Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வட மாகாணத் தேர்தலை நடத்துமாறு வலியுறுத்தும்! இலங்கை விடயத்தில் இந்தியாவின் அடுத்த நகர்வு!

Featured Replies

இலங்கையின் வடக்கு மாகாண சபைக்கான தேர்தலை விரைந்து நடத்துமாறு புதுடில்லி கொழும்பிடம் வலியுறுத்தவுள்ளது. இதற்கான இராஜதந்திர நகர்வுகளில் இந்திய அரச தலைமை ஈடுபட்டுள்ளதாக நம்பகரமாகத் தெரிய வருகிறது.

ஜெனிவாவில் இலங்கை மீது கொண்டு வரப்பட்டுள்ள தீர்மானத்தின் நெருக்கடி நிலையில் இருந்து இலங்கை அரசு மீள்வதற்குப் பல காத்திரமான உறுதியான நடவடிக்கைகளை நாட்டில் மேற் கொள்ள வேண்டியுள்ளன என்று புதுடில்லி கருதுகிறது. அதனையே இலங்கையிடம் சர்வதேச சமூகம் எதிர்பார்க்கிறது.

எனவே இந்தவேளையில் வடக்கு மாகாண சபைத் தேர்தலை நடத்தி அங்கு மக்கள் பிரதிநிதிகளின் நிர்வாகம் நடைபெறுவதற்கான வழியை ஏற்படுத்துவதன் மூலம் சர்வதேச அழுத்தங்களில் இருந்து இலங்கை ஓரளவேனும் விடுபட முடியும் என இந்தியா இலங்கைக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாகத் தெரிய வருகிறது.

வடக்கில் இராணுவ நெருக்குவாரங்கள் தொடர்கின்றமையால் அங்குள்ள மக்களும் சினம் அடைந்துள்ளனர்.

எனவே வடக்கில் தேர்தலை நடத்தி மாகாண சபை நிர்வாகத்தை மக்கள் பிரதிநிதிகளிடம் கையளிப்பதன் மூலம் மக்கள் தற்காலிகமாகவேனும் இராணுவ நெருக்குவாரங்களில் இருந்து மீளமுடியும் என இந்தியா இலங்கையிடம் சுட்டிக் காட்டவுள்ளதாகவும் இராஜதந்திர வட்டாரங்களில் இருந்து தெரிய வருகிறது.

இப்போது வடக்கு மாகாண சபைத் தேர்தலை நடத்தப் பொருத்தமான சூழல் உள்ளதால் அதனை விரைவில் நடத்துமாறு புதுடில்லி கொழும்பிடம் பகிரங்கமான கோரிக்கை ஒன்றை முன்வைக்க ஆயத்தமாகி வருவதாகவும் நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

இதற்காக இந்திய அரசின் பிரதிநிதிகள் இலங்கை அரச தலைமையை நேரில் சந்தித்து இது தொடர்பில் வலியுறுத்துவர் என இராஜதந்திர வட்டாரங்கள் மேலும் கூறின.

http://news.lankasri.com/show-RUmqyDRcPdfpy.html

  • கருத்துக்கள உறவுகள்

இதற்காக இந்திய அரசின் பிரதிநிதிகள் இலங்கை அரச தலைமையை நேரில் சந்தித்து இது தொடர்பில் வலியுறுத்துவர் என இராஜதந்திர வட்டாரங்கள் மேலும் கூறின.

இவங்கள் சொல்லி அவங்கள் கேட்க போறாங்கள் அதுவும் வலியுறுத்தி சொல்லுறாங்களாம்......என்ன கொடுமையப்பா இது....

  • கருத்துக்கள உறவுகள்

எங்கள் பிரச்சனையைப் புரிந்து கொள்ள இந்தியாவுக்கு, மனமும் இல்லை!

அதற்குரிய ஆளுமையும் இல்லை!

  • கருத்துக்கள உறவுகள்

வரதராஜப் பெருமாளை, முதலமைச்சர் ஆக்க... பிளான் பண்ணியினம் போலை. :D

  • கருத்துக்கள உறவுகள்

வரதராஜப் பெருமாளை, முதலமைச்சர் ஆக்க... பிளான் பண்ணியினம் போலை. :D

இந்திய இராணுவம் இருந்தால்தான் அவர் முதலமைச்சராக இருப்பாராம்...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.