாக்குதலுக்குப் பிறகு, இலங்கை அரசும், பாதுகாப்பு நிறுவனங்களும் தலைகுனிய வேண்டியிருந்தது. நரேந்திர மோதியின் வாகன அணியில் பாதுகாப்பு குறைபாடு பட மூலாதாரம்,ANI படக்குறிப்பு,பஞ்சாபில் பிரதமர் மோதியின் வாகன அணி. 2022ஆம் ஆண்டில் விவசாயிகள் போராட்டத்தால் ஏற்பட்ட நெரிசல் காரணமாக பஞ்சாபில் உள்ள மேம்பாலத்தில் பிரதமர் நரேந்திர மோதியின் வாகன அணி 15-20 நிமிடங்கள் நிற்க வேண்டியிருந்தது. இது அவரது பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருந்தது. பிரதமர் எந்த இடத்துக்குச் சென்றாலும் அவருக்கு மாற்றுப் பாதையும் ஏற்படுத்தப்படுகிறது. படிண்டா விமான நிலையத்தில் தரையிறங்கிய பின்னர் பிரதமர் ஹெலிகாப்டரில் தேசிய தியாகிகள் நினைவிடத்திற்கு செல்வார் என்று முன்னதாக முடிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால் மோசமான வானிலை காரணமாக அவர் சாலை வழியாக செல்ல வேண்டியதாயிற்று. பஞ்சாப் டிஜிபி-யிடம் இருந்து கிரீன் சிக்னல் கிடைத்ததும் பிரதமர் சாலை வழியாக அழைத்துச் செல்லப்பட்டார். அதற்கு இரண்டு மணி நேரம் ஆனது. எஸ்பிஜி படையிடம் பிரதமரின் பாதுகாப்பு பொறுப்பு பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பிரதமர் மோதியின் வாகன அணி பிரதமரின் பாதுகாப்புப் பொறுப்பு, சிறப்புப் பாதுகாப்புக் குழுவான எஸ்பிஜியிடம் உள்ளது. உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் அவருடைய பாதுகாப்பை அது உறுதி செய்கிறது. ஆரம்பத்தில் பிரதமரின் வீட்டில் வசிக்கும் அவரது நெருங்கிய உறவினர்களுக்கும் பாதுகாப்பு வழங்கப்பட்டது. ஆனால் இந்த விதி 2019இல் மாற்றப்பட்டது. புதிய விதிகளின்படி இப்போது பிரதமருக்கு மட்டுமே எஸ்பிஜி பாதுகாப்பு வழங்கப்படுகிறது. எஸ்பிஜி 1988ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இதன் தலைமையகம் டெல்லியின் துவாரகா பகுதியில் உள்ளது. அதன் பாதுகாப்புப் பணியாளர்கள், எல்லைப் பாதுகாப்புப் படை, சிஆர்பிஎஃப், சிஐஎஸ்எஃப், ஆர்பிஎஃப் மற்றும் இந்தோ திபெத்திய எல்லைக் காவல் படையில் இருந்து தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இவர்கள் அந்தந்த ஏஜென்சிகளின் மிகச்சிறந்த வீரர்கள். பிரதமரைச் சுற்றியுள்ள வட்டத்தில் நடந்து செல்லும் எஸ்பிஜி வீரர்கள் கருப்பு உடை அணிகின்றனர். அவர்களது கண்கள் இருண்ட சன்கிளாஸ்களால் மூடப்பட்டிருக்கும். அவர்கள் எங்கு பார்க்கிறார்கள் என்று தெரியாதபடி சுற்றியுள்ள இடங்களை கண்காணிக்க வேண்டும் என்பதே இதன் நோக்கம். அவர்கள் ’ஸ்லிப் எதிர்ப்பு’ சோல்கள் கொண்ட சிறப்பு காலணிகளை அணிகிறார்கள். அவர்களின் கையுறைகளும் வேறுபட்டவை. இதன் காரணமாக ஆயுதங்கள் அவர்கள் கைகளிலிருந்து நழுவாது. இரண்டாவது வட்டத்தில் உள்ள எஸ்பிஜி கமாண்டோக்கள் பெல்ஜியத்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மூன்றரை கிலோ எடையுள்ள ரைபிள்களை வைத்திருப்பார்கள். இவை 500 மீட்டர் வரை தாக்கும் திறன் கொண்டவை. ஒவ்வொரு கமாண்டோவும் இரண்டே முக்கால் கிலோ எடையுள்ள புல்லட் ப்ரூஃப் ஜாக்கெட்டை அணிந்திருப்பார்கள். ‘ப்ளு புக்’ விதிகளைப் பின்பற்றுதல் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பிரதமர் மோதியின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள எஸ்பிஜி கமாண்டோக்கள் கமாண்டோக்களின் பயிற்சியின் போது, ஆயுதங்கள் இல்லாமல் கூட தாக்குபவர்களுடன் சண்டையிடும் வகையில் அவர்களுக்கு தற்காப்பு கலைகள் கற்பிக்கப்படுகின்றன. இவை க்ளோஸ் ப்ரொடெக்ஷன் டீம் என்று அழைக்கப்படுகின்றன. சாமானியர்கள் கண்ணில் படாதவகையில் கைத்துப்பாக்கிகளை அவர்கள் வைத்திருப்பார்கள். கைபேசிகள் மூலம் வெடிபொருட்களை வெடிக்கச் செய்யும் அபாயத்தைக் கருத்தில் கொண்டு, பிரதமரின் வாகனத் தொடரணியில் ஜாமர்களின் பயன்பாடு தொடங்கியது. தாக்குதல் நடத்துபவர்களை குழப்பும் வகையில் பிரதமரின் வாகன அணியில் அவரது வாகனம் போலவே மேலும் இரண்டு வாகனங்கள் செல்லும். பிரதமர் மாநிலங்களுக்கு பயணம் செய்வதற்கு முன் எஸ்பிஜி, ப்ளூ புக்கில் எழுதப்பட்டுள்ள விதிகளை கண்டிப்பாக பின்பற்றுகிறது. பிரதமரின் வருகைக்கு மூன்று நாட்களுக்கு முன்பு எஸ்பிஜி, பயணத்துடன் தொடர்புடைய எல்லா நபர்கள் மற்றும் நிறுவனங்களுடன் முன்கூட்டியே சந்திப்பை நடத்துகிறது. இதில் புலனாய்வு அதிகாரிகள், மூத்த காவல்துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆட்சியர்கள் அடங்குவர். இந்த சந்திப்பில் அந்த பயணம் தொடர்பான சிறிய விவரங்கள் கூட விவாதிக்கப்படுகின்றன. அவசரநிலை ஏற்பட்டால், ஒவ்வொரு சூழ்நிலையையும் சமாளிக்க ஒவ்வொரு மட்டத்திலும் மாற்றுத் திட்டம் தயாரிக்கப்படுகிறது. பிரதமரின் வாகன அணியின் கார்களின் வரிசையும் முன்கூட்டியே நிர்ணயிக்கப்படுகிறது. முன்னணியில் பைலட் கார், பிறகு மொபைல் சிக்னல் ஜாமர், அதைத் தொடர்ந்து டிகோய் கார், பிறகு பிரதமரின் கார், ஆம்புலன்ஸ் மற்றும் பிற கார்கள் செல்கின்றன. பிரதமரின் கார் பழுதடைந்தால் பயன்படுத்துவதற்காக வேறு ஒரு காரும் உடன் செல்கிறது. வெளிநாட்டு பயணங்களில் ஏர் இந்தியா-1 பயன்பாடு பிரதமர் எப்போதும் ஏர் இந்தியா-1 விமானத்தில்தான் வெளிநாடு செல்வார். இது 747-400 போயிங் விமானம். பிரதமர் விமான நிலையத்திற்கு வருவதற்கு முன், இந்திய விமானப்படையின் மேலும் இரண்டு விமானங்கள் தயார் நிலையில் வைக்கப்படுகின்றன. கடைசி நேரத்தில் விமானத்தில் ஏதேனும் கோளாறு ஏற்பட்டால் இந்த விமானங்களை பயன்படுத்தலாம். பிரதமரின் விமானம் புறப்படுவதற்கு முன், அந்த பகுதி முழுவதும் சிறிது நேரம் 'நோ ஃப்ளையிங் சோன்' (No Flying Zone) ஆக்கப்படும். வாய் வழியே சுவாசிப்பது ஆபத்தானது - ஏன் தெரியுமா?24 ஜூலை 2024 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,எஸ்பிஜி கமாண்டோக்கள் தீவிர பயிற்சிகள் இந்த கமாண்டோக்கள் குழுவில் பணியமர்த்தப்படுவதற்கு முன் மூன்று நிலை பின்னணி சோதனைக்கு உட்படுத்தப்படுகிறார்கள். அவர்களது குடும்ப உறுப்பினர்கள், தொலைதூர உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கூட சோதிக்கப்படுகிறார்கள். முதல் மூன்று மாதங்களுக்கு, என்எஸ்ஜி கமாண்டோக்களுக்கு ஆயுதங்கள் மற்றும் ஆயுதங்கள் இல்லாமல் சண்டையிடுதல் மற்றும் துப்பாக்கி சுடுதல் போன்ற பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. பின்னர் எல்லா வகையான வெடிகள் மற்றும் வெடிமருந்துகள் பற்றிய தகவல்களும், அவற்றை செயலிழக்கச் செய்வதற்கான தந்திரங்களும் கற்பிக்கப்படுகின்றன. இதுதவிர யோகா, தியானம், மனப் பயிற்சி போன்ற பயிற்சிகளும் அளிக்கப்படுகின்றன. ”இந்த கமாண்டோக்கள் நகரும் வாகனத்தில் இருந்துகூட இலக்குகளை துல்லியமாக தாக்குவார்கள். மற்றவர்களுக்கு தீங்கு விளைவிக்காமல் கூட்டத்தில் நிற்கும் ஒருவரை குறிவைக்கவும் அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது,” என்று முன்னாள் என்எஸ்ஜி அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அவர்கள் சிறந்த நீச்சல் வீரர்களாகவும், நவீன தகவல் தொடர்பு சாதனங்களை சிறப்பாக இயக்குபவர்களாகவும் உள்ளனர். முதல் மூன்று மாத பயிற்சியை வெற்றிகரமாக முடித்த பிறகு, அடுத்த மூன்று மாதங்களுக்கு அவர்களுக்கு தீவிர பயிற்சி அளிக்கப்படுகிறது. அவர்கள் நிஜ வாழ்க்கை சூழ்நிலைகளுக்கும் தயார் செய்யப்படுகின்றனர். தாக்குதல்கள் மற்றும் மருத்துவ அவசரநிலைகளை சமாளிக்கவும் அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. எவரேனும் ஒருவர் எஸ்பிஜி வட்டத்திற்கு மிக அருகில் செல்ல முயன்றால் அவரை முழங்கையால் பின்னுக்கு தள்ளவும் பயிற்சி அளிக்கப்படுகிறது. முழங்கையால் தள்ளியதன் தாக்கம் பாதிக்கப்பட்டவருக்கு பல வாரங்கள் நீடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்க ரகசிய சேவையின் வழிகாட்டுதலின்படி அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இப்போது இஸ்ரேலின் பயிற்சி கையேடு 'க்ராவ் மாகா'வும் அதில் சேர்க்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு கமாண்டோவுக்கும் வருடாந்திர சோதனை உண்டு. அதில் தோல்வியுற்றால் எந்த தாமதமும் இன்றி அவர்கள் முன்பிருந்த அமைப்பிற்கே திருப்பி அனுப்பப்படுவார்கள். https://www.bbc.com/tamil/articles/cp68pkdl1pno
-
பட மூலாதாரம்,GETTY IMAGES 4 மணி நேரங்களுக்கு முன்னர் அரசியல் கட்சிகளுக்கு பெயர் குறிப்பிடாமல் நிதி வழங்கும் தேர்தல் பத்திர நடைமுறை சட்ட விரோதமானது என்று உச்ச நீதிமன்றம் ஒருமித்த முறையில் தீர்ப்பு வழங்கியுள்ளது. தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் அமர்வு இந்த வழக்கை விசாரித்து வந்தது. தேர்தல் நடைமுறைகள் வெளிப்படையாக இருப்பதற்கு தேர்தல் நிதி தொடர்பான தகவல்கள் அவசியம் என்றும் உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியுள்ளது. அரசியல் சட்டப் பிரிவு 19(1)(a)-இன் கீழ் தகவல் பெறும் உரிமைக்கு எதிரானதாக தேர்தல் பத்திர திட்டம் இருப்பதாகவும் நீதிபதிகள் கூறியுள்ளனர். நிறுவனங்கள் அளிக்கும் நன்கொடைகள் முழுக்க முழுக்க "பதில் உதவியை எதிர்பார்க்கும்" நோக்கங்களுக்காக மட்டுமே இருப்பதால், தேர்தல் பத்திரங்கள் மூலம் கார்ப்பரேட் நன்கொடைகள் பற்றிய தகவல்களை வெளியிட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறுகிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES தேர்தல் பத்திரங்கள் பற்றிய தகவல்களை வெளியிட உத்தரவு தேர்தல் பத்திரங்கள் வழங்குவதை வங்கிகள் உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. “ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா ஏப்ரல் 12, 2019 முதல் இன்று வரை வாங்கப்பட்ட தேர்தல் பத்திரங்கள் குறித்த தகவல்களை தேர்தல் ஆணையத்திடம் அளிக்க வேண்டும்” என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இந்த தகவலை மார்ச் 13, 2024க்குள் தனது இணையதளத்தில் வெளியிடுமாறு தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 15 நாட்களுக்குள் செல்லுபடியாகும், அரசியல் கட்சிகளால் எடுக்கப்படாத தேர்தல் பத்திரங்கள் வாங்குபவரிடம் திரும்ப ஒப்படைக்கப்பட வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் கூறியது. தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதி சஞ்சீவ் கண்ணா, பி.ஆர்.கவாய், ஜே.பி.பார்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தீர்ப்பை ஒத்திவைத்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பொதுமக்கள் எதை வேண்டுமானாலும் தெரிந்துகொள்ள முடியும் என்ற நிலை இருக்கக்கூடாது என மத்திய அரசு வாதிட்டது தேர்தல் பத்திரம் என்றால் என்ன? தேர்தல் பத்திரங்கள் அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிக்கும் ஒரு நிதி வழிமுறையாகும். உறுதிமொழிப் பத்திரம் போன்ற இந்த தேர்தல் பத்திரத்தை இந்தியாவின் எந்தவொரு குடிமகனும் அல்லது நிறுவனமும் பாரத ஸ்டேட் வங்கியின் தேர்ந்தெடுக்கப்பட்ட கிளைகளில் இருந்து வாங்கலாம். அவர்கள் விரும்பும் எந்த அரசியல் கட்சிக்கும் தங்களது அடையாளத்தை வெளியிடாமல் இதன்மூலம் நன்கொடை அளிக்கலாம். இந்திய அரசு 2017ல் தேர்தல் பத்திர திட்டத்தை அறிவித்தது. இந்த திட்டம் 29 ஜனவரி 2018 அன்று அரசாங்கத்தால் சட்டப்பூர்வமாக செயல்படுத்தப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ், அரசியல் கட்சிகளுக்கு நிதி வழங்குவதற்கான பத்திரங்களை பாரத ஸ்டேட் வங்கி வெளியிடும். KYC விவரங்கள் உள்ள வங்கிக் கணக்கு வைத்திருக்கும் எந்த நன்கொடையாளரும் இவற்றை வாங்கலாம். தேர்தல் பத்திரத்தில் பணம் செலுத்துபவரின் பெயர் இடம்பெறத் தேவையில்லை. இத்திட்டத்தின் கீழ், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவின் குறிப்பிட்ட கிளைகளில் இருந்து ரூ.1,000 முதல் ரூ.10,000, ரூ.1 லட்சம், ரூ.10 லட்சம் மற்றும் ரூ.1 கோடி வரை எந்த மதிப்பிலான தேர்தல் பத்திரங்களையும் வாங்கலாம். தேர்தல் பத்திரங்களின் ஆயுள் 15 நாட்கள் மட்டுமே. அவற்றை மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிக்க மட்டுமே பயன்படுத்த முடியும். மக்களவை அல்லது சட்டப் பேரவைக்கு கடந்த பொதுத் தேர்தலில் பதிவான வாக்குகளில் குறைந்தபட்சம் ஒரு சதவீத வாக்குகளைப் பெற்ற அரசியல் கட்சிகளுக்கு மட்டுமே தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடை அளிக்க முடியும். இத்திட்டத்தின் கீழ் ஜனவரி, ஏப்ரல், ஜூலை மற்றும் அக்டோபர் ஆகிய மாதங்களில் 10 நாட்களுக்கு தேர்தல் பத்திரங்களை வாங்கலாம். லோக்சபா தேர்தல் நடக்கக்கூடிய ஆண்டில் கூடுதலாக 30 நாட்களுக்கும் இவை வெளியிடப்படலாம். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, தேர்தல் பத்திர திட்டம் 29 ஜனவரி 2018 அன்று அரசாங்கத்தால் சட்டப்பூர்வமாக செயல்படுத்தப்பட்டது தேர்தல் பத்திரத்தில் இருக்கக்கூடிய சிக்கல்கள் என்ன? இந்தத் திட்டத்தைத் தொடங்கும் போது, தேர்தல் பத்திரங்கள் நாட்டில் அரசியல் கட்சிகளுக்கு நிதியளிக்கும் முறையை முறைப்படுத்தும் என்று இந்திய அரசு கூறியது. ஆனால் தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடை அளிப்பவர் யார் என்பது ரகசியமாக வைக்கப்படுவதாகவும் இது கருப்பு பணத்தை ஊக்குவிக்கும் என்றும் கடந்த சில ஆண்டுகளாக, மீண்டும் மீண்டும் கேள்வியெழுப்பப்படுகிறது. பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்கள் அடையாளத்தை வெளிப்படுத்தாமல் பணத்தை நன்கொடையாக வழங்குவதற்காக இந்த திட்டம் உருவாக்கப்பட்டது என்ற விமர்சனமும் உள்ளது. இந்தத் திட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் இரண்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. முதல் மனுவை ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் மற்றும் இலாப நோக்கற்ற அமைப்பான Common Cause இணைந்து 2017ல் தாக்கல் செய்தன. இரண்டாவது மனுவை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) 2018 இல் தாக்கல் செய்தது. உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள், தேர்தல் பத்திரத்தில் நன்கொடையாளரின் பெயர் மறைக்கப்படுவது அரசியலமைப்பின் 19(1)(a)பிரிவின் கீழ் ஒரு குடிமகனுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் தகவல் அறியும் உரிமையை மீறுவதாக உள்ளதாக குறிப்பிட்டிருந்தன. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, தேர்தல் பத்திரத்தில் நன்கொடையாளரின் பெயர் மறைக்கப்படுவது அரசியலமைப்பின் 19(1)(a)பிரிவை மீறுவதாக வாதிடப்பட்டது உச்ச நீதிமன்றத்தின் முன் எழுப்பப்பட்ட ஒரு பிரச்னை என்னவென்றால், இந்தியாவில் துணை நிறுவனங்களைக் கொண்ட வெளிநாட்டு நிறுவனங்கள் இந்திய அரசியல் கட்சிகளுக்கு நிதியளிக்க அனுமதிக்கும் வகையில் FCRA சட்டம் திருத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக, சர்வதேச அளவில் லாபி செய்பவர்களுக்கு தங்களது சொந்த நோக்கத்தை இந்திய அரசியலிலும் ஜனநாயகத்திலும் திணிக்க வாய்ப்பு கிடைக்கிறது. நிறுவனங்கள் தாங்கள் எந்த அரசியல் கட்சிக்கு நிதி அளித்திருக்கிறோம் என்பதை தங்களது ஆண்டு லாப நஷ்ட கணக்குகளில் தெரிவிக்க தேவையில்லை என நிறுவனச் சட்டம் 2013-இல் கொண்டு வரப்பட்ட சட்டத் திருத்தம் குறித்து இந்த மனு கேள்வியெழுப்பியிருக்கிறது. இது அரசியல் நிதியில் வெளிப்படைத்தன்மையைக் குறைக்கும் என்றும் இதுபோன்ற நிறுவனங்களுக்கு தேவையற்ற சலுகைகளை வழங்க அரசியல் கட்சிகளை ஊக்குவிக்கும் என்றும் மனுதாரர்கள் கூறுகின்றனர். தேர்தல் பத்திரத் திட்டம் பட்ஜெட்டில் உள்ளது. பட்ஜெட் என்பது ஒரு பண மசோதா என்பதால் மாநிலங்களவை அந்த திட்டத்தில் எந்த மாற்றமும் செய்ய முடியாது. மாநிலங்களவையில் அரசுக்கு பெரும்பான்மை இல்லாததால், எளிதாக நிறைவேற்றும் வகையில், பண மசோதாவில் தேர்தல் பத்திரத் திட்டம் சேர்க்கப்பட்டது என மீண்டும் மீண்டும் கேள்வி எழுப்பப்பட்டது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, எதிர்க்கட்சிகள் தேர்தல் பத்திரங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன இந்தத் திட்டத்தில் எந்தக் கட்சி அதிகம் பயன்பெற்றிருக்கிறது? 2016-17 மற்றும் 2021-22 க்கு இடைப்பட்ட ஐந்து ஆண்டுகளில் மொத்தம் ஏழு தேசியக் கட்சிகளும் 24 பிராந்தியக் கட்சிகளும் மொத்தம் ரூ.9,188 கோடியை தேர்தல் பத்திரங்கள் மூலம் பெற்றுள்ளன. இந்த ரூ.9,188 கோடியில் பாரதிய ஜனதா கட்சியின் பங்கு மட்டும் தோராயமாக ரூ.5272 கோடி. அதாவது தேர்தல் பத்திரங்கள் மூலம் அளிக்கப்பட்ட மொத்த நன்கொடையில் 58 சதவீதத்தை பாஜக பெற்றுள்ளது. அதே காலகட்டத்தில், தேர்தல் பத்திரங்கள் மூலம் காங்கிரஸ் தோராயமாக ரூ.952 கோடியும், திரிணாமுல் காங்கிரஸ் ரூ.767 கோடியும் பெற்றுள்ளது. Association for Democratic Reforms (ADR) அமைப்பின் அறிக்கையின்படி, 2017-18 நிதியாண்டுக்கும் 2021-22 நிதியாண்டுக்கும் இடையே தேர்தல் பத்திரங்கள் மூலம் தேசிய கட்சிகள் பெற்ற நன்கொடைகள் 743 சதவீதம் அதிகரித்துள்ளது. மறுபுறம், இதே காலகட்டத்தில் தேசிய கட்சிகளுக்கு கார்ப்பரேட் நன்கொடைகள் 48 சதவீதம் மட்டுமே அதிகரித்துள்ளன. இந்த ஐந்தாண்டுகளில், 2019-20 ஆம் ஆண்டில் (இது மக்களவைத் தேர்தல் நடைபெற்ற ஆண்டு), தேர்தல் பத்திரங்கள் மூலம் அதிகபட்சமாக ரூ.3,439 கோடி நன்கொடையாக வந்துள்ளதாக ADR தனது ஆய்வில் கண்டறிந்துள்ளது. இதேபோல், 2021-22 ஆம் ஆண்டில் (11 சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெற்றன), அரசியல் கட்சிகள் தேர்தல் பத்திரங்கள் மூலம் சுமார் 2,664 கோடி ரூபாய் நன்கொடை பெற்றன. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, தேர்தல் பத்திரங்கள் மூலம் அளிக்கப்பட்ட மொத்த நன்கொடையில் 58 சதவீதத்தை பாஜக பெற்றுள்ளது தேர்தல் ஆணையம் மற்றும் ரிசர்வ் வங்கி என்ன சொல்கிறது? 2019 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திரத்தில், தேர்தல் பத்திரங்கள் அரசியல் நிதியில் வெளிப்படைத் தன்மையை முடிவுக்குக் கொண்டுவரும் என்றும் அவை இந்திய அரசியலில் செல்வாக்கு செலுத்த வெளிநாட்டு கார்ப்பரேட் சக்திகளை அழைப்பதற்கு சமம் என்றும் தேர்தல் ஆணையம் கூறியிருந்தது. இதன்மூலம், அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிக்கும் நோக்கத்திற்காக மட்டுமே உருவாக்கப்படும் ஷெல் நிறுவனங்களை திறக்க வாய்ப்பு அதிகரிக்கும் என்றும் தேர்தல் ஆணையம் கூறியிருந்தது. ADRன் மனுவின்படி, கறுப்புப் பணப் புழக்கத்தை அதிகரிக்க, பணமதிப்பழிப்பு மற்றும் எல்லை தாண்டிய மோசடியை அதிகரிக்க தேர்தல் பத்திரங்கள் பயன்படுத்தப்படலாம் என்று இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) பலமுறை எச்சரித்துள்ளது. தேர்தல் பத்திரங்களை 'நிதி வழங்குவது குறித்த தெளிவில்லாத முறை' என்று குறிப்பிட்ட ரிசர்வ் வங்கி, இந்த பத்திரங்கள் நாணயம் போன்று பலமுறை கை மாறுவதாலும் அது யார் பெயரில் வழங்கப்படுகிறது என்பது தெரியாததாலும் இந்த பத்திரங்கள் மூலம் பண மோசடி நடக்கலாம் என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்திருந்தது. https://www.bbc.com/tamil/articles/cn0ng6q06lno
-
18 FEB, 2024 | 10:28 AM மொரேனா: மத்தியப் பிரதேசம் மொரேனா மாவட்டத்தில் 34 வயது கர்ப்பிணிப் பெண்ணை மூன்று ஆண்கள் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து அந்தப் பெண்ணின் உடலில் தீ வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பெண் தற்போது மருத்துவமனையில் உயிருக்குப் போராடி வருவதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். மத்தியப் பிரதேச மாநிலம் மொரேனா மாவட்டத்தில் 34 வயது கர்ப்பிணி பெண் ஒருவர் வசித்து வந்திருக்கிறார். இந்தப் கர்ப்பிணி பெண்ணின் கண்வர் ஒரு பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டுக்காக சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். தற்போது அவர் ஜாமீனில் வெளியே வந்திருப்பதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த கர்ப்பிணி பெண் தனது கணவர் மீது பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்த பெண்ணின் வீட்டுக்கு சமரசம் பேசுவதற்காக சென்றிருக்கிறார். இதையடுத்து அந்தப் பெண்ணின் வீட்டில் இருந்த மூன்று ஆண்கள் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண்ணை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்திருக்கின்றனர். அதன் பிறகு குற்றம்சாட்டப்பட்ட மூன்று ஆண்களும் வீட்டில் இருந்த ஒரு பெண்ணும் சேர்ந்து அந்த கர்ப்பிணிப் பெண் மீது எரிபொருளை ஊற்றி எரித்துள்ளனர். மொரேனா மாவட்டத்தில் உள்ள அம்பா நகரத்திலிருந்து 3 கி.மீ தொலைவில் உள்ள சந்த்கா புரா கிராமத்தில் வெள்ளிக்கிழமை இந்தச் சம்பவம் நடந்துள்ளது. தற்போது பாதிக்கப்பட்ட பெண் 80 சதவீத தீக்காயங்களுடன் குவாலியரில் உள்ள மருத்துவமனையில் உயிருக்கு போராடி வருகிறார். கர்ப்பிணிப் பெண்ணின் கணவர் இது தொடர்பான வீடியோ ஒன்றை காவல் துறையிடம் ஒப்படைத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போலீஸார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். https://www.virakesari.lk/article/176651